ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
சக்தி டிவி செய்திகள் 8PM (11-07-2017)
-
- 0 replies
- 198 views
-
-
புறமுதுகு காட்டி ஓட வேண்டாம் நான்கு சமயத் தலைவர்கள் கூறுவதை கேட்பதெனின் பாராளுமன்றம் எதற்கு? கூட்டமைப்பு சபையில் கேள்வி (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) சமயத்தலைவர்கள் நான்கு பேர் கூறுவதால் அரசாங்கம் முக்கிய விடயங்களை மேற்கொள்வதிலிருந்து பின்வாங்குகின்றதா என்ற பாரிய சந்தேகம் எமது மக்களுக்கு எழுந்துள்ளது. அவ்வாறு கூறுவதனால் தான் விடயங்கள் நிறுத்தப்படுமாக இருக்கும் என்றால் இந்தப் பாராளுமன்றம் தேவையில்லை. நான்கு பேரும் சேர்ந்து நாட்டில் என்ன நடக்க வேண்டுமென சட்டமியற்றிக் கொண்டிருக்கலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சபை யில் காட்டமாக தெரி…
-
- 9 replies
- 757 views
-
-
கிளிநொச்சியில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகம்!? கிளிநொச்சி நகர்ப்புறங்களில் உள்ள பாடசாலை மாணவர்கள் சிலரிற்கு மாவா என்கின்ற போதைப்பொருள் விற்பனை செய்த குற்றத்தில் நேற்று இரவு இரணைமடுப் பகுதியில் வைத்து ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த நபர் பாடசாலை மாணவர்களுக்கு குறித்த போதைபொருளை விநியோகிக்கின்றார் என கிராம மக்களால் கிளிநொச்சி முல்லைத்தீவிற்கான பிரதிப்பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெளிக்கன்னவிற்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாகவே குறித்த கைது இடம்பெற்றுள்ளது. அதன்பிரகாரம், அப்பகுதி சிறுவன் ஒருவனுடன் சிவில் உடையில் சென்ற பொலிஸார் ஒருவர் போதை…
-
- 0 replies
- 242 views
-
-
மாற்றுத் தலைமைக்கு இடமில்லை – வடமாகாண முதலமைச்சர்! தமிழ் மக்களுக்கான மாற்றுத் தலைமைக்கு இடமில்லையெனவும், ஒற்றுமையே பலம் எனவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெல்லி வைட்டிங் மற்றும் வடமாகாண முதலமைச்சருக்கு இடையில் முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று விஷேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த முதலமைச்சர் அண்மையில் ‘தடுமாறாத தமிழர்களுக்கு தலைமை ஏற்பது யார்?’ என்ற கலந்துரையாடலில் தமிழ் மக்களுக்கான தலைமையை விக்னேஸ்வரன் ஏற்கவேண்டுமென வலியுறுத்தப்பட்டதாகவும் அது தொடர்பான அவரது நிலைப்பாடு என்ன எனவும் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலள…
-
- 0 replies
- 283 views
-
-
வட மாகாண சபை உறுப்பினர்களின் உதவியாளர் விவரத்தை 14 நாள்களுள் வழங்க ஆணைக்குழு பணிப்பு இவை சிறப்புரிமைக்குள் உள்ளடங்காது எனவும் தெரிவிப்பு வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் 33 பேரினதும், முகாமைத்துவ உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர்களின் விவரங்களை வழங்குவதற்கு மறுப்புத் தெரிவித்தமைக்கு எதிராக, தகவலுக்கான உரிமைகள் ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு, கோரிய தகவல்களை வழங்குமாறு வடக்கு மாகாணப் பேரவைச் செயலாளருக்கு ஆணைக்குழு பணிப்புரை விடுத்துள்ளது. வடக்கு மாகாண பேரவைச் செயலகத்துக்கு இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி, வடக்கு மாகாண சபை உறுப்…
-
- 1 reply
- 316 views
-
-
