Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 29 Jan, 2025 | 08:26 PM (எம்.மனோசித்ரா) நாட்டில் எந்தவொரு பிரஜைக்கும் தற்பாதுகாப்பிற்காக ஒரு துப்பாக்கியை மாத்திரம் வழங்குவதற்கு கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு புலனாய்வு அறிக்கை அவசியமாகும். அந்த வகையில் யோஷித ராஜபக்ஷவிடமிருந்து 4 துப்பாக்கிகள் ஏற்கனவே மீளப் பெறப்பட்டுள்ளதோடு, எஞ்சியுள்ள இரு துப்பாக்கிளையும் பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சில் புதன்கிழமை (29) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட து…

  2. 29 JAN, 2025 | 04:06 PM (நமது நிருபர்) கடந்த காலங்களில் அரசியல் தரப்பினால் வழங்கப்பட்ட தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதில் முரண்பாடுகள் எழுந்தன, எனினும் அரசியல் தரப்பிடம் எவ்வித மறைமுக நோக்கங்களும் இல்லை என்பதை நாம் தற்போது நிரூபித்துள்ளோம். அரச பொறிமுறை எங்களுக்கு ஒத்துழைக்கும் என்று எதிர்பார்க்கிறோம், ஆனால் அரசு பொறிமுறையின் மனப்பாங்கு மாற்றமடைய வேண்டும். மக்களின் மனப்பான்மைகளை மாற்றாமல் ஒரு நாடென்ற வகையில் முன்னேற முடியாது என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நேற்று செவ்வாய்க்கிழமை (28) பிற்பகல் நடைபெற்ற 2025 பொருளாதார உச்சி மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இத…

  3. யாழ்ப்பாணத்தில் வேலையில்லா பட்டதாரிகள் வித்தியாசமான முறையில் போராட்டம்! வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினையையும் கோரிக்கையையும் மக்கள்மயப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் ஒன்று இன்று யாழ். நகர்ப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாணத்திலுள்ள வேலையில்லாப்பட்டதாரிகள் ஒன்றிணைந்து மேற்கொண்ட இந்த விழிப்புணர்வு செயற்திட்டத்தில் துண்டுப்பிரசுரம் வழங்கல், மக்களின் கருத்துக்களை உள்வாங்கல், போன்ற நிகழ்வுகளை வேலையில்லாபட்டதாரிகளின் கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டது. ஆரம்ப நிகழ்வு உலகத்தமிழாராட்சி மாநாட்டு படுகொலை நினைவு தூபி முன்றலில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி அதனைத்தொடர்ந்து யாழ். நகர்ப்பகுதிக்குள் பேரணி இடம்ப…

  4. Published By: Vishnu 29 Jan, 2025 | 09:08 PM கிளிநொச்சியில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 9 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 15 பேர் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் கிளிநொச்சி, கண்ணகிபுரம் பகுதியிலுள்ள வீதியில் இருந்த குளவிக்கூடு கலைந்தமையால், வீதியால் சென்ற பாடசாலை மாணவர்கள் 9 பேரும், வீதியால் பயணித்தவர்கள் மேலும் 6 பேரும் கிளிநொச்சி தர்மபுரம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்ணகிநகர் அம்பிகை வித்தியாலயத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. கிளிநொச்சியில் குளவிக்கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் உட்பட 15 பே…

  5. பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார். இலங்கையில் ரக்பி அபிவிருத்திக்காக இந்திய கிரிஷ் ரியல் எஸ்டேட் நிறுவனத்தால் வழங்கப்பட்ட 70 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் இந்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. R Tamilmirror Online || அடுத்த கைது நாமல்?

  6. யாழ். செல்கிறார் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் வெள்ளிக்கிழமை (31) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்போது யாழ். மாவட்டச் செயலகத்தில் விசேட மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். அத்துடன், தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அங்கத்தவர்களுடனான சந்திப்பொன்றிலும் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் உள்ளன. இதனை விடவும், தென்மராட்சியில் ஆலய நிகழ்வொன்றில் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெறுகின்றன. எனினும் இதற்கான உறுதிப்படுத்தல்கள் இன்னமும் செய்யப்படவில்லை. ஜனாதிபதி அநுரகுமார பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந…

  7. யாழில் 40 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் ஐந்து இளைஞர்கள் கைது! யாழ்ப்பாண பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்க பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில், நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஐந்து இளைஞர்களை கைது செய்யப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்ட ஐந்து இளைஞர்களிடம் இருந்து, 40 ஆயிரம் போதை மாத்திரைகளை பொலிஸார் மீட்டுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட ஐந்து இளைஞர்களையும் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2025/1418757

