ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143373 topics in this forum
-
அரசாங்கம் உத்தரவிட்டால் காணிகளை விடுவிக்கத் தயார் – சிறிலங்கா இராணுவத் தளபதி சிறிலங்கா அரசாங்கம் உத்தரவிட்டால், பொதுமக்களின் காணிகளை இராணுவத்தினர் விடுவிக்கத் தயாராக இருப்பதாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தெரிவித்துள்ளார். சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடந்த சந்திப்பு ஒன்றில் சிறிலங்கா இராணுவத் தளபதி தம்மிடம் இவ்வாறு குறிப்பிட்டதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறினார். காணிகள் விடுவிப்பு உள்ளிட்ட வடக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நேற்று முற்பகல் 11.30 மணியளவில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த…
-
- 0 replies
- 326 views
-
-
நான் அமைச்சரும் அல்ல, அரசியல்வாதியும் அல்ல யாழ்ப்பாண மக்கள் எல்லா பிரச்சினைகளுக்கும் என்னிடமே வருகின்றார்கள். நான் அமைச்சரும் அல்ல, அரசியல்வாதியும் அல்ல. ஒரு ஆளுநர் என வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (18) மதியம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஆளுநரிடம் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு தொடர்பாக கேட்டபோதே இதனைத் தெரிவித்துள்ளார். பட்டதாரிகளுக்கு வேலை கொடுப்பது மாகாண சபையினதும்இ மத்திய அரசாங்கத்தினதும் கடமையாகும். எனக்கு அந்த கடமை இல்லை. முன்னர் இவ்வாறான பிரச்சினை தொடர்பாக நான் அறிந்திருக்கவில்லை. தொண்டர்கள் தமக்கான நிரந்தர நியமனத்தை கோருவதையே அறிந்திருக்கின்றேன். இப்போது 1…
-
- 1 reply
- 266 views
-
-
ஜீ. எஸ். பி. வரிச்சலுகை விவகாரம் : இலங்கைக்கு இன்று பெல்ஜியத்தில் பலப்பரீட்சை ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி வரிச் சலுகையை இலங்கை மீண்டும் பெற்றுக்கொள்வது தொடர்பான முக்கியமான கூட்டத்தொடர் இன்று பெல்ஜியம் - பிரசெல்ஸ் நகரில் ஆரம்பமாகின்றது. இதன் போது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் மட்ட குழுவின் மதிப்பீட்டு அறிக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. மனித உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் காரணமாக நீக்கப்பட்ட ஜீ.எஸ்.பி. வரிச் சலுகை மீண்டும் மே மாதத்தில் இருந்து கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. …
-
- 0 replies
- 291 views
-
-
ஐரோப்பிய ஒன்றியம் விசனம் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகைக்கான, இலங்கையின் விண்ணப்பம் தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கு முன்னர், இலங்கையின் தொழிலாளர் உரிமைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உண்மையறியும் குழுவொன்று விசனங்களை தெரிவித்துள்ளது. சுதந்திர வர்த்தக வலயத்தினுள் தொழிலாளர் உரிமைகள் மீறப்படுதல், பாலியல் தொல்லை, தொழிற்சங்கத் தலைவர்களை வேலை நீக்கம் செய்தல், தொழிற்சங்கங்களுக்குத் தொல்லை கொடுத்தல் உட்பட தொழிலாளர் உரிமை மீறல்களுக்கு முகம் கொடுக்கும் ஊழியர்களை, ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழு சந்தித்துள்ளது என சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுச் சேவைகள் ஊழியர் சங்கம் கூறியது. ஐரோப்பிய நாடாளுமன்…
-
- 0 replies
- 381 views
-
-
கிளிநொச்சி - பளைப்பகுதியில் பொலிஸாரின் செயற்பாடுகள் அத்துமீறி உள்ளதாகவும், இதனால் பல்வேறு தரப்புக்களை சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பளைப்பகுதியில் வீதி போக்குவரத்து கண்காணிப்புக்களில் ஈடுபட்டு வரும் பொலிஸார் பெண்களை வழிமறித்து அவர்களை நீண்டநேரம் காக்க வைப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இதேவேளை ஏனைய வாகனங்களை வழிமறித்து உரிய ஆவணங்களை பரிசோதனை செய்துவிட்டு அச்சுறுத்தும் பாணியில் செயற்பட்டு வருகின்றனர் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனை விட பொலிஸ் நிலையத்தில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் செய்யப்படுகின்ற முறைப்பாடுகள் உரிய முறையில் விசாரணை செய்யப்படுவதில்லை எனவும் குற்றஞ்சாட்டியள்ளனர். இதேவேளை குடும்பப்பி…
