Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கடந்த ஆண்டில் துஷ்பிரயோகம் தொடர்பில் 321 முறைப்பாடுகள்! 2024 ஆம் ஆண்டில் சிறுவர்கள் மீதான கடுமையான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பாக 321 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் கூற்றுப்படி, 2024 ஜனவரி முதலாம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் 580 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த காலப்பகுதியில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு சிறுவர்கள் தொடர்பான 8,746 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பான முறைப்பாடுகளில் அதிகபட்சமாக 2,746 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. சிறுவர…

  2. கட்டுநாயக்க விமான நிலையத்தில் மேலும் 20 சோதனை முகப்புக்கள்? சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதையடுத்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குறைந்தது 20 சோதனை முகப்புக்களை உள்ளடக்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் விமான நிலையத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் அறிக்கையின்படி, கூடுதல் சோதனை முகப்புக்களுக்கான இடங்களை தீர்மானிக்க விமான நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இக்கலந்துரையாடலின் போது, அமைச்சர் பிமல் ரத்நாயக்க, சுற்றுலாப் பயணிகளின் வருகை வேகமாக அதிகரித்து வருவதால், விமான நிலைய வசதிகளை முடிந்தவரை …

  3. பெப்ரவரி நடுப்பகுதியில் மத்திய கிழக்கு செல்லும் ஜனாதிபதி! எதிர்வரும் பெப்ரவரி நடுப்பகுதியில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணமொன்றை மேற்கொள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க திட்டமிட்டுள்ளதாக அரசதரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. சில மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஏற்கனவே ஜனாதிபதிக்கு கிடைத்துள்ள அழைப்புகளின் பிரகாரம் இந்தப் பயணம் ஒழுங்கமைக்கப்பட்டு வருகிறது. குறைந்த விலையில் எரிபொருளை பெறுவது தொடர்பாக இந்த பயணத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுகளில் ஜனாதிபதி ஈடுபட உள்ளார். குறிப்பாக அரசாங்கத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பு மூலம் எரிபொருளை நேரடியாக நாட்டுக்கு இறக்குமதி செய்வது குறித்து ஜனாதிபதி பேச்சுகளில் ஈடுபட உள்ளதாகவும்…

  4. வடமாகாண ஆளுநரை சந்தித்த டெங்கு களத்தடுப்பு உதவியாளர்கள்! adminJanuary 28, 2025 வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை, வடக்கு மாகாண டெங்கு களத்தடுப்பு உதவியாளர்கள் நேற்றைய தினம் திங்கட்கிழமை ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். அதன் போது, 2017ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை தற்காலிகமாக பணியாற்றி வருவதாகவும், மாதாந்த வேதனமாக 22,000 ரூபா மட்டுமே வழங்கப்படுவதாகவும், தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரியும் ஆளுநரிடம் மனு ஒன்றையும் சமர்ப்பித்தனர். இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடுவதாக வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார். https://globaltamilnews.net/2025/210414/

  5. 28 JAN, 2025 | 09:59 AM அரசியல் கைதிகள் விடயத்தில் ஜனாதிபதி தனது நிலைப்பாட்டையும் அரசின் நிலைப்பாட்டையும் வெளிப்படுத்த வேண்டும் என்பதோடு அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதமாக்குமாறும் அதற்கான நாள் குறிக்குமாறும் கோரிக்கை விடுக்கின்றோம் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அருட்தந்தை மா.சத்திவேல் இன்று செவ்வாய்க்கிழமை (28) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாடாளுமன்றத் தேர்தலை பின்னர் இந்திய மற்றும் சீன பிரயாணங்களைத் தொடர்ந்து நாட…

  6. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று (27) முதல் காலவரையின்றி விரிவுரைகளை புறக்கணிக்க தீர்மானித்துள்ளனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அவசர கலந்துரையாடலின் பின்னர் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அறிக்கையில் இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் முழு வடிவம் வருமாறு, அண்மையில் இடம்பெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேரவை கூட்டத்தின் பின்னர் பல்கலைக்கழகத்தின் கலை பீடாதிபதி தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமாவினை அடுத்துப் பல்கலைக்கழகம் பற்றி பல கருத்துக்கள் ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் நிலைமை குறித்…

