ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143354 topics in this forum
-
முதலில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் – அரசாங்கம் முதலில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. புதிய அரசியல் சாசனம் அமைப்பது தொடர்பில் முதலில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். உத்தேச அரசியல் சாசனம் அமைக்கப்பட்டதன் பின்னர் அது தொடர்பில் மக்களின் கருத்தை அறிந்து கொள்ளும் நோக்கில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு நபரைச் சுற்றி காணப்படும் அதிகாரங்களை அனைத்து மக்களுக்கும் பகிர்ந்தளிக்கும் வகையில் புதிய அரசியல் சாசனம் அமைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஏனைய …
-
- 0 replies
- 275 views
-
-
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 13 மீனவர்கள் கைது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 13 உள்ளூர் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். கொக்கிளாய் மற்றும் கொக்குத்தொடுவாய் பகுதியிலுள்ள கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட போதே குறித்த 13 மீனவர்களும் இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது, 100 கிலோ கிராம் மீன், 3 பைபர் இழைப் படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் ஆகியன இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் 13 மீனவர்களையும் மேலதி விசாரணைக்காக முல்லைத்தீவு மாவட்ட நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர். …
-
- 0 replies
- 139 views
-
-
புனர்வாழ்வளிக்கப்பட்ட ‘புலிகள் பொறுப்பல்ல’ “யாழ்ப்பாணத்தில், அண்மைக் காலமாக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடுகளுடன், புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு எவ்விதத்திலும் தொடர்பு இல்லை” என்று, புனர்வாழ்வளிப்பு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக ரத்னாயக்க தெரிவித்தார். “நான் இதனை, நம்பிக்கையுடனும் மிகவும் பொறுப்புடனும் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றும் அவர் குறிப்பிட்டார். வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில், நேற்று (15) இடம்பெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். புனர்வாழ்வளிக்கப்…
-
- 0 replies
- 193 views
-
-
ஐ.தே.மு.தலைவர்கள் இன்று ஜனாதிபதி மைத்திரியுடன் சந்திப்பு ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் இன்று புதன்கிழமை இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தை அடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களை மதிய போசன விருந்துபசாரத்திற்…
-
- 0 replies
- 177 views
-
-
யோஷித்த ராஜபக் ஷவிடம் இன்று குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக் ஷவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று மூன்றரை மணி நேரம் சிறப்பு விசாரணைகளை மேற்கொண்டனர். செஞ்சிலுவை சங்கத்தினால் முன்னாள் முதற் பெண்மணி ஷிரந்தி ராஜபக் ஷவின் 'சிரிலிய சவிய' அமைப்புக்கு வழங்கப்பட்டு 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2015ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் திகதி வரை அந்த அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த (WP) KA-0642 எனும் டிபண்டர் வாகனம் தொடர்பில் இந்த விசாரணைகள் இடம்பெற்றன. குறித்த டிபண்டர் வாகனத்தின் நிறம் மாற்றப்பட்டமை தொடர்பில் ஏற்பட்டுள்ள சந்தேகங்களை முன்னிறு…
-
- 0 replies
- 298 views
-
-
கிளிநொச்சியை சூழும் அபாயம் : 815 பேருக்கு இதுவரை டெங்கு நோய்த்தொற்று கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் சடுதியாக அதிகரித்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட ஆராய்ச்சியியல் ஆய்வுப் பிரிவினர் எச்சரித்துள்ளனர். இவ்வாறு அதிகரித்துள்ள நுளம்புகள் டெங்குநோயாளிகளைக் கடிக்கநேரிட்டால் கிளிநொச்சி மாவட்டத்தில் அதிதீவிரமாக டெங்குநோய்த்தாக்கம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வுப்பிரிவினர் எச்சரித்துள்ளனர். தை மாதத்திலிருந்து நேற்று வரையான 227 நாட்களில் கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் மொத்தம் 815 பேர் டெங்குகாய்ச்சலால் பீடிக்கப்பட்டு, சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. இவர்…
