ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142590 topics in this forum
-
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பிரிவில் – பாதாள உலகக்குழுவினர் கடமை புரிந்துள்ளனர் – ஜனாதிபதி திட்டவட்டமாக தெரிவிப்பு. முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பிரிவில் பாதாள உலகக்குழுவினர் கடமை புரிந்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது எந்தவொரு குற்றவாளிக்கும் அரசியல் அடைக்கலம் வழங்காத அரசாங்கமே அரச இயந்தியரத்தை இயக்குவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருட்களிலிருந்து இலங்கை சமூகத்தை விடுவிப்பதை நோக்கமாகக் கொண்ட ‘முழு நாடுமே ஒன்றாக’ என்ற கருப்பொருளில் தேசிய செயற்பாடு, இன்று தங்காலை பொது விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. நாட்டின் இளைஞர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக…
-
- 0 replies
- 86 views
-
-
நெடுங்கேணி பொலிஸ் சார்ஜன் கைது! 20 Nov, 2025 | 05:10 PM வவுனியா நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் சார்ஜன் ஒருவர் இலஞ்சம் பெற முயன்ற போது இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் புதன்கிழமை (19) கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், குறித்த பொலிஸ் சார்ஜன் ஒரு முறைப்பாடு தொடர்பாக நபர் ஒருவரிடம் இலஞ்சம் கோருவதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. இதனையடுத்து நேற்றைய தினம் நேடுங்கேணி பகுதிக்கு வருகைதந்த இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குறித்த பொலிஸ் சார்ஜன் இலஞ்சப்பணத்தின் ஒரு பகுதியை பெற முற்ப்பட்ட போது அவரை கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர் இன்று வியாழக்கிழமை (20) வவ…
-
- 3 replies
- 262 views
- 1 follower
-
-
20 Nov, 2025 | 05:55 PM சுற்றுச்சூழலை பேணுவதற்கு பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தினால் கொழும்பில் புதிய செயற்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரேசிலில் நடைபெறும் COP30 காலநிலை உச்சி மாநாட்டை முன்னிட்டு இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மழைநீர் சேகரிப்பு, தோட்டப் பராமரிப்பு, பிளாஸ்டி பயன்பாட்டை தவிர்த்தல், கழிவு முகாமைத்துவம் ஆகிய நடவடிக்கைகளை அடிப்படையாக கொண்டு இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுத்தமான மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்கும் நோக்கத்தில் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இரசாயன பொருட்களினால் தாவரங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தவிர்ப்பதற்கு இரசாயனம் இல்லாத தாவர பயிர்ச்செய்கையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. https:…
-
- 0 replies
- 103 views
- 1 follower
-
-
வெளிநாட்டினருக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்த அனுமதிப் பத்திரம் இல்லை – DMT அறிவிப்பு! தற்போதைக்கு வெளிநாட்டவர்களுக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்துவதற்கான சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கப்போவதில்லை என்று இலங்கை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT) அறிவித்துள்ளது. இதற்காக தற்காலிக அனுமதிப் பத்திரத்தை அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாமல் முச்சக்கர வண்டிகளை செலுத்தும் வெளிநாட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மேலும், சர்வதேச சாரதி அனுமதிப் பத்திரம் மாத்திரம் வெளிநாட்டவர்…
-
- 2 replies
- 248 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் 20 மணி நேரம் முன் கடற்றொழில் அமைச்சருக்கு தீர்வுகாண திராணியில்லை; வடமராட்சி மீனவர்கள் விசனம்! வடக்கு மாகாண மீனவர்களின் பிரச்சினைக்குக் கடற்றொழில் அமைச்சரால் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம் ஆனால் முன்னரை விட இப்போதே வடக்கு மீனவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன என்று வடமராட்சி மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில்; இதுவரை காலமும் இல்லாத வகையில் மீனவ சமூகம் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகிறது. எங்களது பிரச்சினைகள் தொடர்பில் ஒரு தடவையேனும் கடற்றொழில் அமைச்சர் சந்தித்துக் கலந்துரையாடவில்லை. தேர்தலில் வாக்குப் பெறுவதற்காக மீனவர் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுப்போம் என்று கூறியவர்கள் …