  8. பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸார் வடக்கிலுள்ள பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்து விசாரணை ஒழிப்பதாக உறுதியளித்து, ஆட்சிக்கு வந்த பின்னர், மிகக் கவனமாகப் பயன்படுத்த வேண்டுமென அரசாங்கம் சொல்லும் அடக்குமுறைச் சட்டத்தை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸார் தான் விரும்பியவாறு பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 20ஆம் திகதி தாம் கற்பித்துக் கொண்டிருந்த வகுப்பறைக்குள், அனுமதியின்றி நுழைந்த பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் (CTID) அதிகாரிகள் தம்மை விசாரிக்க வேண்டுமெனக் கூறியதாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சியிலுள்ள தமிழ்ப் பாடசாலையொன்றின் ஆசிரியர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். “பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதாக கூறிய அனுர அரசாங்க…

  9. கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பம்! கொழும்பு துறைமுக பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் நான்கு மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் 28 ஆம் திகதியுடன் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், இந்த புதைக் குழியிலிருந்து இதுவரை 3 மனித எச்சங்களும் 4 மண்டை ஓடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒக்டோபர் மாதத்தில் அகழ்வுப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டபோதிலும் போதுமான நிதிவசதிகள் இல்லாத காரணத்தினால் இந்தப் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. அகழ்வுப்…

  10. அநுர அரசுக்கு எதிராக முதலில் போராட்டத்தில் இறங்கும் விவசாயிகள்! தேர்தல் காலத்தில் குறிப்பிட்டதை போன்று நெல்லுக்கான உத்தரவாத விலையை சாதகமான முறையில் நிர்ணயிக்க வேண்டும். முறையற்ற வகையில் செயற்பட்டால் அரசாங்கத்துக்கு எதிராக விவசாயிகள் தான் முதலில் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என விவசாய ஒன்றிணைந்த சங்கத்தின் தலைவர் அனுராத தென்னகோன் தெரிவித்தார். அநுராதபுரம் பகுதியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பெரும்போக நெற்செய்கை அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், நெல்லுக்கான உத்தரவாத விலை இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை. இதனால் ஒரு சில பிரதேசங்களில் ஈர நிலையிலான நெல்லை பிரதான அரிசி உற்பத்தியாளர்கள் 80 மற்றும் 85 ரூபாவ…

  11. சாவகச்சேரியில் மீண்டும் மருத்துவ பெருநெருக்கடி சாவகச்சேரி மருத்துவமனையில் மீண்டும் மருத்துவ நெருக்கடி உச்சம் பெற்றுள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சாவகச்சேரி மருத்துவமனையில் பணியாற்றிவந்த சிறுநீரக சுத்திகரிப்பு தொடர்பான மருத்துவர் இடமாற்றலாகிச் சென்றுள்ளார். பதில் மருத்துவர் பொறுப்பேற்காத நிலையில் இடமாற்றத்தின் அடிப்படையில் அவரை விடுவிப்பதற்கு மருத்துவமனை நிர்வாகம் மறுப்புத் தெரிவித்திருந்தது. எனினும், அந்த மருத்துவர் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளரின் அனுமதியைப் பெற்று மாற்றலாகிச் சென்றுள்ளார். அத்துடன், ஏற்கனவே சில மருத்துவர்களுக்கும் அங்கு பற்றாக்குறை நிலவிய நிலையில் தற்போது சாவகச்சேரி மருத்துவமனையில் நெருக்கடி நிலை தோற்றம் பெற்றுள்ளது என்று சுட்டிக்…

  12. யாழ். பல்கலை விவகாரத்தில் அறிக்கை கோரியது அமைச்சு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவகாரம் தொடர்பில் துறைசார் அமைச்சால் அறிக்கை கோரப்பட்டுள்ளது. அங்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - என்று சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது யாழ். பல்கலைக்கழக விவகாரம் தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது: யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவகாரம் தொடர்பில் அமைச்சால் அறிக்கையொன்று கோரப்பட்டுள்ளது. விரைவில் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் போர…

  13. Published By: DIGITAL DESK 2 28 JAN, 2025 | 04:29 PM கொள்கை ரீதியான இணக்கப்பாடு இல்லாமல் கட்சிகள் ஒன்றிணைவது தொடர்பில் சிந்திக்க முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் செவ்வாய்க்கிழமை (28) ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், அதாவது அரசியலமைப்பு ஒற்றையாட்சி முறைமையாக அமைய போகிறது. நாடாளுமன்றில் அநுர தரப்பு அதீத பெரும்பான்மையுடன் உள்ளது. அவர்களுக்கு எமது தரப்பின் ஆதரவு தேவையில்லை. அந்த நிலையில் தமிழர் தரப்பில் நாடாளுமன்றில் உள்ள 19 உறுப்பினர்களில் குறைந்த ப…

