Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள எல்லையற்ற அதிகாரத்தை பொறுப்புடன் கையாள வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். எமது வெற்றி மகத்தானது எனவும், வெற்றியினால் எமக்கு வழங்கப்பட்ட பொறுப்பின் எடை அதே அளவானது எனவும், அதற்காக நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (18) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, …

  2. நாடாளுமன்ற தேர்தல் இலங்கையில் பிரிவினைவாத அரசியலிற்கு முடிவுகண்டுள்ளது என ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். புதிய அமைச்சரவை நியமனத்தின் பின்னர் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் அரசியல் கலாச்சாரம் வடக்கை தெற்கிற்கு எதிராகவும்தெற்கை வடக்கிற்கு எதிராகவும் நிலைநிறுத்தும் அரசியலால் நீண்டகாலமாக வரையறுக்கப்பட்டிருந்தது என அவர் தெரிவித்துள்ளார். எனினும் இந்த தேர்தல் பிரிவினைவாத அரசியல் பிளவுபடுத்தும் அரசியல் இனி எடுபடாது என்பதை இந்த தேர்தல் காண்பித்துள்ளது என தெரிவித்துள்ள ஜனாதிபதி புதிய அரசாங்கத்திற்கு வாக்களித்தவர்களிற்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/199070

  3. (எம்.மனோசித்ரா) நாடளாவிய ரீதியிலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் முதற்கட்ட கற்பித்தல் செயற்பாடுகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமையுடன் (22) நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய 23ஆம் திகதியிலிருந்து 2025 ஜனவரி முதலாம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மீண்டும் 2025ஆம் ஆண்டு ஜனவரி இரண்டாம் திகதி முதல் 17ஆம் திகதி வரை 2024 கல்வியாண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெறவுள்ளன. இந்த விடுமுறை காலப்பகுதியில் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளும் இடம்பெறவுள்ளன. 2025 கல்வியாண்டுக்கான முதலாம் …

  4. தமிழரசின் அரசியல் குழுக்கூட்டம் இன்று; தேசியப் பட்டியல் ஆசனம் தனக்கு வேண்டும் என மாவை எழுத்து மூலம் கோரிக்கை ! இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பி. விவகாரத்தைத் தீர்மானிப்பதற்காக இன்று தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூடுகின்றது. வவுனியாவில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் அரசியல் குழுவில் அங்கம் வகிக்கும் மாவை சேனாதிராஜா, சி.வி.கே.சிவஞானம், ப.சத்தியலிங்கம், சிவஞானம் சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், கி.துரைராஜசிங்கம், தவராசா கலையரசன், கவீந்திரன் கோடீஸ்வரன், சண்முகம் குகதாசன் மற்றும் குலநாயகம் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி, ஒரு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையைப் பெற்றிருந்தது. …

  5. எமது நோக்கம் மற்றும் இலக்கின் அடிப்படையில் அனைத்து தரப்பையும் அரவணைத்துச் செல்ல நாங்கள் தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், சில கருத்தியல் ரீதியான வேறுபாடுகளை களைந்து மன்னார் வவுனியா மாவட்டங்களுக்கு ஏற்ப்பட்டுள்ள வெற்றிடங்களையும் கருத்தில்கொண்டு தேசியபட்டியல் ஆசனத்தை வைத்தியர் சத்தியலிங்கத்திற்கு வழங்குவதற்கு தீர்மானம் எடுத்தோம்.…

  6. 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அட்டவணையை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் இரண்டாவது வினாத்தாள் நடைபெறும். அன்று காலை 11.15 மணி முதல் மதியம் 12.15 மணி வரை முதலாவது வினாத்தாள் நடைபெறும். பரீட்சைக்காக விண்ணப்பித்தவர்களின் அனுமதி அட்டைகள் அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை ஆவணங்கள் கிடைக்காத அதிபர்கள் www.doenets.lk அல்லது https://onlineexams.gov.lk/eic என்ற இணையதளத்திற்குச் சென்று ஆவணத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். குறிப்பிடப்பட்ட விண்ணப…

  7. (எம்.மனோசித்ரா) தேசிய சொத்துக்களை கொள்ளையடித்த கள்வர்களை கைது செய்வதாகவும், அந்த சொத்துக்களை மீட்பதாகவும் அரசாங்கம் மக்களுக்கு வாக்குறுதியளித்திருக்கிறது. அதனை நிறைவேற்றுவதற்கு எதிர்க்கட்சியாக எமது முழுமையான ஒத்துழைப்பை நாம் அரசாங்கத்துக்கு வழங்குவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், பிரதான எதிர்க்கட்சியாக மீண்டும் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவாகியுள்ளது. மூன்றில் இரண்டுக்கும் அதிக பெரும்பான்மையுடைய ஆளுங்கட்சியுடன் பாராளுமன்றத்தில் செயற்பட வேண்டியுள்ளது. அ…