மட்டு. மாவட்ட செயலாளரை இடமாற்றக் கோரி ஆர்ப்பாட்டம் இரு பிரதேச செயலாளர்களின் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு (பட்டிருப்பு நிருபர்) மட்டக்களப்பு மாவட்ட செயலாளரை இடமாற்றக்கோரியும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள இரண்டு பிரதேச செயலாளர்களின் இடமாற்றங்களை இரத்துச்செய்யக்கோரியும் மட்டக்களப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் நேற்று திங்கட்கிழமை முற்பகல் முன்னெடுக்கப்பட்டது. ஊழலுக்கு எதிரான மக்கள் பேரணியும் நியாயமான அதிகாரிகளின் இடமாற்றத்தினை ரத்துச்செய்வதற்குமான வேண்டுகோள் என்னும் தலைப்பில் இந்த கவன ஈர்ப்பு போராட்டமமும் பேரணியும் நடைபெற்றது. மட்டக்களப்பில் ஊழல்களில்…
-
- 0 replies
- 217 views
-
-
துப்பாக்கிச் சூட்டுக்கு அவசியம் இருக்கவில்லை பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவிப்பு (எம்.எப்.எம்.பஸீர்) பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வடமராட்சி கிழக்கு - மணல்காடு பகுதியில் மணல் லொறி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட விவகாரமானது, பொலிஸார் அதிகாரத்தை அளவுக்கதிகமாக பயன்படுத்தியதன் எதிரொலி என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி ருவான் குணசேகர தெரிவித்தார். இதனால் துப்பாக்கிச் சூட்டை நடாத்தியதாக கூறப்படும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரையும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரையும…
-
- 0 replies
- 300 views
-
-
இலங்கையில் தொடரும் அதிசயம் ; கொழும்பிலும் காய்த்துக் குலுங்கும் பேரீச்சம் பழம் நுவரெலியாவை தொடர்ந்து முதன் முறையாக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னாலுள்ள பேரீச்ச மரமும் பூத்து காய்த்துள்ளமை பார்ப்பவர் கண்களை அதிசயத்தில் ஆழ்த்தி உள்ளது. இவ்வருடம் நாட்டில் நிலவிய அதிக வெப்பநிலை காரணமாகவே இவை காய்க்க தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மரம் சுமார் 50 ஆண்டுகள் பழமையானது என ரயில் நிலையத்தில் பணிப்புரியும் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார். Tags http://www.virakesari.lk/article/21731
-
- 7 replies
- 2.1k views
-
-
இராவணனின் மாளிகையை பார்க்க நிலத்திற்கு கீழ் 3000 அடி வரை சென்ற தேரர் ; பேஸ்புக் பதிவில் வெளியிட்ட தகவல் இராமாயண வரலாற்றில் புகழ் பெற்ற இலங்கையின் மூத்த மன்னனும் மூத்த தமிழ்க் குடியின் தலைவனுமான இராவணனின் மாளிகை ஒன்று கற்குகை ஒன்றினுள் அமைந்திருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், முதல் முறையாக பௌத்த தேரர் ஒருவர் அங்கே சென்று திரும்பி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அந்த தேரர் தனது பேஸ்புக் கணக்கில் பதிவென்றை பதிவேற்றம் செய்துள்ளார். இந்த சுரங்கப் பாதையானது பாரிய அடர்ந்த காட்டுக்கு மத்தியில் உள்ளதனால் அந்தப் பிரதேச மக்களின் உதவி இல்லாமல் அங்கே செல்ல முடியாது. இருள் படர்ந்த அதைப் பார்த்தவுடன் மிகுந்த …
-
- 10 replies
- 1.3k views
-
-
புதிய அரசியலமைப்பை நிச்சயம் கொண்டுவருவோம் வரைபை பௌத்த பீடங்களுக்கு முன்வைத்துவிட்டே நிறைவேற்றுவோம் என்கிறது ஐ.தே.க. (ந.ஜெகதீஸ்) நல்லாட்சிக்கு மக்கள் வழங்கிய ஆணைக்கமைவாக சக லரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான புதிய அரசியலமைப்பொன்று நிச்சயம் கொண்டுவரப்படும். இவ்அரசியலமைப்பு 1972 ஆம் ஆண்டு மற்றும் 1978 ஆம் ஆண்டு களில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புக்களுக்கு அப்பால் சென்று நாட்டின் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதாக அமையும் என்று காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். புதிய அரசியலமைப்பின் மூலம் பௌத்த மதத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்…
