Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்காக விசேட பிரிவு இலங்கை அரசாங்கம் புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்காக விசேட பிரிவொன்றை ஏற்படுத்தவுள்ளது. மேலும் அரசாங்கம் பல்வேறு விதமான நடவடிக்கைகளை பயங்கரவாத பட்டியலிற்குள் சேர்ப்பதற்கும் திட்டமிட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி விட்டு புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இதனடிப்படையில் அரசாங்கம் பயங்கரவாதம் என்பதற்கான பல புதிய வரைவிலக்கணங்களை அறிமுகப்படுத்த எண்ணியுள்ளது. அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உத்தேச சட்டத்தின் நகல்வடிவில் இதனை காணமுடிகின்றது. இலங்கை…

  2. இலங்கை கடற்படையின் அவசர உதவியைப் பெற்ற அமெரிக்க ஏவுகணை நாசகாரி அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் ஹொப்பர் என்ற ஏவுகணை நாசகாரி கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழை ந்து, இலங்கை கடற்படையின் அவசர உதவியைப் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க கடற்படையின் முன்னோடித் தளபதிகளில் ஒருவரான, அட்மிரல் கிரேஸ் ஹொப்பர் நினைவாக, யுஎஸ்எஸ் ஹொப்பர் என்று பெயரிடப்பட்ட, வழிகாட்டல் ஏவுகணை நாசகாரியே இலங்கை கடல் எல்லைக்குள் கடந்த மாதம் 30ஆம் திகதி நுழைவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ரொமஹோக், ஹார்பூன் ரக ஏவுகணைகளை ஏவக்கூடிய, நீருக்கடியில் செலுத்தப்படும் டோபிடோஸ் எனப்படும் ஏவுகணைகளை செலுத்தக் கூடிய வசதிகளைக் கொண்டது இந்…

  3. மீண்டும் வாள்வெட்டு கலாசாரம் : இரவுவேளையில் பதற்றத்தில் மக்கள் யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட வாள்வெட்டு கலாச்சாரமானது ஒரளவு குறைந்திருந்த நிலையில் தற்போது அண்மைக்காலமாக மீளவும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இவ்வாறான நிலையில் நேற்றுமுன்தினம் இரவு யாழ்.குடாநாட்டி நகரப்பகுதிகளில் மூகமுடி அணித்த கும்பலொன்று வாள்வெட்டுத்தாக்குதலில் ஈடுபட்டிருந்ததையடுத்து யாழ்.நகரில் பதற்றமான சுழல் ஏற்பட்டது. இந்நிலையில் இவ் வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்றுமுன்தினம் இரவு சுமார் 8.30 மணியளவில் யாழ்.நகரப் பகுதியான நாவலர் கலாச்சார மண்டபப்பகுதி இராசாவின் தோட்டச் சந்தி ஆகிய பகுதிகளில் கூரிய ஆயுதங்களுடன் கும்பலொன்ற…

  4. முக்கியஸ்தர்களை கைது செய்ய முன் ஆராய்வதற்காக உப குழு? (எம்.எப்.எம்.பஸீர்) அரசியல்வாதிகள்,முப்படை அதிகாரிகள் முன்னாள் உயர் அதிகாரிகள் மற்றும் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பிரபுக்களை கைது செய்ய முன்னர் அது குறிந்து ஆராய பாராளுமன்ற உப குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளது. இதற்கான ஆலோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளதாகவும் எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து முன்மொழிவு அல்லது பத்திரம் ஒன்றினை முன்வைக்கவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அரசாங்கத்தின் உயர் மட்ட தகவல்கள் தெரிவித்தன. http://www.virakesari.lk/article/12422

  5. இலங்கையர்கள் 800 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்க நடவடிக்கை இலங்கையர்கள் 800 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்குவதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இவர்களுக்கான இரட்டைபிரஜாவுரிமைக்கான சான்றிதழ் நாளை (17) வழங்கப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரஜைகள் பிரிவின் பிரதி கட்டளையாளர் ஷாமிக கமகே தெரிவித்துள்ளார். பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்க இராஜ்ஜியம், சுவி்ட்ஸர்லாந்து, கனடா, பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்கே இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். இதுவரை ஆயிரக்கனக்கான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும், கட்டம் கட்டமாக அவர்களுக்கான இரட்டை பிரஜாவுரிம…

