Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நீதி கோரி தீச்சட்டி ஏந்தி போராடிய காணாமல் போனோரின் உறவினர்கள்! December 10, 2024 சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டனர். வவுனியா கந்தசாமி ஆலயத்துக்கு முன்பாக ஆரம்பமாகிய இந்தப் பேரணி பழைய பேருந்து நிலையப்பகுதியில் முடிவடைந்தது. https://eelanadu.lk/நீதி-கோரி-தீச்சட்டியை-ஏந/

  2. யாழ் -மட்டக்களப்பு சிறையில் மனைவிக்கு நடந்த கொடுமை கணவனின் பரபரப்பு புகார்! Vhg டிசம்பர் 09, 2024 யாழ்ப்பாண சிறையில் தனது மனைவி உதயகலாவுக்கு கொடுமைகள் நடப்பதாக தயாபராஜ் என்பவர் இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். தயாபராஜ் உதயகலா தம்பதியினர் யுத்தம் முடிந்த பின்னர் பல்வேறு நிதிக்குற்றச்சாட்டுக்களிற்கு உள்ளாகியிருந்தனர். பின்னர் இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக தமிழகம் தப்பிச் சென்றனர். அங்கு ஓராண்டு சிறைவாசம் அனுபவித்த பின்னர், முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த சமயத்தில், மீண்டும் சட்டவிரோத இலங்கைக்குள் நுழைந்திருந்தனர். பின்னர் சர்வமக்கள் கட்சியென்ற பெயரில் உதயகலா ஒரு அமைப்பை ஆரம்பித்திருந்தார். ம…

  3. நீதியை நிலைநாட்டுவதைத் தாமதப்படுத்துவதும் நீதியை நிலைநாட்டுவதாக அமையாது! -ஜனாதிபதி அநுர.- எத்தனை சட்டங்கள் இயற்றினாலும், எத்தனை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டாலும், அவற்றை வழிநடத்துபவர்கள் சரியாகச் செயற்படாவிட்டால், குடிமக்களுக்கு நீதி நிலைநாட்டப்படாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மக்களால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு நீதி வழங்கப்படாவிட்டால், அந்த அதிகாரம் பயனற்றதாகிவிடும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற “2024 சர்வதேச ஊழல் எதிர்ப்பு தின தேசிய நிகழ்வில்” ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார். இந்த ஆண்டுக்கான சர்வதேச ஊழல் எதிர…

  4. கைதான குற்றப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் இன்று நீதிமன்றில் ஆஜர்! குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட கொழும்பு குற்றவியல் விசாரணைப் முன்னாள் பணிப்பாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வா, இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். பொலிஸ் களப்படை தலைமையகத்தில் வைத்து அவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கடத்தல் மற்றும் சட்டவிரோதமாக சிறையில் அடைத்தல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, கைது செய்யப்பட்ட நெவில் சில்வா இன்று (10) இரத்தினபுரி நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார். https://athavannews.com/2024/1411590

  5. ரஸ்யாவின் முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவிற்கு அமெரிக்கா பயணத்தடை! ரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவும் ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபிலசந்திரசேனவிற்கும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது . குறிப்பிடத்தக்க ஊழலில் ஈடுபட்டனர் என தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு பயணத்தடை விதித்துள்ளது. ஊழலிற்கு எதிரான சர்வதேச தினம் மற்றும் சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு உலகில் ஊழல் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்துள்ளது ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் முன்னாள் பிரதம நிறைவேற்று…

  6. வாகன இறக்குமதி: தவறான விளம்பரங்களுக்கு எதிராக அரசாங்கம் எச்சரிக்கை! இலங்கைக்கு எந்தவொரு வாகனத்தையும் இறக்குமதி செய்வதற்கான சந்தர்ப்பம் விரைவில் கிடைக்கும் என விளம்பரங்களை வெளியிடும் முகவர் நிலையங்களுக்கு அரசாங்கப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ பதிலளித்துள்ளார். அதன்படி, அனைத்து வகையான வாகனங்களையும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் இதுவரையில் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சர் குறிப்பிட்டார். மேலும், கடந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பிற்கு முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எமது பிரதி நிதியமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ கலந்து கொண்டு வாகன இறக்குமதி தொடர்பில் அமைச்சரவையின் தீர்மானத்தை அறிவித்தார். அத…

