Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மீண்டும் வருவேன் என்று புறப்பட்டார் ஹுஸைன் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன், மீண்டும் இலங்கைக்கு வருவேன் என்று கூறிவிட்டு, இன்று (10) அதிகாலை நாட்டை விட்டு வெளியேறினார். இன்று அதிகாலை 3 மணியளவில், கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக அவர், டுபாய் நோக்கிப் புறப்பட்டார் என விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்துரைத்த ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர், “வெகு விரைவில் மீண்டும் இலங்கைக்கு வருவேன்” என்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது …

  2. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் இலங்கையின் 68 ஆவது சுதந்திர தின நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கலந்துகொள்ளும் என்று சுதந்திர தினத்துக்கு சில நாட்களுக்கு முன்பு பெருமையுடன் தெரிவித்திருந்தார். அவர் கூறியதோடு நில்லாமல் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடன் சுதந்திர தின நிகழ்விலும் கலந்துகொண்டார். சுமந்திரனைப் பொறுத்தவரையில் சுதந்திர தினத்தைக் கொண்டாட அவருக்கு தகுதியும், உரிமையும் உண்டு. ஏனெனில் அவர் பல விதங்களில் சுதந்திரம் பெற்றவர். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் அவர் ஜனாதிபதியாக இருந்தபோதே கிரிக்கற் விளையாடவும், விழாக்களில் கலந்துகொள்ளவும் சுதந்திரம் கொண்டிருந்தவர். முன்னாள் பாதுகாப்புச் செயலா…

  3. 14 முன்னாள் புலிகள் புனர்வாழ்வுக்கு செல்ல மறுப்பு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களான 14 பேர், புனர்வாழ்வுக்குச் செல்வதற்கு நீதிமன்றத்தில் மறுப்புத் தெரிவித்துள்ளனர். குற்றவியல் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர்கள் இன்று கொழும்பு மேலதிக நீதிவான் அருணி ஆட்டிக்கல முன்னிலையில் நிறுத்தப்பட்டனர். அப்போது, பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர், புனர்வாழ்வுக்கு அனுப்பும் முடிவை ஏற்க, 14 அரசியல் கைதிகளும் மறுப்புத் தெரிவித்தனர். சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்குகளை முடிவுக்கு கொண்டு வரும் ஒரு நடவடிக்கையே புனர்வாழ்வு என்று நீதிவானிடம் தீவிரவாத தடுப்பு காவல்துறையினர் தெரிவி…

  4. அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டிய தேவையில்லை உண்மையான நல்லிணக்கம், விசுவாசமாக ஏற்படவேண்டுமாயின், நியாயமான, நிரந்தர அரசியல் தீர்வு அவசியமானது என்பதை, ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைனிடம் வலியுறுத்தினோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் எம்.பி தெரிவித்தார். ஹுஸைனுக்கும், இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவினருக்கும் இடையில், கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது. சந்திப்புத் தொடர்பில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். …

  5. பௌத்த பிக்குகள் தொடர்பான சட்டமூலம் அரசியல் யாப்பை மீறுகிறது' பௌத்த பிக்குகள் ஒழுக்க விதிமுறைகளை மீறினால் சிறைத் தண்டனை அளிக்கப்படும் என்று புதிய சட்டமூலம் கூறுகின்றது இலங்கையில் பௌத்த பிக்குகளின் ஒழுக்க விதிமுறைகள் தொடர்பில் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட சட்டமூலத்தின் சில பிரிவுகளின் மூலம் அரசியலமைப்பு மீறப்படுவதாக உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. நாடாளுமன்றம் இன்று கூடியபோது, உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவை சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார். இதன்படி, சட்டமூலத்தின் குறிப்பிட்ட பிரிவுகளை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவினைப் பெற்று, பின்னர் அதனை மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்புக்கு விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் …

  6. யாழில் சாரணர் ஜம்போறி நிகழ்வு 20ஆம் திகதி ஆரம்பம்! யாழ்ப்பாணத்தின் சாரணியர் ஆரம்பிக்கப்பட்டு நூற்றாண்டு நிறைவு பெறுவதனை முன்னிட்டு யாழ். மாவட்டத்தில் முதன்முறையாக 9ஆவது தேசிய சாரணர் ஜம்போறி நிகழ்வு எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பமாகி 5 நாட்கள் நடைபெறவுள்ளது. வடமாகாண கல்வி அமைச்சில் இன்று நடைபெற்ற இது தொடர்பில் விளக்கமளிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பின் போது, வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா இதனை தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இலங்கை சாரணியர் சங்கத்தின் ஏற்பாட்டில், வடமாகாண கல்வி அமைச்சின் அணுசரணையுடன் இது நடைபெறவுள்ளது. 8000 இற்கும் மேற்பட்ட சாரணியர்கள் …

