Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஈழத் தமிழ் மக்களை மீண்டும் மீண்டும் ஒடுக்கி அடக்கும் அபாய வலயங்களையே சிங்களப் பேரினவாதிகள் பின்னுகின்றனர். இதனைத்தான் அண்மையில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கிகள், வெடிபொருட்கள் தொடர்பான விடயங்கள் உணர்த்துகின்றன. வடகிழக்குத் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான ஒரு நிலையை தெற்கில் காண்பித்து அதன் ஊடாக அரசியல் ஆதாயங்களை பெற பேரினவாத சக்திகள் முயல்வது புதிய அணுகுமுறையல்ல. இராணுவமுகாங்களை அகற்றவும், சோதனைச்சாவடிகளை அகற்றவும் தடைவிதிக்கக்கோரும் பேரினவாத சக்திகள், எதிர்பார்த்ததைப்போலவே மன்னார் தள்ளாடியில் சோதனைச்சாவாடி ஒன்றும் திறக்கப்பட்டிருக்கிறது. இவை எதற்கான? யாருக்கான சோதனைச்சாவடி? தமிழ் மக்கள் ஆயுதம் எடுத்து வருவதை தடுத்தற்கான சோதனைச்சாவடிகள் அல்ல. தமிழ் மக்களின் கைகளில் …

    • 0 replies
    • 322 views
  2. தமிழக அரசியல் கட்சிகள் தமிழீழத்தை உருவாக்க முனைப்பு காட்ட வேண்டுமென நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எனப்படும் அமைப்பின் தலைவர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள தமிழக சட்ட மன்றத் தேர்தலில் தமிழீழத்தை உருவாக்குவது குறித்த பிரச்சார முனைப்புக்களை மேற்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசியல் கட்சிகள் தமிழீழ மக்களின் உரிமைகளை உறுதி செய்யும் கரங்களை பலப்படுத்த முயற்சிக்க வேண்டுமெனவும் அதற்கு தேர்தல் களத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழீழ மக்களின் சுதந்திரம் மிகவும் அவசியமானது என்பதனை தமிழக அரசியல்வாதிகள் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழ்த் தேசிய வ…

    • 0 replies
    • 338 views
  3. 65000 வீடுகளை நிர்மானிக்கும் திட்டம் இடைநிறுத்தப்படவில்லை என புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். 65000 வீடுகளை அமைக்கும் திட்டம் இடைநிறுத்தப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. எனினும், இந்த திட்டம் இடைநிறுத்தப்படவில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 65000 வீடுகளை நிர்மானிக்கும் திட்டம் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். வீடமைப்பு திட்டம் குறித்து மீளாய்வு செய்யும் நோக்கில் குழு நியமிக்கப்படவில்லை எனவும், காணிப் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவி;துள்ளார். …

    • 0 replies
    • 322 views
  4. போர் நிறைவடைந்த பின்னர் இதுவரை 313 தற்கொலை அங்கிகளும் லட்சக்கணக்கில் ஆயுதங்கள் மற்றும் வெடி குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவை பற்றி பெரிதுபடுத்தாத ஊடகங்கள் சாவகச்சேரியில் மீட்ட தற்கொலை அங்கிக்கு முக்கியத்துவமளிப்பது விந்தையாகவுள்ளதென்றும் பதில் நிதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் அமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தற்கொலை அங்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளே இன்னும் நிறைவுறாத போது அது ஒரு புதிய அங்கி என கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 2009 ஆம் ஆண்டு முதல் இதுவரை பெருமளவு தற்கொலை அங்கிகள் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. …

    • 2 replies
    • 468 views
  5. குவைத் போலீஸார் Hassawi பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் செய்த சோதனையில் அங்கு நான்கு இலங்கை பெண்களை விபச்சார குற்றச்சாட்டில் கைது செய்துள்ளதாக arab times online படங்களுடன் தகவல் வெளியிட்டுள்ளது. ஆரம்ப விசாரணைகளில் இந்த நான்கு பெண்கள் மற்றும் அவர்களின் அனுசரணையாளர்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யபட்டுள்ளதுடன், ஆதரவாளர்கள் தலைமறைவாகி உள்ளனர். அவர்கள் விசாரணைக்காக அங்குள்ள போலிஸ் நிலையத்தின் பொது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் வைக்கப்ட்டுள்ளதாக அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன, இச் செய்தியின் முழு வடிவம் http://battinaatham.com/description.php?art=3404

