ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143359 topics in this forum
-
’மாகாண சபை தொடர்பான சட்டத்திருத்தத்தை எதிர்க்க வேண்டும்’ - எஸ்.நிதர்ஷன் “மாகாண சபைகளை நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கான புதிய சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படுமாக இருந்தால், அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்க வேண்டும்” என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். சுரேஸ் பிரேமச்சந்திரனின் இல்லத்தில் இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “மாகாண சபைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடாத்துவது என்ற பெயரில், மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திவ…
-
- 0 replies
- 141 views
-
-
மைத்திரி, ரணில், ரவி சந்தித்துப் பேச்சு?! அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இன்று வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க உடன் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாகக் கலந்துரையாடினர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சரவை கூட்டதுக்குப் பின்னர் இந்த சந்திப்பு அரச தலைவர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது என்றும் கூறப்படுகின்றது. ரவி கருணாநாயக்க மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ரவி கருணாநாயக்க பதவி விலக வேண்டும் என்று பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். http://newuthayan.com/story/17853.html
-
- 0 replies
- 246 views
-
-
மஹிந்தவும் நானும் இணைவோம் ; சம்பந்தன் (க.கமலநாதன்) எமது நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் சம உரிமை கொண்ட ஒரே மக்களாவர் . இந்த நாடு என்றும் பிளவுபடவும் கூடாது. எமது பிரச்சினைகளையும் இலகுவாக தீர்த்துக்கொள்ள முடியும். எனவே அதனை புரிந்துக்கொண்டு முன்னாள் ஜனாதிபதியும் நானும் இணைந்து ஆட்சிபுரிய வேண்டும் என்று விரும்புகின்றேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ் வினைச்சொற்கள் விபரித்தல் என்ற தலைப்பில் ஜுலம்பிட்டியே மங்கள தேரரினால் இன்று மேல்மாகாண காலாசார சதுக்கத்தில் இடம்பெற்றது இந்நிழ்வில் விசேட விருந்தினராக கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு…
-
- 13 replies
- 2.2k views
-
-
பதவி விலகமாட்டேன் முடிந்தால் நீக்கட்டும் நான் அமைச்சுப் பதவியிலிருந்து விலகமாட்டேன். முதலமைச்சருக்கு அதிகாரம் இருந்தால் அதைப் பயன்படுத்தி என்னை நீக்கட்டும். அவர் நீதியரசர் என்றால் நான் சட்டத்தரணி. என்னைப் பதவியிலிருந்து நீக்கினால் என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும். இவ்வாறு ஆணித்தரமாகச் சவால் விட்டிருக்கிறார் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன். வடக்கு மாகாண அமைச்சரவையை முழுமையாக மாற்றியமைக்கப் போவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வ ரன், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களுடனான கூட்டத்தில் தெரிவி…
-
- 2 replies
- 538 views
-
-
வடக்கு மாகாண சபையைக் கலைக்கப் பரிந்துரையுங்கள் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்து வடக்கு மாகாண அமைச்சரவையிலிருந்து தமிழ் அரசுக் கட்சி ஒதுங்குமாயின், வடக்கு மாகாண சபையைக் கலைப்பதற்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பரிந்துரைக்கவேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு மாகாண எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது: வடக்கு மாகாணசபை மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ஆளும் கட்சியைச் சேர்ந்த 30 பேரும் ஒத்திருந்த போதே முதலமைச்சரினால் எதனையும் செய்யமுடியவில்லை. முதலமைச்சர் உடனடியாக மதிப்பார்ந்த முடிவை எடுக்க …
