ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
மாவீரர் தின நிகழ்வு நடத்தியோரை ஏன் கைது செய்யவில்லை என கொழும்பு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே, குற்ற விசாரணைப் பிரிவிடம் இன்றைய தினம் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாவீரர் தின நிகழ்வுகள் குறித்த புகைப்படங்கள் காணொளிகளை சமூக உடகங்களில் பிரசாரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சிலரை பொலிஸார் கைது செய்திருந்தனர். மாவீரர் நிகழ்வு எனினும் இந்த மாவீரர் நிகழ்வுகளை மேற்கொண்டவர்களை அடையாளம் கண்டு என் கைது செய்யவில்லை என நீதவான் கேள்வி எழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாவீரர் தின நிகழ்வுகள் குறித்த காணொளியை சமூக ஊடகங்கள் வாயிலாக பிரசாரம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கெலும் ஹர்ஷன என்…
-
- 1 reply
- 336 views
-
-
திருகோணமலையைச் சேர்ந்த 60 வயதுப் பெண் ஒருவர் பயங்கரவாத குற்றத் தடுப்பினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதன்படி எதிர்வரும், 4ஆம் திகதி விசாரணை இடம்பெறவுள்ளதாக அழைப்பு கடிதத்ததில் குறிப்பிடப்பட்டுள்ளது. விசாரணை அழைப்பு இந்நிலையில், எந்தவிதக் காரணங்களும் குறிப்பிடப்படாமல் விசாரணைக்கென அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இதனிடையே இலங்கை பொலிஸார் மேற்கொள்ள வேண்டிய விசாரனையை பயங்கரவாதப் பிரிவைக் கொண்டு நடத்துவது ஒரு அச்சுறுத்தும் செயல் சமூக ஊடகங்களில் சில கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. https://tamilwin.com/article/60-year-old-woman-questioned-by-crime-stoppers-1733163593
-
- 0 replies
- 278 views
-
-
இலங்கையில் இடம்பெற்ற போருக்குப் பிறகு நல்லிணக்கம் மற்றும் குற்ற விசாரணை தொடர்பான ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற இலங்கை அரசு தொடர்ந்தும் காலம் அவகாசம் கோரி வருகிறது. எனினும், இலங்கைக்கு எதிரான பிடியை விட்டுக்கொடுக்க கூடாது என்ற முடிவுடன், நீண்டகாலமாக நாட்டில் காணப்படும் அரசியல் பிரச்சினைகளுக்கு சர்வதேச நடுவர் மன்றத்தின் ஊடாகவே தீர்வு காண முடியும் என புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இன்று வரை வலியுறுத்தி வருகின்றன. தேசிய பிரச்சினை தொடர்பில் இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ளதாகவும், இனிவரும் எந்தவொரு பேச்சுக்களையும் சர்வதேச நடுவர் முன்னிலையில் நடத்த வேண்டும் என அந்த அமைப்புக்கள் தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வருகின்றன. …
-
-
- 10 replies
- 864 views
-
-
கொட்டித் தீர்த்த பெங்கால் புயல்மழை கிணறுகளின் நீரின் தரத்தைக் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. பெருக்கெடுத்த வெள்ள நீர் கிணறுகளை நிரப்பியுள்ளதோடு, பல இடங்களில் மலக்குழிக் கழிவு நீர் கிணற்று நீருடன் கலக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொதித்தாறிய நீரைப் பருகுவதே பாதுகாப்பானது எனத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். பெங்கால் புயல் ஏற்படுத்திய வெள்ளப் பெருக்குத் தொடர்பாக பொ. ஐங்கரநேசன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். ஊடக அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், பெங்கால் புயல் 2008 நவம்பரில் தாக்கிய நிசா புயலைவிட வீரியம் குறைவானது. ஆயினும், நிசாவைவிட மிக மோசமான வெள்ளப் பெருக்கை ஏற்…
-
- 1 reply
- 227 views
-
-
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லம், அவர் இறந்து ஐந்து மாதங்களின் பின்னர் நீதித்துறை, அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபை, உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ இல்லத்தை கையளிப்பதற்கு அமைச்சு ஐந்துக்கும் மேற்பட்ட நினைவூட்டல்களை வழங்கியிருந்ததாக கூறப்படுகிறது. கொழும்பு 7, மலலசேகர மாவத்தையில் உள்ள இந்த உத்தியோகபூர்வ இல்லம் சம்பந்தனுக்கு 2015 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. பின்னர், நல்லாட்சி அரசாங்கத்தின் போது 2019 பெப்ரவரி 26 ஆம் திகதி முன்னாள் அமைச்சர் கயந்த கருணாதிலகவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தின் பிரகாரம், சம்பந்தனுக்கு இருக்கும் வரையில் பயன்படுத்திக்கொள்ளும் வகையில…
