Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜனாதிபதி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விஜயம்! எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விஜயம் செய்யவுள்ளார். 2025 ஆம் ஆண்டு உலக அரசுகள் உச்சி மாநாடில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விஜயம் செய்யவுள்ளார் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. அத்துடன் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்வதாக அந்த அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு மேலும் குறிப்பிட்டுள்ளது. https://athavannews.com/2025/1420033

  2. வடக்கில் மருத்துவ ,பாடசாலை வசதிகளை மேம்படுத்த ஜப்பான் நிதியுதவி 12 Feb, 2025 | 11:39 AM பெப்ரவரி 11 ஆம் திகதி, இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமட்டா வடக்கு மாகாணத்திற்கான தனது முதல் பயணத்தின் போது, Humanitarian Development Organization (HDO) மற்றும் Nuffield School for Deaf and Blind ஆகிய இரண்டு அரச சார்பற்ற நிறுவனங்களுடன் “Grant Assistance for Grassroots Human Security Projects (GGP)” திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்குவதற்கான இரண்டு புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் முன்னிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இந்த கைச்சாத்திடும் நிகழ்வு இடம்பெற்ற…

  3. கடவுச்சீட்டு வரிசைக்கு ஏப்ரல் மாதத்தில் முடிவு எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள கடவுச்சீட்டு வரிசைகளை அகற்றுவதற்கு முடிவு செய்துள்ளதாக குடிவரவு - குடியகல்வுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கை குடிமக்களுக்கு நிலவும் கடுமையான கடவுச்சீட்டு பற்றாக்குறைக்கு முந்தைய ஆட்சிகளின் தவறான நிர்வாகமே காரணம் என்றும் கூறியுள்ளார். குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் செவ்வாய்கிழமை(11) டெய்லி மிரருக்கு அளித்த செவ்வியிலேயே இத் தகவலை குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது, கடவுச்சீட்டு வரிசைகள் ஒரு மாதத்திற்குள் அனைத்து வரிசைகளும் அழிக்கப்படும். …

  4. கோப்பாய் காவற்துறை பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம்! adminFebruary 12, 2025 கோப்பாய் காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. கோப்பாய் காவல் நிலைய பொறுப்பதிகாரி வெதகெதர கடந்த மூன்றாண்டுகளுக்கு முதல் பொறுப்பதிகாரியாக பொறுப்பேற்றிருந்தார். தமிழ் மொழி பேச கூடியவராக இருந்தமையால் கோப்பாய் காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வாழும் தமிழ் மக்கள் இவரை இலகுவில் அணுக கூடியவாறு இருந்தமையால், காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் குற்றச்செயல்கள் பெருமளவில் கட்டுப்படுத்தப்படிருந்தன. இந்நிலையில், பொறுப்பதிகாரிக்கு, பதுளைக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தமிழர் பகுதிகளில் தமிழ் மொழி பேசக்கூடிய காவற்துறை அதிகாரிகள் கடமையா…

  5. அருச்சுனா இராமநாதன் மோசடியாக சம்பளம் பெறுகிறாரா ? adminFebruary 6, 2025 ஊழலுக்கு, எதிராக தன்னை முன்னிலைப்படுத்தும் அருச்சுனா இராமநாதன் , அண்ணன் மகனை வேலைக்கு அமர்த்தி , அவரின் சம்பளத்தையும் மோசடியாக தானே பெற்றுக்கொள்வது சரியா என கேள்வி எழுப்பி வருகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தனது செலவு விபரங்களை பட்டியலிடுகையில், தனக்கான சம்பளம் மற்றும் இதர கொடுப்பனவுகள் என்பன தனது செலவீனங்களுக்குப் போதுமானதாக இல்லை இதனால் தனக்கு கீழ் நியமிக்க வழங்கப்பட்டுள்ள நாடாளுமன்ற சலுகையில், ஆய்வு அலுவலராக தனது அண்ணன் மகன் ராமநாதன் அறிவன்பன் என்பவரை நியமித்து, அவருக்கு நாடாளுமன்றத்தினால் கொடுப்பனவாக வழங்கப்படும் 56,000 ரூபா பணத்தை முழுமையாக அவரிடம் இருந்து பெற்றே தனது…

