Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மடு ஆலயத்தில்- குடும்பத்துடன் மைத்திரி!! மன்னார் மடு ஆலயத்தில் இன்று இடம்பெற்ற சிறப்பு வழிபாட்டு ஆராதனையில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். இதில் மன்னார் மாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ , மன்னார் மாவட்ட குருமுதல்வர் விக்டர் சோசை மற்றும் மடுத்திருத்தலத்திற்கு பொறுப்பாக உள்ள பங்குத் தந்தையர்களும் கலந்து கொண்டனர். ஆலயத் திருவிழா எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில், அதற்கான பாதுகாப்பு மற்றும் சுகாதார முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ள்ளன. …

  2. மீண்டும் நாடு திரும்பும் மக்களுக்கு முன்னுரிமை திட்டங்கள் வழங்கப்பட வேண்டும்: சம்பந்தன் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த நிலையில் மீண்டும் நாடு திரும்பும் மக்களுக்கு முன்னுரிமை திட்டங்கள் வழங்கப்பட வேண்டும் என எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘யுத்தத்தினால் எமது கிராமங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டன. யுத்தத்தினால் எமது வீடுகள் சேதமாக்கப்பட்டன. இந்தநிலையில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தற்போது மீண்டும் அவர்க…

  3. திருகோணமலை, மாங்காயூற்றில் மாதிரிக்கிராமங்கள் கையளிப்பு தெட்சனாபுரத்தில் 25, கைலாயபுரத்தில் 22 வீடுகள் நல்லாட்சி அரசு மக்கள் நலனில், மற்றொரு பிரிவு சிம்மாசனத்திற்கு முண்டியடிப்பு - சஜித் பிரேமதாச அனைவருக்கும் நிழல் (செமட்ட செவண) எனும் திட்டத்தின் கீழ், திருகோணமலை மாவட்டத்தின் மாங்காயூற்றில் நிர்மாணிக்கப்பட்ட 99 ஆவது மற்றும் 100 ஆவது மாதிரிக் கிராமங்களான தெட்சனாபுரம் மற்றும் கைலாயபுரம் ஆகிய மாதிரிக் கிராமங்கள்…

  4. யாழ்அச்சுவேலியில் இராணுவத்தினர் தேர் இழுத்தனர் – (படங்கள் இணைப்பு) அச்சுவேலி உலவிக்குளம் சித்திவிநாயகர் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழாவின் போது அச்சுவேலி இராணுவ முகாமை சேர்ந்த இராணுவத்தினர் தேர் இழுத்தனர். அச்சுவேலி சித்திவிநாயகர் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது. அதன் போது ஆலயத்திற்கு இராணுவ சீருடையில் வந்த இராணுவத்தினர் தமது மேலங்கியை கழட்டி தேர் வடம் பிடித்து தேர் இழுத்தனர். இராணுவத்தினரின் திடீர் செயற்பாட்டை கண்ணுற்ற பக்தர்கள் செய்வதறியாது இருந்தனர். http://globaltamilnews.net/2018/89487/

  5. இன்றைய நாளில் சிங்கள மக்களை பிரம்மிக்க வைத்த நீதிபதி இளஞ்செழியனின் செயல் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலர் சரத் ஹேமச்சந்திரவிற்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். கடந்த வருடம் இதேபோன்றதொரு நாளில் (ஜுலை 22) யாழில் வைத்து நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பதிவாகியிருந்தது. யாழ்ப்பாணத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்த இந்த சம்பவத்தில் நீதிபதி இளஞ்செழியனின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் நீதிபதி இளஞ்செழியனின் உயிரை பாதுகாக்க போராடிய இரு பாதுகாவலர்களில் சரத் ஹேமச்சந்திர உயிரிழந்தார். …

  6. யாழ். பிரதி மேயருக்கு எதிராக முறைப்பாடு யாழ்.மாநகர சபை பிரதி மேயரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினருமான துரைராஜா ஈசனுக்கு எதிராக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியை சேர்ந்த விஸ்ணுகாந்தன் என்பவரே இன்றைய தினம் யாழ்.பொலிஸ் நிலையத்தில் பிரதி மேயர் தன்னை அச்சுறுத்தினார் என முறைப்பாடு செய்துள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் , யாழ்.மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினருமான வி. மணிவண்ணனுடன் இணைந்து தான் கொழும்புத்துறை பகுதிகளில் வீதி முன் விளக்குகளை பொருத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் அது தொடர்பிலையே தன்னை பிரதி மேயர் அச்சுறுத்த…

