ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
ஜனாதிபதியைச் சந்திக்க சாணக்கியனுக்கு சந்தர்ப்பம்! ஜே.வி.பியன் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா, மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்க போவதாகப் பத்திரிகைகளுக்குக் குறிப்பிட்டிருந்த விடயத்தை தாம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாகக் கருதுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார். அத்துடன் குறித்த விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? எனவும் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் இது குறித்து கருத்துத் தெரிவித்த சபை முதல்வர் பிமல் ரத்னநாயக்க ”இராசமாணிக்கம் சாணக்கியன் மீது மிகுந்த மரியாதை எனக்கு உள்ளது. ஏனையோர் சொல்வதைக் கேட்டு முறையற்ற சந்தேகங்களை சபையில் எழுப்ப வேண்டாம். இலங்கை தமிழரசு கட்சியின…
-
- 2 replies
- 302 views
-
-
அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான விவாதம் இன்று! நாட்டில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக ஏற்பட்டிருந்த வெள்ள மற்றும் அனர்த்த நிலைமைகள் தொடர்பான, சபை ஒத்திவைப்பு விவாதம், இன்று மாலை 05.30 மணி தொடக்கம் இரவு 09.30 மணிவரை நடைபெறவுள்ளது. சபாநாயகர் அசோக ரன்வல தலைமையில் நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான விவாதம் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதுடன் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து இது தொடர்பான வாக்கெடுப்பு மாலை 05 மணிக்கு இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/141094…
-
- 1 reply
- 523 views
- 1 follower
-
-
அனலை தீவு கடற்தொழிலாளர்களை நாட்டிற்கு அழைத்துவருமாறு கோரிக்கை! தமிழ்நாடு, திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனலைத்தீவு கடற்தொழிலாளர்களை இலங்கைக்கு அழைத்துவருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் 10ஆம் திகதி அனலைதீவு பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு படகொன்றில் சென்ற இரண்டு கடற்தொழிலாளர்களும், கடற்சீற்றம் காரணமாக தமிழக கடற்பரப்பினுள் தத்தளித்த நிலையில் , தமிழக கடற்தொழிலாளர்களால் மீட்கப்பட்டு தமிழக கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் விசாரணைகளின் பின்னர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 30ஆம் திகதி நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். …
-
- 0 replies
- 104 views
-
-
இந்தியாவின் 15 முதலீட்டார்கள் யாழ் வருகைதரவுள்ளனர் - துணை தூதரக முதன்மை நிர்வாக அதிகாரி ராம் மகேஷ் தெரிவிப்பு Published By: Digital Desk 7 04 Dec, 2024 | 08:59 AM ( எம். நியூட்டன் ) யாழ்ப்பாணத்திற்கு 15 முதலீட்டாளர்கள் வருகை தர உள்ளார்கள் என்று யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக முதன்மை நிர்வாக அதிகாரி ராம் மகேஷ் தெரிவித்தார். வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களம் யாழ் இந்தியத் துணைத் தூதரகம் இணைந்து நடத்தும் வடமாகாண தொழில்துறை வர்த்தகச் சந்தை நேற்று செவ்வாய்க்கிழமை (03) காலை ஆரம்பமானது . மூன்று நாட்கள் நடைபெற உள்ள வட மாகாண தொழில்துறை வ…
-
- 0 replies
- 253 views
-
-
அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு! எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே, இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கான நீண்டகால வேலைத்திட்டத்தை தயாரிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என சங்கத்தின் தலைவர் யு.கே.சேமசிங்க குறிப்பிட்டார். பீயர், கால்நடை தீவன உற்பத்திக்கான அரிசி விநியோகத்தை ஒழுங்குபடுத்துவது மிகவும் முக்கியமானது என்றும் வலியுறுத்தினார். இதனிடையே, வெள்ளத்தால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்குப் பதிலாக மீண்டும் நடவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் வ…
