ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142776 topics in this forum
-
அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் கல்வி விதிமுறைகள் 2025 ஆம் ஆண்டிலும் கட்டம் கட்டமாக தொடரும் என்று கல்வி அமைச்சு (education ministry)வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த ஆண்டு அனைத்து சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கும் கல்வி விதிமுறைகள் கட்டம் கட்டமாக நடத்தப்படும். சாதாரணதர, உயர்தர பரீட்சை 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடத்தவும் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. எனினும், 2025 க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒக்டோபர்/நவம்பர் 2025 இல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2025 பாடசாலை ந…
-
- 0 replies
- 329 views
-
-
தமிழரசுக் கட்சியில் இளைஞர், பெண்கள் இணைய வேண்டும் - பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அழைப்பு 01 Jan, 2025 | 04:05 PM (எம்.நியூட்டன்) “பொதுத் தேர்தலில் நாம் பெற்ற பின்னடைவிலிருந்து மீண்டு எழுவதற்கான சந்தர்ப்பமாக உள்ளூராட்சிமன்றத் தோ்தல்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ள தமிழரசுக் கட்சியின் இடைக்கால பதில் தலைவா் சி.வி.கே.சிவஞானம், “இளைஞா்கள், பெண்கள் கூடுமானவரையில் எமது கட்சியில் இணைந்துகொள்ள வேண்டும். அதிலிருந்து பொருத்தமானவா்களை நாம் வேட்பாளா்களாகத் தெரிவு செய்வோம்” என்றும் தெரிவித்தாா். யாழ்ப்பாணத்தில் உள்ள தமது அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (31) ஊடகவியலாளா்களை சந்தித்த போதே…
-
-
- 8 replies
- 502 views
-
-
Published By: DIGITAL DESK 7 01 JAN, 2025 | 04:29 PM தொல்லியல் திணைக்களத்தினால் காணிகள் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று புதன்கிழமை (01) காலை மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர். திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் தொல்லியல் சின்னங்கள் இல்லாத தனியாருக்கு சொந்தமான காணிகளையும், பிரதேச சபைக்கு சொந்தமான காணிகளையும் தொல்லியல் திணைக்களம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே அப்பகுதி மக்கள் இன்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது “புதைபொருள் திணைக்களமே குச்சவெளி சந்தைக்கட்டட காணியை புதைக்காதே”, “தொல்பொருள் திணைக்களமே குச்சவெளி நெற்களஞ்சிய கட்டடத்திற்கு …
-
- 2 replies
- 223 views
- 1 follower
-
-
01 JAN, 2025 | 04:22 PM வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகத்தை, பலாலி விமானப்படைத்தளபதி குறூப் கப்டன் குமாரசிறி சம்பிரதாயபூர்மாக இன்று புதன்கிழமை காலை (01) ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். புத்தாண்டு வாழ்த்துக்களை இருவரும் பரிமாறிக்கொண்டதுடன், எதிர்காலத்தில் தொடர்ந்து சந்தித்துப் பேசுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/202711
-
-
- 4 replies
- 355 views
- 1 follower
-
-
01 JAN, 2025 | 04:40 PM எமது பொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாண தேவையான பொருளாதார நிகழ்ச்சி நிரலை இந்த புத்தாண்டில் நடைமுறைப்படுத்த தயாராக உள்ளோமென ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். “கிளீன் ஶ்ரீலங்கா” வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் வகையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (01) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் கூறியதாவது: பொது மக்களின் செயலூக்கமான பங்களிப்புடன் மாத்திரமே '' கிளீன் ஶ்ரீலங்கா '' வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும். …
-
-
- 7 replies
- 536 views
- 1 follower
-
-
உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் அறிவிப்பு! உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் இன்னும் இரண்டு வாரங்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. குறித்த சட்டமூலம் வர்த்தமானிக்காக அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக கோரப்பட்ட வேட்புமனுக்களை மீளப்பெறுவதற்கு இந்த திருத்தங்கள் வழங்குகின்றதுடன் புதிய வாக்காளர்களுக்கு வாக்களிப்பதற்கு வாய்ப்பளிக்கும் முக்கிய நோக்கத்துடன் இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் கட்சித் தலைவர்களின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் இந்த…
-
-
- 3 replies
- 350 views
-
-
தற்போது அரிசி விலைகளில் ஏற்பட்டுள்ள உயர்வு, எதிர்காலத்தில் உணவு பொதிகளின் விலைகளின் அதிகரிப்பை தூண்டும் என அநுராதபுரம் மாவட்ட சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று அநுராதபுரத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், சங்கத்தின் தலைவர் இந்திக்க அருண குமார கூறியதாவது, "அரிசி நெருக்கடி காரணமாக, பல உணவகங்கள் மூடப்படுவதுடன், உணவு பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படுவதாக எதிர்பார்க்கப்படுகிறது" என்று தெரிவித்தார். இந்த நிலையில், அரசாங்கம் இறக்குமதி செய்த 5,200 மெற்றிக் தொன் அரிசியின் முதல் தொகுதி மற்றும் 580 மெற்றிக் தொன் கொண்ட இரண்டாவது தொகுதி நேற்று நாட்டை வந்தடைந்துள்ளன. கொழும்பில் நடந்த செய்தியாளர் மாநாட்டில், அரச வர்த்தக சட்ட ரீதியான கூட…
-
- 0 replies
- 401 views
- 1 follower
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலத்தில் அபிவிருத்தி பணிகளின்போது நடைபெற்ற ஊழல்கள் தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் வெளிநாட்டுவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் முன்னெடுக்கப்பட்ட 725 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் 25 மில்லியன் ரூபாக்களாக பிரிக்கப்பட்டு எந்தவித ஒப்பந்த விண்ணப்பங்கள் கோரல்களும் இல்லாமல் வேலைத்திட்டங்கள் முறைகேடாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தர். மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் நேற்று (30) வரலாற்றில் முதன்முறையாக முழுநாள் கூட்டம…
-
- 0 replies
- 204 views
-
-
கிளிநொச்சி புளியம்பொக்கணையில் இனம் தெரியாத இருவரின் சடலங்கள் மீட்பு! adminJanuary 2, 2025 கிளிநொச்சி A 35 பிரதான வீதியில் உள்ள புளியம்பொக்கணை பகுதியில் இனம் தெரியாத இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. A 35 பிரதான வீதியின் புளியம்போக்கனை பகுதியில் அமைந்துள்ள பாலத்திலேயே குறித்த இரண்டு ஆண்களின் சடலங்களும் இனங்காணப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதே வேளை, புறக்கோட்டை மிதக்கும் வணிக வளாகத்திற்கு (floating market) அருகே உள்ள நீரோடையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று (02.01.25) காலை மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிட்டதக்கது. https://globaltamilnews.net/2025/209873/
-
- 0 replies
- 236 views
-
-
இலங்கையின் தேசிய புலனாய்வுப் பிரிவிற்கு புதிய தலைவர்! தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் ஓய்வு! adminJanuary 2, 2025 மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய (ஓய்வு) இலங்கையின் தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய (ஓய்வு) தனது நியமனக் கடிதத்தை பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகோந்தவிடமிருந்து (ஓய்வு) நேற்று புதன்கிழமை (01) பெற்றுக்கொண்டார். அதனையடுத்து, மேஜர் ஜெனரல் வணிகசூரிய (ஓய்வு) நேற்று ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயிலுள்ள பாதுகாப்பு அமைச்சில் உள்ள தனது அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார். தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் ஓய்வு! தேசிய புலனாய்வுப் பிரிவின் (CNI) பிரதானியான மே…