  7. சுமந்திரனைக் கொல்லச் சதி – பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நாளை குற்றப்பத்திரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய, இரண்டு தடவைகள் முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நாளை குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய சதி செய்தார்கள் என்று, 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம், ஐந்து பேரைக் கைது செய்த சிறிலங்கா காவல்துறையின் பயங்கரவாத தடுப்பு பிரிவினர், கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தனர். இவர்கள் ஆரம்பத்தில் சாதாரண சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர…

  8. உரிய பதிலை அளிக்காது மெளனம் காத்த பிரதமர் சுமார் 458 இலட்சம் ரூபா செலவில் ஏறாவூர் நகர பிரதேச செயலகத்துக்கான புதிய கட்டடத்தினை திறந்து வைத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அந் நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் உட்பட பிரதேச அரசியல்வாதிகள் அவரிடம் முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளிக்காமல் மெளனம் காத்துள்ளார். இந் நிகழ்வில் பிரதேச அரசியல்வாதிகளான கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் தற்போதைய நகர சபை உறுப்பினருமான எம்.எஸ். சுபைர், ஏறாவூர் நகர மேயர் ரம்ழான் அப்துல் வாஸித், தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா மற்றும் ஸ்ரீலங…

  9. பூநகரியில் நடமாடும் சேவையில்- நால்வருக்கும் திருமணம்!! தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் நடமாடும் சேவை கிளிநொச்சி பூநகரி மத்திய கல்லூரியில் இன்று நடத்தப்பட்டது. பதிவாளர் அலுவலகம், பிரதேச செயலகம், கிராம அலுவலர், ஆள்பதிவுத்திணைக்களம், பொலிஸ், தபால், சமூகசேவைகள், சமூர்த்தி, காணி சீர்திருத்த ஆணைக்குழு, மோட்டார் போக்குவரத்து, சட்ட விரோத ஆணைக்குழு, மின்சார சபை, தேசிய வீடமைப்பு, ஊழியர் சேமலாக நிதி, மத்திய வங்கி, அரசகரும மொழிகள், சுகாதார திணைக்களம், போன்ற திணைக்களங்களின் சேவைகள் இங்கு இடம்பெற்றன. …

  10. தகவல் திரட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிலையங்களின் தகவல்களை இராணுவத்தினர் திரட்டி வருவதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் , உடையார் கட்டு , சுதந்திரபுரம் , கைவேலி , ரெட்பானா மற்றும் மாணிக்கபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு செல்லும் இராணுவத்தினர் வீட்டில் உள்ளவர்களின் விபரங்களை விண்ணப்ப படிவம் ஒன்றின் ஊடாக பெற்றுக்கொள்கின்றனர். அத்துடன் வர்த்தக நிலையங்களின் தகவல்களையும் பெற்றுக்கொள்கின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் 572 ஆவது படைப்பிரிவே இந்த தகவல்களை சேகரிப்பதாக மக்கள் தெரிவித்தனர். http://www.virakesari.lk/article/37428

  11. தாயை பார்க்க, சட்ட விரோதமாக இலங்கை செல்ல முயன்ற இருவர் கைது… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… இலங்கையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் தனது தாயாரை பார்க்க செல்ல முயன்ற ஒருவர் உட்பட இலங்கை தமிழர்கள் இருவரும், அவர்களை அழைத்துச் செல்ல காத்திருந்த படகோட்டிகள் இருவரும் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை (29.07.18) காலை வனத்துறையினர் தீவுப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த போது சிங்கிலி தீவு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் காணப்பட்ட நாட்டுப்படகினை சோதனை செய்த போது குறித்த படகில் யாரும் இல்லாததால் தீவு பக…

