ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143520 topics in this forum
-
Published By: DIGITAL DESK 2 15 FEB, 2025 | 04:37 PM (எம்.மனோசித்ரா) நாட்டில் மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலமான மின் உற்பத்திகளை வரையறுப்பதற்காக இலங்கை மின்சாரசபையின் சிரேஷ்ட பொறியியலாளர்களை உள்ளடக்கி விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. மீண்டும் நிலக்கரி மற்றும் டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்வதற்காகவே அரசாங்கம் இவ்வாறானதொரு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கைக்கமைய எதிர்காலத்தில் காற்றாலை மற்றும் சூரிய மின்உற்பத்தி திட்டங்களின் நிலைமை கேள்விக்குறியே. நாடளாவிய ரீதியில் மின் தடை ஏற்படுவத…
-
- 0 replies
- 186 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 2 15 FEB, 2025 | 05:52 PM மீன்பிடிச் சட்டங்களை நடைமுறைப்படுத்தாமல் மீனவர்கள் தொடர்ந்தும் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாக்கி வருவதாக வட மாகாண மீனவ பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை (15) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மீன் பிடி சட்டங்கள் நடைமுறைப்படுத்தாமல் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. கடல் அட்டை பண்ணை அமைப்பதற்கு யாருக்காவது அனுமதி வழங்கப்படுகின்ற போது உரிய ஆய்வுகளுக்கு உட்படுத்தி வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார். …
-
- 0 replies
- 162 views
- 1 follower
-
-
15 FEB, 2025 | 05:50 PM மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலும், எதிர்கால நலனையும் பாதிக்கின்ற கணிய மணல் அகழ்வுக்கு ஒரு போதும் அனுமதி வழங்க முடியாது எனவும் கனிய மணல் அகழ்வுக்கு சுற்றுச்சூழல் ஆய்வு அறிக்கையை வழங்க முன்னெடுக்கவுள்ள கள விஜயத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை(15) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் தீவில் மூன்று திட்டங்கள் அரசினால் நடைமுறைப்படுத்தப்பட இருக்கும் சூழ்நிலையில் அதானியுடைய காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை அதானி நிறு…
-
- 0 replies
- 227 views
- 1 follower
-
-
இன்றும் நாளையும் ஒன்றரை மணி நேரம் மின்வெட்டு February 10, 2025 2:57 pm தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு மின் விநியோகம் தடை செய்யப்பட வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் ஒன்றரை மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அந்த சபை அறிவித்துள்ளது. அதன்படி, இந்த மின் வெட்டு பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணிக்கு இடையில் நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டவுள்ளது. நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையம் மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படும் வரை இந்த மின்வெட்டை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கை மின்சார சபைக்கு (CEB) சொந்தமான பாணந்துறை கிரிட் துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணம…
-
-
- 5 replies
- 450 views
- 1 follower
-
-
15 FEB, 2025 | 01:33 PM நாட்டில் இடம்பெறும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் தொடர்பில் முறையிடுவதற்கு புதிய வாட்ஸ்அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாப்புக்காக பொதுமக்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில் இந்த வாட்ஸ்அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சுற்றுச்சூழல் பிரச்சினைகளை 076 6412029 என்ற வாட்ஸ்அப் இலக்கத்திற்கு குறுஞ்செய்திகளாக அனுப்பலாம். இந்த வாட்ஸ்அப் இலக்கமானது திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை சேவையில் இருக்கும். பொது மக்களால் முன்வைக்கப்படும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து, சம்ப…
