ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142785 topics in this forum
-
25 Oct, 2024 | 10:35 AM மாற்றத்தை விரும்பிய மக்களின் ஆணையால் இலங்கைத் தீவில் ஆட்சி மாறியிருக்கிறதே தவிர, அதிகாரபீடங்களின் செயல்நோக்கும், மனோநிலையும் சிங்கள வல்லாதிக்கத்தின் வெளிப்பாடாகவே இன்றும் தொடர்கிறது என நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் சிறீதரன், நேற்று வியாழக்கிழமை (24) கிளிநொச்சி - கண்ணகிநகர் கிராமத்தில் தமது ஆதரவாளர்களை சந்தித்து கலந்துரையாடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது, காலம்காலமாக இந்த நாட்டின் அதிகாரபீடங்களும், கொள்கைவகுப்பாளர்களும் எத்தகையதோர் …
-
-
- 3 replies
- 219 views
-
-
அமெரிக்க தமிழ் மக்கள் கமலா ஹரிஸிக்கு வாக்களித்து எங்கள் இறையாண்மையை மீட்டு எங்கள் காணமல் போன குழந்தைகளை மீட்க உதவுங்கள் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் தெரிவித்தனர். வவுனியாவில் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தனர். வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள், அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு கமலா ஹரிஸிக்கு ஆதரவளித்து, தமிழ் இறையாண்மையைப் பாதுகாக்கவும், காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் குழந்தைகளைக் கண்டறியவும் ஹரிஸ் உதவுவார் என நம்புகிறார்கள். காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளைக் கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களைக் காப்பாற்றவும், தமிழர் இறையாண்மைக்காக அமெரிக்கா மற்றும்…
-
-
- 19 replies
- 1.2k views
- 1 follower
-
-
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பரப்புக்கடந்தான் கிராமத்தில் சுமார் 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் வெள்ளிக்கிழமை (25) காலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த யானை அண்மைக்காலமாக பரப்புக் கடன் தான் பகுதியில் பல விவசாய நிலங்கள் மற்றும் விவசாய காணிகளில் சுற்றித்திரிந்த தாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் குறித்த யானை வியாழக்கிழமை (24) இரவு உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். யானை இறந்த இடத்திற்கு வருகை தந்த வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் குறித்த யானை சட்ட விரோதமான முறையில் அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்குண்ட…
-
- 0 replies
- 188 views
- 1 follower
-
-
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகரவுக்கும் திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை (25) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ். ரத்நாயக்க, கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர். எல்.பி.மதநாயக்க, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.மணிவண்ணன், திருகோணமலை உதவி உள்ளூராட்சி ஆணையாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். உள்ளூராட்சி மன்றங்களின் வருமானத்தை அதிகரிக்கவும், கழிவுகளை பிரித்து சேகரித்து கழிவுகளை முகாமைத்துவம் செய்யவும், உள்ளூராட்சி மன்றங்களுக்கு சொந்தமான வாகனங்கள் குறித்து அறிக்கை அளிக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு உள்ளூர…
-
- 0 replies
- 132 views
- 1 follower
-
-
சீர்த்திருத்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தை இலங்கை அடைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. விரைவில் வரவிருக்கும் இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் மூன்றாவது தவணைக்கு மதிப்பாய்வை நோக்கி விரைவாக முன்னேறும் வகையில் அதை நிலைநிறுத்தியுள்ளது என சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய, பசுபிக் திணைக்களப் பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/197087
-
- 1 reply
- 443 views
- 1 follower
-
-
