ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143417 topics in this forum
-
தமிழ் கட்சிகளின் தலைமைகள் ஒரே மேடையில். யாழில்.மூத்த அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசுவின் இலங்கை அரசியல் யாப்பு நூல் வெளியீடு இன்று சனிக்கிழமை யாழ்.சரஸ்வதி மண்டபத்தில் , நடைபெற்றது. அந்நிகழ்வில் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி , தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் . ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் , தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , புளெட் அமைப்பி…
-
- 8 replies
- 1.1k views
- 1 follower
-
-
ஒற்றையாட்சி முறைமையைத் தொடருமாறும் பௌத்தத்தின் முதன்மைத்தன்மையை பேணுமாறும் கோரியுள்ள மல்வத்தை பீட மகாநாயக்க தேரர் திப்பொட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் இதேவேளை, ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரகசியக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசமைப்பு சீர்திருத்த குழுவின் தலைவர் லால் விஜயநாயக்க ஊடாகவே இந்தக் கடிதத்தை அவர் அனுப்பி வைத்துள்ளார். குறிப்பிட்ட இரகசியக் கடிதத்தை வழங்கிய வேளை தற்போதைய அரசியலமைப்பில் காணப்படும் சிறந்த அம்சங்களைத் தொடர்ந்து பேணுவது அவசியம் என தேரர் தெரிவித்துள்ளார். மக்களால் பெரிதும் ஏற்கப்பட்ட ஒற்றையாட்சி முறைமை மற்றும் பௌத்தத்துக்கு முதன்மை அளிப்பதற்கான ஏற்பாடுகள் போன்றவற்றை தொடர்…
-
- 0 replies
- 287 views
-
-
மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்ஸவினால் மேற்கொள்ளப்பட்ட மோசடி தொடர்பில் நிதி மோசடி விசாரணை பிரிவினர் பல கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணைகளின் அடுத்த கட்டமாக முன்னாள் கணக்காய்வாளர் ஒருவரை நிதி மோசடி விசாரணை பிரிவினர் அழைத்திருந்தனர். முன்னாள் அமைச்சர் பசிலின் அறிவுறுத்தலுக்கு இணங்க மேற்கொள்ளப்பட்ட கொடுப்பனவு சீட்டு குறித்து விசாரணைகளை மேற்கொண்ட போது குறித்த கணக்காய்வாளர் அமைதியாக இருந்த நிலையில் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். பின்னர் குணமடையும் வரை அவரின் விசாரணைகளை ஒத்திவைத்த நிதி மோசடி விசாரணை பிரிவினர், மக நெகும திட்டத்தின் தற்போதைய கணக்காய்வா…
-
- 0 replies
- 284 views
-
-
பலவந்தமான முறையில் பௌத்த சிலைகள் அமைக்கப்படுவதனை புத்தரும் விரும்பவில்லை என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகங்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்… பௌத்த மதம் பின்பற்றாத பெரும்பான்மை மக்கள் வாழும் வடக்கில் பௌத்த விஹாரைகள் அமைப்பது பௌத்த மதத்தையும் இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. இராணுவ மயமாக்கல், சிங்களமயமாக்கல் மற்றும் பௌத்தமயமாக்கலுக்கு எதிராக வட மாகாண முதலமச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வரும் எழுக தமிழ் போராட்டம் வரவேற்கப்பட வேண்டியதாகும். தமிழ் மக்கள் தங்களது உரிமைகளுக்காக ஜனநாயக ரீதியில் குரல் கொடுக்க தற்போத…
-
- 0 replies
- 194 views
-
-
விக்கியின் கருத்து ஒட்டுமொத்த தமிழர்களின் கருத்தே- சிறீதரன்(காணொளி) எழுக தமிழ் எல்லோரையும் எழுப்பி விட்டது.