-
- 1 reply
- 364 views
-
-
வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் இனமுறுகலை ஏற்படுத்த முயற்சி - விசாரணைகள் ஆரம்பம் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் 04 Dec, 2024 | 11:36 AM வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் இனமுறுகலை ஏற்படுத்துவதற்கு குறிப்பிட்ட அரசியல் குழுவொன்று முயல்வது குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக பொதுமக்;கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இவர்கள் சமூக ஊடகங்களில் போலியான பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர் என தெரிவித்துள்ள அவர் சிலவருடங்களிற்கு முன்னர் முல்லைத்தீவில் இடம்பெற்ற மாவீரர்தினநிகழ்வுகள் குறித்த வீடியோக்களை இந்த வருடம் பதிவிட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். வடக்கில் 244 மாவீரர் த…
-
- 0 replies
- 138 views
-
-
சதுரங்க வேட்டை ----------------------------- இது கதையில்லை, செய்திதான். ஆனால் கதைகளை மிஞ்சும் செய்தி. இன்றைய டெயிலி மிர்ரரில் இருக்கின்றது. அனுராதபுரத்தில் ஒரு செல்வந்தர் வாழ்ந்து வந்தார். அவருக்கு வயது 70. அவர் தன்னிடம் இருந்த ஒரு டிராக்டரை 29 இலட்சம் ரூபாய்களுக்கு விற்றார். டிராக்டரை வாங்க வந்தவர்களில் ஒருவர் தான் ஒரு சோதிடர் என்று அந்தச் செல்வந்தருக்கு சொன்னார். இந்த வீட்டில் உள்ள தோட்டத்தில் ஒரு பெரும் புதையல் புதைக்கப்பட்டு இருப்பதை தன்னால் உணரக்கூடியதாக இருப்பதாகவும், அதை எடுப்பதற்கு தான் அந்தச் செல்வந்தருக்கு உதவுதாகவும் சொன்னார். சோதிடர் அன்றிரவு யாருக்கும் தெரியாமல் செல்வந்தரின் தோட்டத்தில் சில போலி இரத்…
-
-
- 1 reply
- 585 views
-
-
கடந்த மாதம் 10 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பிற்கு அண்மையில் அத்துமீறி மீன்பிடியில ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 23 பேரும் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 23 பேரும் இன்று ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் சிறைச்சாலை அதிகாரிகளினால் நீதிவான் நளினி சுபாஸ்கரன் முன்னிலையில் முற்படுத்தப்படுத்தப்பட்டனர். வழக்கினை விசாரணைக்கு எடுத்த நீதிவான் இந்திய மீனவர்கள் 23 பேருக்கும் 6 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்ததுடன் குறித்த 23 பேரில் 3 பேர் படகோட்டிகள் என்றமையால் அவர்களுக்கு தலா 40லட்சம் ரூபா அபராத தொகையினை செலுத்தும் அதேவேளை 6 மாத சிறைத்தண்டனையும் மேலதிகமாக வழங்கி உத்தரவிட்…
-
- 0 replies
- 238 views
-
-
டியாகோகார்சியாவில் சிக்குண்டிருந்த இலங்கையை சேர்ந்ததமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களை அதிகாரிகள் பிரிட்டனிற்கு அழைத்து சென்றுள்ளனர். பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சின் நிதி உதவியுடன் அவர்கள் ஆறு மாதங்களிற்கு பிரிட்டனில் தங்கியிருப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தான் பார்வையிட்ட ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது. பிரிட்டனிற்கான அவர்களின் பயணத்துடன் அவர்களது தலைவிதியை தீர்மானிப்பதற்காக கடல்கடந்து இடம்பெற்ற சட்டபோராட்டங்கள் முடிவிற்கு வந்துள்ளன என தெரிவித்துள்ள பிபிசி எனினும் அவர்களின் எதிர்காலம் குறித்து நிச்சயமற்ற தன்மை நிலவுவதாக குறிப்பிட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த 60 புகலிடக்கோரிக்கையாளர்கள் கடந்த …
-
- 1 reply
- 251 views
- 1 follower
-
-
03 Dec, 2024 | 12:45 PM மன்னார் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக நிலவி வந்த சீரற்ற வானிலை காரணமாக 7,603 ஹெக்டேயர் விவசாய நிலங்களில் பயர்ச்செய்கை அழிவடைந்துள்ளதாக மன்னார் மாவட்ட கமநல சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் இலுப்பை கடவை கமநல சேவை நிலையத்துக்கு உட்பட்ட 1100 ஹெக்டேயர் விவசாய நிலங்களும் மாந்தை பகுதியில் 1168 விவசாய நிலங்களும், நானாட்டானில் 768 ஹெக்டேயர் விவசாய நிலங்களுமாக மொத்தம் 7603 ஹெக்டேயர் விவசாய நிலப்பரப்புகளில் செய்கையிடப்பட்ட பயிர்கள் வெள்ளத்தால் அழிவடைந்துள்ளன. இம்முறை மன்னார் மாவட்டத்தில் காலபோக செய்கைக்கென 11,776 ஹெக்டேயர் விவசாய நிலப்பரப்பில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்ட …