  6. கள்வர்களை பாதுகாப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறவில்லை என தொழில் பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கேகாலையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், மெய்யான படைவீரர்களை பாதுகாக்க வேண்டும் என்றே ஜனாதிபதி கூறியிருந்தார். கள்வர்களை பாதுகாக்க வேண்டும் என்று அவர் கூறவில்லை. நாட்டின் அபிவிருத்திக்கு அரசியல் ஸ்திரதன்மை மிகவும் அவசியமாகின்றது. அரசியல் ஸ்திரத்தன்மையின் அடிப்படையிலேயே பொருளாதார சமூக ஸ்திரத்தன்மை கட்டியெழுப்பப்படும். போரின் பின்னர் எமது படையினர் சர்வதேச விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவதற்கு ஜனாதிபதி இடமளிக்கவில்லை. நாட்டுக்…

  7. யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில், இலங்கையின் இராணுவத்தினர், ஐக்கிய நாடுகளின் சிறுபான்மையினர் தொடர்பான அறிக்கையாளரிடம் விளக்கமளித்துள்ளனர். இலங்கைக்கு வந்து ஐக்கிய நாடுகளின் அறிக்கையாளர், ரீட்டா இசாக் டையே இன்று யாழ்ப்பாணத்தில், யாழ்ப்பாண கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்கவைசந்தித்தார் இந்த சந்திப்பு பலாலி படைத்தளத்தில் நடைபெற்றது. இதன்போது பாதுகாப்பு விடயங்கள், கடத்தல்கள் மற்றும் மனிதக்கடத்தல்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து மஹேஸ் சேனாநாயக்க விளக்கமளித்தார். இதேவேளை நல்லிணக்க அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் படையினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும் அவர் சுட்டிக்காட்டினார். http://www.tamilwin.…

  8. வடமாகாணசபை தொடர்பில் மக்கள் மத்தியில் விமர்சனங்கள்-அமைச்சர் ஐங்கரநேசன் தெரிவிப்பு வடமாகாணசபை தொடர்பில் பொதுமக்கள் மத்தியில், பல்வேறு விமர்சனங்கள் எழுவதாகவும் எனினும் தமக்கு வாக்களித்த மக்க ளுக்கு சேவை செய்ய முடியாதுள்ளதாகவும் வட மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன்தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட கூட்டுறவு சபையினால் 94 ஆவது ஆண்டு சர்வதேச கூட்டுறவு தின விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்வு கள் இடம்பெற்றன. இந்த நிகழ்வில் வட மாகாண கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வட மாகாணசபை உறுப்பினர்களான க.சிவநேசன், து.ரவி கரன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலர் கலந்துக…

  9. சிறுபான்மையினரான தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களை பிரிப்பதற்கான சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். களுவாஞ்சிக்குடி சந்தைக் கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நடும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார் பிரித்தாளும் தந்திரத்தைக் கொண்டு முஸ்லிங்கள் மற்றும் தமிழர்களுக்கிடையில் மோதல்களையும் முரண்பாடுகளையும் ஏற்படுத்துவதற்கான சதி நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும்இது குறிதது சிறுபான்மை சமூகத்தினர் விழிப்பாக இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அது மாத்திரமன்றி சிறுபான்மையினருக்கான அரசியல் தீர்வு எவ்வித இழுத்தடிப்புக்களுமின்றி விரைவில் வழங்கப்பட வேண்டும் எனவும்; வேண்டுகோள் வ…

