ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142773 topics in this forum
-
2024 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற வைத்தியர் அர்ச்சுனாவை நேற்று சனிக்கிழமை (16) சாவகச்சேரி மக்கள் வரவேற்றிருந்தனர். தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் முதல் தடவையாக வைத்தியர் அர்ச்சுனா சனிக்கிழமை பிற்பகல் யாழ். சாவகச்சேரி சென்றிருந்த நிலையில் மக்கள் அவருக்கு அமோக ஆதரவளித்தனர். https://www.virakesari.lk/article/198956
-
- 1 reply
- 762 views
- 1 follower
-
-
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் நாளை (18) காலை 10 மணிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளனர். இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=196012
-
-
- 3 replies
- 591 views
- 1 follower
-
-
தமிழ்த் தேசியக் கட்சிகளை மீண்டும் ஒன்றுபடுத்த முயற்சி: சிவகரன் அறிவிப்பு எதிர்வரும் நாள்களில் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஐக்கியப்படுத்தும் முயற்சியில் ஈடுபட இருப்பதாகத் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கம் அறிவித்திருக்கின்றது. இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் வி.எஸ். சிவகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தமது உத்தேச முயற்சி பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றார். அதில் கூறப்பட்டுள்ளவை வருமாறு:- "தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம். கடந்த எழுபது ஆண்டு கால அரசியல் உரிமைக்கான ஜனநாயக மற்றும் ஆயுதப் போராட்டங்களை எதிர்கொண்ட தமிழினம் பல்வேறு விதமான இழப்புகளையும், நெருக்கடிகளையும், வலிகளையும், வாழ்வியல் சுமைகளையும் எதிர்கொண்டு வருகின்றது.…
-
-
- 7 replies
- 402 views
- 1 follower
-
-
ஆர்.ராம் தமிழ்த் தலைவர்கள் நீண்டகாலமாக வாக்குறுதிகளை நிறைவேற்றாதிருக்கின்ற நிலையில் அவர்கள் மீதான ஏமாற்றமே வடக்கு, கிழக்கில் எமது வெற்றிக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது என்று தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மீதும், தேசிய மக்கள் சக்தியின் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையை குலைக்கப்படமாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டார். தேசிய மக்கள் சக்தி, வடக்கு, கிழக்கில் பெற்றுள்ள தேர்தல் வெற்றி சம்பந்தமான கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தலின்போது, ரணில் விக்கிரமசிங…
-
- 0 replies
- 91 views
- 1 follower
-
-
தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாக ஜெனிவாவில் இனி கேள்வியெழுப்ப முடியாது; அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் - சட்டத்தரணி பிரதீபா மஹாநாம (இராஜதுரை ஹஷான்) வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள். அரசியல் கட்டமைப்பில் இருந்து தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று ஜெனிவாவில் இனி கேள்வியெழுப்ப முடியாது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என சட்டத்தரணி பிரதீபா மஹாநாம தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குற…
-
- 0 replies
- 198 views
- 1 follower
-
-
நடந்து முடிந்த பாராளுமன்றத்தேர்தலில் 22,20,311 வாக்காளர்களைக் கொண்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 14,70,549 பேர் வாக்களித்த நிலையில் 7,49,762 பேர் வாக்களிக்காததுடன் 94,489 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாணத்தில் யாழ்-கிளிநொச்சி தேர்தல் மாவட்டம் 5,93,187 வாக்காளர்களை கொண்டுள்ள நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் 3,58,079 பேர் வாக்களித்த நிலையில் 2,35,108 பேர் வாக்களிக்கவில்லை. அதேநேரம் வாக்களித்த 3,58,079 பேரில் 32,767 பேரின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன இதற்கமைய 3,25,312 பேரின் வாக்குகளே செல்லுபடியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது அதேபோன்று வன்னி மாவட்டம் 3,06,081 வாக்காளர்களை கொண்டுள்ள நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் 2,11,140 பேர் வாக்களித்த அதே…
-
- 0 replies
- 79 views
- 1 follower
-
-
சுமந்திரன் அரசியலுக்கு தகுதியற்றவர் Vhg நவம்பர் 07, 2024 சுமந்திரனால் என் மீது வழக்கு தொடரட்டும் என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு கணபதிப்பிள்ளை சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், சுமந்திரன் அரசியலுக்கு பொருத்தமற்றவர். அவர் ஒரு மதமாற்றி. இது தொடர்பில் ஏழாண்டுகளுக்கு முன்பே நான் புத்தகம் அடித்து வெளியிட்டுள்ளேன். மதமாற்றத்திற்காக அவரது மனைவியின் பெயரில் மாதாந்தம் 1100 டொலர்ஸ் வருகிறது. மனைவியின் பெயரில் சுமந்திரனுக்கே அந்த பணம் வருகிறது. சுமந்திரன் மெதடிஸ் திருச்சபையில் துணை ஆயராக இருந்தவர். அவர் 54 மதமாற்றிகளை ச…
