ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143428 topics in this forum
-
கைதுசெய்யப்பட்ட சிறுவன் 37 இணையத்தளங்களை ஊடுறுவியுள்ளார் ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஊடுறுவி தரவுகளை மாற்றிய குற்றம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 17 வயது பாடசாலை மாணவன் இதற்கு முன்னர் இரண்டு அரச இணையத்தங்கள் உட்பட 37 இணையத்தளங்களை ஊடுறுவியுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். நேற்று (30) மேல் நீதிமன்ற பிரதம நீதவான் கிஹான் பிலபிட்டியவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் இதனை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தொடர்ச்சியாக முன்னெடுத்த சிறப்பு விசாரணைகளின் போது Arrow.lk எனும் பேஸ் புக் கணக்கொன்றின் ஊடாக இலங்கையின் 37 இணையத்தளங்கள் ஊடுருவல் செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டள்ளது. இந்த பேஸ் புக் கண…
-
- 0 replies
- 507 views
-
-
நாட்டின் சுய அடையாளத்தை நிலைநாட்டும் நோக்கில் தனிச் சிங்கள சட்டம் நிறைவேற்றப்பட்டது – சந்திரிக்கா: நாட்டின் சுய அடையாளத்தை நிலைநாட்டும் நோக்கில் தமது தந்தையான முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க தனிச் சிங்கள சட்டத்தை நிறைவேற்றினார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 1956ம் ஆண்டு தனிச் சிங்கள சட்டத்தை தமது தந்தை நிறைவேற்றியமை ஓர் இனவாத செயற்பாடு கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். 450 ஆண்டுகளாக வெளிநாட்டு ஆட்சியாளர்களின் பிடியிலிருந்த இலங்கையின் சுய அடையாளத்தை மீள நிறுவும் நோக்கில் தனிச் சிங்கள சட்டம் நிறைவேற்றப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். சுதந்திரம் பெற்றுக்கொண்டதன் 7…
-
- 26 replies
- 2k views
-
-
'காணிகள் விடுவிக்கப்படாதென ஜனாதிபதி அறிவிக்கவில்லை' -எஸ்.ஜெகநாதன் 'வலிகாமம் வடக்கில் இனிமேல் காணிகள் விடுவிக்கப்படமாட்டாது எனவும் அதற்காக நியாயமான நட்டஈடு பெற்றுக்கொள்ளுமாறும் ஒரு போதும் தான் அறிவிக்கவில்லையென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனிடம் தெரிவித்துள்ளார்' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா கூறினார். இந்த விவகாரம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வலிகாமம் வடக்கில் இன்னமும் உயர்பாதுகாப்பு வலயமாகச் சுமார் 4,400 ஏக்கர் காணிகள் உள்ளன. அவற்றில் 460 ஏக்கர் காணிகள் விரைவில் வி…
-
- 0 replies
- 360 views
-
-
பான் கீ மூன் ஒத்து ஊதுகிறார்: அனந்தி -எஸ்.ஜெகநாதன் இலங்கைக்கு இன்று புதன்கிழமை இரவு வருகைதரவுள்ள, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன், இலங்கை அரசாங்கத்துக்கு ஒத்து ஊதுபவராகவே உள்ளார்' என, வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். இரண்டாவது தடவையாக இன்று விஜயம் செய்யவிருக்கின்ற, பான் கீ மூனின் இலங்கை விஜயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 'இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்துவதை ஊக்கப்படுத்துவதற்கு, பான் கீ மூன் விரும்பவில்லை. அவர், பாதிக்கப்பட்டவர்களைச் சந்திப்பதற்கு…
-
- 0 replies
- 383 views
-
-