  7. அரிசிக்கான விலைகளை நிர்ணயித்தார் ஜனாதிபதி : பின்பற்றாதவர்களுக்கு கடும் சட்ட நடவடிக்கையாம் ! ஒரு கிலோ நாட்டரிசியை 225 ரூபா மொத்த விலைக்கும் 230 ரூபா சில்லறை விலைக்கும் விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க , அரிசி விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். இது தொடர்பில் அடுத்த பத்து நாட்களுக்குள் அவதானமாகச் செயற்படுமாறும், இதற்கு முரணாக செயற்படும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார். வர்த்தக,வணிக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அரிசி வியாபாரிகளுடன் ஜனாதிப…

  8. முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்! சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை 10.30 மணியளவில் குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இப்போராட்டத்தில் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2024/1411681

  9. மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் மானியத்தில் மாற்றம் ! ShanaDecember 10, 2024 மீனவர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் மானியத்திற்காக அடுத்த 5 மாதங்களுக்கு மாதாந்தம் 9,375 ரூபாய் வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்ட விரைவு சிறிய மீன்பிடி படகுகளுக்கு இந்த மானியம் வழங்கப்பட உள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். மீனவர்களுக்கு இதற்கு முன்னர் வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் மானியத்தை எளிதாக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இதேவேளை, எதிர்வரும் காலத்திற…

  10. விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு அனுர அரசிடம் ருத்ரகுமாரன் வலியுறுத்து விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கவும், சிறிலங்கா அரசியலமைப்பின் 6 வது திருத்தத்தை ரத்து செய்யவும் மற்றும் ஈழத் தமிழர்கள் கருத்துச் சுதந்திரத்துடன் அரசியல் களத்தில் ஈடுபடும் சூழ்நிலையை உருவாக்குமாறும் இலங்கை அரசாங்கத்திடம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி. ருத்ரகுமாரன் கோரிக்கை விடுத்திருக்கிறார். மாவீரர் நாள் செய்தியில் அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். ருத்ரகுமாரன் மேலும் தெரிவித்ததாவது, நீங்கள் [ஜனதா விமுக்தி பெரமுனா (ஜே.வி.பி.)] ஆயுதப் போராட்டத்தை ஒன்றல்ல, இரண்டு தடவைகள் முன்னெடுத்தது. இருந்தும் உங்கள் மீதான தடை நீக்கப்பட்டு சுதந்திரமாக அரசியலில் …

  11. மக்களின் குறைகளைக் கேட்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர்! December 9, 2024 09:23 am முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட சிராட்டிகுளம் பகுதியில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மக்கள் குறைகேள் சந்திப்பு ஒன்றை நடாத்தினார். குறித்த கிராமமானது முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புறக் கிராமம் என்பதுடன், வெள்ள அனர்த்தத்தின் போது இந்தக் கிராமத்திற்குச் செல்வதற்கான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டிருந்ததால், குறித்த சிராட்டிகுளம் கிராமம் தனிமைப்பட்டிருந்தது. இதனால் குறித்த கிராம மக்கள் பெருத்த இன்னல்களுக்கு முகங்கொடுத்து வந்திருந்தனர். இந்நிலையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குறித்த கிராமத்திற்கு நேரடியா…

  12. O/L மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு December 10, 2024 09:24 am 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (28) நள்ளிரவு 12 மணி வரை மாத்திரமே விண்ணப்பிக்க முடியுமென திணைக்களம் அறிவித்துள்ளது. விண்ணப்பதாரிகள் இணைய வழி முறையில் பரீட்சைக்கு விண்ணப்பிக்க கடந்த நவம்பர் 5 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் மேலும் விளக்கமளித்த பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர, “பாடசாலை விண்ணப்பதாரர்கள் மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் அனைவரிடமும் இன்றைய தினத்திற்குள் தங்கள் விண்ணப்பங்க…

