ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143429 topics in this forum
-
இனப்படுகொலைக்கு நீதி கேட்டும் - சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள பௌத்த மயமாக்கலை எதிர்த்தும்- தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும்- மீள்குடியேற்றத்தைத் துரிதப்படுத்தக் கோரியும்- நீதிக்கான நீண்ட நடை பயணத்திற்கான அழைப்பை கிளிநொச்சி கிராம மற்றும் மாதர் அபிவிருத்திச் சங்கங்களின் சமாசமும் பொது அமைப்புக்களின் ஒன்றியமும் இணைந்து விடுத்துள்ளன. எதிர்வரும் 22 ஆம் திகதி காலை 8.00 மணிக்கு ஆனையிறவில் ஆரம்பிக்கின்ற நடைபவனி கிளிநொச்சி வலயக் கல்விப் பணிமனை முன்பாக உள்ள ஐ.நா செயலகத்தைச் சென்றடையவுள்ளது. தமிழர் தாயக்தின் நயினாதீவில் 60 அடி புத்தர் சிலை வைக்கப்பட்டமை, கொக்கிளாய் கருநாட்டுக்கேணி விநா…
-
- 0 replies
- 404 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக, கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இன்று மாலை 4 மணியளவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மக்கள் கலந்துரையாடல் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன், சுரேஷ் பிரேமசந்திரன், மு.சந்திரகுமார் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். http://www.seithy.com/breifNews.php?newsID=163506&category=TamilNews&langua…
-
- 0 replies
- 605 views
-
-
புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளுக்கு மருத்துவ பரிசோதனை - எம்.றொசாந்த் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட விடுதலை புலிகளின் முன்னாள் போராளிகளை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துவது தொடர்பாக வடமாகாண சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்ற போதே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது. புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பலர் நோய்வாய்ப்படுவதாகவும், மர்மமான முறையில் மரணமடைவதாகவும், மக்கள் மத்தியில் பலத்த சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே புனர்வாழ்வளிக்கப்பட்டு, விட…
-
- 6 replies
- 790 views
-
-
தமிழர்களை இனச்சுத்திகரிப்பு செய்வதற்கான ஒரு அங்கமே கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் ஆலயத்துக்கு அருகில் அமைக்கப்படும் பௌத்த விகாரை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் ஆலயச் சூழலில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டு வரும் பௌத்த விகாரையைப் நேற்று வெள்ளிக்கிழமை பார்வையிட்ட பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், 'தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் பௌத்த மயமாக்கும் நோக்கத்துடனேயே இராணுவத்தின் துணையுடன் பௌத்த விகாரைகளும் புத்தர் சிலைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன ஒரு வீதம் கூட பௌத்தர்கள் இல்லாத தமிழர்களை மாத்திரம் கொண்ட பகுதியில் இப்ப…
-
- 0 replies
- 416 views
-
-
இந்தியத் தனியார் முதலீட்டு நிறுவனம் ஒன்று இந்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் தெல்லிப்பளை அம்பனைப் பிரதேசத்தில் அலுமினியத் தொழிற்சாலையொன்றை திறந்துவைத்துள்ளது. இந்நிகழ்வானது, பிரபல இந்திய, இலங்கை கம்பனிகளின் இயக்குனர் தி.தில்லைராஜ் தலைமையில் நடைபெற்றது. இதற்கு வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சம்பிரதாய பூர்வமாக இந்த நிறுவனத்தை திறந்துவைத்தார். இந்நிகழ்வுக்கு, சிறுவர் மற்றும் பெண்கள் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ்.இந்தியத் துணைத் தூதுவர் அ. நடராஜன், வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வீ.கே. சிவஞானம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வில், சம்பிரதாயபூர்வமாக ஓர் அலுமினியப் பானை உருவாக்கப்பட்டு அதற்கான …
-
- 0 replies
- 290 views
-
-
