ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143302 topics in this forum
-
வடக்கு அபிவிருத்தி குறித்து அலரி மாளிகையில் 3 மணி நேரம் ஆலோசனை வடக்கு, மாகாண அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் சிறப்புக் கூட்டம் ஒன்று சிறிலங்கா பிரதமரின் அதிகாரபூர்வ செயலகமான அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்றுள்ளது. நேற்றுக்காலை 10 மணி தொடக்கம், பிற்பகல் 1 மணி வரை – கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் இந்தக் கூட்டம் இடம்பெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள் சுவாமிநாதன், ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், ஆகியோரும், முப்படைகளின் தளபதிகள், காவல்துறை அதிகாரிகள், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்கள், மற்றும் அரச உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பின…
-
- 0 replies
- 260 views
-
-
பலாலி விமான நிலைய அபிவிருத்தி – இந்தியத் தூதுவருடன் இணைந்து ஆய்வு செய்கிறார் ரணில் பலாலி விமான நிலையத்தை இந்தியாவின் உதவியுடன், பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பாக, எதிர்வரும் ஜூலை 10ஆம் நாள், நேரில் வந்து ஆராய்வதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று நடந்த வடக்கு அபிவிருத்தி தொடர்பான சிறப்புக் கூட்டத்தில், பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்துவது, அதற்குத் தேவையான காணிகள் தவிர்ந்த, அதனை அண்டிய ஏனைய காணிகளை விடுவிப்பது தொடர்பாக ஆராயப்பட்டது. இந்த விடயத்தில் விரைவாக முடிவெடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்…
-
- 0 replies
- 375 views
-
-
காரைதீவில் காலவரையறையின்றி மூடப்பட்ட வைத்தியசாலை! காரைதீவு பிரதேச வைத்தியசாலை நேற்று முதல் காலவரையறை இன்றி பூட்டப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி டாக்டர் ஜீவராணி சிவசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இதனால் நோயாளர்கள் வேறு வைத்தியசாலைகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனை பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஜீவராணி சிவசுப்பிரமணியம் உறுதிப்படுத்தினார். வைத்தியர்கள் முதல் அனைத்து ஊழியர்களும் வைத்தியசாலைக்கு வந்திருந்த போதும் எந்த நோயாளர்களுக்கும் சிகிச்சையளிக்கப்படவில்லை. இது தொடர்பாக வைத்திய அதிகாரி டாக்டர் ஜீவராணி சிவசுப்பிரமணியத்திடம் கேட்ட போது, “முன்னாள் வைத்தியத்துறை பேராசிரியர் டாக்டர் வரகுணம் எமக்கு அன்பளிப்பாக வழங்கிய வைத்தியசாலைக்கு சொந்…
-
- 1 reply
- 432 views
-
-
பெண் பயணிகளுக்கு பாதுகாப்பான நாடு: இலங்கை முதலிடம் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பாக விளங்கும் நாடுகளின் சர்வதேச பட்டியலில் இலங்கை முதலிடம் பெற்றுள்ளது. நிபுணர்களின் மதிப்பீடுகளுக்கமைய அமெரிக்கா, கனடா, நியூஸிலாந்து, அவுஸ்ரேலியா, ஜப்பான், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 20 நாடுகளை உள்ளடக்கி வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இலங்கை முதன்மை பெற்றுள்ளது. சீன நாளிதழ் ஒன்றினால் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், இந்த விபரங்களை பீஜிங்கிலுள்ள இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ளது. இவ்வாறான பயணிகள் இலங்கை சுற்றுலாத்துறையின் வலுவான அபிவிருத்திக்கு பெரும் பங்காற்றி வருகின்ற நிலையில், நாட்டிற்கு வருகைத்தரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு குறித்த இலங்கையின் கடப்பாட்டை அங்க…
-
- 2 replies
- 772 views
-
-
