Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நுவரெலியா மாநகர எல்லைக்குள் உள்ள அன்டபேங்க் கிராமத்தில் வீடொன்றின் முன்பகுதியில் தேன் கூடொன்று 5 மாதங்களாக காணப்படுகிறது. இந்த தேன் கூடு மூன்றரை அடி உயரமும் இரண்டரை அடி அகலமும் கொண்டதாக உள்ளது. இந்த வீட்டில் வசிக்கும் குடும்பத்தினருக்கு இதுவரையிலும் எந்தவித இடையூறுகளும் தேனீக்களால் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. http://metronews.lk/article.php?category=lifestyle&news=16612#sthash.21dJhSw7.dpuf

    • 0 replies
    • 718 views
  2. வித்தியா கொலை செய்யப்பட்டு இன்றுடன் ஓராண்டு பூர்த்தி -குணசேகரன் சுரேன் யாழ்ப்பாண மக்களிடையே பெரும் கொந்தளிப்பை அல்லது சமூகப் பயத்தை ஏற்படுத்திய, புங்குடுதீவு மாணவி வித்தியா வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்று இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைகின்றது. 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலைக்குச் சென்ற வித்தியா கடத்தப்பட்டு, பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது சடலம் மறுநாள் காலையில் பற்றைக்குள் இருந்து மீட்கப்பட்டதையடுத்து, ஊர்காவற்றுறை பொலிஸாரால் விசாரணை தொடங்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட அடுத்தடுத்து 9 சந்த…

  3. பொதியால் விழிபிதுங்கிய பசில் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், நேற்றுக் காலை கைதுசெய்யப்பட்ட பசில் ராஜபக்ஷவை, மாத்தறை நீதவான் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்வதற்காக வாகனத்தில் ஏற்றியபோது, அங்கு குழுமியிருந்த ஒருவர் பொதியொன்றை வழங்கினார். அதனை வாங்கி, தான் இருக்கவேண்டிய ஆசனத்தில் ஒதுக்குபுறமாக வைத்த பசில், அதையே சில நிமிடங்கள் பார்த்துக்கொண்டிருந்தார். அது என்னவென்று தெரியவில்லை. எனினும், பொதியை வழங்கியவர், பசில் ராஜபக்ஷவின் தீவிர ஆதரவாளர் என்றும், சிறுபண்டங்கள் அடங்கிய உணவுப் பொதியையே அவர் வழங்கியதாகவும் அங்கு குழுமியிருந்தவர்கள் தெரிவித்தனர். - See more at: http://www.tamilmirror.lk/172100/%E0%AE%AA-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%B5…

  4. வன்னி யுத்தத்தின் இறுதி நாட்களில் சுமார் ஆயிரம் பேர் வரை காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த முள்ளிவாய்க்கால் தற்காலிக மருத்துவமனைக்குள் நுழைந்த இலங்கை இராணுவத்தினர், கண்போன போக்கில் சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் செய்தபடியே வந்தார்கள். இதனால் அங்கிருந்த பலர் கத றலுடன் செத்து மடித்தனர் என அந்த நேரத்தில் அந்த மருத்துவமனைக்குப் பொறுப்பாக இருந்த மருத்துவர் உயர்ச்சி தனது அனுபவத்தை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டுள்ளார். பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் நேற்றுமுன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, பிரித் தானிய நாடாளுமன்ற உறுப்பினருடனான சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில், 16.05.2009 அன்று பின்னிரவு 3 மணியளவில் முள்ளி…

    • 0 replies
    • 388 views
  5.  நமது வாழ்க்கையே ஒரு நாடகம் -நடராசா கிருஸ்ணகுமார் “நமது வாழ்வே ஒரு நாடகம் தான். நாம் நாடகம் தான் ஆடிக்கொண்டிருக்கின்றோம். அதில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் அவை வெவ்வேறான நாடகங்கள்” என யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரக கொன்சலட் ஜெனரல் ஆ.நடராஜன் தெரிவித்தார். செயல் திறன் அரங்க இயக்கத்தின் வெளியீடாக தேவநாயகம் தேவானந்த் எழுதிய 'நல்லூர் நாடகத் திருவிழா 2015' என்ற நூல் புதன்கிழமை (11) மாலை 4 மணிக்கு நல்லூர் நாவலர் கலாச்சார மண்டபத்தில் வெளியிடப்பட்டது. அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும்…

