Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ரணிலுக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணை அடுத்த மாதம் வரும் என்கிறது பொது எதிரணி (ஆர்.யசி) மஹிந்­த­வுடன் இணைந்து போட்­டி­யிட்டு இன்று நல்­லாட்சி அர­சாங்­கத்­தில்­ அ­மர்ந்­துள்ள பலர் எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் மீண்டும் எம்­முடன் இணை­வார்கள். மீண்டும் மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சியில் அமர்­வார்கள். அவர்கள் தவிர்ந்த வேறு எவ­ருக்கும் எமது அணியில் இட­மில்லை என்று பொது எதி­ரணியினர் தெரி­வித்­தனர். ராஜி­தவை அடுத்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ராக அடுத்த மாதம் நம்­பி­கை­யில்லா பிரே­ரணை கொண்­டு­வ­ரப்படவுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். தேசிய அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் குறித்தும், பொது எதி­ர­ணியின் அடு…

  2. மீனவர்களின் வலைகள் தீ வைப்பு : மட்டுவில் சம்பவம் மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற்தொழிலாளர்களின் 20 இலட்சம் பெறுமதியான வலை இன்று அதிகாலை 1.30 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக மீனவர்களுக்கு இடையில் பல முரண்பாடுகள் ஏற்பட்டு கொண்டுவரும் நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித்த இந்த தீ வைப்பு சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/23698

  3. சட்டவிரோத மரங்களை ஏற்றிவந்த லொறி விபத்தில் சிக்கியது.! Published by RasmilaD on 2017-08-28 11:25:34 சட்டவிரோத மரங்களை ஏற்றி வந்த வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து கிரான் பாலத்தினுள் இன்று அதிகாலை விழுந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். செங்கலடி மணலாறு பகுதியில் இருந்து சட்டவிரோத மரங்களை கிரான் பகுதியினூடாக ஓட்டமாவடிக்கு கொண்டு வரும் வழியில் புலியாந்தகல் பகுதியில் வைத்து வாழைச்சேனை வனஇலகா அதிகாரிகள் கைது செய்வதற்காக துரத்தியுள்ளனர். அதன்போது அவர்களிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக வேகமாக வந்த வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து கிரான் பாலத்தினுள் விழுந்துள்ளது. 10 அடி தொடக்கம் 12 அடி நீளம் கொண்ட முப்பதுக்கு மேற்பட…

  4. துன்னாலையில் கைதானோர் அடையாள அணிவகுப்பில் வடமராட்சி கிழக்கில் துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததன் பின்னரான சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 36 சந்தேக நபர்கள் இன்று பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அடையாள அணிவகுப்பில் முற்படுத்தப்பட்டுள்ளனர். 6 பேர் கொண்ட குழுக்களாக அவர்கள் அணிவகுப்பில் முற்படுத்தப்படுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது. துன்னாலையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். அதையடுத்து அந்தப் பகுதியில் இயல்பு நிலை குழம்பியது. பொலிஸ் வாகனம் மீதும், பொலிஸ் காவலரண் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அதன்பின்னர் துன்னாலைப் பகுதியில் பொலிஸாரும், சிறப்பு…

  5. சீதனக் கொடுமையால் இளம் பெண் ஒருவர் தவறான முடிவெடுத்துத் தனது உயிரை மாய்த்த சம்பவம் யாழ். மாவட்டம், தென்மராட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இன்னும் சில தினங்களில் திருமணம் நடைபெற ஏற்பாடாகியிருந்த நிலையில் மாப்பிள்ளை வீட்டார் சீதனத்தை அதிகரித்துத் தரும்படி கேட்டதால் மனமுடைந்த பெண் தன் உயிரை மாய்த்தார் என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர். 29 வயதான முன்பள்ளி ஆசிரியை ஒருவரின் வாழ்க்கையையே சீதனக் கொடுமை சிதைத்துள்ளது. திருமணத்துக்கான ஏற்பாடுகள் இடம்பெறும் நிலையில், சீதனம் போதாது சீதனத்தை அதிகரித்துத் தர வேண்டும் என்றும், அதிகரித்துத் தராவிட்டால் திருமணம் இடம்பெறாது என்றும் மணமகனின் உறவுகள் திடீரென நேற்று மணமகள் வீட்டாருக்குக் கூறினர் என்று மணமகளின் உறவி…