  13. சபாநாயகர் அசோக ரன்வலவின் ‘கலாநிதி’ தூக்கப்பட்டது! adminDecember 10, 2024 சபாநாயகர் அசோக ரன்வலவின் கல்வித் தகுதி தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், இலங்கை பாராளுமன்ற இணையத்தளம் அவரது சுயவிவரத்தில் இருந்து.’கலாநிதி’ என்ற சொல்லை நீக்கியுள்ளது. முன்பு ‘கலாநிதி’அசோக ரன்வல என்று குறிப்பிடப்பட்டிருந்தது., இப்போது அவரது பெயர் ‘அசோக ரன்வாலா எம்.பி’ என்று தோன்றுகிறது, இது அவர் ‘கலாநிதி’ பட்டம் பெற்றதாகக் கூறப்படுவது சட்டபூர்வமானதா என்பது குறித்து மேலும் சந்தேகங்களை எழுப்புகிறது. சபாநாயகரின் சுயவிவரத்திலிருந்து.’ கலாநிதி ‘ என்ற தலைப்பை நீக்கும் வகையில் கடந்த 24 மணி நேரத்திற்குள் இணையதளம் புதுப்பிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், காப்பகப்பட…

  14. உதயங்க வீரதுங்க கபிலசந்திரசேனவிற்கு அமெரிக்கா பயணத்தடை – ஊழலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு 10 Dec, 2024 | 05:47 AM ரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவும் ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபிலசந்திரசேனவும் குறிப்பிடத்தக்க ஊழலில் ஈடுபட்டனர் என தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு பயணத்தடை விதித்துள்ளது.

  15. புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் தேசிய மக்கள் சக்தி உறுதியாக உள்ளது - பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர 08 Dec, 2024 | 03:29 PM ஆர்.ராம் நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு தேவை என்பதில் தேசிய மக்கள் சக்தி உறுதியாக இருப்பதோடு அந்த அரசியலமைப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளடக்கப்பட்டு சர்வஜன வாக்கெடுப்பிற்கு விடப்படும் என்று வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார். வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போது, புதிய அரசியலமைப்பு உருவாக்கச் செயற்பாடுகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையிலிருந்து ஆரம்பமாகுமா இல்லை முழுமையாக ஆரம்பத்திலிருந்தான செயற்பாடுகள…

      • Downvote
      • Like
      • Thanks
      • Haha
    • 21 replies
    • 1.1k views
  16. கஜேந்திரகுமார் பயணித்த வாகனத்தில் மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு! அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த ஜீப்வண்டி மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவமானது கொழும்பு - புத்தளம் வீதியில் போலவத்தை சந்தியில் வைத்து நேற்று(08.12.2024) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். மேலும் இந்த விபத்தில் 70 வயதுடைய யாசகம் செய்யும் பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரின் சாரதியான 60 வயதுடைய நபர் கைதுசெய்யப்பட…

  17. இந்தியாவிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்குக் கோரிக்கை! இந்தியாவிலிருந்து 20,000 மெற்றிக் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு வெங்காய நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் மன்னார், ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் பாரியளவு வெங்காயச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் வெங்காயத்துக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசிக்கான தட்டுப்பாட்டைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாக இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர…

  18. நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் மின்சாரசபைக்கு செலவு குறைவு; மின் கட்டணத்தைக் கண்டு முதலீட்டாளர்கள் பதறி ஓடுகின்றனர் - நளின் பண்டார சாடல் 10 Dec, 2024 | 02:07 AM (எம்.மனோசித்ரா) நீர் மின் உற்பத்தியினுடாக 65 சதவீத மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் இலங்கை மின்சாரசபைக்கு செலவு குறைவடைந்துள்ளது. இதனால் பாரிய இலாபம் ஈட்டப்பட்டுள்ளது. அவ்வாறிருக்கையில் ஏன் மின் கட்டணத்தை குறைக்க முடியாது. இலங்கையின் மின் கட்டணத்தைக் கண்டு முதலீட்டாளர்கள் பதறி ஓடுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். திங்கட்கிழமை (9) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெ…

  19. பெருவணிகர்கள் அரிசி உற்பத்தியை வியாபாரமாக்குவதற்கு இடமளிக்காதீர்கள் - அரசாங்கத்திடம் மக்கள் போராட்ட முன்னணி வலியுறுத்தல் 10 Dec, 2024 | 02:14 AM (நா.தனுஜா) சிறார்கள் மத்தியில் மந்தபோசணை நிலை மிக உயர்வான மட்டத்தில் காணப்படும் இலங்கையில், பேரளவு அரிசி உற்பத்தியாளர்கள் அரிசி உற்பத்தியை வியாபாரமாக்குவதற்கு அரசாங்கம் இடமளிக்கக்கூடாது என மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் தரிந்து உடுவரகெதர வலியுறுத்தியுள்ளார். அரிசிக்கான தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் தொடர்பில் மக்கள் போராட்ட முன்னணியினால் திங்கட்கிழமை (9) கொழும்பு லயன்ஸ் கிளப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு க…