-
- 0 replies
- 221 views
-
-
புத்தாண்டில் அதிரடி நடவடிக்கைகளுக்கு தயாராகும் அரசாங்கம்! பல்வேறு மோசடி மற்றும் ஊழல் வழக்குகளில் தொடர்புடைய ஒரு முக்கிய அரசியல் பிரமுகரின் செல்வாக்கு மிக்க மனைவி உட்பட ஐந்து அரசியல்வாதிகள் இந்த ஆண்டு தொடக்கத்தில் கைது செய்யப்படுவார்கள் தகவல்கள் வெளியாகியுள்ளன. நம்பகமான அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு சிங்கள ஊடகமான மவ்பிம இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாக பொய்யாக வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்ட சக்திவாய்ந்த அரசியல்வாதி, ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சுற்றுலா வாரியத்திற்குள் …
-
-
- 6 replies
- 463 views
-
-
யாரும் ஒரு காலமும் யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் தரமாட்டோம் என எப்போதும் தெரிவிக்கவில்லை எனவும் யாழ் மக்கள் அந்தளவிற்கு முட்டாள் இல்லை எனவும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது இன்று (26) இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் யாழிற்கான கிளிநொச்சி இரணைமடுக்குளம் நீர் விநியோகத்திட்டம் குறித்து யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண குடிநீருக்கான இரணைமடுக்குளம் வேலைத்திட்டமானது கடந்த கால அரசாங்களில் இருந்து தற்போது வரை நடைமுறைப்படுத்தப்படாதமை தொடர்பில் சுட்டிக்காட்டியே அர்ச்சுனா தனது கேள்விகளை முன்வைத…
-
-
- 15 replies
- 1.1k views
- 1 follower
-
-
இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டம் ஒழிக்கப்படல் வேண்டும் ; செல்வம் 01 Jan, 2025 | 03:29 PM நாட்டில் ஏற்பட்டுள்ள இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு, பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக ஒழிக்கப்பட்டால் அனுர அரசாங்கம் பொருளாதார ரீதியில் அச்சப்பட வேண்டிய அவசியம் ஏற்படாது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (01) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், புலம்பெயர்ந்துள்ள எம் உறவுகள், எம் நா…
-
- 2 replies
- 301 views
-
-
குறைந்த செலவில் தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் ! 77வது தேசிய சுதந்திர தினத்தை கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் குறைந்த செலவில் கொண்டாட இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதேநேரம் கொண்டாட்டங்களை பார்க்க பொதுமக்களும் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது இதனை தெரிவித்துள்ளார். நாட்டின் கௌரவத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த நிகழ்வு, பெருமையுடனும், பிரமாண்டத்துடனும் கொண்டாடப்பட வேண்டும். இருப்பினும், நாட்டின் பொருளாதாரம் சரிவில் இருப்பதால், 77வது தேசிய சுதந்திர தினத்தை குறைந்தபட்ச செலவில் கொண்டாடுவதில் க…
-
-
- 14 replies
- 691 views
-
-
விகாரைகளில் பணியில் இருந்த இராணுவத்தினர் நீக்கம்: பொதுஜன பெரமுன கட்சி கண்டனம் December 31, 2024 விகாரைகளில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த இராணுவத்தினரை தற்போதைய அரசாங்கம் நீக்கியுள்ளது. இராணுவத்தினர் விகாரைகளின் நிர்மாணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தே இராணுவத்தினர் விகாரைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பௌத்த விகாரைகளில் பணிக்கமர்த்தப்பட்டிருந்த இராணுவத்தினரை அங்கிருந்து நீக்கியது தவறான நடவடிக்கையாகும் என பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் விமர்சித்துள்ளார். பத்தரமுல்லையில் உள்ள பொதுஜன பெரமுண கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலு…
-
-