வடக்கில் வருடந்தோறும் திரும்புகின்ற நிதியும் மாகாண சபையும்: குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக மு.தமிழ்ச்செல்வன்:- கடந்த வருடம் டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்ட ஒரு தேனீர் விருந்துபசாரத்தின் போது முதலமைச்சர் பின்வரும் ஒரு கருத்தை கூறியிருந்தார். ஆதாவது மாகாண சபையானது நிதியை உரிய காலத்தில் முறையாக செலவு செய்யாது வருட இறுதியில் அவற்றுக்கு பொருட்களை கொள்வனவு செய்து முடிப்பதாகவும் ஆனால் இனிவரும் காலங்களில் அவ்வாறு நடக்காது,நடக்கவும் விட முடியாது என்று தெரிவித்திருந்தார். முதலமைச்சர் மேற்படி கருத்தை கூறி தற்போது ஏழு மாதங்கள் கடந்துவிட்டன. இந்த ஏழு மாதத்தில் ஆதாவது 01-01-2016 தொடக்கம் 3…
-
- 0 replies
- 407 views
-
-
இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை புதன்கிழமை இலங்கை வரும் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை வெள்ளிக்கிழமை சந்திப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சருடன் வடமாகாண அமைச்சர்களும் இந்தச் சந்திப்பில் பங்குகொள்வார்கள். இலங்கைக்கான ஐ.நா வதிவிடப்பிரதிநிதி மைக்கலோலே முதலமைச்சருடன் இன்று காலை தொடர்பு கொண்டு இது தொடர்பாகத் தெரிவித்திருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பான் கீ மூனுக்கும் இடையில் நடைபெறும் பேச்சுக்களையடுத்து, வெள்ளிக்கிழமை நண்பகல் 2.00 மணியளவில் முதலமைச்சருடனான சந்திப்பு இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. பான் கீ மூனின் இலங்கை விஜயத்துக்கான நிகழ்ச்சி நிரலில் முதலமைச்சருடனான சந…
-
- 8 replies
- 1.3k views
- 1 follower
-
-
கிளிநொச்சியில் முன்னாள் போராளி ஒருவர் வீதியில் வைத்து விலங்கிட்டு கைது August 30, 2016 கிளிநொச்சியில் முன்னாள் போராளி ஒருவர் வீதியில் வைத்து விலங்கிட்டு கைது2016-08-30T20:24:11+00:00கிளிநொச்சி செய்திகள் கிளிநொச்சியில் இன்று செவ்வாய் கிழமை பிற்பகல் மூன்று மணியளவில் ஏ9 வீதி 155 கட்டைப் பகுதியில் வைத்து முன்னாள் போராளி ஒருவர் பின் புறமாக விலங்கிட்டு இனந்தெரியாத நபர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலம் தெரியவருவதாவது, நான்கு வருடங்கள் புனர்வாழ்வுப்பெற்று விடுதலையாகியிருந்த முன்னாள் கிளிநொச்சி தொண்டமான்நகரைச் சேர்ந்த மோகனசீலன் நிசாந்தன் வயது 26 என்பரே கைது செய்யப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் மூன்று மணிய…
-
- 4 replies
- 744 views
-
-
50 இலட்சம் பெறுமதியான போதை மருந்து மாத்திரைகள் மீட்பு மத்திய அஞ்சல் பரிமாற்றத்தில் வைத்து 50 இலட்சம் பெறுமதியான போதை மருந்து மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர். இதன் போது 1000 மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட ஒவ்வொரு மாத்திரையினதும் பெறுமதி 4500 தொடக்கம் 5000 வரை என சுங்கப்பிரிவு தகவல்கள் தெரிவித்துள்ளன. குறித்த மாத்திரைகள் அடங்கிய பொதி அஞ்சல் திணைக்களத்தின் ஊழியர் ஒருவரின் பெயருக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/10792
-
- 0 replies
- 351 views
-
-
