ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143515 topics in this forum
-
அமைச்சர் சந்திரசேகரின் திடீர் கள விஜயம்! கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர், கடற்றொழில், நீரியல்வளத்துறை திணைக்களத்தின் யாழ்.மாவட்ட அலுவலகத்துக்கு நேற்று (11.02.2025) திடீர் கண்காணிப்பு பயணம் மேற்கொண்டார். மேற்படி திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் சுதாகரனுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட அமைச்சர், முக்கிய பல விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்தார். மேற்படி திணைக்களம் ஊடாக மீனவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சேவைகள் முறையாக இடம்பெறுகின்றனவா, சேவைகளை வழங்குவதில் உள்ள குறைப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு எவ்வாறான வளங்கள் தேவை, மீனவர்களின் தரவுகள் என்பன பற்றி அமைச்சர் கேட்டறிந்தார். அத்துடன்,…
-
-
- 1 reply
- 307 views
-
-
11 Feb, 2025 | 10:32 PM (இராஜதுரை ஹஷான்) இலங்கையில் ஆண் -பால் பாலினம் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுப்படுத்துவதற்கு யு.எஸ்.எய்ட் நிறுவனம் 7.9 மில்லியன் டொலர்களை செலவு செய்துள்ளது என்பது பிரச்சினைக்குரியதொரு விடயமாகும்.இது நாட்டின் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையது. ஆகவே இவ்விடயம் குறித்து ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்குமாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் எழுத்து மூலமாக வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த காலங்களில் யு.எஸ்.எய்ட் என்ற அரச சார்பற்ற …
-
- 1 reply
- 154 views
-
-
12 Feb, 2025 | 01:10 PM யாழ்ப்பாணம் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ எரியூட்டியால் தமக்கு பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்து அப்பகுதி மக்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (11) எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவ எரியூட்டியில் மருத்துவக் கழிவுகள் எரிக்கப்படுவதால் அதில் இருந்து கிளம்பும் புகை காரணமாக சுவாசப் பிரச்சினை, தூர் நாற்றம் என்பன ஏற்படுவதால் அயலில் வசிக்கும் தாம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்தனர். இந்நிலையில் போராட்டக்காரர்களை சந்தித்த தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி குறித்த விடயம் தொடர்பில் உரிய தரப்புக்களுடன் ஆ…
-
- 0 replies
- 186 views
-
-
நாட்டின் பல பகுதிகளில் செயல்படுத்தப்பட்ட டோக் குரங்குகளுக்கான கருத்தடை திட்டம் தோல்வியடைந்துள்ளது. குரங்குகளால் ஏற்படும் அச்சுறுத்தலுக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. மாத்தளை மாவட்டத்தின் ஹரஸ்கமவில் முன்னோடித் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் திட்டம் பல சவால்கள் காரணமாக தற்போது முடங்கியுள்ளதாக மாவட்ட விவசாயப் பணிப்பாளர் அஜித மணிக்கும தெரிவித்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே இதனை தெரிவித்துள்ளார். கருத்தடை செய்வதற்கு கால்நடை மருத்துவர்களின் பற்றாக்குறையும், கிரித்தலை கால்நடை மருத்துவப் பிரிவுக்கு குரங்குகளை ஏற்றிச் செல்வதற்கு அதிக செலவினங்கள் ஏற்பட…
-
- 2 replies
- 264 views
- 1 follower
-
-
இலங்கையின் கடல் வளத்தை அழிதொழிக்கும் நடவடிக்கையில் தமிழக மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர் எனவும், இவ்வாறு நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு செல்லும் வழியில் தொப்புள் கொடி உறவுகள் எனக் கூறுவதில் பயன் இல்லை எனவும் கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். தமிழக மீனவர்கள் அத்துமீறும் செயற்பாடு தொடர்பில் இன்று (12) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், தமிழக மீனவர்களின் அத்துமீறல் அதிகரித்துள்ளது. கடந்த காலங்களில் மூன்று நாட்கள் வந்தார்கள், தற்போது ஏழு நாட்களுக்கும் வருவதற்கு முற்படுகின்றார்கள். எமது நாட்டு மீன்களை பிடிப்பது மட்டுமல்ல கடல் வளத்தையே நாசம் செய்கின்றனர். இதனால் ந…