  7. போரில் பாதிக்கப்பட்ட சமூகத்தை கவனிக்காமல் கைகழுவி விட்டமையினாலேயே இலங்கைக்கு இப்போது சிக்கல் - JVP 0 போரில் பாதிக்கப்பட்ட சமூகத்தை கவனிக்காமல் கைகழுவிட்டமையினாலேயே இலங்கைக்கு இப்போது சிக்கல் எனத் தெரிவித்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரிவின் சில்வா செயிட் அல் ஹூசைன் ஐ.நாவில் என்ன சொல்வார் என்பதே தற்போது இலங்கைக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் என்றும் தெரிவித்துள்ளார். இலங்கையில் அவர் மேற்கொண்ட விஜயத்தின்போது நகர்வுகள் எப்படி இருந்தது என்பதைக் காட்டிலும் இதனையே பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்த அவர் இலங்கை போர்க்குற்ற விவகாரங்களில் உள்ளக விசாரணையில் சர்வதேச தலையீடு இருக்கக்கூடாது என்றும் தெரிவி…

  8. இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு 31 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க மற்றும் ஊழல் ஒழிப்பு செயற்பாடுகளுக்காக 31 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கும் யோசனையை அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவின் நிர்வாகம் முன்வைத்துள்ளது. இவ்வருடம் ஒக்டோபர் மாதத்துடன் ஆரம்பமாகும் ஒருவருட காலப்பகுதிக்கான நிதியுதவி குறித்த யோசனையே முன்வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி அந்த நாட்டின் காங்கிரசிற்கு அனுப்பிவைத்துள்ள வரவுசெவுதிட்ட யோசனையில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதிதேர்தல் மற்றும் பொதுத்தேர்தலிற்கு பின்னர் இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் …

  9. நாட்டில் பிக்குகள் இல்லை : விகாரைகள் மூடும் அபாயம் நாளொன்றுக்கு 6, 7 பொளத்த பிக்குகள் சங்கத்தை விட்டும் விலகிச் செல்லும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. இதனால், விகாரைகள் பல மூடப்பட்டு வருகின்றன. சங்கத்துக்கு பிக்குகளை இணைத்துக் கொள்ள பிள்ளைகளைத் தேடிக் கொள்வது மிக சிரமமான ஒன்றாக மாறியுள்ளது என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். அலவ்வ, வென்னொருவை சாராநன்த விகாரையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இதனை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது http://www.virakesari.lk/article/2981

  10. உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் அடுத்த வருடம் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் அடுத்த வருடம் வரை பிற்போடப்படலாம் என தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்படும் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு பெஜட் வீதியிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களுக்கும் இடையே நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் ஊடகவியலாளர் மாநாடுகளை நடத்தி கட்சியின் தீர்மானங்கள…

  11. இராணுவ புலனாய்வாளருக்கு 17 வருடகால கடூழியச் சிறை -சொர்ணகுமார் சொரூபன் மீசாலை பகுதியிலுள்ள இராணுவ முகாமில் சக புலனாய்வாளரை சுட்டுக்கொன்ற முதலி காமிகே எதிரிபால என்பவருக்கு 17 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனையும் 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், புதன்கிழமை (10) தீர்ப்பளித்தார். கடந்த 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி, மீசாலை பகுதியிலுள்ள இராணுவ முகாமில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், குஞ்சிஹே சந்திரிசிறி பேமரட்ண என்பவர் உயிரிழந்ததுடன், கவின்த ராஜகருண விக்கிரமசேகர என்பவர் படுகாயமடைந்தார். மேற்படி முகாமில், சம்பவம் நடைபெற்ற தினத்தன்று புலனாய்வாளர்கள் இணைந்து மதுபோதையில் சீட்…

  12. எனக்கு கொலை அச்சுறுத்தல்! நாடாளுமன்றத்தில் தனித்து இயங்கும் எதிர்க்கட்சி குழுவின் உறுப்பினர்களிடமிருந்து எனக்கு நேற்றிரவு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய, நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் தெரிவித்தார். http://onlineuthayan.com/news/8547

  13. பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க த.தே.கூ ஆதரவு உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 25 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிப்பதாக கூட்டமைப்பின் உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பான விவாதம், நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை(09) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு, கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த பல பெண்கள், தமது இன விடுதலைக்காகப் போராடினர். வடக்கு, கிழக்கிலுள்ள ப…

