ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
எனக்கெதிரான நடவடிக்கைகளில் சுமந்திரன் மட்டுமல்ல பலரும் உள்ளனர்: விக்கினேஸ்வரன் (எம்.எப்.எம்.பஸீர்) தனக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னணியில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மட்டுமல்லாது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பலரும் இருப்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார். நீதிமன்ற அவமதிப்பு விடயத்தில் மேன் முறையீட்டு நீதிமன்ற அழைப்பாணை பிரகாரம் இன்றுஅவர் மேன் முறையீட்டு நீதிமன்றில் ஆஜரான பின்னர் வெளியேறிச் செல்கையில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/39960
-
- 2 replies
- 938 views
-
-
கல்வியங்காட்டில் வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது யாழ்ப்பாணம்- கல்வியங்காடு பகுதியில் நேற்று வியாழக்கிழமை காலை 6 மணியளவில் 3 வீடுகளுக்குள் புகுந்து வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடாத்திய குற்றசாட்டில் நல்லூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை கோப்பாய் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கல்வியங்காட்டு பகுதியில் உள்ள மூன்று வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் மூவர் மீது தாக்குதல் நடத்தியதுடன் வீடுகளிலுள்ள பொருள்களையும் சேதப்படுத்தி தப்பிச் சென்றுள்ளது. ஒரு வீட்டில் குடும்பப் பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மற்றொரு வீட்டில் தந்தை மற்றும் மகன் மீது தாக்குதல் ந…
-
- 1 reply
- 745 views
-
-
புதிய அரசமைப்புக்கு நகல் வரைவு தயார்! – வழிநடத்தல் குழு இணக்கம் புதிய அரசமைப்புக்கான நகல் வரைவுக்கு வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டது. இது தொடர்பில் பத்து நிபுணர்களைக் கொண்ட குழு சமர்ப்பித்த யோசனைத் திட்டத்தை வழிநடத்தல் குழு சர்ச்சையின்றி ஏற்றுக்கொண்டது. புதிய அரசமைப்புக்கான வழிநடத்தல் குழு நேற்று வியாழக்கிழமை பிற்பகல் நாடாளுமன்றக் கட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடியது. அநேகமாக அனைத்துத் தரப்புப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். அரசமைப்புக்கு நகல் வரைவாக பத்து நிபுணர்களின் குழு முன்வைத்த யோசனை வடிவம் நேற்றைய கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆங்கிலத்தில் அமைந்த அந்த யோசனைத் திட்டத்தில் முன்னர் வழிநட…
-
- 2 replies
- 619 views
-
-
வன்னி மக்களின் கண்ணீரைத் துடைப்போம்: அமைச்சர் சஜித்! வன்னி மக்களுக்கு வீடில்லை என்ற குறையினைத் தீர்த்து அவர்களின் கண்ணீரைத் துடைக்கவேண்டும் என்பதே எமது நோக்கமாக இருக்கிறது என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். வவுனியா நெடுங்கேணியில் இன்று (வெள்ளிக்கிழமை) சிவாநகர் மாதிரிக் கிராமத்தை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஏழை மக்களின் கண்ணீரைத் துடைக்கவேண்டும் அவர்களிற்கு வீடு இல்லை என்ற பிரச்சினையை முற்றாகக் குறைத்து அவர்களிற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் என்பதுவே எமது நோக்கமாக இ…
-
- 0 replies
- 714 views
-
-
வெடுக்குநாரி ஆலயத்திற்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் விஜயம் வவுனியா வடக்கு பிரதேசத்தின் ஒலுமடு கிராமத்தில் இருந்து மூன்று கிலோ மீற்றர் தொலைவில் தமிழரின் பூர்விக பிரதேசமான வெடுக்குநாரி மலை அமைந்துள்ளது. குறித்த மலைப்பகுதியில் ஆதி லிங்கேஸ்வரர் எனும் சிவனுடைய லிங்கம் காணப்படுவதுடன் தமிழ் மக்களுடைய நாகர்களின் புராதான பிராமிய எழுத்துக்களும் காணப்படுகின்றன . கடந்த ஐந்து தலைமுறையாக அப்பகுதி மக்கள் குறித்த ஆலயத்திற்கு சென்று பூஜை வழிபாடுகளை மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில் கடந்தவாரமளவில் தொல்பொருள் திணைக்களத்தால் குறித்த மலைக்கு பொதுமக்கள் சென்று வழிபடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் இத்தடையினை தற்காலிகமாக தொல்பொருள்…
