Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மருதங்கேணி பாலம் உடைப்பெடுக்கும் அபாயம்; மக்களுக்கு எச்சரிக்கை! வட தமிழீழம் :- யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் அமைந்துள்ள பாலம் உடைப்பெடுக்கும் அபாய நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினாலே குறித்த பாலம் உடைப்பெடுக்கும் அபாயம் உருவாகியுள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிரதான பாதையாக ஏ- 9 வீதிக்கு செல்கின்ற பாதையிலே குறித்த பாலம் அமைந்துள்ளதால் போக்குவரத்து முடங்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. பாலம் உடையக்கூடிய நிலைக்கு காரணமாக குறித்த இப்பாதை ஊடாக அதிக எடை க…

  2. எஸ்.என்.எம்.சுஹைல் ஐரோப்­பி­யரால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட பின்னர் இலங்­கையில் இலங்கை அர­சியல் நிர்­வாக முறைமை அறி­மு­க­மா­னது. 1505 இல் போர்­க்­கீசர் இலங்­கையின் கரை­யோ­ரங்­களை கைப்­பற்­றினர், அவர்­க­ளி­ட­மி­ருந்து 1658 இல் ஒல்­லாந்தர் இலங்­கையின் கரை­யோரப் பகு­தி­களை ஆக்­கி­ர­மித்­துக்­கொண்­டனர். இவர்கள் இந்­நாட்டை ஆக்­கி­ர­மித்த போது நாட்டில் பல்­வேறு நிர்­வாக முறைமை இருந்­து­வந்­தது. குறிப்­பாக கண்டி இரா­ஜியம் வலு­வான அர­சாக இருந்­தது. எனினும் 1796 இலங்­கைக்கு படை­யெ­டுத்த பிரித்­தா­னியர் 1815 இல் முழு இலங்­கை­யையும் கைப்­பற்றி ஒரே நிர்­வா­கத்தின் கீழ் கொண்டு வந்­தனர். கால­னித்­து­வத்தின் வரு­கை­க்கு முன்­னரும் பின்பும் இலங்­கையின் ஆட்­சியில் முஸ்­லிம்கள் பங்­…

  3. 29 NOV, 2024 | 08:18 PM வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சின் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினரால் முதற்கட்டமாக ரூபா 12 மில்லியன் நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார். மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினரால், பிரதேச செயலக ரீதியாக பாதுகாப்பு நிலையத்தில் தங்கியுள்ளவர்களுக்கான சமைத்த உணவு மற்றும் உலர் உணவு என்பவற்றுக்காக ரூபா.11 மில்லியனும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் அவசர திருத்தப் பணிகளுக்காக ரூபா 1 மில்லியனும் விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/200029

  4. சீன நிதியுதவியின் கீழ் இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட பாரிய திட்டங்களை வெள்ளை யானைகள் என சிலர் குற்றம் சுமத்திய போதிலும், அந்த திட்டங்கள் அனைத்தும் முன்னாள் அரசாங்கங்களின் கோரிக்கைக்கு அமைவாகவே நிர்மாணிக்கப்பட்டவையாகும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார். ஊடக நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பிலேயே தூதுவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் நேற்று (28) பிற்பகல் ஊடகப் பிரதிநிதிகள் குழுவுடன் இணைந்து சீன நிதியுதவியின் கீழ் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து கலந்துரையாடினார். இதன்போது, இலங்கை தரப்பு மோசமான முறையில் நடவடிக்கைகளை மேற்கொண்டதால் சில திட்டங்கள் உரிய ம…

  5. 29 NOV, 2024 | 08:11 PM ஜப்பானிய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 8.4 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்கள் மற்றும் உபகரணங்கள் இன்று வெள்ளிக்கிழமை (29) கட்டுநாயக்க விமான நிலைய தங்கப் பாதை முனையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் விமான நிலைய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டன. இந்த நன்கொடைகளில் ஆம்புலன்ஸ்கள், குப்பை வண்டிகள், சுயமாக ஏற்றும் குப்பைத் தொட்டிகள், சமீபத்திய C-2 தொழில்நுட்ப பயணிகள் பேக்கேஜ் ஸ்கேனர்கள், கழிப்பறை அமைப்புகள், மருத்துவ உபகரணங்கள், குடிவரவு அதிகாரிகளுக்கான மின்னணு குடியேற்ற உபகரணங்கள் (எலக்ட்ரானிக் கேட்), பாஸ்போர்ட் ஸ்கேனர்கள் மற்றும் டிஜிட்டல் போர்டுகள் என்பன காணப்பட்டன. இதன்போது, இலங்கைக்கான ஜப்பானிய பிர…