    • 2 replies
    • 329 views
  10. பஸ்ஸிற்குள் அத்துமீறி நுழைந்த 10 பேரினால் பரபரப்பு (ரி.விரூஷன்) யாழ்ப்பாணம் கச்சேரி ஏ9 பிரதான வீதியில் கச்சேரி மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸிற்குள் அத்துமீறி நுழைந்த 10 பேர் பஸ்ஸினை சேதப்படுத்தியதோடு பஸ் நடத்துனரிடமிருந்த பஸ் டிக்கெட் புத்தகத்தையும் பணத்தையும் பறித்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்திற்கு சொந்தமான பஸ்ஸினை கச்சேரி மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில் வைத்து சிறிய லொறி ஒன்றில் வந்த 10 பேர் வழிமறித்துள்ளனர். …

  11. சர்வ வல்லமை பொருந்தியவர்கள் இன்று சர்வநாசமடைந்து வீதியில் நிற்கின்றார்கள். நாமும் அந்த நிலைமைக்கு செல்லக் கூடாது எனத் தெரிவித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் சி.துரைராஜா நாம் சண்டையிட்டு தென்னவர்களுக்கு வழிவகுக்காது எமக்குள் பிரச்சினைகளை தீர்த்து எமக்கே வழிவகுப்போம் எனவும் கேட்டுக் கொண்டார். அகில இலங்கை இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் மேன்முறையீட்டு நீதியரசராக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி சி.துரைராஜாவுக்கு கௌரவிப்பும் பாராட்டு விழாவும் நேற்று வெள்ளிக்கிழமை சரஸ்வதி மண்டபத்தில் நடை பெற்றிருந்தது. அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்மன்றத்தின் நம்பிக்கைப் பொறுப்பாளர் சபைத்தலைவர் வி.கயிலாசபிள்ளை,…

  12. பதவியை துறக்கத் தயார் என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக உயர்த்துவதற்கு தமது பதவி ஓர் தடையாக இருந்தால் அதனை துறக்கவும் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஹட்டன் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் தொழிற்சங்கத் தலைவர்கள், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்பட உள்ளதாக அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/archives/3212

  13. பௌத்த சிங்களவர்களை நெளிய வைக்கிறதா, சிவா சேனா ஆதரவு. வவுனியாவில் மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்களால், (இலங்கை) சிவ சேனை என்னும் அமைப்பு ஆரம்பிக்கப் பட்டு இருந்தது. இது தொடர்பாக அறவிப்பு வந்தபோது இலங்கையில் யாரும் அலட்டிக் கொள்ளவில்லை. ஆயினும் மும்பாயினை தலைமையிடமாக கொண்ட மத்திய அரசின் பிஜேபி கட்சியின் சக்தி மிக்க, இந்திய சிவ் சேனா அதற்கு ஆதரவு தெரிவித்தவுடன், சிறிது அதிர்வு அலைகள் உண்டாகி உள்ளது போல தெரிகிறது. இலங்கை சிவா சேனை, தீவின் முதன்மை மதமான பௌத்த மதத்தின் ஆக்கிரமிப்பில் இருந்து, இந்து மதத்தினை காக்க போராடக் போவதாக அறிவித்து உள்ளதால், 'உலகெங்கும் உள்ள இந்துக்களின் நலனை பாதுகாக்க நாம் முனைப்புடன் உள்ளதால், சிவ சேனைக்கு, எமது ஆதரவு இருக்கும் என்று சிவ…

    • 25 replies
    • 1.9k views
  14. முழங்காவில், பல்லவராயன் கட்டு சோலை பகுதியில் உள்ள வீட்டுக்குள் ஞாயிற்றுக்கிழமை (16) அதிகாலை பன்னிரண்டு முப்பது மணியளவில் நுழைந்த திருடர்கள், கொள்ளையிட்டுச் தப்பிச் சென்றுள்ளனர். வீட்டிலிருந்த கணவன், மனைவி ஆகியோரை மிரட்டி உட்கார வைத்து, வீட்டிலிருந்த பணம் மற்றும் நகை என்பவற்றை திருடர்கள் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். நான்கு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் பணம் மற்றும் முப்பத்தாறு பவுண் தங்க நகை என்பன இவ்வாறு கொள்ளைடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முகத்தை துணியால் மறைத்துக் கட்டியபடி உள்நுழைந்த திருடர்கள் தொலைபேசியை அடித்து நொருக்கியுள்ளனர். பின்னர், வீட்டிலிருந்த வயோதிப கணவன்,மனைவியை கொட்டன்களால் அடித்து மிரட்டி உட்கார வைத்து, கொள்ளையடித்து…