-
- 2 replies
- 366 views
-
-
யாழில் ஹாவா குழு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது – காவல்துறை மா அதிபர் யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த ஹாவா குழு முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுதந்தர தெரிவித்துள்ளார். இந்தக் குழுவின் தலைவர் உள்ளிட்ட 12 உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் இந்தக் குழுவுடன் தொடர்புடைய இரண்டு முக்கிய உறுப்பினர்கள் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். கைது செய்பய்பட்டவர்களில் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி போராளிகள் சிலர் உள்ளடங்குவதாகவும் இந்தக் குழுவினர் தமிழ் புலம்பெயர் சமூகத்துடன் பேணி வரும் உறவுகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் மா அதி…
-
- 5 replies
- 600 views
-
-
கனடாவிலிருந்து வந்தவரைக் காணவில்லை கனடாவிலிருந்து, வல்வெட்டித்துறைக்கு குடும்பத்துடன் வந்த 19 வயதுடைய பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக இன்று (09) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். ஆதிகோயிலடி பகுதியில் உள்ள உறவினர்கள் ஒருவரின் வீட்டில் தங்கி நின்றபோது இரவு நேரத்தில் இருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/கனடாவிலிருந்து-வந்தவரைக்-காணவில்லை/71-202081
-
- 0 replies
- 315 views
-
-
மனித உரிமை ஆணைக்குழுவில் துன்னாலை மக்கள் முறைப்பாடு - எஸ்.நிதர்ஷன் துன்னாலை, குடத்தனை பகுதியில் கைது செய்யப்பட்ட 42 பேரின் உறவினர்கள், மனித உரிமை ஆணைக்குழுவில் இன்று (09) முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். அண்மையில் சட்டவிரோதமாக மணல் அகழச் சென்றவர்கள் மீது, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில், இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, துன்னாலைப் பகுதியில் அமைந்திருந்த பொலிஸ் காவலரண், பொதுமக்களால் அடித்து நொருக்கப்பட்டு, தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. இதேவேளை, கடலோரப் பாதுகாப்புப் பணியை முடித்துவிட்டு முகாம் திரும்பிய கடற்படையினர் மீது, வல்லிபுரம் மாவடிச் சந்தியில் வைத்து, சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்தோர் தாக்குதல் மேற்கொண்டிர…
-
- 0 replies
- 210 views
-
-
வேலையற்ற பட்டதாரிகள் - முதலமைச்சர், ஆளுநர் சந்திப்பு - எஸ்.நிதர்ஷன், எம். றொசாந்த் வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வட மாகாண ஆளுநர் றெஜினோல் கூரே, யாழ். மாவட்ட செயலர் நாகலிங்கன் வேதநாயகம் ஆகியோரை இன்று (09) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். பட்டதாரிகளின் பணி நியமனம் தொடர்பாகவே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது. இது தொடர்பாக வேலையற்ற பட்டதாரிகள் கருத்து தெரிவிக்கையில், “நாடாளாவிய ரீதியில் தேசிய கொள்கைகள் மற்றும் அபிவிருத்தி அமைச்சால் பட்டதாரிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதில் 21 தொடக்கம் 35 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளை விண்ண…
-
- 0 replies
- 220 views
-
-
