Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரசமைப்பு உருவாக்கத்தில் ’ஏகாதிபத்திய நாடுகளின் விருப்பு இல்லை’ எந்தவோர் ஏகாதிபத்திய நாடுகளின் விருப்பத்துக்கு அமையவும், அரசமைப்பைக் கொண்டுவரத் தீர்மானிக்கவில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் மனோ கணேசன், இது இலங்கைப் பிரச்சினை எனவும் குறிப்பிட்டார். சட்டக் கல்விகளுக்கான கல்லூரியின் ஏற்பாட்டில், கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில், "மெய்மையை நோக்கிய தேசிய கலந்துரையாடல்" என்ற தலைப்பில் நேற்று (21) இடம்பெற்ற கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன், "எமது நாட்டுப் பிரச்சினைகளை, ஜெனீவாவிலோ, அமெரிக்காவிலோ கலந்துரையாடுவதற்க…

  2. சம்­பந்­தனும் ரணிலுமே நாட்­டை ஆள்­கின்­றனர் .! ஜனா­தி­ப­தியை விடவும் எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோ­ருக்கே அதி­கா­ரங்கள் உள்­ளது. நாட்­டினை பி­ள­வு­ப­டுத்தும் அர­சியல் அமைப்­பினை உரு­வாக்­கு­வதில் இவர்­களே முன்­னின்று செயற்­பட்­டு ­வ­ரு­வ­தாக ரியல் அட்­மிரல் சரத் வீர­சே­கர தெரி­வித்தார். இவர்­களின் சகல முயற்­சி­க­ளையும் தோற்­க­டித்து நாட்டை காப்­பாற்ற மக்­களை ஒன்­றி­ணைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார். தேசிய மக்கள் சபையின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கொழும்பில் இடம்­பெற்ற நிலையில் அதில் கலந்­து­கொண்டு கருத்துத் தெரி­விக்கும் போதே அவர் இதனை குறிப்­பிட்டார். இது குறித்து அவர் மேலும்…

  3. பிரதமரின் இந்திய விஜயத்துக்குப் பின்னர் அதிரடி மாற்றம்? அழகன் கனகராஜ் சட்டமா அதிபர் திணைக்களத்தின் உயர்பதவி நிலைகளில், முழுமையான மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்கு, அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அரசாங்கத் தரப்பினரும் ஆளும் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ச்சியாக விடுத்த கோரிக்கைகளுக்கு அமைவாகவே அரசாங்கம், இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அறியமுடிகின்றது. அந்தத் தரப்பினர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை அடிக்கொருதடவை சந்தித்து, தெளிவுபடுத்தியதன் பயனாகவே, இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்…

  4. கடற்­படை தள­ப­திக்கு ஆறு மாத பதவி நீடிப்பு.! கடற்­படைத் தள­பதி வைஸ் அட்­மிரால் சிறி­மெவன் ரண­சிங்­க­வுக்கு ஆறு மாத பதவி நீடிப்பு ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சே­ன­வினால் வழங்­கப்­பட்­டுள்­ளது. கடந்த 19 ஆம் திகதி தனது 55 வயதை பூர்த்தி செய்த நிலை­யி­லேயே மேலும் ஆறு மாதங்­க­ளுக்கு கடற்­படை தள­ப­தி­யாக பணி­யாற்ற ஜனா­தி­ப­தி­யினால் இந்த பதவி நீடிப்பு வழங்கப்பட்­டுள்­ள­தாக ஜனா­தி­பதி செய­லக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. 22 ஆவது கடற்­படைத் தள­ப­தி­யான சிறி­மெவன் ரண­சிங்க, முன்னாள் தள­பதி சின்­னை­யாவின் பத­வி ­கா­லத்தின் பி ன்னர் ஜன­ாதி­ப­தி­யினால் கடந்த ஒக்­டோபர் மாதம் 26 ஆம் திக­தியே நிய­மிக்­கப்பட்­டி­ருந்­த­மையும் இங்கு சுட்­டிக்­காட்­டத்…

