Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மலையாளபுரம் கிராமத்தில் சிறப்பாக இடம்பெற்றது கரைச்சியின் கலாசார விழா கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தின் 2016 இற்கான கலாசார விழா மிகவும் சிறப்பாக மலையாளபுரம் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.நேற்றைய தினம் (07-04-2016) மலையாளபுரம் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கிராம மக்கள் கலைஞர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர். வருடந்தோறும் கலாசார விழாக்கள் நகரை அண்டிய பகுதிகளில் மண்டபங்களில் இடம்பெற்ற வந்த வழமை மாற்றப்பட்டு கிராமங்களை நோக்கி பிரதேச மட்ட கலாசார விழாக்களை நகர்த்தியது அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் 2016 இற்கான கரைச்சியின் கலாசார விழாவை ம…

  2. மக்களின் போராட்டங்களுக்கு தீர்வுகளை வழங்குங்கள் – பிரதமரிடம் டக்ளஸ் வேண்டுகோள் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதிலிருந்து கட்டங் கட்டமாக தேசிய பிரச்சினைக்கு இறுதித் தீர்வு காண்பதற்கான முன்னோக்கிய செயற்பாடுகளை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம்; ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேரடியாக கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக் கூடியது என ஏற்றுக்கொள்ளக்கூடிய புதியதொரு தீர்வு வரைபு அல்லது திருத்த வரைபு முன்வைக்கப்படுமானால் அதற்கு எமது கட்சி பூரணமாக ஆதரவளிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். …

  3. மத்திய அரசாங்கத்துக்கே பொறுப்பு; நழுவுகிறார் சி.வி சுப்பிரமணியம் பாஸ்கரன் "மீள்குடியேறும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை உடனடியாக பெற்று கொடுக்க வேண்டியது, அரசாங்கத்தின் கடப்பாடு. அதில் நாம் தான்தோன்றித்தனமாகத் தலையீடு செய்ய இயலாது. அவ்வாறு மத்திய அரசாங்கம் தனது கடப்பாட்டைச் செய்யவில்லை என்பதை, மக்கள் எமக்கு எழுத்துமூலமாகத் தெரியப்படுத்தினால், அது தொடர்பாக மத்திய அரசாங்கத்துடன் பேசி மக்களுக்குரிய உதவிகளை பெற்று கொடுப்பதற்கு, எங்களால் ஆவன செய்ய இயலும்" என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். பிலவுக்குடியிருப்பு மக்கள், தமது சொந்த நிலத்தில் தம்மை மீள்குடியேற்ற கோரி ஒரு மாதம் தொடர்ச்சியான கவனயீர்ப்பு…

  4. விரைவில் ஜனாதிபதி மைத்திரி தலைமையில் தனித்து ஆட்சி ரணிலுக்கு ஜனாதிபதி சிவப்பு எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்கிறார் டிலான் (ஆர்.யசி ) ஊழல் மோச­டிக்­கா­ரர்­களை தண்­டிக்க வேண்­டிய கட்­டத்தில் ஜனா­திபதி உள்ளார். குற்­ற­வா­ளி­களை தண்­டிப்­ப­தாக கூறு­கின்­றாரே தவிர குற்­றவா­ளி­களை தண்­டிக்க எந்த நட­வ­டிக்­கையும் முன்­னெ­டுக்­க­வில்லை என ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் ஊட­கப்­பேச்­சாளர் டிலான் பெரேரா தெரி­வித்தார். ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்­க­ளுக்கு மேலாக செயற்­படும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு முதலில் ஜனா­தி­பதி சிவப்பு எச்­ச­ரிக்கை விட வேண்டும் விரைவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சுதந்திரக் கட்சியின் ஆட்சியை ஏற்…

