ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142769 topics in this forum
-
04 MAR, 2025 | 10:52 AM (செ.சுபதர்ஷனி) வருடாந்தம் இலங்கையில் 3 இலட்சத்து 20 ஆயிரம் குழந்தைகள் பிறக்கின்றன. எனினும் அவர்களில் சுமார் 4 ஆயிரம் தொடக்கம் 5 ஆயிரத்துக்கு இடைப்பட்டக் குழந்தைகள் பிறவிக் குறைபாடு நோய்களுடன் பிறப்பதாக விசேட வைத்திய நிபுணர் கபில ஜயரத்ன தெரிவித்தார். மார்ச் 3 சர்வதேச பிறவி குறைபாடு நோய் தினத்தை முன்னிட்டு கொழும்பில் அமைந்துள்ள இலங்கை மருத்துவ சங்கத்தில் நேற்று திங்கட்கிழமை (03) ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் முதன் முறையாக 2006 ஆம் ஆண்டு நாடளாவிய ரீதியில் பிறவிக் குறைபாடு நோய்கள் தொடர்பில் விசேட ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது. 18 ஆயிரம் குழந்தைகளை மையப்படுத்த…
-
- 0 replies
- 106 views
- 1 follower
-
-
போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல்; ஐ.நா. தீர்மானங்களை மீண்டும் நிராகரித்த இலங்கை! மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது அமர்வில், ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலகா, அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் நம்பகமான மற்றும் சுயாதீனமான உள்நாட்டு செயல்முறைகள் மூலம் மனித உரிமைகள் சவால்களை எதிர்கொள்வதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல் நடத்துதல் மற்றும் அதன் பின்னர் நமது பல தசாப்த கால ஜனநாயக நடைமுறைக்கு ஏற்ப கண்ணியமான மாற்றம் என்ற மாதிரியின்படி, கடந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்றுத் தலைவராக அதிமேதகு அநுர குமார திசாநாயக்க…
-
- 0 replies
- 141 views
-
-
04 MAR, 2025 | 10:43 AM (நா.தனுஜா) இலங்கையில் நீண்டகாலமாக நிலவிவரும் தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் கலாசாரத்தை முடிவுக்குக்கொண்டுவந்து, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கும், இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கும் இதுவே சரியான தருணம் எனச் சுட்டிக்காட்டிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் சார்பில் உரையாற்றிய பேரவைத்தலைவர், அரசாங்கத்தினால் பிரேரிக்கப்பட்டுள்ள உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு செயன்முறை குறித்து தமது வரவேற்பை வெளியிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (24) ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரில் நேற்று திங்கட்கிழமை (03) இலங்கை நேரப்படி பி.ப 2.00 மணிக்கு…
-
- 0 replies
- 94 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 04 MAR, 2025 | 10:54 AM இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான “ஐஎன்எஸ் குதர்” (INS Kuthar) என்ற கப்பல் மூன்று நாள் விஜயமாக திங்கட்கிழமை (03) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த கப்பலை இலங்கை கடற்படையினர் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றனர். இந்த கப்பலின் கட்டளை அதிகாரி கமாண்டர் நிதின் சர்மா மற்றும் இலங்கைக் கடற்படையின் மேற்கு கடல் தளபதி ரியர் அட்மிரல் எம்.எச்.சி.ஜே. சில்வா ஆகியாருக்கிடையில் சந்திப்பு இடம்பெற்றது. இந்த கப்பல் வருகையின் ஒரு பகுதியாக இலங்கை கடலோர காவல்படையின் சுரக்ஷா கப்பலுக்கு முக்கிய பாதுகாப்பு அமைப்பின் அத்தியாவசிய அங்கமான தீயணைப்பு அமைப்பின் நிரப்பப்பட்ட சிலிண்டர் கையளிக்கப்பட்டது. எஸ்.எல்.சி.ஜி.எஸ் சுரக்…
-
- 0 replies
- 102 views
- 1 follower
-
-
04 MAR, 2025 | 11:23 AM யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள இந்திய மீனவர்களை பார்வையிடுமாறு இந்திய மற்றும் இலங்கை மீனவர்கள் தரப்பில் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் நேற்று திங்கட்கிழமை (03) சிறைச்சாலைக்கு நேரில் சந்தித்து கலந்துரையாடினார். இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்கக்கோரி இந்தியாவின் இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் தொடர் போராட்டம் நடாத்தி வருகின்றனர். இதேநேரம் இந்திய மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்துமாறு உள்ளூர் மீனவர்களும் கோரிக்கை விடுத்து வருவதனால் அதுதொடர்பில் ஆராயும் நோக்கில் இந்திய மீனவர்களை சிறையில் சென்று சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது 40 நாட்களாக சிறையில் உள்ளபோதும் ஒரேயொரு தடவை ம…
