ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
GO AWAY, WATER MAFIA FORM THE DROUGHT STRICKEN BATTICALOA WEST. . படுவான் கரை மக்களைப் பலியெடுக்கும் தண்ணீர் மாபியா ஒழிக வயலுக்கு பாச்சும் நீரையே இரங்கி குடிக்க விட்டுத்தரும் ஏழை மக்களின் நிலத்தடி நீரையும் பறிக்கிற பாதகம் ஒருபோதும் வெற்றி பெறக்கூடாது. படுவான்கரை மக்களின் தண்ணீரை அருந்தும் தமிழ் முஸ்லிம் மலையக மற்றும் சிங்கள மக்கள் அனைவரும் அந்த மக்களின் கண்ணீரைத் துடைக்க ஒன்றுகூடி முன்வரவேண்டும். நிலத்தடி நீரில் கைவைத்தால் குடிக்கிற நீரும் கிடையாது என்கிற குரல்கள் இப்பவே கேட்க்கத் தொடங்கியுள்ளது. இது தமிழர் முஸ்லிம் மலையகதமிழர் சிங்களவர் என இன்பேதமில்லாமல் அனைத்து இலங்கை மக்களும்…
-
- 0 replies
- 429 views
-
-
கிளிநொச்சியில் யுவதி ஒருவரின் சடலம் மீட்பு கொலை எனச் சந்தேகம்…. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகர் பிரிவுக்கு உட்பட்ட பிரவுன் வீதி பகுதியில் உள்ள வயல் கால்வாயில் இன்று காலை யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று 29-08-2018 காலை அப்பகுதிக்கு பின்புறமாக உள்ள குளத்திற்கு மீன்பிடிக்க சென்ற இருவர் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதனை அடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த யுவதிக்கு வயது சுமார் இருபது மதிக்கதக்கது என தெரிவிக்கப்படுகிறது. சடலத்தின் முகப்பகுதியில் பாரிய காயம் இருப்பதுடன் உள்ளாடைகளுடன் சடலம் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளமையால் இது கொலையாக இருக்கலாம் எனவும் சில …
-
- 58 replies
- 6.1k views
-
-
ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலய, ஈழ அலங்கார வழக்கு ஒத்திவைப்பு… ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலய திருவிழாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கோரிக்கையான தனி ஈழத்தை எடுத்துக் காட்டும் வகையில் சுவாமிக்கு அலங்காரம் செய்தமை தொடர்பான செய்தியை வெளியிட்ட யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் 3 பத்திரிகைகளின் ஆசிரியர்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று அனுமதி கோரினர். பயங்கரவாத விசாரணைப் பிரிவினரின் விண்ணப்பம் சிங்கள மொழியில் முன்வைக்கப்பட்டது. அதனை ஏற்க மறுத்த பதில் நீதிவான் கனகரட்ணம் கேசவன், யாழ்ப்பாண நீதிமன்ற மொழியான தமிழில் முன்வைக்குமாறு உத்தரவிட்டு …
-
- 1 reply
- 580 views
-
-
ஒரே நேரத்தில் புதுடெல்லியில் முகாமிடும் மகிந்த, சம்பந்தன், மனோ, டக்ளஸ், ஹக்கீம், றிசாத் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச புதுடெல்லி செல்லவுள்ள அதே காலப்பகுதியில் இந்திய அரசின் அழைப்பின் பேரில், இரா.சம்பந்தன், டக்ளஸ் தேவானந்தா, மனோ கணேசன் உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் அங்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர். இருதரப்பு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பல கட்சி குழுவை புதுடெல்லி வருமாறு இந்திய அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 9ஆம் நாள் தொடக்கம் 14ஆம் நாள் வரை, 10 பேர் கொண்ட சிறிலங்காவின் பல கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு, சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் புதுடெல்லியில் பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்தக் க…