  14. காட்சிக்கூடமாக மாறும் சிறைச்சாலை! பணச்சலவை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனை பார்க்க பலரும் படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் தனது மகன் யோசித உள்ளிட்ட குழுவினரின் நலன் விசாரிப்பதற்காக அரசாங்கத்தின் பிரபல அமைச்சர்கள் பலர் சிறைச்சாலைக்கு வருவதாக மகிந்த தெரிவித்துள்ளார். யோசித ராஜபக்சவுடன் விளக்கமறியலில் இருப்பவர்களில் வைத்தியர் ரவிநாத் பிரணாந்து பொகம்பரை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அவர் பேராதனை பல்கலைக்கழகத்தில் பரீட்சை எழுதுவதாகவும் மகிந்த குறிப்பிட்டுள்ளார். யோசித ராஜபக்ச, ரொஹான் வெலி…

  15. முழங்காவில் பேருந்து நிலையம் இன்று மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு! கிளிநொச்சி மாவட்ட பூநகரி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட முழங்காவில் பகுதியில் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சால், வினைத்திறனானதும், பாதுகாப்பானதுமான போக்குவரத்து சேவையை வடக்கு மாகாண மக்களுக்கு வழங்கும் நோக்கோடு போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களின் திட்டத்திற்கமைவாக குறித்தொதுக்கப்பட்ட மாகாண அபிவிருத்தி நன்கொடையின் கீழ் ரூபா 9 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட முழங்காவில் பிரதான பேரூந்து நிலையத்தை, வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது அழைப்பின் பேரில் வடக்கு மாகாண முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் இன்று மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. …

  16. காணி அபகரிப்பில் அரசு அசமந்தம்; ஐ.நாவின் பதில் நம்பிக்கையளிக்கும்! வடக்கில் நடைபெற்று வரும் இராணுவத்தின் காணி அபகரிப்பு தொடர்பில் மத்திய அரசிற்கு நாம் பல தடவைகள் கூறிவருகின்ற போதிலும் அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்காமல் மௌனமாகவே இருந்து வருவதாக தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இது தொடர்பில் ஐ.நா மனிதவுரிமை ஆணையாளரிடம் எடுத்து கூறியுள்ளோம். அவர் நல்ல பதிலை தருவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் 45ஆவது அமர்வு கைதடியில் அமைந்துள்ள பேரவை செயலகத் தில் பேரவைத்தலைவர் தலைமையில் நடைபெற்றது. இதன் போது ஆளுங்கட்சி உறுப்பினர் ரவிகரனால், முல்லைத்தீவு கேப்பாப்பிலவில் உள்ள மக்களின் காண…

  17. அரசியல் கைதிகள் விடயத்தில் சட்டமா அதிபரின் அறிவுரை பெறுமாறு பணிப்பு புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு அனுப்புவதை விரும்பாத அரசியல் கைதிகள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்டமா அதிபரின் அறிவுரையை பெற்றுக் கொள்ளுமாறு நீதிமன்ற குற்ற தடுப்பு பிரிவுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் கைதிகள் குறித்த சில மனுக்கள் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே மேலதிக நீதவான் அருணி ஆடிகல இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். http://onlineuthayan.com/news/8540

  18. ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆபத்து காத்திருக்கிறது! சாபம் விடுகிறார் மகிந்த! பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்ததன் மூலம் பல நெருக்கடிகளை ஐக்கிய தேசிய கட்சிய எதிர்கொள்ளவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகா தொடர்பில் ஐ.தே.கவின் முடிவு பிரச்சினைக்குரிய ஒன்றாகும். இந்தப் பதவியை வழங்குவதற்கு இன்னும் எவ்வளவோ தகுதியானவர்கள் உள்ளதாகவும் மகிந்த தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகாவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கியதனால், அதிகம் நெருக்கடிகளை சந்திக்கப்போவது ஐக்கிய தேசியக் கட்சிதான் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய தே…

  19. ஊடகங்களை கண்டிக்க முடியாது! மாகாண சபையின் பேரவைச் செயலகத்தில் உறுப்பினர்ளால் பேசப்படும் எந்தவொரு விடயமும் நீதிமன்ற நியாதிக்கத்துக்கு உட்படுத்தப்பட முடியாதவை. பேரவைச் செயலகத்தில் வெளியிடப்படும் கருத்துக்களைப் பிரசுரிக்கும் எந்தவொரு ஊடகத்தையும் கண்டிக்கமுடியாது. பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஏதாவது குறைபாடுகள், கருத்துத் தெளிவூட்டல் இருந்தால் அது தொடர்பில் பேரவைச் செயலகத்துக்கே அறிவிக்க முடியும். இவ்வாறு வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடக்கு மாகாணசபையின் நேற்றைய அமர்வின்போது, ஆளும் கட்சி உறுப்பினர் ச.சுகிர்தன் எழுப்பிய சிறப்புரிமை மீறல் தொடர்பான பி…