-
-
- 39 replies
- 2.2k views
-
-
2024 பாராளுமன்றத் தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 10 ஆவது நாடாளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள 196 பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய விசேட வர்த்தமானியே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது. 1981 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்துக்கமைய, இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை தங்களது கட்சியின் சார்பில் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்படவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களைக் கட்சிகள் அறிவிக்க வேண்டும். அதன் பின்னர் 29 தேசிய பட்டியல் பாராள…
-
- 0 replies
- 157 views
- 1 follower
-
-
நாடாளுமன்றத்தில் ஒரே அணியாக பொது பிரச்சினைகளை கையாள உள்ளேன்-செல்வம் அடைக்கலநாதன் adminNovember 16, 2024 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றிணைந்து நாடாளுமன்றத்தில் ஒரே அணியாக பொது பிரச்சனைகளை நாங்கள் கையாளுகின்ற வகையிலே செயல்பட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். -மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை(16) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,,, இனப்பிரச்சினை குறித்தும்,அபிவிருத்தி தொடர்பாகவும் கூடிய கவனம் செலுத்துவதாக கோரி மக்களிடம் நாங்கள் வாக்கு சேகரித்தோம்.குறித்த இரு விடயங்கள் குற…
-
- 2 replies
- 330 views
- 1 follower
-
-
எதிர்வரும் 21 ஆம் திகதி கொள்கைப் பிரகடன உரையை ஜனாதிபதி அநுர நிகழ்த்தவுள்ளதாக தகவல் November 16, 2024 நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வின் போது புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நிகழ்த்தவுள்ளார் என நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது. புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் பிற்பகல் 3 மணிக்கு கொள்கைப் பிரகடன உரை நிகழ்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 33(a) பிரிவின் கீழ், நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு புதிய கூட்டத் தொடரின் தொடக்கத்திலும் அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை நிகழ்த்த ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. இதேவேளை, நாடாளுமன்றத்திற்கு தேர்…
-
- 2 replies
- 214 views
-
-
15 NOV, 2024 | 04:31 PM (சி.சிவகுமாரன்) மலையக அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக மலையக சமூகத்தைச் சேர்ந்த இரு பெண்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர். தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளரான கலைச்செல்வி 33,346 விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ள அதே வேளை பதுளை மாவட்டத்தின் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அம்பிகா சாமுவேல் 58,201 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 1977 ஆம் ஆண்டு முதலாவது மலையக பிரதிநிதித்துவத்தைப் பெற்ற மலையக சமூகம் கடந்த 47 வருடங்களில் பெற்ற முதலாவது பெண் பிரதிநிதித்துவம் இது என்பது முக்கிய விடயம். https://www.virakesari.lk/article/198879
-
-
- 11 replies
- 647 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை தெற்கு, நெல்லியான் பகுதியில் உள்ள கசிப்பு உற்பத்தி செய்யும் இடம் ஒன்று இன்று காலை வட்டுக்கோட்டை பொலிஸாரால் சுற்றிவளைப்பு செய்யப்பட்டது. இதன்போது, 166 லீட்டர்கள் கோடா, 10.5 லீட்டர் கசிப்பு என்பவற்றுடன் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்திய இரண்டு பெரிய கொள்கலன்கள், இரண்டு சிறிய கொள்கலன்கள், இரண்டு செப்பு சுருள் என்பவற்றுடன் 21 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சி.ஐ.கொஸ்தா அவர்களது தலைமையின் கீழ் இயங்கும் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி, கெட்டியாராய்ச்சி, போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.ஐ.ரத்நாயக்க, பி.எஸ். ரத்…
-
- 0 replies
- 204 views
- 1 follower
-
-
தேசியப்பட்டியலில் பாராளுமன்றம் செல்லும் நாமல். 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்குக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்ய உள்ளார். அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார். 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு தேசியப் பட்டியலிலிருந்து ஒரு ஆசனம் கிடைத்துள்ளது. இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 350,429 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1408743
-
- 1 reply
- 1k views
-
-