-
- 7 replies
- 1.2k views
-
-
விக்கியைச் சந்திக்க அழைக்கிறார் சம்பந்தன் “உடனடியாக ஒரு புதிய கட்சியை ஆரம்பிக்க நான் நினைக்கவில்லை. புதிய கட்சியை தொடங்குவது எனது வயதில் மிகவும் இலகுவானதாக இருக்காது இது கலந்துரையாடல்களாகத் தான் சென்று கொண்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “எவ்வாறாயினும், பிந்திய நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு இரா.சம்பந்தன் அழைப்பு விடுத்துள்ளார். புதிய கட்சியை ஆரம்பிக்க வேண்டாம் என்றும், தமது கட்சியுடன் இணைந்திருக்குமாறும் அவர் என்னிடம் கேட்கக் கூடும். அது எமக்குத் தெரியாது.” என்றும் விக்னேஸ்வரன் குறிப்பிட…
-
- 2 replies
- 691 views
-
-
நாடாளுமன்ற நிதிக்குழு யாழ்.மாவட்ட செயலகத்தில் முதல்தடவையாக கூடுகிறது… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… வரவு செலவு திட்டம் குறித்த பொதுமக்களின் கருத்தறிவதற்காக நாடாளுமன்ற நிதிக்குழு நாளை திங்கள் கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் முதல்தடவையாக கூடவுள்ளதாக நிதிக்குழுவின் தலைவர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். குறித்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினரும், நிதிக்குழு தலைவருமான எம்.ஏ.சு மந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நாடாளுமன்றில் நிதிக்குழு, பொதுக்கணக்குகள் குழு, கோப் குழு என 3 குழுக்கள் உள்ளது. இதில் நிதிக்குழு புதிதாக உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த குழு வரவு செலவு திட்டத்திற்க…
-
- 2 replies
- 612 views
-
-
யாழ் குடாநாட்டில் வன்முறைகள் கலாச்சார சீரழிவுகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் விசேட கூட்டங்கள் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ் குடாநாட்டில் வன்முறைகள் அதிகரித்துள்ளமை தொடர்பிலும் போதைவஸ்து மற்றும் கலாச்சார சீரழிவுகளை எதிர்காலத்தில் அதிகரிக்காது வண்ணம் பாதுகாத்துக் கொள்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயும் விசேட கூட்டங்கள் வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தலைமையில் நடைபெற்றது. சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று (03.09.2018) காலை முதல் மாலைவரை கூட்டங்கள் நடைபெற்றன. முற்பகல் 10.30 மணியளவில் யாழ் மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், இளைப…
-
- 0 replies
- 318 views
-
-
மோசமாகி வரும் கூட்டமைப்பு, முதல்வர் விக்கியர் உறவு... அதிரடி பிரிவில் முடியாமல் இருக்கும் முகமாக, கூட்டமைப்பு தலைவர் சம்பந்தர், அதி கூடிய விரைவில் விக்கியரை சந்திக்க முனைப்பு காட்டி வருகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. விக்கியருக்கும், சுமந்திரனுக்கும் இடையே அதிகரித்து வரும் வார்த்தை போர் இடையே இந்த சந்திப்பு நடைபெறலாம் என தெரிகிறது. கூட்டமைப்பில் இருந்து வெளியேறி புதிய கட்சி ஆரம்பிப்பீர்களா என கேட்டபோது, அவ்வாறான எண்ணம் தற்போது இல்லை என தெரிவித்தார். எனினும் தன் முன்னே நான்கு தெரிவுகள் உள்ளதாக அவர் கூறினார். இந்தியா போன்ற வெளி சக்திகள், நீங்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனவா என கேட்டபோது, 'இருக்கலாம்' என பதிலளித்தார். என்னிடம் மற…
-
- 1 reply
- 754 views
-
-