-
- 2 replies
- 319 views
-
-
சிறப்புரிமையைக் காரணமாகக் குறிப்பிட்டு விசாரணை அறிக்கையை வழங்காது விடுவது தவறு முதலமைச்சர் அமைச்சுக்கு ஆணைக்குழு அறிவுறுத்தல் வல்வெட்டித்துறை நகர சபை தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைக் குழுவின் முழுமையான அறிக் கையை, சிறப்புரிமையைக் காரணமாகத் தெரிவித்து வழங்காமல் விடுவது தவறு. இந்த விசாரணையில் மூன்றாம் தரப்பினரும் தொடர்புபட்டிருப்பதால், அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து அறிவிக்குமாறும், விசாரணை அறிக்கை வெளியிடப்படுவதில் பொதுமக்கள் நலன் இருக்குமாக இருந்தால், ஆணைக்குழு அறிக்கையை வழங்கப் பணிக்கும் என்றும், ஆணைக்குழுவின் உறுப்பின…
-
- 0 replies
- 321 views
-
-
"இரு வாரங்களில் ஊடகங்களில் வெளிப்படுவார் ஞானசார தேரர்" பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் விரைவில் ஊடகவியலாளர்களை சந்திப்பார். இருவாரங்களில் அவர் ஊடக சந்திப்புகளில் வெளிப்படுவார் என அவ்வமைப்பின் நிறைவேற்று அதிகாரி திலாந்த விதானகே தெரிவித்தார். ராஜகிரிய சத்தர்மாராஜித விஹாரையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் இன்னும் இரு வாரங்களில் ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுவார். தற்காலத்தில் நாட்டில் எழுந்…
-
- 1 reply
- 348 views
-
-
ரயர் கொழுத்தி போக்குவரத்துக்கு தடை!! -துன்னாலையில் பதற்றம்!! கலிகைச் சந்திக்கும், துன்னாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் சாலையில் ரயர்களைக் கொழுத்தி மக்கள் போக்குவரத்தைத் தடை செய்துள்ளனர். பருத்தித்துறை – கொடிகாமம் சாலையூடான போக்குவரத்து இதனால் தடைப்பட்டுள்ளன. நேற்று பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் துன்னாலை மேற்கைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். அதையடுத்து அந்தப் பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்தது. http://uthayandaily.com/story/10551.html
-
- 2 replies
- 539 views
-
-
இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலிய அருன்ட்டா போர்க்கப்பல் அவுஸ்திரேலிய கடற்படைக்கு சொந்தமான "அருன்ட்டா" போர்க்கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இலங்கை–அவுஸ்திரேலிய நாடுகளின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த ஆண்டில் இதுவரையிலான காலகட்டத்தில் வருகை தரும் 25 ஆவது போர்க்கப்பல் இதுவாகும். அவுஸ்திரேலிய கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பலான எச்.எம்.ஏ.எஸ். அருன்ட்டா போர்க்கப்பல் நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றைய தினம் இலங்கை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. நேற்றுக்காலை வந்தடைந்த இந்த போர்க்கப்ப…
-
- 0 replies
- 330 views
-
-
காணி, பொலிஸ் அதிகாரங்களுக்கு மேலதிகமாக தமிழர்களுக்கு நிதி சட்டவாக்க அதிகாரங்கள் வடக்கு-கிழக்குத் தமிழர்களுக்குக் காணி,பொலிஸ் அதிகாரங்களுடன் சேர்த்து நிதி, சட்டவாக்க அதிகாரங்களையும் அரசு மேலதிகமாக வழங்கவுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். பன்னாட்டு நிகழ்ச்சி நிரலில் நடக்கும் இந்தத் தேசவிரோத அரசமைப்பால் நாட்டுக்குப் பேராபத்து ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது: அரசால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசமைப்புக்கு எதிராக இன்று பௌத்த பீடங்கள் களமிறங்கியுள்ளன. பௌத்த தேரர்கள் எல்லாவற்றையும் எத…
