Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நல்லாட்சியில் கூட தமிழ்ப் பகுதிகளுக்கான அரசாங்க நியமனங்கள் முஸ்லிம்களாலும் சிங்களவர்களினாலும் நிரப்பட்டு வருவதாக ஆரையம்பதி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் செயலாளர் எஸ்.மகேந்திரலிங்கம் தெரிவித்தார். நல்லிணக்க பொறிமுறை பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணியின் அமர்வு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'இந்த நாட்டில் நல்லிணக்கம் குறைவதற்கு காரணம் சுதந்திரத்தின் பின் இந்த நாட்டை ஆட்சி செய்த அரச தலைவர்களும், அரசியல் வாதிகளுமே காரணம். நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாயின் செய்த தவறுகள் செய்து கொண்டிருக்குதம் தவறுகள் வெளிப்படுத்தப்பட்டு அற்றுக்கு பரிகாரம் காணப்படல் வேண்டும். கல்லோயாக் கு…

  2. கடந்த வருடம் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகம் இடம்பெற்ற மாவட்டங்களாக கம்பஹா, கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்கள் பதிவாகியுள்ளன. சாய்ந்தமருது சமூக வைத்திய நிலைய வைத்தியர் எம்.ஜே.எம்.ஹஸ்ஸான், இந்தத் தகவலை வெளியிடடுள்ளார். 'சிறுவர்களைப் பாதுகாப்போம்' எனும் தொனிப்பொருளில் இஸ்லாமிய ரிலீப் மற்றும் எம்.எப்.சி.டி முஸ்லிம் அமைப்பு நிறுவனங்களினால் நடத்தப்படும் ஆதரவற்ற பிள்ளைகளின் தாய்மார்களுக்கான கருத்தரங்கு, அட்டாளைச்சேனையில் இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு உரையாற்றுகையில் அவர் மேலும் தெரிவித்ததாவது, 'நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் கடந்த 2015ஆம் ஆண்டு 10,732 முறைப்பாட…

  3. வெள்ளவத்தை மயூரபதி அம்மன் கோயில் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் இராணுவத்தின் முப்படை மற்றும் பொலிஸ் பிரதானிகளுக்கு பாராட்டு விழா ஒன்று நடைபெறவுள்ளது. வெள்ளவத்தை மயூரபதி அம்மன் கோயில் அபிவிருத்தி சபை மற்றும் தேசிய ஐக்கியத்துக்கான மன்றம் ஆகியன இணைந்து இந்த விழாவை நடத்தவுள்ளன. எதிர்வரும் 20ம் திகதி சினமன் லேக் ஹோட்டலின் கிங்ஸ் கோர்ட் மண்டபத்தில் இந்தப் பாராட்டு விழா நடைபெறவுள்ளது. விழாவின் பிரதம அதிதியாக பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி, சிறப்பு அதிதிகளாக முப்படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். குறித்த பாராட்டு விழாவுடன் இணைந்து நடத்தப்படும் இரவுப் போசன விருந்தில் கலந்து கொள்பவர்களுக்கான நுழைவுச்சீட்டுக்கு பத்தாயி…

  4. சமஸ்டி அடிப்படையில் இணைந்த வடக்கு கிழக்கில் எங்களுடைய இறைமையின் அடிப்படையில் பகிரப்படுகின்ற அரச அதிகாரங்களின் மூலமாக ஒரு தீர்வு ஏற்படுத்தப்படவேண்டும் என்பதே தொடர்ச்சியாக நாம் இன்றும் கொண்டுள்ள நிலைப்பாடு அது தொடர்ந்தும் இருக்கும்.முன்னாள் போராளிகளின் மரணம் பாரதூரமான விடயம் எனவும் இதனை இலகுவாக புறக்கணித்து செல்ல முடியாது எனவும் தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது. முன்னாள் போராளிகள் அதிகளவில் மரணிப்பதாக வந்த செய்திகளை மிகவும் தீர்க்கமாக ஆராய்ந்து கொண்டிருப்பதாக தமிழரசுக் கட்சியின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பிருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட…

    • 1 reply
    • 357 views
  5. கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தையில் இனவாதத்துக்கு எதிரான அமைப்பு ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்தை சிங்ஹ லே அமைப்பு குழப்ப முயன்றதால் பதற்றநிலை ஏற்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் சிங்ஹ லே என்ற பதம் எழுதப்பட்ட பதாகையை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஏந்தியிருந்ததாக கூறி சிங்ஹ லே அமைப்பினர் அங்கு வந்து குழப்பத்தை ஏற்படுத்தினர். http://www.seithy.com/breifNews.php?newsID=163619&category=TamilNews&language=tamil