-
- 0 replies
- 100 views
- 1 follower
-
-
இலங்கை தழிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் நாடாளுமன்ற அரசியல் அமைப்பு அலுவல்கள் குழுவின் உறுப்பினராக பரிந்துரை செய்யப்பட்ட பிண்ணனியில் சுமந்திரன் காணப்படுகின்றார். சுமந்திரன் சத்தியலிங்கத்தின் பெயரை பரிந்துரை செய்தமை தானே பின் கதவால் போய் நின்று இந்த விவகாரத்தை அநுர தரப்புடன் இணைந்து செய்வதற்கான ஒரு பொறி முறையாக இது முன்னெடுக்கப்படுகின்றது. குறித்த இருவரும் இதனை வெளிப்படையான பேசவில்லை. ஆனால் இது தான் நடைபெறப் போகின்றது. சத்தியலிங்கம் ஒரு காலத்தில் இந்தப் பதவியை விட்டு விலகும் நிலையில் இந்த முறைமையை முன்னெடுப்பதற்கு சுமந்திரன் தான் சரியானவர் என்று மீண்டும் அவருக்கு நாடாளுமன்றம் செல்ல சந்தர்ப்பம் வழங்கப்படும் என அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்த…
-
-
- 8 replies
- 529 views
-
-
03 Mar, 2025 | 03:11 PM இவ் வருடத்தின் முதல் மாதத்தில் 400.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சுற்றுலாப் பயணிகளால் வருமானமாக கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகளில் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட 341.8 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்துடன் ஒப்பிடுகையில் இது 17.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை மொத்தமாக 232,341 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது. இதன்மூலம் இவ்வருடத்தில் பெப்ரவரி ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மொத்தமாக 485,102 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 362.1 மி…
-
-
- 3 replies
- 220 views
-
-
தேயிலை கொழுந்து பறிக்கும் போட்டி – 15 நிமிடங்களில் 8 kg கொழுந்தை பறித்து சாதனை. கொழுந்து பறிக்கும் போட்டியில முதலாம் இடத்தைப் பெற்ற தலவாக்கலை கிரேட் வெஸ்டன் தோட்டத்தைச் சேர்ந்த எந்தனி இரேஷா ராஜலெட்சுமி தங்கப் பதக்கத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் 15 நிமிடங்களில் 8 kg கொழுந்தை பறித்தே இச்சாதனையை படைத்துள்ளார். இவருக்கு தங்கப் பதக்கத்துடன் ரூபா 650,000 ரொக்கப் பரிசுடன் வர்ண தொலைக்காட்சி பெட்டி ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது. 3வது தடவையாக ஹேலிஸ் பெருந்தோட்ட கம்பனியினால் கொழுந்து பறிக்கும் போட்டி இன்று (01) ரதல்ல பிரதேசத்தில் நடைபெற்று பின்னர் பரிசு வழங்கும் நிகழ்வு ரதல்ல விளையாட்டு மைதானத்தில நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரத அதிதியாக வேறலிஸ் நிறுவனத்தின் தலைவர் திரு. …
-
- 2 replies
- 197 views
- 1 follower
-
-
இந்திய அமைதி காக்கும் படைகளால் சிறிலங்காவில்மேற்கொள்ளப்பட்ட பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்குத் தீர்வு வழங்கவேண்டிய கடப்பாடு இந்தியஅரசாங்கத்திற்கு உள்ளது. என யாழ் வடமராட்சியில் நேற்று வெளியான வல்வெட்டித்துறை ஒரு படுகொலையின் வாக்குமூலங்கள் என்ற அறிக்கையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது அந்த அறிக்கை இந்திய அரசாங்கத்திற்கு சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது- வல்வெட்டித்துறை படுகொலையிலும் இலங்கையில் இருந்த நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட பாரதூரமான உரிமை மீறல்களிலும் இந்திய அமைதிகாக்கும் படையினரின் வகிபாகம் தொடர்பாக பொறுப்புக்கூறல் மட்டில் சர்வதேச சட்டத்தின் கீழ் தனது கடப்பாடுகளை நிறைவேற்றுவதுடன் இந்திய அமைதிப்படையின் கட்டளை அதிகார வலையமைப்பினையும் மூத்…
-
- 0 replies
- 140 views
-
-
நாட்டில் எரிபொருளுக்கு எவ்விதத் தட்டுப்பாடும் இல்லை! ”நாட்டில் எரிபொருளுக்கு எந்த விதத் தட்டுப்பாடு இல்லையென” பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ நேற்றைய தினம் (01) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பெட்ரோல் நிலையங்களுக்கு அருகில் உருவாகியுள்ள வரிசைகள் குறித்து நாடாளுமன்றில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது நாட்டில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் காண்பிக்க சில குழுக்கள் செயற்கையான எரிபொருள் நெருக்கடியை உருவாக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1423667
