ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143480 topics in this forum
-
வடக்கில் சுத்தமான குடிநீரைப் பெற வடமாகாணசபை, எம்.பிக்களது ஒத்துழைப்பு அவசியம்! வடக்கு மாகாணத்தில் சுத்தமான குடிநீரைப் பெறவேண்டுமானால் வடமாகாணசபை உறுப்பினர்களதும் பாராளுமன்ற உறுப்பினர்களதும் முழுமையான ஒத்துழைப்பு அவசியம் என வடக்கு மாகாண தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதி பொது முகாமையாளர் தி.பாரதிதாசன் தெரிவித்தார். 2020ஆம் ஆண்டு வடக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் 60 வீதம் சுத்தமான குடிநீர் விநியோகம் வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். உலக நீர் தினத்தை முன்னிட்டு சுத்தமான குடிநீர் தேடலுக்கான நடை பவனி நேற்றையதினம் யாழில் நடைபெற்ற போது அதில் கலந்துகொண்ட…
-
- 0 replies
- 397 views
-
-
முல்லைத்தீவு நகரில் அமைந்திருக்கும் மக்கள்வங்கி மற்றும் இலங்கை வங்கிக் கிளைகளில் ஒவ்வொறுமாதமும் 20,21,22, ஆகிய திகதிகளில்இராணுவத்தினரின் பிரசன்னம் அதிகமாக காணப்படுகின்றது. இதனால் பொதுமக்கள்(ATM) தாணியங்கி மூலம் பணத்தை பெற்றுக்கொள்வதில் சிரமத்தை சந்தித்துள்ளனர். அவசரமாக(ATM) பணத்தை பெற்றுக்கொள்வதற்கு இராணுவத்தினருடன் வரிசையில் நிற்கமுடியுமா? என்று யுவதி ஒருவர் கேள்வியெழுப்பியுள்ளார். ஏனைய மாவட்டங்களைவிட முல்லைத்தீவு மாவட்டதில் அதிகளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொடுக்கப்படும் விடுமுறை நாட்களிள் ஒரு நாளை வீனாக்காமல் கடமை நேரத்தில் இராணுவ சீருடையுடன் வாகனங்கள் சகிதம் வந்து மேற்குறிப்பிட்டது போல் செயற்படுவதை அவ…
-
- 2 replies
- 407 views
-
-
யுவதியை கடத்திய இளைஞர்களை நையப்புடைத்த இளைஞர்கள் : யாழில் சம்பவம் யாழ்ப்பாணம் சித்தங்கேணி பகுதியில் தனியார் கல்வி நிலையத்துக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த யுவதி ஒருவரை கடத்தி செல்ல முற்பட்ட இருவரை அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் விரட்டி பிடித்து நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, அராலி செட்டியார்மடம் வடக்கு பகுதியைச் சேர்ந்த குறித்த யுவதி, சித்தங்கேணி பகுதியில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றுக்கு சென்றுவிட்டு வீடு செல்வதற்காக சித்தங்கேணி சந்தியில் நின்ற பஸ்ஸில் ஏறி அமர்ந்துள்ளார். …
-
- 1 reply
- 692 views
-
-
கொம்பு சீவி விடப்பட்டுள்ள பொன்சேகா ப.தெய்வீகன் இலங்கை அரசியலில், பொன்சேகாவின் உரையாடல் அண்மைக்காலமாக அதிகரித்திருக்கிறது. ஊடகங்களால் தவிர்க்க முடியாதளவுக்கு, பொன்சேகாவின் பேச்சுக்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும் காணப்படுகின்றன. இழந்துபோன மதிப்பு மரியாதையை போராடி மீளப்பெற்றுக்கொண்டவர் என்பதையும் தாண்டி, அவரது பெயர் எல்லாத்தரப்பிலும் அதிகம் பேசப்படுகிறது. அவரது பேச்சுக்களைக் கவனமாக அவதானித்தால், அவை பொதுமக்களின் சாதாரண பிரச்சினைகள் பற்றியவையாக இல்லாமல், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவைக் குறிவைத்துத் தாக்குபவையாக இருப்பதை அதிகம் காணலாம். அதிலும் முக்கியமாக, 2009இல் முடிவடைந்த போர் தொடர்பாகவும் அதனை மையமாகக் கொண்ட சம்பவங்களையும…
-
- 2 replies
- 614 views
-
-
இந்நாட்களில் உடற்பயிற்சி வேண்டாம் : காலநிலை அவதான நிலையம் எச்சரிக்கை நாட்டில் நிலவிவரும் அதிக வெப்ப நிலை காரணமாக உடற்பயிற்சிகளை செய்ய வேண்டாம் எனவும் இந்த வெப்ப காலநிலையானது எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கும் எனவும் காலநிலை மத்திய நிலையம் அறிவித்துள்ளது. பகல் பொழுதுகளில் உடற்பயிற்சி அல்லது விளையாடுவது கட்டாயம் என கருதினால் வெப்பத்திலிருந்து பாதுகாப்பு பெறுவதும் அவசியமானதொன்று என விளையாட்டுத் துறையின் மருத்துவ அதிகாரி மருத்துவர் லால் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். குறிப்பாக குழந்தைகளின் இருதயம் மற்றும் மூளைக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் உடலில் நீர் குறைவடைவதனால் இவ்வாறான நிலைமை ஏற்படுவதாகவும் சிறுவர் மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்து…