  12. மாகாண சபைத் தேர்தல்களுக்காக -கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும்!! வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ண­ச­பைத் தேர்தல் உள்­ளிட்ட வரப் போ­கின்ற தேர் தல்­க­ளுக்­காக தமிழ்த் தேசி­யக் கூட்­ட ­மைப்­பைப் பலப்­ப­டுத்­தவேண்­டும். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் அனைத்­துப் பங்­கா­ளிக் கட்­சி­க­ளை­யும் ஓர­ணி­யில் திரட்­ட­வேண்­டும். இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன், தமிழ் அர­சுக் கட்­சித் தலை­வர் மாவை.சோ.சேனா­தி­ராசா ஆகி ­யோ­ரி­டம் நேற்று நேரில் கோரிக்கை விடுத்­துள்­ளது ரெலோ அமைப்பு. …

  13. அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார்?: பகிரங்கமாக அறிவிக்க தமிழரசுக்கட்சிக்கு 10ம் திகதிவரை காலக்கெடு! July 29, 2018 தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிற்கும், ரெலோ, தமிழரசுக்கட்சி தலைவர்களிற்கிடையிலுமான உயர்மட்ட சந்திப்பொன்று நேற்று திருகோணமலையில் நடந்தது. தேசியப்பட்டியல் நியமனம், வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை பேசுவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழரசுக்கட்சி தலைவர்களை சந்திக்க ரெலோ அமைப்பு நேரம் கோரியிருந்த நிலையில், நேற்று இந்த சந்திப்பு நடந்தது. ரெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதன், சிறீகாந்தா, சிவாஜிலிங்கம், இந்திரகுமார் பிரசன்னா, நித்தியானந்தம் ஆகியோர் கலந்துகொண்டனர். நேற்றைய சந்திப்பு தொடர்பில், இன்றைய பத்திரிகைகள…

  14. சர்வாதிகார ஆட்சியை இந்தியா விரும்பாது ஆர்.ராம் குற்­ற­வா­ளி­களைத் தண்­டிப்­பதில் மைத்­தி­ரி -­ ரணில் ஆட்சி மெத்­தனம் இலங்­கையில் ஒரு சர்­வா­தி­கார ஆட்சி உரு­வா­­வதை இந்­தியா ஒரு போதும் விரும்­பாது. அதே­வேளை விடு­த­லைப்­பு­லி­க­ளு­ட­னான போரின் போது பெரும் எண்­ணிக்­கை­யான இரா­ணுவம் பயன்­ப­டுத்­தப்­பட்ட போதிலும் கோத்­த­ாபய தலைமை எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்றி பெற்றால் , இலங்­கையில் சர்­வா­தி­கார அல்­லது இரா­ணுவ ஆட்­சியை முன்­னெ­டுக்கும் என்று எதிர்­பார்க்க வேண்­டிய அவ­சியம் இல்லை என இந்­திய இரா­ணு­வத்தின் ஓய்­வு­நிலை புல­னாய்வு நிபு­ணரும் தெற்­கா­சி­யாவில் பயங்­க­ர­வாத மற்றும் கிளர்ச்­சி­க­ளுக்கு எதி­ரான நீண்ட அன…

  15. மட்டக்களப்பு மாநகரசபையை மறைத்த காத்தான்குடி பெயர் பலகைகள்! இலங்கையில் மிகப்பழமையான மாநகரசபையில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு மாநகரசபையின் வரவேற்பு பலகைகள் பல இடங்களில் ஏனைய பிரதேசங்களின் பெயர் பலகைகளினால் மறைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் உரியதரப்பினர் கவனம் செலுத்தவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மட்டக்களப்பு மாநகரசபையின் எல்லைப்பகுதியை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகள் ஏனைய பிரதேச பெயர் பலகைகளினால் மறைக்கப்பட்டுள்ளதை காணமுடிகின்றது. மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் மட்டக்களப்பு மாநகரசபைக்கும் காத்தான்குடி நகரசபைக்கும் எல்லைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு மாநகரசபையின் பெயர் பலகைகள் மறைக்கப்பட்ட…

  16. வழிநடத்தல் குழுவில் தொடர்ந்து பணியாற்றுவோம் நிபுணர் குழுவின் செயற்பாட்டில் இனி தலையிட மாட்டோம் வாசுகி சிவகுமார் வழிநடத்தல் குழுவில் தொடர்ந்தும் அங்கம் வகித்து அரசியலமைப்புப் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதாகக் கூறும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வழிநடத்தல் குழு அங்கத்தவருமான எம். ஏ. சுமந்திரன், தானும் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்னவும் வழிநடத்தல் குழுவின் நிபுணர் குழுச் செயற்பாடுகளில் இனிமேல் பங்குகொள்ளப் போவதில்லை என தெரிவித்தார். அரசியலம…

