ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143428 topics in this forum
-
மலேசியாவின் இலங்கை தூதரை தாக்கியது நாம் தமிழர் கட்சியினர் - ரணில் தகவல் தென்னிந்தியாவில் செயல்பட்டுவரும் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்கள் மலேசியாவில் இலங்கை தூதர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சம்பந்தப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இலங்கை நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் விக்ரமசிங்க, இந்தத் தாக்குதல் தொடர்பாக மலேசிய அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அறிவித்தார். இந்த விசாரணைகளின் படி நாம் தமிழர் எனும் தென்னிந்திய கட்சியின் மலேசிய கிளையின் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளதாக மலேசிய போலிசார் அறிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் இந்தியர்களே சம்பந்தப்பட்டுள்ளதாக தெர…
-
- 2 replies
- 711 views
-
-
5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரின் கடத்தலுக்கு கப்டன் தஸநாயக்கவும் பொறுப்புக் கூற வேண்டும் : வெளிநாடுசெல்ல அனுமதியளிக்க முடியாது கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து கடத்தப்பட்டு காணாமல்போன ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட11 பேரின் கடத்தல் மற்றும் காணாமல்போதலுக்கு கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளரான கப்டன் டி.கே.பி. தஸநாயக்கவும் பொறுப்புக் கூற வேண்டும் என இது வரையிலான விசாரணைகளில் தெரியவந்துள்ளதால் அவர் வெளிநாடு செல்ல அனுமதி வழங்க முடியாது என கோட்டை நீதிவான் நீதிமன்றம் நேற்று அறிவித்தது. அமெரிக்காவில் தான் தொடர்ந்து வந்த பாட நெறியை தொடர்ந்து முன்னெடுக்கும் முகமாக ஒன்றரை வருடங்களுக்கு வெளி…
-
- 0 replies
- 290 views
-
-
தயா மாஸ்டர் மீதான வழக்கு ஒத்திவைப்பு தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் ஊடகப்பேச்சாளர் தயா மாஸ்ரர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தினால் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தயா மாஸ்ரர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து அனுப்பிவைக்கப்படமையினால் வழக்கை வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் ஒத்திவைத்துள்ளார். இறுதி கட்ட யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து மக்களை வெளியேற விடாமல் மனித கேடயங்களாக பயன்படுத்தியத…
-
- 1 reply
- 468 views
-
-
'எழுக தமிழ்' எதிர்கொள்ள வேண்டியவையும் அடைவும் 'எழுக தமிழ்' எனும் பெயரில் கவனயீர்ப்புப் பேரணிகளை நடத்துவதற்கு தமிழ் மக்கள் பேரவை தயாராகி வருகின்றது. பொங்கு தமிழ் எழுச்சி நிகழ்வுகள் தமிழ்த் தேசியப் போராட்ட வரலாற்றில் முக்கியமானவை. கிட்டத்தட்ட அதனை முன்மாதிரியாகக் கொண்ட போராட்ட வடிவத்தினை மீளப்பிறப்பிக்க வேண்டும் என்கிற நோக்கம் 'எழுக தமிழ்' ஏற்பாட்டாளர்களிடமும் இருப்பதாகத் தெரிகின்றது. 'எழுக தமிழ்' என்ற பெயரின் ஊடாகவும், அதனை ஆரம்பத்திலேயே மீள்பிரதியீடு செய்ய முயன்றிருக்கின்றார்கள். 'எழுக தமிழ்' கவனயீர்ப்புப் பேரணியின் ஆரம்பக் கட்டம் செப்டெம்பர் 24ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. கல்வியங…
-
- 0 replies
- 504 views
-
-
'தேர்தல் பிற்போட்டமைக்கு மக்களே பொறுப்பு' -பாநூ கார்த்திகேசு 'தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு தேர்தல்கள் செயலகமோ, நானோ காரணமல்ல. மக்களும் நீதிமன்றமும் அரசியற்தலைவர்களுமே இதற்கு பொறுப்பு கூறவேண்டும்' என, தேர்தல்கள் ஆணைகுழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்தார். தேர்தல் திணைக்களத்தின் செயலகத்தின் கேட்போர் கூடத்தில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை(06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்ததாவது, 'தேர்தலை நடத்துமாறு, நீதிமன்றம் அனுமதியளிக்காத பட்சத்தில் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் திணைக்களத்துக்கு எவ்வித உரிமையும் இல்லை. எல்லை நிர்ணயமானது, உரிய முறையில் பூர்த்திசெய்ய…