-
- 0 replies
- 389 views
-
-
"எவருடைய மன்னிப்பும் எனக்கு அவசியமில்லை" யுத்த குற்றச்சாட்டுக்களில் ராஜபக் ஷவினரை மன்னிக்க வேண்டும் என ஒரு சிலர் கூறுகின்றனர். எவரதும் அநாவசிய மன்னிப்புகள் எனக்கு அவசியம் இல்லை. எனக்கு நியாயமே அவசியம் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷ தெரிவித்தார். எமக்கு எதிராக தனிப்பட்ட அரசியல் பழிவாங்கல் இடம்பெற்று வருகின்றது. நாம் செய்யாத குற்றங்களில் எம்மை சிக்க வைக்க முயற்சித்து வருகின்றனர். இந்த அரசாங்கதின் உண்மைமுகம் இப்போது வெளிப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பாரிய நிதிமோசடி குற்றச்சாட்டுகளை விசாரணை செ…
-
- 0 replies
- 248 views
-
-
அதிகாரங்களை தக்கவைத்துக் கொள்வதற்காகவும், பதவிகளை அடைய வேண்டுமெ ன்பதற்காகவும் தமிழ் – முஸ்லிம் உறவு மேலோங்கவேண்டுமென்ற மனோபாவம் மாற்றப்பட்டு, இரண்டு சமூகங்களினதும் அடிநாதப்பிரச்சினைகளைத் தீர்க்கப்பட்டு மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு இனநல்லுறவு வழிசமைக்க வேண்டுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அம்பாறைமாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மூத்த ஊடகவியலாளர் ஏ.எல்.எம்;. சலீமின் 50வருட சேவையை பாராட்டும் விழாவும், ‘பொன்விழா காணும் சலீம்’ எனும் நூல் வெளியீடும் நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். கௌரவ அதிதிகளாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதி…
-
- 7 replies
- 638 views
-
-
வடக்கு கிழக்கை மீள இணைக்குமாறு கோரப்படவில்லை – அரசாங்கம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கு கிழக்கு மாகாணங்களை மீள இணைக்குமாறு கோரப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. பெருந்தெருக்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல இதனைத் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் சாசனத்திற்கு ஆதரவு திரட்டும் முனைப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்றில் ஆதரவு திரட்டப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட உள்ளதாக சிலர் பிழையான தகவல்களை வெளியிட்டு வருவதாகத் தெரிவித்துள்ள அவர் வடக்கு கிழக்கினை இணைக்கவோ நாட்டை பிளவுபடுத்தவோ கோரப் போவதில்லை என தமிழ் அரசியல் கட்சிகளே கூறி வரும் நிலையில் சில…
-
- 0 replies
- 353 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (10-07-2017)
-
- 0 replies
- 392 views
-
-
சம்பந்தனை காட்டிக்கொடுத்ததாக வெளியான செய்தி குறித்து பதிலளிக்கின்றார் வியாளேந்திரன் எம்.பி
-
- 0 replies
- 360 views
-
-
ஆவா குழுவினர் இருவர் கைது - பாரதூரமான குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட நிலையில், மானிப்பாய் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த, ஆவா குழுவைச் சேர்ந்த இருவரை, இன்று (10) கைது செய்துள்ளதாக, மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். கைதான இருவரும், கொக்குவில் பிறவுண் வீதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதான சந்தேக நபர்களிடம் இருந்து, வாள்கள் இரண்டு, மோட்டார் சைக்கிள் ஒன்று என்பன பொலிஸரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில், கடந்த மாதங்களில், பல்வேறு வாள்வெட்டு சம்பவங்கள் பதிவாகியிருந்தன. ஆனந்த வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் மீது சரமாரியாக வாள்வெட்டு மேற்கொண்…
