Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சவேந்திர சில்வாவின் பதவி பறிபோகின்றது! பாதுகாப்புப் படைகளின் பிரதானி அலுவலகத்தை இல்லாமல் செய்வதனூடாக அவரது பதவியைப் பறிப்பதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதானியாக ஜெனரல் சவேந்திர சில்வா கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கடமையாற்றுகின்றார். பாதுகாப்பு படைகளின் பிரதானியாக செயற்பட்ட அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அந்தப் பதவியில் இருந்து ஓய்வுபெற்றபின்னர், அப்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவால் ஜெனரல் சவேந்திர சில்வா பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதானியாக நியமிக்கப்பட்டிருந்த நிலையில், பாதுகாப்புப் படைகளின் பிரதானி அலுவலகத்தை இல்லாமல் செய்வத…

    • 2 replies
    • 487 views
  2. கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் அமைதியின்மை! கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று காலை ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில் சற்று முன்னர் கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. கூட்டத்தில் அனுமதியின்றி நுழைந்த நபரொருவருக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் இடையில் உண்டான வாக்குவதாம் காரணமாக அமைதியின்மை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் அமைச்சர் சந்திரசேகரன் தலையீடு செய்து கூட்டத்தை அமைதி நிலைக்கு கொண்டு வந்துள்ளார். கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன், வடமாகாண ஆளுநர் வேதநாயகன் இணைத் தலைமையில் இன்று காலை ஆரம்பமான குறித்த கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன், இராமநாதன் அர்ச்சுனா, ர…

  3. தேசிய மட்ட குத்துச்சண்டை போட்டியில் வவுனியா மாணவனுக்கு வெள்ளி பதக்கம். தேசிய மட்ட இளையோருக்கான குத்துச்சண்டை போட்டியில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவன் T.தரனிதரன் வெள்ளிப்பதக்கத்தை பெற்றுக்கொண்டுள்ளான். இளையோருக்கான இவ் குத்துச்சண்டை போட்டியானது , 18,19 மற்றும் 20 ஆம் திகதிகளில் கண்டியில் நடைபெற்றது. இதன்போது 69 – 71 kg எடைப்பிரிவில் போட்டியிட்ட இம் மாணவன் இறுதிப்போட்டியில் கண்டி சென் சில்வஸ்ரார்ஸ் கல்லூரி மாணவனை எதிர்கொண்டு இரண்டாம் இடத்தினைப்பெற்று வெள்ளிப்பதக்கத்தை பெற்றுக்கொண்டான். இப் போட்டியில் கண்டி வித்தியார்த்த கல்லூரி மாணவனுடன் தெரிவு போட்டியில் வெற்றியீட்டி அரையிறுதிபோட்டிக்கு தெரிவாகிய தரனிதரன் அரை இறுதிப்போட்டியில் ,கொழும்பு ரோயல் கல்ல…

  4. அரிசி இறக்குமதிக்கான தடை இன்று முதல் நீக்கம்! இடைநிறுத்தப்பட்டிருந்த அரிசி இறக்குமதிக்கான அனுமதி இன்று (26) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மோசமான வானிலையால் நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக கடந்த டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையில் தனியார் துறை வர்த்தகர்களுக்கு நேரடியாக அரிசியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அக்காலப் பகுதியில் மொத்தமாக 67,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. எவ்வாறெனினும், அண்மையில் நடைபெற்ற அமைச்சரவையில் அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் ஜனவரி 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டதுடன், அதற்கான வர்த்தமானி அறிவித்தல் கடந்த …

  5. 2024 இல் சுற்றுலா பயணிகளின் வருகை 2 மில்லியனை விஞ்சியது! 2024 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த மொத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இன்று (26) இரண்டு மில்லியனைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தை சேர்ந்த தம்பதியரே அந்த இலக்கை அடைந்ததாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன. டிசம்பர் முதல் பாதியில் மாத்திரம் மொத்தம் 97,115 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக 6,474 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். https://athavannews.com/2024/1414160

  6. நாட்டில் இனங்காணப்படும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பைத் தொடர்ந்து 15 சுகாதார மருத்துவ அதிகாரப் பிரிவுகள் அதி உயர் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இம்மாதம் 17 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் 47 ஆயிரத்து 599 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கடந்த மாதம் சுமார் 3,178 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். சில நாட்களாக நிலவிவந்த மழையுடன் கூடிய வானிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக டெங்கு பரவல் அதிகரித்துள்ளது. அதற்கமைய அனைத்து மாவட்டங்களிலும் பதிவாகக்கூடிய டெங்கு நோயாளர்களின் வீதமும் சடுதியாக அதிகரித்துள்ளது. டெங்கு பரவலைக் கருத்திற் கொண்டு 15 சுகாதார மருத்துவ அதிகார…