  5. பத்தரமுல்லை பகுதி சொகுசு வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற வைபவம் ஒன்று இடம்பெற்ற இடத்துக்கு அருகில் உள்ள சொகுசு வீடொன்றினை சுற்றி வளைத்து ஆயுதங்கள் பலவற்றை பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் அவ்வீட்டில் இருந்த பத்தரமுல்ல - தயலங்கம வடக்கைச் சேர்ந்த ஒரே குடும்பத்தின் சகோதரர்களான 57,49 வயதுகளை உடைய இருவரை கைது செய்த விஷேட அதிரடிப் படையினர் அவர்களை மேலதிக விசாரணைகளுக்காக தலங்கம பொலிஸாரிடம் கையளித்துள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் கொஸ்வத்தை, காட்சு பல்கலைக்கழகத்தின் வைத்திய இரசாயன கூட அலுவலர்களின் வருடாந்த ஒன்றுகூடலுக்கு பிரதம விருந்…

  6. மூகாம்பிகை அம்மனை வழிபட்ட பிரதமர் ரணில் : நாளை மோடியுடன் சந்திப்பு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, இந்­தி­யாவின் கர்­நா­டக மாநிலம் உடுப்­பியில் உள்ள கொல்லூர் மூகாம்­பிகை அம்மன் ஆல­யத்தில் நேற்று வழி­பா­டு­களை மேற்­கொண்டார். நேற்று முற்­பகல் 11.15 மணி­ய­ளவில் கொல்லூர் அருகே உள்ள அர­சிரூர் உலங்­கு­வா­னூர்தி இறங்கு தளத்தில் வந்­தி­றங்­கிய பிர­தமர், ரணில் விக்­கி­ர­ம­சிங்க அங்­குள்ள விடுதி ஒன்றில் தயா­ராகிக் கொண்டு மூகாம்­பிகை அம்மன் ஆல­யத்­துக்குச் சென்றார். நேற்று முற்­பகல் 11.50 மணி­ய­ளவில் அங்கு பிர­த­ம­ருக்கு பூரண கும்ப மரி­யா­தை­யுடன் வர­வேற்பு அளிக்­கப்­பட்­டது.. முகாம்­பிகை அம்­மனை தரி­சித்த பின்னர், அவர்…

  7. 3 ஆவது முறையாக நிறுத்தப்பட்ட ஞானவைரவா் ஆலய காணி அளவீடு கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் தொண்டமான்நகா் கிராமத்தில் உதிரவேங்கை வைரவா் ஆலயத்திற்குச் சொந்தமான ஞானவைரவா் விளையாட்டுக் கழகம் பயன்படுத்தும் காணியினை தனியார் ஒருவருக்கு வழங்கும் நோக்குடன் நில அளவை மேற்கொள்ளும் முயற்சி மூன்றாவது தடவையாகவும் பொது மக்களின் எதிர்ப்பினால் நிறுத்தப்பட்டுள்ளது. நேற்றுக் காலை குறித்த பகுதிக்கு கரைச்சி பிரதேச செயலக காணி உத்தியோகத்தர், நில அளவைத்திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோா் நில அளவை செய்வதற்கு சென்றபோது, ஒன்று திண்ட பொது மக்கள் நில அளவை செய்ய விடாது தடுத்து நிறுத்தியதோடு, தங்களின் ஆட்சேபனையும் எழுத்தும் மூலம் அதிகாரிகளிடம் கை…

  8. (Dr. Hasan Basree Teaching Hospital Anuradhapura) இலங்கை நாடு பல்லின,பல்மத மக்கள் வாழும் நாடு. பெரும்பான்மைச் சிங்களவர், இலங்கை + இந்திய தமிழர்கள், முஸ்லிம்கள் பறங்கியர் என பலவின மக்கள் வாழும் தேசம். மொழிரீதியாக பார்க்கையில் இலங்கையில் இரு மொழிகளே பிரதானம். சிங்களம் + தமிழ். வடகிழக்கு மலையக தமிழர்களும் சரி, இலங்கையில் எப்பாகத்தில் வாழும் பெரும்பாலான முஸ்லிம்களும் சரி தமிழையே தாய்மொழியாக கொண்டுள்ளனர். ஒரு இனமானது மொழியை அடிப்படையாகக் கொண்ட பூர்வீக கலாசார பண்புகளைக் கொண்ட படியினால் இலங்கை வாழ் முஸ்லிம்களும் கூட தமிழர்களே. தமிழினத்தைச் சேர்ந்தவர்களே என்ற ஒரு வாதம் நிலவி வருகிறது தமிழ் அரசியற் தலைவர்கள் மத்தியில். வடகிழக்கில் பெரும்பான்மையாக வாழும் நாட்டின் இரு சிறுபான்மை …