-
- 0 replies
- 342 views
-
-
'காணாமற்போனோர் விவரங்களை மூன் எடுத்து சென்றார்' -எம்.றொசாந்த் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனிடம், காணாமற்போன நான்காயிரம் பேர் தொடர்பான முழு விவரங்களை, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சமர்ப்பித்துள்ளார். அத்துடன், வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் மற்றும் கட்டடங்கள் தொடர்பான விவரங்களையும், ஐ.நா செயலாளர் நாயகத்திடம் சமர்ப்பித்ததாக, முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறினார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக் கட்டடத்தொகுதியில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (06) இடம்பெற்றது. இதன்போதே, ப…
-
- 0 replies
- 321 views
-
-
பலாலி விமானத்தளத்தை இந்திய உதவியுடன் புனரமைக்க முடிவெடுக்கவில்லை: ரணில் யாழ் பலாலி விமானத்தளத்தை இந்தியாவின் உதவியுடன் பிராந்திய விமானத்தளமாக அபிவிருத்தி செய்வதற்கு தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார். இன்று நாடாளுமன்றம் கூடிய போது கேள்வியொன்றை எழுப்பிய மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க, பலாலி விமானத்தளத்தை பிராந்திய விமானத்தளமாக அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவுடன் ஒப்பந்தமொன்று ஏற்படுத்திக்கொள்ளப் பட்டுள்ளதா? என்று வினவினார். அதற்கு பதில் வழங்கிய பிரதமர் விக்கிரமசிங்க இவ்வாறான ஒப்பந்தங்கள் எதுவும் இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொள்ளப்படவில்லை என்று அறிவித்தார்…
-
- 3 replies
- 659 views
-
-
காணாமல்போன வர்த்தகர் மறைந்திருந்தபோது யாழில் கைது திருகோணமலை பகுதி வங்கி ஒன்றுக்கு சென்றிருந்த வேளையில் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட வர்த்தகர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். பண்டாரகம, அடுளுகம பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகரே நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் வைத்து மறைந்திருந்த போது கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த வர்த்தகர் நண்பர் ஒருவருக்கு எடுத்த தொலைபேசி அழைப்பினை பரிசீலித்தே குறித்த வர்த்தகரை கைது செய்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவம் தொடர்பில் திருகோணமலை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். பண்டாரகம, அடுளுகம பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய மொஹமட் நஸ்ரின் என்னும் வ…
-
- 0 replies
- 326 views
-
-
யாழ். உடுவில் மகளிர் கல்லூரி அதிபரை பதவி நீக்கம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் யாழ். உடுவில் மகளிர் கல்லூரி அதிபரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கல்லூரிக்கு முன்பாக பாடசலை மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர் கூடி இன்று முற்பகல் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். யாழ். உடுவில் மகளிர் கல்லூரியில் கடமையாற்றி வரும் அதிபரை பாடசாலையில் இருந்து விலகிச் செல்லுமாறு பாடசாலையின் இயக்குனர் சபை அறிவித்துள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். http://newsfirst.lk/tamil/2016/09/யாழ்-உடுவில்-மகளிர்-கல்ல/
-
- 6 replies
- 1.1k views
-
-