-
-
- 8 replies
- 697 views
-
-
இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை எந்த காலத்திலும் புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக நிறுத்தக்கூடாது எனவும் தமிழ் மக்களின் இனப் பிரச்சினையை தீர்க்கும் வகையில் புதிய அரசியல் சாசனம் அமைய வேண்டும் என செல்வம் அடைக்கலநாதன் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (2) பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், புதிய அரசியல் சாசனத்திலே 13ஆவது திருத்தச் சட்டம் இல்லாது ஒழிக்கப்படும் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். இதன் நோக்கம் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை மீறுகின்ற ஒரு செயற்பாடாக அமையும். ஒரு அரசியல் சாசனம் வருகின்றபோது, தமிழ் தரப்பையும் ஆலோசனையைய…
-
- 1 reply
- 272 views
-
-
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்கள் உக்ரைனிற்கு எதிராக போரிடுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என வெளியான தகவல்கள் ஆதாரமற்றவை என இலங்கைக்கான ரஸ்ய தூதரகம் தெரிவித்துள்ளது. ரஸ்ய தூதரகம் மேலும் தெரிவித்துள்ளதாவது பிரான்ஸ் பெல்ஜியத்திற்கு செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்கள் உக்ரைனிற்கு எதிராக போரிடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என வெளியான செய்தி குறித்து இலங்கைக்கான ரஸ்ய தூதரகம் கவனம் செலுத்தியது. இவ்வாறான தகவல்கள் ஆதாரமற்றவை அடிப்படையற்றவை என்பதை தூதரகம் வலியுறுத்த விரும்புகின்றது. உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நாங்கள் உன்னி;ப்பாக அவதானித்து வருகின்றோம்,இந்த தகவல்களின் நோக்கம் இலங்கை ரஸ்யா இடையிலான பாரம்பரிய நட்புறவை சீர்…
-
-
- 12 replies
- 636 views
-
-
02 Dec, 2024 | 04:58 PM முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 அன்று படுகொலை செய்யப்பட்ட 32 தமிழ் மக்களின் 40ஆவது ஆண்டு நினைவு தினம் படுகொலை இடம்பெற்ற ஒதியமலை கிராமத்தில் உள்ள நினைவுத்தூபி அருகில் இன்று திங்கட்கிழமை (02) அனுஷ்டிக்கப்பட்டது. உணவுபூர்வமாக நடைபெற்ற இந்த நினைவேந்தலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள் சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தியதோடு ஒதியமலை பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகளிலும் ஈடுபட்டும் தமது உறவுகளை நினைவுகூர்ந்தனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் ஒன்றான ஒதியமலைப் பகுதியில் 1984 டிசம்பர் 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில் 27 பேர் சுடப்பட்டும் வெட்டப்பட்டு…
-
- 5 replies
- 380 views
-
-
தற்போதைய அரசாங்கம் இரத்தத்தாலும் இரும்பினாலும் நசுக்கப்பட்ட வரலாற்று அனுபவத்தை நினைவுகூர்ந்து பாராளுமன்றத்தின் அதிகாரத்தை பயன்படுத்தி பயங்கரவாத தடைச்சட்டத்தை விரைவில் இரத்துச்செய்யவேண்டும் என மக்கள் போராட்ட முன்னணியின் செயற்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் மக்கள் போராட்ட முன்னணி மேலும் தெரிவித்துள்ளதாவது. சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளியான அறிக்கைகள் மற்றும் கருத்துக்களின் அடிப்படையில் ரத்துச் செய்யப்பட வேண்டிய அடக்குமுறைச் சட்டமான 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 01 ஆகிய திகதிகளில் பொலிஸார் நான்கு பேரைக் கைது செய்ததோடு அவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். ஆனால் அந்த …
-
- 1 reply
- 174 views
-
-