  7. Published By: DIGITAL DESK 7 25 DEC, 2024 | 11:32 PM ஆர்.ராம் 2024 ஆம் ஆண்டில் இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறிப் பிரவேசித்த குற்றச்சாட்டில் 554 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு 72 மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை பேச்சாளர் கப்டன் கயான் விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை தடுப்பதற்காக நாம் விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். அந்த வகையில் இந்த ஆண்டில் மேற்கொண்ட நடவடிக்கைகளின்போது 554 பேரை எல்லை தாண்டிய குற்றத்துக்காக கைது செய்து சட்ட நடவடிக்கைகளுக்காக கை…

  8. வடக்கு மக்கள் அவர்களின் சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோருகின்றார்களே அன்றி இராணுவத்தினரின் காணிகளை அல்ல என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். வசாவிளானில் நடைபெற்ற விடுவிக்கப்பட்ட காணிகளில் விவசாய நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல் மற்றும் மர நடுகை விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “இடம்பெயர்ந்தவர்களின் வலி எனக்கும் தெரியும். நானும் இடம்பெயர்ந்த ஒருவன்தான். தற்போது யாழ். மாவட்ட இராணுவத்த தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள யஹம்பத் நேர் சிந்தனை உடைய ஒருவர். https://tamilwin.com/article/vedhanayagan-on-governor-n-vedhanayakan-1735169633 “இடம்பெயர்ந்தவர்களின் …

    • 1 reply
    • 197 views
  9. முள்ளிவாய்க்கால் பேரவலம் இடப்பெற்ற பகுதிக்கு செல்வதை கர்தினால் மெல்கம் ரஞ்சித் இன்றுவரை தவிர்த்து வருகின்றார். சர்வதேசத்தின் பிரதிநிதிகள் பலர் இதுவரை முள்ளிவாய்க்காலுக்கு விஜயம் செய்துள்ள போதிலும் இலங்கையின் கர்தினால் மெல்கம் ரஞ்சித் முள்ளிவாய்க்காலுக்கு செல்லவில்லை. யுத்த காலத்தில் கடும்போக்காக செயற்பட்ட அரசியல்வாதிகளுக்கு சாதகமான கருத்துக்களை கூறிவந்த மெல்கம் ரஞ்சித், பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாக குரல் எழுப்பவில்லை. இவ்வாறிருக்க, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கேட்டு குரல் எழுப்பிய அவர், தற்போது அந்த விடயத்திலும் சிறிது அமைதி காப்பது போலவே உள்ளது. https://tamilwin.com/article/malcolm-ranjith-avoids-going-to-mullivaikkal-1735171168

  10. கிளிநொச்சியில் கோர விபத்து - குழந்தை பலி December 25, 2024 08:58 pm கிளிநொச்சி நகரில் இடம்பெற்ற கோர விபத்தில் 2 வயது குழந்தை பலியானதுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று (25) இரவு 7.00 மணியளவில் மோட்டார் சைக்கிளுடன் ரிப்பர் வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது. A9 வீதியால் பயணித்த ரிப்பர் வாகனம் குறித்த மோட்டார் சைக்கிளை மோதி விபத்தினை ஏற்படுத்தியதுடன், விபத்து இடம்பெற்ற பகுதியிலிருந்து சுமார் 100m பாதையை விட்டு விலகி பயணித்துள்ளது. விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளையும் ரிப்பர் வாகனம் குறிப்பிட்ட அளவு தூரம் இழுத்து சென்றுள்ளதுடன், தொழிற்பயிற்சி நிற…

  11. கடலில் நீராட சென்ற மூவர் மாயம் - அம்பாறையில் சம்பவம் கடலில் நீராட சென்ற மூவர் காணாமல் சென்ற சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சங்கமன்கண்டி உமிரி கடற்கரையில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இதன் போது குறித்த சம்பவத்தில் தாண்டியடி உமிரி கடற்கரையில் நீராடச்சென்ற தந்தை மகன் மற்றும் அவர்களின் உறவினரின் மகன் என மூவர் காணாமல் சென்றுள்ளனர்.இவ்வாறு காணாமல் சென்றவர்களை தேடும் பணி தீவிரம் கடற்படையினர் மற்றும் மீனவர் சமுகத்தினர் பொதுமக்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர் மேலும் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கமன்கண்டி தாண்டியடி உமிரி பகுதியில் கிறி…