  15. நம்பிக்கையை தகர்த்தெறியும் ஜனாதிபதியின் கூற்று? ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, கடந்த புதன்கிழமை பாது­காப்பு தரப்­பி­ன­ருக்கு காணி மற்றும் வீட்டு உரி­மை­களைக் கைய­ளிக்கும் நிகழ்வு கொழும்பில் நடை­பெற்றபோது ஆற்­றிய உரை பெரும் சர்ச்­சையை உரு­வாக்­கி­யுள்­ளது. அவர் தனது உரையில், குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவு, இலஞ்ச ஊழல் விசா­ரணை ஆணைக்­குழு போன்­றவை அர­சியல் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்­ப­டு­வ­தா­கவும், அவ்­வாறு அவை செயற்­ப­டு­மாயின் அவற்­றுக்கு எதி­ராகக் கடு­மை­யானத் தீர்­மா­னங்­களை எடுக்க வேண்டி நேரிடும் என்றும் தெரி­வித்­தி­ருந்தார். அத்­துடன் கடற்­ப­டைத்­த­ள­ப­திகள் மூவர் விசா­ர­ணைக்­காக இலஞ்ச ஊழல் ஆணைக்­கு­ழு­வுக்கு அழைக்­கப்­பட்­ட­மையும…

  16. நாட்டின் அமைதியை எழுக தமிழ் பேரணியே குழப்பியது-கிழக்கின் விவசாய அமைச்சர் குற்றச்சாட்டு நாட்டின் அமைதியைக் குழப்புவதற்கு எழுக தமிழ் பேரணியே வித்திட்டுள்ளதாக கிழக்கு மாகாண விவசாய, கால்நடை அமைச்சர் கி. துரைராஜசிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார். வடக்கில் எழுக தமிழ் பேரணியைப் போன்று, தென்னிலங்கையில் எழுக சிங்களம் என்ற பேரணி நடத்தப்பட வேண்டும் என்று பெங்கமுவே நாலக்க தேரர் போன்ற சிங்கள மதத் தலைவர்கள் வலியுறுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கமத்தொழில் வாரத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் மட்டக்களப்பு மண்டூர் கமநல சேவைகள் நிலையத்தில் மண்டூர் கமநல சேவைகள் உத்தியோகஸ்தர் கோ. ஜெயகாந்தன் தலைமையில் நேற்று இடம்பெ…

    • 3 replies
    • 384 views
  17. தற்கொலை செய்த இராணுவ அதிகாரியின் கைபேசி பதிவுகள் அழிப்பு சண்டேலீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை தாமே படு கொலை செய்ததாக உரிமை கோரி, கடிதமொன்றை எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்த தாக கூறப்படும் முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரியின் கையடக்க தொலைபேசியின் பதிவுகள் மர்மமான முறையில் அழிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்து ள்ளன. இதனால் அவரது மரணம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதால் இரகசிய பொலிசார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு இராணுவத்தில் இருந்து ஒய்வுபெற்ற 52 வயதான இளந்தாரிகே ஜயமான்ன என்ற குறித்த அதிகாரி நேற்றுமுன்தினம் அவர…