  6. Published By: DIGITAL DESK 2 11 FEB, 2025 | 02:21 PM சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பிரதமர் அலுவலகத்தில் வைத்து மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கையின் வரிக் கொள்கை, வரி வருவாயை திறம்பட நிர்வகித்தல் மற்றும் பொதுத்துறை செயல்திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய பொருளாதார விடயங்கள் குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது. பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான கொள்கை முயற்சிகளை வலியுறுத்தி, அரசாங்கத்தின் எதிர்கால வளர்ச்சி, நிகழ்ச்சி நிரலையும் பிரதமர் இதன்பே…

  7. சுழற்சி முறையில் இனி நாடெங்கும் மின்வெட்டு! நுரைச்சோலை நிலக்கரி மின்னுற்பத்தி நிலையம் செயலிழந்துள்ள நிலையில், அதை மீண்டும் மின்கட்டமைப்பில் இணைக்கும் வரை நாடெங்கும் பகுதியளவில் மின்வெட்டை நடைமுறைப்படுத்த பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. நுரைச்சோலை நிலக்கரி மின்னுற்பத்தி நிலையம் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்படும் வரை, நாடெங்கும் பகுதியளவில் மின்வெட்டு நடைமுறைப்படுத்துவதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் மின்சாரசபை கோரிக்கை விடுத்திருந்தது. அந்தக் கோரிக்கைக்கே இலங்கைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, மாலை 3.30 மணி முதல் இரவு 9.30 மணிக்கிடையில் ஒன்றரை மணித்தியாலங்கள் சுழற்சி முறையில் மின்வெட்டை அமுல்படுத்து…

  8. இந்தியாவில் இலங்கை சார்பாக பதக்கங்களை குவித்த மலையக சாதனை வீரர்! நுவரெலியா பூண்டுலோயா பகுதியை சேர்ந்த துரைசாமி விஜின் இந்தியாவில் 2025 ம் ஆண்டுக்கான அகில இந்திய மெய்வல்லுனர் போட்டியில் இலங்கை சார்பாக கலந்து கொண்டு மூன்று தங்க பதக்கதை வென்றுள்ளார் . இந்த போட்டியானது இந்தியா ராஜஸ்தான் RR கல்லூரி விளையாட்டு மைதானதில் நடைபெற்றது . இவர் சுற்றி எறிதல் ,பருதிவட்டம் எறிதல் மற்றும் 5000 M வேக நடை ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு மூன்று தங்கபதக்கதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. அவர் தெரிவிக்கையில் இந்த மெய் வல்லுனர் போட்டியில் குறிப்பாக இந்தியாவில் இருந்து 12 மாநிலங்களும் பூட்டான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளை சேர்ந்த 2000கும் அதிகமான வீர வீராங்கனைகள் கலந்து …

  9. இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் கிளிநொச்சிக்கு விஜயம்! இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அக்கியோ இசோமட்டா (Akio Isomata) இன்றைய தினம் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது ஜப்பானிய நிதிப் பங்களிப்புடன் முகமாலைப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் கலோரெஸ் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்ட அவர் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பிலும் அதிகாரிகளுடன் கேட்டறிந்துகொண்டார். https://athavannews.com/2025/1420834

  10. 11 FEB, 2025 | 05:22 PM (எம்.மனோசித்ரா) அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் பணிக்குழாமினரை முகாமைத்துவம் செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விதந்துரைகளுக்கமைய 7,456 பதவி வெற்றிடங்களுக்கான நியமனங்களை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செயன்முறையை மீளாய்வு செய்து தேவைகள், முன்னுரிமைகள் மற்றும் நேர அட்டவணையை அடையாளங் கண்டு, அது தொடர்பாக கட்டாயமாக ஆட்சேர்ப்புச் செய்ய வேண்டிய அளவை அடையாளங் கண்டு அதற்கமைய, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் அதிகாரிகள் குழுவொன்றை நியமிப்பதற்காக கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்த…

  11. இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் கவனயீனமாக வாகனம் செலுத்தியதால் ஏற்பட்ட வீதி விபத்துகளில் 203 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். ஜனவரி 1 முதல் பெப்ரவரி 7 வரை இடம்பெற்ற வீதி விபத்துகளில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் நெடுஞ்சாலைகள் பணிப்பாளர் மனோஜ் ரணகல தெரிவித்தார். இதேவேளை, 2024 ஆம் ஆண்டில், கவனயீனமாக வாகனம் செலுத்தியதால் 1,585 வீதி விபத்துகள் இடம்பெற்றுள்ள நிலையில் 1,667 பேர் உயிரிழந்திருந்ததாக அவர் தெரிவித்தார். 2025 ஜனவரி முதலாம் திகதி முதல் பெப்ரவரி 7 ஆம் திகதி வரை 194 கோர வீதி விபத்துக்களும் 514 கடுமையான வீதி விபத்துக்களும் மற்றும் 880 சிறியளவிலான வீதி விபத்துக்களும் இடம்பெற்றுள்ளதாக அவர் தெர…