-
- 0 replies
- 423 views
-
-
வடக்குமாகாணசபையை குழப்பும் மைதிரி ரணில் அரசாங்கம்
-
- 0 replies
- 620 views
-
-
கூட்டுப் பயிற்சிக்காக இந்தியாவின் 3 போர்க்கப்பல்கள், 3 விமானங்கள் திருகோணமலை வருகை சிறிலங்கா கடற்படையுடனான கூட்டுப் பயிற்சிக்காக, இந்தியக் கடற்படையின் மூன்று போர்க்கப்பல்களும் மூன்று விமானங்களும் நேற்று திருகோணமலையை வந்தடைந்துள்ளன. இந்திய சிறிலங்கா கடற்படைகளுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், SLINEX-2018 கூட்டுப் பயிற்சி நேற்று திருகோணமலையில் ஆரம்பமானது. இந்தக் கூட்டுப் பயிற்சியில், சிறிலங்கா மற்றும் இந்திய கடற்படைகளின் சார்பில் தலா 3 போர்க்கப்பல்களும், இரண்டு தரப்பிலுமாக சுமார் 1000 கடற்படையினரும் பங்கேற்கின்றனர். எதிர்வரும் 13ஆம் நாள் வரை இந்தக் கூட்டுப் பயிற்சி தொடரவுள்ளது. சிறிலங்கா கடற்படையின் தரப்பில், சயுரால, சமுத்ர, ச…
-
- 0 replies
- 817 views
-
-
பிரபாகரன் இறந்துவிட்டார்; ஆனால் உறுதிப்படுத்தமுடியாது என்கிறார் வட மாகாண முதலமைச்சர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் இறந்ததன் பின்னர் தனது கொள்கையை கொண்டு செல்வதற்குரிய நபர்களை அதற்கேற்றாற்போல் வைத்திருந்தாரா என்பபதை தான் அறிந்திருக்கவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் தேசியத் தலைவராக அறியப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதிக்கட்ட போரின் போது இறந்துவிட்டார் என்பதை தான் சர்வ சாதாரணமாகக் கூறினாலும் அதனை தன்னால் உறுதிப்படுத்த முடியாது என்றும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சியின் சக்கர வியூகம் என்ற நடப்பு விவகார நிகழ்ச்…
-
- 4 replies
- 1.8k views
-
-
செம்மணிப் படுகொலை நினைவேந்தல்!! யாழ்ப்பாணம் செம்மணிப் படுகொலையின் 22 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது. செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிரிசாந்திக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. கிரிசாந்தியுடன் படுகொலை செய்யப்பட்ட ஏனைய மூன்று பேர் உட்பட,படுகொலை செய்யப்பட்டு செம்மணியில் புதைக்கபட்டவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ஆரம்ப பிரிவு மாணவர்கள் பலருக்கு கற்றல் உபகாரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன. நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், கிரிசாந்தினயின் உறவினர்கள், அயலவர்கள் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். …
-
- 4 replies
- 1k views
-
-
இறுதிப் போரில் 23 ஆயிரம் விடுதலைப் புலிகளை இராணுவம் கொன்றது: ஃபொன்சேகா பேட்டி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionமுன்னாள் ராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் ஃபொன்சேகா இலங்கை இறுதிப் போரின் போது 23 ஆயிரம் விடுதலைப் புலிகளை இலங்கை இராணுவம் கொன்றதாக அப்போது இராணுவத் தளபதியாக இருந்த பீல்ட் மார்ஷல் சரத் ஃபொன்சேகா தெரிவித்தள்ளார். மேலும், "இறுதிப் போரில…
-
- 5 replies
- 682 views
-
-
குழந்தையின் இறப்பால் வைத்தியர்களை தாக்கிய தந்தை ;மன்னாரில் சம்பவம் குழந்தையின் இறப்பை சகிக்க முடியாமல் குழந்தையின் தந்தை வைத்தியரை தாக்கிய சம்பவம் மன்னாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நபரின் மனைவியான 33 வயதுடைய லசிக்கா என்பரே இன்று அதிகாலை ஆண் குழந்தையை பெற்றேடுத்துள்ளார். இவ்வாறு பெற்றக்குழந்தை இன்று காலை இறந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்ததை அடுத்து குழந்தையின் தந்தையான முகமட் றிவ்லான் வைத்தியர் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை தாக்கியுள்ளார். மேலும் சம்பவத்தில் காயமடைந்த வைத்தியர்,வைத்திய உத்தியோகத்தர்கள் சிகிச்சை பெற்று வருவதாக வைத்திய வட்டாரம் தெரிவித்துள்ளது. எனினும் வைத்தியர் மற…
-
- 4 replies
- 931 views
-
-