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற தேர்தல் வேட்பாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்றையதினம் நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்றையதினம் நெல்லியடி பகுதியில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டதாக தெரிவித்து இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. தற்போது அவர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. https://www.virakesari.lk/article/197009
-
-
- 15 replies
- 855 views
- 1 follower
-
-
கட்சி அரசியலில் ஈடுபடும் ஆலிம்கள் தேர்தல் பிரசாரங்களின்போது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பெயரை பயன்படுத்துவது ஜம்இய்யாவின் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணானது; பிழையானது என்பதுடன் உலமா சபையின் பெயரை எந்தக் கட்டத்திலும் எந்த நிலையிலும் தங்களது பிரச்சாரங்களுக்கு பயன்படுத்தக்கூடாது என்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தெரிவித்துள்ளது. இன்றையதினம் (25) உலமா சபை வெளியிட்ட ஊடகச் செய்தியினூடாகவே இவ்வாறு அறிவித்துள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை என்பது ஒரு நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்ட அரசியல் சார்பற்ற இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் சபையாகும் என்பதுடன் இதில் எமது நாட்டின் சகல பிரதேசங்களையும் சேர்ந்த பத…
-
- 0 replies
- 134 views
-
-
25 Oct, 2024 | 05:21 PM நவீன தமிழ் தேசிய வாதத்தை முன்னெடுத்து செல்ல உள்ள எங்களுக்கு தமிழ் மக்கள் ஆணையை வழங்க வேண்டும் என யாழ் . தேர்தல் மாவட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் மான் சின்னத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை (25) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், என்னை பொறுத்த வரையில் இந்த மண்ணிலும் அரசியல் மாற்றம் ஏற்பட்ட வேண்டும் அந்த மாற்றம் ஊடாக புதிய அரசியல் கலாச்சாரம் ஏற்பட்டு புதியவர்கள் பாராளுமன்றுக்கு அனுப்பப்பட வேண்டும். நீங்கள் கடந்த காலங்களில் யாருக்கு வாக்கள…
-
- 1 reply
- 142 views
-
-
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது எமக்கெதிரான அனைத்துவிதமான பிரச்சாரங்களையும் மேற்கொண்டவர்கள் தற்போது, ஏதாவது பிரச்சினையையோ அல்லது புனைகதையையோ உருவாக்கி மீண்டும் அதிகாரத்தைக் கையகப்படுத்திக்கொள்ள முயற்சிசெய்து வருகிறார்கள். எங்கள் அரசாங்கம் 3 அல்லது 6 மாதங்களில் வீழ்ந்துவிடுமென கூறவும் தொடங்கி இருக்கிறார்கள். நாங்கள் இந்த நாட்டை சீராக்கியே தீருவோமென்பதை அவர்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன். அதனை சாதிக்காமல் தேசிய மக்கள் சக்தி நின்றுவிடப் போவதில்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். புத்தளத்தில் வியாழக்கிழமை (24 ) இடம்பெற்ற பொதுத்தேர்தலுக்கான கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு மேலும் உரையாற்…
-
- 0 replies
- 123 views
-
-
நாட்டில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சு இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் வருடாந்தம் 8,00 முதல் 1,000 வரையிலான எண்ணிக்கையில் கருப்பை வாய் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். இதனைத் தடுக்கும் வகையில் 10 வயதைப் பூர்த்தி செய்துள்ள 6 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் அனைத்து மாணவிகளுக்கும் HPV தடுப்பூசியைச் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த HPV தடுப்பூசியானது இரு தடவைகள் செலுத்தப்பட வேண்டும். முதலாம் தடுப்பூசி செலுத்தப்பட்டு 6 மாதம் பூர்த்தி செய்யப்பட்ட பின்னரே இரண்டாம் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். பாடசா…
-
- 0 replies
- 153 views
- 1 follower
-
-