  6. பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் ஓய்வூதியம் மற்றும் வரியில்லா வாகன அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.. இதேவேளை, தற்போது அமைச்சுக்களுக்குச் சொந்தமான 150 சொகுசு வாகனங்களை விற்பனை செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு V8 மற்றும் Montero போன்ற சொகுசு வாகனங்களை வழங்குவதில்லை எனவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான உண்மைகளை மீளாய்வு செய்த பின்னரே, இது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்றும் அதே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எம்.பி.க்களுக்கு துப்பாக்கி மற்ற…

  7. வடக்கில் பாதுகாப்புப் படைகளின் வசமுள்ள காணிகள், தேசிய மக்கள் சக்தியின் இந்த ஆட்சிக் காலத்தில் விடுவிக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பந் துயகொத்தாவ உறுதியளித்தார். ஜனாதிபதியின் பணிப்புக்கமைய வெள்ள அனர்த்த நிலைமை தொடர்பில் நேரில் பார்வையிட நேற்று யாழ்ப்பாணம் வந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம், வடக்கில் பாதுகாப்புப் படைகளின் வசமுள்ள காணிகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், காணி விடுவிப்பு தொடர்பில் நாம் சிந்தித்து வருகின்றோம். அது தொடர்பில் நாம் மதிப்பீடு செய்துள்ளோம். பாதுகாப்பு மற்றும் ஏனைய காரணங்களின் அடிப்படையில் நாம் சில முடிவ…

  8. 29 Nov, 2024 | 01:56 PM 'வெள்ளை வேன்' குறித்து சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டமை தொடர்பான வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூவரை விடுவிப்பதாக கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி, வெள்ளை வேனில் ஆட்கள் கடத்தப்பட்டமை தொடர்பில் அன்றைய ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன வெளியிட்டார். அதனையடுத்து, ராஜித சேனாரத்ன மற்றும் இருவர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கிலிருந்து தற்போது ராஜித சேனாரத்ன உட்பட மூவரும் கொழும்பு உயர் நீதிமன்றத்த…

  9. 29 Nov, 2024 | 04:41 PM முல்லைத்தீவு கடற்கரையில் சுனாமி எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டுள்ளதாக மக்கள் இன்று (29) பீதியடைந்துள்ளனர். முல்லைத்தீவு பகுதியில் கடற்கரையை அண்மித்த பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை சமிக்ஞைகள் பாெருத்தப்பட்டுள்ளது. அதிலிருந்து இன்று மாலை ஒலி எழுந்துள்ளது. அந்த ஒலி சமிக்ஞையை கேட்ட கடற்கரையை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் சுனாமி பேரலை ஏற்பட்டுள்ளதாக அச்சமடைந்துள்ளனர். இதனையடுத்து, அனர்த்த முகாமைத்துவ பிரிவினர், வட்டுவாகல் கடற்படை தளத்தில் ஒத்திகை பயிற்சி செய்வதாகவும் அப்பயிற்சி வேளையிலேயே இந்த ஒலி எழுப்பப்பட்டுள்ளதாகவும் மக்கள் சுனாமி குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் பொதுமக்களுக்கு…

  10. 29 Nov, 2024 | 05:44 PM (நா.தனுஜா) வடக்கில் அநேக இடங்களில் வெள்ளநீர் வடிந்தோட இடமின்றித் தேங்கி நிற்பதால், அங்கு வாழும் மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் உருவாகியிருப்பதாகவும், எனவே இதற்குத் தீர்வுகாண்பதற்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனிடம் வலியுறுத்தியுள்ளார். நாட்டில் கடந்த ஒருவாரகாலமாக நிலவும் கடும் மழையுடனான சீரற்ற வானிலையாலும், வெள்ளத்தினாலும் வட, கிழக்கு மாகாணங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வடக்கின் வெள்ளப்பேரிடர் பாதிப்பு மற்றும் ப…