    • 0 replies
    • 320 views
  6. வான் முச்சக்கரவண்டி விபத்து – 5பேர் படுகாயம் புதுமனைபுகுவிழாவிற்குச் சென்றுவிட்டு திரும்பிய முச்சக்கரவண்டி ஓமந்தையில் விபத்துக்குள்ளானதில் தந்தை இரு மகன் உட்பட 5பேர் படுகாயமடைந்துள்ளனர். முச்சக்கரவண்டி சாரதி ஆபத்தான நிலையில் அதிதீவிர சிக்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிக்சை பெற்று வருகின்றார். வவுனியா ஓமந்தை பறநட்டான்கல் பகுதியில் இன்று அதிகாலை 12.25மணிக்கு முச்சக்கரவண்டியுடன் சொகுசு வான் மோதியதில் 5பேர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதிகாலை 12.25மணிக்கு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற சொகுசு வான் முச்சக்கரவண்டியுடன் மோதியதில் முச்சக்கரவண்டி கடுமையாக சேதமடைந்துள்ளது. இதில்…

  7. கிளிநொச்சி வைத்தியசாலையின் புதிய கட்டிடத்தொகுதி திறப்பு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் மனநல மருத்துவ பிரிவுக்கான கட்டடத் தொகுதி மற்றும் வைத்திய நிபுணா்கள் விடுதி என்பன இன்று வட மாகாண முதலமைச்சர் மற்றும் வட மாகாண சுகாதார அமைச்சர் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வட மாகாண சபையின் 9 மில்லியன் ரூபா குறித்தொதுக்கப்பட்ட நிதியில் அமைக்கப்பட்ட மனநல மருத்துவ பிரிவு கட்டிடத் தொகுதியும் 20 மில்லியன் ரூபாவில் அமைக்கப்பட்ட வைத்திய நிபுணர்கள் விடுதியும் இன்று திறந்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் சேவையினை விரிவுப்படுத்தும் வகையில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது மேற்…

  8. ஐரோப்பிய ஒன்றியத்தின் குழு இலங்கை வருகின்றது.! ஐரோப்­பிய ஒன்றியத்தின் ஐந்து பேர் அடங்­கிய குழு ஒன்று செப்­டெம்பர் மாதம் ஐந்தாம் திகதி இலங்­கைக்கு உத்­தி­யோ­கபூர்வ விஜயம் மேற்­கொள்­ள­வுள்­ளது. இலங்­கைக்கு கிடைக்­கப்­பெற்ற ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்­ச­லு­கைக்கு பின்­ன­ரான சூழல் தொடர்பில் கண்­காணிக்கும் முக­மா­கவே அவர்கள் இலங்­கைக்கு வர­வுள்­ளனர். குறித்த விஜயம் தொடர்பில் கருத்து தெரி­வித்த ஐரோப்­பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலை­தீ­வு­க­ளுக்­கான வதி­விட பிர­தி­நிதி போல் கொட்­பிரி, ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்­ச­லுகை கிடைத்­ததன் பின்னர் இலங்­கையில் ஏற்­பட்­டுள்ள கள­நிலை­வ­ரங்­களை ஆராய்­வ­தற்­கென ஐரோப்­பிய ஒன்றியத்தின் ஐந்து பேர் அடங்­கிய குழு செப்…

