ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142751 topics in this forum
-
நாட்டுக்கு வருகை தரும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மொத்தமாக 3,32,439 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. மேலும் பெப்ரவரி மாதத்தின் முதல் 9 நாட்களில் மொத்தம் 79,678 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர் எனவும், பெப்ரவரி மாதத்தின் முதல் 9 நாட்களில் இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1420782
-
- 0 replies
- 124 views
-
-
வடக்கு மாகாண ஆளுநருக்கும் இலங்கைக்கான சீனத்தூதரகத்தின் பொறுப்பதிகாரிக்கும் இடையில் விசேட சந்திப்பு! வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகனுக்கும் இலங்கைக்கான சீனத்தூதரகத்தின் பொறுப்பதிகாரி ஜு யான்வேய் தலைமையிலான குழுவினருக்கும் இடையில் நேற்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, வடக்கிலுள்ள மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டது. அந்தவகையில், வடமாகாண மீனவர்கள் தன்னை சந்தித்துக் கலந்துரையாடியதாகவும் அவர்கள் பல்வேறு தேவைகளை நிறைவேற்றித்தருமாறு தம்மிடம் கோரிக்கை முன்வைத்தாகவும் சீனத் தூதரகத்தின் பொறுப்பதிகாரி ஆளுநரிடம் தெரிவித்தார். தொடர்ந்து, வடக்கு மாகாணத்தில் விவசாயம், சுற்றுலாத்துறை அபிவிருத்தி…
-
- 0 replies
- 115 views
-
-
போதைப்பொருள் பாவனை; 17 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம்! போதைப்பொருள் பாவனை குற்றச்சாட்டின் பேரில் கடந்த நான்கு மாதங்களில் மொத்தமாக 17 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இன்று (11) தெரிவித்தார். போதைப்பொருள் பாவிக்கும் பொலிஸ் அதிகாரிகளின் பட்டியல் புலனாய்வுப் பிரிவுகள் மற்றும் விசேட பொலிஸ் பிரிவினூடாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட அதிகாரிகள் கண்காணிக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். அவ்வாறான உத்தியோகத்தர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, போதைப்பொருளை பயன்…
-
- 0 replies
- 115 views
-
-
ஏப்ரல் மாதத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் February 11, 2025 09:31 am கொழும்பில் நேற்று (10) இடம்பெற்ற Committee on Parliamentary Business பாராளுமன்ற அலுவல்கள் குழு முடிவுகளின் அடிப்படையில் வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி பல காலமாக நடைபெறாமல் உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் நடைபெறுவதற்கான சாத்திய கூறுகள் உறுதியாகி உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் வரும் பெப்ரவரி 17 ஆம் திகதிக்கு முன்னர் பழைய விண்ணப்பங்களை விடுத்து புதிய விண்ணப்பங்களை அமுல்படுத்தும் சட்டமூலம் உயர் நீதிமன்றத்தில் கோரப்பட்டிருந்தது அவ் தீர்ப்பின் வாசிப்புகளின் அடிப்படையில் இதற்கான ஆயத்தங்கள் இவ் திகதிக்கு முன்னர் மேற்கொள்ளப்படும் எனவும் …
-
- 0 replies
- 159 views
-
-
மாவையின் இறுதிச்சடங்கில் அநாமதேய பதாகையின் பின்னணியில் பல சக்திகள் ; தமிழரசுக்கட்சியை சிதைப்பதே நோக்கம் - சி.வி.சே.சிவஞானம் Published By: Vishnu 11 Feb, 2025 | 02:28 AM மறைந்த தலைவர் மாவை.சோ.சேனதிராஜாவின் இறுதிச்சடங்கு நடைபெற்ற மயானத்தில் கட்சியின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட மத்திய குழு உறுப்பினர்கள் 18பேருக்கு எதிராக அநாமதேய பதாகையை காட்சிப்படுத்தியத்தின் பின்னணியில் உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் பல காணப்படுகின்றன என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.சே.சிவஞானம் தெரிவித்துள்ளார். அத்துடன், எமது கட்சியை சிதைத்து ஓரங்கட்டுவதே அந்த சக்திகளின் பிரதான நோ…
-
- 3 replies
- 375 views
-
-