தேசிய மனித உரிமைகள் நடவடிக்கைகள் தொடர்பான ஒழுங்கமைப்பு குறித்து அமைச்சரவையினால் உருவாக்கப்பட்ட குழுவினால் தற்போது பொதுமக்களின் கருத்துக்கள் கேட்டறியப்படுகின்றன. 2017 தொடக்கம் 2021ஆம் ஆண்டு வரையிலான ஐந்து வருடங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள மனித உரிமைகள் தொடர்பான ஒழுங்கமைப்புகள் திட்டமிடப்படுகின்றன. இதன்பொருட்டு அனைத்து பொதுமக்களிடம் இருந்தும் கருத்துக்களை எதிர்பார்க்கப்படுவதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான பொதுமக்களின் கருத்துக்கள் எதிர்வரும் 14ஆம் திகதி வரையில் ஏற்றுக்கொள்ளப்படும். அத்துடன், வெளிவிவகார அமைச்சின் இணையத்தளத்திலும் இது தொடர்பில் கருத்துக்களை பதிவுசெய்ய ம…
-
- 2 replies
- 451 views
-
-
வடக்கில் இராணுவம் தான் நினைத்தவாறு செய்ய முடியாது. - சி.வி. சீற்றம். இராணுவத்தினர் தாம் நினைத்தவாறு இங்கு செயற்பட முடியாது. என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்து உள்ளார். வடமாகாண சபையின் 61 ஆவது அமர்வு இன்று காலை கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. குறித்த அமர்விலையே முதலமைச்சர் அவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , யாழ்.மாவட்ட கட்டளை தளபதி , யாழ்.மாவட்ட செயலாளருக்கு தாம் சுவீகரிக்க உள்ள காணிகள் தொடர்பில் அறிவித்து உள்ளார். அதன் பிரகாரம் யாழ்.மாவட்ட செயலாளரும் , காணி உரிமையாளருக்கு இராணுவ கட்டளை தளபதி கூறியதன் அடிப்பையில் கடிதம் அன…
-
- 1 reply
- 446 views
-
-
அஸ்மீன் ஆளூநர் பக்கமா ? கூட்டமைப்பு பக்கமா ? சிவாஜிலிங்கம் கேள்வி. வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் அயூப் அஸ்மீன் , வடமாகாண ஆளூநர் பக்கமா ? தமிழ் தேசிய கூட்டமைப்பின் பக்கமா ? என்பதனை தெளிவு படுத்த வேண்டும் என வடமாகான சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சபையில் கோரினார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அஸ்மீனிடம் , சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்தார். அது தொடர்பில் சிவாஜிலிங்கம் மேலும் தெரிவிக்கையில் , …
-
- 1 reply
- 385 views
-
-
கைலாகு கொடுப்பதற்காக வடமாகாண சபை இல்லை - சி.தவராசா கைலாகு கொடுப்பதற்காக வடமாகாண சபை இல்லை என வடமாகாண எதிர்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்து உள்ளார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் நடைபெற்ற போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , யாழ்ப்பணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஐநா செயலாளர் பான் கீ மூனை கைலாகு கொடுத்து விட்டு அனுப்புங்கள் என ஐநா அதிகாரிகள் தெரிவித்ததாக வடமாகாண முதலமைச்சர் தெரிவித்து இருந்தார். இது மாகாண சபையை அவமானப்படுத்தும் செயற்பாடு, அத்தோடு முதலமைச்சருக்கு ஐநா செயலாளரை சந்திக்க ஒதுக்கிய நேரம் 6 நிமிடங்களே அவை காணாது. இன்னமும் கூடிய நேரம் …
-
- 1 reply
- 525 views
-
-
களுத்துறை மாவட்டம் அட்டுலுகமவைச் சேர்ந்த வர்த்தகர் மொஹமட் நஷ்ரீனைத் (35) தேடி ஐந்து விசேட பொலிஸ் குழுக்கள் அமைத்து விசாரணைகள் மற்றும் தேடுதல் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலையிலுள்ள வங்கி ஒன்றில் இடம்பெற்ற தங்க ஏலம் ஒன்றிற்காக சென்றிருந்த குறித்த வர்த்தகருக்கு என்ன நடந்தது என்பது பற்றி தெரியாத நிலையில் அவரது குடும்பத்தினர் மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் தீவிர தேடலில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கந்தளாயிலுள்ள விடுதி ஒன்றில் தங்கியியிருந்த நஷ்ரீனிடம் ஒரு கோடி ரூபா பணம் இருந்ததாகவும், அவர் மற்றும் சிலருடன் அங்கிருந்து ஏலத்திற்காக சென்றதாகவும் குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலைய…
-
- 1 reply
- 422 views
-
-
எவன் கார்ட் தலைவர் நிஸங்க சேனாதிபதி, மேஜர் ஜெனரல் பாலித்த பெர்னாண்டோ கைது எவன் கார்ட் தலைவர் நிஸங்க சேனாதிபதி, மேஜர் ஜெனரல் பாலித்த பெர்னாண்டோ ஆகியோர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். - See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=19061#sthash.WpOmTcUm.dpuf