    • 1 reply
    • 196 views
  5. ஒருதொகை டைனமைற் குச்சிகளுடன் ஒருவர் கைது தடைசெய்யப்பட்ட வெடிபொருளான டைனமைற் குச்சிகளுடன் சந்தேக நபர் ஒருவரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கிழக்கு கடற்படை தளத்தின் கடற்படை வீர்ர்கள் மற்றும் திருகோணமலை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆகியோரின் நடவடிக்கையில் எரன்கன்டி பகுதியில் வைத்து 6.370 கிலோ கிராம் நிறையுடைய 49 டைனமைற் குச்சிகளுடன் சந்தேக நபர் ஒருவரை கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் டைனமைற் வெடிபொருள் ஆகியன மேலதிக விசாரணைகளுக்காக திருகோணமலை ஊழல் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/…

  6. கிழக்கையும் மேற்கையும் இணைக்கும் சைக்கிள் ஓட்டப் போட்டி கிழக்கையும் மேற்கையும் பாலமாக இணைக்கும் சர்வதேச சைக்கிளோட்டம் இன்று வெள்ளிக்கிழமை பாசிக்குடாவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த போட்டியை நடாத்துவதற்கு இரண்டு வருடங்களாக கலந்தாலோசிக்கப்பட்டதாகவும், பாசிக்குடாவிலிருந்து இந்த சைக்கிளோட்டம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்துக்கமையவாக சர்வதேச சைக்கிளோட்ட போட்டி இன்று ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சைக்கிளோட்ட போட்டியானது பாசிக்குடாவிலிருந்து மஹியங்கனை கண்டி குருநாகல் வழியாக நீர்கொழும்பை அடையும் என்றும் சுமார் 334 கிலோமீட்டரை போட்டியாளர்கள் ஓட வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அறுபத்தைந்து சைக்கிளோட்ட போட்டியாளர்கள் கல…

  7. உள்ளாடைத் தடைக்கு 30 நாள் வகுப்புத் தடை பகடிவதை சம்பவத்துடன் தொடர்புடைய தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அறிவியல் பீடத்தின் 18 மாணவிகள் உள்ளிட்ட 28 மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அறிவியல் பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட இந்த வகுப்புத்தடை, ஏப்ரல் 7ஆம் திகதிமுதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. புதிய மாணவர்களை கடந்த 6ஆம் திகதியன்று பகடிவதைக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில், 18 மாணவிகள் மற்றும் 10 மாணவர்கள், பகடி வதைக்கு பயன்படுத்தப்பட்ட சில உபகரணங்களுடன், பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். புதிய மாணவர்களில் தமிழ் மாணவிகள் தலைமுடியை இருபுறமும் பின்ன வேண்டும் என்றும் ச…

  8. முதலில் சர்வதேச விசாரணை இல்லை! இப்போது உள்ளக விசாரணையும் இல்லை!! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் உள்ளக பொறிமுறையை அமைப்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் 2015ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், இலங்கை அரசுக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்குவது என்ற தீர்மானம் கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரனை வழங்கியிருந்தது. அண்மையில் யாழ்ப்பாணம் வந்த இலங்கை அரசின் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்தின போர்க்குற்ற விசாரணைகளுக்கு அவசியமில்லை என்று ஒரு கருத்தை தெரிவித…

    • 0 replies
    • 168 views
  9. சிறிலங்காவில் எதிர்பாராத வரவேற்பு – சீன உயர் ஆலோசகர் வியப்பு சிறிலங்காவில் தாம் எதிர்பார்த்ததை விடவும் பெரியளவிலான வரவேற்பு அளிக்கப்பட்டதாக, சீன மக்கள் அரசியல் ஆலோசனை சபைக்கான தேசிய குழுவின் த லைவர் யூ செங் ஷெங் வியப்புடன் தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணத்தின் முடிவிலேயே இவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். சிறிலங்காவில் யூ செங் ஷெங் 80 பேர் கொண்ட வர்த்தகக் குழுவுடன் இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டிருந்தார். இதன் போது சிறிலங்கா அதிபர், பிரதமர் உள்ளிட்டோரைச் சந்தித்து, அம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு துறைமுக நகரம் உள்ளிட்ட சீனாவின் பல பில்லியன் டொலர் முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பாக பேச்சுக்களை நடத்தியிருந்தார். அம்பாந்தோட்டை…