A9 சாலை நெடுக… ஜெரா தமிழர்களின் தியாகமிகு ஆயுதப் போராட்டத்திற்கும் A9 சாலைக்கும் உணர்வுபூர்வமான தொடர்பு உண்டு. இந்த சாலை மீட்புக்காக இழந்த உயிர்களின் எண்ணிக்கை எங்கும் கணக்கு வைக்கப்படவில்லை. அவ்வளவுக்கு இச்சாலையை தமிழர்கள் குருதியால் கழுவியிருக்கின்றனர். இப்போது இச்சாலையில் எத்தடங்களும் இல்லை. மின்னலாகக் கிழிக்கும் வாகனங்களில் வெட்டுண்டாமல் உங்களால் கடக்க முடியுமாயின், A9 இல் பயணிப்பது உல்லாசமிக்கதாக இருக்கின்றது. சீனா தன் பூகோள அதிகார அந்தஸ்திற்காக மெழுகி வைத்திருக்கும் சாலைகளில் இதுவும் ஒன்றாக இருக்கின்றது. இப்போது இச்சாலை தமிழர்களுக்கு அதிகளவு வருமானத்தைத் தரக்கூடும் என்றே இதனூடாகப் பயணித்துச் செல்பவர்கள் நினைக்கக்கூடும். 24 மணிநேரமும் இயங்கு…
-
- 12 replies
- 1.4k views
-
-
காணாமற்போனோர் பணியகத்தை உருவாக்கும் சட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கோரி, தேசிய போர் வீரர்கள் அமைப்பு, வீரலங்கா பவுண்டேசன் ஆகியவற்றின் தலைமையில் சிறிலங்கா படையினர் நேற்று போராட்டம் ஒன்றை நடத்தினர். பத்தரமுல்லையில் சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு முன்பாக உள்ள தேசிய போர் நினைவுச்சின்னத்தில் அமர்ந்து இவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், போர் வீரர்களை வேட்டையாடுவதே அரசாங்கத்தின் எண்ணம் என்றும், மேற்குலக சக்திகளை திருப்திப்படுத்தவே நல்லிணக்கத்தை அரசாங்கம் தேடுவதாகவும், காணாமற்போனோர் பணியக சட்டம் சிறிலங்காவின் இறைமைக்குச் செய்யப்படும் துரோகம் என்றும் குறிப்பிட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர். பெங்கமுவ நாலக்க தேரர் தலைமையிலான…
-
- 1 reply
- 428 views
-
-
ஓமந்தையிலேயே பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி மூன்று நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வந்த 73 வயதான தா.மகேஸ்வரன் நேற்றிரவு 9.30 மணியளவில் தனது போராட்டத்தைக் கைவிட்டார். வவுனியாவில் அமைக்கப்படவிருந்த பொருளாதார மத்திய நிலையத்திற்கான இடத்தெரிவில் பாரிய இழுபறி நிலை காணப்பட்டு வந்த நிலையில் இறுதியாக மாங்குளம் மற்றும் வவுனியா மதகுவைத்தகுளம் ஆகிய பகுதிகளில் பொருளாதார நிலையம் அமையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஓமந்தை பகுதியை சேர்ந்த தா.மகேஸ்வரன், 2010 ஆம் அண்டு அபிவிருத்திகுழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் ஓமுந்தையில் ஒதுக்கப்பட்ட காணியிலேயே பொருளாதார மையம் அமையவேண்டும் என க…
-
- 1 reply
- 397 views
-
-
யாழ்ப்பாணம் - தீவகத்தில் மூடப்பட்டுள்ள பல கிணறுகளை நீதிமன்ற அனுமதியுடன் தோண்டினால் காணாமல் போன பலர் தொடர்பான தேடல்களுக்கு, விடை கிடைக்கும் என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். வேலணை பிரதேச செயலகத்தில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க செயலணியினால், ஞானம் அறக்கட்டளை நிதியத்தின் நிதி உதவியோடு பொது மக்களுக்காக அமைத்துக் கொடுக்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு தாங்கி கையளிக்கும் நிகழ்வு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் பங்கேற்புடன் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே இராஜங்க அமைச்சர் இவ்வாறு கூறினார். கடந்த கால ஆட்சிகளின் போது தீவகப் பகுதிகள் ஆயுதக்குழுவொன்றின் ஆக்கிரமிப்பிலேயே இருந்தன. அதனா…
-
- 1 reply
- 327 views
-
-
கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தினர் வசமிருக்கும் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி காணி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இன்று காலை முதல் பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமிற்கு முன்னால் ஒன்று கூடி தமது காணிகளை விடுவிக்கக் கோரி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Go to Videos People protest in front of the paravippanjan military camp மக்களது காணிகளிலுள்ள இராணுவத்தை வெளியேற்றி, காணிகளை மீள கையளிக்குமாறு வலியுறுத்தி பிரதேச மக்கள் இதற்கு முன்னர் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். இதற்கு தீர்வாக பிரதேசத்தின்…