-
- 0 replies
- 87 views
-
-
வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியிடம் முறையிட்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கடற்றொழிலாளர்களைச் நேரில் சந்தித்து கலந்துரையாடுமாறும் கோரிக்கை முன்வைத்துள்ளார். இந்நிலையில் ரவிகரனின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, விரைவில் முல்லைத்தீவிற்கு வருகைதந்து கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நேரடியாகக் கேட்டறியவுள்ளதாகப் பதிலளித்துள்ளார். இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று (19) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது. இது தொடர்பில் துரைராசா ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கை தமிழ் அரசுக் கட…
-
- 0 replies
- 66 views
-
-
20 Nov, 2025 | 02:41 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) நாளொன்றுக்கு சுமார் 25 சைபர் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகின்றன. வடக்கு மாகாணத்திலேயே அதிகளவான முறைப்பாடுகள் பதிவாகின்றன என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அமர்வின் போது வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, நிதி கணினிக் குற்றங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு 24 குற்றங்கள் 2021 ஆம் ஆண்டு 57…
-
- 0 replies
- 79 views
-
-
20 Nov, 2025 | 03:19 PM வேலணை பிரதேச சபைக்குட்பட்ட சாட்டி கடற்கரையின் அழகு மிக்க "சவுக்கு" மரங்கள் பாதுகாக்கப்பட்டு அவை உரியமுறையில் பராமரிகப்பட வேண்டும் என சபையின் உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். அதேநேரம், கடற்கரையோரத்தில் குவிந்திருக்கு கழிவுகளை அகற்றி சுற்றுலா தளத்; அழகுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று (20) காலை 10 மணிக்கு தவிசாளர் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, இந்த விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது. இது குறித்து அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், வடபகுதியில் குறிப்பாக யாழ் மாவட்டத்தின் சுற்றுலா மையங்களில் முக்கிய இடமாக இந்த சாட்டிக் கடற்கரை இருக்கின்றது. இக்கடற்கரையின் அழகு இந்த "சவுக்கு" மர…
-
- 0 replies
- 65 views
-
-
20 Nov, 2025 | 04:05 PM கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்வைத்த சமஷ்டி தீர்வு பற்றிய கோரிக்கை தமிழ்நாடு முதலமைச்சரிடம் முன் வைக்கப்பட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய பாராளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் தெரிவித்தார். அவர் இன்று வியாழக்கிழமை (20) தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் அவரது கட்சியை சேர்ந்தவர்கள் என்னை சந்தித்தார்கள். இதன்போது அவர்கள் முன்வைத்த கோரிக்கை தொடர்பில் ஒரு மனுவை முதல்வர் அவர்களிடம் முன் வைத்துள்ளோம் இலங்கையின் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் புதிய அரசியலமைப…
-
- 0 replies
- 47 views
-
-
20 Nov, 2025 | 05:16 PM தாய்மண்ணின் விடியலுக்காக வித்தாகிப்போனவர்களின் நல்லூர் நினைவாலயம் நாளை வெள்ளிக்கிழமை (21) மாலை 6 மணிக்கு அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படும் என ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது. தாய்மண்ணுக்காக தம் உயிர்களை அர்ப்பணித்தவர்களுடன் மாமனிதர்களையும் நாட்டுப்பற்றாளர்களையும் மற்றும் பல ஆவணப்படுத்தல்களையும் கொண்டு இந்த நல்லூர் நினைவாலயம் அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. “தலைமுறைகள் கடந்து வாழும் மாவீரச் செல்வங்களின் நினைவாலயத்திற்கு உங்கள் இளைய தலைமுறையினரையும் அழைத்து வந்து வரலாற்றினைக் கடத்துங்கள். உங்கள் மனப்பதிவுகளைப் பதிந்துவிட்டுச் செல்லுங்கள்” என ஏற்பாட்டுக் குழு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. நல்லூர் நினைவாலயம் நாளை அங்குரார்ப்பண…