கூட்டமைப்பிலிருந்து விலகி புது அணி அமைக்கத் திட்டமிடுகிறார் விக்கி - டெனீஸ்வரன் தகவல் (எம்.எப்.எம்.பஸீர்) விக்கினேஸ்வரன் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி புதிய அணியை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு தற்போது அவரது அமைச்சர்களாக இருக்கும் நால்வரும் துணை போவதாகவும் என வட மாகாண மீன் பிடித்துறை அமைச்சராக இருந்த பா. டெனிஸ்வரன் தெரிவித்தார். என்னூடாக முதலமைச்சர் விக்கினேஸ்வரனை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பழி வாங்குவதாக அரசியல் மட்டத்தில் கூறப்படும் கருத்துக்கள் அடிப்படையற்றவை எனவும் குறிப்பிட்டார். முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கு விசாரணைகளின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் ப…
-
- 3 replies
- 524 views
-
-
வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீனின் கொடும்பாவி இரண்டாவது முறையாகவும் யாழ். முஸ்லிம் மக்களினால் வீதியில் இழுத்துச் செல்லப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளது. இன்று மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள பெரிய முஹீதீன் ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெற்ற தொழுகையின் பின்னர் ஒன்று கூடிய முஸ்லிம்கள் குறித்த மாகாண சபை உறுப்பினர் அண்மைக்காலமாக யாழ் முஸ்லிம் மக்கள் தொடர்பாக தெரிவித்து வரும் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இக்கொடும்பாவி எரிப்பில் ஈடுபட்டனர். இதன் போது இப்போராட்டத்தில் பங்கு பற்றிய மக்கள் வடக்கு மாகாண சபை உறுப்பின ரின் பதவிக்காலம் அடுத்த மாதம் நிறைவடைவதை இட்டு மீண்டும் தனக்கான அரசியலை மேற்கொள்ள வட பகுதி முஸ்லிம் மக்கள் குறித்து முன்னுக்குப் பின்னாக முரணான கருத்துக்…
-
- 1 reply
- 747 views
-
-
மன்னார் மனித புதைகுழி அகழ்வின்போது தலையில் வெட்டு தழும்புடன் மண்டையோடு மீட்கப்பட்டுள்ளது மன்னார் சதோச வளாகத்தில் தொடர்ச்சியாக சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்கள் மற்றும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருவதுடன், மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் பணிகளின் போதும் தொடர்ச்சியாக புதிய மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இன்று வியாழக்கிழமை 66 வது தடவையாக குறித்த வளாகத்தில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இதுவரை 120 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டதுடன் 114 மனித எலும்புக்கூடுகள் குறித்த வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாள் அகழ்வு பணியின் போதும் புதிதாக மனித எலும்புக்கூ…
-
- 0 replies
- 595 views
-
-
விஜயகலாவுக்கு எதிராக வழக்கு தொடரவும் - சட்ட மா அதிபர் ஆலோசனை முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக வழக்குத் தொடருமாறு பொலிஸ் மா அதிபருக்கு சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார். தமிழீழ விடுதலை புலிகளுக்கு ஆதரவாக கருத்தினை தெரிவித்ததன் மூலம் அவர், குற்றவியல் சட்டத்தின் 120 ஆம் சரத்துக்கு அமைவாக குற்றம் இழைத்துள்ளார் எனவும் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டு எனவும் சட்ட மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் விஜயகலா மகேஸ்வரன் அரசியலமைப்பின் 157 ஆவது அத்தியாயத்தை மீறியுள்ளதாகவும் அது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யுமாறும் பொலிஸ் மா…
-
- 0 replies
- 397 views
-
-
முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றம் நடப்பது உண்மையே-மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமை பேரவை முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றம் நடப்பது உண்மையே என தெரிவித்து முல்லைத்தீவில் நடைபெறும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பாக மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமை பேரவையால் அறிக்கை ஒன்று வெளியிடபட்டுள்ளது . அந்த அறிக்கை வருமாறு முள்ளிவாய்க்கால் வரலாற்றுத்தளத்தின் பின் தமிழர்கெதிரான அடக்குமுறை வெவ்வேறு வடிவங்களை எடுத்துள்ளது அதில் தமிழர் நில அபகரிப்பு முதன்மையானது. மகாவலி அதிகாரசபை தொல்லியல் திணைக்களம் வன பாதுகாப்புத் திணைக்களம் வன ஜீவராசிகள் திணைக்களம் பாதுகாப்புப் படையினர் என பல்பரிமாண நிலபகரிப்புக்கெதிராக தமிழினம் முகங்கொடுக்க வேண்டிய நிலைக்குத…