    • 2 replies
    • 600 views
  18. மைத்திரியை வரவேற்று தமிழில் ட்விட் செய்த மோடி கோவா பிரிக்ஸ் மாநாட்டுக்கு வந்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வரவேற்று தமிழில் டிவீட் வெளியிட்டுள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. கோவாவில் நடைபெறும் பிரிக்ஸ் அமைப்பின் மாநாட்டுக்கு இலங்கை, நேபாளம், பூட்டான் ஆகியவற்றுக்கும் இந்தியா அழைப்பு விடுத்திருந்தது. அதை ஏற்று அதன் தலைவர்கள் வந்துள்ளனர். இதன்படி இலங்கை ஜனாதிபதியும் அங்கு சென்றார். அவரை வரவேற்று தமிழ் மற்றும் சிங்கள மொழியில் டிவீட் போட்டுள்ளார் மோடி. இதுகுறித்து அவர் போட்டுள்ள டிவீட்டில், ஒரு நண்பரின் வருகை... பிரிக்ஸ்-பிம்ஸ்டெக் மாநாட்டிற்காக இலங்கையின் ஜனாதிபதி @MaithripalaS இந்தியாவிற்கு வருகை புரிவதில் மிகுந்த மகிழ்ச்சி என்று …

  19. யா்ழ். கந்தர்மடத்தில் வெள்ளப்பெருக்கு இந்த வெள்ளத்தை பார்த்ததும் எவரும் யாழ்ப்பாணத்தில் மழை பெய்து விட்டது இதனால் வற ட்சி நீங்கி விட்டதென நினைத்தால் ஏமாந்துதான் போவீர்கள்.இது யாழ்ப்பாணம் கந்தர்ம டம் பகுதியில் செல்லும் நீர்க்குழாயில் ஏற்பட்ட வெடிப்பினால் ஏற்பட்ட வெள்ளம். இன்று மதியத்திலிருந்து இந்த நீர்க்குழாய் வெடித்து நீர் ஓடியபோதிலும் யாழ்.மாநகரசபை அதனை கவனமெடுக்கவில்லையென அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்தனர்.விளைவு வீதி அருகே இருந்த கடைகளுக்குள் எல்லாம் வெள்ளம் ஓடியதுதான். http://onlineuthayan.com/news/18943

  20. புதிய அரசியலமைப்பு அதிகரிக்கும் சந்தேகங்கள் புதிய அர­சி­ய­ல­மைப்பு இலங்­கையின் தேசியப் பிரச்­சி­னைகள் அனைத்­துக்கும் தீர்வு காண்­ப­தாக அமையும் என்ற நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்தும் செயற்­பா­டுகள் தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்ற ஒரு சூழலில், புதிய அர­சி­ய­ல­மைப்பு சர்ச்­சைக்­கு­ரிய விட­யங்­களை எவ்­வாறு அணுகப் போகி­றது என்ற கேள்­வி­களும் எழுந்­தி­ருக்­கின்­றன. புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான மக்­களின் கருத்­த­றியும் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்ட அதே­வேளை, பாரா­ளு­மன்ற வழி­ந­டத்தல் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்டு ஆரா­யப்­பட்டு வரு­கி­றது. இது­வ­ரையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு எவ்­வா­றா­ன­தாக இருக்க வேண்டும் என்­பது பற்­றிய…

  21. கோத்தாவுக்கு பின்னால் சீனா? அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் கோத்­தா­பய ராஜபக் ஷவை கூட்டு எதி­ர­ணியின் வேட்­பா­ள­ராக கள­மி­றக்கும் முனைப்­புகள், காணப்­ப­டு­கின்ற சூழலில், அவர் சீனா­வுக்­கான சர்ச்­சைக்­கு­ரிய பய­ணத்தை ஆரம்­பித்­தி­ருக்­கிறார். ஏழா­வது ஷியாங்சான் பாது­காப்புக் கருத்­த­ரங்கில் பங்­கேற்­ப­தற்கே முன்னாள் பாது­காப்புச் செயலர் கோத்­தா­பய ராஜபக் ஷ சீனா­வுக்­கான பய­ணத்தை மேற்­கொண்­டி­ருந்தார். இந்த மாநாடு பீஜிங்கில் உள்ள ஷியாங்சான் விடு­தியில் கடந்த 10ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரை இடம்­பெற்­றி­ருந்­தது. இரா­ணுவ விஞ்­ஞா­னத்­துக்­கான சீன சங்கம் மற்றும் சர்­வ­தேச மூலோ­பாய கற்­கை­க­ளுக்­கான சீன நிறு­வகம் ஆகி­யன இணைந்…