- 7 replies
- 738 views
-
-
01 JAN, 2025 | 01:49 PM (நமது நிருபர்) வட பகுதி மீனவர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை ஜனவரி மாத இறுதியில் சந்தித்துப் பேசுவதற்கு கடற்றொழிலாளர் அமைப்புகள் தீர்மானித்துள்ளன. அதேவேளையில் எதிர்வரும் 4ஆம் திகதி சனிக்கிழமை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரையும் இவ்வமைப்புகள் சந்தித்துப் பேசவுள்ளன. தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்திற்கும், வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்திற்கும் இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில் நேற்று நடைபெற்றது. இந்தச் சந்திப்பிலேயே இது தொடா்பான தீமானம் எடுக்கப்பட்டது. இந்த சந்திப்பில் கடற்றொழில் அமைச்சால் முன்மொழியப…
-
- 0 replies
- 113 views
- 1 follower
-
-
அனைத்து மக்களும் ஒன்றிணைந்த அபிவிருத்தியடைந்த இலங்கை பற்றிய கனவை நனவாக்கும் வாய்ப்பு உங்களுக்கும் எமக்கும் கிடைத்துள்ளது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில், சுதந்திரத்தின் பின்னர் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மக்கள் நேய அரசாங்கத்தை உருவாக்கி, அனைத்து மக்களும் ஒன்றிணைந்த அபிவிருத்தியடைந்த இலங்கை பற்றிய கனவை நனவாக்கும் வாய்ப்பு உங்களுக்கும் எமக்கும் கிடைத்துள்ளது. விட்டுக்கொடுக்க முடியாத இந்தப் பாரிய பொறுப்பு நம் அனைவரின் தோள்களிலும் சுமத்தப்பட்டுள்ளது. அந்தப் பொறுப்பு குறித்து எங்களுக்கு நல்ல புரிதல் உள்ளது. இந்த நூற்றாண்டின் …
-
- 4 replies
- 256 views
- 1 follower
-
-
மஹிந்த பிரபுக்கள் புலிகளுடன் நெருக்கமாக செயற்பட்டவர்கள்; பாதுகாப்பு வழங்குவது அவசியமற்றது - சரத் பொன்சேகா Published By: Vishnu 01 Jan, 2025 | 01:38 AM (இராஜதுரை ஹஷான்) மஹிந்த ராஜபக்ஷ விடுதலை புலிகளுடன் தனிப்பட்ட முறையிலா போரிட்டார் இன்றும் அவருக்கு உயிரச்சுறுத்தல் இருப்பதற்கு, விடுதலை புலிகளுடன் நெருக்கமாக செயற்பட்டார் ஆகவே அவர் மீது புலிகள் அமைப்பினர் தாக்குதல் நடத்த போவதில்லை. நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய மஹிந்தவுக்கு பிரபுக்கள் பாதுகாப்பு வழங்குவது அவசியமற்றது என முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். கொழும்பில் செவ்வாய்க்கிழமை (31) ந…
-
- 3 replies
- 411 views
-
-
பாராளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கோட்டஹச்சியின் நற்பெயருக்கு சமூக வலைதளங்களில் களங்கம்; குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு Published By: Vishnu 01 Jan, 2025 | 01:47 AM (எம்.வை.எம்.சியாம்) தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி நிலாந்தி கோட்டஹச்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பகிரப்படுவதாகத்தெரிவித்து அது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (31) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டாளர் ஒருவரினால் இந்த போலியான பிரசாரம் முன்…
-
- 2 replies
- 260 views
-
-
தும்புதடியினுள் போதைப்பொருளை மறைத்து சிறைச்சாலைக்குள் கொண்டுசெல்ல முற்பட்ட பெண் கைது Published By: Vishnu 01 Jan, 2025 | 01:27 AM (செ.சுபதர்ஷனி) 10 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருள் தும்புதடியினுள் மறைத்து சிறைச்சாலைக்குள் கொண்டுசெல்ல முற்பட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரை திங்கட்கிழமை (30) பார்வையிட சென்றிருந்த பெண் ஒருவரே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு தனது கணவரை பார்வையிட சென்ற பெண் உணவு மற்றும் பானங்களை கொண்டு சென்று வழங்கியுள்…
-
- 4 replies
- 328 views
-
-
