ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143449 topics in this forum
-
பிரபாகரனுக்கு பின்னரான காலமென்பது அரசியல் அர்த்தத்தில் சம்பந்தனின் காலமாகவே நீள்கிறது. பிரபாகரன் இருந்த வரைக்கும் தமிழர் அரசியல் என்பது அவரது ஆளுமைக்குட்பட்ட ஒன்றாகவே இருந்தது. இந்தக் காலத்தில் தமிழ் தேசியம் என்பதே பிரபாகரனும் அவரால் வழிநடத்தப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வழியாகவே பார்க்கப்பட்டது. அந்த வகையில் முப்பது வருடங்களுக்கும் மேலாக பிரபாகரன் என்னும் நாமமே தமிழ் தேசியத்தின் குறியீடாக இருந்தது. அன்றைய சூழலில் பிரபாகரனை அவரது பலம் பலவீனங்களோடு ஏற்றுக் கொள்வதை தவிர தமிழ் சூழலில் வேறு தெரிவுகள் இருந்திருக்கவில்லை. அனைவருக்குமே பிரபாகரனின் வெற்றி தேவைப்பட்டது. பிரபாகரனை விமர்சித்தவர்கள் கூட பிரபாகரனிடமிருந்து வெற்றியை எதிர்பார்த்து காத்திருந்தனர். இதன்…
-
- 0 replies
- 247 views
-
-
மஹிந்தவின் பேச்சாளர் கடத்தப்பட்டார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் பேச்சாளர் ரொஹான் வெலிவிட்ட, சிங்கபூரிலிருந்து நாடுகடத்தப்பட்டார். - See more at: http://www.tamilmirror.lk/173735/மஹ-ந-தவ-ன-ப-ச-ச-ளர-கடத-தப-பட-ட-ர-#sthash.u7cZXMZU.dpuf
-
- 4 replies
- 846 views
-
-
வடக்கையும் கிழக்கையும் ஒருபோதும் இணைக்கக்கூடாது : என்கிறார் கெஹெலிய.! மாகாண சபைகளுக்கு குறைந்தளவிலான பொலிஸ் அதிகாரங்களை வழங்கலாம். ஒரு முறைமையின் கீழ் இதனை முன்னெடுக்கவேண்டும். ஆனால் வடக்கையும் கிழக்கையும் இணைத்தால் கிழக்கு மாகாணத்தில் வாழும் சிங்கள முஸ்லிம் மக்களின் நிலைமை கேள்விக்குறியாகிவிடும் என்று பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். ஒன்றுக்கு மேற்பட்ட மாகாணங்களை இணைக்கக்கூடாது என்றும் மாகாணங்களுக்கு குறைந்தமட்ட பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியும் என்றும், மக்கள் கருத்தறியும் குழு பரிந்துரை செய்துள்ளமை தொடர்பில் விளக்குகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். http://www.virakesari.lk/art…
-
- 7 replies
- 692 views
-
-
ஜனாதிபதி என்பதை நிறூபித்துகாட்டுங்கள்; விமல் சவால் (க.கமலநாதன்) மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன மகேந்திரனின் பதவிக்காலம் இம்மாதம் 31 ஆம் திகதி முற்றுப்பெறவுள்ள நிலையில் அவரை குறித்த பதவியில் மீண்டும் அமர்த்தாமலிருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தான் இந்த நாட்டின் ஜனாதிபதி என்பதை மைத்திரி உணர்த்த வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சவால் விடுத்துள்ளார். தேசிய சுதந்திர முன்னணியின் கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இவர் மத்திய ஆளுனர் அர்ஜுன மஹேந்திரன் குறித்த பதவிக்கு தகுதியானவர் அல்லவென குறிப்பிட்டிருந்தார். அத்துடன் பிரத…
-
- 5 replies
- 472 views
-
-