    • 0 replies
    • 330 views
  10. கடற்படைத் தலைமையகத்தில் தேடுதல் நடத்த குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு நீதிவான் உத்தரவு கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 2008 ஆம் ஆண்டு 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான, கடற்படை அதிகாரியைக் கைது செய்வதற்கு சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில் தேடுதல் நடத்துமாறு, கோட்டே நீதிவான் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார். 11 பேர். கடத்தல் தொடர்பான வழக்கு கோட்டே நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் நேற்றுமுன்தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, கொமாண்டர்…

    • 0 replies
    • 272 views
  11.  தமிழ் பொலிஸாருக்கு சிங்கள டிப்ளோமா -செல்வநாயகம் கபிலன் பொலிஸ் சேவையில் இணைந்து கொண்டுள்ள தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு 1 வருட கால சிங்கள டிப்ளோமா பயிற்சி நெறி, காங்கேசன்துறை பொலிஸ் பயிற்சி் கல்லூரியில் சனிக்கிழமை (09) ஆரம்பிக்கப்பட்டது. வடமாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களில் தெரிவு செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு, முதற்கட்டமாக இப் பயிற்சி நெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வடமாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய இப் பயிற்சிநெறி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன் யுத்தத்தின் பின், பொலிஸ் சேவையில் இணைத்து கொள்ளப்பட்ட தமிழ் பொலிஸ்…

  12. யாழ். மாவட்டத்தில் இன்னமும் 5250 ஏக்கர் தனியார் காணிகள் சிறிலங்கா படையினரிடம் யாழ். மாவட்டத்தில் இன்னமும் 5250 ஏக்கர் தனியார் காணிகள் சிறிலங்கா படையினர் வசம் இருப்பதாக, யாழ். மாவட்டச் செயலர் அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். வலிகாமம் வடக்கில் சிறிலங்கா படையினர் வசமிருந்த 28.8 ஏக்கர் காணிகள் கடந்த வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்ட பின்னரே அவர் இதனைத் தெரிவித்தார். காங்கேசன்துறை, மயிலிட்டிப் பகுதிகளில் உள்ள 28.8 ஏக்கர் காணிகளை பொதுமக்களிடம் மீள ஒப்படைப்பதற்காக, யாழ். படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெற்றியாராச்சி, யாழ். மாவட்ட செயலரிடம் கடந்த வெள்ளிக்கிழமை கையளித்தார். 1990ஆம் ஆண்டு தொடக்கம் சிறிலங்கா படையினரின…

    • 0 replies
    • 230 views
  13. அரசியல் பிரச்சினைக்கு தீர்வு : தமிழர் தரப்பு அரசாங்கத்துடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் : சம்பிக்க (ஆர்.யசி) நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றால் தமிழர் தரப்பு நேரடியாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும். அதை விடுத்து சர்வதேசத்தை வரவழைத்து தீர்வு காண நினைத்தால் அது ஒருபோதும் சாத்தியமற்றதாகும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். தேசிய பிரச்சினைக்கும்இ சர்வதேச அழுத்தங்களுக்கும், பொருளாதார சிக்கல்களுக்கும் தீர்வு காணும்வரையில் நல்லாட்சி அரசாங்கம் கலைக்கப்படாது எனவும் அவர் குறிப்பிட்டார். எதிர்வரும் தேர்தல்களின் பின்னர் நல்லாட்சி அரசாங்கம் பிளவுபடும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக…