  20. உரிய முறைக்கு புறம்பாக எவருக்கும் மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கவில்லை - ரணில் 10 Dec, 2024 | 02:33 AM மதுபான அனுமதிப்பத்திரங்கள் உரிய முறைக்கு புறம்பாக எவருக்கும் வழங்கவில்லை எனவும், குறித்த அனுமதிப்பத்திரத்தால் அரசாங்கம் 3 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க மதுபான அனுமதிப்பத்திரங்களை அரசியல் இலஞ்சமாக பெற்றுக் கொடுத்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட முறைக்கு புறம்பா…

  21. விஷமிகளால் கொத்தி எரிக்கப்பட்ட ஆலயக் கதவு ஆலடி பளை ஏ9 வீதியில் அமைந்துள்ள ஶ்ரீ ஆத்திக்கண்டு வைரவர் திருக்கோயில் கதவு விஷமிகளால் கொத்தி எரிக்கப்பட்டுள்ளது. கடந்த 7ஆம் திகதி விஷமிகள் மடப்பள்ளி கூரை வழியாக ஆலயத்தினுள்ளே இறங்கி ஆலயக் கதவினை கொத்தி தீ வைத்து எரித்துள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர். ஒழுங்கீனமாக செயற்படும் விஷமிகளுக்கு எதிராக பளை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, பொலிஸார் ஆலயத்துக்கு சென்று பார்வையிட்டதோடு மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆலயத்தின் கதவினை எரித்த விஷமிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆலய பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். …

  22. கனடாவிற்கு அனுப்புவதாக கூறி 1.1 மில்லியன் ரூபாயை மோசடி செய்தவர் கைது! பணத்தை 16 பேரிடம் பெற்று மோசடி செய்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வடக்கு மாகாணத்தின் வவுனியா, மன்னார், மாங்குளம், கிளிநொச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் வசித்து வந்தவர்களிடம் நபர் ஒருவர் கனடாவில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்கு வேலைக்கு அனுப்புவதாகவும், முதல் கட்டமாக ஒரு தொகைப் பணத்தை தருமாறும், மிகுதிப் பணத்தை கனடா சென்று வேலை செய்து கொடுக்கலாம் எனவும் கூறி பணம் பெற்றுள்ளார். அந்த வகையில் 16 பேரிடமும் 5 இலட்சம் தொடக்கம் 10 இலட்சம் ரூபாய் வரை பணத்தை பெற்று 1 கோடி 10 இலட்சம் ரூபாய் மோசடி செ…

  23. சர்ச்சைக்குரிய குருந்தூர்மலைக்கு விஜயம் செய்த எம்.பி ரவிகரன்! December 9, 2024 07:01 pm முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழர்களின் பூர்வீக கிராமங்களான தண்ணிமுறிப்பு மற்றும், ஆண்டான்குளம் கிராமங்கள் மீள்குடியேற்றப்படவேண்டுமெனவும், அதற்க்காக உரியதரப்பினருக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுமெனவும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்று (08) வழிபாடுகளில் ஈடுபட்டார். இதன்போது தண்ணிமுறிப்பு கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மக்கள் சிலருடன் கலந்துரையாடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். …

  24. அரச கட்டமைப்பை மறுசீரமைக்க வேண்டும் - ஜனாதிபதி December 9, 2024 08:15 pm எத்தனை சட்டங்கள் இயற்றினாலும், எத்தனை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டாலும், அவற்றை வழிநடத்துபவர்கள் சரியாகச் செயற்படாவிட்டால், குடிமக்களுக்கு நீதி நிலைநாட்டப்படாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். மக்களால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு நீதி வழங்கப்படாவிட்டால், அந்த அதிகாரம் பயனற்றதாகிவிடும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (09) நடைபெற்ற "2024 சர்வதேச ஊழல் எதிர்ப்பு தின தேசிய நிகழ்வில்" ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார். இந்த ஆண்டுக்கான சர்வதேச ஊழல் எதிர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.