-
-
- 6 replies
- 284 views
- 1 follower
-
-
நடுக்கடலில் தத்தளித்த நாகை-இலங்கை கப்பல்! இந்தியாவின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு பயணித்த பயணிகள் கப்பல் திடீரென கடல் சீற்றத்தால் நடுக்கடலில் தத்தளித்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்போது கப்பலில் 17 ஊழியர்கள் உள்பட 95 பேர் பயணம் செய்துள்ள நிலையில் பயணிகள் கூச்சலிட்டதால் கப்பல் பாதியிலேயே நாகை துறைமுகத்திற்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் கப்பல் சேவை வானிலை மாற்றம், சர்வதேச தொழில்நுட்ப அனுமதி உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஆண்டு நவம்பர் 18ம் திகதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதைதொடர்ந்து கடந்த மாதம் 22ம் திகதி முதல் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பி…
-
- 1 reply
- 236 views
-
-
போராட்டம் குறித்து சுகாதார தொழிற் சங்கங்கள் எச்சரிக்கை! எதிர்வரும் மார்ச் மாதம் 06 ஆம் திகதி காலை 08.00 மணி முதல் நாடு முழுவதும் சுகாதார நிபுணர்கள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக 20 சுகாதார தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். சுகாதாரத் துறையுடன் இன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ள கலந்துரையாடல் தோல்வியுற்றால் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக சுகாதார தொழிற்சங்கத் தலைவர்கள் அச்சுறுத்தியுள்ளனர். சுகாதார நிபுணர்களின் கொடுப்பனவுகளை மீளாய்வு செய்வதற்கு சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதாக பிரதிநிதிகள் மேலும் தெரிவித்தனர். அடையாள வேலைநிறுத்தத்திற்கு மருத்துவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்ட…
-
- 0 replies
- 136 views
-
-
மார்ச் 5 அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம்! வைத்தியர்களின் கொடுப்பனவுகளை குறைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மார்ச் 5 ஆம் திகதி நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது. 2025 வரவுசெலவுத் திட்டத்தில் கொடுப்பனவுகளில் கணிசமான குறைப்புக்கள் உள்ளதாகவும், இது மருத்துவ நிபுணர்களை பாதிக்கும் என்றும் GMOA தெரிவித்துள்ளது. வேலைநிறுத்தம் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் நோயாளிகளின் சேவைகளை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுகாதாரத் துறையில் இடையூறுகளைத் தவிர்ப்பதற்கான முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு GMOA அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது. https://athavannews.com/2025/1423844
-
- 0 replies
- 186 views
-
-
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அடிப்படைவாத கொள்கைள் தொடர்பான செயற்பாடுகள் கல்முனை பிரதேசத்தில் அதிகம் பதிவாகியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால சன்டே டைம்ஸுக்கு தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்கள் மத்தியில் அடிப்படைவாத கொள்கைகளை பரப்புவதற்கான முயற்சிகள் தற்போது இடம்பெற்று வருகின்றமை தொடர்பில் அறிக்கைகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இராணுவ புலனாய்வு பிரிவு மற்றும் அரச புலனாய்வு பிரிவு ஆகியவற்றிடமிருந்தே இந்த அறிக்கைகள் கிடைக்கப் பெற்றுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார். மதச் செயல்பாடுகள் நடக்கும் சில இடங்களைக் கண்காணித்ததில், குறிப்பாக சிறுவர்கள் மத்தியில் அடிப்படைவாத கொள்கைகள் புகுத்தப்படுவது கண்டறியப்பட்டதாகவும்…
-
- 0 replies
- 145 views
-
-
மே முதல் வாரத்தில் குட்டி தேர்தல்? உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மே முதல் வாரத்தில் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க, டெய்லி மிரருக்கு அளித்த பேட்டியில், இந்த வாரத்திற்குள் திகதி குறித்து கலந்துரையாடவும் இறுதி முடிவை எட்டவும் ஒரு சிறப்புக் கூட்டம் கூட்டப்படும் என்றார். "அந்தந்த அரசியல் கட்சிகளால் முன்வைக்கப்படும் அனைத்து திட்டங்களையும் பரிசீலித்த பிறகு முடிவு எடுக்கப்படும்" என்று அவர் கூறினார். "நாங்கள் அனைத்து பரிந்துரைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறோம். இருப்பினும், ஒரு சுயாதீன அமைப்பாக, உள்ளாட்சித் தேர்தல் சட்டத்திற்கு இணங்க திகதி அறிவிக்கப்படும்," என்று ஆணைக்குழுத் தலைவர் வலியுறுத்தினார…