Published By: Digital Desk 7 02 Dec, 2024 | 05:50 PM யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த சில குடும்பங்களுக்கு உணவு வழங்க மறுத்தார் என கிராம சேவையாளருடன் முரண்பட்ட குற்றத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமராட்சி, கற்கோவளம் பகுதியை சேர்ந்த சில குடும்பங்கள் வெள்ளம் காரணமாக இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளனர். அவர்களில் சில குடும்பத்தினருக்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (01) கிராம சேவையாளர் உணவு வழங்க மறுத்தமையால் தர்க்கம் ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து கிராம சேவையாளர், தனது கடமைக்கு இடையூறு விளைவித்தார்கள் என பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செ…
-
- 1 reply
- 255 views
-
-
தட்டுப்பாடு இன்றி, நியாயமான விலைகளில் மக்களுக்கு தொடர்ச்சியாக அரிசி விநியோகிப்பதன் அவசியம் குறித்து ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் திங்கட்கிழமை (02) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. எதிர்வரும் மாதங்களில் நுகர்வோருக்கு தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் தொடர்ச்சியாக அரிசி வழங்க வேண்டியதன் அவசியத்தை சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களிடம் எடுத்துரைத்த ஜனாதிபதி, அதற்காக எடுக்க வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும் அவர்களுடன் கலந்துரையாடினார். மக்களுக்கு தட்டுப்பாடின்றி அரிசியை வழங்கும் வகையில் நாட்டில் களஞ்சிய வசதிகளை அதிகரிப்பதற்கு மேற்கொள…
-
- 0 replies
- 78 views
-
-
2025ஆம் ஆண்டில் அநுர அரசாங்கம்: சந்திக்கப்போகும் சவால்கள்! 2025ஆம் ஆண்டின் ஆரம்பம் முதல் , சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பார்ப்புக்களை சமநிலைப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் கடுமையான நிதி சிக்கல்களையும் சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இது ஒன்றும் எளிதான காரியம் அல்ல. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதற்கும், பொது மக்களின் எதிர்பார்ப்புகளை பூரணப்படுத்துவதற்கும் இடையே உள்ள கடுமையான சவால்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு தலை இடியாக இருக்கப் போகிறது. பல எதிர்க்கட்சிகளும், பழைய அரசியல் தலைமைகளும் தேசிய மக்கள் சக்தியின் இந்த சவால்களை எவ்வாறு எதிர்கொள்ள போகின்றது என்பது தொடர்பில் உற்று நோக்கி வ…
-
- 0 replies
- 322 views
-
-
கடற்றொழில் அமைச்சரின் சகா என கூறி அடாவடியில் ஈடுபட்டவரால் யாழில் பரபரப்பு! கடற்றொழில் நீரியல் வள அமைச்சரின் ஒருங்கிணைப்பாளர் என்று தன்னை அறிமுகப்படுத்திய தனி நபர் ஒருவர், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் களஞ்சியசாலை ஒன்றைத் தான் கொண்டுவந்த பூட்டு ஒன்றினால் பூட்டித் திறப்பை எடுத்துச் சென்ற சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் யாழ். பருத்தித்துறை, முதலாம் குறுக்குத் தெரு பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, பருத்தித்துறை முதலாம் குறுக்குத் தெருப் பகுதியில் உள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பொறுப்பிலுள்ள களஞ்சியசாலை ஒன்றுக்கு வந்த நபர் ஒருவர், அங்கிருந்த பட…
-
-
- 7 replies
- 606 views
-
-
அமைச்சர்களுக்கு இனி பங்களாக்கள் வழங்கப்படாது தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகைகளை குறைக்கும் நடவடிக்கையில், அமைச்சர்களுக்கு அரச பங்களாக்களை ஒதுக்காது இருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ஒருவர் நேற்று தெரிவித்தார். மேலும், எம்.பி.க்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் வரியில்லா வாகன அனுமதிகளும் ரத்து செய்யப்படும். கடந்த அரசாங்கங்களில் பதவி வகித்த அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரச பங்களாக்களை என்ன செய்வது என்பதை அரசாங்கம் தீர்மானிக்கும் என பாராளுமன்ற விவகாரங்களுக்குப் பொறுப்பான பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்று டெய்லி மிரருக்கு தெரிவித்தார். "தற்போதைய அரசாங்கத்தின் எந்த அமைச்சருக்கும் இந்த வீடுக…
-
- 2 replies
- 369 views
- 1 follower
-
-