தமிழ்த் தேசியம் தொடர்பில் அறிவுரை கூறும் யோக்கியதை அர்ச்சுனாவுக்கு இல்லை- சிவாஜிலிங்கம் ஒற்றையாட்சிக்கு எதிராகவே வட கிழக்கு தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர் என தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்திக்கு 80 ஆயிரம் வாக்குகள் மட்டும் தான் கிடைத்தது. ஆனால் சமஷ்டியை வலியுறுத்தும் தமிழ் தரப்புகளுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வாக்குகள் கிடைத்துள்ளன. EPDP மற்றும் அங்கஜன் போன்ரோரின் வாக்குகளே NPPகு கிடைக்கப் பெற்றுள்ளது. அவர்களை மக்கள் நிராகரித்துள்ளனர். வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் இவ்வாறு …
-
- 1 reply
- 418 views
-
-
கொழும்பில் தமிழர் பிரதிநிதித்துவம் இழப்பு! November 16, 2024 கொழும்பில் பாராளுமன்றத்திற்கான தமிழர் பிரிதிநித்துவம் இழக்கப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.பேஸ்புக்கில் பதிவொன்றை இட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் பதிவிட்டுள்ள அவர் தேர்தல் நடந்து முடிந்து விட்டது. வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்! ஆட்சி அமைக்கும் அனுர அரசுக்கும் வாழ்த்துக்கள்!நாட்டின் தேசிய தீர்மானங்கள் எடுக்கப்படுகின்ற நிகழ்வுகள் நடக்கும் கொழும்பு தலைநகர் மாவட்டத்தில் தமிழர் பிரதிநிதித்துவத்தை இரட்டிப்பு ஆக்க …
-
-
- 5 replies
- 464 views
-
-
வன்னியில் அதிகூடிய விருப்பு வாக்குகளால் ரிஷாட் பாராளுமன்றத்துக்கு தெரிவு sachinthaNovember 16, 2024 வன்னித் தேர்தல் தொகுதியில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியவர்களில் அதிகூடிய விருப்பு வாக்குகளை ரிஷாட் பதியுதீனும், குறைந்த விருப்பு வாக்குகளை செல்வம் அடைக்கலநாதனும் பெற்றுள்ளனர். நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னித் தேர்தல் தொகுதியில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட ரிஷாட் பதியுதீன் அதிகபட்சமாக 21,018 விருப்பு வாக்குளைப் பெற்றுள்ளார். குறைந்த விருப்பு வாக்காக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியில் போட்டியிட்ட செல்வம் அடைக்கலநாதன் 5,695 விருப்பு வாக்குளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவ…
-
- 2 replies
- 253 views
-
-
தேசிய மக்கள் சக்தி தேசியப் பட்டியல் (18 உறுப்பினர்கள்) Vhg நவம்பர் 16, 2024 தேசிய மக்கள் சக்தி தேசியப் பட்டியல் 18 உறுப்பினர்கள்..... பிமல் ரத்நாயக்க ---------------- ஜே.வி.பி.யின் அரசியல் குழு உறுப்பினர் தேசிய மக்கள் அதிகாரத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர் •முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வசந்த சுபசிங்க ---------------------------- களனி பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையில் பேராசிரியர் •தேசிய மக்கள் அதிகாரத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர் •சமூக அதிகாரமளித்தல் தொடர்பான கொள்கை உருவாக்கும் குழுவின் உறுப்பினர் கலாநிதி அனுர கருணாதிலக்க ---------------------…
-
- 0 replies
- 885 views
-
-
(எம்.ஆர்.எம்.வசீம்) ஜனாதிபதி உள்ளிட்ட இந்த அரசாங்கம் மக்களுக்கு நிறைவேற்ற வேண்டிய பல எதிர்பார்ப்புக்கள் இருக்கின்றன. அதனை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதை நாங்கள் பார்த்துக்கொண்டிருப்போம். என்றாலும் இந்த தேர்தல் மூலம் தெற்கு அரசியல் கட்சி ஒன்று வடக்கின் நம்பிக்கையை வெற்றிகொண்டுள்ளமை தொடர்பில் எமது பாராட்டை தெரிவித்துக்கொள்கிறோம் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார். காலியில் அமைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சி காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (15) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர…
-
- 0 replies
- 108 views
- 1 follower
-
-
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள மகத்தான பெரும் வெற்றி ஆழமான சீர்திருத்தங்களிற்கான ஆணையை வழங்குகின்றது என இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். சமூக ஊடகப்பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அனுரகுமார திசநாயக்க அல்லது மக்களால் ஏகேடி என அழைக்கப்படும் இடதுசாரி கூட்டணியின் தலைவர் இலங்கையில் முழுமையான தேர்தல் வெற்றியை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றார். அனேகமாக அனைத்து தொகுதிகளிலும் அவர் வெற்றிபெற்றுள்ளார். இது இலங்கைக்கு என்ன தேவையோ அதனை செய்வதற்கான வலுவான வாக்குறுதியை வழங்குகின்றது. 1. நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு சிறந்த ஒப்பந்தத…
-
-
- 3 replies
- 428 views
- 1 follower
-
-