-
- 0 replies
- 123 views
-
-
சட்டவிரோத ஆயுதங்களைச் செயலிழக்க செய்ய வேண்டுமாயின் அதனை ஜே.வி.பியினரின் அலுவலகத்தில் இருந்து தொடங்க வேண்டும் editorenglishMarch 3, 2025 சட்டவிரோத ஆயுதங்களைச் செயலிழக்க செய்ய வேண்டுமாயின் அதற்கான ஆரம்பப் பணியை மக்கள் விடுதலை முன்னணியின் பத்தரமுல்லை காரியாலயத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். 1980 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரச படைகளிமிருந்து கைப்பற்றிய ஆயுதங்களை மக்கள் விடுதலை முன்னணி பாதுகாப்பு அமைச்சுக்கு முழுமையாக ஒப்படைக்கவில்லை என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (02/03/2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவத…
-
- 0 replies
- 194 views
-
-
அதானி வெளியேற்றம், பெரும் பிழை..! அதானி கிரீன் எனர்ஜி-ஸ்ரீலங்கா மீள் சக்தி பெருந்திட்டம், இலங்கைக்கு மட்டும் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டமல்ல. அது மேலதிக மின்சக்தியை இந்திய மின் சுற்றுக்கு ஏற்றுமதி செய்யும் நோக்கத்தை கொண்ட திட்டமாகும். அதற்காக இலங்கை-இந்திய மின் சுற்றுகள் இணக்கப்பட இருந்தன. இந்த பெருந்திட்ட மின் உற்பத்தி கட்டமைப்பு மற்றும் இந்திய சுற்றுடனான தொடர்பு இணைப்பு ஆகியவற்றை அமைக்கும் மற்றும் பராமரிக்கும், பாரிய பொறுப்புகளை அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம்தான் ஏற்று இருந்தது என்பதை மறவாதீர்கள். அதுதான் முழு திட்டம். அதை புரிந்துகொள்ள இன்றைய இலங்கை அரசு தவறி விட்டதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அதானியை நீங…
-
- 3 replies
- 396 views
- 1 follower
-
-
CPC எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மாற்ற முயற்சிப்பதாக குற்றச்சாட்டு! இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மாற்ற அரசாங்கம் முயற்சிப்பதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது. இதற்காக அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அதன் உப தலைவர் குசும் சந்தநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கான 3% கமிஷன் தொகையை குறைப்பது தொடர்பான மகஜர் ஒன்றை சமர்ப்பிக்க இன்று (03) காலை ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தரவுள்ளதாக சந்தநாயக்க குறிப்பிட்டுள்ளார். மேலும், லங்கா ஐஓசி எரிபொருளின் விநியோகஸ்தர்கள் எரிபொருள் ஆர்டர்களை வழங்குவதை நிறுத…
-
- 0 replies
- 143 views
-
-
மாணவனை தாக்கிய பாடசாலை அதிபருக்கு விளக்கமறியல்! இந்த வருடம் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவனை தாக்கி காதில் காயங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைதான பாடசாலை அதிபர் எதிர்வரும் மார்ச் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த பாடசாலை அதிபர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஹிங்குராங்கொட பதில் நீதவான் நாலக மிஹிர பண்டார இந்த உத்தரவை பிறப்பித்ததுடன், மாணவர் தொடர்பான நீதிமன்ற மருத்துவ அதிகாரியின் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மெதிரிகிரிய பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்தார். சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மெதிரிகிரிய பொலிஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். https://…
-
- 0 replies
- 151 views
-
-
02 MAR, 2025 | 03:07 PM வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதி மற்றும் ஏ9 வீதிகளில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதுடன், இதற்கு நகரசபை நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் தெரிவித்தனர். குறிப்பாக நகரை சூழ பல பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்கள் அதிகம் காணப்படுகின்றது. இந்நிலையில் கல்வி நடவடிக்கைகளுக்காக இவ்வீதிகளினை பயன்படுத்தும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய பல்வேறு தேவைகளிற்காக இவ்வீதியினை பயன்படுத்தும் அரச, தனியார் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் இக்கட்டாக்காலி மாடுகளால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். அத்துடன், இக்கட்டாக்காலி மாடுகளால் விபத்துக்குள்ளாகும் நிலையும் அண்மைய நாட்களாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இது குறித்து கால்நடைகளை பராமரிப்பாளர…