இலங்கை பணிப்பெண்ணுக்கு, 66,800 சவுதி ரியால் நட்டஈடு. கடந்த 13 வருடங்களாக ஊதியமின்றி பணியாற்றிய இலங்கை பணிப்பெண்ணுக்கு 66,800 சவுதி ரியால் நட்டஈடு வழங்குமாறு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது மூன்று பிள்ளைகளின் கல்வித் தேவைக்காக 400 சவுதி ரியால் சம்பளத்திற்கு 13 வருடத்திற்கு முன்னர் வீட்டுப் பணிப்பெண்ணாக சவுதி அரேபியாவுக்கு சென்ற சேதா காதர் இஸ்மயில் ஆயிசா உம்மா என்ற பெண்ணுக்கே இவ்வாறு நட்டஈடு வழங்குமாறு சவுதி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 13 வருடங்களாக அடிமையாக பணியாற்றிய அப்பெண்ணுடைய கடவுச்சீட்டை புதுப்பிப்பதற்காக கடந்த 2014ஆம் ஆண்டு அப்பெண்ணின் எஜமான் உயர்ஸ்தானிகராலயத்திற்கு சென்றபோதே இது குறித்து தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து உயர்ஸ்த…
-
- 2 replies
- 474 views
-
-
தமிழ் மொழி அமுலாக்கலில் உரிய அவதானம் தேவை நாட்டின் அரச கரும மொழியாக தமிழ் மொழியும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தும், அது உரிய முறையில் அமுல்படுத்தப்படாத நிலையே காணப்படுவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். தமிழ் மொழி அமுலாக்கம் தொடர்பில் தற்போதைய அரசு கூடிய அக்கறைகொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ள அவர், இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் வினாக்களை எழுப்பவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில், இன்று வியாழக்கிழமை (02) அறிக்கையொன்றை வெளியிட்ட அவர், அதில் மேலும் கூறியுள்ளதாவது, 'அண்மையில் பாடசாலை அதிபர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த புதிய அதிபர்களுக்கான பயிற்சி …
-
- 1 reply
- 300 views
-
-
முதலமைச்சர்களுக்கு தடைவிதிக்க இராணுவத்தினருக்கு அதிகாரமில்லை : முஸ்லிம் என்பதால் பிரச்சினையை பெரிதுபடுத்தினர் முதலமைச்சர்களுக்கு தடைவிதிப்பதற்கு எந்தவொரு அமைச்சுக்கோ அல்லது படையினருக்கோ அதிகாரம் கிடையாது. கிழக்கு மாகாண முதலமைச்சர் முஸ்லிம் என்பதனா லேயே எதிர்ப்புக்கள் கிளம்பின. இப்பிரச்சி னையை ஜனாதிபதியும் பிரதமரும் சுமுகமாகத் தீர்த்துவைத்துள்ளனர் என்று அரசாங்கம் அறிவித்தது. வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றபோதே அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சரவை பேச்சாளர் ராஜித்த சேனாரட்ன மேற்கண்டவாற…
-
- 2 replies
- 334 views
-
-
ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல்போன சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலனை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. குற்றப் புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி, சட்ட மா அதிபர் உள்ளிட்ட சிலர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். சந்தேகத்தின் பேரில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டமையினால் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உத்தியோகத்தர்கள் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை பரிசீலனை செய்த பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தலைமயிலான மூவர் அடங்கிய நீதவான் குழு, வழக்கு விசாரணைகளை தொடர அனுமதியளித்துள்ளது. எவ்வித நிய…
-
- 3 replies
- 577 views
-
-