-
- 4 replies
- 521 views
-
-
“விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்னுடைய போர் இல்லை மாறாக அது இந்தியாவின் போர்” மஹிந்த:- “விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை இந்தியாவே செய்தது, அது எனக்கும் மட்டுமான யுத்தத்தை அல்ல மாறாக இந்தியாவிற்கும் இதில் பாரிய பங்குள்ளது” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியில் கருத்து வெளியிட்ட மஹிந்த ராஜபக்ஷ, விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு நான் இந்தியாவை உதவி செய்யச் சொல்லிக் கேட்கவில்லை மாறாக இந்தியா தானே முன்னவந்து பல்வேறு உதவிகளை செய்திருந்தது. சாதகமான வழிகள் ஊடாக பல உதவிகளை வழங்கியிருந்தனர். உண்மையில் அது என்னுடைய போர் இல்லை மாறாக இந்தியாவின் போர்…
-
- 5 replies
- 925 views
-
-
அன்னை பூபதியின் 29வது நினைவு கூரல் மட்டக்களப்பு நாவலடியில் தழிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்ட காலத்தில் தமிழர் உரிமையை வலியுறுத்தியும் இந்திய அமைதிகாக்கும் படையினரின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்தும் உண்ணா விரதமிருந்த நிலையில் உயிர் நீத்த அன்னை பூபதியின் 29வது நினைவு கூரல் மட்டக்களப்பு நாவலடியில் உள்ள அவரது கல்லறையில் நாளை மாலை 3 மணிக்கு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தநிகழ்வு மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் அன்னை பூபதியின் உறவினர்களால் சமாதிக்கு மாலையணிவிப்பு, மலரஞ்சலி, நினைவுச் சுடரேற்றல், அகவணக்…
-
- 1 reply
- 405 views
-
-
மோதலை வேடிக்கை பாரத்ததால் கடித்துக் குதறப்பட்டார் இளைஞர் சாவகச்சேரி - வரணி கரம்பைக்குறிச்சிப் பகுதியில் இரு பகுதியினருக்கிடையில் ஏற்பட்ட மோதலை வேடிக்கை பாரத்த இளைஞரை பற்களால் கடித்துக் குதறியுள்ளார் நபரொருவர். கரம்பைக்குறிச்சியை சேர்ந்த 18 வயதுடைய இளைஞரே இவ்வாறு கடிகாயங்களுக்கு இலக்கான நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று இடம்பெற்ற இச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது, குறித்த பகுதியில் இரு பகதியினருக்கிடையில் ஏற்பட்ட மோதலை பலர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் ஓடிவந்து அங்கிருந்த இளைஞரை பற்களால் கடித்துக் குதறியுள்ள…
-
- 4 replies
- 785 views
-
-
வேலையில்லா பட்டதாரிகளின் போராட்டத்திற்கு தீர்வு வழங்க முடிவு வடக்கு, கிழக்கு மாகாணத்தில் வேலையில்லா பட்டதாரிகளின் போராட்டத்திற்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அதனை முகாமைத்துவ திணைக்களத்திற்கு அனுப்பி அதற்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான அமைச்சரவையின் அனுமதிகள் கிடைத்த பின்னர் அதற்கான விண்ணப்பக் கோரல்கள் இடம்பெறும் என்று சுமந்திரன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் செயலகத்தின் ஏற்பாட்டில் தமிழ், சிங்கள புத்தாண்டில் நாட்டின் தேசிய இன நல்லிணக்கத்திற்கான வகிபாகம் என்னும் தொனிப் பொருளிலான புத்தாண்டு நிகழ்வு இன்று யாழ்ப்பாண மா…
-
- 0 replies
- 364 views
-
-
போராட்டங்கள் நியாயமானவை மக்களின் கருத்துகளுக்கு முன்னுரிமை எதிர்க்கட்சித் தலைவர் அறிவிப்பு (ஆர்.ராம்) காணிகளை மீட்டெடுப்பதற்காக மக்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் நியாயமானவை. அவ்வாறான போராட்டங்களினால் தொடர்ந்து எமது மக்கள் அவஸ்தைக்குள்ளாவதை நாம் விரும்பவில்லை என எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். அத்துடன் மக்கள் விருப்பத்தை தாண்டி நாம் எதனையும் செய்யப்போவதில்லை எனக் குறிப்பிட்ட சம்மந்தன் மக்களின் கருத்துக்களுக்கே முதலிடம் அளிக்கப்படுமெனவும் திட்டவட்டமாகத் அறிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்…