-
- 1 reply
- 313 views
-
-
12 FEB, 2025 | 05:19 PM தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஜனாதிபதி சட்ட ஆட்சியைப் பலப்படுத்தப் போவதாக தனது கொள்கை விளக்கவுரையில் குறிப்பிட்டார். ஆனால், சட்டவிரோதமாக சட்ட ஆட்சிக்கு எதிராக, தனியார் காணியில் ஆக்கிரமிப்பு ரீதியாகக் கட்டப்பட்ட தையிட்டி விகாரையைப் பாதுகாப்பதில் பௌத்த சாசன அமைச்சரும் பொலிஸாரும் படையினரும் அக்கறையாக உள்ளனர் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். சட்ட ஆட்சி தையிட்டி விகாரை விடயத்தில் செல்லுபடியாகாது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பௌத்தத்துக்கு ஒரு சட்டம், ஏனைய மதத்தவர்களுக்கு ஒரு சட்டம் என்ற பாரபட்சங்கள் புதிய தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலும…
-
- 0 replies
- 194 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 12 FEB, 2025 | 03:06 PM வளி மாசடைவு கர்ப்பிணித் தாய்மார்களின் கருவில் பாதிப்பை ஏற்படுத்தும் என பரிசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பேராசிரியரும் சுவாச ஆரோக்கியம் வைத்தியர் நிபுணருமான துமிந்த யசரத்ன தெரிவித்துள்ளார். மாசடைந்த வளியை சுவாசிப்பதால் கருவில் உள்ள சிசுவின் எடை குறைவதற்கு வழிவகுப்பதோடு, பிறக்கும் குழந்தைகளுக்கு சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். மேலும் சிசு இறந்த நிலையில் பிறக்க வாய்ப்புள்ளது. சுவாச ஆரோக்கியத்தில் வளி மாசடைவின் தாக்கம் குறித்து ஆராய்வதற்காக பேராதனை மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகங்களின் உதவியுடன் ஒரு புதிய ஆய்வு தற்போது நடைபெற்று வருகிறது. வைத்தியசாலை…
-
- 0 replies
- 154 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 12 FEB, 2025 | 02:21 PM நாளை வியாழக்கிழமை (13) முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு பகல் வேளையில் வெப்பமாகவும் இரவு வேளையில் குளிராகவும் வெப்பநிலையில் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என வளிமண்டலவியல் நிபுணர் மலித் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, பதுளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான காலநிலை நிலவும். காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ மற்றும்…
-
- 0 replies
- 132 views
- 1 follower
-
-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் இந்தியாவில் கைது! வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இருந்து இந்தியாவின் மதுரைக்கு சென்ற கு.திலீபன் அங்கிருந்து பிறிதொரு கடவுச் சீட்டில் வெளிநாடு செல்ல முற்பட்டுள்ள நிலையில் தமிழகப் பொலிஸாரால் கடந்த திங்கள் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கு.திலீபன் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1421052
-
- 1 reply
- 317 views
-
-
நாகப்பட்டினம்-இலங்கை இடையேயான கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு! நாகப்பட்டினம் – இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறைக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் கப்பல் சேவை கடந்த நவம்பர் 18 ஆம் திகதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த கப்பல் சேவையானது ஜனவரி முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படும் எனக் கப்பல் நிறுவனம் தெரிவித்திருந்தது. எவ்வாறாயினும் சீரற்ற வானிலை காரணமாக கப்பல் போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், குறித்த கப்பல் போக்குவரத்து சேவை இன்று முதல் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், தொழில்நுட்ப …
-
- 5 replies
- 253 views
- 1 follower
-
-
அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நீதியமைச்சர்! சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளை விரைவில் நிறைவு செய்வதற்காக புதிய வேலைத்திட்டங்களை தயாரிக்கவுள்ளதாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். துஷ்பிரயோகம் இடம்பெற்ற தினத்திலிருந்து வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு சுமார் 05 வருடங்கள் செல்வதாக அவர் குறிப்பிட்டார். காலம் தாழ்த்தி வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு சாட்சி வழங்கப்படும் போது பாதிக்கப்பட்ட சிறுவர்களினால் சம்பவம் தொடர்பான முழுமையான தகவல்களை நினைவில் வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படுமெனவும் அவ்வாறு இடம்பெறும் போது குற்றவாளிகள் தப்பிக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகவும் நீதியமைச்சர் கூறினார். அத்துடன் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொ…
-
- 0 replies
- 143 views
-
-
வடக்கில் மருத்துவ ,பாடசாலை வசதிகளை மேம்படுத்த ஜப்பான் நிதியுதவி 12 Feb, 2025 | 11:39 AM பெப்ரவரி 11 ஆம் திகதி, இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமட்டா வடக்கு மாகாணத்திற்கான தனது முதல் பயணத்தின் போது, Humanitarian Development Organization (HDO) மற்றும் Nuffield School for Deaf and Blind ஆகிய இரண்டு அரச சார்பற்ற நிறுவனங்களுடன் “Grant Assistance for Grassroots Human Security Projects (GGP)” திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்குவதற்கான இரண்டு புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் முன்னிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இந்த கைச்சாத்திடும் நிகழ்வு இடம்பெற்ற…
-
- 0 replies
- 186 views
-
-
கடவுச்சீட்டு வரிசைக்கு ஏப்ரல் மாதத்தில் முடிவு எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள கடவுச்சீட்டு வரிசைகளை அகற்றுவதற்கு முடிவு செய்துள்ளதாக குடிவரவு - குடியகல்வுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கை குடிமக்களுக்கு நிலவும் கடுமையான கடவுச்சீட்டு பற்றாக்குறைக்கு முந்தைய ஆட்சிகளின் தவறான நிர்வாகமே காரணம் என்றும் கூறியுள்ளார். குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் செவ்வாய்கிழமை(11) டெய்லி மிரருக்கு அளித்த செவ்வியிலேயே இத் தகவலை குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது, கடவுச்சீட்டு வரிசைகள் ஒரு மாதத்திற்குள் அனைத்து வரிசைகளும் அழிக்கப்படும். …
-
- 0 replies
- 165 views
-
-
கோப்பாய் காவற்துறை பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம்! adminFebruary 12, 2025 கோப்பாய் காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. கோப்பாய் காவல் நிலைய பொறுப்பதிகாரி வெதகெதர கடந்த மூன்றாண்டுகளுக்கு முதல் பொறுப்பதிகாரியாக பொறுப்பேற்றிருந்தார். தமிழ் மொழி பேச கூடியவராக இருந்தமையால் கோப்பாய் காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வாழும் தமிழ் மக்கள் இவரை இலகுவில் அணுக கூடியவாறு இருந்தமையால், காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் குற்றச்செயல்கள் பெருமளவில் கட்டுப்படுத்தப்படிருந்தன. இந்நிலையில், பொறுப்பதிகாரிக்கு, பதுளைக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தமிழர் பகுதிகளில் தமிழ் மொழி பேசக்கூடிய காவற்துறை அதிகாரிகள் கடமையா…
-
- 0 replies
- 247 views
-
-
அர்ச்சுனா எம்.பி.யின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் படுகாயம்! நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் தாக்குதலுக்கு உள்ளாகிய நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (11) இரவு யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றுக்கு இராமநாதன் அர்ச்சுனா சென்று அங்கு காணொளி பதிவில் ஈடுபட்டார். இதன் போது அங்கு நின்ற நபர் தன்னை காணொளி பதிவு செய்ய வேண்டாம் என அர்ச்சுனாவிடம் தெரிவித்திருந்தார். இதன்போது அர்ச்சனா அதனை மீறி காணொளி பதிவில் ஈடுபட்டார். இந்நிலையில் அர்ச்சுனாவுக்கும் குறித்த நபருக்கும் இடையில…
-
-
- 39 replies
