Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தைப்பொங்கலை முன்னிட்டு இந்திய மீனவர்கள் 55 பேர் விடுதலை: [Friday 2016-01-15 13:00] இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு தடுதது வைக்கப்பட்டிருந்து 55 இந்திய மீனவரகள் நேற்று வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தைப்பொங்கலை முன்னிட்டு நல்லிணக்க அடிப்படையில் குறித்த மீனவர்கள் விடுதலைசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.seithy.com/breifNews.php?newsID=149305&category=TamilNews&language=tamil

  2. விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்திய நோர்வே – உபுல் ஜோசப் பெர்னான்டோ சமாதான செயற்பாடுகளுக்கான அனுசரணையாளராக நோர்வே சிறிலங்காவிற்கு வருகை தராதுவிட்டிருந்தால், விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியிருப்பார்கள். வடக்கு கிழக்கில் தனிநாட்டையும் பிரகடனப்படுத்தியிருப்பார்கள். இவ்வாறானதொரு ஆபத்தை நோர்வேயின் சமாதான முயற்சிகள் தடுத்து நிறுத்தியது. இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில் உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனை மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. அண்மையில் நோர்வே வெளியுறவு அமைச்சர் மேற்கொண்டிருந்த சிறிலங்காவிற்கான சுற்றுப்பயணத்தை தமக்கான அரசியல் இலாபமாக்குவதற்கு தென்னிலங்கையிலுள்ள சில இனவாதிகள் முயற்சிகள் மேற்கொள்கின்றனர்…

  3. ஒரே வகுப்பைச் சேர்ந்த 19 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி பதுரலிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் சிலருக்கு திடீரென ஏற்பட்ட சுகவீன நிலையால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் குறித்த மாணவ மாணவிகள் 19 பேர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தரம் 5இல் கல்வி கற்கும் ஒரே வகுப்பைச் சேர்ந்த மாணவர்களே இவ்வாறு வாந்தி எடுத்தல் மற்றும் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 09 மாணவிகள் உள்ளடங்குவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. மாணவர்கள் பாதிக்கப்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்பதுடன், இது தொடர்பான பிரதேச பொது சுகாதார பரிசோதகர் மற்றும…

  4. பீகொக் மாளிகைக்கு பலத்த பாதுகாப்பு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு சொந்தமான பெருமளவு தங்க நகைகள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்படும் பெலவத்தை பீகொக் மாளிகைக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரபல வர்த்தகர் லியனகேவிற்கு சொந்தமான அந்த ஆடம்பர மாளிகையின் நீச்சல் தடாகத்திற்குள் முன்னாள் ஜனாதிபதிக்கு சொந்தமான பெருமளவு நகைகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிவரும் நிலையிலேயே குறித்த பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது. அத்துடன், இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் உயர்மட்டத்தில் ஆராயப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். http://onlineuthayan.com/news/6927

  5. அரச குடும்பத்து உறுப்பினரின் டுபாய் வங்கிக் கணக்கில் 1, 089 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கையைச் சேர்ந்த மூன்று பேர்,டுபாயில் உள்ள வங்கி ஒன்றில் 3 ஆயிரத்து 393 மில்லியன் அமெரிக்க டொலர்களை வைப்புச் செய்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தகவல் வெளியிட்டுள்ளார். இவர்களில் ஒருவர் அரச குடும்பத்து உறுப்பினர் எனவும் அவரது வங்கிக் கணக்கில் 1, 089 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அரச குடும்பத்துக்கு நெருக்கமான வர்த்தகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஒருவரது வங்கிக் கணக்கில் 504 மில்லியன் அமெரிக்க வைப்புச் செய்யப்பட்டுள்ளது.கடந்த அரசாங்கத்தின் முன்னாள் செயலாளர் மற்றும் நிறுவனம் ஒன்றின் தலைவராக இரு…

  6. விமானப்படைத் தளபதியின் வாகனத் தொடரணி இரகசியமாக ஒளிப்பதிவு;கடற்படை அதிகாரி கைது இலங்கை விமானப்படைத் தளபதியின் வாகனத் தொடரணியை இரகசியமாக ஒளிப்பதிவு (வீடியோ) செய்த கடற்படை அதிகாரியொருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். விமானப்படைத் தளபதி நேற்று காலை தனது இல்லத்திலிருந்து இராணுவ தலைமையகத்துக்கு வாகனத் தொடரணியாக பயணித்துக் கொண்டிருக்கும்போது, கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி சுற்றுவட்டம் அருகே வைத்து ஒருவர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இதனைத் தொடர்ந்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கடற்படையின் லெப்டினன்ட் தர அதிகாரி எனவும், இவர் முச்சக்கர வண்டியொன்றுக்குள் மறைந்து இருந்து விமானப்படைத் தளபதியின் பாதுகாப்புத் தொடரணியை இரகசிய…