  9. ஐ.நா. தீர்மானத்தை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுங்கள் இந்தியா, அமெரிக்காவிடம் கூட்டமைப்பு வலியுறுத்தும் ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபை­யில் இலங்கை தொடர்­பில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தை கொழும்பு முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டும் என்­கிற அழுத்­தத்தை பன்­னாட்­டுச் சமூ­கம் உறு­தி­யாக வழங்­க­வேண்­டும் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு வலி­யு­றுத்­த­வுள்­ளது. இந்த வார இறு­தி­யில் கொழும்­புக்கு வரு­கின்ற அமெ­ரிக்க இராஜாங்கத் திணைக்களத் தின் தெற்கு மற்­றும் மத்­திய ஆசி­யா­வுக்­கான உத­விச் செய­லர் அலிஸ் வெல்ஸ் மற்­றும் இந்­தி­யா­வின் அய­லு­ற­வுத்­துறை அமைச்­சர் சுஷ்மா சுவ­ராஜ் ஆகி­யோ­ரைச் சந்­திக்­…

  10. முதலமைச்சருக்கு பக்கபலமாக இருக்க வேண்டிய தேவை எமக்குள்ளது ; புதிய சுகாதார அமைச்சர் வடமாகாண சபையின் மிகுதி காலம் மிகவும் குறைந்த காலமாக இருப்பதினால் இருக்கின்ற காலத்தினுள் சரியான திட்டங்களை மேற்கொள்ள சகலரது ஒத்துழைப்பும் தேவைப்படுவதாக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்தார். மன்னாரில் வைத்து ஊடகங்களுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கருத்த தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், வடக்கு மாகாண சபையின் அமைச்சரவை முதலமைச்சரினால் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் சுகாதார, சுதேச, வைத்தியத்துறை, சிறுவர் நன்னடத்தை ம…

  11. ரணிலுக்கு அருளாத மூகாம்பிகை அம்மன் மழையால் பயணம் தடைப்பட்டது. தோச நிவர்த்தி செய்­வ­தற்­காக இந்­தியா சென்ற தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வின் நோக்­கம் நிறை­வே­ற­வில்லை. அதற்­கான அருள் அவ­ருக்­குக் கிடைக்­க­வில்லை. சீரற்ற கால­நிலை கார­ண­மாக ஆல­யத்­துக்கு அவ­ரால் செல்ல முடி­ய­வில்லை என்று அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. தோச நிவர்த்­திக்­காக இந்­தி­யா­வின் கொல்­லூர் மூகாம்­பிகை ஆல­யத்­தில் நேற்று வழி­பாடு நடத்­து­வ­தற்கு தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க திட்­ட­மிட்­டி­ ருந்­தார். அதற்­காக மூன்று நாள்­கள் பய­ண­மாக இந்­தியா சென்­றுள்­ளார். கொல்­லூர் மூகாம்­பிகை ஆல­யத்­தில் நேற்­றுக் காலை 11 மணிக்கு நடை­பெ­றும்­சி­றப்பு பூ…

  12. ஐ.தே.க.- சு.க.வுக்கு இடையில் டிசம்­பரில் புதிய ஒப்­பந்தம் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கும் இடை­யி­லான புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் அடுத்த மாதம் நிறை­வ­டை­ய­வுள்­ளது. இதன்­படி டிசம்பர் மாதம் புதிய புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் தயா­ரிக்­கப்­பட்டு கைச்­சாத்­தி­டப்­படும் என மின்­வலு மற்றும் மீள்­புத்­தாக்க பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரி­வித்தார். தேசிய அர­சாங்­கத்தின் ஒப்­பந்தம் அடுத்த மாதம் நிறை­வ­டை­ய­வுள்ள நிலையில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் நிலைப்­பாடு குறித்து வின­விய போதே பிரதி அமைச்சர் கேச­ரிக்கு மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில், …

  13. எங்­களைத் தண்­டிப்­ப­தற்­கா­கவே புதிய நீதி அமைச்சர் நிய­மனம் என்­னையும் எமது தரப்­பையும் தண்­டிக்­கவே புதிய நீதி அமைச்சர் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். அவர் எவ்­வாறு செயற்­ப­டப்போ­கின்றார் என்­பது குறித்து வேடிக்கை பார்க்­கின்றோம் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்தார். என்னை குற்­ற­வாளி என கூறிக்­கொண்டு உண்­மை­யான குற்­ற­வா­ளிகள் நல்­லாட்­சிக்குள் ஒளிந்­துள்­ளனர் எனவும் அவர் குறிப்­பிட்டார். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ முகத்துவாரம் ஸ்ரீ வெங்­க­டேஸ்­வர மஹா விஸ்ணு ஆல­யத்­திற்கு தரி­சனம் பெற சென்­றி­ருந்தார். வழி­பா­டு­களின் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்கும் போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். …