சுஐப் எம் காசிம் `எமது பிள்ளைகள் பல அயலிலுள்ள கிராமங்களுக்குச் சென்று தமிழ் மொழியிலேயே கல்வி கற்கின்றனர். இது எமக்கு மகிழ்ச்சி தருகின்ற போதும் நாங்கள் வாழும் கிராமத்தில் பாலர் பாடசாலை ஒன்றையும் அமைத்துத் தாருங்கள்` இவ்வாறு மன்னார் மறிச்சுக்கட்டிப் பிரதேசத்தில் சிங்கள கம்மான விஜயம் செய்த அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, ரிஷாட் பதியுதீன் ஆகியோரிடம் அந்த மக்கள் கோரிக்கை விடுத்தனர். அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அழைப்பின் பேரில் சிலாவத்துறை பிரதேசத்திற்கு விஜயம் செய்து அங்குள்ள வைத்தியசாலையின் தேவைகள், மற்றும் குறைப்பாடுகள் குறித்து அறிந்து கொண்ட அமைச்சர் ராஜித அதற்கான உரிய நடவடிக்கைகள் எடுத்த பின்னர் மறிச்சுக்கட்டிப் பிரதேசத்திற்கும் சென்றார். அங்கு வாழும் சிங்கள மக்களை …
-
- 2 replies
- 485 views
-
-
வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது Share யாழ். கொக்குவில் பகுதியில் வைத்து பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுன்னாகம் பொலிஸின் குற்றப் புலனாய்வு பிரிவினர் இவர்களைக் கைது செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 6ஆம் திகதி யாழ். கொக்குவில் பகுதியில் வைத்து பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் படுகாயமடைந்திருந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே மூன்று பேர் கைத…
-
- 0 replies
- 480 views
-
-
கொழும்பில் விபுலானந்தர் அடிகளார் ஆவணப்படம் வெளியீட்டு விழா இடம்பெற்றது. இந்த நிகழ்வு, இன்றைய தினம் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பொதுமக்கள், கல்விமான்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/religion/01/154477?ref=home-feed
-
- 3 replies
- 476 views
-
-
வடக்கில் குற்றங்களை கட்டுப்படுத்த விசேட பொலிஸ் பிரிவு! – பூஜித் ஜெயசுந்தர On 32 mins ago Share யாழ்ப்பாண மாவட்டத்தில் குற்றங்களைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் அதிக அதிகாரங்களுடன் கூடிய விசேட பிரிவுகளின் ஊடாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். இவ்வாறு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இன்று கண்டிக்குச் சென்ற பொலிஸ்மா அதிபர் மல்வத்துப்பீட மகாநாயகரை சந்தித்து ஆசிபெற்றுக்கொண்டார். அதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த சம்பவங்க…
-
- 21 replies
- 1k views
-
-
ரவிகரனிடம் விளக்கம் கேட்கிறார் முதலமைச்சர் வடக்கு மாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் ரவிகரனுக்கு எதிராகப் பொது அமைப்புக்கள் சுமத்தியுள்ள நிதி மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விளக்கமளிக்குமாறு கேட்டுள்ளார் வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வ ரன். வடக்கு மாகாண அமைச்சரவை மாற்றம் தொடர்பில் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அமைச்சுப் பதவி கொடுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகின்ற நிலையிலுமே, முதலமைச்சர் மேற்கண்ட நடவடிக்கையை எடுத்துள்ளார். ரவிகரனுக்கு எதிராக அந்த மாவட்டத்திலுள்ள சில அமைப்புக்க…
-
- 1 reply
- 332 views
-
-
வடமராட்சியில் ஒருவர் கைது வடமராட்சி அல்வாய்ப் பகுதியில் கல்லெறியுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரொருவர் நேற்றுக் கைதுசெய்யப்பட்டுள்ளார். அதே பகுதியை சேர்ந்த 48 வயதுடைய ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. துன்னாலை இளைஞனின் படுகொலை சம்பவத்தின் பிரகாரம் பொலிஸாரின் வீடு, பொலிஸ் நிலையம் மற்றும் பொலிஸாரன் வாகனம் என்பன பொதுமக்களால் தாக்குதலுக்குட்பட்டன. பொலிஸாரின் வாகனத்திற்கு கல் எறிந்த குற்றச்சாட்டுத் தொடர்பிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பருத்தித்துறைப் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.…
-
- 1 reply
- 370 views
-
-