-
- 0 replies
- 344 views
-
-
போரின் ஆயுதமாகப் பாவிக்கப்படும் வன்புணர்வு! வடக்கு முதல்வர் சி.வி சுட்டிக்காட்டு வன்புணர்வானது போரின் ஆயுதமாகப் பாவிக்கப்பட்டு வருகின்றது. என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பெண்களின் குரல் எனும் அமைப்பினால் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் இன்று வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மகளிர் தினத்தை நாங்கள் கொண்டாடுவதற்குப் பல நல்ல காரணங்கள் உள்ளன. இன்று பெண்கள் சமூக, பொருளாதார, கலாசார, அரசியல் ரீதியாகப் பெரும் பங்கு ஆற்றி வருகின்றார்கள். அவர்களின் வெற்றிய…
-
- 0 replies
- 258 views
-
-
வடக்கிலும் தெற்கிலும் இரண்டு கைவினைப் பொருட்கள் சார்ந்த கிராமங்களை அமைப்பதற்கு 50 மில்லியன் ரூபாவை இந்தியா முதலீடு செய்யவுள்ளது. ஸ்ரீலங்காவின் கைவினைதுறைக்கு உதவி வழங்கும் வகையில் அந்த துறையில் முதலிடுவதற்கு இந்தியா முன்வந்துள்ளது. தெற்கில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள கைவினை கிராமம் அடுத்த மாதம் திறந்து வைக்கப்படவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராயலம் கூறியுள்ளது. திஸ்ஸமகாராமவில் அமைக்கப்பட்டுள்ள குறித்த கிராமத்தில் பயிற்சி வசதிகள் உள்ளதுடன், சுற்றுலாப் பயணிகளும் வருகை தரும் முக்கிய பகுதியாக இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இரண்டாவது கைவினை கிராமம் யாழ் நகரில் அமைக்கப்படுவதுடன், இவ்வருட இறுதிக்குள் அதன் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்ய முடியும் என இந்திய உயர்ஸ்…
-
- 0 replies
- 295 views
-
-
புறக்கணித்தார் வடக்கு முதல்வர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற முதலமைச்சர்களின் 32ஆவது மாநாட்டில், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பங்கேற்கவில்லை. இந்த மாநாடு, ஹிக்கடுவையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதேவேளை, நாளை 23ஆம் திகதி புதன்கிழமையன்று இடம்பெறும், வாராந்த அமைச்சரவை மாநாட்டுக்கு வருகைதந்து, மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதிகளைப் பகிர்ந்தளிப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கருத்துரைக்குமாறு அம்மாநாட்டில் பங்கேற்றிருந்த ஏனைய எட்டு மாகாணங்களின் முதலமைச்சர்களிடம், ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். - See more at: http://www.tamilmirror.lk/168575/%E0%AE%AA-%E0%AE%B1%E0%A…
-
- 1 reply
- 454 views
-
-
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று அலரி மாளிகையில் பாடசாலை மாணவத் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தநிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கலந்துகொண்ட மாணவத் தலைவர்களுக்கு ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். இதேவேளை, ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருடம் இணைந்து மாணவத் தலைவர்கள் 'செல்பி' எடுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 306 views
-
-
சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் புதல்விகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது. பரதநாட்டிய மாணவிகளான பவதரணி மகேஸ்வரன், பவித்ரா மகேஸ்வரன் ஆகியோரது பரதநாட்டிய அரங்கேற்றமே நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர்கள் விஜயதாச ராஜபக்ச, ரவி கருணாநாயக்க, டி.எம். சுவாமிநாதன் முன்னாள் மத்திய மாகாண உறுப்பினர் அசாத் சாலி ஆகியோரும் கலந்து கொண்டனர். …
-
- 8 replies
- 1.5k views
-
-