10 FEB, 2025 | 05:33 PM (எம்.ஆர்.எம்.வசீம்) ரணில், சஜித் இரண்டு பேரும் விரைவாக ஒரு மேசைக்கு வரவேண்டிய காலம் வந்துள்ளது. இல்லாவிட்டால் மக்கள் அவர்களின் புதைகுழிக்கும் சாபமிடும் நிலை ஏற்படும். அதிகாரம் மற்றும் வரப்பிரசாதங்களை பார்க்காமல் மக்களின் நோக்கத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெலிபன தம்மாராம தேரர் தெரிவித்தார். நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து செயற்படவேண்டியதன் தேவைப்பாடு தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து செயற்படுவது …
-
- 1 reply
- 188 views
- 1 follower
-
-
திஸ்ஸ ரஜமகா விகாரை விவகாரம்: தமிழ் அரசியல்வாதிகளுக்கு உதய கம்மன்பில எச்சரிக்கை! ”யாழ். தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ ராஜமகா விகாரை மீது தமிழர்கள் எவரும் கைவைக்க இடமளிக்கமாட்டோம்” என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். அத்துடன் தையிட்டி திஸ்ஸ ராஜமகா விகாரையை இடிக்க வேண்டும் என்று கூச்சலிடும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு இந்த விடயங்களைத் தெரிவித்துக்கொள்வதாகவும் உதய கம்மன்பில எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ ராஜமகா விகாரை சிங்கள – பௌத்தர்களுக்குச் சொந்தமானது என்றும் அது அமைந்துள்ள காணியும் தற்போது விகாரை நிர்வாகத்துக்கே உரித்தானது என்றும் தெரிவித்த அவர் இந்த விவகாரம் தொடர்பில் கதைப…
-
- 3 replies
- 537 views
-
-
10 FEB, 2025 | 10:30 AM யாழ். மாவட்ட மீனவ அமைப்பின் பிரதிநிதிகளை, யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் உதவித் தூதுவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) சந்தித்தார். குறித்த சந்திப்பில் சீனா நாட்டினால் வடமாகாண மீனவர்களுக்கு வழங்கப்பட்ட வலைகள் மற்றும் உணவுப் பொதிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டதுடன் தொடர்ந்தும் வடக்கு மீனவ சமூகத்துக்கு சீனாவின் உதவிகள் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மீனவர்கள் முன்வைத்தனர். https://www.virakesari.lk/article/206276
-
- 1 reply
- 193 views
- 1 follower
-
-
தையிட்டி விகாரை இடிக்கப்பட வேண்டும்! -சிவஞானம் ஸ்ரீதரன். ”மக்களின் விருப்புக்கு மாறாக சட்டவிரோதமாக தையிட்டியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சர்வாதிகார விகாரை இடிக்கப்பட வேண்டும்” என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் இது இனவாதக் கருத்தல்ல எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், சட்டம் சமனானது எனக் கூறும் இன்றைய அரசு, தனது நிலைப்பட்டில் இருந்து படிப்படியாக மாறி தனது சுய நிலைக்கு வருகின்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். சமகால அரசியல் தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் நேற்று (08) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” ‘தையிட்டி விகாரை விவகார…
-
-
- 19 replies
- 924 views
- 1 follower
-
-
தையிட்டி விகாரையை அகற்ற முடியாது!; மாற்றுக் காணியே ஒரே தீர்வு!; அநுர அரசு திட்டவட்டம் தையிட்டியில் அமைந்துள்ள விகாரையை அந்த இடத்தில் இருந்து அகற்ற முடியாது. அந்த விகாரை எந்தக் காணியில் அமைக்கப்பட்டுள்ளதோ அந்தக் காணி உரிமையாளர்களுக்கு மாற்றுக் காணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், நாட்டில் அமைந்துள்ள எந்த மதத் தலங்களையும் அகற்ற முடியாது. அது மத ரீதியான, இன ரீதியான வன்முறைகளுக்கே வழிவகுக்கும். மதத் தலங்களை வைத்துக்கொண்டு அரசியல் செய்வதை கட்சிகள் உடனடியாக நிறுத்த வேண்டும். தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்கள…
-
- 2 replies
- 315 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனது இளைய மகன் பாலச்சந்திரன் உயிரிழந்த செய்தி கேட்ட முன்னாள் ஜனாதிபதியும் எனது தந்தையுமான மகிந்த ராஜபக்ச மிகவும் மன வருத்தம் அடைந்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். சமூக ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அதிகாலையில் வந்த தொலைபேசிச் செய்தி... மேலும் தெரிவிக்கையில், பிரபாகரனின் மகனது மரணச் செய்தி அதிகாலையில் கிடைக்கப்பெற்றது. இந்தச் செய்தியைக் கேட்டு எனது தந்தை மிகவும் மனவருத்தம் அடைந்தார். எனது தந்தை மிகவும் கவலை அடைந்து நான் பார்த்த சந்தர்ப்பம் இதுதான். அதிகாலையில் வந்த அந்த தொலைபேசிச் செய்தி தொடர்பில் இன்றும் எனக்கு நினைவ…