-
- 0 replies
- 128 views
- 1 follower
-
-
15 FEB, 2025 | 01:13 PM அலுவலகத்துக்கு பொதுமக்கள் வந்தால் உடனடியாக அவர்களை அன்பாக அணுகி சேவைகளை நிறைவேற்றிக் கொடுங்கள். உங்களால் முடியாவிட்டால் மேலதிகாரிகளிடம் அழைத்துச் சென்று பொதுமகனின் தேவையை எப்படி நிறைவு செய்து கொடுக்கலாம் என்று சிந்தியுங்கள். 'பந்தடிப்பது' போன்று வேலைகளை தட்டிக்கழித்து பொதுமக்களை அலைக்கழிக்காதீர்கள் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார். கடந்த காலங்களில் தவறாக ஒரு விடயம் மேற்கொள்ளப்பட்டிருந்தால், அதையே தொடர்வதற்குத் தான் பலர் விரும்புகின்றார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு யாரும் தயாராக இல்லை. தவறானது என்று தெரிந்தால் அதை முடிவுக்கு கொண்டு வந்து சரியானதைச் செய்யவேண்டும். இந்த மாற்றத்துக்கு …
-
- 0 replies
- 211 views
- 1 follower
-
-
15 FEB, 2025 | 12:43 PM அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று சனிக்கிழமை (15) மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு கிலோ கரட் 1,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. மேலும், ஒரு கிலோ பாகற்காய் 450 ரூபா முதல் 500 ரூபா வரையிலும், ஒரு கிலோ கத்தரிக்காய் 350 ரூபா முதல் 400 ரூபா வரையிலும், ஒரு கிலோ பீர்க்கங்காய் 250 ரூபா முதல் 300 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன. https://www.virakesari.lk/article/206738
-
- 0 replies
- 131 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 2 15 FEB, 2025 | 12:16 PM பிள்ளைகளின் எதிர்காலத்தை கட்டியெழுப்பும் ஆசிரியர்களை உருவாக்கும் நாட்டின் கல்விக் கல்லூரி முறைமையில் வழங்கப்படும் ஆசிரியர் பயிற்சிக் கல்வி 15 வருடங்களாக எவ்வித மாற்றங்களுக்கும் உட்படவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். புலதிசிபுர தேசிய கல்விக் கல்லூரியின் 25வது ஆண்டு நிறைவை முன்னிட்டு புதன்கிழமை (14) பொலன்னறுவை புலதிசிபுர கல்விக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "புலதிசிய தருனை" நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார். பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, புலதிசிபுர கல்விக் கல்லூரியின் இ…
-
- 0 replies
- 105 views
- 1 follower
-
-
கனேடியத் தூதுவர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் சந்திப்பு! வடக்கு மாகாணத்திற்கு இலங்கைக்கான கனேடியத்தூதுவர் எரிக் வோல்ஷ் நேற்று (14) வெள்ளிக்கிழமை விஜயம் மேற்கொண்டுள்ளார். வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஷ் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு சென்றதுடன்இ வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடி இருந்தார். இதன் போது இலங்கைக்கான கனேடியத் தூதுவருக்கு வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள்இ தேவைப்பாடுகள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புக்கள்இ சுற்றுலாத்துறையின் அபிவிருத்திஇ பாதை வலையமைப்பு தொடர்பாக மேம்பாடு ஆகிய விடயங்கள் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். மேலும் பலாலி விமான நிலையத்துக்கு …
-
- 0 replies
- 233 views
-
-
புகையிரதத் திணைக்களம் விடுத்துள்ள புதிய அறிவிப்பு! கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பயணத்தைத் ஆரம்பித்த காங்கேசன்துறை இரவு தபால் புகையிரதம் இன்று முதல் மொரட்டுவை புகையிரத நிலையத்திலிருந்து பயணத்தைத் ஆரம்பமாகும் என புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, மொரட்டுவ புகையிரத நிலையத்திலிருந்து மாலை 6.55 மணிக்குப் புறப்படும் காங்கேசன்துறை இரவு தபால் புகையிரதம் கல்கிஸ்ஸை, தெஹிவளை மற்றும் வெள்ளவத்தை புகையிரத நிலையங்களில் இருந்து கோட்டை புகையிரத நிலையத்தை அடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், இரவு 8 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து புறப்படும் என புகையிரத திணைணக்களம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1421548