  6. காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் முன்னாள் பணியாளர்கள் சங்கத்தின் கலந்துரையாடல் மற்றும் ஒன்றுகூடல் நிகழ்வு, நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு மேற்குப் பக்கமாகவுள்ள சூரிய சைவ உணவக கட்டடத்தில் எதிர்வரும் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது. மேற்படி, ஒன்றுகூடலுக்கு காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் முன்னாள் பணியாளர்களையும் பணியாளர்கள் இல்லாதவிடத்து பணியாளரின் குடும்ப அங்கத்தவர்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்களினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீண்டும் இயங்க வைப்பதற்கு அரசாங்கத்தால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அண்மையில் யாழ்ப்பாணம் வருகை தந்த கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் …

    • 0 replies
    • 214 views
  7. மட்டக்களப்பு மாநகர சபை, பொது மக்களிடமிருந்து வரிப்பணத்தை அறவிடுவதில் முன்னுதாரணமாக திகழ்கிறது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராட்டியுள்ளதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் பிரையீ ஹட்செஸன் தெரிவத்தார். இன்று காலை மட்டக்களப்பு மாநகர சபைக்கு விஜயம் செய்த உயர் ஸ்தானிகருக்கு மாநகர ஆணையாளர் மாணிக்கம் உதயகுமார் தலைமையலான அதிகாரிகள் வரவேற்பளித்தனர். மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிலும் உயர் ஸதானிகர் கலந்து கொண்டார். இங்கு மாநகர சபையின் கடந்த கால செயற்பாடுகள் குறித்து மாநகர ஆணையாளர் விளக்கமளித்தார். இங்கு உரையாற்றிய உயர்ஸ்தானிகர், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை கட்டியெழுப்புவதில் அவுஸ்திரேலிய அரசாங்கம் என்றும் உறுதுணையாக இரு…

    • 1 reply
    • 432 views
  8. வெள்ளவத்தை தொடர் ரயில் விபத்து : தடுக்க விஷேட திட்டம் (எம்.எப்.எம்.பஸீர்) வெள்ளவத்தை - மற்றும் தெஹிவளை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் அடிக்கடி பதிவாகும் ரயில் விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புக்களை தடுக்க வெள்ளவத்தை பொலிஸார் விஷேட திட்டங்களை அமுல் படுத்தத் தீர்மானித்துள்ளனர். மேல் மாகாணத்தின் தென் பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கபில ஜயசேகர, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பாலித பனாமல்தெனிய, உதவி பொலிஸ் அத்தியட்சர் நிஸாந்த டி சொய்ஸா ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கபில விஜேமான்ன இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். அதன்படி அவதானக் குறைவு காரணமாக…

  9. முல்லைத்தீவு மாத்தளன் பகுதியில் இறந்த தனது உறவினர்களுக்காகவும், முள்ளியவளையில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்காகவும் மாணவி ஒருவர் பள்ளிச் சீருடையில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். இறுதிக்கட்டப் போரின்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த இனவிடுதலைப்போராட்டத்தில் மாணவர்களின் பங்களிப்பு அளப்பரியது. அந்தவகையில் தனது மக்களின் விடுதலைக்காக முதன்முதலாக உயிர் நீத்த முதல் மாணவ வீரன் பொன் சிவகுமார் ஆகும். இலங்கை மற்றும் இந்திய இராணுவம் தமிழின அழிப்பின்போது வகை தொகையின்றி மாணவர்களைக் கொன்று குவித்தனர். இவற்றில் செஞ்சோலை, நாகர்கோவில் பாடசாலையில் இடம்பெற்ற குண்டுவீச்சு… இவ்வாறு பாடசாலைகள் என்று தெரிந்துமே திட்டமிட்டவகையில் குண்டுவீசி படுகொல…