-
- 0 replies
- 537 views
-
-
விகாரை அமைப்பதற்கு களவாக காணி அளவீடு; விரட்டியடித்த மக்கள்! - முல்லைத்தீவில் சம்பவம் முல்லைத்தீவு செம்மலை நாயாறு பகுதியில் மக்களின் காணிகளில் விகாரை ஒன்றினை அமைத்து அந்த பகுதியை நிரந்தரமாக சுவீகரிக்கும் நோக்குடன் இரண்டாவது தடவையாக இன்றையதினம் முன்னறிவித்தல் எதுவுமின்றி களவாக அளவீட்டு பணியினை மேற்கொள்ளவருகைதந்த தொல்பொருட்த்திணைக்களம் மற்றும் நில அளவீட்டுதிணைக்களத்தினரை பொதுமக்கள் அளவீட்டுப்பணியினை மேற்கொள்ளவிடாது விரட்டியடித்துள்ளனர். இன்றையதினம் குறித்த பகுதியில் அமைந்துள்ள விகாரையை விஸ்தரிக்கும்நோக்குடன் செம்மலை கிராம மக்களின் காணிகள் மற்றும் பொது மயானம் அமைந்துள்ள பகுதியில் அளவீட்டு பணிகள் இடம்பெறுவதை அறிந்து. குறித்த இ…
-
- 0 replies
- 493 views
-
-
விக்கி இனவாதி அல்ல, எனினும் ஏன் இனவாதமாக செயற்படுகின்றார்? - றெஜினோல்ட் விளக்கம் (ஆர்.யசி) வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இனவாதி அல்லர், எனினும் அரசியல் நோக்கங்களுக்காவும் குறுகிய காலதில் தலைவர்களாக மாறவும் இனவாதம், மதவாதம் என்பவற்றை கையில் எடுக்கின்றார்கள் என என்று வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். வட்டு இந்துக்கல்லூரியில் இன்று காலை நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போது இதனை தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் கூறியிருப்பதானது, மக்கள் மத்தியில் விரைவாக தலைவராக வருவதற்கு சுலபமான வழி இருக்கின்றது. அதுதான் இனவாதம், மொழி…
-
- 0 replies
- 276 views
-
-
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையதாக கூறப்பட்டு அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையரான மொஹமட் கமீர் நிலார் நிஸாம்தீனை விடுவிக்க வேண்டும் என்றுக்கோரி கையெழுத்து போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவரின் நண்பர்களும் உறவினர்களும் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இது குறித்து அவர்கள் குறிப்பிடுகையில், குறிப்பு புத்தகம் ஒன்றை வைத்து கைது செய்யப்பட்டுள்ள நிஸாம்டீன் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புகளை கொண்டிருக்கவில்லை. குறித்த குறிப்பு புத்தகத்தில் நிஸாம்தீனின் கையெழுத்துக்கள் இருக்கவில்லை. இந்தநிலையில் அவர் அவுஸ்திரேலியாவில் இருந்தவாறே டியூனியசியாவுக்கு சென்று வந்தார் என்றும் அமெரிக்காவுக்கு சென்று வந்தார் என்று பொய்யான கதை…
-
- 1 reply
- 1.8k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமஷ்டி அடிப்படையிலான ஒரு தீர்வை பெறுவதற்கான கொள்கையுடனேயே பயணித்து வருகிறது. அந்த அடிப்படையில் சமஷ்டி தேவையில்லை என்று கூட்டமைப்பின் கொள்கைக்கு அப்பாலான விடயத்தை சுமந்திரன் கூறியிருப்பாரேயானால் அது தவறாகும். இவ்வாறானதொரு கருத்தை அவர் கூறியிருப்பாரேயானால் அவர் பிழையான திசையில் சிந்திக்கிறார் என்றே கருத வேண்டியிருக்கிறது என்று தெரிவித்த தமிழீத் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழிழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், புதிய அரசியலமைப்புக்கான பணிகளில் கூட நாங்கள் (கூட்டமைப்பு) சமஷ்டியைத்தான் வலியுறுத்தி வருகின்றோம். அந்த அடிப்படையில் சுமந்திரனின் கருத்து கூட்டமைப்பை திசைதிருப்புவதற்கான வழியாக இருக்குமேயானா…
-
- 0 replies
- 690 views
-
-