  7. பொன்னாடையிலும், பூமாலையிலும் பொல்லாப்பை தேடிய விசேட அதிரடிப்படையினர்! யாழில் இடம்பெற்ற தேசிய பொங்கல் விழாவில் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டிருந்தது. அம்மனுக்கு செலுத்தும் மாலை முதல் விருந்தினருக்கு அணிவிக்கும் பொன்னாடை வரை சோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தது. தேசிய பொங்கல் விழா, யாழ்ப்பாணம் உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள பலாலி ஸ்ரீ இராஜஇராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கலந்து கொள்ளவிருந்த நிலையில் பிரதமர் மட்டும் கலந்து கொண்டார். இந்நிலையில், ஆலய வழிபாட்டுக்கு மக்களால் எடுத்துச்செல்லப்பட்ட மலர் மாலையில் இருந்து விருந்தினர்களுக்கு அணிவிப்பதற்…

  8.  மீள்குடியேற்றத்துக்கான பகுதியினாலேயே பொங்கல் விழாவில் பங்கேற்றேன் தேசிய பொங்கல் விழா இடம்பெற்ற ஆலயம் அமைந்துள்ள பலாலி பகுதி இன்னமும் விடுவிக்கப்படாமல் உள்ள மக்களின் இருப்பிடங்கள் என்பதால் இதனை நேரடியாக பிரதமரிடம் எடுத்துக்கூறவே தேசிய பொங்கல் விழா வழிபாட்டில் கலந்து கொண்டேன் என மாவை சேனாதிராசா தெரிவித்தார். பலாலி ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இன்று இடம்பெற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டார் இந்நிகழ்வில் மாவை சேனாதிராசா கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 25 ஆண்டுகளுக்கு மேலாக இந்த இடங்கள் விடுவிக்கப்படாமல் உள்ளது. இதனை விடுவிக்க ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் நாம் ஏ…

  9. மாத்தறை தலல்லு கடற்கரையில் வெளிநாட்டு பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நான்கு பேரை கந்தர பொலிஸார் கைது செய்துள்ளனர். ஜேர்மனிய பெண்ணொருவரே இவர்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களில் ஒரு துறவியும் அடங்குவதாக கந்தர பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்தே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மாத்தறை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர். http://www.tamilwin.com/show-RUmuyBSZSWir3B.html

  10. வடக்குகிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற தைப்பொங்கல் நிகழ்வின்போது வடக்கின் முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் ஆற்றிய உரைக்கு பதில் உரை வழங்கும் வகையில் ரணில் விக்கிரமசிங்க இந்த உறுதியை வழங்கினார். வடக்கில் இன்னும் இராணுவ பிரசன்னம் இருப்பதாகவும் காணிவிடயங்களில் இன்னும் தீர்வுகள் காணப்படவில்லை என்று விக்னேஸ்வரன் முன்னதாக குற்றம் சுமத்தியிருந்தார். இந்தநிலையில் தமது உரையில் ரணில் விக்கிரமசிங்க, போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாகவும் குற்றம் காணப்படுபவர்கள் தண்டிக்கப்படுவர் என்று குறிப்பிட்டார். வடக்கில் தொடர்ந்தும் படை…

  11. கல்முனையில் மாணவிகளுக்கு வித்தியாசமான பாலியல் தொல்லை கல்முனைப் பிரதேசத்தில் முகத்தை மூடிய தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிள்களில் செல்வோர் தனிமையில் செல்லும் பெண்கள் மற்றும் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவுகளில் ஈடுபட்டு வருகின்றனர். சமீப காலமாக கல்முனைப் பிரதேசத்தின் பல கிராமங்களில் குறிப்பாக தமிழ் கிராமங்களில் தனிமையில் செல்லும் பெண்களின் பின்னால் தொடரும் நபர்கள் சிலர் பாலியல் ரீதியிலான தொந்தரவுகளில் ஈடுபட்டுவிட்டு தப்பிச் செல்கின்றனர். இதன் காரணமாக பெண்கள் வீதியில் நடமாடுவதற்கு அச்சம் தெரிவிக்கின்றனர். குறிப்பாக மோட்டார் சைக்கிளில் முகத்தை மூடிய தலைக்கவசம் அணிந்து வரும் நபர்களே இவ் அநாகரிக செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய …

  12. முதலமைச்சர் வேறெங்கும் இயங்கக்கூடாது: வடமாகாணசபை உறுப்பினர்கள்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண முதலமைச்சராகவே நீங்கள் செயற்பட வேண்டும். இந்தப் பெயரைப் பயன்படுத்திக்கொண்டு வேறு தளங்களில் நீங்கள் இயங்குவதை நாம் விரும்பவில்லை. எங்களுடைய முதலமைச்சராகவே இருக்க வேண்டும் இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாணசபையின் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அழுத்தம் திருத்தமாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எடுத்துரைத்துள்ளனர். "உங்களை யாரோ சிலர் தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றனர். இதிலிருந்து விடுபட்டு நீங்கள் மீண்டும் எங்களின் முதலமைச்சராக எங்களோடு இணைந்து பணியாற்றவேண்டும்" என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். …

  13. தமது சொந்த இடங்களிலும் தமது உறவுகளோடும் தைப்பொங்கலை கொண்டாடக் கூடியதாக நிலைமை மாறவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் வெளியிட்டுள்ள தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியிலேயே தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியின் முழு விவரம் வருமாறு:- இலங்கை வாழ் அனைத்து தமிழ் மக்களுக்கும் எனது மனங்கனித்த தைத் திருநாள் வாழ்த்துக்கள். இயற்கைக்கும் இறைவனுக்கும் நன்றி செலுத்தும் இந்த நன்னாளில் தமது சொந்த இடங்களிலும் தமது உறவுகளோடும் இந்த தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாத முடியாத நிலையில் உள்ள எமது மக்களின் நிலைமை வெகுவிரைவில் மாறவேண்டும் என நான் பிரார்த்திக்கின்றேன். இந்த நாளில் பல்வேறு சமய காரியங்களில் ஈடுபடும…

  14. மனிதாபிமான உணர்வுகளுக்கு மதிப்பிளிக்கும் பண்டிகையே தைப்பொங்கல் என்று தெரிவித்துள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மனிதாபிமான உணர்வு சகல இனத்தவர்களின் உள்ளங்களிலும் பொங்கிப் பிரவாகிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். தமிழர் திருநாள் தைப்பொங்கலை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இயற்கைக்கும் மனிதர்களுக்குமிடையிலான வலிமையான உறவைக் குறிக்கும் ஒரு உயர்ந்த பண்டிகையே தைப்பொங்கல் பண்டிகையாகும். மக்கள் தம்மைப் போஷிக்கும் இயற்கை அன்னைக்கும் இயற்கையின் தனிப்பெரும் சக்தியான சூரிய பகவானுக்கும் நன்றி செலுத்துவதைக் குறித்து நிற்பதன் காரணமாக இப்பண்டிகை பெருமிதத்து…

  15. ஒரு ரூபாவினால் அதிகரிக்கப்பட்ட ஒரு இறாத்தல் பாணின் விலையை மீண்டும் குறைப்பதற்கு அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் தீர்மானித்துள்ளது. தேச நிர்மாண வரி 2 வீதத்திலிருந்து 4 வீதம் வரை அதிகரிக்கப்பட்டமையினால் அனைத்து பேக்கரி உற்பத்திகளின் செலவும் அதிகரித்திருந்ததாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என் கே ஜயவர்த்தன தெரிவித்துள்ளார் இதனடிப்படையில் பாண் இறாத்தலொன்றின் விலை ஒரு ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது. அரசாங்கத்தினால் மீண்டும் தேச நிர்மாண வரி குறைக்கப்பட்டமையினால் அதன் நன்மையை மக்களுக்கு வழங்க முடிந்துள்ளதாக ஜயவர்த்தன கூறினார். பாண்களின் விலைக் குறைப்பு தொடர்பாக தீர்மானிப்பதற்கான கூட்டமொன்றை இன்று நடத்தவுள்ளதாக அகில இலங்கை உரிமையாளர்களின் சங்கம் க…

  16. ஆனையிறவு பகுதியில் இன்று காலை ரயில் மோதி இராணுவ பொலிஸ் படைப்பிரிவு வீரர் உயிரிழந்துள்ளார். இன்று காலை யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த கடுகதிப் புகையிரதத்தில் மோதுண்டே குறித்த இராணுவ வீரர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவத்தில் புத்தளம், ஆனமடுவ பகுதியை சோ்ந்த 42வயதான மா.நந்தசூரிய என்ற இராணுவ வீரரே உயிரிழந்துள்ளார். குறித்த இராணுவ வீரரின் சடலத்தை இராணுவ பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர். உயிரிழந்த நபர் ஆனையிறவு இராணுவ பொலிஸ் படைமுகமாமை சோ்ந்தவர் எனவும் இவர் தற்கொலைக்காக ரயிலின்முன் பாய்ந்தாரா அல்லது வீதியை கட்க்கமுற்படுகையிர் மோதுண்டாரா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. http://www.seithy.com/breifNews.php?newsID=149289&category=T…