  14. நான் அமெ­ரிக்க உள­வா­ளி­யல்ல ; புதிய கடற்­படை தள­பதி தெரி­விப்பு இலங்கை கடற்­படை மீதான போர்க்­குற்­றங்களை நான் மறுக்­கின்றேன். எனினும் கடற்­படை சீரு­டையில் குற்­றங்கள் இடம்­பெற்­றி­ருக்­கு­மாயின் அவர்­களை தண்­டிப்­பதில் மாற்றுக் கருத்து இல்லை என புதிய கடற்­படை தள­பதி வைஸ் அட்­மிரல் ட்ரவிஸ் சின்­னையா தெரி­வித்தார். நான் ஒரு அமெ­ரிக்க உள­வாளி அல்ல. இந்த குற்­றச்­சாட்டை நான் மறுக்­கிறேன் எனவும் அவர் குறிப்­பிட்டார். புதிய கடற்­படை தள­ப­தி­யாக கடமை பொறுப்­பேற்­றுள்ள வைஸ் அட்­மிரல் ட்ரவிஸ் சின்­னையா நேற்று கடற்­படை தலை­மை­ய­கத்தில் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பை மேற்­கொண்­டி­ருந்த போதே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் அதில் ம…

    • 16 replies
    • 1.1k views
  15. சிறிலங்கா குறித்து அனைத்துலக சமூகம் ஏமாற்றம் – ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி ஜெனிவா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, 18 மாதங்கள் கழித்தும், சிறிலங்கா அரசாங்கம் எந்த முன்னேற்றத்தையும் காண்பிக்கவில்லை என்பது அனைத்துலக சமூகத்தை ஏமாற்றமடையச் செய்துள்ளது என்று சிறிலங்காவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின், இராஜதந்திர விவகாரங்களுக்கான பிரதிநிதி போல் கொட்பிறி தெரிவித்துள்ளார். ‘சிறிலங்கா அரசாங்கம் கூடிய விரைவில் சிறப்பு நீதிமன்றம் ஒன்றையோ, நீதிப் பொறிமுறையையே அமைப்பதற்கான வாய்ப்பு எதுவும் தென்படவில்லை. தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, 18 மாதங்கள் கழித்தும், சிறிலங்கா அரசாங்கம் எந்த முன்னேற்றத்தையும் காண்பிக்கவில்லை என்பது அனைத்துலக சமூகத்தை ஏமாற்றமடையச் செய்துள்ளது கடந்த ஆண்ட…

  16. முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம் முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று சிரமதானப் பணிகள் நடைபெற்றன என்று தெரிவிக்கப்பட்டது. சிரமதானப் பணிகளை பொது மக்களும், ஜனநாயக போராளிகள் கட்சியினரும் மேற்கொண்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. http://newuthayan.com/story/23401.html

    • 1 reply
    • 381 views
  17. கிளிநொச்சி ஜெயந்திநகர் மகாதேவ ஆச்சிரம முதலாவது குருபீடாதிபதி ஸ்ரீமத் தவத்திரு வடிவேல் சுவாமிகளின் சீடனும் மகாதேவா ஆச்சிரமத்தின் இரண்டாவது குருபீடாதிபதியும் ஆன ஸ்ரீமத் தவத்திரு கணேசானந்தா மகாதேவ சுவாமிகள் மகா சமாதி எய்தியுள்ளார். இவர் இன்று நண்பகல் காலமாகியுள்ளார். கிளிநொச்சியில் உள்ள சைவ நிறுவனங்கள் மற்றும் மகாதேவ சைவச் சிறுவர் இல்ல ஸ்தாபகரும் மற்றும் சைவ அன்பர்களை சைவநெறியில் தழைத்தோங்க செய்தவரும் ஆவார். இவரின் அளப்பெரிய சேவைகளின் காரணமாக சைவமும், தமிழும் கிளிநொச்சியில் மேலோங்கி வளர்ந்துள்ளது. மேலும், இவரின் சமாதிக் கிரிகைகள் நாளை கிளிநொச்சி ஜெயந்திநகர் மகாதேவ ஆச்சிரமத்தில் நடைபெற உள்ளது என மகாதேவ ஆச்சிரம நிர்வாக உறுப்பினர்கள் தெரிவிக்கின்…