  7. Published By: VISHNU 24 JAN, 2025 | 08:47 PM மாணவர்கள் மீதான பழிவாங்குதல்களை உடன் நிறுத்த வலியுறுத்தி, நான்கு அம்சக் கோரிக்கைகளை உள்ளடக்கி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் வெள்ளிக்கிழமை (24) வெள்ளிக்கிழமை காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் இந்த போராட்டத்திற்கு அறிக்கை ஒன்றின் மூலம் ஆதரவு வழங்கியுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, பல்கலைக்கழக மாணவர்களே நாளைய எமது சமுதாயத்தின் தூண்கள். பல்கலைக் கழகங்கள் எமது சமுதாயத்தின் நீண்ட கால வளர்ச்சியினை நோக்காகக் கொண்டு செயற்பட வேண்டும். இருப்பினும் அண்மைக் காலங்களில் சமூகத்திற்கு அர்ப்பணிப்பு மிக்கவர்களாகவும், வ…

  8. முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச தனது பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தொடர்பில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி தனது அடிப்படை உரிமை மீறல் மனுவில் தனது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குறைக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளதுடன் மீண்டும் தனது பாதுகாப்பை அதிகரிக்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளிற்கு வழங்கப்படும் சலுகைகள் பலவற்றை அரசாங்கம் குறைத்துள்ளமை குறிப்பிடத்க்கது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கான பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கைழய 60ஆக அரசாங்கம் குறைத்துள்ளது. பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது - அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்தார் மகிந்த | Virakesari…

  9. 27 JAN, 2025 | 07:11 PM கனடாவில் இருந்து வருகைதந்துள்ள ஈழத்தின் முன்னணி பாடகர் இன்னிசை வேந்தர் பொன் சுந்தரலிங்கத்துக்கு கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் திங்கட்கிழமை (27) காலை வரவேற்பு அளிக்கப்பட்டது. கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வை ஆசிரிய மாணவர் இ.செந்தூர்ச் செல்வன் முன்னிலைப்படுத்தினார். கலாசாலையில் முதலாவது இசையாசிரியர் அணியில் பயிற்சி பெற்ற தனது அனுபவங்களை பொன் சுந்தரலிங்கம் எடுத்துக் கூறினார். அத்துடன் கலாசாலையை வாழ்த்தி பாடல் ஒன்றையும் இயற்றி பாடினார். கலாசாலை சமூகத்தின் சார்பில் பொன் சுந்தரலிங்கத்தை கலாசாலை முகாமைத்துவக் குழுவினர் கௌரவித்தனர். …

  10. நாட்டில் தற்போது நிலவும் சிவப்பு அரிசி தட்டுப்பாடு மற்றும் தேங்காய் விலை அதிகரிப்பு தொடர்பில் என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலி, கட்டுஹெம்பலாவில் உள்ள மறைந்த மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவனின் வீட்டிற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) காலை சென்றிருந்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு மறைந்த மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவனின் உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். இதன்போது சிவப்பு அரிசி தட்டுப்பாடு மற்றும் தேங்காய் விலை அதிகரிப்பு குறித்து கவலைகளை தெரிவித்ததோடு, சிலர் ஒரு தேங்காய் 200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த முறை 10 கிலோ சிவப்பு …

  11. நாய் தூக்கிலிடப்பட்ட சம்பவம்; மாங்குளத்தில் பெண்ணொருவர் கைது! நாயை தூக்கிலிட்டு கொன்ற சம்பவம் தொடர்பில் வடமாகாண மாங்குளத்தை சேர்ந்த 48 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாயை தூக்கிலிட்டு கொன்ற சம்பவம் தொடர்பான புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் அண்மையில் வைரலானதுடன், பலரின் கண்டனத்தையும் பெற்றது. இது தொடர்பில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே மேற்கண்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். மாங்குளம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது 48 வயதுடைய பெண் ஒருவர் இன்று (27) கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் 1907 ஆம…

  12. Published By: VISHNU 27 JAN, 2025 | 08:51 PM வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் நாளை 28ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது; ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். தீவின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியு…

  13. யாழ். பல்கலைக்கழக கலைப்பீடாதிபதியின் அதிரடி முடிவு : அதிர்ச்சியில் பலர் யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று (25) நடைபெற்ற பேரவைக் கூட்டத்தினை தொடர்ந்து கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம் தன்னுடைய பதவி விலகியுள்ளார். மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனைகளால் யாழ்.பல்கலைக்கழகம் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினைகளை தட்டிக் கேட்டமை, மாணவ மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு சீரிய முடிவுகளை எடுப்பதற்கு பல்கலைக்கழக பேரவை ஒத்துழைப்பு வழங்காமை போன்ற காரணங்களால் அவர் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசியல் ரீதியில் அழுத்தங்கள்.. யாழ் பல்கலையில் சம காலத்தில் தமிழ் இனத்துக்கும் எதிர்காலத்துக்கும் நம்பிக்கைத்தரகூடிய ஒரு ஆளுமை பல்கலையின் பேரவையின் முடிவின…