  17. லண்டன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் பிரகடனம் செய்யப்பட்ட தமிழ் ஈழப் பிரகடனம் காற்றோடு காற்றாகி இந்தத் தைப் பொங்கலுடன் 34 வருடங்களாகிவிட்டன. 1982 இல் செய்யப்பட்ட இந்தப் பொங்கல் பற்றிப் பேசும்போது அமரர் கிருஷ்ணா வைகுந்த வாசனின் பெயர் என்றும் பேசப்படும்! ஏனெனில் 1978 இல் அவை ஐ நா சபையில் தாம் தமிழ் ஈழத்திலிருந்து வந்திருப்பதாகச் சொல்லி தமிழ் ஈழம் என்ற நாட்டை ஐ நா வில் பிரகடனம் செய்தார். அளவெட்டியைப் பிறப்பிடமாக் கொண்ட கிர்ஷ்ணா வைகுந்தவாசன் சட்டத்தரணியாகி சம்பியாவுக்கு நீதவான் பதவி பெற்றுப் பின்னர் லண்டன் சென்று லண்டனில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவில் இலங்கைக் கிளையின் முக்கியத்தராகப் பணியாற்றினார். ஐ நாவில் தனியொருவராக இவர் செய்த சாதனை இன்று பேரவை…

    • 0 replies
    • 574 views
  18. தமிழக மீனவர்களின் படகுகளை உள்நாட்டு மீனவர்களுக்கு வழங்க நடவடிக்கை [ Tuesday,12 January 2016, 05:26:45 ] ஸ்ரீலங்கா கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் படகுகளை அரசுடமையாக்கி உள்நாட்டு மீனவர்களுக்கு வழங்க மீன்பிடித்துறை அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள மீன்பிடி அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று திங்கட்கிழமை காரைநகர் மற்றும் காங்கேசன் துறை பகுதிக்குச் சென்று இந்திய மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகுகளை பார்வையிட்டார். இதன் பின்னர் மீனவர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த போதே அமைச்சர் மஹிந்த அமரவீர இவ்வாறு தெரிவித்தார். அத்துடன் அரசு உடமையாக்கப்படும் இந்த…

    • 39 replies
    • 1.7k views
  19. திருமலை கடற்படை முகாமிலிருந்து கடத்தப்பட்ட இளைஞர்களின் வீடுகளுக்கு அழைப்பு திருகோணமலை கடற்படை முகாமில் பாதுகாப்பு அதிகாரியாக சேவைபுரிந்த கடற்படை சிப்பாயின் கையடக்கத் தொலைபேசியிலிருந்து கடத்தப்பட்ட இளைஞர்களின் வீட்டு தொலைபேசிகளுக்கு அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கடற்படை நீதிமன்றத்தில் வைத்து ஏற்றுக்கொண்டுள்ளது. கொழும்பு மற்றும் அதனை அண்மித்த புறநகர் பகுதிகளில் கடத்திச்செல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள் திருகோணமலை கடற்படை முகாமில் அடைத்துவைக்கப்பட்டிருந்தார்கள் என்ற விடயத்தை ஸ்ரீலங்கா கடற்படை நீதிமன்றத்தில் வைத்து மீண்டும் ஏற்றுக்கொண்டுள்ளது. அதேவேளை திருகோணமலை சித்திரவதை முகாமில் ஐ.நா சிறப்பு அதிகாரிகளின் விஜயத்தின்போது கண்டு…

    • 0 replies
    • 409 views
  20. தமிழ் - முஸ்லிம் கூட்டு அரசியல் தீர்வுகள் சாத்தியமா? அரசாங்கம், புதிய அரசியலமைப்பொன்றை தயாரிப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதேவேளை, தமிழர்களின் பிரதான அரசியல் கூட்டணியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம்களின் பிரதான கட்சியாகக் கருதப்படும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் இந்த விடயத்தில் கூட்டாகச் செயற்படுவதற்காக பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன. இந்த முயற்சிகள் எந்தளவு நடைமுறை சாத்தியமானவை என்பதை சற்று ஆராய்வது பொருத்தமாகும். புதிய அரசியலமைப்பொன்றை முன்வைப்பதற்கான அரசாங்கத்தின் இந்த முயற்சியோடு, கடந்த 9ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலத்தின் இரண்டாவது ஆண்டு,…

