ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
மைத்திரி, கோத்தா படுகொலைச் சதி – விசாரணையை சிஐடியிடம் ஒப்படைக்க உத்தரவு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோரைப் படுகொலை செய்வதற்கான சதித் திட்டம் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொள்ளவுள்ளது. பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பிரதி காவல்துறை மா அதிபர் நாலக சில்வாவுக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க சிறிலங்கா காவல்துறை மா அதிபர் சிறப்பு புலனாய்வுக் குழுவொன்றை நியமித்திருந்தார். எனினும், இந்த விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவே முன்னெடுக்கும் என்றும், அவர்கள் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பார்கள் என்றும் சிறிலங்கா…
-
- 0 replies
- 364 views
-
-
திருகோணமலையில் நிலநடுக்கம் திருகோணமலை பகுதியில் இன்று அதிகாலை 12.35 மணியளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை அப்பகுதியில் 3.5 ரிக்டர் சிறிய அளவிலான நில நடுக்கம் உணரப்பட்டதாக பூகோளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லையென புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/article/40445
-
- 0 replies
- 409 views
-
-
“நாராயணன் மட்டும் அல்ல அனைவரும் புலிகளை வெல்ல முடியாது எனக் கூறியிருந்தனர் ஆனால் வெற்றிகொண்டேன்” “கொழும்பிற்கு வரவேண்டாம் நான் கிளிநொச்சி வருகிறேன் என்றேன் பிரபாகரன் மாட்டேன் என்றார்” விடுதலை புலிகளின் தலைவரை கிளிநொச்சிக்கு சென்று சந்திப்பதற்கு தான் தயாராக இருந்த போதிலும் அதற்கு அவர் இணக்கம் தெரிவிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இந்தியாவின் டில்லியில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தான் ஆட்சிக்கு வந்த காலத்தில் விடுதலை புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனிடம் சமாதானத் தூதுவர்களை அனுப்பியதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன…
-
- 10 replies
- 2.6k views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எதிராக முல்லைத்தீவில் பரவலாக சுவரொட்டிகள் முல்லைத்தீவில் இன்று பரவலாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். குறித்த சுவரொட்டிகளில் “இது தமிழ் தலைவர்கள் எனப்படுவோர் ஐக்கியப்பட வேண்டிய நேரம்” என தலைப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் அதில் சுமந்திரன் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியையும் இராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. https://www.tamilwin.com/community/01/193355?re…
-
- 5 replies
- 2.4k views
-
-
சட்டவிரோத மணல் அகழ்வு செய்யும் இடம் சுற்றிவளைப்பு கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு செய்யும் இடமொன்று நேற்று இரவு மாவட்ட விசேட பிரிவு பொறுப்பதிகாரி சத்துரங்க தலைமையிலான குழுவினர் சுற்றிவளைத்த பொழுது சட்டவிரோதமாக மண் ஏற்றிக்கொண்டிருந்த டிப்பர் வாகனம் ஒன்றும் உழவு இயந்திரம் ஒன்றும் பிடிக்கப்பட்டுள்ளது சுமார் நாநூறு கீப் மணல் ஆற்றில் இருந்து ஏற்றப்பட்டு குறித்த உரிமையாளர்கள் இல்லாத காணிப் பகுதியில் சட்ட விரோத யாட் அமைத்து வெளிமாவட்டங்களுக்கு விற்பனை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இது தொடர்பில் விசேட பிரிவு பொறுப்பதிகாரி சத்துரங்க கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தமை…
-
- 3 replies
- 852 views
-
-
