Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான காணாமல்போனோர் குறித்து விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவானது இன்று தனது இறுதி அறிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்ட காணாமல்போனோர் குறித்து விசாரிக்கும் இந்த காணாமல்போனோர் ஆணைக்குழுவின் பதவிக்காலமானது கடந்த ஜூலை மாதம் 15 ஆம் திகதி வரை இடையிடையே நீடிக்கப்பட்டு வந்தது. இந் நிலையில் கடந்த ஜூலை மாதம் 15 ஆம் திகதியுடன் ஆணைக்குழுவின் பதவிக்காலம முடிவுக்கு வந்த நிலையிலேயே இன்றைய தினம் இது தொடர்பான அறிக்கையை ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான குழுவினர் ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளனர். இந்தக் குழுவுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு சர்வதேச ஆலோசனைகளை வழங்க சர்வ…

    • 0 replies
    • 294 views
  2. வடக்கை இராணுவ கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான முயற்சியா இது? யாழ்ப்பாணத்தை வழியாகப் பயன்படுத்தி இந்தியர்கள் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்து கொள்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்து கொள்ள இந்தியர்கள் யாழ்ப்பாணத்தை ஓர் வழியாக பயன்படுத்திக் கொள்கின்றனர் என தெரிவிக்;கப்பட்டுள்ளது. பொதுவாக பங்களாதேஸ் அல்லது டுபாய் வழியாகவே இதுவரை காலமும் இந்தியர்கள் ஆப்கானிஸ்தானுக்கு சென்று தீவிரவாத இயக்கத்தில் இணைந்து கொண்டனர். எனினும், இந்தப் பாதைகள் கடுமையாக கண்காணிக்கப்பட்டு வருவதனால் யாழ்ப்பாணத்தை தெரிவு செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் யாழ்ப்பாணத்தை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதற…

    • 5 replies
    • 530 views
  3. வலி. வடக்கில் காணிகள் இல்லாத மக்களுக்காக மாவிட்டபுரம் பகுதியில் படையினருடைய உ தவியுடன் அமைக்கப்படும் வீட்டு திட்டத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க இன்றைய தினம் நேரில் பார்வையிட்டுள்ளார். நேற்றைய தினம் யாழ்.வந்த அவர் இன்றைய தினம் காலை கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றை தொடர்ந்து, மாலை 3.30 மணியளவில் மாவாட்டபுரம் பகுதியில் காங்கேசந்துறை சீமெந்து தொழிற்சாலை காணியில் வலி.வடக்கில் சொந்த நிலம் இல்லாத மக்களுக்காக மீள்குடியேற்ற அமைச்சு மற்றும் படையினர் இணைந்து அமைத்துவரும் வீட்டு திட்டத்தை பார்வையிட்டார். இதன்போது படையினருடைய பணிகளை சந்திரிக்கா பாராட்டியுள்ளார். மேலும் இந்த விஜயத்தின்போது யாழ்.பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மகேஷ்…

  4. சொத்து எப்படி சம்பாதிக்கப்பட்டது என்பதை வெளியிட முடியாது போன மேலும் ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை அரசுடமையாக்கும் நீதிமன்ற உத்தரவை பெற்றுக்கொள்ள பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரியவருகிறது. ஒருவரிடம் இருக்கும் சொத்து எப்படி வாங்கப்பட்டது என்பதை அவர் உறுதிப்படுத்த தவறினால், பணச் சலவை சட்டத்தின் கீழ் அந்த சொத்து அரசுக்கு சொந்தமாகும். அத்துடன் அவ்வாறான சொத்துக்களை கொள்வனவு செய்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் சட்டத்தில் ஏற்பாடுகள் உள்ளன. நிதி மோசடி விசாரணைப் பிரிவு நடத்திய வரும் 300க்கும் மேற்பட்ட விசாரணைகளில் 100 விசாரணைகள் கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான சொத்துக்கள் தொடர்பானதுடன், அவை எப்படி கொள்வனவு செய்யப்ப…

  5. இன்று அதிகாலை டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்திறங்கிய குடும்பம் ஒன்றை மீண்டும் திருப்பி அனுப்புவதற்கு விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். Air-Arabia G9501 விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த தாய், தந்தை மற்றும் சிறிய பிள்ளை ஒன்றும் போலி கடவுச்சீட்டு மூலம் வருகை தந்துள்ளதாகவும், குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரி ஆர்.டீ.எஸ் குணரட்ணவிற்கு ஏற்பட்ட சந்தேகத்தினால் அவர்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி தாய் மற்றும் பிள்ளைக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தின் போலி கடவுச்சீட்டு இருந்துள்ளதுடன், தந்தைக்கு ஜேர்மன் நாட்டு கடவுச்சீட்டு இருந்துள்ளது. சந்தேகத்தின் காரணமாக அவர்களின் ஆவணங்களை பரிசோதித்த போது, அவர்களிடம் இரண்டு அகதி கடவுச்சீட்டுகள் க…