  21. பிரித்தானியா இலங்கைக்கு பாதுகாப்பு ஆலோசகர் ஒருவரை நியமிக்க உள்ளது- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- 15 ஜனவரி 2016 பிரித்தானியா இலங்கைக்கு பாதுகாப்பு ஆலோசகர் ஒருவரை நிமியக்க உள்ளதாக, தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வாயார் தெரிவித்துள்ளார். இலங்கையின் பாதுகாப்பு தரப்பினருக்கு ஆலோசனைகளை வழங்கும் நோக்கில் விசேட ஆலோசகர் ஒருவரை பிரித்தானிய அரசாங்கம் நியமிக்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் பிரித்தானிய வர்த்தகர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மோல்டாவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளின் போது இலங்கை ஜனாதிபதி மைத்திரிப…

  22. இலங்கை கிரிக்கெட் வீரர்களின் மோசமான நடத்தை! விசாரணை ஆரம்பம் [ வெள்ளிக்கிழமை, 15 சனவரி 2016, 12:10.31 AM GMT ] நியூசிலாந்தில் இலங்கை வீரர்களின் மோசமான நடத்தை தொடர்பாக இலங்கை கிரிக்கெட் விசாரணையை தொடங்கியுள்ளது. இலங்கை அணி நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 2 20க்கு20 போட்டிகள் கொண்ட தொடரில் மோதியது. இதில் இலங்கை அணி டெஸ்ட் தொடரை 2-0 எனவும், ஒருநாள் தொடரை 3-1 எனவும், டி20 தொடரை 2-0 எனவும் இழந்தது. இந்த நிலையில் அங்கு இலங்கை அணி வீரர்களின் நடத்தை தொடர்பாக புதிய சர்ச்சை கிளம்பி உள்ளது. அவர்கள் அங்கு விடிய விடிய மதுவிருந்தில் குடித்து விட்டு, தங்கள் அணி வீரர்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டதாக புகார் எழுந்துள்ளது. …

  23. ஆயிரத்து 500 பொலிஸார் ஜனாதிபதிக்குப் பாதுகாப்பு! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வருகைக்காக யாழ்.குடாநாட்டில் ஆயிரத்து 500 பொலிஸார் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயலத் தலைமையில் குவிக்கப்பட்டுள்ளனர். தேசிய பொங்கல் விழா இன்று பலாலியில் இடம்பெறவுள்ளது. இதில் ஜனாதிபதி, பிரதமர் உட்படப் பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். இதனால் குடாநாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக நாட்டின் பல பாகங்களிலும் இருந்து மேலதிகமாக ஆயிரத்து 500 பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். http://onlineuthayan.com/news/6897

  24. குடாநாட்டுக்குள்ளேயே அடங்கிவிடும் கலைப்படைப்புக்கள்! : இளையபாரதியின் ஆதங்கம்! குடாநாட்டு கலைப்படைப்புக்கள் யாவும் குடாநாட்டிலேயே அடங்கிவிடுகின்றன. அவற்றை வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லும் முயற்சியையே நாம் முன்னெடுத்துள்ளதாக கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இயக்குநர் இளைய பாரதி தெரிவித்தார். திருநெல்வேலியிலுள்ள ப்ரைட் இன் விடுதியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஈழத்து கலைஞர்களின் படைப்புகளை, அவர்களின் கலைத்திறைமைகளை புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள தொலைக…

    • 3 replies
    • 545 views
  25. ‘வடக்கு முதலமைச்சர் வேறெங்கும் இயங்கக்கூடாது! அழுத்திக் கூறிய வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள்’ என்று தலைப்பிட்டு தமிழரசுக் கட்சி ஆதரவு ஊடகங்கள் சில பரபரப்பு செய்திகளை வெளியிட்டுள்ளன. ஒட்டுமொத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்களும் விக்கினேஷ்வரன் அவர்கள் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைமைப் பொறுப்பை ஏற்றதை விரும்பவில்லை என்ற பாணியில் செய்தியாக்கின. ஆனால் உண்மையில் அந்தக் கருத்தை வலியுறுத்தி உரையாற்றியவர்கள் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களான ஆர்னோல்ட், சயந்தன் மற்றும் விந்தன் ஆகியோர் மட்டுமே என்பதே உண்மையாகும். முதலமைச்சர் உடனான சந்திப்புக்கு முன்னர், யாழ் யு.எஸ் ஹோட்டலில் ஆர்னோல்ட் தலைமையில் கூடிய மேற்படி மாகாண சபை உறுப்பினர்கள் முதல்வருக்கு எதிர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.