காங்கேசன்துறை அஞ்சல் அலுவலகம் சுமார் 34 வருடங்களின் பின்னர் மீண்டும் காங்கேசன்துறையில் இயங்க ஆரம்பித்துள்ளது. யுத்தம் காரணமாக 1990 ஆம் ஆண்டு கால பகுதியில் காங்கேசன்துறை பகுதியில் இருந்து மக்கள் வெளியேறிய போது, அங்கு இயங்கி வந்த காங்கேசன்துறை அஞ்சல் அலுவலகமும் வெளியேறி இருந்தது. இந்நிலையில் இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக காங்கேசன்துறை பகுதி இருந்தமையால் மாவிட்டபுரம் பகுதியில் தற்காலிகமாக அஞ்சல் அலுவலகம் இயங்கி வந்தது. தற்போது மீண்டும் காங்கேசன்துறை பகுதியில் அஞ்சல் அலுவலகம் தனது சேவையை ஆரம்பித்துள்ளது. காங்கேசன்துறை - பருத்தித்துறை வீதியில் சொந்த காணியில் அஞ்சல் அலுவலகம் அமைந்திருந்த போதிலும் மீண்டும் அதில் அஞ்சல் அலுவல…
-
- 0 replies
- 458 views
- 1 follower
-
-
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய நிறுவனமானது (FAO), நோர்வே அரசாங்கத்தின் நிதி உதவியுடன், மேம்பட்ட குளிரூட்டும் தொழில்நுட்பம் மற்றும் எரிபொருளைச் சேமிக்கும் குமிழ் வில் (பல்பஸ்பவ்/ bulbous bow) அமைப்பு ஆகியவற்றை கொண்ட பலநாள் தங்கியிருந்து மீன் பிடிக்கக்கூடிய படகினை கையளித்தமையின் மூலமாக இலங்கையின் மீன்பிடித்துறையில் மீண்டெழுதிறன் மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கு ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்த முன்முயற்சியானது மீன்பிடி செயற்பாடுகளுக்குப் பிந்தைய இழப்புகளை குறைப்பதற்கும், செயற்படுத்தல் செலவீனங்களைக் குறைப்பதற்கும், உள்ளூர் மற்றும் ஏற்றுமதி சந்தைகளுக்குமான மீன்களின் தரத்தை மேம்படுத்துவதற்கும் புதிய தொழில்நுட்பங்களைப் பின்பற்றுவதை …
-
- 0 replies
- 135 views
- 1 follower
-
-
ஈஸ்டர் அறிக்கைகளை வைத்துக் கொண்டு அரசியல் செய்ய வேண்டாம் என அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த அறிக்கை கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமக்கு கிடைத்ததாகவும், ஆனால் ஈஸ்டர் தாக்குதலை அரசியலுடன் இணைக்கத் தயங்கியதன் காரணமாக அந்த அறிக்கைகளை பகிரங்கப்படுத்துவதிலிருந்து விலகியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ள முழுமையான அறிக்கை பின்வருமாறு “இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக நான் பதவியேற்ற பின்னர், கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் அருட்தந்தை ஹரோல்ட் அந்தோனி பெர்னாண்டோவின் வேண்டுகோளுக்கு இணங…
-
- 2 replies
- 219 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத்தில் திருமணமாகி ஒரு வருடத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக நேற்று வியாழக்கிழமை (24) உயிரிழந்துள்ளார். புலோலி தென்மேற்கு, பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த சிவனேஸ்வரன் சிறிராஜ் (26) என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குடும்பஸ்தவருக்கு கடந்த 22 ஆம் திகதி உடல் சுகயீனம் ஏற்பட்டது. இந்நிலையில் உறவினர்கள் அவரை மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அன்றையதினமே யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரணம் விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதி…
-
- 0 replies
- 188 views
- 1 follower
-
-
யாழில் எலிக்காய்ச்சல் காரணமாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (24) உயிரிழந்துள்ளார். இதில் சங்கரத்தையைச் சேர்ந்த 34 வயதுடைய ஒரு குழந்தையின் தந்தையே உயிரிழந்துள்ளார். குறித்த நபருக்கு கடந்த 21 ஆம் திகதி சுகயீனம் அடைந்ததை அடுத்து மறுநாள் சங்கானைப் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து குறித்த நபர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். குறித்த நபருக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். உடற்கூற்றுப் பரிசோதனையில் எலிக் காய்ச்சலின் காரணமாக மரணம் சம்பவித்துள்ளமை உறுதிப்படுத்த…
-
-
- 2 replies
- 1.2k views
- 2 followers
-
-