பிரபாகரனை வீழ்த்த மகிந்த செய்த நரபலி வேள்விகள்! ஜோதிடர் அதிர்ச்சி தகவல்! இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஜோதிடத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்டவர். அதன் பிரதிபலனாக ஆட்சி அதிகாரங்களை இழந்திருந்தார். இந்நிலையில் மகிந்த ஜோதிடம் மீது வைத்திருந்த நம்பிக்கையும் அவர் செய்த பரிகாரங்கள்இ பூஜைகளை சோதிடர் டப்ல்யூ.டீ.ஆரியரத்ன அம்பலப்படுத்தியுள்ளார். நாட்டில் நிலவிய போரை நிறைவு செய்து கொடுக்குமாறு கூறி தனது இரண்டு மாடி வீட்டில் மேற்கொண்ட காளி பூஜை மற்றும் இதுவரையிலான காலப்பகுதியில் மேற்கொண்டுள்ள பூஜை வழிபாடுகள் தொடர்பிலான முழுமையான தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார். பத்ரகாளி மற்றும் கல்லரை காளி அம்மா இருவரையும் வணங்கி கொண்டு தான் நான் இந்த பூஜையை ஆரம்பித்தேன். விட…
-
- 1 reply
- 558 views
-
-
க.பொ.த சாதாரண பரீட்சையில் 8A,B எடுத்து கிளிநொச்சி மாணவி சாதனை! எமது கல்வித்திட்டத்தில் 2013 ஆண்டு ஒக்டோபர் மாதம் உள்வாங்கபட்ட கிளிநொச்சி ST.THERESA’S GIRLS COLLEGE மாணவி அ.குணலீசா நடந்து முடிந்த க.பொ.த சாதாரண பரீட்சையில் 8A,B எடுத்து சித்தியெய்தியுள்ளார்.இவரின் தந்தை கடந்த யுத்தத்தின் போது இறந்து விட்டார். இவரின் குடும்ப சூழ்நிலையிலும் தனது கல்வியில் ஆர்வம் கொண்டு பாடசாலையில் சிறந்த பெறு பேற்றை பெற்று சித்தியெய்திய இவருக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவிப்பதுடன் இத்தருணத்தில் தொடர்ந்தும் இவருக்கான கல்வி நடவடிக்கைகளை பொறுப்பேற்று மாதந்தோறும் எம் ஊடாக பண உதவிசெய்து வரும் ஜேர்மனி நாட்டை சே…
-
- 4 replies
- 444 views
-
-
தந்தையை தொடர்ந்து தனையன்..! யோகா பயிற்சியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த வருடத்தில் தலைகீழாக தொங்கி யோகா பயிற்சியில் ஈடுபடுவது போன்ற புகைப்படங்கள் வெளியாகி ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டன. அதாவது மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் தனது மன நிலையை திடப்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், கடந்த வருடம் 70ஆவது பிறந்த தினத்தை கொண்டாடிய இவர், மறுதினம் இலங்கையின் புகழ்பெற்ற யோகாசன பயிற்சியாளரான நந்த சிறிவர்த்தன விடம் யோகா பயிற்சி பெறும் புகைப்படம் ஒன்றை அவரது புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தனது முகநூலில் பதிவேற்றி இருந்தார். இந்ந புகைப்படங்கள் இ…
-
- 0 replies
- 885 views
-
-
தமிழகத்திலிருந்து தாயகம் திரும்பும் 18 ஈழ அகதிகள் தமிழகத்திலிருந்து இலங்கை அகதிகள் 18 பேர் மீள நாடு திரும்பவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்கள் எதிர்வரும் 28 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 10 ஆண்களும் 8 பெண்களும் உள்ளடங்குவதுடன் இவர்கள் திருகோணமலை மன்னார் கிளிநொச்சி யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மீள்குடியமர்த்தப்படவுள்ளதாக அந்த அமைச்சின் செயலாளர் வே சிவஞானசோதி தெரிவித்துள்ளார். அத்துடன் இந்தியாவிலுள்ள 109 முகாம்களில் 64 ஆயிரம் இலங்கை அகதிகள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவிலிருந்து நாடு தி…
-
- 0 replies
- 260 views
-
-
சந்திரிக்கா குண்டுத் தாக்குதலால் நினைவிழந்துள்ளார் - உதய கம்மன்பில [ Tuesday,22 March 2016, 03:06:19 ] நகர மண்டப குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர் என்ற வகையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது சுய நினைவை இழந்துள்ளதாக ப்வித்துரு ஹெல உறுமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். கூட்டு எதிர்கட்சி மற்றும் முன்னைய அரசாங்கம் தொடர்பில் சந்திரிக்கா தெரிவிக்கும் கருத்துக்கள் முட்டாள்தனமானது எனவும் அவர் விமர்சித்துள்ளார். இரண்டு முறை சிந்திக்காமல் நினைவில் என்ன வருகின்றதோ அதனையே சந்திரிக்கா தெ…
-
- 1 reply
- 367 views
-
-