  11. ஒலுவில் பாலம் உடைந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு அம்பாறை, ஒலுவில் கழியோடைக்கு அருகில் உள்ள பாலம் உடைந்து விழுந்ததன் காரணமாக அக்கரைப்பற்று-கல்முனை பிரதான போக்குவரத்துப்பாதையின் போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களாக கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அக்கரைப்பற்று-கல்முனை பிரதான வீதியில் ஒலுவலில் கழியோடைக்கு அருகில் உள்ள பாலம் இன்று அதிகாலை இடிந்து வீழ்ந்துள்ளதன் காரணமாக அதன் ஊடான போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளன. வெள்ள நீரோட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரு…

  12. 29 NOV, 2024 | 05:46 PM இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக அமைச்சர் விஜித ஹேரத் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (29) ஆஜராகியுள்ளார். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது அபிவிருத்தி லொத்தர் சபை ஏற்றுக்கொள்ளப்பட்ட விலைமனு கோரல் முறைக்கு மாறாக பல தனியார் நிறுவனங்களுக்கு லொத்தர் ஊக்குவிப்பு பணிகளை ஒப்படைத்து அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தி அதன் முன்னாள் தலைவர் சந்திரவன்ச பதிராஜவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்கு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு தொடர்பில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்திருந்த அமைச்சர் விஜித ஹேரத்தை இன்றைய தினம் சாட்சியமளி…

  13. 28 NOV, 2024 | 08:07 PM (நா.தனுஜா) இரக்கமற்ற வகையில் பயங்கரவாதத்தைக் கட்டமைத்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையோ அல்லது அதன் தலைவரையோ போற்றுவது நாம் முன்நோக்கிப் பயணிப்பதற்கு ஏதுவான வழிமுறையாக அமையாது எனச் சுட்டிக்காட்டியிருக்கும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இனவாதத்தைப் பரப்புவதற்கு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தெற்கின் கடும்போக்கு சக்திகளுக்கு அந்த வாய்ப்பை வழங்குவதைத் தவிர்த்துக்கொள்ளவேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார். மாவீரர் தினத்தை முன்னிட்டு புதன்கிழமை (27) கடும் மழைக்கு மத்தியிலும் வட, கிழக்கு மக்கள் மாவீரர் துயிலும் இல்லங்களுக்குச்சென்று பெரும் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களை நினைவுகூர்ந்தனர். …

  14. Less than a minute wp-content/uploads/2024/11/img_6488-1-780x976.jpg.webp முஸ்லிம்கள் ஒஸாமா பின்லாடனை நினைவுகூர்ந்தால் தலை மிஞ்சாது ! ஆனால் இங்கே பிரபாகரனின் புகைப்படத்தையும் கொடியையும் வைத்து நினைவுகூர்கின்றனர் என பத்தரமுல்ல சீலரத்ன தேரர் குறிப்பிட்டார். மேலும் கருத்து வெளியிட்ட அவர் “ சிவாஜிலிங்கம் உங்களுக்கு ஒரு போதும் இந்த நாட்டை பிடிக்கவும் முடியாது பிடிக்கவும் விடமாட்டோம்” என கூறினார். https://madawalaenews.com/9360.html

  15. 28 NOV, 2024 | 04:29 PM வடிகாலமைப்பு சீரின்மையாலேயே அதிகளவான இடங்களில் வெள்ள நீர் தேங்கிய, பாரிய அளவில் வெள்ள அனர்த்தம் ஏற்படக் காரணமாக அமைந்ததாக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் தொடர்ந்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், உரிய திணைக்களங்கள் வடிகாலமைப்பு விடயத்தில் அதிக கவனத்துடன் செயற்படவேண்டும். வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு வழங்குதல், நிவாரணங்கள் வழங்குதலுடன், தறப்பாள் வழங்கவும் நடவடிக்கை எடுக்குமாறும் இதன்போது தெரிவித்திருந்தார். வவுனியா மாவட்ட செயலகத்தில் அனர்த்த நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக இடம்பெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்க…