-
- 0 replies
- 160 views
-
-
ஈழத்தில் புகழ்பெற்ற ஆலயமான யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பெருமளவிலான பக்தர்கள் நல்லூர் முருகன் ஆலயத்திற்கு வருகை தந்துள்ள நிலையில் வெளிநாட்டு முருக பக்தர்களும் நல்லூரை நோக்கி படையெடுத்துள்ளனர். இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து வருகை தந்துள்ள முருக பக்தர்கள் தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ஆலயத்திற்கு வருகை தந்துள்ளனர். குறிப்பாக ஆண்கள் மேலாடையின்றி ஆலயத்திற்குள் சென்று வழிபாடுகளில் ஈடுப்பட்டுள்ளனர். இதேவேளை, அங்கு இடம்பெறும் பூஜைகளிலும் வெளிநாட்டவர்கள் ஆர்வமாகவும், பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாள…
-
- 8 replies
- 520 views
-
-
20ஆம் திருத்தத்தை எதிர்த்து 10 வழக்குகள் தாக்கலாகும் நாடாளுமன்றுக்கு திருத்தம் வர முன்பே முடக்கத் திட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ள 20ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் 10 மனுக்களைத் தாக்கல் செய்ய அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. அனைத்து மாகாண சபைகளுக்கான தேர்தலை ஒரே நாளில் நடத்தும் வகையில் அரசமைப்பில் திருத்தம் செய்வதற்கான 20ஆவது திருத்தச்சட்ட வரைவு முன்வைக் கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக உயர் நீதிமன்றத் தில் மனுக்களைத் தாக்கல் செய்வதற்கு, பவ்ரல் மற்றும் கபே அமைப்புகள் தயா…
-
- 0 replies
- 206 views
-
-
A-380 விமானம் இன்று முதல் சேவையில் உலகின் மிகப்பெரிய விமானத்தின் மூலம் விமான போக்குவரத்தில் ஈடுபட இன்று முதல் இலங்கையர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்கமைய கட்டுநாயக்க பன்னாட்டு விமான நிலையத்தில் தரையிறங்கும், மிகப்பெரிய விமானம் இன்று முதல் உத்தியோகபூர்வமாக அதன் சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதை மிகப்பெரும் பொருட் செலவில் புனரமைக்கப்பட்டது. அதற்கமைய உலகின் மிகப்பெரிய விமானமான A-380 என்ற விமானமே கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்றைய தினம் தரையிறங்கவுள்ளது. குறித்த விமானம் தனது விமான சேவையை பொதுவான முறையில் தொடர்ந்து மேற்கொள்ளும் என போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவர…
-
- 14 replies
- 1.3k views
-
-
தமிழர்கள் ஏன் பொலிஸில் இணைய வேண்டும்; சி.வி விளக்கம் ow தமிழ் இளைஞர் யுவதிகள் பொலிஸ் சேவையில் இணைந்துகொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட கிழக்கு பகுதில் பொலிஸ் சேவையில் தமிழ் இளைஞர் யுவதிகள் இணைந்து பணியாற்றுவதன் ஊடாக மொழி ரீதியிலான சிக்கலை தீர்த்துக்கொள்ள முடியுமெனவும் அவர் வலியுறுத்தினார். யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகளுக்குமிடையில இன்று சந்திப்பு ஒ…
-
- 1 reply
- 416 views
-
-
சக்தி டிவி செய்திகள் 15 08 2017 , 8PM
-
- 0 replies
- 370 views
-
-
-
- 0 replies
- 268 views
-
-
மாகாணங்களின் கழிவு முகாமைத்துவ நடைமுறைகள் இவ்வருட இறுதிக்குள் நிறைவுசெய்யப்படல் வேண்டும் – ஜனாதிபதி நாட்டில் ஏற்பட்டுள்ள கழிவுகளை அகற்றுதல் தொடர்பான பிரச்சினைக்கு அடுத்த வருடத்தில் நிலையான தீர்வொன்றினை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகக் காணப்படுவதுடன், இவ்வருட இறுதிக்குள் 09 மாகாணங்களிலும் கழிவு முகாமைத்துவத்திற்கான உரிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி நிறைவுசெய்யப்பட வேண்டுமென ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி நிறுவனங்களின் கழிவு முகாமைத்துவ செயற்பாடுகளை முறைமைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடலின போதே ஜனாதிபதி இவ்வாறு ஆலோசனை வழங்கினார். கொழும்பு மற்றும் அதன…