  9. வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியேயும், உள்ளேயும் வாழ்கின்ற முஸ்லிம்கள் பொறுமையாகவும், நிதானமாகவும் நடந்து கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் இதுவாகும் என்று தேசிய காங்கிரஸின் வட மாகாண அமைப்பாளரும், மகளிர் பொறுப்பாளருமாகிய ஜான்சிராணி சலீம் வெளியிட்டு உள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்து உள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியேயும், உள்ளேயும் முஸ்லிம்கள் மீது வன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டு இருப்பது தொடர்பாக இவர் விடுத்து உள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார். இவரின் அறிக்கை வருமாறு:- காலி ஹிந்தோட்டையில் முஸ்லிம்கள் வாழ்கின்ற பிரதேசங்களுக்குள் கடந்த சனிக்கிழமை இரவு காடையர்கள் புகுந்து வீடுகளுக்கு தீ வைத்ததுடன் வாகனங்களுக்கும் தீ மூட்டி சென்று உள்ளனர். இதனால் ஏற்பட…

    • 5 replies
    • 788 views
  10. ஆவா குழுவை தொடர்ந்து தாரா குழுவினரும் கைது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில் தாரா குழுவை சேர்ந்த இருவரை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் மற்றும் கோப்பாய் காவல்துறையினர் இணைந்து கைது செய்துள்ளனர். வடமராட்சி அச்சுவேலி பத்தமேனி பகுதியை சேர்ந்த 21 மற்றும் 22 வயதுடையவர்களே கைது செய்யபப்ட்டு கோப்பாய் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். யாழ்.இராச பாதை வீதியில் சோதனை இன்று திங்கட்கிழமை, காவல்துறை விசேட அதிரடிப்படையினர் மற்றும் கோப்பாய் காவல்துறையினர் இணைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அதன் போது அந்த வீதி வழியாக சந்தேகத்திற்கு …

  11. காலி – ஜின்தோட்டையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு வன்முறைகளின் போது, பல வீடுகளும், வர்த்தக நிலையங்களும், வாகனங்களும் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளன. வெளியிடத்தில் இருந்து வந்த சிங்களக் காடையர்களே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். “வெள்ளிக்கிழமை இரவு வந்த வெளியிடத்தை சேர்ந்த குழுவினரே முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டதாக அங்கு சென்று திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தெரிவித்துள்ளார். “இந்த வன்முறைகளின் போது அந்த பகுதியிலுள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளும் வர்த்தக நிலையங்களும் தாக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியிலுள்ள பௌத்த விகாரை ஒன்றுக்கு அருகிலேயே இந்த வன்முறைகளை மேற்கொண்ட குழுவினர…

  12. குச்சவெளி மாவீரர் துயிலுமில்ல சிரமதானப் பணிகளுக்கு பொலிஸார் முட்டுக்கட்டை! திருகோணமலை, குச்சவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டிருந்த சிரமதானப் பணிகள் குச்சவெளிப் பொலிஸாரினால் இடை நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. தேசிய மாவீரர் நாள் நினைவேந்தலினை முன்னிட்டு, குச்சவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுமக்கள், முன்னாள் போராளிகள், மற்றும் மாவீரர் குடும்பங்கள் ஒன்றிணைந்து இன்றைய தினம் சிரமதானப்பணியினை முன்னெடுத்திருந்தனர். இதன் போது அங்கு சென்ற குச்சவெளிப் பொலிஸார் அனைவரையும் திருப்பி அனுப்பியுள்ளனர். இதுகுறித்து, புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியத்தின் தலைவர் க.இன…