முதலமைச்சரின் மனக்குழப்பத்திலான பேச்சுகளுக்கு கூட்டமைப்பு பொறுப்பேற்காது – சுமந்திரன் வடக்கு மாகாண முதலமைச்சர் மன குழப்பம் அடைந்து பல கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் அதற்கு கூட்டமைப்பு ஒரு போதும் பொறுப்பேற்காது என கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்விடயத்தை கூறினார். அவர் அங்கு குறிப்பிடுகையில், “அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுதியான தீர்மானம் எதனையும் இதுவரை எடுக்கவில்லை. நேற்று முதலமைச்சர் உரையாற்றும்போது தன் முன் 3 தெரிவுகள் முன்னர…
-
- 4 replies
- 719 views
-
-
மறைந்த இந்தியத் தலைவர்கள் கிளிநொச்சியில் நினைவு கூர்வு! மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் பாரத பிரதமர் வாஜ்பாய் ஆகியோரை நினைவுகூரும் முகமாக நினைவேந்தல் நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தலைமையில் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் யாழ். இந்திய துணை தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டதுடன், யாழ். பல்கலைக்கழக பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் உட்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். யாழ்.பல்கலைக்கழக பேராசிரியர் கே.ரீ. கணேசலிங்கம் குறித்த தலைவர்களின் நினைவுரையை நிகழ்த்தினார். …
-
- 6 replies
- 1.6k views
-
-
பொதுமக்களின் கருத்துக்களை உள்வாங்குவது நல்லாட்சியின் வெற்றி – சுமந்திரன்… தேசிய கொள்கை ஒன்றை வகுப்பதற்காக பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் நடைமுறை நல்லாட்சியின் வெற்றியாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அதேபோன்று பாராளுமன்ற விடயங்களை முன்னெடுக்கும் பொழுதும் பொதுமக்களின் கருத்துக்களையும் ஒத்துழைப்புகளையும் பெற்றுக்கொள்வது ஒரு முன்னேற்றகரமன செயற்பாடு என்று பாராளுமன்ற உறுப்பினர் கூறினார். 2019 வரவு செலவுத் திட்ட யோசனைகள் குறித்து பொதுமக்களின் கருத்துக்களை ஆராயும் விசேட செயற்பாடு நேற்று (02.09.18) காலை கண்டி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. அந்த செயலக கூட்டத்தில் …
-
- 0 replies
- 308 views
-
-
யாழில் முக்கிய கட்டடங்கள் கையளிக்கப்படும்… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. மயிலிட்டி கலைமகள் வித்தியாலயம், ஆனைக்கோட்டை கூழாவடி இராணுவ முகாம், உள்ளிட்ட சில பிரதேசங்கள் வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளதக மாவட்டச் செயலாளர் தெரிவித்தார். இது தொடர்பில் மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவிக்கையில், குடாநாட்டில் பொதுமக்களின் பாவனைக்குரிய சில இடங்களை விடுவிக்குமாறு கோரியிருந்தோம். அவ்வாறு கோரிக்கை விடப்பட்ட இடங்களில் 4 இடங்களை விடுவிக்க படையினர் இணக்கம் தெரிவித்திருந்தனர். அதன் அடிப்படையில், மயிலிட்டி கலைமகள் வித்தியாலயம், ஆனைக்கோட்டை கூழாவடி இராணுவ முகாம், வசாவிளான் மற்றும் குரும்பசிட்டிப…
-
- 0 replies
- 812 views
-
-
காணிகளை மாத்திரம் கையகப்படுத்தவில்லை கால் நடைகளையும் பிடிக்க முயற்சி… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. முல்லைத்தீவில் கடற்படையினர் மக்களின் காணிகளை மாத்திரம் கையகப்படுத்தவில்லை. தமக்கு ஜீவனோயத்தை வழங்கும் மாடுகளையும் கையகப்படுத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கடற்படை முகாமினுள் அடைபட்டு உள்ள கால்நடைகளை பிடித்து உரிமையாளர்களுக்கு வழங்க கடற்படையினர் பிரதேச செயலகத்திற்கு அனுமதி வழங்கியபோதும் அதனை நிறைவேற்ற பிரதேச செயலகம் தவறிவிட்டதாக கால்நடை உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குறித்த கடற்படைத் தளம் அமைந்துள்ள 617 ஏக்கர் காணிக்குள் சுமார் நூற…
