Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முன்னாள் போரா­ளியின் மரணம் குறித்து சந்­தேகம் (ஆர்,ராம்) தற்­கொலை செய்­து­கொண்ட முன்னாள் போரா­ ளியின் மரணம் குறித்து உற­வி­னர்­க­ளுக்கு சந்­தே கங்கள் காணப்­ப­டு­கின்ற நிலையில் அந்த மரணம் குறித்து முழுமை­யான விசா­ர­ணை­யொன்று அவ­சியம் என இலங்கை தமி­ழ­ர­சு­க்கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை.சோ.சேனா­தி­ராஜா கோரிக்கை விடுத்­துள்ளார். தமி­ழீழ விடு­தலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்­பி­னரும் ஜன­நா­யக போரா­ளிகள் கட்­சியின் தென்­ம­ராட்சி அமைப்­பா­ள­ரு­மான சாவ­கச்­சேரி டச்சு வீதியை சேர்ந்த ஐந்து பிள்­ளை­களின் தந்­தை­யான இனி­யவன் எனப்­படும் அழைக்­கப்­படும் 35 வய­து­டைய தர்­ம­சேனா ரிசி­கரன் என்­பவர் சாவ­கச்­சே­ர…

  2. ரணிலின் முதுகில் குத்தி ஆட்சியை கைப்பற்ற மாட்டேன் – மஹிந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் முதுகில் குத்தி ஆட்சியை கைப்பற்றப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டு பயணமொன்றை மேற்கொண்டதன் பின்னர் நாட்டின் ஆட்சியை கவிழ்க்கும் தேவை தமக்கு கிடையாது எனவும் பிரதமர் ரணில் விக்கரமசிங்க நாட்டில் இருக்கும் போதே ஆட்சியை கவிழ்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மீளவும் ஆட்சி கவிழ்ப்பு பற்றி பகிரங்க சவால் விடுத்துள்ளார். அரசாங்கம் சர்வாதிகார போக்கில் ஆட்சி நடத்தி வருகின்றது எனவும், மக்கள் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ள அவர் நல்லாட்சி அரசாங்கத்தின் …

  3. முக்கிய அமைச்சர் ஒருவர் இந்தியாவிற்கு தங்கம் கடத்தி வருவதாகக் குற்றச்சாட்டு நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய அமைச்சர் ஒருவர் இந்தியாவிற்கு தங்கம் கடத்தி செல்வதாக குற்றப் புலானாய்வுப் பிரிவினர் குற்றம் சுமத்தியுள்ளனர். குறித்த முக்கிய அமைச்சரும், அவரது சகோதரரும் சில வர்த்தகர்களும் இணைந்து இவ்வாறு தங்கம் கடத்தி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த அமைச்சருக்கும் அமைச்சரின் சகோதரருக்கும் எதிராக காணி அபகரிப்பு தொடர்பில் ஏற்கனவே குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அமைச்சரின் உத்தியோகபூர்வ வாகனங்களில் தங்கம் கடத்தப்பட்டு விமான நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதாக புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளின் மூலம் தெரியவந்…

  4. இலங்கை இறுதி யுத்தத்தில் காணாமல் போனவர்கள் பற்றி நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட ராணுவ அதிகாரி இறுதி யுத்தம் முடிவடைந்த போது ராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போனவர்கள் தொடர்பில் தெரியும் என முன்பு சாட்சியம் அளித்த ராணுவ அதிகாரி ஒருவர், இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் அதுபற்றி எதுவும் தெரியாது எனத் தெரிவித்திருக்கிறார். மனுதாரர்களில் ஒருவரான அனந்தி சசிதரன் (கோப்புப்படம்) அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று ராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்களில் ஒருவராகிய நடேசு முரளிதரன், அவருடைய மனைவி ஜெயக்குமாரி, அவர்களுடைய ஐந்து வயதான தாருஷன், இரண்டு வயதான அபித்தா ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் காணாமல் போய…