புலிகள் இயக்கம் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது - ஈழத்து கவிஞர் காசி ஆனந்தன்.! தனி ஈழம் கோரி தொடர்ச்சியான போராட்டங்கள் பலவற்றை முன்னெடுத்த விடுதலைப்புலிகள் இயக்கம் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி கட்ட போருக்கு பின்னர் முற்றாக அழிந்துவிட்டதாக சில கருதுகின்றனர். ஆனால், புலிகள் இயக்கம் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது என தெரிவித்துள்ளார் ஈழத்து கவிஞரும், தமிழின உணர்வாளருமான காசி ஆனந்தன். இது தொடர்பாக அவர் அளித்துள்ள நேர்காணலில், இறுதி கட்ட போருக்கு பின்னர் ஈழத்து மக்கள் எந்த நிலையில் இருந்தனரோ அதே நிலையில் தான் தற்போதும் அம்மக்கள் தங்களது தார்மீக உரிமைகளை இழந்தவர்களாக உள்ளனர். எதிர்வரும் 5 ஆண்டுகளுக்குள்ளாக அங்கே எம் உரிமைகளை மீட்டெடுக்காவிடில…
-
- 14 replies
- 2.1k views
-
-
முடிவுக்கு வந்தது வீடமைப்பு இழுபறி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வீடுகள் அமைப்பதில் நீடித்த இழு பறி நேற்று முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இருவேறு திட்டங்களின் ஊடாக வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் வீடு களை அமைக்கும் பணிகள் இரு வாரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளன. 25 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டம், தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தலை மையிலான குழுவால் நேரடியாகக் கையாளப்படவுள்ளது. அதேவேளை 40 ஆயிரம் வீடுகளை இந்தியாவா? சீனாவா அமைப்பது என்ற சர்ச்சை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. வீடுகளை அமைக்கும் பணிகளை இந்தியாவிடம் ஒப்படைக்கவும் மு…
-
- 1 reply
- 690 views
-
-
கிளிநொச்சியில் காப்புறுதி முகாமையாளரை இனந்தெரியாத நபர்கள் கடத்தி சென்று தாக்கி பணம் கொள்ளை கிளிநொச்சி இரணைமடுவில் நேற்று அதிகாலை 1.00மணியளவில் பஸ்ஸிலிருந்து வந்திறங்கி பாரதிபுரத்திலுள்ள விடுதிக்கு நடந்து சென்றுகொண்டிருந்த தனியார் காப்புறுதி முகாமையாளரை வழிமறித்த இனந்தெரியாத எட்டு பேர் கொண்ட இளைஞர் குழு ஒன்று தாக்குதல் நடத்தி விட்டு பணப்பையையும் பறித்து கொண்டு தப்பிச்சென்றுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கிளிநொச்சியில் தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்றில் முகாமையாளராக கடமையாற்றி வரும் எஸ். வினிஸ்கரன் மார்க் நேற்று முன்தினம் பஸ்ஸிலிருந்து மன்னாருக்கு தனது சொந்த தேவை காரணமாக சென்றுவிட்டு வரும்போது …
-
- 0 replies
- 723 views
-
-
ஆண்டிறுதிக்குள் பலாலியில் அன்டனோவ் இரு நாட்டு அதிகாரிகளும் நடவடிக்கைகளில் மும்முரம் இந்த ஆண்டு இறுதிக்குள் பலாலி வானூர்தித் தளத்தில் அன்டனோவ் தர வானூர்தி தரையிறங்கும். தமிழகத்தின் திருச்சி அல்லது மதுரை வானூர்தி நிலையத்திலிருந்து புறப்படும் வானூர்தியே முதலாவதாகத் தரையிறங்கும் என்று தெரியவருகின்றது. இதேவேளை, இந்த வானூர்திச் சேவையில் எழுந்துள்ள தொழில்நுட்ப பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, இலங்கை சிவில் வானூர்திகள் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும், இந்திய அதிகாரிகளுக்கும் இடையிலான மிக முக்கிய உயர் மட்டச் சந்திப்பு நாளை வியாழக் கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது. பலாலி வ…
-
- 12 replies
- 2.2k views
-
-
யாழில் மீண்டும் வாள்வெட்டுத் தாக்குதல்! – மூவர் படுகாயம் யாழ்ப்பாணம் – கல்வியங்காடு ஆடியபாதம் வீதியில் நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் மூவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிள்கள மற்றும் பாரியளவான பொருட்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். வாள்களுடன் சென்ற ஆவா குழுவினரே இந்த நாசகார செயலை செய்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. இரண்டு வீடுகள் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் 70 வயதான முதியவர், 25 வயதான இளைஞன் மற்றும் 61 வயதுடைய பெண்மணியொருவரே படுகாயம…
-
- 1 reply
- 1.1k views
-