ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142780 topics in this forum
-
போக்குவரத்து சபைக்கு சுமார் 43 மில்லியன் ரூபாய் இழப்பு. நிறுவனக் கோட்பாட்டை மீறி எட்டு தொழிற்சங்கங்களுக்கு 138 திறந்த பயண அனுமதிச் சீட்டுகளை வழங்கியதால், 2023 ஆம் ஆண்டில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 43 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ரயில்வே திணைக்களத்தினால், இந்த தொழிற்சங்கங்களுக்கு 22 இலவச ரயில் பயண அனுமதிச் சீட்டுகளை ஒதுக்கியதன் விளைவாக, அதே ஆண்டில் அரசாங்கத்திற்கு 25 மில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டதாக கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை கூறுகிறது. நாடு முழுவதும் வழங்கப்படும் இந்த இலவச பயண அனுமதிச் சீட்டுகளை பெறுவதற்கு தொழிற்சங்க அதிகாரிகளுக்கு உரிமை உண்டு. இருப்பினும், எட…
-
- 0 replies
- 238 views
-
-
உங்களின் காணிகள் முப்படையினரின் வசம் இருந்தால் அறியத்தாருங்கள் ; காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் தெரிவிப்பு ! ShanaDecember 27, 2024 முப்படையினரின் வசம் தங்களின் காணிகள் இருக்குமாயின் அது குறித்த உரிய தகவல்களை அறியத்தருமாறு வமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் இ.முரளிதரன் பொதுமக்களிடம் கோரியுள்ளார். நேற்று வியாழக்கிழமை (26) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர், முப்படையினரின் வசம் உள்ள காணிகளை மக்களுக்காக விடுவிப்பதற்கு படைகளின் ஆளணித்துவத்தை குறைக்க வேண்டும். மேலும், வடக்கு மக்களுக்கு நாங்கள் தெரிவிப்பதாவது, உங்களுடைய சொந்த காணிக்குள் இராணுவ படைமுகாம் இருக்குமாயின் எமக்கு தகவல் தாருங்கள். …
-
- 0 replies
- 172 views
-
-
கோட்டாவின் ஆட்சி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க வேண்டும் என்கிறார் சாணக்கியன் கோட்டாபய அரசாங்கத்தின் காலப்பகுதியில் சட்டத்துறை தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையினை விசாரணை செய்து தற்போதைய அரசாங்கம் வெளிக்கொணரவேண்டும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 19ஆவது நினைவு தினம் மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் கே.சோபனன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த சாணக்கியன்…
-
- 0 replies
- 141 views
-
-
இம்முறை வரவு செலவு திட்டத்தில் கல்விக்கும், சுகாதாரத்திற்கும் அதிக நிதி ஒதுக்கீடு - அமைச்சர் சந்திரசேகர் Published By: Digital Desk 7 27 Dec, 2024 | 02:16 PM இம்முறை வரவு செலவு திட்டத்தில் கல்விக்கும், சுகாதாரத்துக்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சுகாதாரம் தொடர்பான விடயங்கள் பேசப்படும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தில் எதிர்கால திட்டமிடல் இல்லாமல் உள்ளமை கவலையளிக்கிறது. நாங்கள் எதிர்காலம் தொடர்பில் திட்டம…
-
- 0 replies
- 182 views
-
-
கெஹெலியவின் முடக்கப்பட்ட சொத்துக்கள் விபரம் - நீதிமன்றம் அறிவிப்பு 27 Dec, 2024 | 02:55 PM முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவினதும் அவரது குடும்பத்தவர்களினதும் முடக்கப்பட்ட சொத்துக்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. மேல்மாகாண மேல்நீதிமன்றம் பத்திரிகை விளம்பரம் மூலம் வங்கிகணக்குகள் ஏனைய சொத்துக்கள் உட்பட முடக்கப்பட்ட சொத்துக்கள் குறித்து அறிவித்துள்ளது. இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு 18 வங்கி கணக்குகள் 5 ஆயுள்காப்புறுதிகள் ஆகியவற்றை செயல் இழக்கச்செய்துள்ளதுள்ளதுடன் கொழும்பு ஐந்தில் தொடர்மாடியொன்றையும் மேர்சிடெஸ் பென்ஸ் வாகனத்தையும் கைப்பற்றியுள்ளது என நீதிமன்ற விளம்பரத்தில் தெரிவி…
-
- 0 replies
- 112 views
-
-