லலித் ஜெயசிங்கவின் பிணை மனு நிராகரிப்பு – 22வரை மறியல் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில், பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள, லலித் ஜெயசிங்கவின் விளக்கமறியல் எதிர்வரும் 22 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. லலித் ஜெயசிங்க இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். அதன்போது இவ்வாறு உத்தரவிடப்பட்டது. லலித் ஜெயசிங்க சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகளால் பிணை கோரப்பட்டது. அதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் ஆட்சேபம் தெரிவித்தது. லலித் ஜெயசிங்க பொலிஸ் தர வரிசையில் 4 தர வரிசையில் பதவி வகித்தார். அவரைப் பிணையில் செல்ல அனுமதித்தால் சாட்சியங்களிலும், சான்றுக…
-
- 2 replies
- 308 views
-
-
பிரேரணை மீது விவாதமில்லை முதலமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களையும் விசாரணை செய்யும் வகையில் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க மாகாண சபைத் தெரிவுக்குழுவை அமைக்கக் கோரும் பிரேரணை நாளைய அமர்வில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்று தெரியவருகின்றது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைமையுடன் கலந்தாலோசித்த பின்னரே பிரேரணையை எப்போது விவாதத்திற்கு எடுத்துக்கொள்வது என்பது தொடர்பில் முடிவு எடுக்கப்படும் என்று அறிய முடிகின்றது. வடக்கு மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட 5 அமைச்சுக்களிலும் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிர்வாக முறைகேடுகள், மோசடிகள் தொடர்…
-
- 0 replies
- 195 views
-
-
அடுத்த அமைச்சர் யார் என ஆராய ரெலோ உயர் பீடம் மீண்டும்கூடுகிறது தமது கட்சிக்குக் கிடைக்கும் அமைச்சுப் பதவியை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பில் புளொட்டைத் தொடர்ந்து ரெலோவிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இது தொடர்பில் இறுதி முடிவு எடுப்பதற்காக அந்தக் கட்சியின் உயர் மட்டக் குழு எதிர்வரும் 12ஆம் திகதி கூடி ஆராயவுள்ளது. வடக்கு மாகாண அமைச்சரவையை முழுமையாக மாற்றப் போவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்திருக்கிறார். ரெலோ அமைப்பு தமது கட்சி சார்பாக அமைச்சரவையில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள பா.டெனீஸ்வரனை நீக்குமாறு கோரியிருந்தது. அத்தோடு அந்த…
-
- 2 replies
- 386 views
-
-
இராஜினாமா செய்கிறார் ரவி கருணாநாயக்க ? வெளிவிவகார அமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யுமாறு அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு பிரயோகிக்கப்படும் அழுத்தங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் இன்னும் சில தினங்களில் தனது பதவியை அவர் இராஜினாமா செய்வார் என அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. அதாவது இரண்டு கட்சிகளுக்கிடையிலும் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை கள், மற்றும் ஐக்கிய தேசியக்கட்சிக்குள்ளே ஏற்பட்டுள்ள அமைச்சர் ரவி மீதான எதிர்ப்பு மற்றும் விமர்சனங்கள் என்பவற்றின் காரணமாக அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது பதவியை தற்காலிக அடிப்படையில் இராஜினாமா செய்வார் என தெரியவருகிறது. மேல…
-
- 0 replies
- 300 views
-
-
'பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் ஊடாக பயங்கரவாதிகள் ஒன்றிணைகின்றனர் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தி பயங்கரவாதிகள் மிக இலகுவாக ஒன்றிணைந்து தமது நோக்கங்களை நிறைவேற்றி வருகின்றனர். இது இலங்கைக்கு மட்டுமன்றி அனைத்து நாடுகளுக்கும் பாரிய சவாலாக உருவெடுத்துள்ளது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இதனை முறியடிக்க உறுதியான விசாரணைக் கட்டமைப்பும், விரிவான தகவல் பரிமாற்ற கட்டமைப்பும் அவசியம். அதற்கு இன்டர்போல் எனும் சர்வதேச பொலிஸார் இலங்கையுடன் கைகோர்த்து உதவுவர் என நம்புகின்றேன் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். சர்வதேச பொலி…