  10. விசேட படையினர் வேண்டாம் -எஸ்.ஜெகநாதன் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் குற்றச்சாட்டுக்களைக் கட்டுப்படுத்த விசேட அதிரடிப் படையினரை பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது. அது பாரிய சமூக விளைவுகளை ஏற்படுத்தும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் ந.ஸ்ரீகாந்தா தெரிவித்தார். குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த விசேட அதிரடிப் படையினரைப் பயன்படுத்துமாறு, வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கடந்த வாரம் அறிவுறுத்தியிருந்தார். இது தொடர்பில் விசேட அதிரடிப்படையினர் பயன்படுத்தப்படுவது தொடர்பில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகத்தால் ஊடக அறிக்கையொன்று வெளியிடப்பட்…

  11. மஹிந்தவுக்கு அழைப்பில்லை பாராளுமன்ற மைதானத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி நடை­பெற­வுள்ள இரா­ணுவ வெற்றி தினத்தில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. எனவே இந்த விழாவில் இம்­முறை அவர் கலந்­து­கொள்ள முடி­யாது என பாது­காப்பு அமைச்சு தெரி­வித்­துள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரிபால சிறி­சேன தலை­மையில் அமை­தி­யான முறையில் இம்­முறை வெற்றி தினம் கொண்­டா­டப்­படும் எனவும் பாதுகாப்பு அமைச்சு குறிப்­பிட்­டது. எதிர்­வரும் 18ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள இரா­ணுவ வெற்­றி­தின நிகழ்வில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளதா என நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வின­வி­ய­போதே பாது­காப்பு இரா­ஜாங்க…

  12. சம்­பந்தன் எந்த முகா­முக்கும் செல்­வ­தற்கு உரிமை உள்­ளது : அர­சாங்கம் திட்­ட­வட்டம் எதிர்க்­கட்சி தலைவர் என்ற வகையில் சம்­பந்தன் வடக்கில் எந்தப் பகு­திக்கும் செல்­வ­தற்­கான அதி­காரம் அவ­ருக்கு உள்­ளது. வடக்கில் இரா­ணுவ முகாம்­க­ளுக்கும் ஏனைய பகு­தி­க­ளுக்கும் அவர் சென்று பார்­வை­யிட முடியும். எதிர்க்­கட்சி தலைவர் என்ற வகையில் அவ­ருக்­கான அந்­தஸ்தும், முன்­னு­ரி­மை­யும் வழங்­கப்­ப­ட­வேண்டும் என அர­சாங்கம் தெரி­வித்­துள்­ளது. தேசிய பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்­த­லான வகையில் வடக்கில் எந்த செயற்­பா­டு­களும் அமை­ய­வில்லை எனவும் அர­சாங்கம் தெரி­வித்­தது. தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற…

  13. பிர­பா­கரன் மறு அவ­தாரம் எடுத்தால் எவ­ரையும் குற்­றம்­சாட்­ட ­மு­டி­யாது தமிழ் சமூ­கத்தின் மீது நம்­பிக்­கை­யின்றி போரினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களுக்கு மத்­தியில் இரா­ணு­வத்­தி­னரை தொடர்ந்தும் நிறுத்­து­வ­தற்கு அர­சாங்கம் முயற்­சி­களை மேற்­கொள்­ளு­மாயின் மற்­றொரு பிர­பா­கரன் மறு அவ­தாரம் எடுத்தால் எவ­ரையும் குற்­றஞ்­சாட்­ட­மு­டி­யாது என வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் சுட்­டிக்­காட்­டிக்­காட்­டி­யுள்ளார். அதே­நேரம் சமஷ்டி பிரி­வினை அல்ல என்­பதை வலி­யு­றுத்­தி­யவர் மத்­திய அர­சாங்­கத்தின் நேர­டித்­த­லை­யீ­டு­களால் வடக்கு மாகா­ண­சபை தொடர்ந்தும் புறக்­க­ணிக்­கப்­ப­டு­வ­தா­கவும் அவர் குற்­றம்­சாட்­டி­யுள்ளார். தேசத்தை கட்­டி­யெ­ழ…

  14. ஜெனிவா தீர்மானத்தை ஸ்ரீலங்காவுடன் இணைந்து அமுல்படுத்துவோம் [ Friday,13 May 2016, 02:53:34 ] ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த ஸ்ரீலங்காவுடன் இணைந்து செயலாற்றவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த தகவலை தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் நிசா பிஸ்வால் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் மிகவும் சிறந்த முறையில் காணப்படுவதாக தெரிவித்த அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் விரிசல் நிலை காணப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். எனினும் தற்போதைய அரசாங்கம் அனைத்து ஸ்ரீலங்கா மக்கள…