-
- 0 replies
- 430 views
-
-
மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் இருந்து நேற்று தப்பிச் சென்றதாக கூறப்படும் நரி என்பவர் இதுவரை கைது செய்யப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பகுதி மக்கள் நேற்று சுமார் 4 மணித்தியாலம் வரை பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு எதிர்ப்பினை வெளிப்படுத்தினார்கள். இதன் பின் பொலிஸ் அதிகாரிகளால் 24 மணிநேரத்துக்குள் வர்த்தகரான நரி என்பவரை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதாக மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்கியிருந்தார்கள். இதனை அடுத்து மக்கள் வீடு திரும்பினார்கள், அனாலும் இன்றுவரை குறித்த நபர் கைது செய்யப்படவில்லை, இதன் காரணமாக பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள், எந்த நேரமும் தங்களுக்கு நரி மூலம் ஆபத்து நேரிடலாம் என்று பயத்தில் உள்ளனர். இருந்தும் திரா…
-
- 0 replies
- 354 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நூதனமான சங்கடத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் சிறப்பு விருந்தினர் பகுதியில் கோப்பி கோப்பை ஒன்றிக்காக 4500 ரூபாய் கட்டணம் செலுத்தி, அதனை பெறும் நிலைக்கு மஹிந்த தள்ளப்பட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ச விமான நிலையத்தின் சிறப்பு விருந்தினர் பகுதிக்கு சென்ற சமயத்தில், தேனீர் பருகும் அவசியம் உண்டா என அதன் ஊழியர் ஒருவர் வினவியுள்ளார். இதன்போது தனக்கு ஒரு கோப்பை தேனீர் வழங்குமாறு கேட்டுள்ளார். அதனை தொடர்ந்து ஒரு கோப்பை கோப்பியும், அதற்காக 4500 ரூபா கட்டண சீட்டு ஒன்றும் மஹிந்தவிடம் வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ச விமான நிலையத்தில் இவ்வாறான சிக்கல் ஒன்றுக்கு மு…
-
- 0 replies
- 661 views
-
-
யுனெஸ்கோ பணிப்பாளர் நாயகம் இரினா பொகோவா நாளை இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். நாளை இலங்கை வரும் அவர் 17ம் திகதி வரையில் இங்கு தங்கியிருப்பார். இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் சமாதானத்தை நிலைநாட்டவும் உதவிகள் வழங்கப்படும் என யுனெஸ்கோ அறிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்யும் யுனெஸ்கோ பணிப்பாளர் நாயகம் உயர்மட்ட ராஜதந்திரிகளை சந்தித்து பேச்சு நடத்த உள்ளார். கல்வி தரத்தை உயர்த்துதல், விஞ்ஞானம், தொழில்நுட்பம், புத்தாக்கம் போன்றவற்றை ஊக்குவித்தல் உள்ளிட்டன குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல, உள்விவ…
-
- 0 replies
- 378 views
-
-
ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழு எதிர்பார்க்கும் அனைத்து விடயங்களிலும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் இதற்கு மேலதிக காலஅவகாசத்தைக் கோர முடியாது என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். நேற்று தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் மேலும் விளக்கமளித்த அமைச்சர், எதிர்வரும் மார்ச் மாதம் நாம் ஜெனீவா மனித உரிமைக் குழுவுக்கு விரிவான அறிக்கையொன்றை சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. அது தொடர்பில் நாம் செயற்பாடுகளை மேற்கொள்வது அவசியம். எமக்கு மேலும் கால அவகாசம் கேட்கமுடியாது. நல்லிணக்கத்தை ஏற்புத்தும் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது இதில் முக்கியமாகிறது. அதில் பிரதான அம்சம் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள காணாமற்போனோர் தொடர்பான…
-
- 0 replies
- 238 views
-
-
விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டு செயற்பட்ட காலத்திலேயே தமக்கு புற்று நோய் ஏற்பட்டதனை தமிழினி அறிந்து கொண்டிருந்தார் என சிரேஸ்ட இராணுவ அதிகாரியொருவர் சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், தமிழினி தனது உடலில் விச ஊசி ஏற்றப்பட்டதாக எவ்வித முறைப்பாட்டையும் செய்யவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டு செயற்பட்ட காலத்திலேயே தமக்கு புற்று நோய் ஏற்பட்டதனை தமிழினி அறிந்து கொண்டிருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போது விச ஊசி ஏற்றப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஜெனீவா மனித உரிமைப் பேரவையிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்த ஊடகம் த…