தவறை ஏற்று முதல்வரும் பதவி விலகியிருந்தால் நிலைமை சுமுகம் வாசுகி சிவகுமார் நான்கு அமைச்சர்களும் பதவியில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்று வடக்கு முதல்வர் தீர்ப்புச்சொன்னது தன்னுடைய அமைச்சரவை சரியாக இயங்கவில்லை என்கிற நிலைப்பாட்டுக்கு அவர் வந்திருப்பதனையே காட்டுவதாகக் கூறும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், மக்களது உணர்ச்சிகளைக் கொண்டு தவறுகளை மூடி மறைக்கும் தருணம் இதுவல்ல என்கின்றார். அவர் தினகரன் வாரமஞ்சரிக்கு…
-
- 31 replies
- 2.1k views
-
-
திருகோணமலையை அமெரிக்காவுக்குத் தாரை வார்த்தது மோடி அரசு இந்திய வெளியுறவில் தாக்கம் செலுத்த இயலாக் கையறு நிலையில் தமிழகம்!! மூன்று இந்தியக் கடற்படைப் போர்க் கலங்கள் இலங்கைக் கடற்படையுடன் திருகோணமலையில் கடந்த ஆறாம் திகதியில் இருந்து 13ம்திகதி வியாழன் வரை SLINEX-2018 என்ற இணைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தன. அமெரிக்காவும், ஜப்பானும் கடந்த மாத இறுதிப் பகுதியில் இதேபோன்ற இணைப் பயிற்சிகளை இலங்கைக் கடற்படையுடன் இதே திருமலையில் மேற்கொண்டிருந்ததன் இணைபிரியாத் தொடர்ச்சியே இதுவாகும். இணைப் பயிற்சிகள் வழங்குதல் மற்றும் கடற்படைக் கலங்களை அன்பளிப்புச் செய்தல் என்று அமெரிக்காவும…
-
- 0 replies
- 1k views
-
-
அவசரமாக ஊடக ஆசிரியர்களைச் சந்திக்கிறார் சிறிலங்கா அதிபர் நேற்று அவசர அமைச்சரவைக் கூட்டத்தை நடத்திய சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று அவசரமாக ஊடகங்களின் பிரதானிகள், ஆசிரியர்களைச் சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார். சிறிலங்கா அதிபரின் இல்லத்தில் இன்று காலை இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது. நாளிதழ்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் ஆசிரியர்கள் மற்றும் பிரதானிகளுக்கு சிறிலங்கா அதிபர் செயலகத்தினால் நேற்று இந்த அழைப்பு விடுக்கப்பட்டது. http://www.puthinappalakai.net/2018/09/14/news/32883
-
- 5 replies
- 853 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஜெனிவா செல்ல விசா மறுப்பு கிளிநொச்சியில் தொடர் கவனயீர்ப்புப்போட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஜ.நா. மனித உரிமைகள் ஆணையக கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்கான விசா மறுக்கப்பட்டமை தொடர்பில் ஊடக சந்திப்பொன்றை இன்று நடத்தியுள்ளனர். இறுதி யுத்தத்தின் பின்னர் இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளுக்கு நீதிகோரி கடந்த 560 நாட்களாக போராடி வருகின்றனர். இவ்வாறு தமக்கான தீர்வுகிடைக்கும் வரை தமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றும் அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதியை பெற்றுத்தர வேண்டும். …
-
- 0 replies
- 836 views
-
-
தமிழ்த்தேசியக் கூட்டமைப்புச் சார்ந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் – முதலமைச்சருக்கு ஆனந்தசங்கரி கடிதம் தமிழரக் கட்சி உள்ளடக்கிய தமிழத் தேசியக் கூட்டமைப்பில் சார்ந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் எனவும் உட்கட்சி உரசலால்; நீங்கள் மனதில் நினைத்திருந்த பல நல்ல திட்டங்களை செயற்படுத்த முடியாமல் போய் விட்டது. அந்த இடைப்பட்ட காலத்தில் தங்களின் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும் என்பதை நான் நன்கு அறிவேன். எனவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வடக்கு முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார் அவரின் கடிதத்தின் முழு விபரம் வருமாறு மேதகு முதலமைச்சர் சீ. வி. விக்ணேஸ்வரன் அவர்களுக்கு, அன்புடையீர், …
-
- 2 replies
- 892 views
-
-