-
- 4 replies
- 688 views
- 2 followers
-
-
42ஆவது தேசியவிழா இறுதிநாள் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு 42 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வுகளில் ஜனாதிபதி மைத்தி ரிபால சிறிசேனவுடன் – வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனும் கலந்து கொண்டார் ஆரம்ப விழாவை வட மாகாண முதலமைச்சர் பகிஸ்கரித்திருந்த நிலையிலேயே இன்று தேசிய விளையாட்டுப் போட்டியின் நிறைவு கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார். யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் கடந்த 29 ஆம் திகதி முதல் 42 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் பல்வேறு தடகளப் போட்டிகள் இடம்பெற்றன. தேசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் முதன்முறையாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஆரம்ப விழாவை பகிஸ்கரித்திர…
-
- 5 replies
- 910 views
-
-
நீர்வேலி வங்கிக் கொள்ளை போன்று இடம்பெறாமலிருக்க அரசியல் தீர்வை முன்வையுங்கள்- அரசிடம் வடக்கு அமைச்சர் கோரிக்கை நீர்வேலி வங்கிக் கொள்ளை போன்ற சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறாதிருக்க வேண்டுமானால் எமக்கான சரியான அரசியல் தீர்வை முன்வையுங்கள் என்று வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கோரிக்கை விடுத்துள்ளார். விவசாயிகளுக்கான சலுகை மின்கட்டண தேசிய அங்குரார்ப்பண விழா நீர்வேலியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. மத்திய மின்சக்தி மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். …
-
- 3 replies
- 406 views
-
-
நல்லாட்சி அரசாங்கம் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு பாலூட்டுகின்றது. பிரிவினைவாதிகளுக்கும் புலம்பெயர் புலிகளுக்கும் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றும் அரசாங்கம், நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் சுயாதீன தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியுள்ளதாக கூட்டு எதிர்க் கட்சியின் செயற்பாட்டாளர் பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவத்தார். மாற்றத்ததை ஏற்படுத்துவதற்கான மக்கள் அலை நாட்டில் மேலெழுந்துள்ளது. மஹிந்த ராஜபக்~ தலைமையில் மக்கள் சக்தி விரைவில் உருவெடுக்கும். இரத்தினப்புரியில் 8 ஆம் திகதி நடைப்பெறவுள்ள மக்கள் பேரணி ஆட்சி கவிழ்ப்பின் முதற்படி எனவும் கூட்டு எதிர் கட்சி குறிப்பிட்டுள்ளது. http://www.virakesari.lk/article/11954
-
- 2 replies
- 422 views
-
-
முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் வவுனியாவில் வைத்து கைது முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் வவுனியாவில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். படைவீரர்களது வீட்டுக் குடியிருப்புக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வவுனியா கோகிலாய் பிரதேசத்தில் சின்னவன் என்றழைக்கப்படும் முன்னாள் போராளியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் வவுனியா காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136558/language/ta-IN/article.aspx சிங்கள மக்களை மிரட்டினார்களாம் முன்னாள் போராளி உட்பட இருவர் கைது …
-
- 1 reply
- 413 views
-
-
தேசிய விளையாட்டு விழா இறுதி நிகழ்வில் பங்கேற்கப் போவதாக விக்னேஸ்வரன் அறிவிப்பு தேசிய விளையாட்டு விழா இறுதி நிகழ்வுகளில் தாம் பங்கேற்கப் போவதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார். யாழ்ப்பாண துரையப்பா விளையாட்டரங்களில் நடைபெற்று வருகின்ற 42ம் தேசிய விளையாட்டு விழாவின் ஆரம்ப நிகழ்வுகளை விக்னேஸ்வரன் புறக்கணித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய விளையாட்டு விழா இறுதி நிகழ்வுகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் நிறைவு நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளதாக விக்னேஸ்வரன், அதிகாரிகளிடம் அறிவித்துள்ளார். …