-
- 0 replies
- 60 views
-
-
யார் ஆட்சிக்கு வந்தாலும் பௌத்த சிங்களமயமாக்கல் தொடரும் என யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்றைய தினம் (20) தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு மேலும் தெரிவிக்கையில், திருகோணமலையில் தமிழர் தாயகத்தில் கடற்கரைப் பிரதேசத்தில் சட்டத்திற்கு முரணாக புத்த பிக்குகளினால் புத்தர் சிலையொன்று நிறுவப்பட்டிருக்கின்றது. அங்குள்ள தமிழ் மக்களின் கடும் எதிர்ப்பின் பின் சட்ட அனுமதியற்ற கட்டுமானம் என்று சொல்லி ஸ்ரீலங்கா பொலிஸாரினால் அப்புறப்படுத்தப்படுகின்றது. இதன் பிறகு பாராளுமன்றத்தில் அரசாங்கத்தால் புத்தர் சிலையின் பாதுகாப்பு காரணமாகத்தான் அப்புறப்படுத்தப்பட்டது மீண்டும் நிறுவப்படும் என்ற பின் மீண்டும் அதே இடத்தில் அரசாங்கத்தால் புத்தபிக்குகள் மற்றும் பொலிஸாருடன் இணைந்து அதே புத்தர் ச…
-
- 0 replies
- 66 views
-
-
Nov 20, 2025 - 02:26 PM இலங்கையில் உள்ள அனைத்துக் காணிகளையும், சரியாக அளவீடு செய்து விரைவில் வரைபடமாக்கி முடிப்பதற்கு விவசாயம் மற்றும் வளங்களின் நிலைபேறான தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு கவனம் செலுத்தியுள்ளது. 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான பல அரச நிறுவனங்கள், திணைக்களங்கள், ஆணைக்குழுக்கள் மற்றும் சபைகளின் வருடாந்த அறிக்கைகள் மற்றும் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகளைப் பரிசீலிப்பதற்காக, கடந்த 17 ஆம் திகதி அந்தக் குழு அதன் தலைவர் ஹெக்டர் அப்புஹாமி தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியது. இதன்போது இது குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் குழுவிற்கு விடயங்களை விளக்குகையில், தற்போது எதிர்வு கூறப்பட்டுள்ளதன் படி இலங்கையில் 16.5 மில…
-
- 0 replies
- 134 views
- 1 follower
-
-
Nov 20, 2025 - 09:45 AM உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வரலாற்றில் அதிகூடிய வரி வருமானத்தை ஈட்டியுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் றுக்தேவி. பீ.சீ. பெர்னாண்டோ அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவு அதிகப்படியான வரி வருமானம் 2025 ஆம் ஆண்டுக்காக 17.11.2025 ஆம் திகதி ஈட்டமிடப்பட்டுள்ளது. இந்த மொத்த வரி வருமானம் ரூபா 2,002,241 மில்லியன் (ரூபா 2,002.241 பில்லியன்) ஆகும். இது 2024 ஆம் ஆண்டின் மொத்த வரி வருமானத்துடன் ஒப்பிடும்போது ரூபா 60,079 மில்லியன் அதிகமாகும். 2024 ஆம் ஆண்டில் உள்நாட்டு இறைவரித் திணைக…
-
- 0 replies
- 85 views
- 1 follower
-
-
Published By: Digital Desk 3 20 Nov, 2025 | 02:47 PM (இணையத்தள செய்திப் பிரிவு) இலங்கையின் கடல்சார் ஆழத்தை அளவிடும் (Hydrographic Mapping) திறன்களை மேம்படுத்துவதற்காக, அமெரிக்காவின் NOAA (National Oceanic and Atmospheric Administration) அமைப்பையும், கடற்படை வானிலை மற்றும் கடலியல் கட்டளையையும் (Naval Meteorology & Oceanography Command) சேர்ந்த நிபுணர்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து ஜூலி சங் தனது எக்ஸ் தளத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, ஒரு நாட்டின் கடலுக்கு அடியில் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வது, அதன் கடல்சார் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கு மிகவும் முக்கியமா…
-
- 0 replies
- 78 views
- 1 follower
-
-
19 Nov, 2025 | 04:03 PM (எம்.மனோசித்ரா) இலங்கையின் வரலாற்றில் புத்தர் சிலையை கைது செய்த முதல் ஆட்சியாளராக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சாதனை படைத்துள்ளார். புத்தரை கைது செய்வதற்கு சமமாக இடம்பெற்ற இந்த சம்பவத்தால் ஒட்டுமொத்த பௌத்த சமூகமும் அதிர்ச்சியடைந்துள்ளது. எமது நாளைய பேரணியில் இவ்வாறான சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக இந்த அரசாங்கத்தின் முடிவை ஆரம்பிப்பிக்கின்றோம் என பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் புதன்கிழமை (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், நாளை வெள்ளிக்கிழமை இந்த அரசாங்கத்தின் முடிவின் ஆரம்பிப்பதைக் குறிக்கும் நுகேகொடை பேரணியில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேச…