  6. பயங்கரவாத தடைசட்டத்தை நீக்குமாறு அரசாங்கத்திற்கு அமெரிக்கா அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என வடமாகாண சபை கேட்டுக்கொண்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அத்துல் கேஷாப் இன்று பிற்பகல் வட மாகாணசபைக்கு விஐயம் மேற்கொண்டு வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையிலான வடமாகாண சபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்புக்கள் உள்வாங்கப்படவேண்டும். அதனடிப்படையில் தீர்வும் தமிழ் மக்கள் எதிர்பார்ப்பை நினைவேற்றுவதாக அமைய வேண்டும் என அமெரிக்க குழுவிடம் வலியுறுத்தியதாக வட மாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். அத்துடன் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தில் அர…

  7. விடுதலைப்புலிகளின் அரசியல்துறை முன்னாள் ஊடக பேச்சாளரான தயா மாஸ்டர் இன்று மாலை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரச விரோத தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இணைந்து அரசாங்கத்துக்கெதிராக செயற்பட்டார் என குற்றம் சாட்டப்பட்ட இவருக்கு பயங்கரவாத செயற்பாடுகளின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்கு என்பதனால் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி புதிய பிணை நிபந்தனையை வித்தித்திருந்தார். இந் நிலையில் ஒரு இலட்சம் ரூபாய் பொறுமதியான நான்கு அரச உத்தியோகத்தர்களை கொண்ட பிணையிலும் ஐந்து இலட்சம் ரூபாய் காசுப்பிணையிலும் செல்ல நீதிமன்றம் உத்திரவிட்டது. இதேவேளை தயா மாஸ்டர் தினமும் யாழ். பொலிஸ் நிலையத்தில் காலை 9 மணியில் இருந்து 12 மணி வரைக்குள் கையொப்பமிட்வே…

  8. சிறுவயதில் கர்நாடக இசை கற்கும் தனது ஆசை,தாயாரின் அறிவுரையால் நிறைவேறாமல் போனதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.செல்வி சௌதாமினி மோகனசுந்தரம் அவர்களின் சங்கீத அரங்கேற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர்,- நாதப்பிரமமாய் விளங்கும் இறைவனை அடைவதற்கு சிறந்த சாதகம் இசையேயாகும். இசைக்கலை என்பது தமிழர்களின் வாழ்வோடு பின்னிப்பிணைந்தது. இசைக்கு அடிமையாகாதவர்கள் எவருமே இருக்க முடியாது. சிவபெருமானைக் கூட இசையினால் மயக்கினான் இராவணன் என்பது புராண வரலாறு. இறைவன்கூட மயங்குகின்ற இசைக்கு சாதாரண மனிதர்கள் விதிவிலக்காக அமைய முடியாது. கலைகள் என்பன மொழி ரீதியாகவோ, மதங்கள் ரீதியாகவோ அல்லது வேறு குணாதிசயங்கள் ரீதிய…

  9. பொதுமக்களது காணிகளை பிடித்து வைத்திருக்க வேண்டிய எந்தவித அவசியமும் அரசாங்கத்திற்கு இல்லை என்றும்,, காணிகளை அதன் உரிமையாளர்களிடம் கையளிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். தெல்லிப்பளையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். வடக்கிலுள்ள பொதுமக்களுடைய காணிகளை முதலில் இந்திய அமைதிகாக்கும் படையினரும் பின்னர் விடுதலைப் புலிகளும் வேறுபல ஆயுதக் குழுக்களும் பிடித்து வைத்திருந்தனர். தெ அதன் பின்னரே அவை இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. எவ்வாறெனினும் மக்களது காணிகளை உரியவர்களிடம் கையளிக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு உள்ளது. அதற்கு முன்னர…

  10. புலிகளின் தலைவர் - பாலசிங்கம் உறவை பிரித்தது யார்?? 2009இன் பின் மௌனம் கலைக்கும் உண்மைகள்...தமிழரின் போராட்டத்தில் துறைசார் வல்லுனர்களின் நிலை என்ன? புலிகளின் கட்டமைப்பில் இராஜதந்திரிகளைக் கையாழும் விடயம் எப்படி காணப்பட்டது என்பது பற்றி இந்த வார வட்டமேசையில் ஆராயப்பட்டுள்ளது.மேலும், போராட்ட காலத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரன், மதியுரை அறிஞர் பாலசிங்கம் உறவின் விரிசலுக்கு காரணம் யார்? புலிகளின் தலைமையும், மதியுரை அறிஞர் பாலசிங்கமும் இறுதியாக எப்போது கதைத்துள்ளார்கள்? ஆசிய கண்டத்தல் இந்தியாவிற்கு காத்திருக்கும் ஆபத்து, போன்ற பல்வேறு வகையான சிக்கலான வினாக்களுக்கு லங்காசிறியின் அரசியற் களம் வட்ட மேசையில் தமிழ் வரலாற்று ஆசான் மு.திருநாவுக்கரசு ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார். …