சபைக்கு செங்கோலைக் கொண்டு வருவதற்குக் கூட ஆள் இல்லை -வடக்கு அவைத் தலைவர் !! வடக்கு மாகாண சபையில் சபை அமர்வின் போது செங்கோலை தூக்கிக் கொண்டு வருவதற்கு கூட பேரவைச் செயலகத்தில் ஆளணிப் பற்றாக்குறை என்று வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி,கே.சிவஞானம் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் 125ஆவது அமர்வு நேற்று பேரவைச் செயலகத்தில் இடம்பெற்றது. இந்த அமர்வின் ஆரம்பத்திலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு தெரிவித்ததாவது: சபை அமர்வுகளின்போது சபைக்கு செங்கோலை தூக்கிக்கொண்டு வருவதற்கு கூட …
-
- 0 replies
- 395 views
-
-
குந்தியிருந்து பேசுவதை, எழுதி வாசிப்பதை விடுத்து நிலங்களைப் பாதுகாக்க தீர்வை முன்மொழியுங்கள்- மாகாண சபை உறுப்பினர் சயந்தன்!! வடக்கு மாகாணத்தில் அபகரிக்கப்படும் நிலங்களைப் பாதுகாக்க வெறுமனே எழுதி வாசிப்பவர்களாக அல்லது குந்தி இருந்து அரசியல் பேசுகின்றவர்களாக இல்லாமல் தீர்வை முன்மொழிபவர்களாக இருக்க வேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் 125ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் நேற்று இடம்பெற்றது. இந்த அமர்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்…
-
- 0 replies
- 533 views
-
-
சீனாவின் உதவி திட்டங்களை இலங்கை அவதானமாக கையாளவேண்டும்- சர்வதேச நாணய நிதியம் சீனாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் பாரிய அபிவிருத்தி திட்டங்களை இலங்கை அவதானமாக கையாளவேண்டும் என சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது. சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டத்தின் மூலம் பயனைபெறுவதற்கு இலங்கை சீனாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் பாரிய அபிவிருத்தி திட்டங்களை கவனமாக கையாள்வது அவசியம் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சீனாவின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் பாரிய பிராந்திய வர்த்தகம் மற்றும் நிதி ஒருங்கிணைப்பு மூலம் இலங்கைக்கு நன்மையை கொண்டுவரலாம் என தெரிவித்துள்ள சர்வதேச நாணய நிதியம், இலங்கையின் பாரிய கடன் மற்ற…
-
- 0 replies
- 449 views
-
-
யாழில் சிறுமி காயங்களுடன் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு யாழ்ப்பாணம் சுளிபுரம் பகுதியில் ஆறு வயது சிறுமியொருவர் உடலில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதுடன் சந்தேகத்தின் அடிப்படையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவமானது சுளிபுரம் காட்டுபுலம் பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன் சிவநேஸ்வரன் றெஜீனா என்ற 06 வயது சிறுமியே சடலமாக மீட்கப்பட்டவராவர். வீட்டிற்கு சற்று தொலைவில் உள்ள தோட்ட கிணறு ஒன்றிக்குள் உள்ளாடை மாத்திரம் காணப்பட்ட நிலையில் சடல…
-
- 19 replies
- 2.9k views
-
-
மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணைகளிற்கு முழு ஆதரவு- இராணுவம் இலங்கை மனிதஉரிமை ஆணைக்குழு மேற்கொண்டுள்ள விசாரணைகளிற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயார் என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. ஐக்கியநாடுகளின் அமைதிப்படையில் இடம்பெறவுள்ள இலங்கை படையினர் குறித்த விசாரணைகளால் எழுந்துள்ள சர்ச்சைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. ஐநா அமைதிப்படையில் இடம்பெறவுள்ள இலங்கை வீரர்கள் குறித்து இலங்கையின் சுயாதீன அமைப்பான இலங்கை மனித உரிமை ஆணையகம் விசாரணை செய்வது குறித்து நாங்கள் திருப்தியடைந்துள்ளோம் என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் அமைதிப்படை நடவடிக்கைகளிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள ப…
-
- 0 replies
- 391 views
-
-
பிள்ளையானை விடுதலை செய்யக்கோரி போராட்டம் முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரை விடுதலை செய்யக்கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அடையால உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. http://www.virakesari.lk/article/35498