-
- 0 replies
- 155 views
-
-
பதிவு செய்யப்படாத மருத்துவனை வவுனியாவில் சுற்றிவளைப்பு!! வவுனியாவில் இயங்கிவந்த பதிவு செய்யப்படாத தனியார் மருத்துவமனை ஒன்று இன்று சுற்றிவளைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. அங்கிருந்த மருந்து வகைகளும் கைப்பற்றப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வைத்தியசாலை எமது திணைக்களத்தில் பதிவு செய்யப்படவில்லை. மருந்துவகைகள் எவ்வாறானவை எனத் தெரியவில்லை. மருந்துகள் அனைத்தும் நீதிமன்றில் ஒப்படைக்கப்படும். மருந்துகள் சோதனைக்காக அனுப்பப்படும் என்று வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.லவன் குறிப்பிட்டார். இந்த வைத்தியசாலை ஹோமியோபதி சிகிச்சைகளை வழங்குகின்றது. மாத்தளையில் இருந்து வவுனியா வந்து சிகிச்சை வழங்கப்படுகின்றது …
-
- 1 reply
- 388 views
-
-
எதிர்ப்புக்களை எதிர்கொள்கிறார் வடக்கு முதலமைச்சர் முன்னாள் போராளிகள் தொடர்பாக வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்குப் பல்வேறு தரப்புக்களிடமிருந்தும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. கூட்டமைப்பின் ஒரு பங்காளிக் கட்சியான ரெலோ அமைப்பின் சார்பில் இதற்கு உடனடியாகவே கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் செயலாளரான ந.சிறிகாந்தா இது தொடர்பாக ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில், தமிழ் மக்களின் பேராதரவுடன் பதவிக்கு வந்த சி.வி.விக்னேஸ்வரன், போராளிகளுக்கு எதிராக இவ்வாறான கருத்துக்களைத் தெரிவித்துள்ளமை ஏற்று…
-
- 0 replies
- 308 views
-
-
புளுத் டுத் ஹெட் செட்டுடன் பரீட்சையில் மாட்டிய முஸ்லீம் மாணவி உயர் தர பரீட்சையை புளுத் டுத் உதவியுடன் எழுதிய முஸ்லீம் மாணவி கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பகுதியில் உள்ள முக்கிய பாடசாலை ஒன்றில் நேற்று (11) உயர்தர பரீட்சைக்காக முஸ்லீம் மாணவி ஒருவர் பாடத்திற்கு தோற்றி இருந்தார். இந்நிலையில் குறித்த மாணவி தனது உடலை முழுவதும் முஸ்லீம் கலாச்சார உடையுடன்(ஹபாயா) அணிந்து வந்திருந்தார். பரீட்சை ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம் சந்தேகத்திற்கிடமாக குறித்த மாணவியின் சத்தம் அடிக்கடி வெளிவந்த வண்ணம் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த சிங்கள சகோதரரான பரீட்சை மண்டப மேற்பார்வையாளர் பொலிஸாரின் உதவியை…
-
- 15 replies
- 2.1k views
- 1 follower
-
-
ஞானசார தேரருக்கு மீண்டும் அழைப்பு பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், தனக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக, வடறுக விஜித தேரரால், கொழும்பு – கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, இது தொடர்பில் வாக்குமூலம் அளிக்க, ஞானசார தேரருக்கு, கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/ஞானசார-தேரருக்கு-மீண்டும்-அழைப்பு/175-202409
-
- 0 replies
- 222 views
-
-
70ஆவது சுதந்திர தினம்...கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில், இன்று (15) காலை கொண்டாடப்பட்டது. இந்தியாவின் 70 ஆவது சுதந்திர தினம், கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில், இன்று (15) காலை கொண்டாடப்பட்டது. (படப்பிடிப்பு: தமித் விக்கிரமசிங்க) http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/70ஆவது-சுதந்திர-தினம்/46-202397
-
- 0 replies
- 240 views
-
-
‘கருத்து தெரிவிக்க முடியாது’...சி.வி. விக்னேஸ்வரன் - எஸ்.நிதர்ஷன் வட மாகாண அமைச்சரவை தொடர்பாக கேள்வியெழுப்பியபோது, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அது தொடர்பாகத் தற்போது கருத்துத் தெரிவிக்க முடியாது எனத் தெரிவித்தார். கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற யாழ். பொலிஸ் உயர் அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் பின் கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் கருத்து தெரிவித்தார். இதன்பின்னர், ஊடகவியலாளர்கள், வட மாகாண அமைச்சர்கள் தெரிவித்த கருத்துத் தொடர்பில் முதலமைச்சரின் கருத்தைக் கேட்ட போது, அவ்விடயங்கள் தொடர்பாக தற்போது கர…