-
- 2 replies
- 289 views
-
-
03 Dec, 2024 | 06:14 PM பலாலியில் அமைந்துள்ள யாழ். சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிப்பவர்கள், அங்குள்ள அதிகாரிகளால் ஏதாவது அசௌகரியங்களை எதிர்கொண்டால் விமான நிலையத்தின் செயற்பாட்டு முகாமையாளர் அமரதுங்க அல்லது வட மாகாண ஆளுநர் அலுவலகம் என்பவற்றை தொடர்புகொள்ள முடியும் என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பயணிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்காக 0774653915 என்ற விமான நிலையத்தின் செயற்பாட்டு முகாமையாளரின் இலக்கமும் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் 021 221 9373 என்ற இலக்கமும் வழங்கப்பட்டுள்ளது. யாழ். சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிப்பவர்களுக்கு வட ஆளுநரின் அறிவித்தல் | Virakesari.lk
-
-
- 5 replies
- 570 views
-
-
இவ்வருடத்தின் நவம்பர் மாதத்தில் 22,685 இலங்கையர்கள் வேலை வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. அதன்படி, இவ்வருடத்தின் ஜனவரி மாதத்திலிருந்து நவம்பர் மாதம் வரையான காலப்பகுதிக்குள் 291‚267 இலங்கையர்கள் வேலை வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். அவர்களில் 172‚746 ஆண்களும் 118‚521 பெண்களும் அடங்குகின்றனர். அதிகளவானோர் குவைத் நாட்டுக்கு வேலை வாய்ப்புக்காக சென்றுள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 71,210 ஆகும். இந்நிலையில், ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு 48 083 பேரும், சவுதி அரேபியாவிற்கு 45,008 பேரும், கத்தாருக்கு 43,104 பேரும், இஸ்ரேலுக்கு 9,146 பேரும், ஜப்பானுக்கு 7,983 தென் கொரியாவுக…
-
- 0 replies
- 174 views
-
-
சிங்கள மக்களுடன் பேச்சுகள் நடத்த தமிழர்களின் சமாதான கதவு திறந்தே உள்ளது: இலங்கையின் இணை பங்காளர்களாக விரும்புகிறோம் - சிறீதரன் சிங்கள மக்களுடன் பேசுவதற்ககு தமிழ் மக்கள் தங்கள் சமாதான கதவுகளை எப்போதும் திறந்தே வைத்துள்ளனர். சமஷ்டி அடிப்படையில் தமிழ் மக்கள் தங்களை தாமே ஆளும் சுயாட்சியுடனான புதிய அரசியலமைப்பை உருவாக்கி இலங்கை தீவின் இணை பங்களார்களாக தமிழர்களை ஏற்றுக்கொள்ள அரசியல் பேச்சுகளை சிங்கள மக்களுடன் நடத்த தயாரக உள்ளோம்.” என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீது இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் ம…
-
- 1 reply
- 166 views
-
-
மாகாண சபை முறை நீக்கப்படாது: மூன்று வருடங்களின் பின்னரே புதிய அரசியலமைப்பு மாகாண சபை முறைமையை நீக்குவதற்கு எந்தவொரு தீர்மானத்தையும் தற்போதுவரை எடுக்கவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. புதிய அரசியலமைப்பு மூன்று வருடங்களின் பின்னரே கொண்டுவரப்படும். அதிகாரப்பகிர்வு தொடர்பில் கலந்துரையாட போதுமான கால அவகாசம் உள்ளது. புதிய அரசியலமைப்பில் மாகாண சபை முறை தொடர்ந்தால் தற்போது இருக்கும் அதிகாரங்களுக்கு அப்பாலான அதிகாரப்பகிர்வு இருக்காது என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. மாகாண சபை முறையை நீக்கப்பட உள்ளதாக ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, கூறியுள்ள கருத்து தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விட…
-
- 4 replies
- 452 views
-
-
தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி - நாடாளுமன்றத்தில் களேபரம் (காணொளி இணைப்பு) நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் அர்ச்சுனா குற்றஞ்சாட்டியுள்ளார். தமக்கான நேர ஒதுக்கம் தொடர்பில் அறிந்து கொள்வதற்காக நாடாளுமன்றில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்துக்கு சென்றிருந்த போது தம்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேநேரம், இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றில் கருத்துரைத்த நளின் பண்டார, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்துக்கு முன்பாக முறையற்ற விதத்தில் செயற்பட்டதாகவும் முறையற்ற வசனங்களைப் பயன்படுத்தியுள்…
-
-
- 10 replies
- 679 views
-
-
பௌத்தர்களை பிரிக்க பெரும் சதி முயற்சி; புலம்பெயர் தமிழ் அமைப்புகள் நிதி உதவி பௌத்தர்களிடையே பிரிவினைகளை ஏற்படுத்துவதற்கு சதித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.இந்த சதித்திட்டங்களுக்காக புலம்பெயர் தமிழ் அமைப்புகள் பெரும்தொகை நிதியளித்து வருகின்றனவென கலாநிதி ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், சில கட்டுக்கதைகளால் மத நம்பிக்கைகளை மட்டுப்படுத்த முடியாது . இவ்வாறான மட்டுப்பாடுகளை மேற்கொள்வதற்கு சில சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .இந்த வேலைத்திட்டத்தின் முதற்படியாக பௌத்தர்களுக்கு இடையில் பிரிவினைகளை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன பௌத்த…
-
- 2 replies
- 356 views
-
-
ஒருபோதும் மீண்டும் இனவாதம் துளிர்விட அரசாங்கம் அனுமதிக்காது:பிரதமர் ஹரிணி December 3, 2024 அரசியலில் தோல்விகண்ட சில குழுக்கள் நாட்டில் மீண்டும் இனவாதத்தை தலைத்தூக்கச் செய்யும் வகையில் செயல்படுகின்றன. ஒருபோதும் மீண்டும் இனவாதம் துளிர்விட அரசாங்கம் அனுமதிக்காது என்பதுடன், அதனை ஒடுக்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையை தொடர்ந்து பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது. இந்த அமர்வில் விசேட உரையை நிகழ்த்திய போதே பிரதமர் ஹரிணி அமரசூரிய இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், ”இனவாதத்தை முற்றாக நிராகரிப்பதாகவே பொதுத…
-
- 0 replies
- 147 views
-
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோருக்கு இடையில் சிநேகபூர்வ சந்திப்பு ஒன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தல் முடிவுகளை அடுத்து, எதிர்வரும் காலங்களிலாவது தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி ஒன்றுபட்டு பயணிக்க வேண்டும் என்ற விடயம் பல்வேறு தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டு வருகின்ற நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய வகையில் சமஷ்டி…
-
-
- 103 replies
- 6.1k views
- 2 followers
-
-
திருகோணமலை உவர்மலையில் 36 வருடங்களுக்குப் பின் வீதி ஒப்படைப்பு எஸ்.கீதபொன்கலன் திருகோணமலை உவர்மலை வாழை முனை( Plantan Point) கீழ் சுற்றுவட்ட வீதி 36 வருடங்களுக்குப் பின்னர் மக்களின் பாவனைக்காக இராணுவத்தினரால் ஞாயிற்றுக்கிழமை (01) திறந்து வைக்கப்பட்டது. பிரித்தானியரின் ஆட்சியின் போது,திருகோணமலை உற்துறைமுகத்தின் பாதுகாப்பிற்கென இயற்கையான கேந்திர தானமான இவ் முனைப்பகுதியில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டது. சுதந்திரத்தின் பின்னர் தொடர்ந்தும் இலங்கை இராணுவத்தின் முகாம் இவ்விடத்தில் இயங்கி வருகின்றது.இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த உவர்மலையின் பின்பகுதியான இவ் சுற்றுவட்ட வீதி திறந்து வைக்கப்பட்டுள்ளமையின் மூலம் உவர்மலை மத்திய வீதியினூடாக செல்கின்ற மக…
-
- 0 replies
- 142 views
-
-
தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் அரசாங்கம் செயற்படக்கூடாது - டக்ளஸ் மாகாண சபைகளை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வை நீக்குவதற்கு முயற்சிக்கப்படுமாயின், அது தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் செயல் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். ஆட்சிப் பீடமேறியுள்ள தற்போதைய அரசாங்கத்தினால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் 13 ஆம் திருத்தச் சட்டம் நீக்கப்படும் என்று ஆளுங்கட்சி முக்கியஸ்தர்களுள் ஒருவரான ரில்வின் சில்வாவினால் அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர…