  14. யாழ்ப்பாணம் புத்தூர் கலைமதி ஆலடி முருகன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் 5 நாள் மாம்பழத் திருவிழாவில் ஏலம் விடப்பட்ட மாம்பழம் ஒன்று 2 லட்சத்து 46 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனையாகியுள்ளது. கடந்த 22.01.2025.அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மஹோற்சவத்தில் 26.01.2025 அன்று ஜந்தாம் நாள் மாம்பழத் திருவிழா இடம்பெற்றது.. யாழ்ப்பாணம் புத்தூர் கலைமதி ஆலடி முருகன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் 5 நாள் மாம்பழத் திருவிழாவில் ஏலம் விடப்பட்ட மாம்பழம் ஒன்று 2 லட்சத்து 46 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனையாகியுள்ளது. கடந்த 22.01.2025.அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மஹோற்சவத்தில் 26.01.2025 அன்று ஜந்தாம் நாள் மாம்பழத் திருவிழா இடம்பெற்றது.. இங்கு விசேட அபிசேக ஆராதனை த…

  15. தமிழ்த் தேசியக் கட்சிகளின் சந்திப்பு ஒத்திவைப்பு! புதிய அரசமைப்பு மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் கூட்டாகச் செயற்படுவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கிடையே இன்று திங்கட்கிழமை நடைபெறவிருந்த கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளது. முன்னதாக இந்தச் சந்திப்பு நேற்றுமுன்தினம் நடைபெற தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதன்படி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார பொன்னம்பலம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன் மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கிடையில் அண்மையில் நாட…

  16. (இராஜதுரை ஹஷான்) வடக்குக்கு காலை வேளையில் புகையிரத சேவையை ஆரம்பிக்குமாறு பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர். இதற்கமைய எதிர்வரும் இரண்டு வாரங்களில் கல்கிஸ்ஸை மற்றும் வெள்ளவத்தை ஆகிய புகையிரத நிலையங்களில் நிறுத்தக்கூடிய வகையில் வடக்குக்கு புகையிரத சேவையை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம் என புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார். புகையிரத திணைக்களத்தின் தலைமையகத்தில் திங்கட்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, வடக்கு மற்றும் மலையகத்துக்கான புகையிரத சேவைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய எதிர்வரும் வியாழக்கிழமை 31ஆம் திகதி முதல் கொழும்பு கோட்டை புகையிரத நிலையம்…

  17. 26 JAN, 2025 | 07:13 PM (எம்.ஆர்.எம்.வசீம்) அரசங்கத்துக்கு முடியாமல் போனால் ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்று எப்படியாவது மீட்டித்தருவார். அதற்கான இயலுமை அவரிடம் இருக்கிறது. என்றாலும் நாட்டின் தற்போதைய நிலைமைக்கு நாங்கள் காரணம் அல்ல. ரணில் விக்ரமசிங்க நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்லும்போது நாட்டு மக்களே அவரை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பினார்கள் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார். காலியில் ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் காலி தொகுதி அரசியல் சபை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், …

  18. தென்னை மரங்களை வெட்டுவதற்கு எதிர்காலத்தில் பிரதேச செயலகம் அல்லது தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையிடம் அனுமதி பெற வேண்டும் என தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் கடுமையான தேங்காய் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், தேங்காய் மரங்களை வெட்டுவதற்கு முன்பு தனிநபர்கள் இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்ற புதிய கொள்கையை தெங்கு தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது. ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை பணிப்பாளர் சமன் ஹேவகே தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/314877

  19. உறவுகளின் போராட்டம் நீத்து விடக்கூடாது என்பதற்காக போராட்டத்தை நாங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்வோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தெரிவித்தனர். முல்லைத்தீவு மாவட்ட சங்கத்தின் நிர்வாக தெரிவின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினரின் புதிய நிர்வாகத்தெரிவு நேற்று இடம்பெற்றிருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி ம.ஈஸ்வரி பதவியில் இருந்து விலகியதன் காரணமாக இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினரின் புதிய நிர்வாகத்தெரிவு முல்லைத்தீவு போராட்ட இடத்திற்கு அருகாமையில் இடம்பெற்றிருந்தத…

  20. யாழ். பல்கலையில் பிரதான மாணவர் ஒன்றியம் தற்போது இயங்குநிலையில் இல்லை! adminJanuary 27, 2025 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான மாணவர் ஒன்றியம் தற்போது இயங்குநிலையில் இல்லை என தெரிவித்த யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் மனோகரன் சோமபாலன், அது தொடர்பில் வெளிவரும் அறிக்கைகள் மற்றும் சமூக ஊடக கணக்குகளை பேணுவது தொடர்பாக பல்கலை நிர்வாகம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தற்போது யாழ்ப்பான பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் என்பது இயங்கு நிலையில் இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா? ஏனென்றால் யாழ்ப்பாண பல்கலைக்கழ…