-
- 0 replies
- 170 views
-
-
பதுளை - இராவண எல்ல வனப்பகுதியில் காட்டுத் தீ 15 Feb, 2025 | 10:35 AM எல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராவண எல்ல வனப்பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (14) இரவு தீ பரவியுள்ளது. இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள அதிகளவான நிலப்பரப்பு தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. பலத்த காற்று மற்றும் வறண்ட வானிலை காரணமாக தீ பரவலை கட்டுப்படுத்துவதற்கு கடினமாக இருந்ததாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் இ.எம்.எல். உதய குமார தெரிவித்தார். குறித்த வனப்பகுதியில் தனிநபரொருவர் அல்லது குழு ஒன்றினால் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். …
-
- 1 reply
- 332 views
- 1 follower
-
-
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீழ்ச்சிக்கு சுமார் ஒரு வருடம் முன்பு, அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க கூறிய அரசியல் மற்றும் பொருளாதார கணிப்புகள் பெரும்பாலானமை உண்மையாகின. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ரணில் விக்ரமசிங்க. தனது நெருங்கிய பத்திரிகையாளர்கள் குழுவிடம் இதேபோன்ற பல கணிப்புகளை வெளியிட்டுள்ளதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய, நாட்டின் எதிர்காலம் மீண்டும் இருளடையும் என்று ரணில் விக்ரமசிங்க அந்த பத்திரிகையாளர்களிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மக்களுக்கு நன்மை வெளிநாடுகளுக்கு மக்கள் குடிபெயர நான் ஒருபோதும் ஊக்குவித்ததில்லை. ஆனால் தற்போதுள்ள நிலையில் அதனை செய்தால் நாட்டு மக்களுக்கு நன்மை ஏற்படும் எ…
-
-
- 8 replies
- 535 views
- 1 follower
-
-
மும்மொழியிலான தேசிய பாடசாலைக்கு பிரதமர் விஜயம்! இந்திய அரசின் நிதியுதவியின் கீழ் பொலன்னறுவை, கதுருவெல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் மும்மொழியிலான தேசிய பாடசாலையின் தற்போதைய நிலை தொடர்பில் ஆராய்வதற்கான கண்காணிப்பு விஜயம் மற்றும் குறித்த பாடசாலையின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று இன்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் இடம்பெற்றள்ளது. வலயத்தின் அனைத்து இன, மதங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சகல பிள்ளைகளுக்கும் கல்வியை பெறுவதற்கான வசதியை நோக்கமாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்டுவரும் இந்தப் பாடசாலையின் நிர்மாணிப்பணிகள் பல வருடங்களாக மந்தகதியில் இடம்பெற்றமை தொடர்பில் இதன்போது பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டிருந்தது. …
-
- 0 replies
- 284 views
-
-
வடக்கு இளையோருக்கு வெளிநாட்டு ஆசைகாட்டி பெருந்தொகை பணம் மோசடி Published By: Vishnu 15 Feb, 2025 | 01:57 AM வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி இளையோரை ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்கள் வடக்கில் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமான முறைகளில் ஆட்கடத்தல்களில் ஈடுபடும் முகவர்கள் இளையோரை இலக்கு வைத்து , அவர்களை சமூக ஊடகங்கள் ஊடாக அணுகி, ஆசை வார்த்தைகளை கூறி பெருந்தொகையான பணத்தினை பெற்று மோசடி செய்து வருகின்றனர். இது தொடர்பில் யாழ்ப்பாணம் , மானிப்பாய் , கிளிநொச்சி உள்ளிட்ட பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் கிடை…
-
- 0 replies
- 218 views
-
-