    • 0 replies
    • 461 views
  11. தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவராக கருதப்பட்ட மாத்தையா எனப்படும் கோபாலசுவாமி மகேந்திரராஜா இந்திய றோ உளவுப் பிரிவின் உளவாளி என தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில் வெளியாகியுள்ள நூல் ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 1989ம் ஆண்டு முதல் மாத்தையா றோ உளவாளியாக கடமையாற்றியிருந்தார் என நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் நீனா கோபலினால் எழுதி வெளியிடப்பட்டுள்ள 'ராஜீவ் காந்தி' கொலை உன்ற நூலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 1989ம் ஆண்டு முதலே தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிய தகவல்களை வழங்குவதற்காக மாத்தையாவை றோ உளவாளிகள் நியமித்திருந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. …

  12. அடுத்த ஆண்டு உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் மட்டுமன்றி சில மாகாண சபைகளின் தேர்தல்களும் நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுடன் நடத்தப்பட்ட சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் எதிர்வரும் ஆண்டு ஆரம்பத்தில் நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கிழக்கு, சபரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளின் தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் நடைபெறும் என தெரிவித்துள்ளார். …

  13. இலங்கை அகதிகள் இந்தியாவில் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அகதிகள் மனிதர்கள் வாழப் பொருத்தமற்ற சூழ்நிலையில் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை தமிழ் அகதிகள் பெரும் அவலங்களை எதிர்நோக்கி வருவதாகக் குறி;ப்பிடப்படுகிறது. தமிழகத்தின் இரண்டு மாவட்ட ஆட்சியர்கள் இதுபற்றிய தகவல்களை தெரிவித்துள்ளனர். இலங்கை அகதிகள் வாழும் முகாம்களுக்கு சென்றிருந்த போது அவர்கள் மனிதர்கள் வாழப்பொருத்தமற்ற சூழ்நிலையில் வாழ்ந்து வருவதனை காணமுடிந்தது என இந்த இரண்டு மாவட்ட ஆட்சியர்களும் தெரிவித்துள்ளனர். பெருந்தோட்டங்களில் குடியேற்றப்பட்டுள்ள இலங்கை அகதிகள் புற்று நோய் போன்ற பாரிய நோ…

  14. கிளிநொச்சி பரவிப் பாஞ்சானில் இராணுவத்தினரிடம் உள்ள தமதுகாணிகளை விடுவிக்கக் கோரி இரண்டாவது நாளாகவும் இரவு பகலாக தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருப்பதனை செய்தி சேகரிக்கச்சென்ற பிராந்திய செய்தியாளார்கள் நால்வருக்கு இராணுவத்தினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஞாயிறு இரவு எட்டு இருபது மணியளவில் செய்திசேகரிக்கச் சென்ற கிளிநொச்சியின் நான்கு பிராந்திய செய்தியாளர்களை துப்பாக்கியுடன் வந்த இராணுவத்தினர் தம்மை படம் எடுத்ததாக கூறி அச்சுறுத்தியதாக கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் குறித்த ஊடகவியலாளர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது மக்கள் போராட்டம் செய்கின்ற இடத்திற்கு முன்னாள் உள்ள இராணுவ காவலரணில் கடமையில் இருந்த இராணுவத்த…

  15. தனியார் நிறுவனம் ஒன்றின் 125 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளை கொள்வனவு செய்தமை தொடர்பிலான விசாரணைகளுக்காக அவர் இன்று நிதி குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜரானார். இந்தநிலையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதோடு, இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை றக்பி விளையாட்டு வளர்ச்சிக்காக கிரிஷ் குழுவிடம் இருந்து பெற்றுக்கொண்ட 70 மில்லியன் ரூபாய் நிதியினை மோசடி செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கடந்த ஜூலை 11ம் திகதி, பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் நாமல் ராஜபக்ஷ கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து கடந்த 18ம் திகதி அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்ற…