விடுதலைப் புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழியில் திடீரென துலங்கும் மர்மம் அச்சத்தில் பிரதேச மக்கள்... 0 வட்டக்கச்சி இராமநாதபுரம் பொலிஸ் நிலையத்திற்கு பின்புறமாக உள்ள விடுதலைபுலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி அமைந்துள்ள இடத்தில் வழமைக்கு மாறான செயற்பாடுகள் நடை பெற்று வருகின்றன என பிரதேச பொது மக்களால் தகவல் தொிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ( 31) இரவு இனந்தெரியாத நபர்களால் குறித்த பதுங்கு குழி அமைந்துள்ள காணியில் இரண்டு சிறிய குழிகள் தோண்டப்பட்டு தேடுதல் நடவடிக்கை ஒன்று நடத்தப்பட்டுள்ளது குறித்த காணியில் இன்று காலை தொடக்கம் 571 படைப்பிரிவு இராணுவத்தினர் சிலர் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக பணியில் ஈட…
-
- 8 replies
- 825 views
-
-
சிறுப்பிட்டியில் மோதல்: ஐவர் வைத்தியசாலையில் -செல்வநாயகம் கபிலன் யாழ்ப்பாணம், சிறுப்பிட்டி தெற்கு, நீர்வேலி பகுதியில் இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த நால்வர் உட்பட ஐவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன்.எஸ்.என்.கே.ஜெயசிங்க தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை (31) இரவு இடம்பெற்றுள்ள இந்த மோதலில், மாதன் இராஜகோபாலன் (வயது 54), இராஜகோபாலன் வசந்தகுமாரி (வயது 50), இராஜகோபாலன் இராஜபிரதாப் (வயது24), இராஜகோபாலன் யதீஸன் (வயது 23) ஆகிய ஓரே குடும்பத்தினை சேர்ந்த நால்வரும் கிட்டிணன் குணரட்ணம் (வயது 38) என்ற நபரும் காயங்…
-
- 0 replies
- 308 views
-
-
விடுதலைப் புலிகளின் பெண் கடற்புலிகளின் தலைவியாக செயற்பட்டவரென பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிரான்ஸ் நாட்டை வசிப்பிடமாகக் கொண்ட பகிரதி முருகேசு அல்லது மீலர், சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி.தவராசாவின் வாதத்தையடுத்து கொழும்பு நீதவான் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டார் 02-03-2015ம் திகதி பிரான்ஸ் நாட்டிற்கு செல்வதற்காக கட்டுநாயகா விமான நிலையத்திற்கு தனது 8 வயது மகளுடன் வந்திருந்த பகிரதி முருகேசு பயங்கரவாதத் தடைப்பரிவுப் பொலிசாரினால் கைது செய்யப்பட்ட பொழுது தாயைப் பிரிய மறுத்த பிரான்ஸ் நாட்டின் குடியுரிமையைக் கொண்ட பகிரதியின் ஒரே மகளும் பயங்கரவாதத் தடைப் பொலிசாரினால் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் சந்தேக நபரான பகிரதி முருகேசுவிற்…
-
- 5 replies
- 767 views
-
-
யாழ்.நூலகத்தில் நினைவஞ்சலி நிகழ்வுகள் யாழ்.பொது நூலகம் எரிக்கப்பட்டு 35ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இன்று புதன்கிழமை காலை 9.00 மணியளவில் நூலகத்தில் நினைவஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. அத்துடன் யாழ்ப்பாணத்தில் மத்திய இலவச வாசிகசாலை ஒன்றை ஆரம்பித்த புத்தூர் சக்கடத்தார் பரோபகாரி அமரர். க.மு. செல்லப்பா அவர்களையும், நூலகம் 1981 இல் எரிகிறது என்ற செய்தியை கேள்வியுற்று உயிர்நீத்த வண.பிதா. தாவீது அடிகளையும் நினைவு கூரும் நிகழ்வும் இடம்பெற்றன. http://global…
-
- 1 reply
- 630 views
-
-
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான விவகாரத்தை வெற்றி கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளதாக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்தார். நேற்றைய தினம் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கையில் ஏற்பட்டுள்ள நல்லாட்சி மற்றும் மாற்றங்களுக்கிணங்க சர்வதேச நாடுகளின் இலங்கை மீதான பார்வை மாற்றம் பெற்றிருக்கும் நிலையில் ஜெனீவா பிரச்சினையை வெற்றிகொள்ள முடியும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=158623&category=TamilNews&language=tamil