புதிய பிரதம நீதியரசராக இன்று பதவியேற்கும் முர்து பெர்னாண்டோ! இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து பெர்னாண்டோ (Murdu Fernando) இன்றைய தினம் (02) பதவியேற்கவுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோவை நியமிக்கும் பரிந்துரைக்கு அரசியலமைப்பு பேரவை கடந்த மாதம் அங்கீகாரம் வழங்கியிருந்தது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய ஓய்வு பெற்ற நிலையில், திருமதி முர்து பெர்னாண்டோ இந்தப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டார். 1985 ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தில் இணைந்து கொண்ட அவர், 1997 ஆம் ஆண்டு பிரதி சொலிசிட்டர் ஜெனரலாகவும், 2014 ஆம் ஆண்டு மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாகவும…
-
- 0 replies
- 169 views
-
-
உ/த பரீட்சையின் பின் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு? 2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு தற்சமயம் வெளியிடப்பட்டால், பரீட்சைகள் காலத்தின் போது, வேட்பாளர்கள் பிரசார நடவடிக்கைகளை தொடங்குவார்கள், எனவே, பரீட்சைக்கு இடையூறு ஏற்படும் என்பதால் அது முடியும் வரை தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. மோசமான காலநிலை காரணமாக, பரீட்சை சில நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட பரீட்சை நடவடிக்கைகள் இந்த வாரம் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இத…
-
- 0 replies
- 138 views
-
-
2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தொடக்கம் வாகன இறக்குமதிகள் நடைபெறும்! வாகன இறக்குமதிக்கு சர்வதேச நாணயநிதியம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தொடக்கம் வாகன இறக்குமதிகள் நிச்சயமாக ஆரம்பிக்கப்படும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி உரிய முறையில் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம். பெப்ரவரியில் இருந்து கண்டிப்பாக வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும். ஏனெனில் இந்…
-
- 0 replies
- 241 views
-
-
பெப்ரவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும்! மஹிந்த தேஷப்ரிய எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி 15 ஆம் திகதிக்கு முன்னதாக உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும் என முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேஷப்ரிய தெரிவித்துள்ளார். ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு இரத்து செய்யப்பட்டு புதிய வேட்புமனு கோரப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் உள்ளுராட்சி மன்ற தேர்தலை உடனடியாக நடத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது. உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துவத்றகு ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களினால் எந்தவொரு நன்மையும் இல்லை. ஏனெனில் க…
-
- 0 replies
- 123 views
-
-
உள்ளூராட்சி சபைத் தேர்தல் - பழைய வேட்புமனு இரத்து! Vhg டிசம்பர் 01, 2024 உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக முன்னர் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் இரத்துச் செய்யப்படவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். அத்தோடு, புதிய வேட்புமனுக்களைக் கோருவதற்கு அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், "2022ஆம் ஆண்டு நடைபெறவிருந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காகக் கோரப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்ய அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் ஒன்று கூடி முடிவு எடுத்துள்ளனர். நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டம் கடந்த தி…
-
- 0 replies
- 429 views
-
-
மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் - நலன்புரி நிலையங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு December 1, 2024 4:54 pm 0 comment மன்னாரிற்கு இன்று (01) விஜயம் மேற்கொண்ட மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களுக்கு சென்று பார்வையிட்டார். இதன்போது மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள், மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் சிறிஸ்கந்த குமார் , மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். எழுத்தூர் பாடசாலை, செல்வநகர் …