பிரிக்ஸ் இணைவு குறித்து ஜனாதிபதி அநுர, புட்டினுக்கு கடிதம்! ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரிக்ஸ் அமைப்பில் இணைந்து கொள்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் பாக்கிர் அம்சா, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடமிருந்து விளாடிமிர் புட்டினுக்கு எழுதிய கடிதத்தில், பிரிக்ஸ் குடும்பத்துடன் இணைவதற்கான தனது விருப்பத்தை இலங்கை வெளிப்படுத்தியுள்ளது. ஏனைய பிரிக்ஸ் நாடுகளையும் ஒரு கூட்டாளி நாடாக இணைவதற்கான கோரிக்கையுடன் நாங்கள் அணுகியுள்ளோம். மேலும், அவர்களின் நேர்மறையான பதிலுக்காக காத்திருக்கிறோம் என்று சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தூதுவர் பகீர் அம்சா ரஷ்ய ஊடகமான …
-
-
- 2 replies
- 346 views
-
-
விமானத்தில் உயிாிழந்த இலங்கைப் பெண் adminDecember 27, 2024 டோஹாவில் இருந்து பாரிஸ் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த விமானத்தில் திடீரென சுகவீனமடைந்த இலங்கைப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். கட்டார் எயார்வேஸ் விமானத்தில் பயணித்த குறித்த பெண்ணுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், ஈராக்கின் எர்பில் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. முன் அறிவிப்புகளின்படி, மருத்துவக் குழுக்களும் விமான நிலையத்திற்கு வரவழைக்கப்பட்ட போதும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தொிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸில் தங்கியிருந்த 81 வயதுடைய இலங்கைப் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். எர்பிலில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் இது தொடர்பாக பிரான்ஸ் பிரஜையான அவர…
-
- 0 replies
- 306 views
-
-
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் அமைதியின்மை! கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று காலை ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில் சற்று முன்னர் கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. கூட்டத்தில் அனுமதியின்றி நுழைந்த நபரொருவருக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் இடையில் உண்டான வாக்குவதாம் காரணமாக அமைதியின்மை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் அமைச்சர் சந்திரசேகரன் தலையீடு செய்து கூட்டத்தை அமைதி நிலைக்கு கொண்டு வந்துள்ளார். கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன், வடமாகாண ஆளுநர் வேதநாயகன் இணைத் தலைமையில் இன்று காலை ஆரம்பமான குறித்த கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன், இராமநாதன் அர்ச்சுனா, ர…
-
- 2 replies
- 277 views
-
-
கிளிநொச்சி டிப்போ சந்தியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ நினைவுச் சின்னம் அகற்றப்பட்டு கலாச்சார மண்டபம் அமைக்கப்பட வேண்டும் என தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கிளிநொச்சி டிப்போ சந்தியில் ஒரு இராணுவ நினனைவுச் சின்னம் உள்ளது. டிப்போவிற்கு பின்னால் இரண்டு ஏக்கர் காணி இராணுவத்தின் வசமுள்ளது. தற்போது பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதியில் முன்னாள் அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரனால் மிகப்பெரிய கலாச்சார மண்டபம் அமைக்கப்பட்டிருந்தது. அதனை இராணுவம் தான் இடித்து அழித்தது. கிளிநொச்சி டிப்…
-
- 3 replies
- 317 views
- 1 follower
-
-
2024 இல் சுற்றுலா பயணிகளின் வருகை 2 மில்லியனை விஞ்சியது! 2024 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த மொத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இன்று (26) இரண்டு மில்லியனைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தை சேர்ந்த தம்பதியரே அந்த இலக்கை அடைந்ததாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன. டிசம்பர் முதல் பாதியில் மாத்திரம் மொத்தம் 97,115 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக 6,474 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். https://athavannews.com/2024/1414160
-
-
- 9 replies
- 552 views
-
-
புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்களை இறக்குமதி செய்யப்போவதில்லை - ஆனந்த விஜேபால புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளபோதும் அதற்காக இறக்குமதியை மேற்கொள்ளப்போகவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இந்த விடயம் சம்பந்தமாக அவர் தெரிவித்துள்ளதாவது, கடந்த அரசாங்கங்களின் ஆட்சிக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஆடம்பர வாகனங்களை தற்போது ஏலம் விடும் பணியில் ஆளும் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இவ்வாறான நிலையில் தேசிய மக்கள் சக்தியின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது தங்கள் சொந்த வாகனங்களை…
-
- 3 replies
- 285 views
-
-
வினைத்திறனற்ற அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் – பூர்த்தி செய்யப்படாத இருதயசிகிச்சைப் பிரிவும் – வவுனியாவில் 54 இருதய நோயாளர் மரணங்கள் ! அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் – பூர்த்தி செய்யப்படாத இருதயசிகிச்சைப் பிரிவும் – வவுனியாவில் 54 இருதய நோயாளர் மரணங்கள் !0 நடப்பு வருடத்தில் மட்டும் வவுனியா பொது வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சை செய்ய முடியாத காரணத்தினால் இவ்வருடம் 54 இருதய நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் 46 நோயாளிகள் 45 வயதுக்கு உட்பட்டவர்களாகும். நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதி உதவியுடன் 3,329 மில்லியன் ரூபா செலவில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் …
-
- 0 replies
- 149 views
-
-
மகிந்தவின் பாதுகாப்பு கௌதம புத்தரிடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு கௌதம புத்தரிடம் ஒப்படைக்கப்படுமெனவும் அரசாங்கத்தின் தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்துவதில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டமை தொடர்பில் அவரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் குழுவை அமைத்து தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது. அந்த தீர்மானங்களை நாங்கள் பிரச்சினைக்கு உட்படுத்தப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் மீளாய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவுக்கு நாட்டின்…
-
-
- 8 replies
- 676 views
- 2 followers
-
-
Published By: DIGITAL DESK 7 25 DEC, 2024 | 11:29 PM (இராஜதுரை ஹஷான்) இலங்கையின் தேசிய பாதுகாப்பின் பிரதான ஒரு அம்சமாக கச்சத்தீவு காணப்படுகிறது. கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது. இவ்விடயத்தில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது அவசியமற்றது. இந்தியாவின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்வதற்காக விதிக்கப்படும் நிபந்தனைகளுக்கு அடிபணிய வேண்டிய தேவை கிடையாதென முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக கச்சத்தீவை மீட்க வேண்டும் இந்தியாவின் திராவிட முன்னேற்றக் கழகம் தீர்மானம் ஒன்றை அண்மையில் நிறைவேற்றியுள்ளது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது மேற்க…
-
- 3 replies
- 347 views
- 1 follower
-
-
கிளிநொச்சியில் அதிகரிக்கும் மதுபானக் கடைகள்: மக்கள் போராட்டம்! December 24, 2024 கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்த மதுபான கடைகளை நிரந்தரமாக மூடுமாறு வலியுறுத்தி போராட்டம் ஒன்று இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது மதுபோதைக்கு எதிரான இயக்கம் மற்றும் வடக்கு கிழக்கு மறுவாழ்வு அமைப்பின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் சர்வ மதத்தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்ததுடன் ஆர்ப்பாட்டப் பேரணி கிளிநொச்சி டிப்போ சந்தியில் ஆரம்பமாகி மாவட்ட செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டது. இதன் போது, கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்கதிபர் எஸ்.முரளீதரனிடம் ஜனாதிபதிக்கு கையளிக்குமாறு மகஜர் ஒன்றும் கையளித்திருந்தமை இங்கு குறிப்ப…
-
-
- 39 replies