-
-
- 15 replies
- 818 views
- 2 followers
-
-
மாகாண சபை முறைமை என்பது தாம் வென்றெடுத்த உரிமை என தமிழர்கள் கருதுவதால் அந்த உரிமையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கைவைக்காது. இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த வருடத்தின் முற்பகுதியில் மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என்று யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். மக்களுக்கான எமது நேர்வழி அரசியல் பயணத்தின்போது எதற்கும் அஞ்சி, அடிபணியப்போவதில்லை. போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும். ஏனெனில் மக்கள் சக்தி எமது பக்கம் எனவும் அவர் கூறினார். சீனா - இலங்கை நட்புறவின் பயனாக "சீனாவின் சகோதர பாசம்" எனும் வாசகத்துடன் யாழ். மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கு…
-
- 0 replies
- 114 views
-
-
லசந்த படுகொலை சந்தேகநபர்கள் மூவரை விடுதலை செய்ய சட்டமா அதிபர் ஆலோசனை - நாளை எதிர்ப்பு போராட்டம் Published By: Rajeeban 05 Feb, 2025 | 11:47 AM சண்டேலீடர் ஆசிரியர் லசந்தவிக்கிரமதுங்க படுகொலை சந்தேகநபர்கள் மூவரை விடுதலை செய்வதற்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறவுள்ளது. நாளை வியாழக்கிழமை இளம் பத்திரிகையாளர்கள் சங்கம் சட்டமாஅதிபர் அலுவலகத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளது. சட்டமா அதிபர் பதவி விலகவேண்டும்,லசந்த விக்கிரமதுங்க படுகொலை சந்தேகநபர்களை விடுதலை செய்வதன் பின்னால் உள்ள …
-
- 9 replies
- 439 views
- 1 follower
-
-
யாழ் நகரில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று 80 இலட்சம் ரூபா பணம் அபகரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவு பொலிஸாரால் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. வெளிநாடு செல்வதற்கு ஆர்வமாகவிருந்த இளைஞரொருவரிடம் 80 இலட்சம் ரூபா வரையான பணத்தை வங்கியில் வைப்பிலிட்டு வங்கி அறிக்கையை நேரடியாக வந்து தமக்கு காட்டுமாறு வெளிநாட்டு முகவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனை நம்பி சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதிக்குச் சென்ற இளைஞனை காரில் கடத்திச் சென்ற குறித்த குழு இளைஞரின் வங்கிக் கணக்கில் இருந்த 80 இலட்சம் ரூபா பணத்தை மற்றுமொருவரின் வங்கி கணக்கிற்கு மாற்றிவிட்டு இளைஞரை கோப்பாய் பகுதியில் இறக்…
-
- 1 reply
- 231 views
- 1 follower
-
-
யாழ். பல்கலைக்கழகத்தில் இரு மாணவர் குழுக்களிடையே மோதல் February 10, 2025 07:15 am யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் வணிக பீட சிங்கள மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீட புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு நேற்று (09) பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதன்போது நான்காம் வருட மாணவர்களுக்கும் மூன்றாம் வருட மாணவர்களுக்கும் இடையே மூண்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் ஒருவர் காயமடைந்தார். காயமடைந்த மாணவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக உள்ளக மட்டத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. http…
-
- 1 reply
- 216 views
-
-
வகுப்பொன்றில் மாணவர்களின் தொகையை 35 ஆக குறைக்கும் திட்டம் பரிசீலனையில்! ஒரு வகுப்பில் மாணவர்களின் எண்ணிக்கையை 35 க்கும் குறைவாக வைத்திருக்கும் யோசனையை பரிசீலித்து வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆசிரியர் மற்றும் அதிபர்கள் சங்கத்திற்கு அறிவித்துள்ளார். கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் தொழிற்சங்க ஒன்றியத்துக்கும் பிரதமருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். இக்கலந்துரையாடலில் கொழும்பு பிராந்தியத்தில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்தமை தொடர்பான தகவல்களை முன்வைத்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அரச பாடசாலைகளில் மாணவர் சேர்க்கை படிப்படியாக குறை…