  16. கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன்மீது வடமாகாணசபையின் ஒருங்கிணைப்புத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் ஒலிவாங்கியால் எறிந்து தாக்குதல் நடாத்தியுள்ளார். இத்தாக்குதலில் இரா.சம்பந்தன் காயங்கள் எதுவுமின்றி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலை சாந்தி சிறீஸ்கந்தராசாவுக்கு வழங்கியமை தொடர்பான விவாதம் சர்ச்சையாக மாறி அந்தப் பதவி பேராசியரியர் சிற்றம்பலத்துக்கோ அல்லது பொருத்தமான நபருக்கோ வழங்கப்பட்டிருக்கவேண்டுமென வாதிட்டுக்கொண்டிருந்த அன்ரனி ஜெகநாதன் ஒருகட்டத்தில் கோபமடைந்து ஒலிவாங்கியை ச…

  17. Views - 53 தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய பொங்கு தமிழ் எழுச்சிக்கு ஒப்பான பாரிய மக்கள் போராட்டம் ஒன்றை, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதியன்று, கிளிநொச்சி மாவட்டத்தில் ஆரம்பித்து, 9ஆம் திகதியன்று யாழ். மாவட்டத்திலும் தொடர்ச்சியாக வடக்கு, கிழக்கின் சகல மாவட்டங்களிலும் நடத்துவதற்கு, தமிழ் மக்கள் பேரவை மற்றும் அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள் என்பன, கூட்டாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. தமிழ் மக்கள் பேரவை, ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், டெலோ மற்றும் சர்வமத அமைப்புக்கள், கடற்றொழிலாளர் அமைப்புக்கள், காணாமற் போனவர்களின் உறவினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக ஆசிரியர்கள், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆகியோர் கூட்டாக இணைந்து நடத்திய கலந்துரையாடலொன்று, யாழ்…

    • 0 replies
    • 511 views
  18. வண்டிலுக்கு முன்னால் கட்டவேண்டிய மாட்டினை வண்டிலுக்குப் பின்னால் கட்டி முதலில் நல்லிணக்கம் தான் பின்னரே இனப்பிரச்சனைக்குத் தீர்வு என்பதுபோல் இந்த அரசாங்கம் தனக்குத்தானே நல்லாட்சி என பெயர் சூட்டியுள்ளது. இந்த அரசாங்கத்திற்குப் பின்னால் நம்மவர்களில் சிலர் இழுபட்டுச் செல்வது வேதனைக்குரியதே என வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனப் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் சிறீலங்கா இராணுவத்தின் கிபிர் விமானத்தின் குண்டுவீச்சுத் தாக்குதலில் 61 மாணவிகள் படுகொலை செய்யப்பட்ட நினைவு நிகழ்வில் உரையாற்றும்போதே இவ்வாறு http://thuliyam.com/?p=37807

    • 0 replies
    • 317 views
  19. கிளாலி, சபரிபுரம் தோட்ட காட்டுக்குள் நேற்றுமுன்தினம் சென்ற ஒருவர் வெடிபொருளில் சிக்கி உயிரிழந்த நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பளைப் பொலிஸார் தெரிவித்தனர். கிளாலியைச் சேர்ந்த பத்திநாதன் சுதாகரன் (வயது 39) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வெடிபொருட்கள் அபாயமுள்ள மேற்படி பகுதியில் இன்னமும் மக்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் மேற்படி நபர் குறித்தப் பகுதிக்குள் சென்றுள்ளார். இவரைக் காணவில்லையென அவரது மனைவி கடந்த 13ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு தேடுதல் பணியில் களமிறங்கியிருந்த பொலிஸார் அவருடைய சடலத்தை மீட்டனர். வெடிபொ…

  20. கனடாவிலிருந்து ஒலிபரப்பாகும் பிரபல தமிழ்த்தொலைக்காட்சி விவாத நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அரசியல் விமர்சகர் நேரு குணரட்னம் அவர்கள் பல கேள்விகளை எழுப்பியிருந்தார். குறிப்பாக, நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்னர் பாதுகாப்புக்காக அரசாங்கம் ஒதுக்கிய நிதி 31,120கோடி. இந்த நிதியானது ராஜபக்ஷ காலத்தில் பாதுகாப்புக்காக ஒதுக்கிய நிதியைவிட 25 வீதம் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. என்ன காரணத்துக்காக இவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது? மேலும் வடக்குக் கிழக்கு புனரமைப்புக்காக 350கோடி ஒதுக்கிய அரசாங்கம் மகாவலி அபிவிருத்திக்கு 6000கோடிரூபா ஒதுக்கியுள்ளதோடு வஜம்ப அபிவிருத்தி திட்ட வேலைக்காக மேலும் 2000கோடி ரூபா நிதியும் இவ்வாண்டு வரவுசெலவுத்திட்டத்திற்கு ஒதுக்கியிருப்பதாகவும…