  15.  யாழ். நீதிமன்றில் கெஹகலிய மக்கள் போராட்ட இயக்கத்தின் உறுப்பினர்களான லலித் மற்றும் குகன் கடத்தப்பட்டு காணாமல் போன வழக்கில் முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹகலிய ரம்புக்வெல, யாழ். நீதிமன்றில் ஆஜராகியுள்ளார். 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் திகதி யாழ். நகரில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் போனது தொடர்பான வழக்கில் முன்னாள் ஊடக துறை அமைச்சர் கெஹகலிய ரம்புக்வெலவை சாட்சியாகப் பதியுமாறு முறைபாட்டாளர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மன்றில் முன்னதாகக் கோரிக்கை விடுத்திருந்தார். காணாமல் போன இருவரையும், பாதுகாப்புப் படையினர் கைதுசெய்துள்ளதாக ஊடகதுறை அமைச்சர் கெஹகலிய ரம்புக்வெல தகவல் வெளியிட்டார் என்பதனால் அவரைச் சாட்…

  16. வெள்ளவத்தை மற்றும் இரத்மலானை புகையிரத நிலையத்தை அண்மித்த பகுதியில் இன்று காலை மூவர் ரயிலில் மோதி பலியாகியுள்ளனர். மேலும், குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/6221

    • 22 replies
    • 1.9k views
  17. இராணுவத்தை தொடர்ந்தும் நிலை நிறுத்தினால் பிர­பா­கரன் மறு அவ­தாரம் எடுக்க நேரிடும்! 13 மே 2016 சமஷ்டி பிரிவினையல்ல!! விக்கியின் உரை:- இராணுவத்தை தொடர்ந்தும் நிலை நிறுத்தினால் பிர­பா­கரன் மறு அவ­தாரம் எடுக்க நேரிடும்! தமிழ் சமூ­கத்தின் மீது நம்­பிக்­கை­யின்றி போரினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களுக்கு மத்­தியில் இரா­ணு­வத்­தி­னரை தொடர்ந்தும் நிறுத்­து­வ­தற்கு அர­சாங்கம் முயற்­சி­களை மேற்­கொள்­ளு­மாயின் மற்­றொரு பிர­பா­கரன் மறு அவ­தாரம் எடுத்தால் எவ­ரையும் குற்­றஞ்­சாட்­ட­மு­டி­யாது என வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் சுட்­டிக்­காட்­டிக்­காட்­டி­யுள்ளார். அதே­நேரம் சமஷ்டி பிரி­வினை அல்ல என்­பதை வலி­யு­றுத்­தி­யவர் மத்­திய அர­சாங்­கத்தி…

  18. 'தமிழர்கள் படுகொலைக்கு தி.மு.க-வே காரணம்' 13-05-2016 09:00 AM இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு திராவிட முன்னேற்ற கழகம் தான் காரணம் என தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசார கூட்டமொன்றில் வியாழக்கிழமை கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. - See more at: http://www.tamilmirror.lk/172102/-%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%B4%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%B2-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%B5-%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE-#sthash.oWlDqA8O.dpuf

  19. பொது மக்களை நினைவுகூரலாம், புலிகளை நினைவுகூர முடியாது' பாதுகாப்பு (ராஜாங்க) அமைச்சர் ருவன் விஜேவர்தன இலங்கையில் போரில் உயிரிழந்த மக்களை நினைவுக்கூர உறவினர்களுக்கு எந்தத் தடையும் இல்லை என்று தெரிவித்துள்ள பாதுகாப்பு (ராஜாங்க) அமைச்சர் ருவன் விஜேவர்தன, விடுதலைப் புலிகளை நினைவுக்கூரும் நடவடிக்கைகளை அனுமதிக்கப்போவதில்லை என்று கூறியுள்ளார். போரில் கொல்லப்பட்டவர்களுக்காக ஒருவார கால நினைவு தினம் அனுசரிக்கப்படும் என்று வட-மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளமை தொடர்பில், கொழும்பில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, அமைச்சர் ருவன் விஜேவர்தனவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோதே அவர் இவ்வாறு கூறினார். முள்ளிவாய்க்காலில் பலியானவர்…