  22. யாழில்அறிவுத் திருக்கோயில் திறப்பு யாழ் பிறவுண் வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ் மனவளக்கலை மன்ற அறக்கட்டளையினரின் அறிவுத்திருக்கோயில் நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டது. அருட்தந்தை வேதாந்திரி மகரிஷி அவர்கள் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆராய்ச்சி செய்து காயகல்பம், உடற்பயிற்சி, தியானம், அகத்தாய்வு பயிற்சிகள் ஊடாக மனிதன் உடல்நலம், உளநலம், உயிர்வளம் பெற்று உயர்வாழ்வு வாழ ' மனவளக்கலை யோகா' என்னும் அருங்கலையை அளித்துள்ளார்கள். அவற்றை ஒவ்வொரு மனிதனது வாழ்விலும் பயிற்சி, தவம், யோகா மூலம் தனது மேன்மையை தானே அனுபவிக்க உதவும் ஞானக்கல்விக் கூடமே அறிவுத் திருக்கோயில். இவ் அறிவுத் திருக்கோயில்…

  23. தமிழ் மக்கள் நம்பி வாக்களித்து பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைக்க அவர்களோ கர்வம் தலைக் கேறிவிட இனப்பிரச்சினை தொடர்பில் தாமும் அரசும் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் பற்றி எதுவும் தமிழ் மக்களுக்குத் தெரியப்படுத்தாத ஒரு நிலைமையே தற்போது காணப்படுகின்றது. விடுதலைப் புலிகளின் ஏற்பாட்டில் நான்கு அரசியல் கட்சிகளைக் கொண்ட அரசியல் அமைப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் இந்தக் கூட்டு என்பது வெறும் பெயரளவிலேயே உள்ளதைக் காண முடியும். விடுதலைப் புலிகளின் தோல்விக்குப் பின்னர் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் ஓரங்கட்டப்பட்டு தனித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருக்கக்கூடிய ஒரு சில தலைவர்கள் மட்டுமே அதிகாரம் செலுத்துவ தென்ற அளவில் சர்வாதிகாரப் போக்கு கூட்டம…

  24. ஜனாதிபதியின் திடீர் மாற்றத்திற்கு இதுவா காரணம்? ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு ஊகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன படைவீரர் நிகழ்வு ஒன்றில், நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு, குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு தொடர்பில் கடுமையான விமர்சனத்தை வெளியிட்டிருந்தார். குறிப்பாக முன்னாள் கடற்படைத்தளபதிகள் மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் நீதிமன்றிற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதற்கு அதிருப்தி வெளியிட்டிருந்தார். அண்மைய மாதங்களில் ஜனாதிபதிக்கு கிடைக்கப் பெற்ற புலனாய்வு…

  25. பெருந்தொகை தடை செய்யப்பட்ட 5 வகையான பாலியல் மாத்திரைகள் மற்றும் 35 கிலோகிராம் கஞ்சாவுடன் மூவர் கைது யாழ்ப்பாணம் ஊர்காவற்துரை கடற்பரப்பில் வைத்து 35 கிலோகிராம் நிறையுடைய கஞ்சாவும் பெருந்தொகை தடை செய்யப்பட்ட 5 வகையான பாலியல் மாத்திரையும் மற்றும் போலி நாணயத்தாள் அச்சிட பயன்படுத்தும் தாள்களும் இலங்கைக்கு சட்டவீரோதமாக கொண்டு வந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மூவரும் இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா,பாலியல் மாத்திரைகள் மற்றும் போலி நாணயத்தாள் அச்சிடும் தாளை கடத்தி வந்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இருவர் யாழ்ப்பாணம் பேசாலையும் மற்றைய நபர் இந்தியாவில் தமிழகத்தில் தங்கச்சிமடத்தினை சேர்ந்தவர் என கண்டறியப்பட்டுள்ளது.இவர்கள் பயணித்த ப…

    • 4 replies
    • 532 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.