-
- 0 replies
- 176 views
-
-
புலிகளின் ஜெயந்தன் அணியைத் தேடி வேட்டை ஏ.எச்.ஏ.ஹுஸைன் தமிழீழ விடுதலைப் புலிகளின், ஜெயந்தன் படையணியைச் சேர்ந்த உறுப்பினர்களை தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக, பாதுகாப்புத் தரப்புத் தகவல் தெரிவிக்கின்றது. அந்தப் படையணியிலிருந்து தப்பிச்சென்று, தென்னிந்தியாவில் தலைமறைவாகி வாழ்ந்தவர்களில் சிலர் நாட்டுக்குள் மீண்டும் வந்துள்ளதாக தகவல் கிடைத்ததையடுத்தே, இந்தத் தேடுதல் வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்தத் தகவல் மேலும் தெரிவிக்கின்றது. ஜெயந்தன் படையணியைச் சேர்ந்தவர்களில் சிலர், மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலேயே, நடமாடுவதாக தகவல் கிடைத்துள்ளது என்றும் அந்தத்தரப்பு தெரிவித்த…
-
- 2 replies
- 399 views
-
-
புதிய துணைவேந்தரிடம் பல்வேறு எதிர்பார்ப்புகள் - யாழ்ப்பாணப் பல்கலை சமூகம் தெரிவிப்பு மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் இன்னமும் பூர்த்தி செய்யப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன. புதிதாக பதவியேற்கும் துணைவேந்தர் இந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்வார் என மாணவர்கள் எதிர்பார்ப்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் ரஜீவன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, இப்போது பல்கலைக்கழகப் பட்டப்படிப்பு முடிந்தவுடன் வெளியே வேலை செய்வதற்கு கணனி மற்றும் ஆங்கில அறிவு தேவைப்படுகின்றது. அதனை முறையாகக் கற்பதற்குத் தனித்தனி அல…
-
- 0 replies
- 377 views
-
-
புதிய அரசமைப்பு உருவாக்கம் ; ரணில் நாடு திரும்பியவுடன் இடைக்கால அறிக்கை வரும் புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை, தலைமை அமைச்சர் ரணில் விக்கிர மசிங்க நாடு திரும்பியவுடன் இறுதி செய்யப்பட்டு கட்சிகளுக்கு வழங்கப்படவுள்ளது. புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்காக நாடாளுமன்றம் அரசியல் நிர்ணயச் சபையாக மாற்றப்பட்டுள்ளது. அரசியல் நிர்ணயச் சபையினால் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கியதாக வழிநடத்தல் குழு அமைக்கப்பட்டுள்ளது. வழிநடத்தல் குழுவின் இந்த மாதக் கூட்டத்தில் இடைக்க…
-
- 0 replies
- 228 views
-
-
மயிலிட்டியில் ஆயுதக் கிடங்கு முழுப் பொய் - அப்படி ஒன்றுமே இல்லை என்கிறார் ராணுவத் தளபதி மயிலிட்டியில் ஆயுதக் கிடங்கு இருப்பதாகச் சொல்லப்படுவது முழுப் பொய். அப்படி ஒன்றும் அங்கே இல்லை. இவ்வாறு இராணுவத் தளபதி கிரிசாந்த டி சில்வா, கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நேற்றுத் தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இந்தத் தகவலை வெளிப்படுத்தியுள்ளார். யாழ்ப்பாணம் மயிலிட்டித் துறைமுகத்துக்குத் தனியார் வர்த்தக கப்பல்கள் வந்து செல்கின்றன. ஆனால் பொதுமக்களின் பாவனைக்கு அதனை ஏன் கையளிக்க மறுக்கின்றீர்கள் என்று கடற்படையி…
-
- 0 replies
- 316 views
-
-
வடக்கு காணி விவகாரம்: இருநாள் கள விஜயம் பேரின்பராஜா திபான் வடக்கு காணி விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு, கள விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது. அந்தக் கள விஜயத்தின் பின்னரே, காணிப்பிரச்சினைக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்கமுடியும் என்றும் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அதன்பிரகாரம், நாளை 19ஆம் திகதி முல்லைத்தீவுக்கும் மறுநாள் 20 ஆம் திகதி காலையில் யாழ்ப்பாணத்துக்கும், மாலையில் கிளிநொச்சிக்கும் சென்று காணிப் பிரச்சினைகளை அக்குழு ஆராயவுள்ளது. இந்த தகவலை, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்…