-
- 0 replies
- 241 views
-
-
சமஷ்டியே அரசியல் பிரச்சினைக்கு தீர்வு (ஆர்.யசி) சுமந்திரன் எம்.பியின் கருத்துக்கு எதிராக கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் போர்க்கொடி தேர்தல் விஞ்ஞாபனத்தில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மீறமுடியாது அதிகார பரவலாக்கலை பிரதானப்படுத்தி சமஷ்டி முறையிலான அரசியலமைப்பே தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வாக அமையும். சமஷ்டி அரசியலமைப்பே வேண்டும் என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் உறுதிபட தெரிவித்தன . தேர்தல் விஞ்ஞாபனத்தில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி…
-
- 0 replies
- 283 views
-
-
விக்கினேஸ்வரன் வன்முறையைத் தூண்டுகிறார் – மாவை குற்றச்சாட்டு! விடுதலைப்புலிகள் சம்பந்தமான தீர்ப்புக்களில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் எவ்வாறிருந்தார் என்பது எமக்குத் தெரியும். ஆவர் சட்டத்துறையில் ஆற்றல் கொண்டவர் என்றுதான் நினைத்தோம். ஆனால் அவர் வன்முறையைத்தூண்டுகிறார் – இவ்வாறு தெரிவித்தார் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமரர் வி.தர்மலிங்கம் மற்றும் அமரர் மு.ஆலாலசுந்தரம் ஆகியோரது 33 ஆவது ஆண்டு நினைவஞ்சலிக் கூட்டம் யாழ்ப்பாணம் – மார்ட்டின் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சிக் காரியாலயத்தில் இன்று பிற்பகலில் இடம்பெற்றது. அந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர்…
-
- 0 replies
- 733 views
-
-
கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கைப் புறக்கணித்த சரத் பொன்சேகா சிறிலங்கா இராணுவம் நடத்திய கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கை, சிறிலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா புறக்கணித்தார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. சிறிலங்கா இராணுவத்தின் எட்டாவது கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கு கடந்த மாதம், 30ஆம், 31ஆம் நாள்களில், பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வில் சிறிலங்கா பிரதமர் மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். எனினும், சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், பீல்ட் மார்ஷல் பட்டத்தைப் பெற்ற ஒரே ஒருவருமான சரத் பொன்சேகா இந்த கருத்தரங்கில் பங்கேற்கவ…
-
- 0 replies
- 423 views
-
-
வடக்கு, கிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – மீண்டும் ஆரம்பம் வடக்கு- கிழக்கிற்கு அப்பாலுள்ள கடல் பகுதியில் உள்ள இயற்கை எரிவாயும் மற்றும் எண்ணெய் வளங்களை கண்டறிவதற்கான ஆய்வுகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று சிறிலங்காவின் பெற்றோலிய வளங்கள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். உலகளவில் பிரபலமான Schulumberger என்ற நிறுவனமே இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளது. கொழும்பு துறைமுக கிழக்கு கொள்கலன் முனையத்தில் இந்த ஆய்வை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்த ஆய்வுக்காக, பனாமா நாட்டுக் கொடியுடன் BGP-Pioneer என்ற கப்பல் கொழும்பு வந்துள்ளது. இந்தக் கப்பல் வடக்கு, கிழக்கிற்கு அப்பாலுள்ள கடல் பகுதியில் 45 நாட்கள் ஆய்வுகளில் ஈடுபட்டு த…