  14. காணாமல்போன வெளிநாட்டு பிரஜை யாழில் கண்டுபிடிப்பு 29 JAN, 2025 | 10:42 AM அநுராதபுரத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் காணாமல்போன நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (28) அவர் யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், மூன்று சுற்றுலாப் பயணிகள் பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு வந்திருந்த நிலையில் அவர்களில் ஒருவர் நேற்று (28) காணாமல் போயுள்ளார். இந்த சம்பவம் குறித்து அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் குறித்த வெளிநாட்டு பிரஜை யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் யாழ். நகரப் பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்…

  15. மன்னார்தீவு பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கணிய மணல் அகழ்வு குறித்து மன்னார் பிரஜைகள் குழு மற்றும் கடற்றொழில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரால் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலேயே குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ரிஷாட் பதியுதீன்,காதர் மஸ்தான், து.ரவிகரன், பா. சத்தியலிங்கம்.,மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், செல்லத்தம்பி திலகநாதன், முத்து முஹமட் ஆகியோர் கலந்து கொண்டனர். குறித்த கூட்டத்தில் மாவட்ட மட்டத்தில் கலந்துரையாட பட வேண்டிய பல்வேறு விடயங்கள் மற்றும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்தும் விசேடமாக கலந்துரையாடப்பட்டத…

  16. 29 JAN, 2025 | 09:08 AM (எம்.மனோசித்ரா) அதானி நிறுவனத்துடன் வலுசக்தி கொள்வனவு விலை தொடர்பில் கடந்த அரசாங்கத்தால் எட்டப்பட்டிருந்த இணக்கப்பாடு ஏற்றுக் கொள்ள முடியாததாகும். எனவே 8 டொலருக்கு எட்டப்பட்டிருந்த இணக்கப்பாட்டை இரத்து செய்து 6 டொலரை விட குறைந்த விலைக்கு வலுசக்தி கொள்வனவை முன்னெடுப்பதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டு மீளாய்வு இடம்பெற்று வருவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று செவ்வாய்கிழமை (28) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், வலுசக்தி கொள்வனவு விலை தொடர்பில் கடந்த அரசாங்…

  17. வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் காணப்படும் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை (28) நீர் கசிந்துள்ளது. மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக இயேசுவின் விரல் பகுதியில் இருந்து நீர் கசிந்தது. சம்பவம் அறிந்து பல்வேறு இடங்களில் இருந்து வருகை தந்த மக்கள் இயேசுவின் காலில் இருந்து வடிந்தோடிய நீரை எடுத்துச் சென்றனர். சகோதர மதத்தினர் மற்றும் இராணுவத்தினர், பொலிஸார், பொது மக்கள் என பலர் இந்த காட்சியை பார்வையிட்டதுடன் புகைப்படங்களையும் எடுத்துச் சென்றனர். சம்பவம் தொடர்பாக ஆலய பங்குத்தந்தையால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே மேலதிக தகவல்களை வெளியிட முடியுமென கப்பலேந்தி மாதா ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர். …

  18. 28 JAN, 2025 | 04:54 PM சீனப் புத்தாண்டை முன்னிட்டு (வசந்தகால விழா) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க சீன மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது; இந்த பாரம்பரிய பண்டிகையானது நாளை புதன்கிழமை (29) கொண்டாடப்படவுள்ளது. சீன மக்களின் பாரம்பரிய உடைகள், உணவுகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் கலாச்சாரத்தை நினைவுகூரும் விதமாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகின்றது. சுமார் 3,500 வருடங்கள் பழமையான இந்த பண்டிகை மூலம் சீன மக்களின் மகத்தான கலாச்சாரம் மற்றும் உணர்வுகள் எடுத்துக்காட்டப்படுகின்றன. சீனாவில் உள்ள பல்வேறு பிரதேசங்களில் இந்த விழா கலாச்சாரத்து…

  19. (எம்.மனோசித்ரா) இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த 13 இந்திய மீனவர்கள் மீன்பிடிப் படகொன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்களை கைது செய்வதற்கு கடற்படையினர் நடவடிக்கை எடுத்த போது, கடற்படை வீரர் ஒருவரின் துப்பாக்கி இயங்கியதில் இரு மீனவர்கள் காயமடைந்துள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இது குறித்து கடற்படை ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : திங்கட்கிழமை (27) யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பிரதேசத்துக்கு அப்பால் இலங்கைக்கு உரித்தான கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்த இந்திய மீன்பிடிப்படகுகள் பெருமளவானவை வடக்கு கடற்பளை கட்டளை தலைமையகத்தினால் கண்காணிக்கப்பட்டன. குறித…