கேர்ணல் ரமேஷ் சரணடைந்த நிலையிலேயே கொல்லப்பட்டார்: உறுதிப்படுத்தினார் மஹிந்தவின் மூத்த அமைச்சர் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போரின்இறுதி நாட்களில் சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் தயபதிகள்உள்ளிட்ட போராளிகள் மற்றும் சாதாரண மக்கள் கொல்லப்பட்டதாக சிறிலங்காவின் முன்னாள்அரச தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் முக்கிய அமைச்சுப் பதவியைவகித்த ஒருவர் தெரிவித்திருக்கின்றார். போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களும், உள்ளூர்மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும், பலம்பெயர் தமிழ்அமைப்புக்களும் கடந்த ஒரு தசாப்தகாலமாக முன்வைத்துவரும் இந்த குற்றச்சாட்டுக்களைசிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன தலைமையிலான…
-
- 9 replies
- 2.2k views
-
-
முன்னாள் போராளி மீது பொலிஸார் கொடூர தாக்குதல்! வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தாக்கியதில் முன்னாள் போராளியும் அவரின் இரு பிள்ளைகளும் காயமடைந்துள்ளனர். தமது காணியின் ஒரு பகுதியை உணவகம் ஒன்றிற்கு வாடகைக்கு கொடுத்துள்ளதாகவும், அதன் ஒப்பந்த காலம் முடிவடைந்த நிலையில் உணவகத்தினை நடாத்துபவர் காணியை மீண்டும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்காத நிலையில் வவுனியா நீதிமன்றில் வழக்கு தொடுத்துள்ளதுடன் அது தொடர்பான வழக்கு வவுனியா நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் தாக்குதலுக்குள்ளான முன்னாள் போராளியின் மனைவி இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார், நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை எனது கணவர் உணவகத்தின் ப…
-
- 7 replies
- 1.8k views
-
-
இராணுவத்தை பாதுகாக்கும் முயற்சியில் ஜனாதிபதி!- கூட்டமைப்பு விமர்சனம் குற்றப்புலனாய்வு பிரிவின் அழைப்பை மீறி பாதுகாப்பு பிரிவின் தலைவர் வெளிநாடு சென்றமை தொடர்பாக, கூட்டமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விமர்சித்துள்ளது. ஜனாதிபதிக்கு தெரியாமல் பாதுகாப்பு பிரிவின் தலைவர் ரவீந்திர விஜேகுணரத்ன வெளிநாட்டிற்கு பயணிக்க வாய்ப்பில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக வாக்குமூலமொன்றை பதிவுசெய்துக் கொள்வதற்காக ரவீந்திர விஜேகுணரத்ன குற்றப்புலனாய்வு பிரிவிற்கு கடந்த திங்கட்கிழமை அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், குற்றப்புலனாய்வு பிர…
-
- 1 reply
- 459 views
-
-
முப்படைகளின் பிரதானியை காப்பாற்றும் சிறிசேனவின் முயற்சியை அமைச்சரவை நிராகரித்தது முப்படைகளின் பிரதானி ரவீந்திர விஜேகுணரட்ண கைதுசெய்யப்படுவதை தடுப்பதற்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முயற்சியைஇலங்கை அமைச்சரவை நிராகரித்துள்ளது. எகனமி நெக்ஸ்ட் இந்த தகவலை வெளியிட்டுள்ளது இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது முப்படைகளின் பிரதானி ரவீந்திர குணவர்த்தன கைதுசெய்யப்படுவதை தடுப்பது குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அமைச்சரவையின் விசேட கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். எனினும் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதிக்கு இந்த விடயத்த…
-
- 3 replies
- 855 views
-
-
இராணுவத்தை விசாரிக்க முடியாது என்கின்றார் ஜனாதிபதி - சுரேஸ் பிரேமச்சந்திரன்
-
- 0 replies
- 728 views
-
-