-
- 2 replies
- 616 views
-
-
யாழ்ப்பாண சாந்தினி வயிறு நிறைய போதைப் பொருளுடன் சென்னையில் கைது http://tamil.oneindia.com/news/tamilnadu/jaffna-woman-carries-rs-2-50-cr-durgs-her-belly-261965.html வயிற்றுக்குள் 2.5 கோடி "போதை".. "அயன்" சாந்தினி அதிரடி கைது! சென்னை: அயன் படத்தில் பார்த்திருப்போம்.. சிறிய டியூப் மாத்திரைக்குள் போதைப் பொருட்களை நிரப்பி அதை வாயில் போட்டு விழுங்கி விடுவார்கள். பிறகு வெளிநாடுகளுக்கு கடத்திச் சென்று அங்கு மலமிளக்கி கொடுத்து வெளியில் எடுப்பார்கள். அதே பாணியில் கொழும்பிலிருந்து போதைப் பொருட்களை கடத்தி வந்த பெண்ணை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கொழும்பு நகரிலிருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று நேற்று மாலை ஆறரை மணிக்கு சென்னை வந்து சேர்ந்தது. அந்த வி…
-
- 8 replies
- 1.4k views
- 1 follower
-
-
விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவரை சித்திரவதை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள வழக்கில் எதிரிகளாக குறிப்பிடப்பட்டுள்ள 8 பொலிஸாரை எதிர்வரும் 22 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இன்று அழைப்பாணை மூலம் உத்தரவிட்டுள்ளார். சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டதாக சந்தேகத்தின்பேரில் கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி கைது செய்யப்பட்ட சிறிஸ்கந்தராசா சுமணன் என்பவரை சித்திரவதைக்கு உட்படுத்தியதாகவே பொலிஸார் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சித்திரவதை சம்பவம் தொடர்பாக விசேட புலனாய்வு பிரிவு பொலிஸாரினால் நடத்தப்பட்ட இறுதி விசாரணைகளின் கோவைகள் சட்டமா அதிபருக்கு சமர்ப…
-
- 0 replies
- 339 views
-
-
யாழ்ப்பாணக் கல்லூரி கிரிக்கட் மைதான கொலை வழக்கு- ஆறு எதிரிகளுக்கு யாழ் மேல் நீதிமன்றம் அழைப்பாணை யாழ்ப்பாணக் கல்லூரி கிரிக்கட் மைதான கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஆறு எதிரிகளையும் யாழ் மேல் நீதிமன்றத்தில் இம்மாதம் 20 ஆம் திகதி ஆஜராகுமாறு நீதிபதி இளஞ்செழியன் அழைப்பாணை மூலம் உத்தரவிட்டுள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையில் வருடாந்தம் நடைபெறுகின்ற கிரிக்கட் போட்டியின்போது மைதானத்தில் வைத்து ஜயரட்னம் தனுஷன் அமலன் என்பவர் கொல்லப்பட்டிருந்தார். இந்தக் கொலைச் சம்பவத்தில் சிவசண்முகநாதன் மதுஷன், இந்திரசீலன் பிருந்தாபன், ரமேஷ்…
-
- 1 reply
- 401 views
-
-
மலேசியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் தாக்கப்பட்டமைக்கு பயங்கரவாதம் காரணம் அல்ல இலங்கையின் அரசியல் வித்தியாசங்களே என மலேசியாவின் உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் Datuk Nur Jazlan Mohamed தெரிவித்துள்ளார் என அந்நாட்டு ஊடகம் செய்திவெளியிட்டுள்ளது. இலங்கையின் அரசியல் நிலைமைகள் காரணமாகவே இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ளதாகவும், இந்த தாக்குதல் இலங்கை பயங்கரவாதத்துடன் தொடர்புடையதல்ல எனவும் அவர்குறிப்பிட்டுள்ளார். கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இலங்கையின் உயர்ஸ்தானிகர் மீதுமேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் நேற்றைய தினம் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும். ஏனெனில் இர…
-
- 0 replies
- 362 views
-
-
மலேரியாவிலிருந்து விடுபட்டது இலங்கை மலேரியா அற்ற நாடு என்ற சான்றிதழை உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு வழங்கியுள்ளது. இதன் ஊடாக இலங்கை உண்மையான குறிப்பிடக்கூடிய இலக்கை எட்டியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிராந்தியப் பணிப்பாளர் வைத்தியர் பூனம் கெத்ரபால் சிங் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் தலைவர்களின் தொலைநோக்கு மற்றும் ஊக்கத்திற்கு சான்றாக இது அமைந்துள்ளதாகவும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நோக்கிய பெரும்பாய்ச்சலாக இதனை கருத முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அடிமட்ட சமூக ஈடுபாட்டின் முக்கியத்துவம் மற்றும் பொதுச் சுகாதார துறையில் வியத்தகு வெற்றியை ஈட்டும் போது அனைத்து சமூகங…