  12. 25 DEC, 2024 | 05:19 PM (செ.சுபதர்ஷனி) இலங்கையில் முதன் முறையாக மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு பொது மக்களை தொளிவூட்டும் நோக்கில் விசேட பயிற்சிபெற்ற தன்னார்வ சிறப்பு தூதுவர்கள் 100 பேரை உள்ளடக்கிய தன்னார்வ தொண்டர் குழு நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இரத்மலானை ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான மு…

  13. பண்டிகைக் காலங்களில் இணையம் ஊடாக பண மோசடிச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவின் பிரதம தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த இதனைத் தெரிவித்தார். சில பரிசுகளை வென்றதாக கூறி வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து பண மோசடி செய்ததாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சில முறைகேடுகள் நடப்பதாக முறைப்பாடுகள் பதிவாகியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இவ்வாறான அழைப்புகள் மற்றும் சம்பவங்களில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வதற்கு பொதுமக்கள் விசேட அவதானம் செலுத்த வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார். https://thi…

  14. சுனாமி அனர்த்தம் நிகழ்ந்து 20 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாளை காலை 9.25 மணி முதல் 02 நிமிடங்கள் மௌனத்தை கடைப்பிடிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் மக்களை கோரியுள்ளது. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி நடந்த சுனாமி பேரழிவில் 35,000 க்கும் அதிகமானோர் இறந்தனர் மற்றும் 5,000 க்கும் அதிகமானோர் காணாமல் போயினர். மேலும், மாவட்ட மட்டத்திலும் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/314131

  15. Published By: VISHNU 25 DEC, 2024 | 05:59 PM இராணுவத்தினரின் காணிகளை வடக்கு மக்கள் விடுவிக்கக் கோரவில்லை. அவர்களின் சொந்தக் காணிகளையே விடுவிக்கக் கோருகின்றார்கள் என்ற தெளிவுபடுத்தலை தென்னிலங்கை மக்களுக்கு எடுத்துச் சொல்லுமாறு என்னைச் சந்தித்த தென்னிலங்கையைச் சேர்ந்த சிவில் சமூகக் குழுக்களிடம் தெரிவித்துள்ளேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வயாவிளான், பலாலி தெற்கு, பலாலி கிழக்கு மக்களின் அழைப்பின் பேரில் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் விடுவிக்கப்பட்ட காணிகளில் விவசாய நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடலும், பூனையன்காடு இந்து மயானத்தில் மர நடுகையும் இன்று புதன்கிழமை காலை (25.12.2024) வயாவியானில் நடைபெற்றது…

  16. ஜோசப் பரராஜசிங்கத்தின் 19ஆவது நினைவு தினம்! மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலத்தில் கிறிஸ்மஸ் ஆராதனையின்போது சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 19ஆவது நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இன்று (25.12.2024) மாலை தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் கே.சோபனன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு நீதிவேண்டி அமைதியான முறையில் கவன ஈர்ப்பு ஊர்வலமொன்று நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மண்டபத்தில் ஜோசப் பரராஜசிங்கத்தின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்…

  17. Published By: DIGITAL DESK 3 25 DEC, 2024 | 01:48 PM மனிதத்தினை உலகுக்கு வெளிப்படுத்திய இயேசு பிரானின் பிறப்பைக் கொண்டாடப்படும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாடெங்கும் உள்ள தேவாலயங்களில் விசேட வழிபாடுகள், ஆராதனைகள் நடைபெற்றன. யாழ்ப்பாணம் யாழ். மறை மாவட்டத்துக்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அமைந்துள்ள சீயோன் தேவாலயத்திலும் கிறிஸ்மஸ் தின ஆ…

  18. 25 DEC, 2024 | 11:07 AM நத்தார் பண்டிகையை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து 8 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இன்று நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் சிறு குற்றங்களுக்காக தண்டனை பெற்றிருந்த 389 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்திருந்தது. அந்தவகையில் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் சிறுகுற்றங்களுக்காக தடுத்துவைக்கப்பட்டிருந்த 8 பேர் இன்று புதன்கிழமை (25) விடுவிக்கப்பட்டனர். வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையின் பொறுப்பதிகாரி புத்திக பெரெரா தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. …