  14. ஊடக செயலாளரின் பிரத்தியேக கடிதம் எவ்வாறு பொதுவான கடிதமாக மாறியது தெரண ஊடக வலையமைப்பு தொடர்பில் ஊடகத்துறை அமைச்சின் செயலாளரினால் பிரத்தியேகமாக அனுப்பி வைக்கப்பட்ட கடிதமொன்று சிரச தொலைக்காட்சியில் நேற்றிரவு 10 மணி பிரதான செய்திகளில் முதன்மை செய்தியாக ஒளிபரப்பப்பட்டமை ஆச்சரியத்திற்குரிய விடயமாகும். இந்த பிரத்தியேக கடிதம் ஊடக நெறிமுறைகளை மீறி போட்டி ஊடக நிறுவனமொன்றில் ஒளிபரப்புகின்றமையானது, யாருடைய தேவைக்காக முன்னெடுக்கப்பட்ட செயற்பாடு என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எல்.எம்.ஆர்.பி தரவுகளின் பிரகாரம், தெரண தொலைக்காட்சி முதலாவது இடத்தை தன்வசப்படுத்திக் கொண்டுள்ள பின்னணியில், பொதுமக்கள் எம்மீது கொண்டுள்ள நன்மதிப்பை சீர்குலைப்பதற்கு போட்டி ஊடக நிறுவனம் முன்னெ…

    • 0 replies
    • 362 views
  15. இனப் பிரச்சினைக்கு நிரந்த தீர்வை உறுதிப்படுத்தும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் : ரவூப் ஹகீம் (ஆர்.யசி) சர்வஜன வாக்கெடுப்பிற்கு அஞ்சி புதிய அரசியல் அமைப்பில் பகுதி அளவில் மாற்றங்களை கொண்டு வருவதன் மூலம் தேசிய இனப்பிரச்சினைக்கு ஒருபோதும் நிரந்தர தீர்வுகாண முடியாது. இனப் பிரச்சினைக்கு நிரந்த தீர்வை உறுதிப்படுத்தும் வகையில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என அமைச்சர் ரவூப் ஹகீம் தெரிவித்தார். குறித்த காலத்தினுள் விரைவாக மேற்கொள்ள வேண்டிய விடயங்களில் கவனம் செலத்தும் வகையில் பிரதான இரண்டு கட்சிகளும் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நில…

  16. முதல் அந்தஸ்தை பெறப்போகும் யாழ். நகர் இலங்கையில் முதன் முறையாக சைக்கிள்களுக்கு பிரத்தியோக பாதை கொண்ட நகராக யாழ்ப்பாணம் மாற்றப்படவுள்ளது. உங்க வங்கி வழங்கிய 55 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியின் கீழ் பல வேலைத்திட்டங்கள் யாழ். நகரில் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அந்த திட்டங்களின் அடிப்படையில், யாழ்ப்பாணத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்களை இணைக்கும் வகையில் குறித்த பாதை அமைக்கப்படவுள்ளது. பல்வேறு இடங்களை சுற்றுலாப்பயணிகள் இலகுவாக பார்வையிடக்கூடிய வசதியுடன் 20 கிலோமீற்றர் தூரம் வரையில் இந்த பாதை அமைக்கப்படவுள்ளது. இந்த வீதி அமைக்கப்படுவ…

    • 1 reply
    • 668 views
  17. ரஜனியின் வருகையை ஆதரிக்கும் எதிர்க்கும் நிலையில் எம் மக்கள் இல்லை கட்டுரைகள் - தீபச்செல்வன் ரஜனியின் வருகையை ஆதரிக்கும் எதிர்க்கும் நிலையில் எம் மக்கள் இல்லை என்று கூறுகிறார் கவிஞர் தீபச்செல்வன். இலங்கைக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தை நிறுத்தியுள்ளார் சூப்பர்ஸ்டார் ரஜனிகாந்த். தமிழகத்தில் உள்ள சில அரசியல் தலைவர்கள் தடுத்தமை காரணமாகவே ரஜனிகாந்த் தனது பயணத்தை இரத்துச் செய்துள்ளார். ரஜனிகாந்த் வருகைக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ள நிலையில் ஈழத்தில் உள்ள தமிழ் மக்களின் நிலைப்பாடு எப்படியானது என கவிஞர் தீபச்செல்வன் தெரிவித்த கருத்துக்கள். ரஜனிகாந்த் ஈழத்திற்கு வந்து லைக்கா நிறுவனத்தால் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை கையளிப்பதாக இருந்தது…