  6. யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிப்பொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் ஐவர், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். பிரதான சந்தேகநபரின் அலைபேசியிலிருந்து உள்வந்த மற்றும் வெளிச்சென்ற அழைப்புகளின் ஊடாக மிகநெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தனர் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இந்த ஐவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், நெல்லியடி மற்றும் சாவக்கச்சேரி ஆகிய இடங்களை வதிவிடமாக கொண்டவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். http://www.tamilmirror.lk/169817/%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%95%E0%AE%9A-%E0%AE%9A-%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%95-%E…

    • 0 replies
    • 535 views
  7. யாழ். குடாநாட்டில் தினமும் கஞ்சா கைப்பற்றப்படுவதாகச் செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன. கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான கஞ்சாக்களை கைப்பற்றுவது என்பதற்கப்பால், கைப்பற்றப்படாத கஞ்சாக்கள் எவ்வளவு என்ற கேள்வி எழுவது நியாயமே. என்றும் இல்லாதவாறு கஞ்சா யாழ். குடா நாட்டிற்குள் ஊடுவருவதற்கான காரணம் என்ன? இதன் பின்னணி யாது? என்ற கேள்விக்கான விடை கண்டறியப்பட வேண்டும். இல்லையேல் கஞ்சாவால் எங்கள் தமிழ் இனத்தின் எதிர்காலம் பாழாகும் என்பது நிறுத்திட்டமான உண்மை. பொதுவில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கக் கூடிய மக்கள் ஒருவரை ஒருவர் இனங்காணக் கூடியவர்களாகவே இருக்கின்றனர். எனினும் சமகால சூழ்நிலையில் குடாநாட்டிற்கு வெளியில் இருக்கக் கூடியவர்கள் வந்து போகக் கூடிய சந்தர்ப்பங்கள் ந…

  8. வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்று பேசிய பாராளுமன்ற உறுப்பினர்களை மட்டக்களப்பு தமிழர்கள் வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார்கள் இதேபோன்று தமிழ்த் தேசியம் பேசித் திரியும் யோகேஸ்வரனையும் அடுத்த பொதுத் தேர்தலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆக்குவார்கள் என்று கூறியதுடன் கல்வியறிவில்லாத மொழியாற்றல் இல்லாத எழுத்தறிவில்லாத தலைவர்களை தமிழினம் தெரிவு செய்துள்ளது அமிர் அலி இவ்வாறு இழிவுத்தனமாக மட்டக்களப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்துத் தலைவர்களையும் சாடியுள்ளார், அதுமட்டுமல்லாமல் தலைவர்களை தெருநாய்கள் என்றும் இவர்களுக்கு வாக்களித்த தமிழர்களை மடையர்கள் என்றும் விமர்சித்துள்ளார். http://battinaatham.com/description.p…

    • 7 replies
    • 967 views
  9. புலிகளின் மீது புழுதி வாரித் தூற்றும் அந்த கூர்வாளின் நிழல்! [ வியாழக்கிழமை, 07 ஏப்ரல் 2016, 11:09.56 AM GMT ] ஒரு கூர்வாளின் நிழலில் புத்தக ஆசிரியரான புலிகளின் மகளிரணித் தலைவி தமிழினி, புத்தகம் சொல்லும் செய்தி மற்றும் கருத்துக்களை தன் வரலாறு என்று தலைப்பிட்டிருந்தாலும், அவர் போராளியாக இருந்த 18 ஆண்டு கால இயக்கத்தின் வரலாற்றையே அதிகம் பேசிச் சென்றிருக்கிறார். புத்தகத்தின் பின் அட்டையின் தமிழினி சொல்வதாக இப்படி வந்திருக்கிறது: இயக்கத்தின் தவறுகள் ஒரு போராட்டத்தின் நியாயத்தை முடக்கிவிட முடியாது ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தின் நியாயத்தை முடக்கின்ற வகையிலேயே, புத்தகம் முழுக்க தமிழினியின் வாழ்க்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. விடுதல…

    • 0 replies
    • 1.1k views
  10. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறைக்கப்பட்டிருக்குமாயின், அது தவறானது என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். நாடாளுமன்ற சபை முதல்வரான அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறியுள்ளது போல, முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு குறைக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது. ஏனைய ஜனாதிபதிகளுக்கு முடியாது போன போரை முடிவுக்கு கொண்டு வந்த தலைவர் என்ற மகிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். புலம்பெயர்ந்தோர் மகிந்த ராஜபக்சவை விழுங்க காத்து கொண்டு இருக்கின்றனர். மகிந்த ராஜபக்சவுக்கு வெள்ளை பூசுவதற்காக நான் இதனை கூறவில்லை. நான் வெளி…