-
- 0 replies
- 292 views
-
-
அரசாங்க படிவங்களை மும்மொழியில் அமைச்சர் மனோ ஆரம்பித்து வைத்தார் (க.கமலநாதன்) இலங்கையின் மொழிக்கொள்கை, மும்மொழிக் கொள்கை ஆகும். மொழிச்சட்டம், மும்மொழி சட்டமாகும். ஆகவே அனைத்து அரசாங்க அலுவலக படிவங்களிலும் மூன்று மொழிகளும் இடம்பெற வேண்டும். ஆனால், இதுபற்றி தொடர்ச்சியான அறிவுறுத்தல்கள் வழங்கியும் மும்மொழிகளிலும் அனைத்து அரசாங்க அலுவலக படிவங்கள் அமைவதில்லை. குறிப்பாக தமிழ் மொழிக்கு உரிய இடம் வழங்கப்படுவது இல்லை. இதை இனி அனுமதிக்க முடியாது. தமிழ் மொழி இப்படி கைவிடப்பட முடியாது. மும்மொழி மொழிச்சட்டம் மீறப்படவும் முடியாது. எந்த ஒரு அதிகாரியும் மொழிச்சட்டம் தனக்கு தெரியாது என…
-
- 0 replies
- 255 views
-
-
ரவி கருணாநாயக்க இராஜினாமா விவகாரம் விசாரணையின் பின்னரே இறுதித் தீர்மானம் : பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு (எம்.எம்.மின்ஹாஜ்) நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் இரு அமைச்சர்கள் இராஜினாமா செய்துள்ளனர். எம்மால் முடியுமான அளவிற்கு நல்லாட்சியை நாம் அமுல்படுத்தி வருகின்றோம். இதுவே நல்லாட்சிக்கான ஆரம்பமாகும். இனி தொடர்ந்து பயணிக்கும். மேலும் ரவி கருணாநாயக்கவின் இராஜினாமா தொடர்பில் விசாரணைகள் முடிந்து பூர்த்தியான முடிவு வந்த பின்னர் பரிசீலனை செய்து இறுதி தீர்மானத்தை அரசாங்கம் எடுக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நல்லாட்சியையும் சிறப்…
-
- 0 replies
- 402 views
-
-
விஜயதாஸ ராஜபக் ஷவுக்கு எதிராக பிரேரணை கொண்டுவந்தால் அரசாங்கத்தை எதிர்ப்போம் (ஆர்.யசி) நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக் ஷவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்தால் தாம் அரசாங்கத்தை எதிர்க்க வேண்டிய நிலை ஏற்படும் என்று மூன்று பெளத்த பீடங்களின் அனுநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டையும் பௌத்தத்aதையும் அழிக்கும் சர்வதேச சக்திகளும் அதற்கு துணைபோகும் இந்நாட்டு சக்திகளுமே இதற்கு பின்னணியில் உள்ளன எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அகில இலங்கை பெளத்த ஆலோசனை சங்கத்தில் நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர்கள் இதனைக் குறிப்பிட்டனர். அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் ஆனமடுவே தம்மதிஸ்ஸ தே…
-
- 1 reply
- 330 views
-
-
புலி துப்பாக்கியுடன் எஸ்.எப் கைது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவராகச் செயற்பட்ட, மிகமுக்கியமானவர் பயன்படுத்தியதாகக் கூறப்படும், ஆயுதத்தை விற்பதற்கு முயன்ற, இராணுவ விசேட படையணியின் (எஸ்.எப்) சார்ஜன்ட், கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டுத் தயாரிப்பான எம்.எம். 9 ரக கைத்துப்பாக்கி மற்றும் ஆறு ரவைகளை, 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கு முயன்றபோதே, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேலியகொடை பிரிவு, குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் குழுவால், ராகம மத்துமகல பிரதேசத்தில் வைத்தே, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். வன்னி மனிதாபிமான நடவடிக்கையின் இறுதிப் போர் இடம்பெற்…
-
- 2 replies
- 450 views
-
-
தானும் குழம்பி மக்களையும் குழப்பியடிக்கிறார் சுரேஷ் பொறுமையிழந்த மாவை சாட்டை அடி அறிக்கை 16 ஈபிஆர்எல்எவ் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தானும் குழம்பி மக்க ளையும் குழப்புகின் றார் என்று கடுமையா கச் சாடி அறிக்கை விட்டிருக்கின்றார் தமிழ் அரசுக் கட்சி யின் தலைவர் மாவை சோ. சேனாதிராசா. ‘‘அவர் மக்களையும் குழப்புகின்றார். அவ ருக்கு தனது செய்தி கள் பத்திரிகைகளில் வராவிட்டால் ‘மண்டை’ பிளந்து விடும்போ லும். பொய்ச் செய்தி களாயினும் அவ ருக்கு மகிழ்ச்சிதான்’’ என்று அவர் …
-
- 2 replies
- 302 views
-
-