    • 0 replies
    • 430 views
  18. கிளிநொச்சியில் ஏற்பட்ட விபத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தை பலி -இளைஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் முறுகல் கிளிநொச்சி புதுமுறிப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தை பலியாகியுள்ளார். கிளிநொச்சியிலிருந்து முழங்காவில் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தும் கிளிநொச்சியிலிருந்து அக்கராயன்குளம் நோக்கி பயணித்த சிறியரக உந்துருளியும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இலக்கம் ஏழு அக்கராயன்குளம் பகுதியைச்சேர்ந்த இராமச்சந்திரன் ஆறுமுகம் வயது 67 என்பவரே படுகாயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் பலியாகியுள்ளார். இறந்தவர…

  19. வருடம் முழுவதும் முட்டாள்கள் தினமா? - கே.சஞ்சயன் ஏப்ரல் முதலாம் நாள் முட்டாள்கள் தினம். கடந்த சனிக்கிழமை முட்டாள்கள் தினத்தன்று வெளியாகிய சில ஊடகங்களில், அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்திருந்த கருத்து ஒன்று பிரசுரமாகியிருந்தது. ஆனால், அது முட்டாள்கள் தினச் செய்தி அல்ல. ஏனென்றால், முட்டாள்கள் தினத்துக்கு முதல் நாளான, மார்ச் 31 ஆம் திகதி கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில்தான், அந்தச் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதனால்தான், அது முட்டாள்கள் தினச் செய்தியல்ல. ஆனால், முட்டாள்கள் தினச் செய்தியை விட, மக்களை முட்டாள்களாக்கும் செய்தியே அத…

  20. எனக்கு வீடுகளில் வைத்து உணவளிக்க வடக்கு மக்களுக்கு முடியவில்லை: ராஜித சேனாரத்ன கடந்த அரசாங்கம் மனிதவள செயற்பாடு தொடர்பில் கவனம் செலுத்தவில்லையென அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். தாம் கடந்த அரசாங்கத்தில் செயற்பட்டபோது அதிவேக வீதிகளையும் விமான நிலையங்களையும் துறைமுகங்களையும் அமைத்த போதிலும் மக்களுக்கான வீடுகளை அமைக்க முடியாமற்போனதாக ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார். மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த முடியாமற்போனமையை வடக்கின் தேர்தல் முடிவு வெளிப்படுத்தியதாக சுட்டிக்காட்டினார். வட பகுதிக்கு நூற்றுக்கணக்கான பில்லியன்களை செலவிட்டு, அதிவேக வீதிகளை அமைத்தாலும் அப்பகுதி மக்களுக்கு அதில் நடந்து செல்லவ…

  21. இம்முறை தேசிய மீலாதுன் நபி விழா யாழ்ப்பாணத்தில் ; அமைச்சர் ரிஷாத் அறிவிப்பு .. April 8, 2017 சுஹைப் எம் காசீம் தேசிய மீலாதுன் நபி விழா இம்முறை யாழ்ப்பாணத்தில் நடாத்தபடும் என அரசு முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் இன்று(08/04/2017) யாழ்ப்பாணத்தில், அரசாங்க அதிபர் என். வேதநாயகம் தலைமையில் யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும் இன்னோரன்ன பிரச்சினைகள் தொடர்பில் இடம்பெற்ற உயர்மட்ட கூட்டத்தின் பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். தேசிய மீலாதுன் நபி விழாவின் மூலம் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களால் மக்களுக்கு இன்னும் பல்வேறு நன்மைகளை பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் கலாசார மேம்பாட்டை விருத்தி செய்ய உதவும் எனவும் அவர் நம்பிக்…