  11. வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து தனி நாடாளுமன்றம் அமைக்கப்பட்டு சமஷ்டி முறையில் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என, அரசியல் தீர்வு தொடர்பாக வட மாகாணசபையினால் நியமிக்கப்பட்ட குழு பரிந்துரைத்துள்ளது. வடமாகாண சபையின் அமர்வு கைதடியிலுள்ள மாகாண சபை கட்டிடத் தொகுதியில் இன்று நடைபெற்றது. இதன்போது வடமாகாண சபையினால் நியமிக்கப்பட்ட 19 பேர் கொண்ட குழு பாிந்துரைத்த திட்ட வரைபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் சபையில் சமர்ப்பித்து வாசித்தார். திட்டவரைபில் முன்மொழியப்பட்டுள்ள முக்கிய பரிந்துரைகள் வருமாறு- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள் வடக்கு மற்றும் கிழக்கில் ஓர் அலகாகவும், தமிழ் பேசும் மலையக மக்கள் வேறு அலகாகவ…

  12. ஈபிடிபி உறுப்பினர் என தெரிவிக்கப்படுகின்ற ஒருவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சட்டவிரோதமான கைத்துப்பாக்கிக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியமை சட்டரீதியானதா என்பது குறித்து ஆலோசனை பெற்று நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு அரச சட்டத்தரணிக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பணித்துள்ளார். அரசாங்கத்தின் அனுமதிப் பத்திரம் இல்லாமல், சட்டவிரோதமாக கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்தார் என்பதற்காக ஈபிடிபி கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் என தெரிவிக்கப்படுகின்ற ஒருவருக்கு எதிராக சட்டமா அதிபரினால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் துப்பாக்கிகள் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையின்போது, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கைத்துப்பாக்கியை அதே கட…

  13. பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த 18 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நாடாளுமன்றத்தில் இன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார். கடற்படையைச் சேர்ந்த மூன்று சிப்பாய்கள், இராணுவத்தைச் சேர்ந்த 7 சிப்பாய்கள் மற்றும் இந்த சட்டத்தின் வேறு பிரிவுகளின் கீழ் 4 பொலிஸ் அதிகாரிகளும், 4 இராணுவ சிப்பாய்களுமாக மொத்தம் 18 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இவர்களிடம் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். http://www.seithy…

  14. அரசியலமைப்புப் பேரவையாக மாறியது நாடாளுமன்றம்! புதிய அரசியலமைப்தைத் தயாரிப்பதற்காக, முழு நாடாளுமன்றமும் அரசியலமைப்புப் பேரவையாக, இன்று மாறியது. அதன் முதற்படியாக, உப தலைவர்கள் எழுவர் நியமிக்கப்பட்டனர். இரண்டாவதாக, வழிநடத்தல் குழு நியமிக்கப்பட்டது. உப தலைவர்கள் 01. திலங்க சுமதிபால 02. செல்வம் அடைக்கலநாதன் 03. கபீர் ஹாசிம் 04. சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே 05. திலக் மாரப்பன 06. மஹிந்த யாப்பா அபேவர்தன 07. நலிந்த ஜயதிஸ்ஸ வழிநடத்தல் குழு 01. ரணில் விக்கிரமசிங்க 02. லக்ஷம…

  15. கிருஷ்ணசாமி | கோப்புப் படம் திமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்று அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி சென்னையில் இன்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். இது தொடர்பாக கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''திமுக தலைவர் கருணாநிதியுடன் புதிய தமிழகம் கட்சி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்ததை அடுத்து கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது. ஸ்டாலின், கனிமொழி முன்னிலையில் கூட்டணி உடன்பாட்டில் கையெழுத்திட்டேன். இதில் புதிய தமிழகம் கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என…

    • 0 replies
    • 569 views
  16. எதிர்க் கட்சி தலைவர் மட்டக்களப்பிற்கு விஜயம்: பல தொழிற்சாலைகள் திறந்துவைப்பு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா.சம்பந்தன் எதிர்வரும் சனிக்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளார். கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் அவர்களின் அழைப்பின்பேரில் எதிர் கட்சித் தலைவரின் விஜயத்தின்போது மண்டூரில் புனரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த மாதிரி பண்ணையை உத்தியோக பூர்வமாக காலை 09.30 மணிக்கு திறந்து வைக்கும் நிகழ்விலும் மற்றும் சித்தாண்டியில் அமைந்துள்ள கால் நடைத் தீவன உற்பத்தி தொழிற்சாலையையும் மாலை 3.00 மணிக்கு திறந்து வைக்கும் நிகழ்விலும் கலந்து கொள்ளவுள்ளதாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணப்பிள்ளை துரைராஜசிங்கம் தெரிவித்தார். இந் நிகழ்வுகள…