-
- 0 replies
- 238 views
-
-
முதல்வரின் கூற்று சிங்கள மக்களுக்கு எதிரானதல்ல வடக்கில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற “எழுக தமிழ்” நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆற்றிய உரையைத் தவ றாக எடுத்துக்காட் டித் தெற்கிலுள்ள சில அரசியல்வாதிக ளும் மதத்தலைவர்களும் இனத்துவேஷ அடிப்படையில் ஊடகங்கள் வாயிலாக அறிக்கை விடுவதையிட்டு நாம் எமது வன்மையான கண்டனத்தையும், கவலையையும் வெளிப்படுத்துகின்றோம் என அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவர் கந்தையா நீலகண்டன் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்நாட்டில் 2015- ஜனவரி 08ஆம் திகதி நல்லாட்சி ஏற்படுத்துவதற்கு தமி…
-
- 0 replies
- 489 views
-
-
'அஞ்சலி'யை தேடிச் சென்றார் பிரதமர் நியூசிலாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஒக்லன்டிலுள்ள அஞ்சலி என்ற யானைக் குட்டியை தேடிச் சென்று பார்வையிட்டுள்ளார். கடந்த பெப்ரவரி மாதம், நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ, இலங்கைக்கு வந்திருந்தபோது, அஞ்சலி என்ற யானைக் குட்டியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அன்பளிப்பாக வழங்கினார். குறித்த யானைக் குட்டி, ஒக்லன்ட் விலங்குகள் பூங்காவுக்கு கொண்டுச் செல்லப்பட்டது. பின்னவலயில் பிறந்த அஞ்சலிக்கு இப்போது 9 வயதாகின்றது. இப்போது அது பூரண நலத்துடன் மகிழ்ச்சியாக உள்ள…
-
- 0 replies
- 343 views
-
-
நியூசிலாந்திடம் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் அதிகமுள்ளன : பிரதமர் நியூசிலாந்தின் அரசியல் முறைமையில் இலங்கை கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் அதிகம் காணப்படுகின்றதென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று வெள்ளிக்கிழமை நியூஸிலாந்தை சென்றடைந்தார். அந்நாட்டு பிரதமர் உள்ளிட்ட அரசதலைவர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரசியலமைப்பு திருத்தம் மற்றும் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் கலந்துரையாடலில் ஈடுபட்டார். அந்நாட்டு பிரதமர் ஜோன் கீ உடனான இருதரப்பு பேச்சுவார்த்தையையடுத்து இரு நாட்டு தலைவர்களும் இண…
-
- 5 replies
- 760 views
- 1 follower
-
-
இலங்கையில் தமது நலன் சார்ந்தே வெயற்படுகிறது சர்வதேசம்-சுரேஸ் விசனம் புதிய அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டால் மீண்டும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஆட்சிக்கு வந்துவிடுவார் என்றும் அதனால் தமது நலன்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடும் என்றும் சர்வதேச சக்திகள் நினைக்கின்றனவே தவிர, தமிழர்களுடைய பிரச்சினைகளில் அவர்களுக்கு அக்கறையில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் விசனனம் வெளியிட்டுள்ளார். மு.திருநாவுக்கரசு எழுதிய இலங்கை அரசியல் யாப்பு எனும் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்- …
-
- 0 replies
- 202 views
-
-
விக்கிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் மதுபானம் தாராளம் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக வவுனியாவில் வெள்ளிக்கிழமை பொதுபலசேனாவின் ஆர்ப்பாட்டப் பேரணியின் போது இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. போராட்டத்தில் மஹிந்த ஆட்சிக் காலத்தில் குடியேற்றம் செய்யப்பட்ட கலாபோபஸ்வேவ பகுதியில் குடியிருக்கும் சிங்கள மக்களே கலந்து கொண்டுள்ளனர்.வவுனியாவின் ஏனைய பகுதிகளில் வசிக்கும் சிங்கள மக்கள் இதில் கலந்து கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு ஆர்ப்பாட்டம் முடிந்ததும் வீதியோரத்தில் முச்சக்கர வண்டி ஒன்றில் இருந்து மதுபான போத்தல்களும், பணமும் வழங்கப்பட்டதாகவும் தெ…