  18. சக்தி டிவி செய்திகள் 27 08 2017 , 8PM

  19. உயிலங்குளம் வீட்டுத்திட்டத்தில் இருந்த மக்கள் வௌியேற்றம் -சுப்பிரமணியம் பாஸ்கரன் முல்லைத்தீவு - துணுக்காய் - உயிலங்குளம் இந்திய வீட்டுத்திட்டத்தில் உள்ள மக்கள், அடிப்படை வசதிகள் இன்மை மற்றும் வீடுகள் ஆபத்தான நிலையில் காணப்படுதல் காரணமாக, இப்பகுதியில் இருந்து வெளியேறி வருகின்றனர். முல்லைத்தீவு - துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள உயிலங்குளம் கிராமத்தில், இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் அமைக்கப்பட்ட 50 வீட்டுத்திட்டத்தில், தற்போது 20 வரையான குடும்பங்களே வாழ்ந்து வருகின்றன. கடந்த 2012ஆம் ஆண்டு, மேற்படி இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட 50 வீட்டுத்திட்டத்தின் மாதிரிக் கிராமத்தில…

  20. கொழும்பில் கற்க வாய்ப்பு -வி.தபேந்திரன் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் உள்ள விசேட தேவை உடைய மாணவர்களும், விக்டரி விசேட தேவை உடைய மாணவர்களுக்கு கல்வி வழங்கும் நிலையத்தில் சேர்ந்து கொள்ள முடியும் என, அந்த நிலையத்தின் இணைப்பாளர் நித்தியா தெரிவித்துள்ளார். இது தொடர்பில், அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “கொழும்பு - 13, புளுமென்டல் வீதியிலுள்ள இப்பாடசாலையில், விசேட தேவை உடைய மாணவர்களை ஒன்றாக இணைத்து, கல்வி கற்பிப்பதுடன், அவர்கள் தமது தேவையை தாமே நிறைவு செய்யவும் பழக்கி விடப்படுகிறது. “அத்தகைய மாணவர்களிடையே ஒரு தோழமையை வளர்த்து, சமூகத்தில் ஒன்றிணைந்து வாழ்வதற்கும் குழந்தைகளின் தன…

  21. ‘தொடர்பற்ற கல்வி முறைமை, நடுத்தெருவுக்கு கொண்டுசெல்லும்’ ஒன்றுடன் ஒன்று தொடர்பு அற்ற நிலையில் மேற்கொள்ளப்படுகின்ற கல்வி முறைமை, மாணவ - மாணவியரை நடுத்தெருவுக்குக் கொண்டு செல்வதுடன், அரசாங்கத்தின் பொருளாதார மேம்படுத்தல் கொள்கைகளும் வெற்றி பெறாமல் போகின்றன என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஜெற்விங் ஹொட்டலில், இன்று (27) காலை நடைபெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட கல்விக் கொள்கை மாற்றங்கள், எத்தனையோ திறமை மிக்க மாணவர்கள் சர்வதேச தரத்தில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்குத் தடை…