- 2.1k views
- 1 follower
-
-
கடந்த 24 மணிநேரத்தில் 7,950 வாகன சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் (செ.சுபதர்ஷனி) நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட போக்குவரத்து நடவடிக்கைக்கு அமைய வியாழக்கிழமை (26) காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர காலப்பகுதியில் மாத்திரம் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் 395 சாரதிகள் உள்ளடங்கலாக 7,950 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்தார். பண்டிகைக் காலங்களில் வாகன விபத்துகளை குறைக்கும் நோக்கில் பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய கடந்த 20ஆம் திகதி மு…
-
- 0 replies
- 169 views
-
-
பானை கழுவச்சென்ற பெண் முதலையின் தாக்குதலுக்கு பலி ! (செ.சுபதர்ஷனி) களுத்துறை தொடங்கொட பகுதியில் முதலையால் தாக்கப்பட்டு களு கங்கையில் இழுத்துச் செல்லப்பட்ட 50 வயதுடைய பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தொடங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொஹொலன பிரதேசத்தில் களு கங்கையில் வியாழக்கிழமை (26) பானை கழுவச் சென்ற பெண்ணொருவர் எதிர்பாராத விதமாக அங்கிருந்த முதலையால் தாக்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் காணாமல்போன பெண்ணை மீட்பதற்காக படகுகள் மூலம் பிரதேச மக்கள் தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர். இதன்போது சம்பவம் இடம்பெற்ற பகுதியிலிருந்து சற்று தொலைவில் …
-
- 0 replies
- 335 views
-
-
26 DEC, 2024 | 04:31 PM யாழ்ப்பாணத்தில் குடும்பம் ஒன்றின் மீது தந்தையும் மகனும் இணைந்து நடாத்திய தாக்குதலில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆலயம் ஒன்று தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டினை அடுத்து வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த தந்தையும் மகனும், வீட்டில் இருந்த குடும்பத்தலைவர், வயோதிப பெண் மற்றும் சில வாரங்களுக்கு முன்னர் குழந்தை பிரசவித்த இளம் தாய் ஆகிய மூவர் மீது தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virake…
-
- 1 reply
- 205 views
- 1 follower
-
-
மஹிந்த மீதான ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தல்; அரசாங்கத்தின் பதில்! அரச புலனாய்வுத் தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தப்படும் அபாயம் எதுவும் இல்லை என பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மற்றும் விடுதலைப் புலி குழுக்களிடமிருந்து மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சி சட்டத்தரணிகள் சங்கத்தின் உப தலைவர் மனோஜ் கமகே அண்மையில் தெரிவித்தார். இது குறித்து ஊடகங்களில் பேசிய அவர், டிசம்பர் 23 முதல் ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட மீதமுள்ள இராணுவ அதிகாரிகளை பொது பாதுகாப்பு அமை…
-
- 1 reply
- 389 views
-
-
சவேந்திர சில்வாவின் பதவி பறிபோகின்றது! பாதுகாப்புப் படைகளின் பிரதானி அலுவலகத்தை இல்லாமல் செய்வதனூடாக அவரது பதவியைப் பறிப்பதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதானியாக ஜெனரல் சவேந்திர சில்வா கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கடமையாற்றுகின்றார். பாதுகாப்பு படைகளின் பிரதானியாக செயற்பட்ட அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அந்தப் பதவியில் இருந்து ஓய்வுபெற்றபின்னர், அப்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவால் ஜெனரல் சவேந்திர சில்வா பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதானியாக நியமிக்கப்பட்டிருந்த நிலையில், பாதுகாப்புப் படைகளின் பிரதானி அலுவலகத்தை இல்லாமல் செய்வத…
-
- 2 replies
- 453 views
-
-