  6. மீள்குடியேற்றம், படையினர் வசமுள்ள பொது மக்களின் காணி விடுவிப்பு போன்ற விடயங்களில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என நோர்வே பிரதமரிடம் வலியுறுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், குறித்த செயற்பாடுகளில் சர்வதேசத்தின் பங்களிப்பு அவசியம் எனவும் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள நோர்வே பிரதமர் எர்னா சோல்பேர்க்கிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனுக்குமிடையில் சந்திப்பு இன்று கொழும்பில் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியலமைப்பின் ஊடாக தீர்வொன்றினை பெறுவது மிகவும் …

  7. நாட்டின் நீர் மின்சார உற்பத்தி, மீன்பிடித்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையை முன்னேற்றுவதற்கு தொழிநுட்ப உதவிகளை பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்வைத்த கோரிக்கைக்கு நோர்வே பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நோர்வே பிரதமர் எர்னா சோல்பேர்க் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தபோதே இந்த இணக்கத்தை தெரிவித்தார். ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த நோர்வே பிரதமர் சோல்பேர்க்கை ஜனாதிபதி வரவேற்றதுடன், இரு தலைவர்களுக்குமிடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை ஒன்றும் இடம்பெற்றது. இலங்கைக்கும் நோர்வே அரசாங்கத்திற்குமிடையே இருந்துவரும் வரலாற்று ரீதியான நட்புறவு தொடர்பாக நின…

  8. முல்லைத்தீவு நகர கடற்கரையில் இயங்கிய இராணுவத்தினரின் முல்லை கபே என்னும் உணவகத்தை மூடும்படி இராணுவத்தளபதி கிரிஷாந்த டி சில்வா கட்டளையிட்டுள்ளார். இதற்கமைய குறித்த உணவகம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=163443&category=TamilNews&language=tamil

  9. இளம் பெண் ஒருவரின் கைத்தொலைபேசிக்கு தவறுதலாக வந்த அழைப்பினால் அவர்களுக்கிடையில் மலர்ந்த காதல் அந்த இளம்பெண் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் நிலைக்கு தள்ளியுள்ளது. இளைஞர் ஒருவரிடமிருந்த வந்த மிஸ்ட் கோலினால் அவர்களுக்கிடையில் மலர்ந்த தொலைபேசி காதலில் சிக்கிய யுவதி ஏமாற்றப்பட்டு, கொழும்புக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளார். அதன் பின்னர் குறித்த இளைஞர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இளைஞரைக் கைது செய்ய விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்தனர். தங்கொட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசம் ஒன்றைச் சேர்ந்த யுவதி ஒருத்தியே இவ்வாறு சந்தேகநபரால் ஏமாற்றப்பட்டு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார…

  10. கோட்டாபய ராஜபக்சவின் ஆட்களே தனது கணவரை கொழும்பில் வைத்து கடத்தினார்கள் என காணாமல் ஆக்கப்பட்ட மட்டக்களப்பு புதுக்குடியிருப்பை சேர்ந்த சந்திரலிங்கம் என்பவரின் மனைவி லலிதா தெரிவித்தார். இதற்கான தீர்வை அரசாங்கமே வழங்க வேண்டும் எனவும் மரணச் சான்றிதழோ, அல்லது நஸ்டஈடோ தனக்கு தேவையில்லை என்றும் சந்திரலிங்கம் லலிதா குறிப்பிட்டார். நல்லிணக்க பொறிமுறைகள் பற்றி கலந்துரையாடுவதற்கான செயலணியின் அமர்வு இன்று வெள்ளிக்கிழமை மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் அணியின் செயலாளர் அ.காண்டீபன் தலைமையில் நடைபெற்ற போது, அதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் மரண சா…

  11. புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் 107 பேர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் ஆதா ரங்களை சமர்ப்பித்தால் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்ல தயாராகவுள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தெரிவித்துள்ளார். முன்னாள் போராளிகள் 107 பேர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் வடமாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னரே தாம் அறிந்து கொண்ட தாக அவர் குறிப்பிட்டுள்ளார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்தி ப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் முன்னாள் போராளிகளின் தொடர் உயிரிழப்புக்கள் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார். …