-
- 8 replies
- 1.5k views
-
-
தேர்தலை நடத்துவதற்கு அழுத்தம் கொடுங்கள் (எம்.எம்.மின்ஹாஜ், இரோஷா வேலு) அரசியல் கட்சிகளிடம் வலியுறுத்தினார் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்காக அரசாங்கத்திற்கு உரிய கால அவகாசம் வழங்கியிருந்தோம். எனினும் அரசாங்கம் தேர்தலை நடத்துவதற்கான எந்தவொரு ஏற்பாட்டையும் இன்னும் செய்யவில்லை. ஆகவே இனிமேலும் கால அவகாசம் வழங்க முடியாது. தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் தற்போது பாராளுமன்றத்தின் கைகளிலேயே உள்ளது. ஆகவே அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து உடன் தேர்தலை நடத்துவதற்காக அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என்று தேர்தல் …
-
- 0 replies
- 380 views
-
-
பிரபாகரன் அன்று சொன்னது நியாயமானதே - ஞானசார தேரர் (இராஜதுரை ஹஷான்) விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை "தந்திர நரி " என்று குறிப்பிட்டமை முற்றிலும் உண்மையாகவே காணப்படுகின்றது . நாட்டு மக்களுக்கு அரசியல் தீர்வு பெற்றுத் தருவதாக குறிப்பிட்டு இனங்களுக்கிடையில் மறைமுகமாக வன்மையினை இவரே தோற்றுவிக்கின்றார் என பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இனிவரும் காலங்களில் எந்த அரசியல் தரப்பினருக்கும் ஆதரவு வழங்க போவது கிடையாது . நாட்டு மக்கள் மஹிந்தவையும் நம்ப வேண்டாம் மைத்திரியையும் நம்ப வேண்டாம். சிறந்த அரசியல் தலைவரை சிங்கள பௌத்த மக்கள் ஒன்றினைந்து தெரிவு செய்ய வேண்டும். ஏனெனில…
-
- 1 reply
- 595 views
-
-
மகிந்த-சம்பந்தன் சந்திப்பு விரைவில்? முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனை சந்திப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் மகிந்த ராஜபக்ஷவுக்கும் சுமந்திரனுக்கும் இடையே ஆரம்பக் கட்ட கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளதாகவும் இதன்படி விரைவில் சம்பந்தனை மகிந்த ராஜபக்ஷ சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. http://www.newsuthanthiran.com/2018/06/26/மகிந்த-சம்பந்தன்-சந்திப்/
-
- 0 replies
- 263 views
-
-
இலங்கையர் ஒருவர் இந்திய ராமேஸ்வரம் கடற்பகுதியில் கைது இந்திய, ராமேஸ்வரம் கடற்பரப்புக்குள் சட்டவிரேதாமான முறையில் ஊடுருவிய இலங்கையைச் சேர்ந்த ஒருவரை பைபர்படகுடன் கைதுசெய்துள்ளதாக ராமேஸ்வரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த சகாயபஸ்திபன் (வயது 34) என்பவராவார். ராமேஸ்வரம் கடற்பகுதியில் ஊடுருவிய இவரை உச்சிபுளி அருகே வலாங்காபுரி கடற்கரைப்பகுதியில் வைத்து பொலிஸார் கைதுசெய்ததுடன் இவர் பயணம் மேற்கொண்ட பைபர் படகையும் கைப்பற்றியுள்ளனர். இவர் இலங்கையிலிருந்து தங்கம் கடத்தி வந்தவரா அல்லது ரமேஸ்வரத்திலிருந்து அகதிகளை ஏற்றிச் செல்ல வந்துள்ளாரா என்பது தொடர்பாக பொலிஸார் விசாரணை …
-
- 0 replies
- 261 views
-
-
வடக்கு மாகாணசபையின் பதவிக்காலம் நீடிக்கப்படுவதற்கு மகிந்த அணி எதிர்ப்பு வடக்கு மாகாணசபையின் பதவிக்காலம் நீடிக்கப்படுவதற்கு மகிந்த ராஜபக்ச சார்பு சிறிலங்கா பொதுஜன முன்னணி கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், வடக்கு மாகாணசபையின் தேர்தலைப் பிற்போட்டு, தற்போதைய சபையின் பதவிக்காலம் நீடிக்கப்படுவதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தார். ஏற்கனவே கடந்த ஆண்டு பதவிக்காலம் முடிந்த மூன்று மாகாண சபைகள் ஆளுனர்களின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட நிலையில், தனியொரு மாகாண சபையுடன், சிறிலங்கா அரசாங்கம் சிறப்பு உடன்பாடு ஒன்றை செய்து கொள்ள முடியாது என்றும் …
-
- 0 replies
- 293 views
-
-