  22. இலங்கையில் இருந்து, கடந்த 2014ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி 45 கிலோகிராம் தங்கத்தை இந்தியாவுக்கு கடத்திச் செல்ல முற்பட்ட இருவரை கடற்படையினர் கைது செய்திருந்தனர். இந்த நிலையில் அந்த தங்கம் வட பிராந்திய கடற்படை தளபதியின் உத்தரவின் அடிப்படையில் சுங்க திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது. ரணதீர என்ற கப்பல் மூலம் வடபகுதி கடலில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது இந்த தங்கம் கைப்பற்றப்பட்டது. இருப்பினும் இந்த நடவடிக்கையில் பங்கேற்ற கடற்படையினர் மற்றும் சுங்க அதிகாரிகளுக்கு வழங்க வேண்டிய சிறப்பு கொடுப்பனவுகள் இதுவரை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. தேடுதல் நடத்தப்பட்டமை சம்பந்தமாக கடற்படை வெளியிட்ட அறிக்கையில் காணப்பட்ட குறைபாடு…

  23. கம்பவாரிதி ஜெயராஜ் சைவத் தமிழர்களின் புனிதமான வணக்கத்திற்குரிய அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தைக் கேலிச் சித்திரமாகப் பயன்படுத்தியுள்ளமைக்கு அகில இலங்கை சைவ மகா சபை கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. அவர் தனது செயலுக்காகச் சைவத் தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும். தனது இணையத்திலிருந்து குறித்த படத்தை நீக்க வேண்டும் எனவும் அகில இலங்கை சைவ மகாசபை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அகில இலங்கை சைவ மகா சபை வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளது. கம்பவாரிதி ஜெயராஜ் சைவத் தமிழர்களின் புனிதமான வணக்கத்திற்குரிய அம்மை அப்பர்களான சிவன் - உமை இணைந்த அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தை இலங்கை ஆட்சியாளரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில…

    • 2 replies
    • 803 views
  24. திலீபனின் தூபி நல்லூரில் துப்புரவு தியா­க­தீ­பம் திலீ­ப­னின் நினைவு நாள் அடுத்த மாதம் ஆரம்­ப­மா­க­வுள்ள நிலை­யில் நல்­லூ­ரில் அமைந்­துள்ள நினை­வுத் தூபியை தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யி­னர் நேற்­றுத் துப்­ப­ரவு செய்­துள்­ள­னர். தியாக தீபத்­தின் நினை­வு­நாளை கடந்த ஆண்டு ஜன­நா­ய­கப் போரா­ளி­கள் கட்சி மற்­றும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு என்­பன முன்­னெ­டுத்­தி­ருந்த நிலை­யி­லேயே, தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யி­னர் இந்­தத் துப்­பு­ரவு நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டுள்­ள­னர். இந்­திய இரா­ணு­வத்­தின் ஆக்­கி­ர­மிப்­புக்கு எதி­ராக அகிம்சை வழி­யில் போராடி வீரச்­சா­வ­ டைந்த தியாக தீபம் திலீ­ப­னின் நினை­வு­நாள் அடுத்த மாதம் 15ஆம் திகதி…

    • 2 replies
    • 610 views
  25. அண்மையில் தென்னிந்திய நடிகர் அஜித்தின் விவேகம் படம் உலகெங்கிலும் வெளியாகியது. அத்திரைப்படம் யாழ்ப்பாணத்திலும் சில திரையரங்குகளில் வெளியிடப்பட்டு வருகின்றது. இந்நிலையில், நடிகர் அஜித்தின் இரசிகர்கள் அவர்மீது கொண்ட மோகத்தினால், யாழ் நகரில் அவரது கட்டவுட்டினை உந்துருளிகளில் ஊர்வலமாகக் கொண்டு சென்றனர். இன்றைய இத்தலைமுறையினரின் இச்செயற்பாடானது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மாபெரும் விடுதலைப் போராட்டம் ஒன்று நடந்த மண்ணில், வியப்பூட்டும் கதாநாயகர்கள் வாழ்ந்த மண்ணில் நடிகர்களுக்கு விழா எடுக்கும் தலைமுறை வளர்வது யாழ். மக்களிடையே அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இவ்வாறு நடிகர்களுக்கு விழாவெடுக்கும் சம்பவங்கள் அண்மைக் காலங்களில் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்துகொண்ட…

    • 9 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.