  12. காணாமல் போனவர்கள் தொடர்பில் அரசாங்கம் நியாயம் வழங்க வேண்மென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டம் அமுல்படுத்தப்பட்டமைக்காக அரசாங்கத்திற்கு நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சில தரப்பினர் இந்த சட்டத்தை எதிர்க்கின்றார்கள் எனவும், தமிழ் இளைஞர்களைப் போன்றே சிங்கள இளைஞர்களும் காணாமல் போயுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சிலர் சிங்கள இளைஞர்கள் பற்றி மட்டுமே பேசுகின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் ஆயிரக் கணக்கான நபர்கள் காணாமல் போயுள்ளதாகத் தெரிவித்துள்ளார். உண்மையக் கண்டறிந்துகொள…

  13. காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டத்திற்கு ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டம் நேற்றைய தினம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட விதம் ஏமாற்றமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். திருத்தங்கள் செய்யாது சட்டம் அமுல்படுத்தப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஒரு சில திருத்தங்கள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த திருத்தங்கள் போதுமானதல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான விடயங்களை மேற்கொள்ள மக்கள் ஆணை வழங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleVi…

  14. காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டம் அமுலாக்கப்பட்டமைக்கு அமெரிக்கா வரவேற்பை வெளியிட்டுள்ளது. காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பிலான சட்டம் நேற்றைய தினம் இலங்கை பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டமையானது நாட்டை முன்னோக்கி நகர்த்தும் முக்கிய நகர்வுகளில் ஒன்றாக கருதப்பட வேண்டுமென அமெரிக்கா தெரிவித்துள்ளது. உண்மையைக் கண்டறிவதற்கும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் புதிய அலுவலகம் வழியமைக்கும் என தென் மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க துணை ராஜாங்கச்செயலாளர் நிசா பிஸ்வால் தெரிவித்துள்ளார். இதேவேளை, காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டம் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியின் ஓர் வரலாற்று மைல் கல்லாக கருதப்பட வேண்டுமென இலங்கை…

  15. காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டம் உரிய நியதிகளைப் பின்பற்றியே நிறைவேற்றப்பட்டது என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் பாராளுமன்றில் காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பான சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டது. கூட்டு எதிர்க்கட்சியின் சில பாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அமையவில்லை என சபாநாயகர் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியின் சில உறுப்பினர்கள் மோசமான முறையில் நடந்துகொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/134881/language/ta-IN/article.aspx

  16. மனநிலை பாதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதி யாழ். போதனாவில் அனுமதி அநுராதபுரம் சிறைச்சாலையில் வைத்து சந்தேகத்திற்குரிய ஊசி ஏற்றப்பட்டதால் மனநிலை பாதிக்கப்பட்ட இராசையா ஆனந்தராசா என்ற தமிழ் அரசியல் கைதி மன வைத்திய பரிசோதனகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல ப்பட்டுள்ளார். குறித்த கைதியை உடனடியாக வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துமாறு தாம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் ஏற்றுக்கொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலாநாதன் தெரிவித்தார். இராசையா ஆனந்தராசா என்ற தமிழ் அரசியல் கைதி மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல…

    • 1 reply
    • 318 views
  17. கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கடந்த 09.10.2015 அன்று கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் பிள்ளையான் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=163364&category=TamilNews&language=tamil

    • 1 reply
    • 459 views
  18. முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அரசாங்கத்தில் இணைய தயாராகி வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரம்புக்வெல்ல அரசாங்கத்தில் இணைய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அனுமதியும் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பணத்தை மோசடியாக பெற்றதாக கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நிதி மோசடி விசாரணைப் பிரிவு நடத்திய விசாரணைகள் முடிவடைந்துள்ளது. மோசடி நடந்துள்ளதை சட்டமா அதிபர் திணைக்களமும் உறுதிப்படுத்தியுள்ளது. ரம்புக்வெல்ல அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கு இதுவே காரணம் எனக் பேசப்படுகிறது. கெஹெலிய ரம்புக்வெல்ல 2012 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் உள்ள ஹொட்டல் ஒன்றின் மூன்றாவது மாடியின் பார்த்திருப்பி…

    • 1 reply
    • 307 views
  19. தமிழ் அரசியல் கைதிகளில் தகுதியானவர்களை புனர்வாழ்வளித்து விடுவிக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் தகுதியானவர்களை புனர்வாழ்வளித்து விடுவிப்பதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் இணக்கம் தெரிவித்துள்ளதாக மீள்குடியேற்ற, புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். தமிழ் அரசியல் கைதிகளின் பொதுமன்னிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வரும்பட்சத்தில் புனர்வாழ்வு அமைச்சர் என்ற வகையில் ஒத்துழைப்பு வழங்குவதற்குத் தாம் தயார் என அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் குறிப்பிட்டார். தடுத்து வைக்கப்பட்டுள்ள 89 தமிழ் அரசியல் கைதிகளில் புனர்வாழ்வளித்து விடுதலை செய்வதற்குத் …