பேருந்துகளில் பயணிக்கும் சிறுமிகளை தகாத முறைக்கு உட்படுத்துபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. பேருந்துகளில் பயணிக்கும் பெண்களில் 80 வீதமானவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. பெரும்பாலான சிறுவர்கள் மதகுருமார்களால் தகாத முறையிலான துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுவதாக அதிகார சபையின் சட்ட அமுலாக்கல் பணிப்பாளர் சஜீவனி அபேகோன் தெரிவித்துள்ளார். அவ்வாறு செயல்படும் மதகுருமார்கள் மீது ஆணையம் வழக்குப் பதிவு செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதிகாரசபையில் நேற்று இடம்பெற்ற செயலமர்வில் பணிப்பாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பெற்றோரின் குடும்பத் த…
-
- 0 replies
- 925 views
- 1 follower
-
-
சிறிநேசனை தோற்கடிக்க சுமோவும் சாணாவும் மாஸ்டர் பிளான் – கோட்டை பிடிபடுமா? Vhg அக்டோபர் 24, 2024 மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சி வேட்பாளர் ஶ்ரீநேசனின் ஆதரவலையை குறைக்க சாணக்கியன் போட்ட இரகசிய சதித்திட்டம் தீட்டுவது அம்பலமாகியுள்ளது. மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி முதன்மை வேட்பாளராக போட்டியிடும் சாணக்கியன் நேற்று முன்தினம் (22,10,2024) இரவு 7.00 மணி தொடக்கம் நள்ளிரவு 12.00 மணிவரை களுவாஞ்சிகுடி கடற்கரை தோட்டத்தில் உள்ள தனது பங்களாவில், ஶ்ரீநேசனை தோற்கடிக்க, சுமந்திரன் வழங்கிய சதித்திட்ட ஆலோசனையை ஆதரவாளர்களுடன் பகிர்ந்துள்ளார். அன்று இடம்பெற்ற இரவு விருந்தில், தமிழரசு கட்சியில் தேர்தலில் போட்டியிடும் ஏனைய வே…
-
- 2 replies
- 260 views
-
-
ரத்தொலுவையில் ஞாயிறுக்கிழமை இடம்பெறவுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நினைவுதின நிகழ்வுகளில் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவும் கலந்துகொள்ளவேண்டும் என காணாமல்போனவர்களின் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 1988-89ம் ஆண்டுகளில் ஜேவியின் கிளர்ச்சியின் போது காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்கள் 33 வருடங்களாக நீதிக்காக போராடுகின்றனர். இந்த வருடம் 34வது வருடத்தை குறிக்கும் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன ஜனாதிபதியை கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். ஜேவியின் இரண்டாவது கிளர்ச்சி காலத்தின் போது 60,000க்கும் அதிகமான இளைஞர்கள் கொல்லப்பட்டனர், …
-
- 0 replies
- 93 views
- 1 follower
-
-
எதிர்வரும் பொதுத்தேர்தலில் அரசியல் தீர்வு குறித்து தமிழ் மக்கள் தமது வாக்குகள் மூலம் வெளிப்படுத்தும் நிலைப்பாட்டுக்குப் புறம்பாக தாம் ஒருபோதும் செயற்படமாட்டோம் என இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் உறுதியளித்துள்ளார். வட மாகாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட வேட்பாளர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாணத்திலுள்ள திண்ணை ஹோட்டலில் நடைபெற்றது. …
-
- 1 reply
- 331 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம், கிழக்கு மாகாணத்தை மையமாகக் கொண்டு டிஜிட்டல் வலயங்கள் அரசாங்க சேவையை இலகுபடுத்துவதற்கும் வெளிப்படைத்தன்மையை உருவாக்குவதற்கும் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இலங்கை தகவல் தொழில்நுட்ப பட்டய நிறுவனத்தின் 26வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற தகவல் தொழில்நுட்ப தேசிய விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, தற்போதைய அரசாங்கம் நாட்டை டிஜிட்டல் மயமாக்குவதற்கான தெளிவான பார்வையை கொண்டுள்ளது. தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறையை மேம்படுத்துதல் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவா…
-
- 0 replies
- 147 views
-
-