  16. உதவிகளை பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்குங்கள் யாழில் 634 பேர் இடைத்தங்கல் முகாமில் யாழ்ப்பாணத்தில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் தொடர்பான கந்துரையாடலானது மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் புதன்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த மாவட்ட செயலர், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி வழங்க முன்வரும் தனியார் தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புக்கள் மற்றும் தனி நபர்கள் உரிய பிரதேச செயலகங்கள் ஊடாக உதவிப் பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இதற்காக பிரதேச செயலகத்தில் …

  17. வடக்கில் பாதுகாப்புப் படைகளின் வசமுள்ள காணிகள், தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக் காலத்தில் விடுவிக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பந் துயகொத்தாவ உறுதியளித்தார். ஜனாதிபதியின் பணிப்புக்கமைய வெள்ள அனர்த்த நிலைமை தொடர்பில் நேரில் பார்வையிட நேற்று யாழ்ப்பாணம் சென்ற பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம், வடக்கில் பாதுகாப்புப் படைகளின் வசமுள்ள காணிகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், காணி விடுவிப்பு தொடர்பில் நாம் சிந்தித்து வருகின்றோம். அது தொடர்பில் நாம் மதிப்பீடு செய்துள்ளோம். பாதுகாப்பு மற்றும் ஏனைய காரணங்களின் அடிப்படையில் நாம் சில முடிவுகளை…

  18. மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்ய முயற்சி: சந்தேகநபர்களுக்கு பிணை மறுப்பு November 29, 2024 2008ஆம் ஆண்டு பொரலஸ்கமுவவில் அப்போதைய அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்ய முயற்சித்த இரண்டு விடுதலைப் புலிகள் சந்தேகநபர்களின் பிணை கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ்.சபுவித்த நேற்று (28) நிராகரித்துள்ளார். சந்தேக நபர்களான “கோஸ்தர்” அல்லது “மோரிஸ்” என அழைக்கப்படும் செல்வராசா கிருபாகரன் மற்றும் “தனுஷ்” என அழைக்கப்படும் தம்பையா பிரகாஷ் ஆகியோர் சுமார் 15 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் சட்ட பிரதிநிதிகளான சுரங்க பண்டார மற்றும் அசித்த விபுலநாயக்க ஆகியோர் பிணை கோரியிருந்தனர். எனினும், சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில்…

  19. 29 NOV, 2024 | 11:43 AM சீனாவின் ஆராய்ச்சி கப்பல் இலங்கைக்குள் நுழைவதற்கு முன்னைய அரசாங்கம் அனுமதி மறுத்ததை தொடர்ந்து சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் பாதிக்கப்பட்டன என தெரிவித்துள்ள இலங்கைக்கான சீன தூதுவர் குய் ஜென்ஹாங் வலுவான உறவுகள் காணப்பட்ட போதிலும், முன்னைய அரசாங்கம் அவ்வாறான நிலைப்பாட்டை எடுத்தமை ஏமாற்றமளிக்கின்ற விடயம் என குறிப்பிட்டுள்ளார். சீன கப்பல்களை மாலைதீவு வரவேற்றது, ஆனால் இலங்கை அதனை நிராகரித்ததும் நாங்கள் ஆச்சரியமடைந்தோம் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/199979

  20. கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 26.11.2024 மற்றும் 27.11.2024 திகதிகளை உள்ளடக்கிய 48 மணி நேரத்தில் 350 மி.மீ.இனை விட கூடுதலாக மழைவீழ்ச்சி கிடைக்கும் வாய்ப்புள்ளது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் தற்போது கிடைத்து வரும் தொடர்ச்சியான மழை காரணமாக நிலம் நிரம்பு நிலையை எட்டியுள்ளது. சில பகுதிகளில் வெள்ள அனர்த்த நிலமைகள் ஏற்பட்டுள்ளன. எனவே கிடைக்கவுள்ள கனமழை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் வெள்ள அனர்த்தத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாக இருப்பது அவசியம். விவசாயிகளும் இக்கனமழையை கருத்தில் கொண்டு தங்களுடைய விவசாய நடவடிக்கைகளில் குறிப்பாக நெற் செய்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது அ…