-
- 0 replies
- 130 views
-
-
மீண்டும் இலங்கைக்கும்-இந்தியாவுக்கும் இடையில் கப்பல் சேவை! இலங்கைக்கும்-இந்தியாவுக்கும் இடையிலான கப்பல் சேவை எதிர்வரும் 12ஆம் தேதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக கப்பல் சேவையில் ஈடுபடும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது. பல்வேறு காரணங்களால் இடைநிறுத்தப்பட்டிருந்த கப்பல் சேவை பன்னிரண்டாம் திகதி முதல் மீண்டும் தனது சேவையை ஆரம்பிக்க உள்ளதோடு வாரத்தில் ஆறு நாட்கள் குறித்த சேவை இடம்பெற உள்ளதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அத்துடன் செவ்வாய்க்கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களில் கப்பல் சேவை இடம்பெற உள்ளமையினால் போக்குவரத்துக்கான ரிக்கெட்களை www.sailsubham.com என்ற இணையதளத்தின் மூலமாக அல்லது 021 2224647, 0117642117 இலக்கத்தினூடாகவும் முற்பதிவு செய்து கொள்ளுமாறும் குறித…
-
- 0 replies
- 222 views
-
-
வவுனியாவில் வெள்ளத்தால் பாதிப்படைந்த 350 குடும்பங்களுக்கு சீன தூதரகத்தினால் உலர்பொருட்கள் பொதி வழங்கி வைப்பு 09 FEB, 2025 | 05:29 PM வவுனியா மாவட்டத்தில் கடந்த காலத்தில் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சீன தூதரகத்தினால் உலர் உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (09) இடம்பெற்றது. சீனத்தூரகத்தின் பிரதிப் பிரதானி சூ.யன்வெய் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் 350 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டன. வடமாகாணத்தில் 2470 குடும்பங்களுக்கு 6490ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் வழங்கப்படவுள்ளதுடன் அந்த வகையில் வவுனியா மா…
-
- 1 reply
- 159 views
- 1 follower
-
-
அரச பணியாளர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்படும்! -பிரதமர் ஹரிணி அமரசூரிய. “எதிர்காலத்தில் அரச பணியாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும்” என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பிரதமர் மற்றும் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டணியினருக்கு இடையே நேற்று (08) அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். இதன்போது ஆசிரியர், அதிபர் மற்றும் ஆசிரியர் ஆலோசனை சேவைகளிலும் கல்வித் துறையிலும் காணப்படும் பல பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன. குறிப்பாக குறித்த சேவைகளில் காணப்படும் பதவி உயர்வுகள், சம்பள முரண்பாடுகள், தொழில்முறை பிரச்சினைகள், ஆசிரியர் அதிபர் சேவையில் (தேசிய மற்றும் மாகாண) முறையான இடமாற்றங்கள், பாடசாலைகளில் ம…
-
- 1 reply
- 240 views
- 1 follower
-
-
தமிழரசுக் கட்சிக்கு எதிரான வழக்கினை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பான முன்மொழிவுகள் நீதிமன்றுக்கு சமர்ப்பிப்பு February 10, 2025 ‘இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு எதிராகத் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை இணக்கப்பாட்டுடன் முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான முன்மொழிவுகளை நீதிமன்றுக்குச் சமர்ப்பித்துள்ளதாக’ அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். ‘குறித்த வழக்கின் பிரதிவாதிகளான தாம் உள்ளிட்ட மூன்று பேரினால் இந்த முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டன’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ‘இந்த அடிப்படையில் எதிர்வரும் 13ஆம் திகதி வழக்கு முன் விசாரணையின்போது இந்த முன்மொழிவுகள் தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வரமுடிய…
-
- 0 replies
- 170 views
-
-