-
- 0 replies
- 206 views
-
-
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் என்னுடைய சிறப்புரிமைகளை மீறும் வகையில் பல்வேறு அவதூறான விடயங்கை வெளியிட்டு இவ்வுயரிய சபையை தவாறாக வழிநடத்தியுள்ளார் என அமைச்சர் ரிஷாட் பதியூர்தீன் சபாநாயகர் கரு ஜயசூரியவின் கவனத்திற்கு கொண்டு வந்தார். அவரது கருத்துக்கள் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை மீறியுள்ளதோடு என்னையும் எனது ஆதரவாளர்களினதும் புண்படுத்தியுள்ளதாக தெரிவித்த அமைச்சர் ரிஷாட் பதியூர்தீன் அவரது உரையை ஹன்சாட்டிலிருந்து நீக்குமாறும்இ அவர் இந்த உரையினை ஆற்றியமைக்காகஇ இந்த சபையில் பகிரங்கமாக மன்னிப்புக்கோருமாறும்இ இல்லையெனில் அதற்குத் தகுந்தவாறான நடவடிக்கையை சபாநாயகர் எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார். பா…
-
- 1 reply
- 215 views
-
-
காணாமல்போனவர்கள் செயலகம் சம்பந்தமான சட்டமூலத்தினால் முப்படையினர் மற்றும் பொலிஸாரின் கௌரவம் பாதுகாக்கப்படுமே அன்றி அவர்கள் தண்டிக்கப்படமாட்டார்கள் என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டார். பாதுகாப்பு படையினருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமாயின் முன்னாள் ஜனாதிபதி நேற்று நாடாளுமன்றத்திற்கு வந்திருக்கலாம். குறித்த சட்டமூலம் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சந்தர்ப்பத்தில் கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதம் கண்டிக்கத்தக்கது. சட்டமூலம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர், விவாதிக்க கூட்டு எதிர்க்கட…
-
- 2 replies
- 628 views
-
-
யாழ்ப்பாணம், தையிட்டி தெற்கை உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவித்தபோதும் பிரதான வீதியை இராணுவம் ஆக்கிரமித்து வைத்துள்ளதால் தாம் வீட்டுக்கு சுதந்திரமாக செல்ல முடியாது அயலவர்களின் வளவுகள் ஊடாகவே பயணிக்க வேண்டியுள்ளதென அப்பகுதியில் மீள்குடியமர்ந்துள்ள பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, இராணுவத்தினரின் பிடியில் இருக்கும் பிரதான வீதியை விடுவிக்க பிரதேச செயலர், அரச அதிபர், மீள்குடியேற்ற அமைச்சு என்பன உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனப் பாதிகப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வலி. வடக்குப் பிரதேசத்தை உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தி சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவத்தினர் தம் வசம் வைத்துள்ளனர். இந்நிலையில் நாட்டில் ஏற்பட்ட…
-
- 0 replies
- 272 views
-
-
காலநிலை சீதோஷண நிலைமைகள் காரணமாக வட மாகாணத்தில் அமைக்கப்படவிருந்து நிராகரிக்கப்பட்ட பொருத்து வீட்டு திட்டத்தினை, மலையகத்திற்கு பொருத்தமானதா என ஆராய்ந்து பரிசீலிக்கும்படி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவிக்கையில், முன்கூட்டியே பாகங்கள் தயாரிக்கப்பட்டு பின் கட்டப்படும் இடத்திற்கு கொண்டு வரப்பட்டு பொருத்தப்படும் பொருத்து தனி வீடமைப்பு திட்டம் காலநிலை சீதோஷண நிலைமைகள் காரணமாக வட மாகாணத்தில் அமைக்கப்படுவது நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த த…
-
- 0 replies
- 368 views
-
-
ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலர் பாங்கிமூன் இந்த மாத இறுதிப்பகுதியில் இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கையில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க நடவடிக்கைகளை ஆய்வுசெய்யும் வகையில் இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் அடிப்படையிலேயே இந்தப் பயணம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதனைக் கருத்திற்கொண்டே அரசாங்கம் அவசரம் அவசரமாக காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தை அமைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. http://thuliyam.com/?p=37574