  13. “பயங்கரவாதத்திற்கு சாயலான முஸ்லிம் அடிப்படைவாதம் நாட்டில் தலைவிரித்தாடுகின்றது” பயங்கரவாதத்திற்கு சாயலான முஸ்லிம் அடிப்படைவாதம் நாட்டில் தற்போது தலைவிரித்தாடுவதாக பொதுபலசேனா எச்சரித்துள்ளது. இலங்கையில், முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதி அதியுயர் பாதுகாப்பு வலயங்களா எனவும் அவ் அமைப்பு கேள்வியெழுப்பியுள்ளது. இராஜகிரிய நாவல வீதியில் அமைந்துள்ள பொதுபலசேனாவின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்தெரிவிக்கும் பேதே பொதுபலசேன அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் பய…

    • 3 replies
    • 307 views
  14. Lamborghini Huracán Coupé LP 610-4 ரக மோட்டார் வாகன கார் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மோட்டார் வாகனம் துறைமுகத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் வாகனத்தை பெவரியன் மோட்டார் உரிமையாளர் ஜே.ஹமீட் என்ற பெண் ஒருவரே கொள்வனவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த மோட்டார் வாகனம் துறைமுகத்தில் உள்ள நிலையில் புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளது. இலங்கையில் பெண்ணொருவர் அதிக பெறுமதி கொண்ட காரை கொள்வனவு செய்தமை தொடர்பில் பல்வேறு மட்டங்கள் அதிகம் பேசப்படுகிறது http://puttalamtoday.com/

    • 2 replies
    • 730 views
  15. o ஆபத்­தான இந்­திய மருத்­து­வக் கழிவு வடக்­குக் கட­லில் கொட்­டப்­ப­டு­கின்­றதா? காலா­வ­தி­யான மருந்துப் பொருள்­கள், ஆயி­ரத்­துக்­கும் மேலான கண்­ணா­டிப் போத்­தல்­கள், பொலித்­தீன்­கள், ஊசி­வ­கை­கள் போன்ற மருத்­து­வக் கழி­வு­கள் கடந்த மூன்று நாள்­க­ளாக வட­ம­ராட்சி தொண்­ட­மா­னாறு கடற்­ப­ரப்­பில் கரை­யொ­துங்குகின்­றன. இவை ஆபத்­தான மருத்­து­வக் கழி­வு­களா என்­கிற சந்­தே­கம் மக்­கள் மத்­தி­யில் எழுந்­துள்­ளது. அந்­தப் பொருள்­கள் இந்­தி­யா­வி­லி­ருந்தே இங்கு வரு­கின்­றன என சுகா­தா­ரப் பிரி­வி­னர் சந்­தே­கிக்­கின்­ற­னர். பொருள்­க­ளில் உள…

    • 12 replies
    • 2.2k views
  16. முன்­னு­தா­ர­ண­மா­க செயற்­பட வேண்­டும் வடக்கு முத­ல­மைச்­சர் அடுத்த கட்­டத் தலை­மையை உரு­வாக்­கு­வ­தற்­குத் தமி­ழர்­கள் தம்­மைத் தயார்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டு­மென வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி. விக்­னேஸ்­வ­ரன் வேண்­டு­கோள் விடுத்­துள்ளார். அவர் இணைத்­த­லை­வர் பத­வியை வகிக்­கும் தமிழ் மக்­கள் பேர­வை­யால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த கூட்­டத்­தில் வைத்தே அவர் இந்த வேண்­டு­கோளை விடுத்­துள்­ளார். இன்­றைய தலை­வர்­கள் தமிழ் நாட்­டின் முன்­னாள் முத­ல­மைச்­ச­ரான மறைந்த காம­ரா­சர் பாணி­யில் அரசியலில் பின்­னால் ஒதுங்கி நின்று தமி­ழ­ரின்­அ­ர­சி­யல் இயந்­தி­ரத்தை இயக்­க­வேண்­டு­மெ­ன­வும் அவர் மேலும் …