  5. நல்லிணக்க அறிக்கையைப் பெற ஜனாதிபதி, பிரதமர் சமுகமளிக்கவில்லை நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணி, தனது இறுதி அறிக்கையை, நேற்றிரவு கையளித்தது. இதற்கான வைபவம், ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற போதிலும், அந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ அல்லது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோ கலந்துகொள்ளவில்லை. குளியாப்பிட்டியவில் இடம்பெற்ற தனியார் நிறுவனமொன்றின் வைபவத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் கலந்துகொண்டதோடு, கிரியுல்லவில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதமர் கலந்துகொண்டிருந்தார். ஆனால், பல மாதங்களாக கலந்தாலோசனைகள் இடம்பெற்று, நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முக்கியமான அறிக்கையாகக் கருதப்பட்ட இந்த அறிக்கை கைய…

  6. “அரசியல் கைதிகள் விடுதலையை இழுத்தடிப்புச் செய்வது நல்லதல்ல” “அரசியல் கைதிகள் விடயத்தை, மேலும் இழுத்தடிப்புச் செய்வது நல்லாட்சிக்கு நல்லதல்ல” என்று, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார். கண்டி, பல்லேகலயில் அமைந்துள்ள தும்பரை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் 13 பேரை, செவ்வாய்க்கிழமை பார்வையிடச் சென்ற வேலு குமார் எம்.பி, அவர்களுடன் கலந்துரையாடலிலும் ஈட்டார். இதன் பின்பு, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்துரைத்த அவர் மேலும் கூறுகையில், “சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் க…

  7. சுகாதார அமைச்சின் இணையத்தளம் தீவிரவாதிகளால் ஊடுறுவல் : 'முஸ்லிம் சைபர் ஆர்மி" என பதிவு சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, சுதேச வைத்தியத்துறை அமைச்சின் இணையத்தளம் நேற்று (03) தீவிரவாத அமைப்பொன்றால் ஊடுறுவப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் இணையத்தை ஊடுறுவிய தீவிரவாத அமைப்பு இணையத்தளத்தின் வரவேற்பு பக்கத்தில இஸ்லாமிய சின்னம் ஒன்றை அடையாளமாக கொண்டு 'முஸ்லிம் சைபர் ஆர்மி" என்ற பதிவை மேற்கொண்டுள்ளனர். தீவிரவாத அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட பதிவில் 'நோபல் வாழ்க்கை அல்லது வீர மரணம்" என்ற பதிவும் இடப்பட்டுள்ளது. இதேவேளை ஊடுறுவலை மேற்கொண்டவர் பெயர் மிஸ்டர் ஷெட் (Mr.Z) எனவும் பதிவிடப்பட்டுள்ளது இந்நிலையில் ஊடுறுவலை மேற்கொண்ட…

  8. வருட ஆரம்பத்தில் கடமைகளை தொடங்கும் அரச உத்தியோகஸ்தர்களுக்கான சத்திப்பிரமாணத்திற்கான அரச அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்கள் மற்றும் அந்நிகழ்வில் விடுவிக்கப்பட்ட அறிவிப்புகள் தமிழ் உத்தியோகஸ்தர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. குறிப்பாக அரச அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்த ஒரே நாட்டின் ஒரே இனம் என்பதும், உயிரிழந்த படையினருக்கான மௌன அஞ்சலி என்ற சொற்பதங்களே உத்தியோகஸ்தர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. வருட ஆரம்பத்தில் மக்களுக்கான அரச சேவையில் ஈடுபடும் உத்தியோகஸ்தர்கள் மக்கள் சேவை தொடர்பான சத்தியப் பிரமாணத்தினை செய்து கொண்டு தமது பணிகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் அனைத்து அரச திணைக்களங்கள், நிறுவனங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. அரசாங்கத்த…