  21. நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தில் முக்கால்வாசி பகுதியை நானே முடிவுக்கு கொண்டு வந்தேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். எனினும் மீதமான ஒரு பகுதியையே மாத்திரமே மஹிந்த ராஜபக்ஸ முடித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமது ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட யுத்த தளபாடங்களைக் கொண்டே யுத்தத்தை இலகுவாக வெற்றிக்கொண்டதாகவும் அவர் குறிபிட்டுள்ளார். மீரிகம பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய 6 தாக்குதல் விமானங்களை கொண்டு வந்ததாகவும், குறித்த 6 விமானங்களும் அழிவடைந்து விட்டதாகவும், அவை அன…

  22. தமிழ் மக்களின் பிரதேசங்களில் சிங்கள மயமாக்கல் மற்றும் பௌத்த சின்னங்களை அமைப்பதனை எதிர்த்து எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 09ம் திகதி யாழ்ப்பாணத்தில் மாபெரும் எழுச்சிப் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது என, ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். தமிழ் அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள், பொது மக்கள், பல்கலைக்கழக சமூகத்தினர், சமூகவியலாளர்கள் ஒன்றிணைந்து இராணுவ மயமாக்கல் மற்றும் பௌத்தமத சின்னங்கள் அமைக்கப்படுவது தொடர்பாக, யாழ். பொதுநூலகத்தில் இன்று கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் அவர் இந்தத் தகவலை வெளியிட்டார். மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்படாது, மக்களின் காணிகளை இராணுவத்தி…

  23. கண்டி நகரில் வர்த்தக கட்டிடத் தொகுதி ஒன்றில் உள்ள ஆடை விற்பனை நிலையத்தில் ஆடை தொகையில் இருந்த விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படம் அச்சிடப்பட்ட டீ சேர்ட் கைப்பற்றப்பட்டுள்ளது. பிரபாகரனின் படத்துடன் தமிழீழ நாட்டின் வரைப்படமும் அந்த டீ சேர்ட்டில் அச்சிடப்பட்டிருந்ததாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். விற்பனைக்காக கொள்வனவு செய்த ஆடைகள் அடங்கிய பொதியை திறந்து பார்த்த போது இந்த டீ சேர்ட் அதில் இருந்துள்ளது. இதனையடுத்து விற்பனை நிலையத்தின் உரிமையாளர் இது குறித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து ஆடைகளை அனுப்பி வைத்த நபரிடம் விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். http://www.tamil…

  24. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானத்தில் நேற்றிரவு முன் அறிவிப்பின்றி விமானம் ஒன்று தரையிறக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 19 அமெரிக்க படையினர் மற்றும் ஒரு அதிகாரி வந்திறங்கியதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு தாஜ்சமுத்ரா ஹொட்டலில் தங்கியிருக்கும் இவர்கள், சுகாதார முகாம் ஒன்றுக்காக வந்துள்ளதாக கூறியுள்ளனர். எனினும் இவர்கள் வடக்கு மாகாணத்தில் இராணுவ முகாம்கள் அகற்றப்படுவது மற்றும் மாகாணத்தில் இராணுவத்தின் பலம் பரந்துள்ள விதம் குறித்து ஆராயவுள்ளதாக கூறப்படுகிறது. http://www.tamilwin.com/statements/01/114174

  25. யாழ். - கொழும்பு இடையே பயணிக்கும் ரயில்கள் மீது தொடர்ந்து கல்லெறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதையடுத்து ரயில்களில் ஆயுதம் தாங்கிய காவலர்கள் பணிகளில்ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். கடந்த வெள்ளிக்கிழமையும் தாக்குதல் நடத்தப்பட்டமையை அடுத்து நேற்றுஆயுதம் தாங்கிய காவலர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். அண்மையில் வவுனியாவை நோக்கிச் சென்ற ரயில் ஒன்றின் மீது ஒருகொடவத்தையில் வைத்து நடத்தப்பட்ட கல்லெறித் தாக்குதலின்போது அநுராதபுரத்தை சேர்ந்த கல்வித் திணைக்கள அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். திட்டமிட்ட அடிப்படையில் இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக ரயில்வே கட்டுப்பாட்டுத் திணைக்களம் சந்தேகம் வெளியிட்டுள்ளது. இதனையடுத்து தூரச்செல்லும் ரயைில்களுக்கு ஆயுதங்களுடன் கூடிய…

    • 1 reply
    • 538 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.