  17. நாட்டில் போதைப்பொருட்கள் பாவனை அதிகரித்துள்ள ஒரு சூழலில் அதற்கேற்ற வகையில் தற்போது வடக்கிலும் போதைப்பொருட்களின் பாவனை படிப்படியாக அதிகரித்து வருகின்ற நிலைமையே காணப்படுகின்றது. இலங்கைக்கு போதைப்பொருட்கள் மற்றும் கேரள கஞ்சா போன்றவற்றைக் கடத்துபவர்கள் வடக்கு கடல் மார்க்கத்தைப் பிரதானமாகக் கொண்டுள்ளதால், இப்பொருட்களின் பாவனைக்கு வடக்கு மக்கள், குறிப்பாக இளைஞர்கள் ஈர்க்கப்படுகின்ற சூழ்நிலை அதிகம் காணப்படுகிறது. எனவே, இதனை தடுத்து நிறுத்த எமது சமுதாயம் சார்ந்த அக்கறையுள்ள அனைவரும் ஓரணி திரள வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார். இவ்விடயம் குறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம், வடக்கில் தற்…

    • 0 replies
    • 470 views
  18. சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான பொது மன்னிப்புக் காலம் அறிவிப்பு: சட்டவிரோதமாக வைத்திருக்கும் ஆயுதங்களை ஒப்படைப்பதற்காக பொது மன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பாதுகாப்பு அமைச்சினால் இந்த பொது மன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 25ம் திகதி முதல் மே மாதம் 5ம் திகதி வரையில் ஆயுதங்களை ஒப்படைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் அனுமதி பத்திரம் எதுவுமின்றி ஆயுதங்களை வைத்திருக்கும் நபர்கள் அந்த ஆயுதங்களை காவல் நிலையங்கள் அல்லது பிரதேச செயலகங்களில் ஒப்படைக்க முடியும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. சட்டவிரோத ஆயுத பயன்பாட்டினால் ஏற்பட்டு வரும் பாதக விளைவுகளை தடுக்கும் நோக்கில் அரசாங்கம் இவ்வாறு நட…

    • 0 replies
    • 610 views
  19. சிறிலங்காவுக்கு ஏன் வந்தார் போர்க்குற்ற விவகார நிபுணர்?- அமெரிக்கத் தூதரகம் அறிக்கை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் சிறப்பு ஒருங்கிணைப்பாளர், ரொட் புச்வால்ட் மற்றும், தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான பிரதி உதவிச் செயலர் மன்பிரீத் ஆனந்த் ஆகியோர் சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பாக, அமெரிக்கத் தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த இக்கட்டான தருணத்தில், அரசியலமைப்பு சீர்திருத்தம், மற்றும் அமைதியான, செழிப்பான, நல்லிணக்கமான எதிர்காலத்தை உருவாக்க, இலங்கை மக்களின் ஆதரவை அமெரிக்கா கோருவதாக, அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் குறிப்பிட்டுள்ளார். சிறிலங்கா வந்திருந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த அத…

    • 0 replies
    • 394 views
  20. தீர்வு மேசையில் சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதிகளாக சம்பந்தன், ரவூப் ஹக்கீம் ஆகிய இருவருக்கு மட்டுமே இடம்! இனப்பிரச்சினைக்கான தீர்வு மேசையில் சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதிகளாக சம்பந்தன் ஐயாவும், ரவூப் ஹக்கீமும் மாத்திரமே இருப்பார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகத் தெளிவாக அறிவித்துள்ளார் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். விஞ்ஞான தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் “கிராமத்திற்கு தொழில்நுட்பம்’ எனும் தொனிப்பொருளின் கீழ் சாய்ந்தமருது வொலிவேரியன் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட விதாதா வள நிலையத் திறப்பு விழா கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது. பிரதி அமைச்சர் …