-
- 6 replies
- 484 views
-
-
சிறுபான்மையினர் சார்பில் உப ஜனாதிபதி: அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பான பொதுமக்கள் கருத்தறி குழுவின் அறிக்கை வெளியானது. இனப்பிரச்சினைக்குத் தீர்வாக மாகாணசபைகளின் முதலமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் உள்ளிட்ட 75 பேர் அடங்கிய செனட் சபையொன்று உருவாக்கப்படவேண்டும். அந்த செனட் சபையானது பாராளுமன்றத்தின் எதேச்சதிகார செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதாக அமையவேண்டும். மேலும் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவர் உப ஜனாதிபதியாக பாராளுமன்றத்தினால் தெரிவுசெய்யப்படவேண்டும் என்று அரசியலமைப்பு குறித்த யோசனைகள் பெறும் பொதுமக்கள் கருத்தறி குழு அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. மாகாணங்களுக்கு சிறியளவிலான பொலிஸ் அதிகாரங்களை வழங்கவேண்டும் . ஆனால் ஒவ்வொரு மாகாணங்களுக்கு…
-
- 1 reply
- 177 views
-
-
ஒற்றையாட்சி அரசியல் அமைப்புக்குள் சமஷ்டி ஆட்சி முறையை தமிழ் மக்கள் விரும்புவதாக, லால் விஜேநாயக்க தலைமையிலான அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பான பொதுமக்கள் கருத்தறியும் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. நேற்று வெளியிடப்பட்டுள்ள அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பான பொதுமக்கள் கருத்தறியும் குழுவின் அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சியுடன் கூடிய அரசியல் தீர்வுதான் நிரந்தரமானதென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் கூறியிருந்தார். அத்துடன், வடக்கு கிழக்கிற்கு தனியான நாடாளுமன்றம் தேவை என வட மாகாண சபையின் யோசனையில் முன்மொழியப்பட்டிருந்தது. தமிழ் மக்களின் இறைமை…
-
- 1 reply
- 397 views
-
-
'கொழும்பின் நடவடிக்கைகள் நல்லிணக்கம் அல்ல' -சொர்ணகுமார் சொரூபன் 'நல்லிணக்கத்துக்கான நடவடிக்கை எடுக்கப்படுவது உண்மை. ஆனால் அது, கொழும்பில் இருந்தே எடுக்கப்படுகிறது. அது தொடர்பில் என்னுடன் கலந்துரையாடப்படுவதில்லை. நல்லிணக்கம் பற்றி பேசும் போது, பாதிக்கபட்டவர்களின் மனநிலை அறிந்து அவர்களின் தேவை என்ன என அறிந்து அதன் பின்னர் கொண்டுவருவதே நல்லிணக்கம். அதை விட்டுவிட்டு கொழும்பில் இருந்து நடவடிக்கை எடுப்பது நல்லிணக்கம் இல்லை' என, நோர்வே நாட்டின் வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க செயலாளர் டோர் ஹாட்றெனிடம் தான் தெரிவித்ததாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு இன்று புதன்கிழமை …
-
- 2 replies
- 530 views
-
-
அரசியல் சாசன மறுசீரமைப்புக்கான பொது மக்களின் கருத்துக்களை அறிந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட அமைக்கப்பட்ட குழு சமர்ப்பித்துள்ள இறுதி அறிக்கையில் இலங்கை தொடர்ந்தும் ஒற்றையாட்சி நாடாகவே இருக்கும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிங்களத்தில் வழங்கப்பட்டுள்ள பரிந்துரையில் ஒற்றையாட்சி மாற்றப்படாது என உறுதியாக குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் தமிழில் ஒற்றுமை என்றும், ஆங்கிலத்தில் Unity என்ற பதமும் பயன்படுத்தப்பட்டுள்ளன. புதிய அரசியல் சாசன மறுசீரமைப்புக்கான பொதுமக்களின் கருத்துக்களை அறிந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட சட்டத்தரணி லால் விஜேநாயக்க தலைமையில் நியமிக்கப்பட்ட குழு நேற்றுமுன்தினம் மாலை தனது 309 பக…