மரண அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளேன்- சந்தியா ஊடகவியலாளர் பிரகீத்எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தான் புதிதாக அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார் ஞானசார தேரர் விவகாரம் தொடர்பிலேயே தனக்கு மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக தெரிவித்துள்ள அவர் சமூக ஊடகங்கள் ஊடாகவே அதிக அச்சறுத்தல்கள் விடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். பேஸ்புக் ஊடாக நாளாந்தம் அச்சுறுத்தல்களும் கொலைமிரட்டல்களும் விடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உண்மையை அறியாமல் விபரங்களை அறிந்துகொள்ளாமல் மக்கள் என்னையும் எனது பிள்ளைகளையும் உளவியல் ரீதியில் சித்திரவதை செய்கின்றனர் என சந்தியா தெரிவித்துள்ளார். பொதுபலசேனாவின் ஞானசார தே…
-
- 2 replies
- 1.2k views
-
-
சிறிலங்கா இராணுவத் தளபதியுடன் கனேடியத் தூதுவர் பேச்சு சிறிலங்காவுக்கான கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினன், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. போருக்குப் பிந்திய சூழலில் சிறிலங்கா இராணுவத்தின் செயற்பாடுகள் தொடர்பாகவும், நல்லிணக்க முயற்சிகள் குறித்தும் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பில் கனேடியத் தூதுவருடன், சிறிலங்காவுக்கான கனேடியத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரும், கலந்து கொண்டார். அத்துடன், சிறிலங்கா இராணுவத் தளபதியுடன், இராணுவ செயலாளர் மேஜர் ஜெனரல் அஜித் விஜேசிங்க, சிறிலங்கா இராணு…
-
- 0 replies
- 194 views
-
-
சிறிலங்கா மரைன் கொமாண்டோக்கள் பங்கேற்கும் உலகின் மிகப்பெரிய கூட்டுப் பயிற்சி இன்று ஆரம்பம் அமெரிக்கா நடத்தும் RIMPAC என்ற பாரிய கடற்படை ஒத்திகையில் பங்கேற்பதற்காக சிறிலங்கா கடற்படையின் மரைன் படைப்பிரிவைச் சேர்ந்த அணியினர் பேர்ள் துறைமுகத்தைச் சென்றடைந்துள்ளனர். 26 நாடுகளைச் சேர்ந்த 52 போர்க்கப்பல்கள், மற்றும் 25,000 படையினர் இந்தப் போர்ப்பயிற்சியில் பங்கேற்கின்றனர். முதல்முறையாக இந்தக் கடற்படைப் பயிற்சிக்கு சிறிலங்கா அழைக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவில் இருந்து 25 மரைன் கொமாண்டோக்கள், இந்தக் கடற்படைப் பயிற்சியில் பங்கேற்கின்றனர். இவர்கள், கடந்த மாதம், அவுஸ்ரேலியா சென்று அங்கிருந்து, அவுஸ்ரேலியக் கடற்படையின் HMAS Adelaide போர்க்கப்ப…
-
- 0 replies
- 181 views
-
-
கொழும்பு துறைமுகத்துக்கு அப்பால் மூழ்கும் கப்பல் – 11 மாலுமிகளும் மீட்பு கொழும்பு துறைமுகத்துக்கு அப்பால் மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் இருந்து 11 மாலுமிகள் சிறிலங்கா கடற்படையினரால் மீட்கப்பட்டனர். கொழும்பு துறைமுகத்தில் இருந்து, 11.6 கடல் மைல் தொலைவில், Mutha Pioneer என்ற சரக்குக் கப்பல் கட்டுப்பாட்டை இழந்து மூழ்கிக் கொண்டிருக்கிறது. இந்தக் கப்பலில் இருந்து இன்று அதிகாலை விடுக்கப்பட்ட அவசர உதவிக் கோரிக்கையை அடுத்து, சிறிலங்கா கடற்படையின் இரண்டு அதிவேகத் தாக்குதல் படகுகள், விரைந்து சென்று, கப்பலில் இருந்த மாலுமிகளை மீட்டனர். டொமினிக்கன் குடியரசு கொடியுடன் பயணித்த இந்தக் கப்பலில், இருந்து கப்டன் மற்றும் 10 மாலுமிகள் மீட்கப்பட்டு கொழும்பு து…
-
- 0 replies
- 551 views
-
-
தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும்வரை அமைச்சுப் பதவி வேண்டாம்: சம்பந்தன் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை அமைச்சுப் பதவியை ஏற்க மாட்டேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அண்மையில் அரசியல் தீர்வு வரும் வரை காத்திருந்தது போதும், எதிர்கட்சி தலைவர் பதவியை கைவிட்டு, அமைச்சு பதவியை ஏற்று, வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு அபிவிருத்தியை பெற்றுக்கொடுங்கள் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் யாழ் வீரசிங்க மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். …