    • 1 reply
    • 374 views
  9. இலங்கை வாழ் தமிழர்களுக்கு சுயாட்சி அதிகாரங்களை பெற்றுக் கொடுக்குமாறு அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்குள் இலங்கைத் தமிழர்களுக்கு சுய நிர்ணய அதிகாரத்தை பெற்றுக் கொடுக்க ஆவண செய்யுமாறு, அமெரிக்க புதிய ஜனாதிபதி ட்ரம்பிடம், புலம்பெயர் தமிழர்கள் கோரியுள்ளனர். அவசர மகஜர் ஒன்றின் ஊடாக இந்தக் கோரிக்கை ட்ரம்பிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையில் இராணுவத்தினரால் 145000 தமிழர்கள் கூட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இந்த மகஜரில் சுட்டிக்காட்டியுள்ளனர். இலங்கை இராணுவத்தினரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தி…

  10. இலங்கை மத்திய வங்கியினால் தினசரி வெளியிடப்படும் பிரதான நாணய மாற்று வீத பட்டியலில் சீனாவின் நாணயமும் இணைந்துள்ளது. 2017ஆம் ஆண்டில் இருந்து சீன நாணயமான ரென்மிபினை இணைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய முதல் முறையாக 2017ஆம் ஆண்டு நாணய மாற்று விகதி பட்டியல் இன்றைய தினம் மத்திய வங்கியினால் வெளியிட்ப்பட்டுள்ளது. அதில் சீனாவின் ரென்மிபி ஒன்றிற்காக கொள்வனவு விலை 21.07 ரூபாய் மற்றும் விற்பனை விலையாக 22.11 ரூபாயாக பதிவாகியுள்ளது. இதுவரை மத்திய வங்கியின் பிரதான நாணய மாற்று விகித பட்டியலில் பதிவாகியுள்ள நாணயங்களான, அமெரிக்க டொலர், பிரித்தானிய பவுண்ஸ், ஐரோப்பிய ஒன்றியத்தின் யூரோ, சுவிட்சர்லாந்தின் பிராங்க், கனடியன் டொலர், அவுஸ்திரேலிய டொலர…

  11. வட மாகாண பதில் முதலமைச்சர் பதவியேற்பு வடமாகாண பதில் முதலமைச்சராக பொன்னுத்துரை ஐங்கரநேசன், செவ்வாய்க்கிழமை (03) பதவி ஏற்றுக்கொண்டார். வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில், வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வைத்து அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். 02 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், லண்டன் மற்றும் கனடாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், வடமாகாண விவசாய மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் பதில் முதலமைச்சராக பதவி வகிப்பார். இந்த பதவி ஏற்பின் போது வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் உடனிருந்தார். - See mor…

  12. வட மாகாணத்திற்கான சிறுவர் வைத்தியசாலை ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கம ஆயிரம் மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளதாகவும், எனவே, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அண்மையாக 1 - 5 ஏக்கர் நிலம் தேவை எனவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்ததி அறிவித்துள்ளார். குறித்த காணி இனங்காணப்பட்டு சிறுவர் வைத்தியசாலை அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் ஆரம்பிக்கப்படாதவிடத்து 1000 மில்லியன் ரூபாயும் திரும்பி விடும் என்ற தகவலும் முன்வைக்கப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கென தனியான வைத்தியசாலை யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைப்பது மிகப் பெரும் வரப்பிரசாதம். எனவே, கிடைத்த நிதியைப் பயன்படுத்தி வட மாகாணத்து மக்கள் நன்மை பெறும் வகையில் சிறுவர் வைத்தியசாலையை அமைப்பது கட்டாயமா…

  13. மைத்திரிக்கு எதிராக ஐநா செல்லவுள்ளார் றிசாட் பதியுதீன்! வில்­பத்து தேசிய பூங்காவுக்குரிய பிரதேசத்தை விரி­வு­ப­டுத்­து­வதற்கு அருகிலுள்ள அனைத்துக் காணிகளையும் அபகரித்து அதனை வில்பத்து தேசிய பூங்காவுக்குரியதாக மாற்றி வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன உத்­த­ர­விட்­டுள்­ளமை மறிச்­சுக்­கட்­டியில் வாழும் முஸ்­லிம்­களின் பூர்­வீக காணி­களை அர­சாங்கம் அபகரிக்கும் முயற்சியே இது என அமைச்சர் றிசாட் பதியுதீன் குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன் ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன தனது பிழையான கொள்கையை மாற்றாவிட்டால் முஸ்லிம்கள் சார்பாக ஐக்கிய நாடுகள் சபை வரை சென்று நீதி கேட்பதற்குத் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஞானசார …

    • 7 replies
    • 649 views
  14. வேலைவாய்ப்பு கோரி ஒன்று திரண்ட முன்னாள் போராளிகள் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் தங்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குமாறு நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகள் இன்று காலை கிளிநொச்சி இரணைமடுவில் அமைந்தள்ள சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு முன்னாள் ஒன்றுதிரண்டு தர்க்கத்திலும் ஈடுப்பட்டனா். காலை 10.30 மணியளவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண் பெண் முன்னாள் போராளிகள் தாங்கள் புனா்வாழ்வுப் பெற்று வெளியில் வந்த காலம் முதல் நிரந்தர தொழில் இன்றி பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் வாழ்ந்து வருவதாகவும், புனா்வாழ்வு பெற்றக் காலத்தில் தங்களுக்கு பண்ணை பயிற்சியே வழங்கப்பட்டது என்றும் எனவே சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் வேலைவாய்ப்பை வழங்குமாறு கோரிநின்றனா். …

    • 33 replies
    • 2.1k views
  15. வவுனியா மாவட்டத்தில் களஞ்சியப்படுத்தப்பட்ட நெல்லினை வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யவேண்டாமெனத் தெரிவித்து பாவற்குள நெற் களஞ்சியசாலை முன்பாக நெற்களஞ்சியசாலை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, வவுனியா, பாவற்குளம் படிவம் 6 நெற்களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்தி வைத்திருக்கும் நெல்லினை தென்பகுதிக்கு கொண்டு செல்வதற்கு இன்று பாரவூர்திகள் வந்திருந்தன. இதனையடுத்து அங்கு ஒன்று கூடிய வவுனியா மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள், அரிசி ஆலைகளில் வேலை செய்வோர், பொது மக்கள் எனப்பலரும் பாரவூர்த்திகளை மறித்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதன்போது, களஞ்சியசாலையில் உள்ள நெல்லினை மாவட்ட அரிசி ஆலைகளுக்கு வ…

  16. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் 2016ஆம் ஆண்டு இறுதிக்குள் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் என்ற வாக்குறுதி பொய்த்து போயுள்ளது. இதனால் தமிழ்த் தலைவர்களின் வாக்குறுதிகள் மீது தொடர்ந்தும் நம்பிக்கை வைக்க முடியாத ஒரு சூழல் ஏற்பட்டு வருகின்றது. வவுனியாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருடைய உருவப்பொம்மை எரிக்கப்பட்ட சம்பவம் இதனை உறுதி செய்துள்ளது. கடந்த வருடம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி முறையிலான ஆட்சி முறைஇ இலங்கை மீது சர்வதேச விசாரணை ஆகிய இரு பிரதான வாக்குறுதிகள் உட்பட பல வாக்குறுதிகளை தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறி வடக்கு கிழக்கில் 1…

  17. கிழக்கு மாகாணத்தில் மீண்டும் இந்து ஆலயங்கள் மீது தாக்குதல் கிழக்கு மாகாணத்தில் அடையாளந் தெரியாத ஆட்களினால் இந்து ஆலயமொன்றின் விக்கிரகம் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன் மற்றுமோர் ஆலயத்தின் கோபுர கலசமும் சேதமாக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டம் நிலாவெளிப் பகுதியிலுள்ள கூழாவடி பிள்ளையார் ஆலயம் மற்றும் பத்தினி அம்மன் ஆலயம் ஆகியவற்றின் மீது தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது. கூழாவடி பிள்ளையார் ஆலயத்தில் மூலஸ்தானத்திலிருந்த பிள்ளையார் அகற்றிய இந்நபர்கள் அதனை அருகாமையிலுள்ள காணியொன்றுக்குள் வீசி விட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை வழமை போல் ஆலய பணிக்கும் வழிபாட்டுக்கும் சென்றிருந்த பெண்ணொருவர், இது தொடர்பாக நிர்வாகத்தின…