-
- 1 reply
- 393 views
-
-
தமிழீழ இனப்படுகொலைக்கான ஏழாம் ஆண்டு நினைவேந்தல் மே 29 மாலை 4 மணியளவில் தமிழர்கடலான சென்னை மெரினா கடற்கரையில் கண்ணகி சிலையருகே மே பதினேழு இயக்கத்தின் சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், தமிழ் உணர்வாளர்களும், மாணவர்களும், தோழமை இயக்கங்கள் மற்றும் கட்சிகளை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். நினைவேந்தலுக்காக பல்வேறு படைப்பாளிகள் வழங்கிய ஓவியங்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மேற்கு வங்கத்திலிருந்து நாடகக் கலைஞர் சுசாந்தா தாஸ் போர் மற்றும் படுகொலைகள் குறித்த மைம் எனும் மவுன நாடகத்தை நிகழ்த்தினார். பின்னர் ஈழப் போராட்டம் குறித்த ஒரு நாடகத்தினை மாணவர்கள் நடத்தினர். அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி இனப்படுகொலை செய்யப்பட்…
-
- 0 replies
- 356 views
-
-
<p>Your browser does not support iframes.</p> கடற்கரைகளை தூய்மைப்படுத்தும் திட்டம் இன்று யாழில் தேசிய சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு, கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை ஆகியவற்றின் ஏற்பாட்டில் தூய கடற்கரை என்னும் தொனிப்பொருளில் கடற்கரைகளை தூய்மைப்படுத்தும் தேசிய செயற்றிட்டம் இன்று யாழ் மாவட்ட செயலக ஏற்பாட்டில் யாழ் பண்ணை கடற்கரை பகுதியில் நடைபெற்றது. யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இதில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பா.செந்தில் நந்தனன், திட்டமிடல் பணிப்பாளர் மோகனேஸ்வரன் மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். இங்கு கருத்து …
-
- 1 reply
- 404 views
-
-
'எதிர்ப்பை சமாளித்து ஜெயாவை சந்தித்துப் பார்ப்போம்' “தமிழக முதலமைச்சரை சந்திப்பதற்கான திகதி அறிவிக்கப்படுவதற்கு முன்னர் எதிர்ப்புக்கள் உருவாகியுள்ளது. எனவே, எதிர்ப்பினை சமாளித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்துப் பார்ப்போம்” என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இன்று புதன்கிழமை தெரிவித்தார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமை சந்திக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “நாம் இருவரும் சந்திப்பதற்கு பலர் எதிர்ப்புத் தெரிவிக்கின்றார்கள். தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராமை சந்திப்பதாக இருந்தால் டெல்லியில்…
-
- 2 replies
- 504 views
-
-
முல்லைத்தீவில் பாரம்பரிய உணவு வகைகளை விற்பனை செய்யும் மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இதனை வடக்குவிவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் புதன்கிழமை (01.06.2016) திறந்து வைத்துள்ளார். வடமாகாண விவசாய அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் இருந்து ஏழு மில்லியன் ரூபா செலவில் இந்த உணவு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உணவு வகைகளைத் தயாரித்து விற்பனை செய்வதற்கான உரிமம் முல்லை என்ற பெண்கள் விவசாய விரிவாக்க அமைப்பிடம் வழங்கப்பட்டிருக்கிறது. போசாக்குக்கூடிய பாரம்பரிய உணவு வகைகளை நுகரும் பழக்கத்தை அதிகரிக்க செய்யும் நோக்குடனும் உள்ளுர் உற்பத்திக்கான சந்தை வாய்பை ஏற்படுத்திக் …