-
- 2 replies
- 257 views
- 1 follower
-
-
வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப் பத்திர கட்டணம் அதிகரிப்பு! வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிபத் பத்திரங்களை வழங்குவதற்காக வசூலிக்கப்படும் கட்டணங்களை திருத்தியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, வெளிநாட்டு பிரஜைக்கு ஒரு மாத காலத்திற்கு தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்களை பெறுவதற்கு முன்பு 2,000 ரூபாவாக இருந்த கட்டணம் ரூ.15,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு மேல் மற்றும் இரண்டு மாதங்கள் வரை சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கு வசூலிக்கப்படும் கட்டணம் 21,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இரண்ட…
-
- 0 replies
- 145 views
-
-
A/L பரீட்சை விடைத்தாள்களை அனுப்ப மறந்த அதிகாரிகள்: யாழில் வரலாற்று சம்பவம். இலங்கையின் கல்வித் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு மோசமான கவனக்குறைவு யாழ்ப்பாணம், நெல்லியடியில் உள்ள ஒரு பரீட்சை நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. நெல்லியடியில் உள்ள ஒரு பிரபல பாடசாலையில் அமைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சை மத்திய நிலையத்தில், உயிரியல் பாடத்தை எழுதிய 21 மாணவர்களின் முதலாம் பகுதிக்கான (பல்தேர்வு வினா) விடைத்தாள்கள் திருத்தும் பணிகளுக்காக அனுப்பப்படாமல் தவறவிடப்பட்டுள்ளன. கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தற்போது நடைபெற்று வருகின்றது. நெல்லியடியின் பிரபல பாடசாலையொன்றில் உள்ள பரீட்சை மத்திய நிலையத்தில் உயிரியல் பாடத்தின் பல்தேர்வு வினாப் பரீட்சை நடத்தப்பட்டது. 21 மாணவர்கள் பரீட்சையில் தோ…
-
- 0 replies
- 154 views
-
-
வடக்கில் 12 இடங்களில் இராணுவத்தினரின் சிகை அலங்கரிப்பு நிலையம்! adminNovember 20, 2025 வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் 12 இடங்களில் இராணுவத்தினர் சிகை அலங்கரிப்பு நிலையத்தினை நடாத்தி வருமானம் ஈட்டி வருவதாக வடமாகாண அழகக சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. வடமாகாணத்திற்குட்பட்ட இடங்களில் இராணுவத்தினரால் வன்னி பகுதியில் ஒரேயொரு சிகை அலங்கரிப்பு நிலையம் மட்டுமே நடாத்தப்பட்டு வருகின்றது என அமைச்சர் பிமல் ரத்நாயக்கா பாராளுமன்றில் தெரிவித்திருந்த விடயம் தொடர்பில் வடமாகாண அழகக சங்கங்களின் சம்மேளனம் கடும் கண்டனத்தை வெளியிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில், குறிப்பாக வடமாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறை தொண்டமானாறு வீதியில் அமைந்துள்ள இராண…
-
- 1 reply
- 168 views
-
-
தமிழ் அரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் காலமானார்! adminNovember 20, 2025 தமிழ் அரசியல் கைதியாக 17 ஆண்டுகள் சிறையில் இருக்கும் ஆனந்தசுதாகரின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் நேற்றைய தினம் காலமானர். ஆனந்தசுதாகரின் மனைவி 2018 ஆம் ஆண்டு கணவரின் பிரிவால் நோயுற்ற நிலையில் மரணமானார். இதனால் அநாதரவாக நிர்க்கதியாகநின்ற பிள்ளைகளை வயதான காலத்திலும் பராமரித்து வந்த பேத்தியாரான கமலா அம்மா (வயது 75) நோயுற்ற நிலையில், கடந்த சில தினங்களாக கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். அந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் புதன்கிழமை இரவு உயிரிழந்துள்ளார். “தகப்பன் வந்தால் பிள்ளைகளை ஒப்படைத்துவிட்டு போயிடுவன் இவங்களும் விடுறாங்களில்ல என்னவ…
-
- 1 reply
- 139 views
-
-
வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வொன்று அவசியம் - ஜனாதிபதி 19 Nov, 2025 | 07:12 PM வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வொன்று அவசியம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் அந்தக் கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (19) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. மாகாண சபைத் தேர்தல் மற்றும் புதிய அரசியலமைப்பொன்றின் அவசியம் குறித்து இதன் போது ஆராயப்பட்டதோடு, வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தொடர்ந்தும் பழைய அரசியல் தீர்வு பொருத்தமற்றது என்பதால் அதற்காக புதிய அரசியல் த…