  20. தமிழ் மக்கள் ஒற்றுமைப்படவில்லை என்றால் அனைத்து சபைகளையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றும் அபாயம் இருப்பதாக அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய இயக்குனருமான சி.அ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் உரும்பிராயிலுள்ள தனது அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (28) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஒரு நல்ல சந்தர்ப்பத்தை உருவாக்கியுள்ளது. என்.பி.பி அரசு பல்வேறு வழிகளிலும் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களிடம் இருந்து. அவர்களுக்கான அனைத்து விடயங்களையும் …

  21. சிவமோகனை இடைநிறுத்தியமைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது! – கைவிரித்தது நீதிமன்றம் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்து தம்மை இடைநிறுத்தி எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கும்படி கோரி அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் சி.சிவமோகன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஆராய்ந்த யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் அத்தகைய இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டுள்ளது. கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சிவமோகனை இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்து இடைநிறுத்தி, அந்நடவடிக்கைகள் தொடர்பாக அவரிடம் இருந்து விளக்கம் கோரும் முடிவைக் கட்சியின் மத்திய குழு அண்மையில் எடுத்திருந்தது. அதற்கு எதிரா…

  22. இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள காணி விபரங்களை வழங்குங்கள் - தேசிய மக்கள் சக்தி பா.உ. செ. திலகநாதன் இராணுவம் மற்றும் கடற்படையின் ஆக்கிரமிப்பில் உள்ள பொதுமக்களின் காணி விபரங்களை எம்மிடம் ஒப்படைத்தால் அவற்றை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செ. திலகநாதன் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கடந்த காலத்தில் இராணுவத்தினர் தமது தேவைக்காக வன்னிப் பிரதேசத்தில் கையகப்படுத்திய பிரதேசங்களை படிப்படியாக எமது அரசாங்கம் விடுவித்து வருகின்றது. கடந்த காலங்களிலும் இவ்வாறான காணிகளை எமது அரசாங்கம் விடுவித்து இருந்தது. கடந்த வாரமும் இராணுவம் மற்றும் கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்…

  23. பொருளாதாரத்தை சீராக்க சுங்கத் திணைக்களம் மேற்கொள்ளும் முயற்சிகள் பாராட்டத்தக்கவை ; கடந்த ஆண்டில் சுங்கம் அடைந்த இலக்குகளை வரவேற்கிறேன் ; ஜனாதிபதி தெரிவிப்பு 28 Jan, 2025 | 12:04 PM நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கும் தற்போதைய அரசாங்கம் சாத்தியமான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். சர்வதேச சுங்க தினத்தை முன்னிட்டு நேற்று திங்கட்கிழமை (27) பிற்பகல் சுங்கத் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனை தெரிவித்தார். இந்த வருடம் சர்வதேச ச…

  24. ஏத்தாலைக்குளம் பறவைகள் சரணாலயத்தை அலங்கரிக்கும் வலசைப் பறவைகள் 28 Jan, 2025 | 01:49 PM மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியோரத்தில் குருக்கள்மடம் ஏத்தாலைக்குத்தில் இயற்கையாகவே அமைந்துள்ள பறவைகள் சரணாலயத்தில் வலசைப் பறவைகள் வருகைத்தந்துள்ளன. அதில் Australian White Ibis என்ற பறவைகளும், நியூசிலாந்து நாட்டு பறவைகளும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இப்பறவை இனம் வருடத்தில் டிசம்பர் ஜனவரி, மாதங்களில் இச்சரணாலயத்திற்கு இனப்பெருக்கத்திற்காக வருவதாகவும் ஏப்ரல் மே மாதங்களில் தன் குஞ்சுகளுடன் மீட்டும் உரிய நாடுகளுக்குத் திரும்பிச் செல்வதாகவும் மக்கள் தெரிவித்தனர். மட்டக்களப்பு மாவட்டத்திற…

  25. எதிர்வரும் நாட்களில் மீன்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை. எதிர்வரும் நாட்களில் மீன்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை ஏற்படக் கூடும் என கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி(Sunil Handunnetti) தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்குபற்றிய போது அவர் இதனை கூறினார். இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மீன்கள் உரிய தரத்தில் ஏற்றுமதி செய்யப்படுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். உரிய தரத்தில் மீன் உற்பத்தி செய்வது குறித்த தெளிவின்மையே இதற்கான காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் இலங்கையில் மீன் உற்பத்தியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த 70 ஆண்டுகளாகவே நாட்டின் உற்பத்தி பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.