-
- 0 replies
- 401 views
-
-
சித்திரவதைக் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்காத சிறிலங்கா – ஜெனிவாவில் இருந்து கடிதம் சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளராக இருந்த சிசிர மென்டிசுக்கு எதிரான சித்திரவதைக் குற்றச்சாட்டு குறித்த அறிக்கைக்கு சிறிலங்கா அரசாங்கம் பதிலளிக்கத் தவறியது குறித்து, சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழு கேள்வி எழுப்பியுள்ளது. முன்னாள் குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைவர் மீது சுமத்தப்பட்டுள்ள சித்திரவதைக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க நீதிப் பொறிமுறை ஒன்றை உருவாக்குமாறு கோரும், அறிக்கை ஒன்றை சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழு சமர்ப்பித்திருந்தது. அந்த அறிக்கைக்கு சிறிலங்கா அரசாங்கம் பதிலளிக்கத் தவறியுள்ள நிலையிலேயே, இதுகுறித்து சிறிலங்கா அரசாங்கத்து…
-
- 0 replies
- 200 views
-
-
சிறிலங்கா தூதுவருக்கு மாலைதீவில் ஏற்பட்ட அவமானம் – நிகழ்வை புறக்கணித்து வெளியேறினார் மாலைதீவில் சீனாவினால் கட்டப்பட்ட புதிய பாலத் திறப்பு விழாவின் போது, சிறிலங்கா, பங்களாதேஷ் நாடுகளின் தூதுவர்கள் அவமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இவர்கள் நிகழ்வைப் புறக்கணித்து வெளியேறினர். மாலைதீவின் தலைநகர் மாலேயையும் ஹுல்ஹுலே தீவையும் இணைக்கும் வகையில், 2கி.மீ நீளமான பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மாலைதீவு- சீன நட்புறவுப் பாலம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாலத்தை சீனா கட்டிக் கொடுத்துள்ளது. இந்தப் பாலத்தின் திறப்பு விழா நேற்று இடம்பெற்றது. இதன்போது, மாலைதீவு அதிபர் அப்துல்லா யமீனின் பாதுகாப்பு அதிகாரிகள் சிறிலங்கா மற்றும் பங்களாதேஷ் நாடுகளின் தூதுவர்கள் பயணித்…
-
- 0 replies
- 198 views
-
-
வாழைச்சேனை மீராவோடையில் தமிழ் குடும்பங்களின் வீடுவாசல்களை கட்டிட ஒப்பந்தகாரரான முஸ்லீம் நபர் ஒருவர் தரைமட்டமாக்கியதுடன் அந்த காணிகள் தமக்கு சொந்தமானவை என உரிமை கோரியுள்ளார். காலம் காலமாக தமிழர்கள் குடியிருந்து வந்த தமிழர்களை கல்லெறிந்து அச்சுறுத்தி வெளியேற்றிவிட்டு கட்டிட ஒப்பந்தகாரரான பைரூஸ் என்பவர் வீடுகளை உடைத்து தரைமட்டமாக்கி உள்ளார். முஸ்லீம் அமைச்சர் ஒருவரின் பக்க பலத்துடன் இந்த அடாவடித்தனம் நடந்துள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். சம்பவம் நடைபெற்ற இடத்தை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் சென்று பார்வையிட்டார் https://thinakkathir.com/?p=69630
-
- 3 replies
- 517 views
-
-
யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆளுநர் சபையின் தலைவர் பதவி விலக வேண்டும்… “யாழ்ப்பாணக் கல்லூரியின் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்லூரியின் எதிர்காலம் எல்லாவற்றையும் கவனத்தில் எடுத்து ஆளுநர் சபையின் தலைவர் பேராயர் கலாநிதி டானியல் தியாகராஜா பதவி விலகவேண்டும். அதனூடாக யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆளுநர் சபை யாப்பை திருத்தியமைத்து, திறமையான நிர்வாகத்தை அமைத்து கல்லூரியை சிறந்த நிலைக்குக் கொண்டுவர உதவி செய்யவேண்டும் என பேராயரிடம் தாழ்மையாகக் கேட்டுக்கொள்கின்றோம்” என யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் செயலாளர் எதிர்ராஜ் வலியுறுத்தினார். “யாழ்ப்பாணக் கல்லூரியைப் பாதுகாப்போம்” என வலியுறுத்தி கல்லூரியின் பழைய மாணவர்க…