சட்டத்தரணிகளிடம் கேட்டே எனது முடிவைக் கூறுவேன்- வடக்கு முதல்வர்!! வடக்கு மாகாண அமைச்சரவை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சையை எதிர்வரும் 18ஆம் திகதிக்கு முன்னர் தீர்ப்பதற்கான முயற்சிகள் நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரச்சினையை சுமுகமாகத் தீர்ப்பதற்கு அவைத் தலைவர் முன்வைத்துள்ள யோசனையில் எழுந்துள்ள புதிய சிக்கல் தொடர்பில் முதல மைச்சருக்கு நேற்று எடுத்துக் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பில் தனது சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடி இன்று பதிலளிப்பதாகத் தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தின் இடைக்காலக் கட்டளையைச் செயற்படுத்தவில்லை எனத் தெரிவ…
-
- 0 replies
- 370 views
-
-
காணாமலாக்கப்பட்டோர் அனைவரும் புலிகளுடன் தொடர்புபடையவர்கள் : அதற்காக பாதுகாப்பு பிரதானியை தண்டிக்க முடியாது (ஆர்.யசி) பாதுகாப்பு படைகளின் பிரதானி மீதான குற்றச்சாட்டில் , காணாமல் ஆக்கப்பட்டோர் அனைவருமே விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்டவர்கள், ஆயுத மோதலின் போதே பிரதான புலிகள் காணாமல் போனார்கள். இவர்கள் குறித்து பாதுகாப்பு படைகளின் பிரதானியை தண்டிக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சுயாதீன அணி தெரிவித்துள்ளது. கடத்தப்பட்டவர்கள் மாணவர்களா, அல்லது வேறு யாருமா என தெரியாது. ஆனால் இந்த காலத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு, கடத்தல், கொலை, கைதுகள் என அனைத்துமே விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்டவை எனவும் அவ்வணி குறிப்பிட்டுள்ளது…
-
- 2 replies
- 629 views
-
-
இலங்கைத் தமிழரது வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய இந்திய அரசு முன்வரவேண்டும் யுத்தத்தால் பாதிப்புற்று வாழும் இலங்கைத் தமிழரது வாழ்வாதாரத்தை உறுதி செய்ய இந்திய அரசு முன்வரவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சித் தலைவர்களை உள்ளடக்கிய பாராளுமன்றக் குழுவினர் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்யலாம் என்றும் குறித்த நபர்கள் தண்டனைக் காலத்தை அனு…
-
- 0 replies
- 292 views
-
-
கனகராயன்குளம் காவல் நிலையப் பொறுப்பதிகாரியிடம் விசாரணை… கனகராயன்குளம் காவல் நிலையப் பொறுப்பதிகாரியிடம் நேற்றுக் காலை மனித உரிமைகள் ஆணைக்குழு சுமார் இரண்டரை மணி நேரம் வாக்குமூலத்தை பெற்றுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய இணைப்பாளர் ரோஹித பிரியதர்ஷன தெரிவித்துள்ளார். கனகராயன்குளம் பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் கடந்த 10 ஆம் திகதி காவல் நிலையப் பொறுப்பதிகாரியொருவர் சிவில் உடையில் சென்று தாக்குதல் நடத்தியுள்ளர்.இதனால் தாக்குதலுக்குள்ளாகிய தந்தை மற்றும் இரு பிள்ளைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதனையடுத்து தாக்குதலுக்குள்ளானவரின் மனைவி இலங்கை மனித உரிமைகள்…
-
- 0 replies
- 278 views
-
-
நாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்கிறார் சம்பந்தன் மகாவலி திட்டத்தின் பேரில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் இருந்து வேறு மக்களை கொண்டு வருவதை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அதற்கு எங்களுடைய எதிர்ப்பு தொடர்ச்சியாக இருக்கும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். திருகோணமலை - திரியாய் அருள்மிகு வரத விக்னேஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த பெருவிழாவில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் கலந்து கொண்டிருந்தார். இதன்போது மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் பேரில் சிங்கள குடியேற்றம் இடம்பெறுவதை தடுத்த…
-
- 1 reply
- 914 views
-
-