அரசின் காணாமல் போனோர் அலுவலக சட்டமூலத்தில் சாட்சிகளுக்கு பாதுகாப்பில்லை - அனந்தி சசிதரன் (லியோ நிரோஷ தர்ஷன்) காணாமல் போனவர்கள் அலுவலகம் தொடர்பான அரசாங்கத்தின் சட்டமூலத்தில் சாட்சிகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கப்படவில்லை என தெரிவித்த வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், உண்மைகளை கண்டறியவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமாயின் சர்வதேச மத்தியஸ்தம் அரசின் பொறுப்புக்கூறும் கடப்பாட்டு பொறிமுறைக்கு அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினத்தை முன்னிட்டு இலங்கை மன்ற கல்லூரியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே வட மாகாண சபை உறுப்பினர் …
-
- 0 replies
- 360 views
-
-
குவிவு வில்லைகள் உடைப்பு யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் இந்துக் கல்லூரிக்கு முன்பாகவும் மற்றும் நாவலர் வீதி பாப்பையா கடைச் சந்தி ஆகியவற்றில் அமைக்கப்பட்ட குவிவு வில்லைகள் இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டுள்ளன. யாழ்.மாநகர சபைக்குட்பட்ட வீதிச் சந்திகளில் குவிவு வில்லைகள் பொருத்தும் நடவடிக்கைகள் யாழ்ப்பாணம் மாநகர சபையால் மேற்கொள்ளப்பட்டது. கே.கே.எஸ் வீதியும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வீதியும் சந்திக்கும் சந்தி, கஸ்தூரியார் வீதியும், கன்னாதிட்டி வீதியும் சந்திக்கும் சந்தி, கஸ்தூரியார் வீதியும் அரசடி வீதியும் சந்திக்கும் சந்தி, கோவில் வீதியும் ஆஸ்பத்திரி வீதியும் சந்திக்கும் சந்தி, மடத்தடி வீதியும் திருக்குடும்ப கன்னியர்மட வீதியும் சந…
-
- 3 replies
- 766 views
-
-
இனப்பாகுபாடுகளை கையாள்வதில் இலங்கை முன்னேற்றம் (லியோ நிரோஷ தர்ஷன்) சகல விதமான இனப்பாகுபாடுகளை கையாள்வதில் இலங்கை அண்மைக்காலமாக சாதகமான முன்னேற்றங்களை வெளிப்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் இனப்பாகுபாட்டை ஒழிப்பது தொடர்பான குழு தெரிவித்துள்ளது. கடந்த 2 ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரையிலான அமர்வின் போது கிறீஸ், பிரித்தானியா, பரகுவே, தென்னாபிரிக்கா, லெபனான், உக்ரேன், இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் அனைத்துவிதமான இன பாகுபாடுகளை ஒழிப்பதற்கான சர்வதேச சாசனத்தின் முன்னெடுப்புகள் குறித்து அராயப்பட்டது. இதன்போதே இலங்கை தொடர்பில் குறிப்பிட்டளவில் முன்னேற்றங்களை கண்டறிந்துள்ளதாக அந்த குழு தெரிவித்துள்ளது. அன…
-
- 4 replies
- 664 views
-
-
விபத்தில் வைத்தியர் உயிரிழப்பு - செல்வநாயகம் கபிலன் கோப்பாய் சந்தியில் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்பாக திங்கட்கிழமை (29) இரவு இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.கஹந்தவெல தெரிவித்தார். கரவெட்டி, கிழவன் தோட்டம் பகுதியைச் சேர்ந்த தங்கராசா செந்துருவன் (வயது 37) என்பவரே உயிரிழந்தார். இரவுக் கடமை நிமித்தம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குச் சென்று கொண்டிருந்த மேற்படி வைத்தியர், எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை நிரப்பிவிட்டு பிரதான வீதிக்கு நுழைய முற்பட்டுள்ளார். இதேநேரம் யாழ்ப்பாணத்தி…
-
- 1 reply
- 587 views
-
-