-
- 0 replies
- 378 views
-
-
வடக்கில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்க அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது, வடக்கிலிருந்து வெளியேறிய சிங்கள மக்களுக்காக 5543 வீடுகளையும், முஸ்லிம் மக்களுக்காக 16120 வீடுகளையும் நிர்மாணிக்க இணக்கம் காணப்பட்டுள்ளதாக கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். டி.எம்.சுவாமிநாதன், பைசர் முஸ்தபா, றிசாட் பதியுதீன் ஆகியோர் முன்வைத்த யோசனையின் அடிப்படையிலேயே இத்தீர்மானம் எட்ட…
-
- 0 replies
- 356 views
-
-
"உலகின் வெறுமையான சர்வதேச விமான நிலையத்தின் பின்னணிக் கதை" - மத்தள விமான நிலையம் தொடர்பில் போஃர்ப்ஸ் சஞ்சிகையில் தகவல் உலக புகழ் பெற்ற வர்த்தக சஞ்சிகைகளில் ஒன்றான போஃர்ப்ஸ் சஞ்சிகையில் மத்தள விமான நிலையம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பதிவுக்கு "உலகின் வெறுமையான சர்வதேச விமான நிலையத்தின் பின்னணிக் கதை" என்று தலைப்பிடப்பட்டுள்ளது. வெளிநாட்டவர் ஒருவரினால் இக்குறிப்பு எழுதப்பட்டிருப்பதுடன் அவர் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மத்தள விமான நிலையத்திற்கு சென்ற போது தான் முகம் கொடுத்த, சந்தித்த விசித்திர…
-
- 6 replies
- 764 views
-
-
மீண்டும் மானுடமே வென்றது... மழையும் மக்களும் - இலங்கையிலிருந்து நேரடி ரிப்போர்ட்! குறிப்பு: இது மொழிப்பெயர்ப்பு கட்டுரையோ அல்லது இணையத்தில் மேய்ந்து திரட்டிய தகவல்களை கொண்டு கோர்த்த கட்டுரையோ அல்ல. மூன்று நாட்கள் இலங்கையின் மழை பாதித்த பகுதிகளை பார்வையிட்டு, மக்களிடம் உரையாடிய பின்னரே இதை எழுதுகிறேன்.... மழை எப்போதும் மண்ணை மட்டும் நனைப்பதில்லை; அது மனித மனங்களையும் நனைக்கிறது. செடிகள் துளிர்க்க மட்டுமே மழை காரணமாக இருப்பதில்லை, அது மானுடம் துளிர்க்கவும் காரணமாக இருக்கிறது. சென்னை பெருமழை மக்களை இணைத்ததை, வேற்றுமைகளை களைத்ததை நாமறிவோம். மீண்டும் ஒரு பெருமழை மக்களை இணைத்திருக்கிறது, அன்பு துளிர்க்க செய்திருக்கிறது, கரத்தை இறுகப் பற்ற செய்திருக்…
-
- 1 reply
- 437 views
-
-
ஜனாபதிபதி பங்கேற்ற நிகழ்வில் பாரிய தீ விபத்து:- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற நிகழ்வு ஒன்றில் பாரிய தீ விபத்துச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. ஹம்பாந்தோட்டை ஷெங்கரி லா ஹோட்டல் திறப்பு விழா வைபவத்தின் போது இந்த தீ விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. திறப்பு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வான வேடிக்கைகள் வெடித்த போது இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதியுடன் சென்றிருந்த தீயனைப்பு வாகனம் தீயை அனைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முக்கிய பிரபுக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்த தீ விபத்துச் சம்பவத்தில் எவருக்கு…
-
- 0 replies
- 463 views
-