  8. மன்னார்-யாழ் பிரதான வீதி பெரியமடு கொமான்டோ ராணுவ பயிற்சி முகாமில் 500 இற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தனிமைபடுத்தி உள்ளதாக தெரிய வருகிறது. குறித்த பயிற்சி முகாமில் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் சிலருக்கு சுகயீனம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டனர். இதன் போது இவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது அவர்கள் மூளைக் காய்ச்சல் ஏற்பட்டமை கண்டறியப்பட்டது. இதனை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா உறுதி படுத்தினார். இந்த நிலையில் குறித்த பயிற்சி முகாமில் பயிற்சி நடவடிக்கைகளை நிறுத்த வைத்திய தரப்பினால் கோரிக்கை முன் வைக்கப்பட்ட நிலையில், அங்கு பய…

  9. பாராளுமன்ற பொதுத் தேர்தல் ஆவணங்கள் அச்சிடும் பணி ஆரம்பம் பாராளுமன்ற பொதுத் தேர்தல் தொடர்பான ஆவணங்கள் அச்சிடும் பணி தொடங்கியுள்ளதாக அரச அச்சகர் கங்காணி கல்பனா லியனகே தெரிவித்தார். பாராளுமன்ற பொதுத் தேர்தல் மற்றும் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான போதிய ஆவணங்கள் அரசாங்க அச்சகத்தில் இருப்பதாகவும் அவர் கூறினார். பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான அறிவிப்புகள், வர்த்தமானி அறிவித்தல் போன்றவற்றை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற பொதுத்தேர்தலில் 25 மாவட்டங்களில் வேட்பு மனுக்கள் ஏற்கப்படுவதால், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா 25 வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கப்பட உள்ளன. https://thinakkural.lk/article/309954

  10. (லியோ நிரோஷ தர்ஷன்) மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்புடன் இலங்கையின் புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதுடன், தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகளும் நிறைவேற்றப்படும் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார். குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிய அரசியலமைப்பு, ஜனநாயகத்தை வலுப்படுத்துதல், நாட்டு மக்களின் உரிமைகள் சார்ந்த விடயங்கள் மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்தல் போன்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. இவை அனைத்தும் நிறைவேற்றப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும…

  11. இலங்கையில் இன்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை லங்காசிறியின் நேரலை ஊடாக உடனுக்குடன் பெற்றுக்கொள்ள முடியும். இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் சிறப்பு நேரலையை இந்த இணைப்பில் பார்வையிடலாம். மேலும் உங்கள் கருத்துக்களுடன் நீங்களும் நேரலையில் இணைந்துகொள்ளலாம். https://tamilwin.com/article/sri-lanka-presidential-election-2024-live-updates-1726934857#google_vignette திருவுளச்சீட்டு முறையின் மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார் : தேர்தல் ஆணையாளர் வெளியிட்ட அறிவிப்பு நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் ஒரு எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றுக்கொண்டிருந்தால் திருவுளச் சீட்டு முறையின் மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்படு…

  12. தமிழரசு கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் அறிவிப்பு! November 17, 2024 02:45 pm தமிழரசுக் கட்சியின் தேசியபட்டியல் ஆசனத்தை வைத்தியர் ப.சத்தியலிங்கத்திற்கு வழங்க கட்சியின் அரசியற்குழு தீர்மானித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (17) காலை இடம்பெற்றது. இதன்போது கடந்த தேர்தலில் தமிழரசுக்கட்சிக்கு கிடைத்த ஒரு தேசியபட்டியல் ஆசனத்தை வழங்கும் விடயம் தொடர்பாக நீண்ட விவாதங்கள் இடம்பெற்றன. விவாதங்களின் பின்னர் குறித்த தேசியப்பட்டியல் ஆசனத்தை ஏற்கனவே வன்னித் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்…

  13. தமிழர் தரப்புக்கள் ஒன்றிணைய வேண்டும். அதேவேளை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் தரப்புக்களும் ஒண்றிணைந்து செயற்பட வேண்டும் என சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இடதுசாரிகளுக்கு என பண்பியல்வு இருக்கிறது. அவர்கள் தமக்கு ஏற்றவாறு சட்டங்களை மாற்றி தமது ஆட்சியை தக்க வைத்துக்கொண்டிருப்பார்கள். இதனை உணர்ந்து கொண்டு தமிழர்தரப்பு ஒற்றைமைப்பட வேண்டும். வடக்கையும் கிழக்கையும் பறிகொடுத்து விட்டு, எங்கள் மீது திணிக்கப்பட போகும் தீர்வுகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட போகும் என்பதனை உணர்ந்து கொண்டும், உள்ளூராட்சி தேர்தல் மற்றும் மாகாண சபை தேர்தல்களிலும…