நல்லூர் தேரை முன்னிட்டு வரபிரசாதம் யாழ்ப்பாணம், நல்லூர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, தெற்கிலிருந்து அங்கு செல்லும் பக்தர்களுக்காக, யாழ்ப்பாணத்துக்கு பயணிக்கும் ரயில்களில் குளிரூட்டப்பட்ட மூன்று பெட்டிகளை இணைப்பதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுது;துள்ளது. நாளை(30), நாளை மறுதினம் (31) மற்றும் (01) ஆம் திகதி ஆகிய மூன்று தினங்களுக்கே இச்சேவை நடத்தப்படவுள்ளது. அதனடிப்படையில், நாளாந்தம் கல்கிஸை ரயில் நிலையத்திலிருந்து காங்கேசன்துறை ரயில் நிலையம் வரை நாளாந்தம் பயணிக்கும் 4021ஆம் இலக்கத்தை கொண்ட நகரங்களுக்கிடையிலான இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் முதலாம் வகுப்பில் குளிரூட்டப்பட்ட 3 பெட்டிக…
-
- 2 replies
- 522 views
-
-
தேடித்தரவும் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடித்தருமாறு கோரி மட்டக்களப்பு நகரிலுள்ள காந்தி பூங்காவுக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறவினர்களின் ஏற்பாட்டில் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. (படப்பிடிப்பு: எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா) - See more at: http://www.tamilmirror.lk/180745/த-ட-த-தரவ-ம-#sthash.PZnOKiKK.dpuf
-
- 0 replies
- 432 views
-
-
இலங்கை பிரஜைகள் நாட்டில் எவ்விடத்திலும் வாழ உரிமையுண்டு இலங்கை பிரஜைகள் அனைவரும் நாட்டில் தமக்கு விரும்பிய எந்தவொரு இடத்திலும் வசிப்பதற்கும், வாழ்வதற்குமான உரிமை இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சில இனவாதிகளின் இனவாத கருத்துகளுக்கு பதில் தர வேண்டிய அவசியம் இல்லை என்றும் தேரர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்து வரும் கருத்துக்கள் தொடர்பில் தேரர் கருத்து வெளியிட்டுள்ளார். வெளிமாவட்டங்களில் இருந்து வடக்கில் குடியேறுபவர்களுக்கு தாம் எதிர்ப்பினை வெளியிடுவதாக சிவாஜிலிங்…
-
- 0 replies
- 404 views
-
-
'வெளிச்சவீடுகள் தொல்லியல் சின்னமல்ல' -எம்.றொசாந்த் 'கடற்கரையில் அமைக்கப்பட்டிருக்கும் கலங்கரை விளக்குகள் என அழைக்கப்படும் வெளிச்சவீடுகள், தொல்லியன் சின்னம் இல்லை' என சட்டத்தரணி ஸ்ரீகாந்தா, ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை (29) தெரிவித்தார். அனலைதீவு பகுதியில் அமைந்துள்ள வெளிச்சவீட்டில் மேற்பகுதியில் அமைக்கப்பட்ட இடிதாங்கியில் பொருத்தப்பட்டிருந்த செப்புக் கம்பிகளை திருடிய ஐந்து பேர் தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில், நீதவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் 5 சந்தேகநபர்களையும் விடுதலை செய்யுமாறு கோ…
-
- 0 replies
- 559 views
-
-
சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாமில் எனட் டிக்சன் யாழ். குடாநாட்டுக்கு நேற்றைய தினம் சென்ற உலக வங்கியின் தெற்காசிய வலயத்திற்கான உப தலைவர் எனட் டிக்சன் தலைமையிலான குழுவினர், மருதனார்மடம் சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாமுக்கு விஜயம் செய்து, அங்கிருந்த மக்களை சந்தித்துள்ளனர். இதன்போது அம் மக்களுடைய வாழ்க்கைத் தரம், உட்கட்டுமான வசதிகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளதுடன், மக்களின் பிரச்சினைகளை மக்களிடமே நேரடியாக கேட்டு அறிந்து கொண்டுள்ளனர். இச் சந்தர்ப்பத்தில், 27 வருடங்களாக பல்வேறு விதமான அவலங்களுக்கு மத்தியில் நிரந்தர தொழில் மற்றும் வாழ்வாதார உதவிகள் இல்லாமல் வாழ்ந்து வருவதாக மக்கள் உலக வங்கியின் அதிகாரிகளிடம் எடுத்துரைத்துள்ளனர். அத்துடன், தங்களுடைய நிலங்களை மீ…