-
- 1 reply
- 285 views
-
-
01 DEC, 2024 | 08:25 PM வடக்கு மாகாணத்தில் முதலீட்டாளர்கள் மன்றத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் காலத்தில் மேற்கொள்ளப்படும் என வடக்கு மாகாண கௌரவ நா.வேதநாயகன் அவர்கள், யாழ் வணிகர் கழகப் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார். யாழ் வணிகர் கழகம் தலைவர் இ.ஜெயசேகரன் தலைமையிலான குழுவினர் வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் வெள்ளிக்கிழமை 29.11.2024 மாலை சந்தித்துக் கலந்துரையாடினர். யாழ். நகரில் அமைந்துள்ள புதிய சந்தைக் கட்டடத் தொகுதியில் மிக நீண்ட காலமாக பயன்பாடில்லாது இருக்கும் தளத்தை சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு வாடகை அடிப்படையில் வழங்குவதன் ஊடாக அவர்களுக்கு நிரந்தர சந்தை வாய்ப்பை ஏற்படுத்த முடியும…
-
- 0 replies
- 228 views
- 1 follower
-
-
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தும் இணங்கி வருவதற்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பாராட்டு தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் அமாரி கொழும்பு ஹோட்டலை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்தார். அமாரி கொழும்பு ஹோட்டல் குழுமமானது கொழும்பில் உள்ள இலங்கை தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமான முதல் ஐந்து நட்சத்திர சர்வதேச ஹோட்டலாகும். ஹோட்டல் திறப்பு விழாவில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் விஜித ஹேரத், எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பல அதிதிகள் கலந்துகொண்டனர். https://thinakkural.lk/article/312935
-
- 0 replies
- 481 views
- 1 follower
-
-
01 DEC, 2024 | 04:29 PM நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 24 மாவட்டங்களிலும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மழை, வெள்ளம் போன்ற அனர்த்தங்களால் ஒரு இலட்சத்து 39 ஆயிரத்து 934 குடும்பங்களைச் சேர்ந்த 4 இலட்சத்து 71 ஆயிரத்து 249 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தத்தில் சிக்கி இதுவரை 19 பேர் காயமடைந்துள்ளனர். இந்த அனர்த்தத்தில் 100 வீடுகள் முழுமையாகவும் 2379 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. நாடளாவிய ரீதியில் 135 இடைத்தங்கல்…
-
- 0 replies
- 505 views
- 1 follower
-
-
01 DEC, 2024 | 07:47 PM வவுனியா ஓமந்தை சேமமடு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை (01) மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்… குறித்த பகுதியில் மாடுகளை சாய்த்துக்கொண்டுவந்த குடும்பஸ்தர் மீது குழுவொன்று வாளால் வெட்டியுள்ளது. இதனால் படுகாயமடைந்த அவர் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் ஏற்கனவே இறந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் நாவற்குளம் பகுதியை சேர்ந்த செல்வநிரோயன் வயது 46 என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே பலியாகியுள்ளார். …
-
- 0 replies
- 475 views
- 1 follower
-
-
பலஸ்தீன (Palestine) பிரதேசங்களிலும் மேற்கு ஆசியா முழுவதிலும் ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்து வரும் பாரியளவிலான பொதுமக்களின் உயிர் இழப்புகள், துன்பங்கள் மற்றும் தொடர்ச்சியான அழிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது மற்றும் சகிக்க முடியாது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். பலஸ்தீன மக்களுடனான ஐக்கிய நாடுகளின் ஒற்றுமை தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது, பலஸ்தீன மக்களுக்கு இலங்கையின் உறுதியான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய ஜனாதிபதி, காசாவின் மோசமான மனிதாபிமான நிலைமை குறித்து இலங்கை தொடர்ச்சியாக கடுமையான அதிருப்திகளை தெரிவித்துள்ளதுடன், உடனடி போர்நிறுத்தத்திற்கான அழைப்பையும் ஆதரித்துள்…
-
-
- 14 replies
- 670 views
- 1 follower
-