  12. சி.ஐ.டி.யின் கீழ் புதிய புலனாய்வு பிரிவுகள்! சிக்கலான விசாரணைகளைக் கையாள்வதில் செயல்திறனை மேம்படுத்துவதற்காக இலங்கை காவல்துறை அதன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கீழ் புதிய பிரிவுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மறுசீரமைப்பில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID), சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவு மற்றும் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியவை அடங்கும். மேலும், மேல் மற்றும் தென் மாகாணங்கள் தவிர்ந்த அனைத்து மாகாணங்களிலும் மாகாண குற்றப்பிரிவுகள் அமைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர். குற்றவியல் மற்றும் நிதி விசாரணைகளுக்கான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் (SDIG) நிதிக் குற்றம் மற்றும் சட்டவிரோத சொத்து விசாரணைகளை மேற்பார்வையிடுவார். அதே…

  13. கடந்த 2021 ஆம் ஆண்டு வைத்தியசாலையில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மூன்றரை வயது நிரம்பிய சிறுவனின் சிறுநீரகம் திருடப்பட்ட சம்பவத்திற்கு நியாயம் கோரி இன்றைய தினம்(11) கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்திற்கு முன்பாக மௌனப் போராட்டம் ஒன்று இடம் பெற்றது. சிறுவனின் உறவுகள், மற்றும் அப்பகுதி பெற்றோர்கள் இன்று காலை நீதிமன்ற செயற்பாடுகள் ஆரம்பிப்பதற்கு முன்பாக அளுத்கடை நீதிமன்றத்திற்கு முன்பாக பதாகைகளை ஏந்தி அமைதியாக முறையில் கவனயீர்ப்பு பேராட்டத்தை முன்னெடுத்தனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொழும்பு பிரதேசத்தினை சேர்ந்த சிறுவனுக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு ஏற்பட்ட சிறுநீரக நோய் காரணமாக வைத்தியரிடம் அவரை பெற்றோர்கள் கொண்…

  14. 11 FEB, 2025 | 05:21 PM இலங்கையர்களிடையே பாரம்பரிய ஜப்பானிய காகித மடிப்புக் கலையை ஊக்குவிப்பதற்காக இலங்கையில் உள்ள ஜப்பான் தூதரகம் ஓரிகமி பட்டறையை கடந்த 7ஆம் திகதி தூதரகத்தில் நடத்தியது. ஜப்பானிய ஓரிகமி நிபுணர் ஹிகாஷி கட்சுகாவா இந்தப் பட்டறையின் தலைமை பயிற்றுவிப்பாளராக இருந்தார். இந்தப் பட்டறையில் இலங்கை ஓரிகமி கோப்புறைகள் சங்கத்தின் (OFASL) நிறுவனர் மற்றும் தலைவர் ரெசா தில்ஷார்ட் கரீம் (Reza Dilshard Kareem) உட்பட பல பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் சிக்கலான ஓரிகமி நுட்பங்களைக் கற்றுக்கொள்வதற்கும் இந்த பாரம்பரிய ஜப்பானிய கலை வடிவத்தின் அழகை ஆராய்வதற்கும் வாய்ப்பைப் பெற்றனர். இந்த முயற்சி ஜப்ப…

  15. Published By: VISHNU 10 FEB, 2025 | 05:33 PM தையிட்டி விகாரை விடயத்தில் மக்களின் விருப்பத்துக்கு அமைவாக எமது தீர்மானம் இருக்கும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் மீண்டும் இனவாதம், மதவாதம் தலைதூக்குவதற்கு இடமளிக்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார். யாழ்.மாவட்ட செயலகத்தில் திங்கட்கிழமை (9) சீன அரசாங்கத்தின் உதவிப்பொருட்களை கையளிக்கும் நிகழ்வில் பங்கெடுத்திருந்த அவர் அதன்பின்னர் தையிட்டி விகாரை சம்பந்தமாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில், முதலில் யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களின் கருத்து என்னவென்பதை நாம் பார்க்க வேண்டும். தையிட்டிய…