-
- 1 reply
- 461 views
-
-
புங்குடுதீவு மாணவி கொலை , வெகு விரைவில் உண்மை வெளியாகும். - ஊர்காவற்துறை நீதிவான் வவுனியா சிறைச்சாலையில் இருந்து தம்மை யாழ்ப்பாண சிறைசாலைக்கு மாற்றுமாறு புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் சந்தேக நபர்கள் ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிவானிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.ரியாழ் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் போது 12 சந்தேகநபர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அதன் போது குறித்த சந்தேக நபர்களிடம் நீதிவான் ஏதேனும் மன்றில் தெரிவிக்க போகின்றீர்களா ? என வினாவிய போது , ஐந்தாவது சந்தேக நபரான மகாலிங்கம் சசிந்திரன், தாம் தற்போது வவுனியா சிறைச்சாலையில்…
-
- 0 replies
- 397 views
-
-
யாழ்.செயலகத்தில் புதிய கட்டடத்தை திறக்க வருகிறார் பிரதமர் . யாழ். மாவட்டச் செயலக வளாகத்தில் அமைக்கப்பட்ட நான்கு மாடிக் கட்டடம் எதிர்வரும் 17ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் நிதி உதவியில் 78 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு யாழ். மாவட்ட செயலக வளாகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு 4 மாடிக்கட்டடத்தின் கட்டு மானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. தற்போது குறித்த கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இக் கட்டடம் எதிர்வரும்…
-
- 0 replies
- 307 views
-
-
வடக்கில் பலாத்காரமாக புத்தர்சிலை அமைப்பதை ஏற்கமுடியாது.-சுமந்திரன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதாகக் கூறப்படும் விடயத்தை உறுதிப்படுத்துவதற்கான சாட்சிகளைத் தேடுவதற்கு இதுவரை முடியாமல் போயுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 100 பேருக்கு அதிகமானோர் இந்த விஷ ஊசி விடயத்தில் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதும் இதுவரை 5 பேரைக் கூட கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் நேற்று முன்தினம் மலே…
-
- 0 replies
- 405 views
-
-
இராணுவம் குற்றமிழைத்திருந்தால் உண்மையை கண்டறிவதில் தவறில்லை (ப.பன்னீர்செல்வம்) இராணுவம் குற்றமிழைத்திருந்தால் அதன் உண்மைத்தன்மை தொடர்பில் தெரிந்து கொள்ள முயற்சிப்பதில் எவ்விதத் தவறும் கிடையாது எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் அடிப்படைவாதிகளை ஊடுறுவச் செய்தவர் மஹிந்த ராஜபக்ஷவே என்றும் சுட்டிகாட்டியுள்ளார். இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்திருப்பதாவது, உலகிலுள்ள இராணுவத்தினரில் இலங்கை இராணுவம் ஒழுக்க விழுமியங்களை கடைப்பிடிக்கும் இராணுவமாகும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இதன் காரணமாக கடந்த காலங்களில் சமாதான பட…
-
- 1 reply
- 462 views
-
-
பௌத்த விஹாரைகள், சிலைகள் உடைக்கப்படுவதனை தடுக்குமாறு கோரி நீதிமன்றில் வழக்கு பௌத்த விஹாரைகள் மற்றும் சிலைகள் உடைக்கப்படுவதனை தடுக்குமாறு கோரி உச்ச நீதிமன்றில் என்.தர்சன வரதூவகே என்ற சட்டத்தரணி அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். பௌத்த சாசனத்தையும், பௌத்த மதத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாங்குளம் பிரதேசத்தில் பௌத்த சிலை உடைக்கப்பட்டமை உள்ளிட்ட சம்பவங்களின் அடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பௌத்த மத விஹாரைகளுக்கு எதிராக கருத…
-
- 2 replies
- 427 views
-