    • 0 replies
    • 293 views
  21. தமிழ் தேசியக் கூட்டமைப்பை விமர்சிப்பதற்கு வேறு இனத்தவர்களுக்கு அருகதை இல்லை- கருணாகரம் அமீர்அலிக்கு பதிலடி மட்டக்களப்பு நகரின் மோசாப்பிட்டி வை.எம்.ஏ.சி.விளையாட்டுக்கழகத்தின் 88வது ஆண்டு நிறைவினை முன்னிட்டும் சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டும் மாபெரும் விளையாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பயனியர் வீதியில் உள்ள வை.எம்.ஏ.சி.விளையாட்டுக்கழக மைதானத்தில் இந்த விளையாட்டு விழா நடைபெற்றது. வை.எம்.ஏ.சி.விளையாட்டுக்கழகத்தின் தலைவர் ஈ.வைரமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த விழாவுக்கு பிரதம அதிதிகளாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா), கோட்டைமுனை அரசடிப்பிள்ளையார் ஆலய தலைவர் செ.அமிர்தலிங்கம் ஆகியோர் கலந்துகொண்ட…

    • 0 replies
    • 1.1k views
  22. அமெரிக்காவில் பசில் வீட்டில் சமையற்காரர்களாக பயன்படுத்தப்பட்ட கடற்படையினர்! மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இரண்டு கடற்படையினருக்கு இராஜதந்திர கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டு கலிபோர்னியாவில் உள்ள பசில் ராஜபக்சவின் மகனின் வீட்டில் சமையல்காரர்களாக பணியில் அமர்த்தப்பட்டனர். பாரிய ஊழல்கள் மற்றும் மோசடி விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையில் இது தெரியவந்துள்ளது. இந்த இரண்டு கடற்படை வீரர்களும் அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகத்தின் தோட்டக்காரர்களாகவே அழைத்துச் செல்லப்பட்டனர். எனினும் அவர்கள் பின்னர் சமையல்காரர்கள் ஆக்கப்பட்டனர். பல வருடங்கள் அமெரிக்காவில் பணியாற்றிய நிலையில் அவர்கள் இருவரும் இலங்கை திரும்பி திருமண பந்தத்தில் இணைந…

    • 0 replies
    • 378 views
  23. வடக்கில் பொருத்து வீடுகளை அமைக்கும் திட்டம் நிறுத்தப்படாது – ஆளுனர் வடக்கில் 65 ஆயிரம் பொருத்து வீடுகளை அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இந்த திட்டம் நிறுத்தப்படமாட்டாது என்றும் ஆனால் பல்வேறு திருத்தங்களுடன் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்குச் செவ்வியளித்துள்ள அவர், இதுதொடர்பான தனது பரிந்துரையை வெளிப்படுத்த மறுத்துள்ளார். ஆனால், இந்தத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள சில வசதிகள் பயனாளிகளுக்குத் தேவையற்றவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த திட்டத்தில் எரிவாயு உருளை, எரிவாயு அடுப்பு, கணினி, மற்றும் தொலைக்காட்சியும் அடங்கியுள்ளன. இந்த திட்டத்தை எதிர்த்…

    • 2 replies
    • 549 views
  24. பொருத்து வீட்டுத் திட்டம் ; உடன் இடைநிறுத்த ஜனாதிபதி பணிப்பு - குழுவொன்றும் நியமிப்பு [ Thursday,7 April 2016, 03:32:31 ] வடமாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் பொருத்து வீட்டுத் திட்டப் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறும், மீளாய்வின் பின்னர் அது தொடர்பில் முடிவெடுக்கலாம் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சரவைக் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து ஆராய குழுவொன்றையும் அவர் நியமித்துள்ளார். அமைச்சரவைக் கூட்டம் நேற்று புதன்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் நடைபெற்றது. இதன்போது பொருத்து வீட்டுத் திட்டம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. இந்த வீட்டுத் திட்டத்திற்கு பல்வேறு தரப்புக்களும் எதிர்ப்புக்களை வெளியிட்டுள்ளன. இத…

  25. பொருத்து வீட்டுத் திட்டப் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறும், மீளாய்வின் பின்னர் அது தொடர்பில் முடிவெடுக்கலாம் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சரவைக் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரவைக் கூட்டம் நேற்று புதன்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் நடைபெற்றது. இதன்போது பொருத்து வீட்டுத் திட்டம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. இந்த வீட்டுத் திட்டத்திற்கு பல்வேறு தரப்புக்களும் எதிர்ப்புக்கள் வெளியிட்டுள்ளன. இதனடிப்படையில் இந்த வீட்டுத் திட்டத்தை மீளாய்வுக்கு உட்படுத்துமாறும், அதுவரையில் தற்காலிகமாக இடைநிறுத்துமாறும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மீள்குடியேற்ற அமைச்சினால் 65 ஆயிரம் பொருத்து வீடுகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. …

    • 0 replies
    • 419 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.