தமிழ் மக்களிற்கு சமஸ்டியை வழங்குவதற்கு வாய்ப்பேயில்லை- நல்லவேட்பாளர் கிடைக்காவிட்டால் நான் போட்டியிடுவேன்- மகிந்த நாட்டை பிரித்து தமிழ் மக்களிற்கு சமஸ்டியை வழங்க முடியாது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்தியாவின் நியுஸ் எக்சிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். பிராந்திய அபிவிருத்தி மற்றும் அதிகாரப்பகிர்வு ஆகியவற்றை வழங்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் அவற்றை வழங்கவேண்டும் எனினும் இலங்கை சிறிய நாடு நாங்கள் நாட்டை பிரித்து சமஸ்டியை வழங்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். …
-
- 1 reply
- 430 views
-
-
முல்லைத்தீவு குருந்தூர் மலையில் மதஸ்தலம் அமைக்க முடியாது - நீதிமன்றம் அதிரடி உத்தரவு முல்லைத்தீவு, குருந்தூர் மலைப்பகுதியில் அனுமதியின்றி மதஸ்தலங்களை அமைக்க முடியாதெனவும், இருக்கும் சைவ ஆலயத்தினை மக்கள் தடையின்றி வழிபட முடியுமெனவும் முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் குமுழமுனை தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள குருந்தூர் மலைப்பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தின் அனுசரணையுடன் விகாரை ஒன்றினை அமைக்கும் நோக்குடன் கடந்த 4 ஆம் திகதி பௌத்த துறவிகள் உள்ளிட்ட குழுவினர் பயணம் மேற்கொண்டுடிருந்த நிலையில் பிரதேச இளைஞர்களால் குறித்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதுடன் முறுகல் நிலை ஒன்றும் தோன்றியிருந…
-
- 1 reply
- 613 views
-
-
வடக்கும் தெற்கும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வேட்பாளரையே களமிறக்குவோம் - இந்தியாவில் நாமல் வடக்கும் தெற்கும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு ஜனாதிபதி வேட்பாளரையே நாங்கள் எதிர்வரும் தேர்தலில் களமிறக்குவோமென இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினரும் மகிந்த ராஜபக்சவின் புதல்வருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். எமது கட்சி பல கட்சிகளை உள்ளடக்கியுள்ளது. எனவே அனைவரும் ஒன்றிணைந்து ஏற்றுக்கொள்ளக் கூடிய வேட்பாளரைத் தெரிவு செய்வோம். இந்தியாவுடன் எமது உறவுகளைப் பலப்படுத்தவே நாங்கள் விரும்புகின்றோம். மத்தள விமான நிலையம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் என்பவற்றை நாங்கள் இந்தியாவின் உதவியுடனேயே நிர்மாணிக்க திட்டமிட்டோம். ஆனால் அப்போது…
-
- 1 reply
- 496 views
-
-
தீலிபனின் நினைவிடத்தில் ஒன்று கூடுமாறு அழைப்பு தியாகி திலீபனின் நினைவு தினத்தில் அவரது நினைவிடத்தில் அனைவரையும் ஒன்றுகூடுமாறு ஜனநாயக போராளிகள் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. தியாகி திலீபனின் 31 ஆவது ஆரம்ப நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டு ஜனநாயக போராளிகள் கட்சியினர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழர் தாயக அரசியல் பரப்பில் ஆட்சி அதிகாரத்தில் யார் ஆதிக்கம் செலுத்தும் சக்தி என்பதற்கான முனைப்புக்கள் தீவிரம்பெற்றுவரும் இச் சூழலில் ஓடுக்கப்பட்ட ஓர் தேசிய இனத்தின் அரசியல் பொருளாதார சமூக விடுதலையினை ந…
-
- 0 replies
- 839 views
-
-
மட்டக்களப்பில் பூரண ஹர்த்தால் மட்டக்களப்பு புல்லுமலைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீர் தொழிற்சாலைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள ஹர்த்தால் நடவடிக்கையில் மட்டு நகரே இன்று ஸ்தம்பிதமடைந்துள்ளது. அந்தவகையில் சற்று முன்னர் வாகனங்கள் போக்குவரத்து செய்யப்பட்ட பகுதிகளில் ரயர்கள் எரிக்கப்பட்டதுடன் கடைகளும் மூடப்பட்டுள்ளன. http://www.newsuthanthiran.com/2018/09/07/மட்டக்களப்பில்-பூரண-ஹர்த/
-
- 20 replies
- 1.7k views
-