- 2.3k views
- 4 followers
-
-
கஜேந்திரகுமாருக்கு நீதிமன்று அழைப்பாணை adminFebruary 11, 2025 விகாரையை இடிக்க வாரீர்’ என சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட பதிவொன்று தொடர்பில் விசாரணைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை எதிர்வரும் 14ஆம் திகதி மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றிருந்த கடந்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போது, மக்களின் தனியார் காணிகளை அபகரித்து தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானங்களை அகற்றி மக்களின் காணிகள் மக்களுக்கு வழங்கப்பட…
-
- 1 reply
- 365 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 2 11 FEB, 2025 | 02:21 PM சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பிரதமர் அலுவலகத்தில் வைத்து மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கையின் வரிக் கொள்கை, வரி வருவாயை திறம்பட நிர்வகித்தல் மற்றும் பொதுத்துறை செயல்திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய பொருளாதார விடயங்கள் குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது. பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான கொள்கை முயற்சிகளை வலியுறுத்தி, அரசாங்கத்தின் எதிர்கால வளர்ச்சி, நிகழ்ச்சி நிரலையும் பிரதமர் இதன்பே…
-
- 1 reply
- 318 views
- 1 follower
-
-
11 FEB, 2025 | 05:22 PM (எம்.மனோசித்ரா) அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் பணிக்குழாமினரை முகாமைத்துவம் செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விதந்துரைகளுக்கமைய 7,456 பதவி வெற்றிடங்களுக்கான நியமனங்களை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செயன்முறையை மீளாய்வு செய்து தேவைகள், முன்னுரிமைகள் மற்றும் நேர அட்டவணையை அடையாளங் கண்டு, அது தொடர்பாக கட்டாயமாக ஆட்சேர்ப்புச் செய்ய வேண்டிய அளவை அடையாளங் கண்டு அதற்கமைய, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் அதிகாரிகள் குழுவொன்றை நியமிப்பதற்காக கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்த…
-
- 0 replies
- 151 views
- 1 follower
-
-
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் கவனயீனமாக வாகனம் செலுத்தியதால் ஏற்பட்ட வீதி விபத்துகளில் 203 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். ஜனவரி 1 முதல் பெப்ரவரி 7 வரை இடம்பெற்ற வீதி விபத்துகளில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் நெடுஞ்சாலைகள் பணிப்பாளர் மனோஜ் ரணகல தெரிவித்தார். இதேவேளை, 2024 ஆம் ஆண்டில், கவனயீனமாக வாகனம் செலுத்தியதால் 1,585 வீதி விபத்துகள் இடம்பெற்றுள்ள நிலையில் 1,667 பேர் உயிரிழந்திருந்ததாக அவர் தெரிவித்தார். 2025 ஜனவரி முதலாம் திகதி முதல் பெப்ரவரி 7 ஆம் திகதி வரை 194 கோர வீதி விபத்துக்களும் 514 கடுமையான வீதி விபத்துக்களும் மற்றும் 880 சிறியளவிலான வீதி விபத்துக்களும் இடம்பெற்றுள்ளதாக அவர் தெர…
-
- 0 replies
- 197 views
- 1 follower
-
-
கடந்த 2021 ஆம் ஆண்டு வைத்தியசாலையில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மூன்றரை வயது நிரம்பிய சிறுவனின் சிறுநீரகம் திருடப்பட்ட சம்பவத்திற்கு நியாயம் கோரி இன்றைய தினம்(11) கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்திற்கு முன்பாக மௌனப் போராட்டம் ஒன்று இடம் பெற்றது. சிறுவனின் உறவுகள், மற்றும் அப்பகுதி பெற்றோர்கள் இன்று காலை நீதிமன்ற செயற்பாடுகள் ஆரம்பிப்பதற்கு முன்பாக அளுத்கடை நீதிமன்றத்திற்கு முன்பாக பதாகைகளை ஏந்தி அமைதியாக முறையில் கவனயீர்ப்பு பேராட்டத்தை முன்னெடுத்தனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொழும்பு பிரதேசத்தினை சேர்ந்த சிறுவனுக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு ஏற்பட்ட சிறுநீரக நோய் காரணமாக வைத்தியரிடம் அவரை பெற்றோர்கள் கொண்…
-
- 0 replies
- 370 views
- 1 follower
-
-