-
- 0 replies
- 94 views
-
-
புலமையாளர்களை உள்ளடக்கிய இம்பக்ட் அமைப்பினருக்கும் வடக்கு ஆளுநருக்குமிடையே கலந்துரையாடல்! 03 Dec, 2024 யாழ்ப்பாண மாவட்டத்தில் தொழில்சார் புலமையாளர்களை உள்ளடக்கிய இம்பக்ட் (IMPACT) அமைப்பினர் வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். தமது அமைப்பால் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் ஆளுநருக்கு அவர்கள் விவரித்ததுடன், மருத்துவத்துறையில் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள திட்டங்களை முன்னெடுப்பதிலுள்ள சவால்கள் தொடர்பிலும் அவற்றை எவ்வாறு நிவர்த்திக்கலாம் என்பது தொடர்பிலும் ஆளுநருடன் கலந்துரையாடினர். பெண்கள் வலுவூட்டல் மற்றும் சமூக மேம்பாடு தொ…
-
- 4 replies
- 570 views
-
-
மன்னாரில் 7,500 ஹெக்டேயர் விவசாய நில பயர்ச்செய்கை அழிவு ; வங்கிக் கடன்களை இரத்து செய்யுமாறு விவசாயிகள் கோரிக்கை! 03 Dec, 2024 மன்னார் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக நிலவி வந்த சீரற்ற வானிலை காரணமாக 7,603 ஹெக்டேயர் விவசாய நிலங்களில் பயர்ச்செய்கை அழிவடைந்துள்ளதாக மன்னார் மாவட்ட கமநல சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் இலுப்பை கடவை கமநல சேவை நிலையத்துக்கு உட்பட்ட 1100 ஹெக்டேயர் விவசாய நிலங்களும் மாந்தை பகுதியில் 1168 விவசாய நிலங்களும், நானாட்டானில் 768 ஹெக்டேயர் விவசாய நிலங்களுமாக மொத்தம் 7603 ஹெக்டேயர் விவசாய நிலப்பரப்புகளில் செய்கையிடப்பட்ட பயிர்கள் வெள்ளத்தால் அழிவடைந்துள்ளன. …
-
- 0 replies
- 114 views
-
-
அனர்த்த நிவாரணம் தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் December 3, 2024 12:19 pm கடந்த சில நாட்களாக ஏற்பட்ட அனர்த்தத்தினால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். இன்று (03) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு உடனடியாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியும் பணிப்புரை வழங்கியுள்ளதாக தெரிவித்தார். திறைசேரியில் இருந்து அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் வழங்குமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார். நிலவிய சீரற்ற …
-
- 0 replies
- 451 views
-
-
ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனம் மீதான விவாதம் இன்று December 3, 2024 06:56 am பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது பாராளுமன்ற வார சபை அமர்வு இன்று (03) சபாநாயகர் அசோக ரங்வல தலைமையில் கூடவுள்ளது. பாராளுமன்றம் இன்று காலை 09.30 மணிக்கு கூடவுள்ள நிலையில் இதன்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. இது தொடர்பான விவாதம் இன்றும் நாளையும் நடைபெற உள்ளதாகவும், அது தொடர்பான வாக்கெடுப்பு நாளை மாலை 5 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற தலைமைச் செயலகம் தெரிவித்துள்ளது. இந்த வாரத்தில் பாராளுமன்றம் எதிர்வரும் 6ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன் 202…
-
- 0 replies
- 457 views
-
-
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பொருட்களின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது. இது தொடர்பில் மக்கள் தமது விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். பல அரிசி ஆலைகள் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதால் சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு காணப்படுவதாக கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் விலையும் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளதுடன் கடந்த அரசாங்கங்களின் மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. https://tamilwin.com/article/sri-lanka-weather-change-economy-effects-1733135297
-
- 0 replies
- 273 views
-