-
- 0 replies
- 332 views
-
-
யாழ்ப்பாண மாநகர சபையின் நிகழ்வுகளுக்கு சபை எல்லைக்குட்பட்ட உறுப்பினர்களையே அழைக்குமாறு முதலமைச்சர் பணித்தாரா? நாளைய அமர்வில் கேள்வி எழுப்புவாராம் தவராசா யாழ்ப்பாண மாநகர சபையின் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாண மாநகரசபை எல்லைக்குள் வாழும் மாகாணசபை உறுப்பினர்களுக்கு மட்டும் அழைப்பு அனுப்புமாறு முதலமைச்சர் தனது அமைச்சு ஊடாகப் பணித்துள்ளாரா?’ இவ்வாறு மாகாண சபையின் நாளைய அமர்வில், சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா வாய் மூல கேள்வியெழுப்பவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. இது பற்றி மாநகர சபைக்குத் தங்கள் அமைச்சின் ஊடாக எழுத்து மூலமாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டதா? அவ்வா…
-
- 0 replies
- 258 views
-
-
இளைஞர்கள் கடத்தல் 2008ஆம் மற்றும் 2009ஆம் ஆண்டு காலப் பகுதியில் கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக மேலும் 3 கடற்படை அதிகாரிகள் கைது செய்யப்படவுள்ளனர். இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில், கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கொமடோர் டி.கே.பி.தசநாயக்க கடந்த மாதம் கைது செய்யப்பட்டு விளக்கமறிய லில் வைக்கப்பட்டுள்ளார். இவரிடம் நடத்தப்பட்ட விசா ரணைகளின் போதே, இந்தக் கடத்தல்களுடன், தொடர்புடைய மேலும் மூன்று கடற்படையினர் பற்றிய விபரங்கள் தெரியவந்துள்ளன. கொமடோர் தசநாயக்க அரசியல் ரீதியாக ச…
-
- 0 replies
- 140 views
-
-
புதிய வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன ? வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யுமிடத்து புதிய வெளிவிவகார அமைச்சராக தற்போதைய இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய பட்டியல் எம்.பி.யுமான திலக் மாரப்பனவை நியமிப்பதற்கு கட்சியின் தலைமை தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. வெளிவிவகார அமைச்சுப் பதவியானது நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டதிலிருந்து ஐக்கிய தேசியக்கட்சி வசமே இருக்கிறது. எனவே வெளிவிவகார அமைச்சராக இராஜாங்க அமைச்சர் திலக் மாரப்பனவே நியமிக்கப்படுவதற்கு சாத்தியம…
-
- 0 replies
- 314 views
-
-
வடக்கை அச்சுறுத்திய 'ஆவா' குறித்த இரகசிய தகவல்கள் வெளியாகின : பயங்கரவாத தடைச் சட்ட விதிகளின் கீழ் விசாரணை வடக்கை அச்சுறுத்தி வந்த ஆவா எனும் பாதாள உலகக் குழுவின் தற்போதைய தலைவனான நிஷா விக்டர் உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்த பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் (ரீ.ஐ.டி.) அவர்களை நேற்று மேலதிக விசாரணைகளுக்காக யாழ். பொலிஸாரிடம் கையளித்தனர். இதன்போது வாள், மோட்டார் சைக்கிள், கூரிய கத்தி, கைக்குண்டு பயன்படுத்தியமை மற்றும் வெளிநாட்டு தொடர்புகள், 2014 முதல் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புள்ளமை மற்றும் கடந்த ஆண்டும் குறித்த குழுவினர் பொலிஸாரை வெட்டியுள்ளமையும் போன்ற இரகசிய தகவல்கள் வெளிப்பட்டுள்ளன. இந் நிலையில் வடக்கு பிராந்தியத்துக்கு பொற…
-
- 0 replies
- 159 views
-
-
வித்தியா படுகொலை: விஜயகலா உள்ளிட்ட 2 பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஊடாக சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. வித்தியா படுகொலையின் பிரதான சந்தேகநபரான சுவிஸ் குமார் தப்பிச்செல்ல உதவிபுரிந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிப…
-
- 2 replies
- 325 views
-