-
- 0 replies
- 452 views
-
-
வடக்கின் கல்விக்காக ஒதுக்கப்பட்ட பல மில்லியன் ரூபாய்கள்? மீண்டும் மத்திக்கு திரும்பியுள்ளன: ஆளுநர்: முதலமைச்சர், மாகாண கல்வி அமைச்சர், மாகாண சபையினர், கூட்டமைப்பினர் பதில் சொல்வார்களா? கிளிநொச்சிக்கு வருகைதந்த வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே இன்று ஒரு மணியளவில் கிளிநொச்சி பொதுச்சந்தக்கும் கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் நீண்டகாலத்திற்கு முன் கட்டி முடிக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையம் என்பவற்றிற்கும் சென்று நிலைமைகளை நேரில் பார்வையிட்டுள்ளார் இதன் போது கருத்துத் தெரிவித்த அவர் “ நான் ஒரு அமைச்சர் கிடையாது நான் ஒரு ஆளுநர் எனவே நான் ஜனாதிபதியின் ஒரு தூதுவராகத்தான் இங்கு வந்துள்ளேன். இங்குள்ள நிலைமைகளை நான் அவரிற்கு கட்டாயம் …
-
- 1 reply
- 318 views
-
-
பிரபாகரன் தொடர்பில் காணாமல் போனோர் அலுவலகத்தில் முறைப்பாடு விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் உறவினர்கள் கேட்டுக்கொண்டால், காணாமல் போனோர் தொடர்பில் தேடியறியும் அலுவலகத்தில் பிரபாகரன் தொடர்பில் முறைப்பாடு முன்வைப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வானொலி ஒன்றுக்கு இதனை தெரிவித்துள்ளார். எந்தவொரு பிரஜைக்கும் இந்த அலுவலகத்தில் முறைப்பாடு செய்யமுடியும். அரசாங்கத்துக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் காணாமல் போனோர் குறித்து தெரியப்படுத்துவதற்காக முறைப்பாடுகளை செய்யுமா று கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். - See more at: http://w…
-
- 2 replies
- 586 views
-
-
கொழும்பு துறைமுகத்தில் அமெரிக்க போர்க்கப்பல் அமெரிக்கக் கடற்படையின் நீர்மூழ்கிகளுக்கான உதவி மற்றும் விநியோகக் கப்பலான, யு.எஸ்.எஸ் பிராங்க் கேபிள் நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. நான்கு நாள் பயணமாக கொழும்பு வந்துள்ள அமெரிக்க கப்ப லுக்கு கடற்படையினர் நேற்று பாரம்பரிய முறைப்படி வர வேற்பு அளித்தனர். யு.எஸ்.எஸ் பிராங்க் கேபிள் கப்பலின் கட்டளை அதிகாரியான கப்டன் ட்ரூ சென். ஜோன், இலங்கை கடற்படையின் மேற்குப் பிராந்தியத் தலைமையகத்துக்குச் சென்று, பிராந்திய கடற்ப டைத் தளபதி கொமடோர் சேனாரத்தை சந்தித்துப் பேச்சு நடத்தினார். கொழும்பில் தரித்திருக்கும் காலப்பகுதியில், யு.எஸ்.எஸ் …
-
- 0 replies
- 295 views
-
-
வவுனியா நகரசபை செயலாளராக தமிழரல்லாத ஒருவரை நியமிக்க திரைமறைவில் முயற்சிகள் நடைபெற்று வருவதாக தெரியவருகின்றது. இதற்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனும் துணைபோவதாக சந்தேசம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழர்கள் செறிந்து வாழும் வவுனியாவில் தற்போது நகரசபை செயலாளராக தமிழர் ஒருவரே நியமிக்கப்பட்டிருக்கின்றார். அவரை அப்பதவியிலிருந்து அகற்றி தமிழரல்லாத சிங்கள அல்லது முஸ்லிம் நபர் ஒருவரை நியமிக்க திரைமறைவில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் விடுதிகளுடன் கூடிய மூன்று மாடிகளைக் கொண்ட சத்திரசிகிச்சை வைத்தியசாலை ஒன்றை வவுனியா போதனா வைத்தியசாலை அருகில் அமைப்பதற்காக நகரசபையிடம் …