  16. யோஷித, டெய்சி ஆச்சி மீது பணச்சலவை வழக்குப் பதிவு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் 'டெய்சி ஆச்சி' என்றும் அழைக்கப்படும் டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோரை கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் சந்தேக நபர்களாக பொலிஸார் பெயரிட்டு, பணச்சலவை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். யோஷித ராஜபக்ஷவின் வங்கிக் கணக்கில் 59 மில்லியன் ரூபாய்க்கு மேல் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2016 ஆம் ஆண்டு அவர் மீதான விசாரணை தொடங்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க தெரிவித்தார். பணம் எவ்வாறு வைப்பிலிடப்பட்டது என்பதற்கான நியாயமான விளக்கத்தை யோஷித வழங்கத் தவறிவிட்டார் என்று அவர் கூறினார். மேலும் விசாரணைகளில், கேள்விக்குரிய …

  17. நெல் களஞ்சியசாலைகள் இதுவரை திறக்கப்படவில்லை! -விவசாயிகள் குற்றச் சாட்டு. அரசாங்கம் நெல்லுக்கான உத்தரவாத விலையை கடந்த வாரம் அறிவித்திருந்த போதும் நெல் களஞ்சியசாலைகள் இதுவரை திறக்கப்படவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். நெல்லுக்கான உத்தரவாத விலையாக, நாட்டு நெல் கிலோ ஒன்று 120 ரூபாய்க்கும், சம்பா நெல் கிலோ ஒன்று 125 ரூபாய்க்கும், கீரி சம்பா நெல் கிலோ ஒன்று 132 ரூபாய்க் கும் கொள்முதல் செய்யப்படும் என அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அரசாங்கம் நிர்ணயித்த உத்தரவாத விலையில் நெல்லை கொள்வனவு செய்வதற்காக கடந்த வியாழக்கிழமை முதல் களஞ்சியசாலைகள் திறக்கப்படும் என நெல் சந்தைப்படுத்தல் சபை அறிவித்திருந்தது. எனினும், பல மாவட்டங்களில் நெல் களஞ்சியசாலை…

  18. 10 Feb, 2025 | 07:19 PM தமிழ்த்தேசியக்கட்சிகள் இணைந்து பேசி தமது பொதுவான குறிக்கோள் எதுவென்று தீர்மானிக்கவேண்டும். அதனடிப்படையில் சகல தமிழ்த்தேசியக்கட்சிகளையும் உள்ளடக்கி புதியதொரு கூட்டமைப்பை உருவாக்கவேண்டும். அக்கூட்டமைப்பில் உள்ளடங்கும் பிரதிநிதிகள் தமிழர்களுக்கான ஏற்றுக்கொள்ளத்தக்க அரசியல் தீர்வு குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். கேள்வி - பதில் பகுதியில் தமிழ்த்தேசியக் கட்சிகளின் தற்போதைய நிலை மிகப்பரிதாபகரமாக இருக்கிறது எனவும், தமிழ்த்தேசியம் மீண்டும் வலுப்பெற என்ன செய்யவேண்டும் எனவும் எழுப்பட்டிருக…

  19. நாட்டுக்கு வருகை தரும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மொத்தமாக 3,32,439 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. மேலும் பெப்ரவரி மாதத்தின் முதல் 9 நாட்களில் மொத்தம் 79,678 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர் எனவும், பெப்ரவரி மாதத்தின் முதல் 9 நாட்களில் இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1420782

  20. வடக்கு மாகாண ஆளுநருக்கும் இலங்கைக்கான சீனத்தூதரகத்தின் பொறுப்பதிகாரிக்கும் இடையில் விசேட சந்திப்பு! வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகனுக்கும் இலங்கைக்கான சீனத்தூதரகத்தின் பொறுப்பதிகாரி ஜு யான்வேய் தலைமையிலான குழுவினருக்கும் இடையில் நேற்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, வடக்கிலுள்ள மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டது. அந்தவகையில், வடமாகாண மீனவர்கள் தன்னை சந்தித்துக் கலந்துரையாடியதாகவும் அவர்கள் பல்வேறு தேவைகளை நிறைவேற்றித்தருமாறு தம்மிடம் கோரிக்கை முன்வைத்தாகவும் சீனத் தூதரகத்தின் பொறுப்பதிகாரி ஆளுநரிடம் தெரிவித்தார். தொடர்ந்து, வடக்கு மாகாணத்தில் விவசாயம், சுற்றுலாத்துறை அபிவிருத்தி…