ஹிருணிகாவிற்கு பிடியாணை February 10, 2025 11:04 am 2022 ஆம் ஆண்டு கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவில் நடத்தப்பட்ட போராட்டம் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள முறைப்பாடு இன்று (10) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றத்தில் ஆஜராகாத ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட பல சந்தேகநபர்களைக் கைது செய்து ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (10) பிடியாணை பிறப்பித்துள்ளது. குறித்த முறைப்பாடு இன்று கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது இந்த முறைப்பாட்டில் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட பலர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. …
-
- 0 replies
- 114 views
-
-
அரகலயவின் பெயரில் கெஹெலிய பெற்ற நட்டஈட்டுத் தொகையில் கிளிநொச்சியில் ஒரு கிராமமே அமைத்திருக்கலாம் editorenglishFebruary 9, 2025 கெஹெலிய ரம்புக்வெல்ல பெற்ற நட்டஈடாக பெற்றுக்கொண்ட பணத்தில், கிளிநொச்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கிராமம் ஒன்றையே அமைத்திருக்கலாம் என அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார். கிளிநொச்சிக்கு நேற்று (9/2/2025) விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் பிமல் ரத்னாயக்க கிளிநொச்சி ரயில் நிலையத்துக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட போதே இதனைத் தெரிவித்தார். ‘க்ளீன் ஶ்ரீலங்கா’ திட்டத்தை முன்னெடுக்கும் வகையில் குறித்த ரயில் நிலையத்தை பார்வையிட்ட அமைச்சர், பயணிகளுடனும் கலந்துரையாடினார். இதன் போது ஊடகங்களுக்கு அமைச்சர் மேற்கொண்டவாறு தெ…
-
- 0 replies
- 113 views
-
-
தையிட்டி மக்களின் மண்ணுரிமைப் போராட்டத்திற்கு ஈ.பி.டி.பியினரும் ஆதரவாம் editorenglishFebruary 10, 2025 தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பில் காணி உரிமையாளர்களினால் தமது மண்ணுரிமைக்கான அமைதிவழிப் போராட்டத்திற்கு ஆதரவுகோரி அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், அதற்குத் தமது ஆதரவினையும் வழங்குவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தையிட்டிப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை என்பது சட்ட ரீதியான அனுமதிகள் எவையும் பெற்றுக் கொள்ளப்படாமல், எமது மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த தனியார் காணிகளில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பூர்வீக…
-
- 0 replies
- 111 views
-
-
சிறுவர் தினத்தன்று சிறுவன் கொலை தொடர்பில் நேற்று ஆர்ப்பாட்டம் editorenglishFebruary 10, 2025 சிறுவர் தினத்தன்று சிறுவன் ஒருவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு மாத்தளை மேல் நீதிமன்றத்தால் பிணைவழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள 08 சந்தேக நபர்களின் பிணையை ரத்து செய்து சிறையில் மீண்டும் அடைக்கப்பட வேண்டும் என மாத்தளை மேல் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ள மாத்தளை காவல் பிரிவுக்கு உட்பட்ட மகாவில்ல நாலந்த தோட்டம் மடவல்ல உல்பத்த பிரதேச மக்கள் நேற்று (09) கவனயீர்ப்புப் பேராட்டம் ஒன்றை நடத்தினர் . இதன்போது பிரதேச மக்கள் சந்தேக நபர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி சுலோகங்களையும் ஏந்தி ஊர்வலமாக சென்று தமது கவன ஈர்ப்பினை முன்னெடுத்தனர…
-
- 0 replies
- 101 views
-
-
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளைப் பூர்த்திசெய்ய வேண்டிய தேசிய மக்கள் சக்தியின் வரவு-செலவுத் திட்டம் editorenglishFebruary 9, 2025 2025 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கன்னி வரவு-செலவுத் திட்டம் எதிர்வரும் 17ஆம் திகதி திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளதுடன், மார்ச் மாதம் 21ஆம் திகதி வாக்கெடுப்பிற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இவ்வாறானதொரு நிலையிலேயே கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜூலி கோசாக் இந்த விடய…
-
- 1 reply
- 171 views
- 1 follower
-