  17. செங்குந்த இந்துக் கல்லூரியில் நடுகை செய்யப்பட்ட மரக்கன்றுகள் அழிக்கப்பட்டன… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. செங்குந்த இந்துக் கல்லூரி மைதானத்தில் நடுகை செய்யப்பட்ட மரக்கன்றுகள் விஷமிகளால் அழிக்கப்பட்டுள்ளன. தேசிய மர நடுகைத் திட்டத்தின் கீழ் செங்குந்த இந்துக் கல்லூரி மைதானத்தில் நடுகை செய்யப்பட்ட சுமார் 75 இற்கும் மேற்பட்ட மரக் கன்றுகளே இவ்வாறு உழுது அழிக்கப்பட்டன. கடந்த புதன்கிழமை (25) இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது தேசிய மர நடுகை மாதத்தை முன்னிட்டு ஆளுநர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் செங்குந்தா இந்துக் கல்லூரி மைதானத்தின் எல்லைப் பகுதியில் சுமார் 90 மரக் கன்றுகள் நட…

  18. மத்தல விவகாரத்தில் இந்தியாவின் குழப்பம் – அடுத்தவாரம் பதிலளிக்குமாம் சிறிலங்கா மத்தல விமான நிலைய விவகாரத்தில் இந்தியாவின் அணுகுமுறை தொடர்பாக எழுந்துள்ள குழப்பங்கள் குறித்து இந்தவாரம் சிறிலங்கா அரசாங்கம் விளக்கமளிக்கும் என்று, போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். இந்திய விமானத்துறை அதிகாரிகளுடன் பல சுற்றுப் பேச்சுக்கள் நடத்தப்பட்டன. சில அதிகாரிகள், மத்தல விமான நிலையத்துக்கும் சென்று ஓடுபாதையின் தரத்தைப் பரிசோதனை செய்திருந்தனர். சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் செயலரே இது தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் வைத்துள்ளார். தற்போது வெளிநாடு சென்றுள்ள அவர் அடுத்த வாரம் நாடு திரும்பிய பின்…

  19. எதிர்கால வெளிவிவகாரக் கொள்கை மீது மகிந்த கவனம் – முன்னாள் தூதுவர்களுடன் ஆலோசனை எதிர்காலத்தில் தாம் அமைக்கப்போகும் அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கை தொடர்பான பரிந்துரைகளைச் சமர்ப்பிக்குமாறு, முன்னைய ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்ட இராஜதந்திரிகளிடம், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கோரியுள்ளார். மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், வெளிநாடுகளுக்கான தூதுவர்களாக நியமிக்கப்பட்டவர்களை மகிந்த ராஜபக்ச சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இந்தக் கூட்டத்தில், மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட அனைத்து முன்னாள் தூதுவர்களும் பங்கேற்றனர் என்று, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். “நாங்கள…

  20. மன்னார் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை அமெரிக்காவுக்கு அனுப்ப நடவடிக்கை மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள சதொச கட்டட வளாகத்தில் உள்ள மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூட்டு எச்சங்கள், அமெரிக்காவுக்கு அனுப்பப்படவுள்ளன. ரேடியோ கார்பன் ஆய்வுகளை மேற்கொள்வற்காக இந்த எலும்புக்கூடுகள், புளொரிடாவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்படவிருப்பதாக, மன்னார் மருத்துவமனை சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ”இதற்கான அனுமதி நீதிமன்றத்திடம் கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தால் நீதி அமைச்சின் ஊடாக, இந்த எலும்புக்கூடுகளை அமெரிக்காவுக்கு அனுப்பி ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ரேடியோ கார்பன் ஆய்வுகளின…