மேம்பட்ட பல வசதிகளுடன் காங்கேசன்துறை நாகை படகுசேவை ஜனவரியில் மீள ஆரம்பம்! adminDecember 15, 2024 காங்கேசன்துறைக்கும் நாகைப்பட்டினத்துக்கும் இடையிலான படகுசேவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீண்டும் வாரத்துக்கு ஆறுநாட்கள் மேம்பட்ட வசதிகளுடன் ஆரம்பமாகவுள்ளதாக சுபம் குழுமத்தின் தலைவரும், காங்கேசன்துறை, நாகைப்பட்டனம் படகுசேவை முதலீட்டாளருமான பொன்னுசாமி சுந்தர்ராஜ் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (15.12.24) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில், “எமது பிறதொரு நிறுவமான சுபம் நிறுவனம் காங்கேசன்துறை, நாகைப்பட்டினத்துக்கு இடையிலான படகுசேவையில் முதலீ…
-
-
- 8 replies
- 448 views
- 1 follower
-
-
வெளிநாட்டு வேலைவாய்ப்பில் கடந்த ஆண்டு சாதனை! இலங்கை வரலாற்றில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அதிகளவானோர் நாட்டிலிருந்து புறப்பட்ட ஆண்டாக 2024 ஆம் ஆண்டு பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் 2022 இல் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு வேலைவாய்ப்புப் புறப்பாடுகள் பதிவாகியிருந்ததாகவும், கடந்த 2019 முதல் 2024 வரையான ஆறு வருடங்களில் மொத்தம் 1.3 மில்லியன் பேர் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியுள்ளதாக SLBFE தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில், 185,162 ஆண்களும் 127,674 பெண்களும் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலான இலங்கைத் தொழிலாளர்கள் குவைத்துக்கு (77,546), ஐக்கிய அரப…
-
- 1 reply
- 187 views
-
-
வருவாயில் இலங்கை சுங்கம் மைல்கல்! இலங்கை சுங்கத்துறை கடந்த வருடம் 1.5 டிரில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானத்தை பதிவு செய்துள்ளது. அதன்படி, கடந்த வருடம் 1.515 இலட்சம் கோடி ரூபா வருமானம் பதிவாகியுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர், மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சிவலி அருக்கொட தெரிவித்தார். இது ஒரு வருடத்தில் இலங்கை சுங்கத்தால் ஈட்டப்பட்ட அதிகூடிய வருமானமாகும். அரசாங்கத்தின் வரிக் கொள்கை, இறக்குமதியின் அளவு அதிகரிப்பு மற்றும் சுங்க முகாமைத்துவத்தினால் மேற்கொள்ளப்படும் வரி அறவீடு நடவடிக்கையின் வினைத்திறன் என்பன இதற்கான தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2025/1414760
-
- 1 reply
- 158 views
-
-
மட்டக்களப்பில் வீட்டுவேலை தொழிலாளர்களின் சம்பள பட்டியல் வெளியிட்டு வைப்பு; 8 மணித்தியால வேலைக்கு 2000 ஆயிரம் ரூபா Published By: DIGITAL DESK 2 31 DEC, 2024 | 05:19 PM மட்டக்களப்பில் வீட்டுவேலை தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் நாள் ஒன்றிற்கு 8 மணித்தியாலத்திற்கு 2000 ரூபாவாக நிர்ணயித்து அது தொடர்பான சம்பளம் பட்டியல் ஒன்றை வீட்டு வேலை தொழிலாளர் சங்கம் இன்று செவ்வாய்க்கிழமை (31) வெளியிட்டு வைத்தது. மட்டக்களப்பு டயஸ் லேனிலுள்ள வீட்டுவேலை தொழிலாளர் சங்க காரியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சம்பள பட்டியலைச் சங்க செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் வெளியிட்டுவைத்து இவ்வாறு தெரிவித்தனர். மா…
-
-
- 8 replies
- 529 views
- 1 follower
-
-
2022ஆம் ஆண்டு நடைபெற்ற அரகலய போராட்டம் எனது உண்மையான நண்பர்கள் மற்றும் உண்மையான எதிரிகள் யார் என்பதை வெளிப்படுத்தியது என ஓய்வு பெற்ற இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்(BMICH) இடம்பெற்ற சவேந்திர சில்வாவின் பதவி விலகும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், “2022ஆம் ஆண்டு அரகலய போராட்டத்தினால் ஏற்பட்ட குழப்ப நிலை, எனது இராணுவ வாழ்க்கையில் ஒரு சிக்கலான கட்டமாகும். இது எனது உண்மையான நண்பர்கள் மற்றும் உண்மையான எதிரிகள் யார் என்பதை காட்டிக்கொடுத்தது. குறைந்தபட்ச அதிகாரம் இராணுவம் என்பது ஒரு உத்தியோகபூர்வ ஆயுதப் படையாகும். …
-
- 2 replies
- 265 views
-