  17. உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஈ.பி.டி.பி தனித்தே எதிர்கொள்ளும் – டக்ளஸ் நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி தனித்தே போட்டியிடுவதற்கு தயாராகி வருகின்ற நிலையில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் பேச்சுவார்த்தைகளுக்கு அமைவாக பல இடங்களில் தனித்தும் சில இடங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினருடன் நட்புறவைப் பேணும் முகமாக இணைந்தும் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் குறித்தும் பிராந்திய கூட்டு தொடர்பாகவும் பேச்சுவார்த்தைகளை ஈ.பி.டி.பி முன்னெடுத்து வருகின்றது என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். நேற்றையதினம்(21.11.2017) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந…

  18. ஜனா­தி­பதி, பிர­தமர், நீதித்­துறை அதி­கா­ரிகள் பங்­கேற்கும் கூட்­டத்தை நடத்­துங்கள் அர­சியல் கைதிகள் பிரச்­சினை தொடர்பில் எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் கோரிக்கை (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) அர­சியல் கைதி­களின் பிரச்­ச­ினை­க­ளுக்கு தீர்­வினை எட்­டு­வது தொடர்­பாக ஜனா­தி ­பதி, பிர­தமர், நீதித்­துறை அதி­கா­ரிகள் பங்­கேற்கும் விசேட கூட்­ட­மொன்­றினை உட­ ன­டி­யாக நடத்­த­வேண்­டு­மென எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் சபையில் நீதி அமைச்சர் தலதா அத்­துக்­கோ­ர­ளவி­டத்தில் கோரிக்கை விடுத்தார். அர­சியல் கைதிகள் விடு­த­லையால் நாடு பிள­வ­டை­யப்­போ­வ­தாக குழு­வொன்று அச்­சு­றுத்­துவ­தற்கு அர…

  19. ஐயா விக்கி, முதலில் உங்களை வாழ்த்துகிறேன்.உங்கள் மக்களுக்காக நீங்கள் பேசுகிறீர்கள்.அந்த தைரியமும் ஆளுமையும்,ஆர்வமும் உங்களிடம் இருக்கின்றது. எங்கள் மக்களுக்குக்காகப் பேசுவதற்கு எங்களிடம் யாருமில்லை.நாங்கள் தெரிவு செய்த அரசியல்வாதிகளைத்தான் நீங்கள் கைக்குள் போட்டுக்கொண்டீர்களே. ஆனாலும் நன்றியுள்ளவர்கள் எங்கள் அரசியல்வாதிகள். உப்பிட்ட உங்களை உள்ளளவும் நினைக்கிறார்கள். சொஞ்சோற்றுக்கடன் தீர்க்க துரியோதனனோடு இருக்கிறார்கள் எங்கள் கர்ணர்கள்.அதுதான் பாண்டவர் சமுகம் நாங்கள் பேச்சிழந்து நிற்கிறோம். ‘’மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இங்கு வந்து குடியேறிய முஸ்லீம்களே வட கிழக்கு இணைப்பிற்கு எதிரானவர்கள்’’ என்றொரு கருத்தைக் கூறியிருக்கிறீர்கள்.ஐயா வரலாறு பேசுகிறீர்களா?நாமும் வரல…

  20. கோட்டாபய விரைவில் கைது செய்யப்படுவார்...மஹிந்த ராஜபக்ஸ முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபயவை விரைவில் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பு சுகந்ததாச விளையாட்டரங்கில் இன்று(21) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசுக்கு எதிராக செயற்படும் அரசியல்வாதிகள் உள்ளிட்டவர்களை சிறையில் அடைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். "தற்போதைய அரசு பலிவாங்கும் நடவடிக்கையை எவ்வாறு முன்னெடுக்கின்றது என்றால் அவர்களின் முதலாவது இலக்கு தான் என்றும்,அதற்கு பிறகு குடும்ப உறுப்பினர்கள் இலக்கு வைக…