  21. உயர்தரத் தேர்வின் போது இலத்திரனியல் கருவிகளை முடக்க சிறிலங்கா இராணுவம் உதவி சிறிலங்காவில் எதிர்வரும் ஓகஸ்ட் 6ஆம் நாள் ஆரம்பமாகவுள்ள கபொத உயர்தரத் தேர்வின் போது, தேர்வு மண்டபத்தில் மாணவர்கள் தொலைபேசி மற்றும் நவீன இலத்திரனியல் தொடர்புக் கருவிகளைப் பயன்படுத்துவதை தடுக்க சிறிலங்கா இராணுவத்தின் உதவி கோரப்பட்டுள்ளது. தேர்வு மண்டபங்களில் மாணவர்கள் கைத்தொலைபேசிகள் மற்றும் நவீன இலத்திரனியல் கருவிகளின் துணையுடன், மோசடிகளில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கே சிறிலங்கா இராணுவத்தின் உதவி நாடப்பட்டுள்ளது. தேர்வு நேரத்தில், தேர்வு மண்டபங்களிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் இத்தகைய தொடர்பாடல் கருவிகளின் செயற்பாட்டை முடக்குவதற்கே சிறிலங்கா இராணுவத்தின் சமிக்ஞைப் பிரிவு உதவவுள்…

  22. வெளியாகியது யாழ். கோட்டை குறித்து புதிய ஆய்வு (வீ.பிரியதர்சன்) * போர்த்துக்கேயரின் வருகைக்கு முன்பே யாழ் கோட்டையில் மக்கள் வாழ்ந்தனர். * யாழ்ப்பாண கோட்டைப் பகுதியில் மக்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள். * தமிழக நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன. * அரோபிய, சீன வர்த்தக வணிகம் இடம்பெற்றமைக்கான ஆதாரங்கள். * யாழ். கோட்டைப்பகுதி 'ஐந்துசார் வளவு' என்று அழைக்கப்பட்டுள்ளது. போர்த்துக்கேயரின் வருகைக்கு முன்பே யாழ்.கோட்டைப் பகுதியில் மக்கள் வாழ்ந்துள்ளதாகவும் 16 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர் இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னர் யாழ்ப்பாண கோட்டைப் பகுதியில் மக்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் உள்ளதாக தொல்லியல்…

    • 2 replies
    • 1.8k views
  23. யாழில் குழுக்களுக்கிடையில் வாள்வெட்டு – ஐவர் காயம்! யாழ்.தென்மராட்சி – வரணி பகுதியில் மரண வீட்டில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர். இரு குழுக்கழுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மரணச்சடங்கு நிகழ்வின் பின்னர் மோதலாக மாறியதிலேயே இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் ராஜ்மிலன் (29), தங்கலிங்கம் (45), சுரேஷ்குமார் (30), கஜன் (27), நவரட்ணம் (50) ஆகிய 5 பேர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். http://athavannews.com/யாழில்-குழுக்களுக்கிடைய…

  24. யாழில் ரயிலுடன் மோதுண்டு இருவர் பலி யாழ்ப்பாணம், கொழும்புத்துறைப் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு இருவர் பலியாகியுள்ளனர். யாழ்ப்பாணம் நெடுங்குளம் கொழும்புத்துறைப் பகுதியில் இருவர் ரயிலுடன் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கொழும்புத்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/37429

  25. மாற்­ற­ம­டை­யாத -கோத்­தா­வின் கொள்கை!! அடுத்த அரச தலை­வ­ருக்­கான தேர்­த­லில் போட்­டி­யி­டும் நோக்­கத்­தோடு கோத்­த­பாய ராஜ­பக்ச தனது காய் நகர்த்­தல்­க­ளைத் தீவி­ர­மாக முன்­னெ­டுத்து வரு­கின்­றார். வேட்­பா­ளர் யார் என்­பதை மகிந்த ராஜ­பக்ச இன்­ன­மும் தீர்­மா­னிக்­க ­வில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டா­லும் தன்னை வேட்­பா­ளர் தெரி­வில் இருந்து தள்­ளி­வைக்க முடி­யாது என்­கிற நிலையை நோக்கி கோத்­த­பாய ராஜ­பக்ச அடி­மேல் அடி வைத்து முன்­னே­றி­வ­ரு­கின்­றார். என்­ன­தான் சிங்­கள பௌத்த தேசி­ய­வா­தத்­தின் குர­லா­கத் தன்னை அவர் நிலை­நி­றுத்­திக்­கொண்­டா­லும் சிறு­பான்மை மக்­கள் அனை­வ­ரும் ஒன்­றி­ணை­யும்­போது…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.