  14. மட்டக்குளிய பிரதேசத்தில் 16ஆம் திகதி இரவு மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது கடத்தல் சம்பவம் தொடர்பில் தனிபட்ட தகவல் வழங்குநரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் 04 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் 24, 26, 27 மற்றும் 32 வயதுடையவர்கள் எனவும், இவர்கள் புதுக்குடியிருப்பு, கொட்டாஞ்சேனை, எச்சிலம்பற்று மற்றும் தோபூர் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி சந்தேக நபர்களை கைது செய்து விசாரணை நடத்தியதில் எச்சிலம்பற்று மற்றும் தோபூர் பிரதேசங்களில் வசிக்கும் சந்தேகநபர்கள் இருவரும் வடகிழக்கு பகுதியில் சில சம்பவங்களுடன் தொடர்புடைய ஆவா கும்பலைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. மற்றைய இரு சந்தேக …

  15. மகத்தான தேர்தல் வெற்றியை தொடர்ந்து நீதிக்கும் நல்லிணக்கத்துக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று தேசிய சமாதானப் பேரவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடமும் அவரது அரசாங்கத்திடமும் வலியுறுத்திக் கேட்டிருக்கிறது. இது தொடர்பாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது : பாராளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வெற்றியைப் பெற்றதை முன்னிட்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் தேசிய சமாதானப் பேரவை அதன் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. இந்த பிரமாண்டமான ஆணை பொருளாதார அபிவிருத்தி, நீதி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி நாட்டை வழிநடத்துவதில் ஜனாதிபதி மீதும…

  16. ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க வழங்கிய வாக்குறுதிகள் உண்மை எனில் உடனடியாக மாவீரர் துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்பட்டு, மாவீரர் நாளுக்கு முன்னதாக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என யாழ்ப்பாண மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட பொன் சுதன் தெரிவித்துள்ளார். வடமராட்சி பகுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, போரினால் தமது பிள்ளைகளை பறிகொடுத்த தாய்மார்கள் கூட உங்களது வாக்குறுதிகளை நம்பி வரலாற்றில் என்றுமில்லாதவாறு தங்களிற்க்கு வாக்களித்துள்ளார்கள். இது தாங்கள் வழங்கிய நம்பிக்கையின் அடிப்படையில் ஆகும். எனவே அந்த வாக்குறுதிகள் உண்மை எனில் முதல் கட்டமாக தாங்…

  17. எங்களுக்கு வெற்றி வாகை வந்து இருக்கலாம் ஒரு அலை வந்து யாழ்ப்பாணத்தை கொண்டு போய்விட்டது. இங்கே காலம் காலமாக இருந்தவர்கள் அந்த அலையில் வீசப்பட்டு விட்டார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் தெரிவித்தார். இன்று (16) யாழில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நான் இரண்டு தடவைகள் பாராளுமன்றத்தில் இருந்துள்ளேன். நான் வந்து மீண்டும் பாராளுமன்றத்திற்கு செல்லவதற்காக இதை செய்யவில்லை தமிழ் தேசியத்திற்காக தான் சுயேட்சையாக கேட்கப்பட்டது. தேசியப்பட்டியல் ஆசனம் ஒரு போதும் எனக்கு வேண்டாம் என கூறிய சுமந்திரன், ஆனால் மத்திய குழு எடுக்கும் தீர்மானத்திற்கு கட்டுப்படுவேன் என தெரிவித்துள்ளார், மத்த…

  18. வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் செயலாளர் ப. சத்தியலிங்கம் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையின் பிரதியை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் வழங்க முற்ப்பட்ட போது அதனை சுமந்திரன் வாங்க மறுத்துள்ளார். தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தற்போது இடம்பெற்றுவருகின்றது. பொறுப்பற்ற தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் இதன்போது கட்சியின் செயலாளரின் பொறுப்பற்ற தான்தோன்றித்தனமான செயற்பாடுகளால் கட்சியின் கூட்டுப்பொறுப்பு உருக்குலைக்கப்பட்டதாகவும் அதனை விசாரணை செய்யுமாறு கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனால் கட்சியின் பதில் செயலாளருக்கு எதிராக குற்றப்பத்திரிகை ஒன்று …