கிளிநொச்சியின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறறு வருகிறது என பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இவ்வாறு தொடரும் சட்டவிரோத மணல் அகழ்வினால் பெறுமதியான வயல் நிலங்கள் உள்ளிட்ட தனியார் காணிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இரவு நேரங்களில் விவசாய காணிகளில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுப்படுகின்றனர் என்றும் இதன் காரணமாக தங்களது விவசாய நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுளளது என்றும் கவலை தெரிவித்துள்ள பொது மக்கள். சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்படுகின்றவர்களுக்கும் பொலீஸாருக்கும் இடையே நெருங்கிய உறவு இருப்பதனால் அவர்கள் மீது பொலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர். சூழலுக்கு ஏற்படுகி…
-
- 0 replies
- 720 views
- 1 follower
-
-
(இராஜதுரை ஹஷான்) பழைய அரசியல் கலாசாரத்தை நாட்டு மக்கள் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்கள். வரப்பிரசாதங்களுடன் வாழ்ந்த பிரபுக்கள் அரசியல் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. கிடைக்கப் பெற்றுள்ள பலத்தை அதிகார மோகத்துக்காக பயன்படுத்த மாட்டோம். மக்களின் நன்மைக்காக மிக கவனமாக பயன்படுத்துவோம் என்ற வாக்குறுதியை மக்களுக்கு வழங்குகிறோம் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார். பத்தரமுல்லை பகுதியில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, வடக்கு, கிழக்கு உட்பட …
-
- 0 replies
- 131 views
- 1 follower
-
-
(எம்.மனோசித்ரா) பாராளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் கட்சி அமோக வெற்றியீட்டியமைக்காக பாக்கிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷரீப் பாராட்டு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரவின் தொலைநோக்கு மற்றும் தலைமைத்துவத்தின் மீது இலங்கை மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை மற்றும் நம்பிக்கைக்கு இது ஒரு சான்றாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பரஸ்பர மரியாதை, பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் ஒத்துழைப்பின் நீண்ட வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட இலங்கையுடனான தனது நெருக்கமான மற்றும் நீண்டகால உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு பாகிஸ்தான் உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் ஷெபாஷ் ஷரீப் குறிப்பிட்டுள்ளார். அவரது வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ள ஜனாதிபதி அநுரகுமார த…
-
- 1 reply
- 153 views
- 1 follower
-
-
மாகாண சபை தேர்தல் மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்களை உடனடியாக நடாத்த வேண்டும். அதனூடாக மாகாண சபை முறைமையையும் மீள அமுல் படுத்த வேண்டும் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம் . ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தேர்தலில் எந்த கட்சிக்கும் இப்படியான பெரும்பான்மை கிடைத்ததில்லை. 2010ஆம் ஆண்டு பொது தேர்தலில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தவருக்கு கூட மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கவில்லை. கட்சித் தாவல்கள் மூலமே அவர்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றனர். ஆனால் இம்முறை …
-
- 2 replies
- 284 views
- 1 follower
-
-
(எம்.மனோசித்ரா) தமிழ்க் கட்சிகள் தனித்துப் போட்டியிட்ட பொதுத் தேர்தல் வரலாற்றில் முதல் தடவையாக யாழ்ப்பாண மக்கள் தென்னிலங்கையை அடிப்படையாகக் கொண்ட தேசியக் கட்சிக்கு வாக்களித்துள்ளனர். இந்தத் தருணம் தேர்தல் முடிவுகளில் மாத்திரமின்றி, முழு நாட்டினதும் ஒற்றுமையை வெளிப்படுத்துவதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தல் முடிவுகள் தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்துள்ள பதிவிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட வேறுபாடுகளை விட உண்மையான வேறுபாடுகள் எப்போதுமே அரசியல் சார்ந்தவை என்பதை இந்த தேர்தல் முடிவுகள் எமக்கு நினைவூட்டுகின்றன. மேலும் இந்த மாற்றமானது மக்கள் பிளவுகளுக்கு அப்பால் செல்ல தயா…
-
-
- 7 replies
- 440 views
- 1 follower
-
-
2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியிலிருந்து கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட அமைச்சர் விஜித ஹேரத் 716,715 விருப்பு வாக்குகளைப் பெற்று கம்பஹா மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார். இந்த எண்ணிக்கையான வாக்குகள் இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல் வரலாற்றில் ஒரு வேட்பாளர் பெற்ற அதிகூடிய வாக்குகளாக வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. அதேநேரம் இந்த தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 655,289 வாக்குகளை பெற்றிருந்தார். இதற்கு முன்னதாக அதிக விருப்பு வாக்குகளை பெற்ற சாதனையை மஹிந்த ராஜபக்சவே வைத்திருந்தார். அவர் 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு 527,364 வாக்குகளைப் பெற்றிருந்தார…
-
- 1 reply
- 1k views
- 1 follower
-