-
- 1 reply
- 408 views
-
-
‘மஹாநாயக்க தேரர்கள் நடிகர்கள்’ “ஒன்றுபட்ட இலங்கையின் கீழ் தான் அரசியல் தீர்வு என்று சம்பந்தன் பல தடவை அடித்து எடுத்துரைத்துள்ளார். இந்நிலையில், சிங்கள இனவாதம் வலுப்பெறாவிட்டால், தமிழ் மக்களின் கருத்துகள், நியாயங்கள் அரங்கேறிவிடும் என்பதற்காக சில சிங்கள இனவாத புத்திஜீவிகளின் கபட நாடகத்தின் நடிகர்கள் தான் இந்த மஹாநாயக்க தேரர்கள்” என, ஜனநாயக மக்கள் காங்கிரஸ் நிர்வாக செயலாளர் என்.ரவிகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “சிங்கக் கொடியை ஏற்றி ஒருமைப்பாட்டை வெளியிட்ட சம்பந்தனின் நல்லெண்ணத்தை மஹாநாயக்கர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நல்லாட்ச…
-
- 0 replies
- 252 views
-
-
வடமராட்சி யில் பொலிஸார் சூடு: இளைஞர் சாவு!! வடமராட்சி கிழக்குப் பகுதியில் ஒருவர் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார். அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வல்லிபுரம் ஆலயத்துக்குச் செல்லும் சாலையில் 6 ஆம் கட்டைப் பகுதியில் இன்று பிற்பகல் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதனால் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது என்று அறிய முடிகின்றது. உயிரிழந்தவர் 24 வயதுடையவர் என்று தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்தவரின் உடல் மந்திகை ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவர் சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்தார் என்றும், பொலிஸார் மறித்தபோதும் அவர் நிற்காத காரணத்தாலேயே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்றும் பொலிஸ் த…
-
- 18 replies
- 2.2k views
-
-
கேப்பாப்பிலவு மக்களை சந்தித்தார் வடக்கு முதல்வர் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் கேப்பாப்பிலவு மக்களுக்கும் இடையே இன்று காலை சந்திப்பு நடந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்க வேண்டும் என்று வற்புறுத்தி 138 நாள்களாக கேப்பாப்பிலவு மக்கள் தொடர் போராட்டம் நடத்துகின்றனர். அவர்களின் கோரிக்கை தொடர்பில் இதுவரை சாதகமான பதில்கள் வழங்கப்படவில்லை. இன்று முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் முன்பாக போராட்டம் நடத்திய மக்களை வடக்கு முதலமைச்சர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். கேப்பாப்பிலவு மக்களின் காணி விடுவிப்புத் தொடர்பான பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற்றுப் கொடுக்கப…
-
- 11 replies
- 664 views
-
-
வெள்ளை வேன் கலாசாரத்தை கொண்டு வந்த அரசியல் பூதங்களே காணாமல் போனோர் சட்டமூலத்தை எதிர்க்கின்றன மஹிந்தவை கடுமையாக சாடுகிறார் மங்கள சமரவீர (எம்.எம்.மின்ஹாஜ்) காணாமல் போனோர் விடயத்தில் ராஜபக் ஷவினரே சர்வதேசத்திற்கு இராணுவத்தை தொடர்புபடுத்தி காண்பிக்க முனைகின்றனர். காணாமல் போவதிலிருந்து ஆட்களை பாதுகாக்கும் சட்டமூலம் எதிர்காலத்தை மையப்படுத்தியதே அன்றி கடந்த கால செயற்பாடுகளுக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது. எனினும் நாட்டிற்கு வெள்ளைவேன் கலாசாரத்தை கொண்டு வந்த அரசியல் பூதங்கள் மக்களின் கவனத்தை திசைத்திருப்ப பார்கின்றனர். வெள்ளை வேன் கலாசாரத்தை நாட்டிலிருந்து மு…
-
- 0 replies
- 235 views
-