  19. ரில்வின் சில்வாவின் கருத்து தமிழ் மக்கள் எதிர்கொள்ளப்போகின்ற ஆபத்தை தெளிவாக புலப்படுத்துகின்றது; ஒற்றையாட்சி அரசமைப்பை ஏற்கமாட்டோம் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் அவர் சார்ந்த தேசிய மக்கள் சக்தியும் ஒரு புதிய அரசமைப்பாக எண்ணியிருக்கின்ற வரைபை நாங்கள் முழுமையாக எதிர்க்கின்றோம்" என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தமது கட்சி அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை (16) நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- தேசியம் சார்ந்த அரசியலுக்கும் கொள்கை சார்ந்த - தமிழ் மக்களுடைய இருப்பு சார்…

  20. நீர்கொழும்பு, தெமங்சந்தி பிரதேசத்தில் இலக்கத் தகடு இல்லாத சொகுசு வாகனம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர். நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சொகுசு வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது. வெளிநாட்டில் உள்ள தனது சகோதரன் ஊடாக இந்த சொகுசு வாகனம் தனக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சொகுசு வாகனத்தின் உரிமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த சொகுசு வாகனம் பிரபல வர்த்தகர் ஒருவரினால் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழ…

  21. பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில், அடுத்த நடவடிக்கை குறித்து கட்சி பரிசீலித்து வருகிறது. அதற்கமைய எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வின் போது உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளனர். இதனையடுத்து புதிய அமைச்சரவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய பிரதமர் இந்நிலையில் புதிய அரசாங்கத்தின் பிரதமராக, தற்போதைய அமைச்சரான விஜித ஹேரத்தை நியமிக்க வேண்டும் என கட்சிக்குள் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது வெளியான விருப்பு வாக்குகளின் அடிப்படையில் கம்பஹா மாவட்டத்தில் அதிகூடிய 716,715 வாக்குகளை விஜித் ஹேரத் பெற்றுள்ளார். இதனையடுத்து இந்தக் கோ…

  22. நமது நிருபர் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு ஏற்கனவே கட்சிகளால் பரிந்துரைக்கப்பட்டவர்கள் அல்லது சமீபத்திய பொதுத் தேர்தலில் தேர்தலில் வேட்பாளர் பட்டியலில் உள்வாங்கப்பட்டு தெரிவு செய்யப்படாதவர்கள் மட்டுமே தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களாக பாராளுமன்றத்திற்கு பெயரிட முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் திணைக்களத்தில் நேற்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரசியல் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளுக்கு அமைவாக தேசியபட்டியல் ஆசனங்களின் ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அரச…

  23. ஒற்றையாட்சிக்கு எதிராகவே மக்கள் வாக்களித்துள்ளனர்! ஒற்றையாட்சிக்கு எதிராகவே வட கிழக்கு தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்திக்கு 80,000 வாக்குகள் மட்டும் தான் கிடைத்தது ஆனால் சமஷ்டியை வலியுறுத்தும் தமிழ் தரப்புகளுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வாக்குகள் கிடைத்துள்ளன என எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், டக்ளஸ் மற்றும் அங்கஜன் போன்றோரின் வாக்குகளே NPP இற்கு கிடைக்கப் பெற்றுள்ளது. அவர்களை மக்கள் நிராகரித்துள்ளனர். நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தல் முடிவுகள் முழு நாட்டிற்கும் தமிழீழ மக்களுக…

    • 1 reply
    • 486 views
  24. நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதிவு இன்று முதல் ஆரம்பம்! 10வது நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களின் இணையவழி பதிவு இன்று (17ம் திகதி) முதல் வரும் 20ம் திகதி வரை நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறு இருப்பினும் குறித்த நாட்களில் நாடாளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்தும் பதிவு செய்ய முடியும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். இதேவேளை, தேசிய பட்டியலிலிருந்து தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்களின் பெயர் பட்டியலை உடனடியாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. https://athavannews.com/2024/1408793

  25. தேசிய மக்கள் சக்தி ஊடாக நாடாளுமன்றுக்கு பிரவேசிக்கும் 16 பெண் பிரதிநிதிகள்! பொதுத் தேர்தலில் ஏறக்குறைய 20 பெண்கள் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் தேசிய மக்கள் சக்தியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பது விசேட அம்சமாகும். அந்தவகையில், தேசிய மக்கள் சக்தி சார்பாக கலாநிதி ஹரிணி அமரசூரிய கொழும்பு மாவட்டத்தில் 655,289 வாக்குகளை பெற்று நாடாளுமன்றம் செல்லவுள்ளார். சமன்மலி குணசிங்க, கொழும்பு மாவட்டத்தில் 59,657 வாக்குகளை பெற்று நாடாளுமன்றுக்குத் தெரிவாகியுள்ளதோடு, அம்பிகா சாமுவேல் – பதுளை மாவட்டத்தில் 58,201 வாக்குகளை பெற்று நாடாளுமன்றுக்கு செல்லவுள்ளார். களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட்ட நிலந்தி கொட்டஹெச்சிகே 13…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.