-
- 1 reply
- 341 views
-
-
“தனித்த பயணத்தை ஆரம்பிக்க தயார்” : எஸ்.பி.திசாநாயக (ஆர்.யசி) ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்து செயற்பட தயாரில்லாத நபர்களை நிராகரித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தனித்த பயணத்தை ஆரம்பிக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தயார் என அமைச்சர் எஸ்.பி.திசாநாயக தெரிவித்தார். இம்முறை மே தினக் கூட்டம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பலத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார். கண்டியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/19100
-
- 0 replies
- 158 views
-
-
சிவில் பாதுகாப்புப் பண்ணையில் பணியாளர்களிடம் பணம் அறவீடு : அதிகாரிகள் விசாரணைக்காக கொழும்புக்கு அழைப்பு கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்களப் பண்ணைப் பணியாளர்களிடம் முறையற்ற விதத்தில் பணம் அறிவிடப்படுகின்றது என்று செய்யப்பட்ட முறைப் பாட்டை அடுத்து பண்ணையின் அதிகாரிகள் விசாரணைக்காகக் கொழுப்புக்கு அழைக்கப்பட்டனர் என்று தெரியவருகின்றது. போர் நிறைவடைந்த பின்னர் மக்களும், மறுவாழ்வு வழங்கப்பட்ட போராளிகளும் மீள்குடியமர்த்தப்பட்ட னர். அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடன் இந்தப் பண்ணை ஆரம்பிக்கப்பட்டது. அங்கு பணியாற்றுபவர்…
-
- 0 replies
- 317 views
-
-
ஹய்ட்டியில் ஐ.நா. அமைதிப் படையில் பணியாற்றியபோது அங்குள்ள சிறுவர்க ளைத் துர்நடத்தைக்கு உட்படுத்தினர் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கை இராணுவத்தினர் தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதுவர் நிக்கி ஹாலே வலியுறுத்தினார். ‘ஹெய்ட்டியில் ஐ.நா. அமைதிப் படையில் பணியாற்றியபோது, சிறுவர்களை பாலியல் துர்நடத்தைக்கு உட் படுத்திய இலங்கைப் படையினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் பாதுகாப்பாக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஹெய்ட்டியில் ஐ.நா.வினால் அமைதிகாப்பு பணிக்காக அமர்த்தப்பட்ட 900 பேர் கொண்ட இராணுவ பற்றாலியனைச் சேர்ந்தவர்களில் 134 பேர் மீதே இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளத…
-
- 2 replies
- 447 views
-
-
எதிர்காலத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் வேலையற்ற பட்டதாரிகள்..! மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தங்களது தொழில் உரிமை கோரிய சத்தியாகிரக போராட்டத்தில் குதித்து இன்றுடன் 55 நாட்கள் கடந்தும் இதுவரைக்கும் எந்தவித நடவடிக்கையும் அரசோ அதிகாரிகளோ எடுக்கவில்லை என கவலை வெளியிட்டுள்ளனர். கடந்த காலங்களில் எத்தனையோ பெயர் வந்து வாக்குறுதிகளை வழங்கினார்கள் அவைகள் அனைத்தும் வெறும் வாக்குறுதிகளாவே இருக்கின்றது. ஆனாலும் தங்களது தொழில் உரிமை கிடைக்கும் வரை போராட்டங்களை கைவிடுவதில்லை என்ற நம்பிக்கையுடன் தங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். http://www.virakesari.lk/article/19064
-
- 8 replies
- 843 views
-
-
நயினாதீவில் ஜனாதிபதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நயினாதீவுக்கு இன்று திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். தனது பாரியாருடன் நயினாதீவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நயினை நாகபூசணி அம்மான் ஆலய தரிசனத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/19092
-
- 1 reply
- 511 views
-
-