வவுனியாவில் ஆக்கிரமிக்கப்படும் விவசாய நிலங்கள்: கமநல அபிவிருத்தி திணைக்களம் விடுத்துள்ள கோரிக்கை Published By: Vishnu 15 Feb, 2025 | 02:00 AM வவுனியாவில் ஏ9 வீதியை மையமாக கொண்டு பல விவசாய நிலங்கள் மண் போட்டு நிரப்பட்டு ஆக்கிரமிக்கபடுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக வவுனியா, நொச்சிமோட்டை, தாண்டிக்குளம், யாழ் வீதி, பட்டாணிச்சூர் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய காணிகளில் மண் போட்டு அவற்றை நிரவி புதிதாக வர்த்தக நிலையங்கள், கட்டடங்கள் என்பவற்றை அமைக்கும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இது தொடாபில் ஊடகங்களில் பல தடவ…
-
- 0 replies
- 199 views
-
-
14 FEB, 2025 | 03:55 PM (எம்.மனோசித்ரா) முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன தலைமையில் எதிர்கால அரசியல் முன்னெடுப்புக்கள் குறித்து கொழும்பில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனவரி 30ஆம் திகதி ரணில் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. கொழும்பிலுள்ள அமாரி ஹோட்டலில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் முன்னாள் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, நிமல் லன்சா, பிரேம் நாத் சி தொலவத்த, உதய கம்மன்பில மற்றும் ஐ.தே.க. தவிசாளர் வஜிர அபேவர்தன உள்ளிட்ட முக்கிய அரசியல்வாத…
-
- 1 reply
- 193 views
- 1 follower
-
-
இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் ஜூலி சங்! இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் பிரிவினைவாதிகளுடன் ஒன்றிணைந்து இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிட்டுள்ளார். அவரை மீண்டும் அமெரிக்காவுக்கு அழைக்குமாறு அமெரிக்க ஜனாதிபதிக்கு எழுத்து மூலமாக அறிவிப்போம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். பிரிவினைவாதத்துக்கு எதிரான கூட்டணியினர் கொழும்பில் உள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் சரத் வீரசேகர மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இலங்கையின் இறையாண்மைக்கும், சுயாட்சிக்கும…
-
-
- 5 replies
- 328 views
-
-
பசிலுக்கு அமெரிக்காவில் பாரிய சொத்துக்கள் உள்ளன – வாக்குமூலம் வழங்கிய விமல். முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு அமெரிக்காவில் பாரிய அளவிலான சொத்துகள் உள்ளன. அவை தொடர்பில் அரசாங்கம் உரிய விசாரணைகளை ஆரம்பிக்குமாக இருந்தால் மேலும் தகவல்களை வழங்க தயாராக இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவங்ச தெரிவித்தார். அமெரிக்காவில் உள்ள பசில் ராஜபகச்வின் சொத்துக்கள் குறித்து கடந்த காலத்தில் விமல் வீரவங்ச வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவு இன்று அவரிடம் வாக்குமூலமொன்றை பெற்றிருந்தது. வாக்குமூலத்தை அளித்தப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், பசில் ராஜபக்சவுக்கு அமெரிக்காவில் இருக்கு…
-
-
- 6 replies
- 678 views
-
-
Published By: DIGITAL DESK 2 14 FEB, 2025 | 07:03 PM "லிட்டில் ஹார்ட்ஸ்" என்ற போலி கணக்கைத் திறந்து பரிசுத் தொகை தருவதாகக் கூறி இணையதளம் மூலம் 29 இலட்சம் ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல்துறை பகுதியிலும் நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரம்ப பிரதேசத்திலும் சந்தேக நபர்கள் நேற்று வியாழக்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நொச்சியாகம, பலாவி பிரதேசங்களைச் சேர்ந்த 28 மற்றும் 23 வயதுடையவர்கள் ஆவர். சந்தேக…
-
- 1 reply
- 255 views
- 1 follower
-
-
14 FEB, 2025 | 05:21 PM யாழ்ப்பாண மாவட்டத்தில் 2025ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (14) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தனது வரவேற்புரையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 2025ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு - செலவு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக ரூபா 56 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அவற்றுக்கான முன்மொழிவுகள் உரிய முறைய…