-
- 4 replies
- 649 views
-
-
விடுதலைப் புலிகளை அழிக்க உதவிய 5 நாடுகள்- இலங்கை அரசின் வெற்றிக்கு அதுவே காரணம்- இரா.சம்பந்தன்!! இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகைளை 5 நாடுகள் இலங்கை அரசுக்கு உதவி புரிந்தன. அதன் காரணத்தாலேயே இலங்கை அரசு வெற்றி பெற்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். வடக்கு முதலசமைச்சர் இதுவரை ஆற்றிய உரைகளின் தொகுப்பாக நீதியரசர் பேசுகிறார் எனும் நூல் வெளியீடு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், …
-
- 11 replies
- 2.3k views
-
-
வடக்கு முதல்வரின் உரைகளின் தொகுப்பு- ‘நீதியரசர் பேசுகிறார்’ நூல் வெளியீடு ஆரம்பம்!! வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இதுவரை ஆற்றிய உரைகளின் தொகுப்பு நூலான ‘நீதியரசர் பேசுகிறார்’ நூலின் வெளியீட்டு விழா யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது. நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், ஈ.சரவணபவன் மற்றும் யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் இ.ஆர்னோல்ட், மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பல அரசியல் பிரமுகர்…
-
- 7 replies
- 2k views
-
-
ஏமாற்றியதால் சர்வதேசத்தில் மதிப்பினை இழந்து வரும் இலங்கை - சி.வி. எமக்கு உரித்துக்களை தரமறுக்கும் சிங்கள அரசாங்கம் சர்வதேசத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மேலும் மேலும் தவணை கேட்டு அரசாங்கத்தின் மீது உலக நாடுகளுக்கு இருக்கும் மதிப்பை குறைத்து வருகின்றது என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவையின் விசேட குழுக் கூடம் இன்று காலை 10 மணியளவில் யாழ் நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் பேரவை அனைவரையும் உள்ளடக்கிய ஒரு மக்கள் இயக்கம். எமது தமிழ் மக்களை அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவ…
-
- 1 reply
- 489 views
-
-
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-வவுனியா ஸ்ரீபோதி தக்க்ஷினாராமய விகாரையின் விகாராதிபதியும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான சங்கநாயக்கதேரருமான, சியம்பலகஸ்வேவ விமலசார தேரர் சுகயீமுற்றுள்ளார். அவரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான கௌரவ ரிஷாத் பதியுதீன் அவர்கள் நேரில் சந்தித்து சுகம் விசாரித்துள்ளார்.இந்தப் புகைப்படத்தைப் பார்க்கும் போது அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் வில்பத்துக் காட்டை அழிக்கிறார்.. அங்கு முஸ்லிம்களைக் குடியேற்ற முயற்சிக்கிறார், வன்னியில் அரபு தேசம் ஒன்றை உருவாக்கவும் அவர் முயற்சிக்கிறார் என்று உண்மைக்குப் புறம்பான இட்டுக்கட்டுகளைச் சுமத்தி கொழும்பு விகாரமாகாதேவி பூங்காவில் தேரர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் எனது நினைவுக்கு வருகிறது.அமைச்சர் ரிஷாத்தி…
-
- 1 reply
- 557 views
-
-
வீட்டுத்திட்டத்தை சீனாவிடம் வழங்கியது சரியான நடவடிக்கை- அமைச்சர் சுவாமிநாதன் வடக்குகிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கான வீடமைப்பு திட்டத்தினை முன்னெடுக்கும் பொறுப்பை சீனா நிறுவனத்திடம் கையளித்ததை மீள்குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சர் டிஎம் சுவாமிநாதன் நியாயப்படுத்தியுள்ளார். வடக்குகிழக்கில் வீடமைப்பு திட்டத்தினை முன்னெடுக்கும் பொறுப்பை சீனாவிடம் இலங்கை வழங்கியது குறித்து இந்தியா கடும் அதிருப்தியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். தீவிரபரிசீலனைக்கு பின்னரே வீடமைப்பு திட்டத்தினை சீனா நிறுவனத்திற்கு வழங்கியதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு 4000…
-
- 0 replies
- 448 views
-