பாலியல் உறவுக்கு அழைத்த பொலிஸ் அதிகாரி – காங்கேசன்துறை பகுதியில் பதற்றம் December 24, 2024 3:33 pm காங்கேசன்துறை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பெண்ணொருவரை மதுபோதையில் பாலியல் உறவுக்கு அழைத்தமையனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியிலுள்ள இளைஞர்களால் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நையப்புடைக்கப்பட்டு காங்கேசன்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, காங்கேசன்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் இன்று காலை மாவிட்டபுரம் தையலகத்தில் தைப்பதற்கு கொடுத்த சீருடையை எடுப்பதற்கு மது போதையில் சென்று தையலகத்தில் பணிபுரியும் பெண்களுடன் தன்னுடன் பாலியல் உறவுக்கு வருமாறு வற்புறுத்தியுள்ளா…
-
-
- 11 replies
- 845 views
-
-
Published By: VISHNU 26 DEC, 2024 | 02:03 AM இந்திய அரச வங்கியொன்றுக்கு இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் புலனாய்வுப்பிரிவு 2 மில்லியன் ரூபா அபராதம் விதித்துள்ளது. இலங்கையின் 2006 ஆம் ஆண்டு 6 ஆம் இலக்க நிதியியல் பரிமாற்ற அறிக்கையிடல் சட்டத்தின் சரத்துக்களுக்கு அமைவாக செயற்படாமையினாலேயே மத்திய வங்கியினால் மேற்குறிப்பிட்டவாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவ்வங்கி, இலங்கையில் கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் தமது வங்கியின் கிளைகள் இயங்கிவருவதாகவும், எதிர்வருங்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதைத் தவிர்ப்பதற்கு அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. https://www…
-
- 0 replies
- 151 views
- 1 follower
-
-
எட்கா உடன்படிக்கை: தேசிய மக்கள் சக்தி மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் – திஸ்ஸ அத்தநாயக்க December 26, 2024 எட்கா ஒப்பந்தத்துக்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிட்ட தேசிய மக்கள் சக்தி இன்று அதனை ஏற்றுக்கொண்டிருக்கிறது. எனவே கடந்த காலங்களில் மக்களிடம் பொய் கூறி அவர்களை ஏமாற்றியமைக்காக தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் மன்னிப்புக் கோர வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். இந்தியா – இலங்கை இடையே எட்கா உடன்படிக்கை தொடர்பில் கலந்துரையாடல்களை ஆரம்பித்தத் தருணம், அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணி (ஜனதா விமுக்தி பெரமுன) எதிர்க்கட்சி ஆசனத்திலிருந்து இந்த உடன்படிக்கையை கடுமையாக விமர்சித்திருந்தது…
-
- 1 reply
- 166 views
-
-
13ஆவது திருத்தச்சட்டம் – தமிழக கட்சிகள் மோடிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் ; வரதராஜ பெருமாள் December 26, 2024 2:17 pm 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு தமிழக கட்சிகள் இந்திய பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுக்க வேண்டும் என வடக்கு,கிழக்கு மாகாணங்களின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தெரிவித்ததுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்திய பயணத்தில் 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் பிரதமர் நரேந்திர மோடி எவ்வித கருத்துகளை முன்வைத்திருக்கவில்லை. இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வரதராஜ பெருமாள், ”முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 2015ஆம் ஆண்டு இந்தியாவுக்குச் சென்றிருந்த போதும், 2023ஆம் …
-
- 0 replies
- 118 views
-
-
பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைய ஒன்பது நாடுகளுக்கு வாய்ப்பு – இலங்கைக்கு கிடைக்கவில்லை! மலேசியா, இந்தோனீசியா, தாய்லாந்து, பெலருஸ், பொலிவியா, கியூபா, உகாண்டா, கசக்ஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட ஒன்பது நாடுகள் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைத்துக்கொள்ளப்பட உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் பிரிக்ஸ் கூட்டமைப்பில் சேர இலங்கை உட்பட 35 நாடுகள் விண்ணப்பித்திருந்தன. பிரிக்ஸ் அமைப்பில் சேர தமது விருப்பத்தை வெளிப்படுத்திய கடிதமொன்றை இலங்கை வெளிவிவகார அமைச்சு ரஷ்யா ஜனாதிபதி விளாடிமீர் புடினுக்கும் அனுப்பியிருந்தது. என்றாலும், விண்ணப்பித்…
-
- 0 replies
- 161 views
-