-
- 2 replies
- 770 views
-
-
ஆரூடம் பார்த்த கருணா! இலங்கை தீவில் தீடீர் மாற்றமா? இலங்கைத் தீவில் அடுத்த மூன்று மாதங்களில் திடீர் சம்பவங்கள் ஏற்படும் என்று முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார். தமது ட்விட்டர் தளத்தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை, 'அப்போது தெரியும் என் அருமை புலம் பெயர் தமிழர்களுக்கு' என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், விநாயகமூர்த்தி முரளிதரன் வெளியிட்டுள்ள இந்த கருத்து சமூகவலைத்தளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. https://www.tamilwin.com/politics/01/192300?ref=imp-news
-
- 2 replies
- 994 views
-
-
ஐ.நா. சிறப்பு நிபுணர் நாளை வருகின்றார் (லியோ நிரோஷ தர்ஷன்) ஐக்கிய நாடுகள் சபையின் வெளிநாட்டுக் கடன் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான சிறப்பு நிபுணர் ஜூவான் பப்லோ பொகோஸ்லாவ்ஸ்கி நாளை திங்கட்கிழமை இலங்கை வருகின்றார். எதிர்வரும்11 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை நாட்டில் தங்கியிருக்கும் அவர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தின் பிரதிநிதிகள் சிவில் சமூகத்தினர் என பல தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாட உள்ளார். மனித உரிமைகள் நிலைப்பாட்டிலிருந்து இலங்கையின் பொருளாதாரம் மற்றும் நாட்டின் கடன் உள்ளிட்ட விடயங்களை முழுமையாக ஆராய்ந்து அதன் அறிக்கையினை எதிர்வரும் மார்ச் மா…
-
- 0 replies
- 354 views
-
-
காணாமலாக்கப்பட்டதை ஏற்று அவர்களுக்கு நினைவுத்தூபி அமைக்க வேண்டும்…. இடைக்கால அறிக்கை கூறுகிறது… வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பிலும், அவர்களின் உறவினர்கள் சார்பிலும் நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய பரிந்துரைகள் அடங்கிய இடைக்கால அறிக்கையினை காணாமல்போனோருக்கான, அலுவலகம் எதிர்வரும் புன்கிழமை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த அறிக்கையில் காணாமல்போனோரின் உறவினர்கள் உண்மையை அறிந்துகொள்வதற்கு உள்ள உரிமை மறுக்கப்படக் கூடாது. காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பிலான சர்வதேச பரிந்துரைகளை மேலும் பலப்படுத்தப்பட வேண்டும். காணாமலாக்கப்படுதலை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு …
-
- 0 replies
- 344 views
-
-
தமிழ்த்தேசிய அரசியல் போராட்ட வரலாறு, எனக்கு வகுத்து அளித்திருக்கும் பொறுப்பை நான் தெளிவாக உணர்ந்திருக்கின்றேன்… தமிழ் மக்கள் பேரவை பேரவை செயலகம், பலாலி வீதி, கந்தர்மடம் 31.08.2018 அன்று மாலை 4.30 மணிக்கு இணைத்தலைவருரை எல்லோருக்கும் வணக்கம். ஒரு முக்கியமான கால கட்டத்தில் நாம் இங்கு கூடியுள்ளோம். மாகாண சபைத் தேர்தல்கள் வரப் போகின்றன. எமது பதவிக்காலம் முடிந்ததும் ஆளுநர் ஆட்சி நடத்தப் போகின்றார். அவர் ஆட்சியின் போது எமக்குப் பாதிப்பான நடவடிக்கைகள் நடைபெறப்போவதைத் தடுத்து நிறுத்த வேண்டியிருக்கும். முக்கியமாக பௌத்த விகாரைகளைத் திறந்து வைக்க இருப்பது தெரிய வந்துள்ளது. பலரும் உங்கள் இணைத்தலை…
-
- 4 replies
- 1.5k views
-