  21. போதைப்பொருள் பாவனை; 17 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம்! போதைப்பொருள் பாவனை குற்றச்சாட்டின் பேரில் கடந்த நான்கு மாதங்களில் மொத்தமாக 17 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இன்று (11) தெரிவித்தார். போதைப்பொருள் பாவிக்கும் பொலிஸ் அதிகாரிகளின் பட்டியல் புலனாய்வுப் பிரிவுகள் மற்றும் விசேட பொலிஸ் பிரிவினூடாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட அதிகாரிகள் கண்காணிக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். அவ்வாறான உத்தியோகத்தர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, போதைப்பொருளை பயன்…

  22. ஏப்ரல் மாதத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் February 11, 2025 09:31 am கொழும்பில் நேற்று (10) இடம்பெற்ற Committee on Parliamentary Business பாராளுமன்ற அலுவல்கள் குழு முடிவுகளின் அடிப்படையில் வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி பல காலமாக நடைபெறாமல் உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் நடைபெறுவதற்கான சாத்திய கூறுகள் உறுதியாகி உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் வரும் பெப்ரவரி 17 ஆம் திகதிக்கு முன்னர் பழைய விண்ணப்பங்களை விடுத்து புதிய விண்ணப்பங்களை அமுல்படுத்தும் சட்டமூலம் உயர் நீதிமன்றத்தில் கோரப்பட்டிருந்தது அவ் தீர்ப்பின் வாசிப்புகளின் அடிப்படையில் இதற்கான ஆயத்தங்கள் இவ் திகதிக்கு முன்னர் மேற்கொள்ளப்படும் எனவும் …

  23. மாவையின் இறுதிச்சடங்கில் அநாமதேய பதாகையின் பின்னணியில் பல சக்திகள் ; தமிழரசுக்கட்சியை சிதைப்பதே நோக்கம் - சி.வி.சே.சிவஞானம் Published By: Vishnu 11 Feb, 2025 | 02:28 AM மறைந்த தலைவர் மாவை.சோ.சேனதிராஜாவின் இறுதிச்சடங்கு நடைபெற்ற மயானத்தில் கட்சியின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட மத்திய குழு உறுப்பினர்கள் 18பேருக்கு எதிராக அநாமதேய பதாகையை காட்சிப்படுத்தியத்தின் பின்னணியில் உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் பல காணப்படுகின்றன என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.சே.சிவஞானம் தெரிவித்துள்ளார். அத்துடன், எமது கட்சியை சிதைத்து ஓரங்கட்டுவதே அந்த சக்திகளின் பிரதான நோ…

    • 3 replies
    • 376 views
  24. 10 FEB, 2025 | 05:33 PM (எம்.ஆர்.எம்.வசீம்) ரணில், சஜித் இரண்டு பேரும் விரைவாக ஒரு மேசைக்கு வரவேண்டிய காலம் வந்துள்ளது. இல்லாவிட்டால் மக்கள் அவர்களின் புதைகுழிக்கும் சாபமிடும் நிலை ஏற்படும். அதிகாரம் மற்றும் வரப்பிரசாதங்களை பார்க்காமல் மக்களின் நோக்கத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெலிபன தம்மாராம தேரர் தெரிவித்தார். நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து செயற்படவேண்டியதன் தேவைப்பாடு தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து செயற்படுவது …

  25. திஸ்ஸ ரஜமகா விகாரை விவகாரம்: தமிழ் அரசியல்வாதிகளுக்கு உதய கம்மன்பில எச்சரிக்கை! ”யாழ். தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ ராஜமகா விகாரை மீது தமிழர்கள் எவரும் கைவைக்க இடமளிக்கமாட்டோம்” என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். அத்துடன் தையிட்டி திஸ்ஸ ராஜமகா விகாரையை இடிக்க வேண்டும் என்று கூச்சலிடும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு இந்த விடயங்களைத் தெரிவித்துக்கொள்வதாகவும் உதய கம்மன்பில எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ ராஜமகா விகாரை சிங்கள – பௌத்தர்களுக்குச் சொந்தமானது என்றும் அது அமைந்துள்ள காணியும் தற்போது விகாரை நிர்வாகத்துக்கே உரித்தானது என்றும் தெரிவித்த அவர் இந்த விவகாரம் தொடர்பில் கதைப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.