பஸ்ஸில் பயணித்த சிறுபான்மையினத்தவர் மீது கொலை வெறித்தாக்குதல் : பொலநறுவையில் சம்பவம் பேருந்தில் பயணித்த சிறுபான்மையினத்தைச் சேர்ந்த பயணி மீது கொலை வெறித்தாக்குதலொன்று மேற்கொள்ளப்பட்டு பேருந்தில் இருந்து இழுத்து வீதியில் வீசப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் கடந்த 15 ஆம் திகதி இரவு 10.20 மணியளவில் பொலநறுவை, செவனப்பிட்டிய என்ற பகுதியில் இடம்பெற்றுள்ளது. முச்சக்கரவண்டியொன்றை வீதிக்குக் குறுக்கே நிறுத்தி பேருந்தை சுற்றி வளைத்த ஏழுக்கும் மேற்பட்ட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தோரே வவுனியாவிலிருந்து மட்டக்களப்பை நோக்கிப் பிரயாணித்த சிறுபான்மைனித்தவர் ஒருவரை இவ்வாறு பலவந்தமாக அடித்து இழுத்துச் சென்று தாக்குதலை மேற்கொண்டுவி…
-
- 0 replies
- 390 views
-
-
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் போனவர்களது உறவுகளை மிரட்டும் பாணியில், தம்மை சி.ஐ.டி எனக் கூறி அவர்களைப் புகைப்படம் பிடித்த இனந்தெரியாதவர்களைச் மடக்கிப் பிடித்த காணாமல் போனவர்களது உறவினர்கள் அவர்களை எச்சரித்து விரட்டியடித்தனர். காணாமல் போனவர்களது உறவினர்களின் போராட்டம் 54வது நாளை எட்டியுள்ளது. நேற்றைய தினம் புதுவருட தினத்தில் கறுப்புடை அணிந்து கண்ணீர் விட்டுக் கலங்கினார்கள். கைது செய்யப்பட்ட, கடத்தப்பட்ட எங்கள் பிள்ளைகளை மீட்டுக் கொடுங்கள் என்று கலங்கி நிற்கிறார்கள் அவர்கள். ஆனாலும் அரசாங்கம் எங்களின் போராட்டத்தை கண்டும் காணாதது போல இருக்கிறது என்று பெரும் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றார்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள். இந்நிலையில் போராட்…
-
- 3 replies
- 639 views
-
-
இலங்கையின் கழிவு முகாமைத்துவம் தொடர்பில் குற்றம் சுமத்தும் வகையில் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்தமை தொடர்பில் பல முக்கிய சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. அவற்றின் பல செய்திகளில் முறைசாரா கழிவு முகாமைத்துவம் காரணமாக இலங்கை ஒரு அசுத்தமான நாடு என குறிப்பிடப்பட்டுள்ளது. கழிவுகள் மறுசுழற்சி மேற்கொள்ளப்படாமல் உள்ளமை தொடர்பில் ஆச்சரியமடைவதாக அந்த செய்திகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. மேலும் இலங்கையை ஏளனம் செய்யும் வகையில் சர்வதேச ஊடகங்கள் பல்வேறு செய்திகளை வெளியிட்டுள்ளன. இந்நிலையில், கழிவு முகாமைத்துவம் இல்லாமையினால் பல்வேறு நோய்கள் ஏற்பட கூடும் என்பதனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்க…
-
- 0 replies
- 418 views
-
-
இழுவைமடி தொழிலை தடுக்கும் நோக்கில் வடக்கு மீனவருக்கு ஆழ்கடல் படகுகள் - கொழும்பு மீன்பிடி அமைச்சு தீர்மானம் இழுவைமடித் தொழிலைத் தடை செய்யும் நோக்கில் ரோலர் படகுகளுக்கான மாற்றீடாக நீண்ட நாள் தொழில்ப் படகுகளை வடக்கு மாகாண மீனவர்களுக்கு வழங்க கொழும்பு மீன்பிடி அமைச்சுத் தீர்மானித்துள்ளது. வடக்கு மாகாண மீனவர்கள் இழுவைமடித் தொழிலால் தொடர்ச்சியாகப் பிரச்சி னைகளை எதிர்கொண்டுள்ளனர். அதற்கு மாற்றீடாக ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்கு ஏற்ற வகையில் 100 நீண்ட நாள் படகுகளை வழங்க கொழும்பு அரசு தீர்மானித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் படகுகளை விநியோகிப்பதற்கு…
-
- 0 replies
- 233 views
-
-
யாழ்ப்பாண வணிக வளாகத்தை நகரின் மையத்தில் நிறுவவேண்டும் - வடக்கு மாகாண சபையிடம் வலியுறுத்து “யாழ்ப்பாணத்தில் ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள வணிக வளாகத்தை நகரின் மையத்தில் அமைப்பதற்கு வடக்கு மாகாண சபை முன்வர வேண்டும்” இவ்வாறு யாழ்ப்பாண வணிகர் கழகத் தலைவர் இ.ஜெயசேகரம் தெரிவித்தார். “யாழ்ப்பாணத்தில் ஆயிரம் மில்லியன் ரூபாவில் அமைக்கப்படவுள்ள வணிக வளாகத்தை யாழ்ப்பாண நகரின் மத்தியில் அமைப்பது தொடர்பில் ஆராய மாகாண சபையினர் முன்வர வேண்டும். யாழ்ப்பாணம் நகரச் சந்தை மற்றும் அதனுடன் தொடர்புபட்டதான வெற்றிலைக்கடை, பழக்கடை, சந்தை,…
-
- 0 replies
- 371 views
-