  21. கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் கூட்டாளர்களைக் கண்டறிதல் மற்றும் முறையான பாலியல் கல்வி இல்லாதது போன்ற காரணங்களால் இளைஞர்களிடையே எச்ஐவி தொற்று அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் பதிவான எச்.ஐ.வி தொற்றுக்களில் 15 சதவீதம் பேர் 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என அந்த திட்டத்தின் இயக்குநர், சமூக சுகாதார நிபுணர் வைத்தியர் விந்தியா குமரிபெலி தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார். “கடந்த ஆண்டு, எச்.வி.ஐ வைரஸால் பாதிக்கப்பட்ட 694 புதிய நோயாளிகள் நம் நாட்டில் பதிவாக…

  22. வைத்தியசாலை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம்! November 29, 2024 07:06 am வடக்கு- கிழக்கில் பணியாற்றிய சுகாதார சேவைகள் திணைக்கள பிரதி பணிப்பாளர் மற்றும் வைத்தியசாலை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, வைத்தியர் ஆர்.முரளிஸ்வரன் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வைத்தியர் ஜி.சுகுணன் மட்டக்களப்பு கல்முனை வடக்கு வைத்தியசாலையின் பணிப்பாளராகவும், வைத்தியர் டி.வினோதன் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும், வைத்தியர் கே.ஜி.சீ.வை.எஸ்.வீ.வீரக்கோன் ஊவா மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும், திருமதி பி.எஸ்.என்.விமலரட்ண கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் தி…

  23. 29 NOV, 2024 | 10:38 AM இலங்கை வெளிசக்திகளின் அழுத்தங்களுக்கு அடிபணியக்கூடாது சுயாதீன வெளிவிவகார கொள்கையை பின்பற்றவேண்டும் என இலங்கைக்கான சீன தூதுவர் குய் ஜென்ஹாங் வேண்டுகோள் விடுத்துள்ளார். குறிப்பாக இலங்கையின் பொருளாதார நிலைமையை சில தரப்பினர் தங்களிற்கு சாதகமாக பயன்படுத்த முயலும்போது இலங்கை சுயாதீன வெளிவிவகார கொள்கையை பின்பற்றவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்கள் சிலருடனான கருத்துபகிர்வின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு வெளிநாடுகளின் உலக நாடுகளின் உதவி அவசியம் என சில உலக நாடுகள் இலங்கைக்கு தெரிவித்துள்ளன என குறிப்பிட்டுள்ள…

  24. இலங்கையின் புகழ்பெற்ற ‘தீகதந்து 1’ யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் பொருத்தப்பட்ட மின்சார வேலியிலிருந்து யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது. 40 – 50 வயதுக்கிடைப்பட்ட இந்த யானை, கலா வெவா மற்றும் கஹல்ல-பல்லகெல்ல காப்புக்காடுகளுக்கு அடிக்கடி வந்து செல்வதாக அறியப்படுகிறது. https://thinakkural.lk/article/312832

  25. சீரற்ற காலநிலை காரணமாக வடமராட்சி பகுதியில் அதிக பாதிப்புக்கு உள்ளான புனிதநகர்ப் பகுதிக்குப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நேற்று திடீர் விஜயம் மேற்கொண்டு கள நிலவரம் தொடர்பில் ஆராய்ந்தார். பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருந்த கற்கோவளம் மெதடிஷ்த மிஷன் அ.த.க.பாடசாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொண்டா வெள்ள நிலைமை தொடர்பில் ஆராய்ந்ததுடன் அப்பகுதி மக்களுடனும் கலந்துரையாடினார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இதன் போது இப்பகுதியில் ஏற்பட்ட இடர்பாடு தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்குத் தான் கொண்டு செல்வதாகப் பொதுமக்களிடம் அவர் உறுதியளித்துள்ளார். https://thinakkural.lk/article/3128…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.