  21. 27 JAN, 2025 | 10:05 AM முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச வசிப்பதற்கு வீடு இல்லை என்றால் அவருக்கு வீடொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் தயார் என ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். தம்புத்தேகமவில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள ஜனாதிபதி நானும் அமைச்சர்களும் மாளிகைகளில் வசிக்க ஆரம்பிக்கவில்லை முன்னாள் ஜனாதிபதியால் ஏன் அதனை செய்ய முடியாது என கேள்வி எழுப்பியுள்ளார். பொதுமக்களின் வரிப்பணத்தில் மாளிகைகளில் வசிப்பது நியாயமான விடயம் இல்லை, நாங்கள் எவரையும் பழிவாங்கவில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி நாங்கள் நாட்டை புதியதிசையில் இட்டுச்செல்கின்றோம், வெளியேறுங்கள் என நாங்கள் வேண்டுகோள் விடுப்பதற்கு மு…

  22. மேன்முறையீட்டு நீதிபதிக்கான தனது பதவி உயர்வு குறித்து அரசியலமைப்பு குழுவுக்கு விண்ணப்பித்தும் அது தொடர்பில் கண்டுகொள்ளாத அரசு நீதிபதி இளஞ்செழியனுக்கு திட்டமிட்டு அநீதி இழைத்துள்ளதாக வடக்கின் சிவில் சமூகங்கள் குற்றம் சுமத்தி வருகின்றன. இலங்கையின் சிறந்த நீதிபதிகளுள் ஒருவரும் தற்துணிவாக அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது தீர்ப்புக்களை வழங்கி நீதியை எதிர்பார்த்த மக்களை ஆற்றுப்படுத்திய நீதிபதி இளஞ்செழியனுக்கு பாரபட்சமான வகையில் இந்த அரசு பதவி உயர்வு வழங்காமல் பழிவாங்கியுள்ளது என்ற குற்றச்சாட்டும் இதன்போது முன்வைக்கப்படுகின்றது. மேலும், உயர் நீதிமன்ற நீதியரசர்கள் நியமனத்தில் நீதியரசர் எம்.டி.எம். லபார் புறக்கணிக்கப்பட்டது ஏன் என்றும் சில கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன. …

  23. தமிழரசுக் கட்சியின்(Itak) உட்சண்டை தற்போது இன்னோர் பரிமாணத்தைப் பெற்றுள்ளது என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் குறித்த அறிக்கையில், கட்சியின் தெரிவு செய்யப்பட்ட தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிறீதரன் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட பயணத்தடை தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் இரட்டை ஊடகப் பேச்சாளரில் ஒருவருமான சுமந்திரனை விசாரணை செய்யுமாறு நாடாளுமன்றத்தினை கேட்டிருக்கின்றார். இவரது இந்த உரையுடன் இதுவரை காலமும் நீதிமன்றத்தினை நோக்கி நகர்ந்த கட்சியின் உட்சண்டை தற்போது நாடாளுமன்…

  24. சிவஞானம் - பொன்னம்பலம் இடையில் சந்திப்பு January 26, 2025 12:23 pm இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்திற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் இடையில் சந்திப்பொன்று யாழில் நேற்று (25) இடம்பெற்றுள்ளது. புதிய அரசியலமைப்பு தொடர்பான தமிழ்க் கட்சிகளின் கலந்துரையாடலொன்றுக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு விடுத்திருந்த நிலையில் அவ்வாறான அழைப்பு எதுவும் இலங்கை தமிழ் அரசுக்கட்சிக்கு உரிய முறையில் வரவில்லை எனவும் அவ்வாறு அழைப்பு வந்தால் அதனை பரிசீலிக்க தயார் என்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அண்மையயில் தெரிவித்திருந்த…

  25. இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் உதவி வழங்கும் என்று இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி சிறி வோல்ட் தெரிவித்தார். இலங்கையின் சொத்துக்களை மீட்பதற்கு எடுக்க வேண்டிய சர்வதேச நடவடிக்கைகள் குறித்து சுவிட்சர்லாந்து தூதுவர் இதன்போது வழிகாட்டுதல் வழங்கினார். இதற்காக பூர்வாங்க வசதிகளை வழங்க தேவையாயின் எந்த நேரத்திலும் அதற்கு உதவி வழங்க அவர் உடன்பாடு தெரிவித்தார். ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி சிறி வோல்ட் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன் போதே தூதுவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.