-
- 1 reply
- 203 views
- 1 follower
-
-
02 MAR, 2025 | 06:52 PM ‘வல்வெட்டித்துறை : ஒரு படுகொலையின் வாக்குமூலங்கள்’ என்ற அறிக்கை வெளியீடும் ஊடக சந்திப்பும் இன்று ஞாயிற்றுக்கிழமை (02) யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நடைபெற்றது. சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையை இந்திய இராணுவத்தால் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வெளியிட்டு வைத்தனர். இந்த நிகழ்வில் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் ஊடகவியலாளர்கள் பலர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/208106
-
- 0 replies
- 283 views
- 1 follower
-
-
02 MAR, 2025 | 04:46 PM பொருளாதார நெருக்கடி காரணமாக பாடசாலையில் இருந்து இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் அரசாங்கம் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக மகளிர், சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். வவுனியாவில் உள்ள சிறுவர் இல்லங்களை பார்வையிட்டமை தொடர்பில் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், சிறுவர் பராமரிப்பு நிலையங்கள், சிறுவர் இல்லங்கள் என்பவற்றுக்கு வரவு செலவுத் திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 500 மில்லியன் ரூபாய் இதன் வளங்களை அபிவிருத்தி செய்வதற்கும், மனிதவளத்தை மேம்படுத்துவதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பெண் தலைமைத்துவ குடும்பங்களின் அபிவிருத்திக்காகவும், அவர்களுக்கான தொழில் வா…
-
- 0 replies
- 149 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 2 01 MAR, 2025 | 09:27 AM நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு மேலும் 334 மில்லியன் அமெரிக்க டொலரை உள்ளடக்கிய 4 ஆவது தவணைக்கான கடனுதவியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு, 48 மாத கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இலங்கையுடனான மூன்றாவது மதிப்பாய்வை நிறைவு செய்துள்ளது. இலங்கையுடனான நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் மூன்றாவது மீளாய்வு கூட்டத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை நேற்று வெள்ளிக்கிழமை (28) ஆராய்ந்திருந்தது. இதன் தொடர்ச்சியாக இலங்கைக்கு அடுத்த கட்ட கடனுதவியை வழங்குவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையி…
-
- 2 replies
- 178 views
- 1 follower
-
-
Published By: VISHNU 02 MAR, 2025 | 07:22 PM ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வேண்டுகோளின் பேரில், ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை பொதுமக்களுக்கான விசேட தலதா கண்காட்சியொன்றை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 18 ஆம் திகதி பிற்பகல் 3:00 மணி முதல் மாலை 5:30 மணி வரையிலும், 19 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை நண்பகல் 12:00 மணி முதல் மாலை 5:30 மணி வரையிலும் தலதா கண்காட்சி நடைபெற உள்ளது. இது தொடர்பான பூர்வாங்கக் கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை (02) கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. 16 வருடங்களுக்குப் பிறகு நாட்டின் பௌத்த மக்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கிய மகாநாயக்க தேரர்களுக்கு நன்றி தெரிவித்த ஜனா…
-
- 0 replies
- 108 views
- 1 follower
-
-
28 FEB, 2025 | 09:53 PM நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாதென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ராஜகருணா தெரிவித்துள்ளார். ஆகவே, பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். நாட்டில் எவ்வித எரிபொருள் பற்றாக்குறையும் ஏற்படவில்லையெனவும், எரிபொருள் போக்குவரத்து செயற்பாடுகள் வழமையான முறையில் இடம்பெறுவதாகவும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் தலைவர் குறிப்பிட்டார். எரிபொருள் விநியோகஸ்தர்கள் எரிபொருள் விநியோகத்தை நிறுத்துவதாக எந்த உறுதிப்படுத்தலையும் இதுவரை தெரிவிக்கவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/207955
-
- 2 replies
- 235 views
- 1 follower
-