  21. சிறுபான்மை இனங்கள் பிரச்சினைகளை தட்டிக் கேட்க வேண்டும் தமிழ் மற்­றும் முஸ்­லிம் மக்­க­ளா­கிய நாங்­கள் தமிழ் பேசு­கின்­ற­வர்­க­ளாக அடக்கி ஒடுக்­கப்­பட்ட சிறு­பான்மை இனங்­கள் என்ற அடிப்­ப­டை­யில் எங்­க­ளுக்­கான பொது­வான பிரச்­சி­னை­க­ளைத் தட்­டிக்­கேட்­கின்ற தைரி­யத்­து­டன் முன் செல்­ல­வேண்­டும். இவ்­வாறு தெரி­வித்­தார் வவு­னியா மாவட்ட இலங்­கைத் தமி­ழ­ர­சு­கட்­சி­யின் தலை­வ­ரும் வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­ன­ரு­மான மருத்­து­வர் ப.சத்­தி­ய­லிங்­கம். வவு­னியா மாவட்ட முஸ்­லிம்­க­ளுக்­கும் இடையே சிறப்புச் சந்­திப்பு ஒன்று இடம்­பெற்­றது. இந்­தச் சந்­திப்­பில் கலந்­து­ கொண்டு கருத்­துத் த…

  22. புதிய தேசி­யக் கொடி பற்றி கலந்­து­ரை­யாட நல்ல வாய்ப்பு! வட­மா­கா­ணக் கல்வி அமைச்­சர் இலங்­கை­யின் தேசி­யக் கொடியை ஏற்ற மறுத்­தார் என்ற விட­யம் இப்­போது பூதா­கா­ர­மாக்­கப்­பட்டு வரு­கின்­றது. தமி­ழர்­க­ளின் இன­வா­தம் என்று இதனை வர்­ணித்­தி­ருக்­கி­றது ஜே.வி.பி. அதே­போன்று மகிந்த அணி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் இது ஒரு மிகப் பெரி­ய­வி­ட­யம் என்­ப­தா­கத் தூக்­கிப் பிடிக்­கத் தொடங்­கி­யி­ருக்­கி­றார்­கள். “வடக்­கி­லும் இன­வாத மனோ­நிலை உரு­வா­கி­யுள்­ளது. வடக்கு மாகா­ணக் கல்வி அமைச்­சர் தேசி­யக் கொடியை ஏற்ற மறுத்­தி­ருக்­கின்­றார். இது தொடர்­பில் தமிழ்த் தேசி…

  23. யாழில்.வாள் குழுவை கட்டுப்படுத்த STF களத்தில் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாள் வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கும், வாள் வெட்டுச் சம்பவங்களை கட்டுப்படுத்தவும் விசேட அதிரடிப் படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், ரோந்து நடவடிக்கை தொடர்பாக பொது மக்கள்அச்சமடைய வேண்டாமென்றும் விசேட காவல்துறை அதிரடிப் படையின் உயர் அதிகாரி இன்று தெரிவித்தார். இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில், அண்மைக்காலமாக யாழ் மாவட்டத்தில் வாள் வெட்டுச் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. அவற்றினை க்கு கட்டுப்படுத்தும் நோக்கில் விசேட அதிரடிப் படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதுடன், வாள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் சந்தேகத்திற…

    • 5 replies
    • 1.1k views
  24. மாகாண முதல்வரை சிறைப்பிடித்த வேலையில்லாப் பட்டதாரிகள் வேலையில்லாப் பட்டதாரிகள் மத்திய மாகாண முதல்வரை சிறைப் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வேலையில்லாப் பட்டதாரிகள் குழுவொன்று தமக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தரக் கோரி மத்திய மாகாணசபை வளாகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய மாகாண முதல்வர் சரத் ஏக்கநாயக்க மற்றும் சில மாகாண சபை உறுப்பினர்கள் மாகாண சபையினுள் இருந்தனர். திடீரென பட்டதாரிகள் மாகாண சபையின் அனைத்து வாயிற்கதவுகளையும் ஆக்கிரமித்துக்கொண்டு, கதவுகளைத் திறக்க முடியாதபடி முடக்கினர். இதனால், மாகாண முதல்வர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் வெளியேற வழியின்றித் தடுமாறினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் உ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.