-
- 0 replies
- 402 views
-
-
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்படும்-பிரதமர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தற்போதைய பதவிக்காலத்துடன் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை, ஒழிக்க ப்படும் என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நியூசிலாந்து சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஓக்லாந்து நகர சபையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பிரதமர்,ரணில் “ நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு நாம் எதிர்பார்த்திருக்கிறோம்.எனினும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைக்குப் பதிலாக எத்தகைய ஆட்…
-
- 0 replies
- 184 views
-
-
தனது உயிருக்கும் உலை வைக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக செய்திகள் கிடைக்க பெற்று உள்ளதாகவும், அதனை செய்தவர்கள் விடுதலைப் புலிகளே என்று கதையைக் கட்டுவதற்கும் தெற்கில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்து உள்ளார். மூத்த அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசுவின் இலங்கை அரசியல் யாப்பு நூல் வெளியீடு இன்று சனிக்கிழமை யாழ்.சரஸ்வதி மண்டபத்தில் , நடைபெற்றது. அந்நிகழ்வில் முதலமைச்சரை பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தார். ஆனால் அந்நிகழ்வில் முதலமைச்சர் தவிர்க்க முடியாத நிலையில் கலந்து கொள்ள முடியவில்லை எனவும் , அவர் தனது உரையினை வாசிக்குமாறு எழுதி அனுப்பி இருந்தார் எனவும் தெரிவித்து அந்நிகழ்வுக்கு தலைமை தாங்…
-
- 0 replies
- 390 views
-
-
யாழில் நடத்தப்பட்ட ஊர்வலம் அரசியல் பதவி கதிரைகளுக்கானதே! நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவிப்பு அரசியல் பதவிக் கதிரைகளுக்காக மக்களை அணிதிரட்டும் ஊர்வலமே கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டது. சிவில் சமூகம்,மக்களின் பிரச்சினைகளை வெளிக் கொண்டுவரும் வகையில் ஊர்வலத்தை நடத்தியிருந்தால் நாங்கள் பேராதரவை வழங்கியிருப்போம். இவ்வாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டில் மக்களுக்கான உதவித் திட்டங்கள் வழங்கும் நிகழ்வு, பருத்தித்துறை மற்றும் கரவெட்டி பிரதேச செயலகங்களில் நேற்று முன்தினம் ( 28_09_2016) இடம்பெற்றன.…
-
- 7 replies
- 731 views
-
-
பிரதேச சபையின் தன்னிச்சையான செயற்பாட்டுக்கு எதிர்ப்பு -செல்வநாயகம் கபிலன் அண்மையில் விடுவிக்கப்பட்ட வலி. வடக்கின் பலாலி தெற்கு வயாவிளான் பகுதியில் உள்ள புனித இந்து மயானத்தினை இல்லாது செய்து, மலச்சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை அமைக்கும் நடவடிக்கைக்கு, அப் பகுதி மக்கள், இன்று சனிக்கிழமை (01) எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். நான்கு கிராமசேவையாளர் பிரிவுக்கு உரித்தான மேற்படி பூனையன் காடு இந்து மாயனத்தினை அழித்து வலி. வடக்கு பிரதேச சபை மலச்சுத்திகரிப்பு நிலையம் ஒன்றினை அமைத்து வருகின்றது. இதற்காக சடலங்கள் எரிக்கப்பட்ட இடத்தில் கல் அரிந்து அதன் புனிதத் தன்மையினை கெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக அம் மக்கள் தெரிவித்தனர…
-
- 0 replies
- 239 views
-
-
மக்கள் தமது கருத்தை வெளிப்படுத்துவது தெற்கில் இனவாதமாக சித்தரிக்கப்படுகிறது.முதல்வர் விக்கி மக்கள் தங்களுடைய அபிப்பிராயங்களை வெளிப்படுத்துவது இனவாதம் ஆகாது என வடக்கு மாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வ ரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் குறை நிவர்த்தி நடமாடும் சேவை இன்று காலை 9.00 மணிக்கு கிளிநொச்சி, மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம்அருமைநாயகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்புரையாற்றும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது நீண்டகாலமாகவே அதிகாரங்கள் மேலிருந்து கீழாகவே நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தன. மக்கள் தங்களு…