  18. கொழும்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்: உறுப்பினர்கள் சிலர் அதிருப்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் கொழும்பில் நடத்தப்படவுள்ளமை தொடர்பில் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாத்திரம் பாராளுமன்ற மற்றும் மாகாண சபை பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ள கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் கொழும்பில் நடத்தப்படுகின்றமை ஏமாற்றமளிப்பதாக அவர்கள் கூறினர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களில் 10 பேர் வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். வடமாகாண சபையின் மொத்த உறுப்பினர்களில் 30 பேர்…

  19. இலங்கையிலும் உலகத்திலும் உள்ள தலைவர்களில் வீரமும் தீரமும் மிக்க முதன்மையான தலைவராக பிரபாகரன் விளங்குகிறார் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். கிளிநொச்சி பொதுச்சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தினால் அழிவுக்குள்ளான கடை உரிமையாளர்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சினால் ஒதுக்கபட்ட 74 மில்லியன் ரூபா நட்ட ஈடு வழங்கும் நிகழ்வு இன்று அரச செயலக மாநாட்டு மண்டபத்தில் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன், வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே, இணைத்தலைவரும் யாழ்ப்பாண கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவர் மு.சந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்ட…

  20. முன்­னைய தவறை உணர்ந்து ஆத­ரவு வழங்­க­வேண்டும் யுத்­தத்­திற்குப் பின்­ன­ரான மஹிந்த ராஜ­ப­க் ஷவின் 48 மாத­கால ஆட்­சியின் போது இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு தொடர்­பான வேலைத்­திட்­டங்­களை விரை­வு­ப­டுத்­தி­யி­ருக்­கலாம். அதனை நாங்கள் ஏற்­றுக்­கொள்­கிறோம். ஆனால் அந்தக் காலப்­ப­கு­தியில் உலகில் எங்­குமே இடம்­பெ­றாத சில வேலைத்­திட்­டங்­களை நாங்கள் முன்­னெ­டுத்தோம் என்று பொது எதி­ர­ணியின் உறுப்­பி­னரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான கெஹெ­லி­ய­ ரம்­புக்­வெல தெரி­வித்­தி­ருக்­கிறார். எமது ஆட்­சியில் 13 ஆவது திருத்த சட்­டத்தை வலு­வி­ழக்கச் செய்ய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­வது பொய்­யான தக­வ­லாகும். அதனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. நாங்கள் 13 பிளஸ் …

  21. ஜனாதிபதியின் யாழ். வருகைக்கான ஏற்பாடுகள் மும்முரம் நாளையதினம் ஜனாதிபதியின் யாழ் வருகைக்கான ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்றுவருகின்றன. குறிப்பாக வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம்,மற்றும் யாழ்ப்பாணம் கோட்டையினை அண்டிய பகுதிகளில் அலங்கார ஏற்பாடுகள் இராணுவத்தினரால் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. "ஜானதிபதியிடம் தெரிவியுங்கள்" நிகழ்ச்சித் திட்டத்திற்காக வருகை தரவுள்ள ஜானதிபதி நாளைய தினம் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார்.யாழ்ப்பாணம் பலாலியில் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு,அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் மக்கள் குறைகளை தெரிவிக்கும் அலுவலகப் பிரிவினை திறந்து வைக்கும் நிக ழ்வு,மதியம் ய…