-
- 0 replies
- 122 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 14 FEB, 2025 | 01:46 PM சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 300 மில்லியன் ரூபாய் பெறுமதியான கைத்தொலைபேசிகள், டெப் கணினிகளை கடத்த முயன்ற சந்தேக நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கொழும்பு 13, கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 45 வயதுடைய வர்த்தகர் ஆவார். இவர் முதலாம் திகதி மாலை 4:30 மணிக்கு கியூஆர்-654 கட்டார் ஏர்வேஸ் விமானத்தில் நாட்டை வந்தடைந்துள்ளார். அன்று அந்த விமானத்தில் அவரின் பைகள் வரவில்லை. பின்னர் மற்றுமொரு விமானத்தில் அவரின் பைகள் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. …
-
- 0 replies
- 155 views
- 1 follower
-
-
தென் சூடான் ஐநா அமைதி காக்கும் பணிகளுக்காக இலங்கை இராணுவம் பயணம்! ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிகளுக்கான தெற்கு சூடான் நிலை 2 மருத்துவமனையில் கடமைகளைப் பொறுப்பேற்க இலங்கை இராணுவ மருத்துவப் படையின் 11வது இராணுவ மருத்துவக் குழு இன்று நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளது . நாட்டிலிருந்து புறப்பட்ட 11வது இராணுவ மருத்துவப் படைக் குழுவில் 16 இராணுவ அதிகாரிகள், இரண்டு கடற்படை அதிகாரிகள் மற்றும் 46 சிப்பாய்கள் உட்பட 64 இராணுவ வீரர்கள் அங்கம் வகிக்கின்றனர். அந்தக் குழுவின் கட்டளை அதிகாரியாக லெப்டினன்ட் கேணல் ஆர்.எம்.டி.பி. ராஜபக்ஷ யுஎஸ்பீ. அவர்களும் இரண்டாவது கட்டளை அதிகாரியாக கே.டி.பி.டி.இ.ஏ. விஜேசிங்கே அவர்களும் கடமையாற்றவுள்ளனர். இதேவேளை இராணுவத் தளபதியைப் பி…
-
-
- 1 reply
- 257 views
- 1 follower
-
-
தெல்லிப்பழை வைத்தியசாலையில் அடிக்கல் நாட்டு விழா! தெல்லிப்பழை வைத்தியசாலை புற்றுநோய் சிகிச்சை பிரிவுக்கான கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவுக்கான Palliative Care கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்றைய தினம் இடம்பெற்றது. இக்கட்டடத்திற்கான அடிக்கல்லினை வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் நாட்டிவைத்தார். சுமார் 30 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த கட்டடம் அமைக்கப்படவுள்ளதாகவும், இதற்கான நிதிப் பங்களிப்பை வன்னி கோப் எனும் நிறுவனம் வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1421406
-
- 0 replies
- 225 views
-
-
Published By: DIGITAL DESK 2 14 FEB, 2025 | 11:35 AM பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எவ்வாறு சட்டப் பட்டம் பெற்றார் என்பது குறித்து விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். நாமல் ராஜபகஷ சட்டப் பரீட்சையை முடித்ததில் கிடைக்கப்பபெற்ற பல புகார்களைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/206651
-
- 1 reply
- 384 views
- 1 follower
-
-
தமிழரசுக் கட்சிக்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது February 13, 2025 இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு அதன் பிரதிவாதி ஒருவரை ஆள்மாற்றம் செய்ய இடமளிப்பதா? என்பது குறித்து ஆராய்வதற்காக ஒத்தி வைக்கப்பட்டது. இதன்படி எதிர்வரும் ஜூன் மாதம் 4ஆம் வரை வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அந்தத் திகதியில் பிரதிவாதி ஒருவரை மாற்றுவது குறித்துத் தீர்மானிக்கப்படும். அதன் பின்னரே வழக்கின் விசாரணை பற்றி ஆராயப்படும். இன்று (13) இந்த வழக்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி பயஸ் ரஸாக் முன்னிலையில் அழைக்கப்பட்ட போதே வழக்கு இவ்வாறு ஒத்தி வைக்கப்பட்டது. வழக்கை இணக்கமாக முடிவுறுத்துவதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்வதற்காகவே இன்…
-
- 1 reply
- 198 views
-