-
- 1 reply
- 382 views
-
-
மனித உரிமை செயற்பாட்டாளர் றுக்கி பெர்னாண்டோ கைது ! மனித உரிமைகள் தொடர்பாக நடக்க உள்ள மாநாடு ஒன்றுக்கு வெளிநாட்டுக்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற மனித உரிமை செயற்பாட்டாளர் றுக்கி பெர்னாண்டோ குற்ற புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். http://www.virakesari.lk/article/11952
-
- 0 replies
- 494 views
-
-
நியூசிலாந்து, இலங்கையில் உயர்ஸ்தானிகரகங்கள் நிறுவப்படும் ; ஜோன் கீ இரு நாடுகளுக்கிடையில் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் நியூசிலாந்திலும் இலங்கையிலும் உயர்ஸ்தானிகரகங்கள் நிறுவப்படுமென நியூசிலாந்தின் பிரதமர் ஜோன் கீ தெரிவித்துள்ளார். இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று வெள்ளிக்கிழமை நியூஸிலாந்து சென்றுள்ளார். இந்நிலையில் நியூஸிலாந்தின் ஆக்லாந்திலுள்ள அரச மாளிகையில் இன்று அவருக்கு உத்தியோகப்பூர்வ வரவேற்பு நிகழ்வு நடைபெற்றதுடன் அந்நாட்டு பிரதமர் ஜோன் கீ உடனான இருதரப்பு பேச்சுவார்த்தையும் இடம்பெற்றது. பேச்சுவார்த்தையையடுத்து இரு நாட்டு பிரதமர்களும் இணைந்…
-
- 0 replies
- 289 views
-
-
கிளிநொச்சியில் புகையிரதம் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் இன்று அதிகாலை (01-10-2016) புகையிரதத்துடன் மோதுண்டு ஆறு பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.அதிகாலை ஐந்து மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த புகையிரத்துடன் கிளிநொச்சி பாரதிபுரம் 155 ஆம் கட்டைப் பகுதியில் காளி கோவிலுக்கு அருகில் புகையிரத பாதையில் இச்சம்பவம் இடம்பெற்று ள்ளது. இதில் முதலாம் குறுக்குத் தெரு பாரதிபுரத்தைச்சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான சுப்பிரமணியம் மகேந்திரன் (வயது 54) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் இதற்கு முன்னரும் ஒரு தடவை விபத்து இட…
-
- 1 reply
- 250 views
-
-
திடீர் விபத்தால் நாமல் வைத்தியசாலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மூத்த மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.திடீரென ஏற்பட்ட விபத்து காரணமாக காயமடைந்த நாமல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ள்ளார். இன்றைய தினம் அவர் விளையாட்டில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் கீழே விழுந்து காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தலைப்பகுதியில் ஏற்பட்ட சிறு காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்க ளில் பரவி வருகின்றது. AddThis Sharing Buttons Share to FacebookShare to T…
-
- 0 replies
- 368 views
-
-
வடக்கை தமிழர்கள் உரிமை கொண்டாட அனுமதியோம்-ஞானசாரதேரர் வடக்கு எமக்கே உரியது இலங்கையில் 2500 வருட பழமையான இனம் சிங்கள இனமே அதனால் வடக்கை தமிழர்கள் உரிமை கொண்டாட முடியாது என பொதுபலசேனாவைச் சேர்ந்த கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். வவுனியா நகரில் நேற்று பொதுபல சேனா ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகெதண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், தமிழர்கள் இலங்கையை அல்லது வடக்கை சொந்தம் கொண்டாட முடியாது பெரும்பான்மை இனத்தனவரான சிங்களவர்களுக்கே வடக்கு சொந்தம். மேலும் வடக்கில் விகாரைகள் அகற்றப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றது அவை அனைத்தும் மு…
-
- 2 replies
- 329 views
-