  22. வவுனியா பன்றிக்கெய்தகுளத்தில் மரணமான தாய் மற்றும் மகனின் சடலம் பிரேத பரிசேதனையின் பின் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்றிக்கெய்தகுளத்தில் நேற்றைய தினம் வீட்டுக்கிணற்றில் இருந்து 30 வயதான சதீஸ்வரன் சுதாசினி மற்றும் அவரது மகனான 7 வயதுடைய சதீஸ்வரன் டினோஸன் ஆகியோரது சடலங்கள் மீட்கப்பட்டிருந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்ததுடன், அப்பகுதி மரண விசாரணை அதிகாரி பார்வையிட்டதன் பின்னர் சடலம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. அங்கு சென்றிருந்த வவுனியா மாவட்ட உத்தியோகப்பற்றற்ற நீதிபதி அன்ரன் புனிதநாயகம் விசாரணைகளை மேற்கொண்டிருந்ததுட…

  23. முல்லைத்தீவு நகரத்தின் மத்தியில் அமைக்கப்பட்டு வந்த காந்தி சிலை இனந்தெரியாதோரால் உடைத்து சோதமாக்கப்பட்டுள்ளது. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகனின் நிதி ஒதுக்கீட்டிலேயே இந்தச் சிலை அமைக்கப்பட்டு வந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, தீவிர தமிழ்த் தேசியர்கள் என சொல்லிக் கொள்பவர்கள், தமது சமூக வலைத்தளங்களில் சிலை உடைப்பை ஆதரித்து கருத்திட்டனர். அதில் அவர்கள் "காந்தி சிலை இந்திய மேலாதிக்கத்தின் குறியீடாக இருந்ததாலேயே உடைக்கப் பட்டதாக நியாயப் படுத்தினார்கள். மேலும், இந்திய தூதரகம் வடக்கு, கிழக்கில் நூறு காந்தி சிலைகளை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர்களே தெரிவித்தனர். முல்லைத்தீவில் காந்தி சிலை உடைத்தவர்களுக்கும், அதை ஆதரித்த…

    • 7 replies
    • 1.5k views
  24. தமிழ் மக்களின் துயர்தோய்ந்த வாழ்விற்கு யார் பொறுப்பேற்பது? -மு.திருநாவுக்கர il அரசியலில் வாய்ப்புகள், ஆபத்துக்கள், சவால்கள் என மூன்றும் ஆங்காங்கே விரவியிருக்கும். இந்த மூன்றுக்கும் மத்தியில் வெற்றிகரமாக நடைபோடுவதிற்தான் தலைமைத்துவங்களின் சாதனைகள் தங்கியுள்ளன. இந்நிலையில் வாய்ப்புகளை சரிவர அடையாளங்காண்பதும் ஆபத்துக்களை முன்னுணர்ந்து தவிர்த்துக் கொள்வதும் அல்லது கடந்து செல்வதும் சவால்களை வெற்றிகரமாக சமாளிப்பதும் என்பதன் மூலமே ஒரு தலைமைத்துவத்தால் அதற்கான சாதனையை நிலைநாட்டவோ அல்லது முத்திரையை பதிக்கவோ முடியும். சரி – பிழை, நல்லது-கெட்டது, நீதி – நியாயம் என்பன பற்றி விருப்பு-வெறுப்புக்களுக்கு அப்பால் அறிவுசார்ந்து ஆராயக்கூடிய…

    • 0 replies
    • 575 views
  25. வீழ்ச்சியை நோக்கி இலங்கையின் பணப்பெறுமதி இலங்கையின் நாணய பெறுமதியானது பாரிய சரிவை நோக்கி நகரும் நிலையிலேயே வருடம் ஆரம்பமாகியுள்ளது. இது எதிர்வரும் காலத்தில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை பாரிய சவாலுக்குட்படுத்தும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டில் மட்டும் நாட்டின் பண பெறுமதியானது சுமார் 3.9 விகிதத்தால் பெறுமதி இழந்துள்ளது. இது ஒரு அமெரிக்க டொலருக்கான இலங்கை பெறுமதியாக 150 ரூபா தொடக்கம் 150.75 சதத்தை கொண்டிருந்தது. இது வருட இறுதியில் 151 ரூபாவாக உயர்ந்துள்ளது. குறித்த பணப் பெறுமதி இழப்பானது இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மற்றும் சர்வதேச பங்கு பரிவர்தனைகளை சாவாலுக்குட்படுத்தி வருவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.