-
- 2 replies
- 419 views
-
-
இராணுவம் மக்களுக்கு நன்மைசெய்யவேண்டிய அவசியம் இல்லை. இராணுவம் மக்களுடன் இணைந்து சேவைசெய்யத் தொடங்கினால் அங்கே ஒழுக்கம் பாதிக்கப்படும். இராணுவம் என்பது நீதிபதிகளைப் போல் ஒதுங்கி இருக்கவேண்டும். அதைவிடுத்து மக்களுடன் இணைந்து வேலைசெய்யத் தொடங்கினால் பிரச்சனைகளே உருவாகும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்ட சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, வலிகாமம் வடக்கு பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் வசித்து சொந்த வீடு இல்லாத மக்களுக்கு கீரிமலைப் பிரதேசத்தில் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் வீட்டுத் திட்டத்தைப் பார்வையிட்டபின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், படைய…
-
- 1 reply
- 600 views
-
-
கடந்தகாலத்தில் இடம்பெற்ற பல கொலைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுடன் ஈபிடிபிக்கு தொடர்பு? அற்புதன் நடராஜன் மற்றும் மகேஸ்வரி உட்பட யாழில் நடைபெற்ற முக்கிய கொலைகளுடன் ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் உறுப்பினர்கள் பலர் சம்பந்தப்பட்டுள்ளதாக, அக் கட்சியின் நீண்டகால உறுப்பினராக இருந்த, சு.பொன்னையா தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். கடந்த 1990ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த உறுப்பினராக தான் கடமையாற்றியதாகவும், தனக்கு வழங்கப்பட்ட சம்பளத்திலும் மோசடி செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவ…
-
- 3 replies
- 570 views
-
-
ஐ.நா செயலரை சந்திக்க விக்கியை அழைக்கிறார் சம்பந்தன் இலங்கைக்கு விஜயம் செய்யும் ஐ.நா செயலாளர் பான் கீ மூன், தமிழ் தேசியக் கூட்ட மைப்புடன் சந்திப்பினை நடத்தவுள்ள நிலையில், அந்த சந்திப்பில் தன்னையும் கலந்து கொள்ளுமாறு கூட்டமைப்பிடமிருந்து அழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளதாக, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். யாழ்பாணத்தில் இன்று (திங்கட்கிழமை) ஊடகவியலார்களிடம் கருத்து தெரிவிக்கையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஐ.நா செயலாளர் பான் கீ மூன் இலங்கை விஜயத்தின் போது, வடமாகாண முதலமைச்சரை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படாத நிலையில், தமிழ் தேசியக் கூட…
-
- 1 reply
- 457 views
-
-
அசையக்கூடிய சமச்சீரான பக்க குழாய்கள் கொண்ட தூவல் நீர்பாசனத் தொகுதி; யாழ். இளைஞர்கள் கண்டுபிடிப்பு (பாறுக் ஷிஹான்) நீரை சிக்கனமாக பயன்படுத்தி வெற்றிகரமாக எவ்வாறு விவசாயம் செய்யலாம் என்பதே இன்று இலங்கையில் விவசாயிகள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாக காணப்படுகின்றது. அதற்கு சிறந்ததொரு தீர்வாக அமைந்ததே “அசையும் தூவல் நீர்ப்பாசனத்” தொகுதியாகும். நுண் நீர்ப்பாசன முறைகளில் மிகவும் உன்னதமான “அசையக் கூடிய சமச்சீரான பக்க குழாய்களைக் கொண்ட தூவல் நீர்ப்பாசனத் தொகுதி” ஒன்றை இலங்கை விவசாயத் திணைக்களத்…
-
- 1 reply
- 478 views
-