    • 1 reply
    • 354 views
  20. நேற்றைய தினம் (வியாழக்கிழமை) தேசிய ஒரு­மைப்­பாட்­டுக்கும் நல்­லி­ணக்­கத்­திற்­கு­மான அலு­வ­ல­கத்­தினால் ஆரம்­பிக்­கப்­பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் மழைநீர் சேக­ரிப்­ப­தற்­கான கருத்­திட்­டத்தை வடக்கு மக்கள் மத்­தியில் கொண்டுசெல்வதற்கான வேலைத்­திட்டத்தினை, ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான தலைவர் சந்திரிக்கா ஆரம்பித்துவைத்தார். இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அழைக்கப்பட்டிருந்தார். இந்நிகழ்வில் உரையாற்றிய வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அம்மையார் ஜனாதிபதியாக பதவி வகித்த போது வடக்கு மக்களின் தேவைகளை அறிய முடியாத நிலை காணப்பட்டது. எனினும், தனது சேவைக்காலம…

    • 0 replies
    • 345 views
  21. தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் சம்பந்தமாக நிலையியல் கட்டளையின் 23/2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நாளை வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் விசேட கூற்றொன்றை விடுக்கவுள்ளார். Read more: http://malarum.com/article/tam/2016/08/11/15224/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0

    • 2 replies
    • 571 views
  22. ரயில் மீது கல்வீச்சு: ஒருவர் காயம் ரயில் மீது மேற்கொள்ளப்பட கல்வீச்சு தாக்குதலில் பயணியொருவர் காயமடைந்துள்ளதாக ரயில் போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார். காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த இரவு நேர தபால் ரயில், திருகோணமலை மற்றும் சீனக்குடா ஆகிய பிரதேசத்துக்கிடையில் பயணிக்கும் போது மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சிலேயே பயணியொருவர் காயமடைந்துள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/179244/ரய-ல-ம-த-கல-வ-ச-ச-ஒர-வர-க-யம-#sthash.7CO6zhrP.dpuf

    • 1 reply
    • 262 views
  23. கைத்தொழில் சுற்றுலா மற்றும் ஏற்றுமதிக்கான அலுவலகம் யாழில் திறப்பு யாழ்.கைத்தொழில் சுற்றுலா மற்றும் ஏற்றுமதிக்கான ஒன்றிணைந்த சேவைகள் மையத்திற்கான அலுவலகத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று (வியாழக்கிழமை) திறந்துவைத்தார். யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, யாழ்.மாவட்ட செயலகத்தில் முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ள இவ் ஒன்றிணைந்த சேவைகள் மையத்திற்கான அலுவலகத்தை திறந்துவைத்தார். இந் நிகழ்வில், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் உள்ளிட்ட பலர் க…

  24. நாரதர் கலகம் நன்மையில் முடியும் - மனோகணேசன் தெரிவிப்பு யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழர் பாரம்பரியத்திற்கே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டுமென அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் யாழ் பல்கலைக்கழகத்தில் தழிழர் பாரம்பரிய கலைநிகழ்வுகளுக்கே முதலில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். ஆனால் சிங்கள மாணவர்களும் கற்றலில் ஈடுபடுவதால் அவர்களின் கலை நிகழ்வுகளுக்கும் ஓரு குறிப்பிட்ட இடம் வழங்கி முன்கூட்டியே ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சி நிரலில் இணைத்திருக்கலாம் எனவும் கெட்ட கலகம் நல்ல பலனைத் தந்துள்ளது என எண்ணுகிறேன் எனக் கூறினார் தொடர்ந்து பேசிய அமைச்சர் கலகம் …

  25. இன்று நண்பகல் 12.00 மணியில் இருந்து மாலை 4.00 மணிவரை முல்லைத்தீவு ஆனந்தபுரத்தில் படையினரால் மீட்கப்பட்ட குண்டுகள் தாக்கி அழிக்கப்பட்டன. இதன் காரணமாக புதுமாத்தளன், அம்பலவன், பொக்கனை, வலைஞர்மடம் இரட்டைவாய்க்கால், முள்ளிவாய்க்கல், ஆகிய பகுதிகள் குண்டுச் சத்தங்களால் அதிர்ந்தன. பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதிக்கு அருகே நிலை கொண்டுள்ள HDU.SLA இராணுவப் படையணியே மேற்படி அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதி உச்சகட்ட போர் நடவடிக்கை நடைபெற்ற குறித்த இடங்களில் வெடிக்காத நிலையில் அதிகமான வெடிபொருட்கள் இருப்பாதல் சிறப்பு நடவடிக்கையில் தாம் ஈடுபடுவதற்காக குறித்த இடத்தில் நிலை கொண்டுள்ளதாகவும் தமது…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.