ஆட்சி மாற்றம் தமிழர்களுக்கு நீதி வழங்காது; நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சிறீலங்காவிற்கும் தமிழீழ் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான ஆயுத மோதலின் இறுதிக்கட்டத்தின் போது இழைக்கப்பட்ட அட்டூழியக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் செயல்முறையில் சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான கவனத்தை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வரவேற்கிறது. மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் செயற்பாட்டிற்கும். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அவரது நேர்மையான, விரிவான அறிக்கைக்காகவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பாராட்டை தெரிவித்துக் கொள்கின்றது. எவ்வாறாயினும், பொறுப்புக்கூறலுக்கான முன்னேற்றம் இன்மையால் ஈழத்தமிழ் மக்கள் அதிருப்தியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர். இதுதொடர்பில் நாடுகடந…
-
- 0 replies
- 243 views
-
-
கையடக்கத் தொலைபேசிகள் வெடிக்கும் என்ற வதந்திகள்! கையடக்கத் தொலைபேசிகளுக்கு பதிலளித்தால் உடனடியாக வெடித்துவிடும் எனும் பொய்யான வதந்தி அண்மைக் காலமாக சமூக ஊடகங்களில் பரவி வைரலாகி வருகிறது. அவ்வாறான காணொளிச் செய்தியினால் மக்கள் பீதியடைய வேண்டாம் என இலங்கை கணினி அவசரத் தயார்நிலைக் குழு அறிவித்துள்ளதாக டெய்லி மிரர் ஆங்கில இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இவ் விடயம் தொடர்பில் பல அழைப்புகள் வந்துள்ளதாக மேற்குறித்த குழுவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருகா தமுனபொல கூறியதாகவும் அச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வீடியோவில், பார்வையாளர்கள் இதனை கவனமாகக் கேட்டு இச் செய்த…
-
- 0 replies
- 815 views
-
-
மதுபான அனுமதி பத்திரம் வைத்திருப்பவர்களுக்கு விசேட அறிவிப்பு. அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் மதுபான அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்கு தேவையான அனுமதி சான்றிதழ்களை விண்ணப்பிப்பது தொடர்பான பல விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தவுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, 2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கு வருமான வரி செலுத்தப்பட்டிருக்க வேண்டும், மேலும் 2024/2025 மதிப்பீட்டு ஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகளுக்கு பணம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். மேலும், சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிகள் தேவைக்கேற்ப செலுத்தப்பட்டிருக்க வேண்டும், மற்ற வரிகளுக்கு பதிவு செய்தால், அது தொடர்பான அறிக்கைகள் கொடுக்கப்பட்டு செலுத்தப்பட வேண்டும். வரி செலுத்தப்பட…
-
- 1 reply
- 235 views
-
-
தற்போதைய ஆட்சியாளர்கள் அதிகாரப்பகிர்விற்கு சாதகமாக இருக்கமாட்டார்கள் என தமிழ் தரப்பு பிரதிநிதிகள் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிடம் எடுத்துக் கூறியுள்ளனர். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த நிலையில், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் எஸ்.ஸ்ரீதரன் ஆகியோர் அமெரிக்க தூதுவரை சந்தித்த வேளையிலேயே மேற்படி விடயம் எடுத்துக்கூறப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், இந்த சந்திப்பின் போது அமெரிக்க தூதுவர் முக்கியமாக ஜனாதிபத…
-
- 4 replies
- 317 views
- 2 followers
-
-
தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகள் ஏன் பிரிந்து நின்று செயற்படுகின்றன என இலங்கைக்கான அமெரிக்காவின் தூதுவர் ஜூலி சங் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருக்கும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங்,நேற்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் மற்றும் அக்கட்சியின் பொது செயலாளர் கஜேந்திரன் ஆகியோரை சந்தித்தவேளையிலேயே மேற்படி வினாவை தொடுத்திருக்கிறார். இந்த சந்திப்பு தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவிக்கையில்; ஏன் தமிழ்த் தரப்புகள் பிரிந்து நிற்கின்றன என்ற கேள்வியை தூதுவர் எழுப்பியிருந்தார்.எங்களைப்பொறுத்தவரை 13 ஆவது திருத்தம் என்ற விடயத்தினால் தான் …
-
- 0 replies
- 108 views
- 1 follower
-