-
- 1 reply
- 196 views
- 1 follower
-
-
விடைத்தாளை அனுப்ப மறந்த அதிகாரிகள் – 21 மாணவர்களின் எதிர்காலம் “?” adminNovember 20, 2025 நடைபெற்று வரும் க.பொ.த உயர்தர பரீட்சையின் விடைத்தாளை அனுப்ப மறந்த அதிகாரிகளினால் யாழ்ப்பாணத்தில் 21 மாணவர்களின் வாழ்வு கேள்விக்குறியாகியுள்ளது. நெல்லியடியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தர பரீட்சையில் உயிரியல் பாடத்தின் முதலாம் பகுதி விடைத்தாள் அதிகாரிகளின் கவனக் குறைவால் திருத்தல் பணிக்காக அனுப்பி வைக்கப்படவில்லை. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, உயிரியல் பாடத்தில் 21 மாணவர்கள் எழுதிய விடைத்தாள்களை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் , அவற்றினை ஒன்றாக கட்டி , ஏனைய காகித தாள்களுடன், சேர்த்து வைத்துள்ளனர். பின்னர் இரண்டாம் பகுதி விடைத்தாள்களை பெற்று , அவற்றினையும் ஒன்றாக சேர்ந்து கட்டிய பி…
-
- 0 replies
- 123 views
-
-
தற்போதைய அல்லது எதிர்கால அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் மீண்டும் ஒருபோதும் இனவாதத்தின் மீது எழுதப்படாது - ஜனாதிபதி 19 Nov, 2025 | 05:14 PM இனவாதத்திற்கு நாட்டில் மீண்டும் எந்த இடமுமில்லை. அது இறந்த கால வரலாற்றுக்குரியது. தற்போதைய அரசியல் நிகழ்ச்சி நிரல் அல்லது இந்த நாட்டின் எதிர்கால அரசியல் நிகழ்ச்சி நிரல் ஒருபோதும் இனவாதத்தின் அடிப்படையில் எழுதப்படாது என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தில் நேற்று (18) பங்கேற்று உரையாற்றியபோது ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். ஜனாதிபதியின் முழுமையான உரை பின்வருமாறு: “பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அ…
-
- 1 reply
- 171 views
- 1 follower
-
-
கடமைகளை பொறுப்பேற்றார்! adminNovember 20, 2025 வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் காவற்துறை மா அதிபராக ஜி.எம்.எச்.புத்திக்க சிறிவர்தன இன்றையதினம் வியாழக்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றார். காங்கேசன்துறையில் உள்ள வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் காவற்துறை மா அதிபரின் காரியாலயத்தில் நடைபெற்ற சம்பிரதாயபூர்வ சர்வமத வழிபாடுகளுடன் ஜி.எம்.எச்.புத்திக்க சிறிவர்தன தனது கடமைகளை பொறுப்பேற்றார். வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் காவற்துறை அதிபராக இருந்த திலக் தனபால வட மத்திய மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் காவற்துறை அதிபராக இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிய சிரேஸ்ட பிரதிப் காவற்துறை மா அதிபர் தனது கடமைகளை பொறுப்பேற்றார். குறித்த நிகழ்வில் மாவட்ட பிரதிப் காவற்துறை மா அதிபர், சிரேஷ்…
-
- 0 replies
- 74 views
-
-
கடற்கரைக்கு முதல் முறையாக கூட்டமாக வந்த டொல்பின்கள்: பொதுமக்கள் ஆச்சரியம்! Nov 16, 2025 - 12:01 PM மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக்கடவை கடற்கரைப் பகுதியை நோக்கி நேற்றைய தினம் (16) மதியம் ஒரு தொகுதி டொல்பின் மீன்கள் (Dolphins) கூட்டமாக வந்து சேர்ந்தன. இந்தச் சம்பவத்தை அறிந்த அப்பகுதி மீனவர்கள், பொதுமக்கள், பெண்கள், சிறுவர்கள் என அனைவரும் அங்கு சென்று பார்வையிட்டதோடு, சிறுவர்களுடன் டொல்பின்கள் விளையாடியதை அவதானிக்க முடிந்தது. மன்னார் மாவட்டத்தில் கரையோரப் பகுதிக்கு இந்த டொல்பின் மீன் இனம் கூட்டமாக வருகை தந்தமை இதுவே முதல் தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட நேரம் இலுப்பைக்கடவை கடற்கரையோரங்களில் கூட்டமாகச் சுற்றித் திரிந்த குறித்…
-
-
- 12 replies
- 551 views
- 1 follower
-
-
மானம் கெட்ட சுமந்திரன். கர்ச்சிக்கும் கறுப்பு பட்டி கருணாநிதி. பழைய காலத்து மித்திரன் பத்திரிகை பார்த்த மாதிரி இருந்தது.
-
- 0 replies
- 201 views
- 1 follower
-