  20. பயங்கரவாத சந்தேகநபர்களில் 12பேருக்கு பிணை பயங்கரவாத சந்தேகநபர்களில், இதுவரையிலும் 12 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது என்று நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார். நாடாளுமன்றத்தில், வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, உதய பிரபத் கம்மன்பில, சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில், 2015.01.09ஆம் திகதியிலிருந்து 2015.10.31ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் பிணை வழங்கப்பட்ட பயங்கரவாத சந்தேகநபர்கள் தொடர்பில் கேள்விகளை கேட்டிருந்தார். கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர், பயங்கரவாத சந்தேகநபர்களில் 12பேருக்கு நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக பிணை வழங்கப்பட்டுள்ளது. மேல் நீதிமன்றத்தின் ஊடாக 02 குற்றவாளிகளுக்கு பிணை வழங்கப்பட்…

  21. நாடு கடத்தப்பட்ட இருவர் கைது அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவரை, குற்றப்புலனாய்வு பிரிவினர், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைது கைதுசெய்துள்ளனர். அவ்விருவரும் சட்டவிரோதமான முறையில், அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த நிலையில், அங்கிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளார். அவ்விருவரையும் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அப்பிரிவினர் அறிவித்துள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/165701/%E0%AE%A8-%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%A4-#sthash.x…

  22. தமிழில் தேசிய கீதம்: பேசப்பட்டவையும் உணர்த்தியவையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், கடந்த வியாழக்கிழமை காலிமுகத்திடலில் இடம்பெற்ற இலங்கையின் 68ஆவது சுதந்திர தின நிகழ்வுகள், சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதும் ஆரம்பமாகி, தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதும் நிறைவுக்கு வந்தன. தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட தருணத்தில் நிகழ்வு அரங்கிலிருந்த எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் உணர்ச்சிவப்பட்ட நிலையில் 'கசிந்துருகி கண்ணீர் மல்கியதாக' ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டன. இலங்கையின் முதலாவது சுதந்திர தினம், கொழும்பில் (தற்போதைய சுதந்திர சதுக்கம் பகுதியில்) 1949, பெப்ரவரி 04ஆம் திகதி அப்போதைய…

  23. ஜெனீவாத் தீர்மானம், இறையாண்மைக்குள் மூக்கை நுழைக்காது முருகவேல் சண்முகன் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் கடந்தாண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக, பல்வேறுபட்ட தவறான எண்ணக்கருக்கள் காணப்படுவதாகத் தெரிவித்த மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன், இலங்கையின் இறையாண்மையிலும் சுதந்திரத்திலும் தலையிடும் முயற்சி அதுவல்ல எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும் கருத்துத் தெரிவித்த அவர், அந்தத் தீர்மானம், இலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக் கூறலையும் மனித உரிமைகளையும் ஊக்குவிப்பதற்காகவே கொண்டுவரப்பட்டதாகத் தெரிவித்தார். நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்திருந்த அ…

  24. வவுனியாவில் இன்று அதிகமான மூடுபனி! [ புதன்கிழமை, 10 பெப்ரவரி 2016, 03:54.14 AM GMT ] வவுனியா நகரில் இன்று காலை அதிகமான மூடுபனி காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய காலங்களை விட இன்று அதிகமாக மூடுபனிக் காணப்பட்டதால் வாகனப் போக்குவரத்திற்கு இடையூறுகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி மாதமே வவுனியா பிரதேசங்களில் சாதாரண பனி நிலைமை காணப்படும் என தெரிவித்துள்ள பிரதேசவாசிகள் வழமைக்கு மாறாக இன்றைய தினம் இங்கு மூடுபனி படர்ந்துக் காணப்பட்டதாக தெரிவித்துள்ளனர். http://www.tamilwin.com/show-RUmuyCSUSWgv1A.html

  25. ஸ்ரீலங்காவின் நீதித்துறையில் நம்பிக்கை ; அல் ஹூஸைன் நிலைப்பாட்டை மாற்றினாரா? [ Wednesday,10 February 2016, 06:36:27 ] ஸ்ரீலங்காவின் நீதித்துறைக் கட்டமைப்புத் தொடர்பாக, ஜெனீவா மனித உரிமைச்சபை பேரவையின் கூட்டத்தொடரில் சந்தேகம் எழுப்பிய ஆணையாளர் செய்த் ரா-அத் அல் ஹூஸைன் தற்போது ஸ்ரீலங்கா அரசாங்கம் தமது இறைமைக்கு ஏற்ப செயற்பட முடியும் என எவ்வாறு கூறமுடியும் என்று விமர்சகர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். நான்கு நாட்கள் விஜயம் மேற்கொண்டு ஸ்ரீலங்காவிற்கு சென்ற ஆணையாளர் அல் ஹூஸைன், கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் ஸ்ரீலங்காவின் இறைமை சட்டதிட்டங்கள் தொடர்பாக நம்பிக்கை வெளியிட்டிருந்தார். போர்க்குற்ற விசாரணையை ஸ்ரீ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.