    • 8 replies
    • 826 views
  22.  ‘எனது கூட்டத்துக்கு வரவேண்டாம்’ “நான் வரும் போது மக்கள் வருகின்றனர். மக்கள் கூட்டத்தை பார்த்து அரசாங்கம், ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்கு தேர்தலை ஒத்திவைக்கின்றது. இனிமேல் நான் வரும் கூட்டங்களுக்கு மக்களை வரவழைக்க வேண்டாம்” என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இரத்தினபுரியில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகம் ஒன்றைத் திறந்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். "வெளிநாடுகளில் நடைபெறும் கூட்டங்களில் ஹம்பாந்தோட்டையில் எமக்கு சிறந்த துறைமுகம் இருப்பதாக பிரதமர் கூறுகிறார். அங்கு வந்து தொழிற்சாலையை அமைக்குமாறும் கூறுகிறார். எனினும் இலங்கை திரும்பியதும்…

  23. இறைவனுக்கு சோடனை செய்த கணவன், மனைவிக்கு நேர்ந்த அவலம் : யாழில் அதிர்ச்சி சம்பவம் மின்சார தாக்குதலுக்கு இலக்கான கணவனை காப்பாற்ற முற்பட்ட மனைவியும், கணவனும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த பரிதாப சம்பவம் யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் இடம்பெற்றுள்ளது. சுன்னாகம் ஐயனார் கோவிலடியைச் சேர்ந்த குணதாசன், மாக்ரெட் ஜோஜ் சுகந்தி ஆகியோரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இறைவனுக்கு சோடனை செய்வதற்காக மின் விளக்கு அலங்காரம் செய்ய முற்பட்ட கணவன் மின் மானியில் ஆணி அடித்து கம்பி கட்டும் போது மின்சாரம் தாக்கியதாகவும் இதனையடுத்து கணவனை காப்பாற்றும் முயற்…

    • 2 replies
    • 555 views
  24. முள்ளிவாய்க்கால் பகுதியில் சிங்கள மக்களின் சிறப்பு வழிபாட்டு நிகழ்வு நேற்று மாலை 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறப்பு வழிபாட்டு நிகழ்வில் தென்னிலங்கையில் இருந்து சென்ற ஏராளமான சிங்கள மக்களும் முள்ளிவாய்க்கால் பகுதி பொதுமக்களும் இணைந்து பங்கேற்றிருந்தனர். தமிழ் மக்களுக்கு சிங்கள பேரினவாதிகளினால் காலங்காலமாக திட்டமிட்டு நடாத்தப்பட்ட நீதியற்ற செயல்களுக்கு சிங்கள மக்கள் மன்னிப்பு கோரும் சிறப்பு வழிபாடாகவே இந்த நிகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழிபாட்டினை நிகழ்த்திய பிரதான ஏற்பாட்டாளர்கள் முள்ளிவாய்க்கல் வழிபாட்டின்போது கூறுகையில், 2009ம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்தின் அடக்கு முறைக்குள் இவ்விடத்தில் பொதுமக்கள் அகப்பட்டுள்ளனர். அப்பொழு…

    • 7 replies
    • 806 views
  25. தொல்புரம் சிவபூமி முதியோர் இல்லத்தின் பத்தாவது ஆண்டு பூர்த்தி விழா யாழ். சுழிபுரம், தொல்புரம் சிவபூமி முதியோர் இல்லத்தின் பத்தாவது ஆண்டு பூர்த்தி விழா இன்று 08.04.2017 சனிக்கிழமை பிற்பகல் 3.30மணிளவில் சிவபூமி முதியோர் இல்ல பாலச்சந்திரன் மண்டபத்தில் கலாநிதி ஆறு திருமுருகன் (தலைவர், சிவபூமி அறக்கட்டளை) அவர்களது தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினர்களாக திரு. திருமதி கந்தையா நீலகண்டன் (அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவர்) தம்பதிகளும், சிறப்பு விருந்தினர்களாக திரு. நா.வேதநாயகன் தம்பதிகள் (அரச அதிபர், யாழ் மாவட்டம்), திரு. வை.ஈழலிங்கம் தம்பதிகள் (இளைப்பாறிய கணக்காளர்) ஆகியோரும் கலந்துகொண்டிருந்ததோடு,இந்நிகழ்வில்…

    • 2 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.