-
- 0 replies
- 319 views
-
-
பொருளாதார மற்றும் வர்த்தக விஞ்ஞான மாணவர்களின் சர்வதேச அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (12.08.2016) யாழ்ப்பாணத்தில் மரநடுகை செய்துள்ளனர். திருநெல்வேலி முத்துத்தம்பி மகாவித்தியாலயத்தில் வடக்கு சுற்றுச்சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் மரக்கன்றுகளை நடுகை செய்துள்ளனர். பல்வேறு நாடுகளையும் சேர்ந்த உயர்கல்வி பயிலும் மாணவர்களை உறுப்பினர்களாகக்கொண்ட ஐசெக் (AIESEC) எனப்படும் இவ்வமைப்பு அரச சார்பற்ற மற்றும் அரசியல் சார்பற்ற ஒரு அமைப்பாகும். இது அனுபவங்களையும் அறிவையும் பகிர்ந்து கொள்வதன் மூலமும் தனிமனித ஆளுமையை விருத்தி செய்வதன் மூலமும் மானுடத்தின் முக்கியத்துவத்தை முழுமைபெறச் செய்யவும் சமாதானத்தை ஏற்படுத்தவும் முயன்று வருகிறது. ஒரு இலட்சத்துக்கும் அத…
-
- 1 reply
- 367 views
-
-
புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம், கங்கை அமரனின் இசைக்குழுவோடு, ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதியன்று முதல் தடவையாக யாழ்ப்பாணத்துக்கு வரவிருகின்றார் http://www.onlineuthayan.com/news/16203
-
- 7 replies
- 936 views
-
-
விடுதலைப்புலிகளை மீளுரு வாக்கும் செயற்பாடுகளுடன் தொடர்புபட்டிருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த திருமதி பாலேந்திரன் ஜெயக்குமாரி மீண்டும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் (ரி.ஐ.டி) விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதன்படி எதிர்வரும் 16 ஆம் திகதி பயங்கரவாத குற்றத்தடுப்பினரின் அலுவலகத்திற்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்ப ட்டுள்ளது. ஆட்பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த ஜெயக்குமாரி வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டதுடன் கடவுச்சீட்டும் முடக்கம் செய்யப்பட்டிருந்தது. அதேநேரம் ஜெயக்குமாரி கைது செய்யப்பட்டபோது அவருடைய அடையாள அட்டை, வங்கிப்புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களைய…
-
- 0 replies
- 209 views
-
-
மனித உரிமை வீரர் வாசுதேவ நாணயக்காரா = இனவாத நாணயக்கார Mano Ganesan Yesterday at 1:33am · காணாமல் போனோர் அலுவக அமைப்பு சட்டம் நேற்று பாராளுமன்ற சபையில் நிறைவேற்றப்பட்ட போது அங்கு, முன்னாள் இடதுசாரி ஜனநாயக புரட்சி தலைவரும், 1980 களில் கொல்லப்பட்ட சிங்கள இளைஞர்களுக்காக, ஜெனீவா வரை சென்று குரல் எழுப்பிய முன்னாள் மனித உரிமை வீரருமான வாசுதேவ நாணயக்கார செயற்பட்ட முறையை பார்க்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும். சபை நடுவுக்கு வந்து சட்டமூலத்திற்கு எதிராக கோஷம் எழுப்பிய இனவாத குழுவுக்கு இவர்தான் தலைமை தாங்கினார். வெட்கங்கெட்ட க…
-
- 0 replies
- 286 views
-
-
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் மர்மமான முறையில் உயிரிழப்பதற்கு சர்வதேச விசாரணை கோரி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நேற்று வியாழக்கிழமை பிரிட்டனில் நடைபெற்றது. பிரிட்டிஷ் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம் அமைந்துள்ள டவுனிங் வீதியில் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. இறுதிப் போரில் பொதுமக்கள் உள்ளிட்ட போராளிகள் பலர் கொன்று குவிக்கப்பட்டனர். இறுதிப் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் இராணுவத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க முன்னாள் போராளிகள் பலர் இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். இவ்வாறு சரணடைந்த போராளிகள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட நிலையில், அவர்களில் 104 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். இன்னும் பல போராள…
-
- 0 replies
- 334 views
-