    • 9 replies
    • 810 views
  20. கைத்தொழில் மற்றும் வர்த்தக நடவடிக்கை அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரனான வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், போலியான காணி உறுதிப்பத்திரத்தின் ஊடாகக் காணியை விற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கொழும்பு-10ஐ வசிப்பிடமாகக் கொண்ட, அப்துல் காசிம் மொஹமட் சலானி என்பவர், நவம்பர் மாதம் 16ஆம் திகதியன்று செய்த முறைப்பாட்டுக்கு அமையவே இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டதாக, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டியவின் கவனத்துக்கே, குற்றப்புலனாய்வுப் பிரிவினர், நேற்று செவ்வாய்க்கிழமை கொண்டுவந்தனர். அதன்படி தலைமன்னாரில் உள்ள 2 கோடியே 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான 40 ஏக்கர் காணியே இவ்வ…

    • 4 replies
    • 496 views
  21. ஊழல்களுக்கு எதிரான நடவடிக்கைகளே எமது வெற்றியாகும் : ஊழல் எதிரான சர்வதேச மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு இலஞ்ச ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிராக கடந்த ஒன்றரை வருடங்களாக அரசாங்கம் முன்னெடுத்து வரும் செயற்பாடுகளே எமக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மேலும் இலங்கையை முற்றாக ஊழல் அற்ற நாடாக உருவாக்க அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் தலைமையில், லண்டன் நகரில் இடம்பெறகின்ற ஊழல் எதிர்ப்பு சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார். இம் மாநாட்டில் கருத்து தெரிவித்த பிரித்தானிய …

  22. சித்திரவதை முகாம்கள் இல்லை : அரசாங்கம் (ப.பன்னீர்செல்வம்) திருகோணமலை கடற்படை முகாமுக்குள் எந்தவிதமான சித்திரவதை முகாம்களும் இல்லையென அரசாங்கம் நிராகரித்துள்ளது. சில இடங்களில் சில பொலிஸார் அத்துமீறிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இவை தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுமென்றும் அரசு தெரிவித்தது. கொழும்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடாகவியலாளர் மாநாட்டிலேயே அரசாங்கம் இத்தகவல்களை அரசு வெளியிட்டது. இங்கு உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான டாக்டர் ராஜித சேனாரத்தன ஐ.நா. குழுவினர் அரசுக்கு அறிவிக்காமலேயே திருகோணமலையிலுள்ள கடற்படை முகாமு…

    • 1 reply
    • 517 views
  23.  பிரித்தானியாவுக்கு பயணமானார் ஜனாதிபதி பிரித்தானியாவில் நடைபெறும் ஊழலுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று புதன்கிழமை (11) முற்பகல் லண்டன் பயணமானார். ஜனாதிபதியும் தூதுக்குழுவினரும் இன்று (11) முற்பகல் 10.05க்கு எமிரேட்ஸ் EK 651 விமானத்தில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கிப் பயணமாகினர். பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனின் தலைமையில் பல்வேறு நாடுகளின் அரச தலைவர்களும் பிரதிநிதிகளும் பங்குபற்றும் ஊழலுக்கெதிரான சர்வதேச மாநாடு, நாளை வியாழக்கிழமை (12) லண்டன் நகரில் ஆரம்பமாகவுள்ள அதேநேரம், …

    • 13 replies
    • 670 views
  24. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று லண்டனில் ஈழத்தமிழர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர். பிரித்தானியத் தமிழர் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏனைய அரசியல் தலைவர்களும் பங்கேற்றிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்றவர்கள், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஒரு போர்க்குற்றவாளி என்றும், போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைக்கு தமிழர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பினர். 2009ஆம் ஆண்டு மே மாதம், பெருமளவிலான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட போரின் இறுதிக்கட்டத்தில் சி்றிலங்காவின் பதில் பாதுகாப்பு அமைச்சராக மைத்…

    • 2 replies
    • 721 views
  25. பசில் கைது பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/172053/%E0%AE%AA%E0%AE%9A-%E0%AE%B2-%E0%AE%95-%E0%AE%A4-#sthash.UHLn6Sce.dpuf

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.