  19. நாட்டில் அதிகரித்துவரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்: 60 பேர் உயிரிழப்பு. இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 101 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பங்களினால் 60 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 44 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை ஒடுக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1413909

  20. மகிந்தவின் பாதுகாப்பு கௌதம புத்தரிடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு கௌதம புத்தரிடம் ஒப்படைக்கப்படுமெனவும் அரசாங்கத்தின் தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்துவதில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டமை தொடர்பில் அவரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் குழுவை அமைத்து தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது. அந்த தீர்மானங்களை நாங்கள் பிரச்சினைக்கு உட்படுத்தப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் மீளாய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவுக்கு நாட்டின்…

  21. அஸ்வெசும தொடர்பில் அதிரடி வர்த்தமானி புதிய விசேட வர்த்தமானி மூலம், அஸ்வெசும நலன்புரி நன்மைக் கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ் தகுதியான குடும்பங்கள் மற்றும் தனிநபர்களுக்கு மாதாந்தப் பலன்களை வழங்குவதற்கான திட்டத்தை அறிவித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் 17.05.2024 அன்று வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலும், இது தொடர்பில் இதுவரை அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில், இம்மாதம் 21ஆம் திகதி வெளியிடப்பட்ட இந்த புதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, புதிய வர்த்தமானி அறிவித்தலின் மூலம், 2025 ஜனவரி முதல் மார்ச் வரை 480,000 இடைநிலைக்…

  22. Published By: VISHNU 25 DEC, 2024 | 03:05 AM (நா.தனுஜா) சீனாவும், இலங்கையும் ஒருவருக்கொருவர் அவசியமான உதவிகளை வழங்குகின்ற, நீண்டகால நட்புறவைக் கொண்டிருக்கின்ற ஒத்துழைப்புப் பங்காண்மை நாடுகளாகும். அதன்படி இலங்கையுடன் மிகநெருங்கிய உயர்மட்டத்தொடர்பைப் பேணுவதற்குத் தாம் தயாராக இருப்பதாக சீன வெளிவிவகாரப் பேச்சாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவரது பதவியேற்பின் பின்னர் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் முதலாவதாக இந்தியாவுக்கான அரசமுறை விஜயத்தை மேற்கொண்டிருந்தார். அதனையடுத்து எதிர்வரும் ஜனவரி மாதம் அவர் சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவிருக்கும் நிலையில், நேற்று முன்தினம் பெய்ஜிங்கில…

  23. Published By: VISHNU 25 DEC, 2024 | 02:56 AM (எம்.மனோசித்ரா) உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு புதிதாக வேட்புமனுக்களைக் கோருவதற்கான சட்ட மூலத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. திங்களன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான புதிய வேட்புமனுக்களை கோருவதற்கு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய குறித்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு சட்டமா அதிபரின் அங்கீகாரமும் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்ட மூலம் அடுத்த மாதம் பாராளும…

  24. Published By: VISHNU 24 DEC, 2024 | 06:18 PM சகல மக்களும் நாட்டின் எதிர்காலத்திற்காக ஒன்றிணைந்துள்ளோம். பிரிவினையின் இருளில் இருந்து விலகி அமைதியுடன் ஆட்சி செய்யும் தோழர்களின் பூமியாக நமது நாடு படிப்படியாக மாற்றமடைகிறது. சுதந்திரம் மற்றும் நீதியின் அடிப்படையில் இயேசுநாதர் செய்த போராட்டத்தின் காரணமாக அவர் புனிதரானார். அந்த மனிதாபிமான சுதந்திரம் மற்றும் நியாயத்தை மதித்து அவருடைய வழிகாட்டுதலை உண்மையாக்க ஒரு அரசாங்கமென்ற வகையில் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். வளமான நாட்டை உருவாக்க வலுவான உறுதியுடன் நம்மை அர்ப்பணிக்க இந்தப் புனித நத்தார் தினத்தில் நாம் அனைவரும் உறுதி பூணுவோம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாழ்த்துச்செய்தில் தெரிவித்…

  25. · விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு சந்தைகளில் பத்து சத வீதக் கழிவு அறவிடும் நடைமுறை அடுத்த ஆண்டு ஜனவரியிலிருந்து முழுமையாக ஒழிக்கப்படவேண்டும். அதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்குப் பணித்துள்ளேன். இந்த விடயத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வடக்கு மாகாண விவசாயத் திணைக்களமும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.