இலங்கையில் திரவ எரிவாயு மின் உற்பத்தி நிலையம்! உதவத் தயார் என்று கனடா அறிவிப்பு! இலங்கையில் திரவ எரிவாயு மின் உற்பத்தி நிலையம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு, உதவிகளை வழங்குவதற்கு கனடா முன்வந்துள்ளது. இலங்கையின் மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை நாடாளுமன்றத்தில் சந்தித்த கனேடியத் தூதுவர் ஷல்லி வைற்றிங் அம்மையார், இது குறித்துக் கலந்துரையாடியுள்ளார். திரவ எரிவாயு மின் உற்பத்தி திட்டத்தை ஆரம்பிப்பதற்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளையும், ஏனைய தேவையான வசதிகளையும் கனடா வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அனைத்துலக கவனத்தை இலங்கை பெற்றிருப்பதாகவும், எதிர்காலத்தில் மேலும் அபிவிருத்தித் திட்டங்களுக்கான உதவிகளை பெற ம…
-
- 0 replies
- 505 views
-
-
பாய்களில் படுத்துறங்கிய கைதிகளுக்கு மெத்தைகள் [ செவ்வாய்க்கிழமை, 22 மார்ச் 2016, 04:01.54 AM GMT ] பாய்களுக்கு பதிலாக சிறைக் கைதிகளுக்கு மெத்தைகள் வழங்குவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இலகுவாக உபயோகப்படுத்தும் வகையில் இந்த மெத்தைகள் கைதிகளுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த மெத்தைகளை சிறைச்சாலைகள் திணைக்களமே தயாரிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இதன் முதற் கட்டமாக கொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, கொழும்பில் மட்டுமின்றி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைச்சா…
-
- 0 replies
- 342 views
-
-
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் சந்தேகநபர் ஒருவர் அரசதரப்பு சாட்சியாக மாற்றம்? புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பதினோராவது சந்தேக நபர் அரச தரப்பு சாட்சியாக மாறி சாட்சியம் அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் பதினோரவதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்றைய (திங்கட்கிழமை) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளார். புங்குதீவு மாணவி கொலை வழக்கு தொடர்பில் 10 சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக வழக்கு விசாரணைகள் கடந்த பத்து மாத காலமாக ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கடந்…
-
- 0 replies
- 457 views
-
-
அதிர்ச்சியான தகவல்கள்..! போர்க்கள விவகாரம் : பொன்சேகா, பசிலுடன் சூடான நேர்காணல் (Exclusive Interviews ) விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த காலப்பகுதில் இடம்பெற்ற சில அதிர்ச்சி தகவல்களை வீரகேசரி இணையத்தளத்திற்கு வழங்கிய விசேட செவ்வியில் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்டுள்ளதுடன், அதற்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மறுப்பு தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/4356
-
- 1 reply
- 556 views
-
-
புங்குடுதீவு மாணவி வித்யா கொலை வழக்கு: 11 ஆவது சந்தேக நபருக்கும் விளக்கமறியல்! புங்குடுதீவு மாணவி வித்யா கொலை வழக்கில் பதினோராவதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். புங்குதீவு மாணவி கொலை வழக்கு தொடர்பில் 10 சந்தேகநபர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கு விசாரணைகள் கடந்த பத்து மாத காலமாக ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கடந்த 3 ஆம் திகதி 11 ஆவது சந்தேகநபரான உதயசூரியன் சுரேஸ்கரன் என்பவர் குற்ற தடுப்பு புலனாய்வு ப…
-
- 0 replies
- 379 views
-
-
பிரபாகரனின் இளைய மகன் தொட ர்பில் நான் ஊடகங்களுக்கு பல தடவைகள் தெளிவுபடுத்தியுள்ளேன். இர ண்டு படங்களை நானும் பார்த்தேன். என முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பு நாளிதழுக்கு வழங்கிய விஷேட செவ்வியிலேயே அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது..... யாரை கொலை செய்தாவது போரை முடி என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த போதிலும் 2 இலட்சம் மக்களை பாதுகாப்பாக மீட்டெடுக்கும் சவாலில் களமிறங்கி னோம். ஆனால் போர் வெற்றியை தனதாக்கிக் கொள்வதற்காக என்னையும் மீறி கனிஷ்ட நிலை அதிகாரிகளுக்கு பாதுகாப்பு செயலாளர் கட்டளையிட்டார். இதனால் தான் போர் குற்றப் பிரச்சினைகளும் வெள் ளைக் கொடி விவகாரமும் ஏற்பட்டது பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் செவ்வி …