11 FEB, 2025 | 05:21 PM இலங்கையர்களிடையே பாரம்பரிய ஜப்பானிய காகித மடிப்புக் கலையை ஊக்குவிப்பதற்காக இலங்கையில் உள்ள ஜப்பான் தூதரகம் ஓரிகமி பட்டறையை கடந்த 7ஆம் திகதி தூதரகத்தில் நடத்தியது. ஜப்பானிய ஓரிகமி நிபுணர் ஹிகாஷி கட்சுகாவா இந்தப் பட்டறையின் தலைமை பயிற்றுவிப்பாளராக இருந்தார். இந்தப் பட்டறையில் இலங்கை ஓரிகமி கோப்புறைகள் சங்கத்தின் (OFASL) நிறுவனர் மற்றும் தலைவர் ரெசா தில்ஷார்ட் கரீம் (Reza Dilshard Kareem) உட்பட பல பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் சிக்கலான ஓரிகமி நுட்பங்களைக் கற்றுக்கொள்வதற்கும் இந்த பாரம்பரிய ஜப்பானிய கலை வடிவத்தின் அழகை ஆராய்வதற்கும் வாய்ப்பைப் பெற்றனர். இந்த முயற்சி ஜப்ப…
-
- 0 replies
- 205 views
- 1 follower
-
-
இந்தியாவில் இலங்கை சார்பாக பதக்கங்களை குவித்த மலையக சாதனை வீரர்! நுவரெலியா பூண்டுலோயா பகுதியை சேர்ந்த துரைசாமி விஜின் இந்தியாவில் 2025 ம் ஆண்டுக்கான அகில இந்திய மெய்வல்லுனர் போட்டியில் இலங்கை சார்பாக கலந்து கொண்டு மூன்று தங்க பதக்கதை வென்றுள்ளார் . இந்த போட்டியானது இந்தியா ராஜஸ்தான் RR கல்லூரி விளையாட்டு மைதானதில் நடைபெற்றது . இவர் சுற்றி எறிதல் ,பருதிவட்டம் எறிதல் மற்றும் 5000 M வேக நடை ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு மூன்று தங்கபதக்கதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. அவர் தெரிவிக்கையில் இந்த மெய் வல்லுனர் போட்டியில் குறிப்பாக இந்தியாவில் இருந்து 12 மாநிலங்களும் பூட்டான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளை சேர்ந்த 2000கும் அதிகமான வீர வீராங்கனைகள் கலந்து …
-
- 5 replies
- 421 views
-
-
சி.ஐ.டி.யின் கீழ் புதிய புலனாய்வு பிரிவுகள்! சிக்கலான விசாரணைகளைக் கையாள்வதில் செயல்திறனை மேம்படுத்துவதற்காக இலங்கை காவல்துறை அதன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கீழ் புதிய பிரிவுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மறுசீரமைப்பில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID), சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவு மற்றும் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியவை அடங்கும். மேலும், மேல் மற்றும் தென் மாகாணங்கள் தவிர்ந்த அனைத்து மாகாணங்களிலும் மாகாண குற்றப்பிரிவுகள் அமைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர். குற்றவியல் மற்றும் நிதி விசாரணைகளுக்கான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் (SDIG) நிதிக் குற்றம் மற்றும் சட்டவிரோத சொத்து விசாரணைகளை மேற்பார்வையிடுவார். அதே…
-
- 1 reply
- 210 views
- 1 follower
-
-
நெல் களஞ்சியசாலைகள் இதுவரை திறக்கப்படவில்லை! -விவசாயிகள் குற்றச் சாட்டு. அரசாங்கம் நெல்லுக்கான உத்தரவாத விலையை கடந்த வாரம் அறிவித்திருந்த போதும் நெல் களஞ்சியசாலைகள் இதுவரை திறக்கப்படவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். நெல்லுக்கான உத்தரவாத விலையாக, நாட்டு நெல் கிலோ ஒன்று 120 ரூபாய்க்கும், சம்பா நெல் கிலோ ஒன்று 125 ரூபாய்க்கும், கீரி சம்பா நெல் கிலோ ஒன்று 132 ரூபாய்க் கும் கொள்முதல் செய்யப்படும் என அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அரசாங்கம் நிர்ணயித்த உத்தரவாத விலையில் நெல்லை கொள்வனவு செய்வதற்காக கடந்த வியாழக்கிழமை முதல் களஞ்சியசாலைகள் திறக்கப்படும் என நெல் சந்தைப்படுத்தல் சபை அறிவித்திருந்தது. எனினும், பல மாவட்டங்களில் நெல் களஞ்சியசாலை…
-
- 0 replies
- 296 views
-
-
நாட்டுக்கு வருகை தரும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மொத்தமாக 3,32,439 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. மேலும் பெப்ரவரி மாதத்தின் முதல் 9 நாட்களில் மொத்தம் 79,678 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர் எனவும், பெப்ரவரி மாதத்தின் முதல் 9 நாட்களில் இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1420782
-
- 0 replies
- 134 views
-