-
- 0 replies
- 372 views
-
-
அதிகாரங்களை பகிர்ந்தளிக்க தயாராக இருக்கின்றேன்! ஜனாதிபதி என்ற வகையில், 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் ஊடாக அதிகாரங்களை பகிர்ந்து கொடுக்கும் முன்னதாக, அமைச்சர் என்ற வகையிலும் அந்த முன்னுதாரணத்தை தாம் நாட்டுக்கு வழங்கியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஹிக்கடுவையில் இன்று முற்பகல் நடைபெற்ற மாகாண முதலமைச்சர்களின் 32வது மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். சுகாதார அமைச்சராகவும் விவசாய அமைச்சராகவும் பதவி வகித்த காலத்தில் மாகாணத்தின் கண்காணிப்பு அதிகாரங்களை மாகாணங்களின் அமைச்சர்களுக்கு எழுத்து மூலம் வழங்கியிருந்தேன். …
-
- 3 replies
- 387 views
-
-
பிரபல பொலிவூட் நடிகை தீபிகா படுகோன் கடந்த சனிக்கிழமை திடீரென இலங்கைக்கு விஜயம் செய்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பில் நடைபெற்ற தீபிகாவின் நெருங்கிய நண்பி ஒருவரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக அவர் இலங்கைக்கு வந்துள்ளார். தீபிகாவும் அவரது இலங்கை நண்பியும் பாடசாலை காலத்தில் இருந்து நண்பர்களாக இருந்துள்ளனர். கொழும்பில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர், xxx திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக தீபிகா கனடா நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளதாக இந்திய திரையுலக தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.tamilwin.com/show-RUmuyDRVSXms0C.html
-
- 0 replies
- 520 views
-
-
கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற கல்விப் பொது தராதர சாதாரண தரப்பரீட்சையில், தாய், தந்தையரை இழந்த நிலையில் அம்மம்மாவின் அரவணைப்பின் கீழ் கல்வி கற்று வந்த வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய மாணவி ம.சுலக்ஸசனா 9ஏ பெற்று சாதனை படைத்துள்ளார். வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் இந்த மாணவி மட்டுமே 9ஏ பெற்று சாதனை படைத்துள்ளதுடன், கடந்த 2007 ஆம் ஆண்டுக்கு பின்னர் வவுனியா வடக்கில் பெறப்படும் உயர்ந்த சாதாரண தரப் பெறுபேறு இதுவாகும். இது குறித்து அந்த மாணவி தெரிவிக்கையில், “நான் சிறு வயதிலேயே எனது அம்மா, அப்பாவை இழந்து விட்டேன். அம்மம்மாவின் அரவணைப்பிலேயே வளர்ந்தேன். ஆரம்ப கல்வி தொடக்கம் புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் பல்வேறு குடும்ப கஸ்டங்களுக்கு மத்தியில் கற…
-
- 0 replies
- 381 views
-
-
உயிர் பிரியும் வரை தூக்கிலிடுங்கள்! சேயா சிறுமி கொலை வழக்கின் தீர்ப்பில் நீதவான் [ புதன்கிழமை, 16 மார்ச் 2016, 01:12.06 AM GMT ] 4 வயதும் ஏழு மாதங்களேயான சேயா சௌவ்தமி என்ற சிறுமியை, வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளியான இலந்தாரி ஜெடிகே சமன் ஜயலத் என்பவருக்கு மேல் நீதிமன்றம், மரண தண்டனை விதித்ததுடன் 60 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் 45 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்துத் தீர்ப்பளித்தது. நீர்கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்ன, அவருக்கு மரணதண்டனை விதித்ததுடன் 60 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் 45 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்துத் தீர்ப்பளித்தார். கம்பஹா, கொட்டதெனியாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட படல்கம …
-
- 27 replies
- 2.2k views
-