ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142789 topics in this forum
-
(நா.தனுஜா) மும்பையிலிருந்து கொழும்புக்கு வருகைதந்த பயணிகள் விமானத்தில் வெடிகுண்டு இருக்கலாம் என வெளியான தகவல்களை அடுத்து, விமானம் முன்கூட்டியே தரையிறக்கப்பட்டு, சகல பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக விமானநிலையம் மற்றும் விமானசேவைகள் தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை (24) இந்தியாவின் மும்பை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு கொழும்பில் பி.ப 3.15 மணிக்குத் தரையிறங்கவிருந்த விஸ்தாரா யு.கே 131 விமானத்தில் வெடிகுண்டு இருக்கலாம் என விமானம் தரையிறங்குவதற்கு முன்னர் தகவல்கள் வெளியானதையடுத்து பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய நிர்வாகத்தினால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து 107 பயணிகள், ஒரு குழந்தை மற்றும் 8 விமானப் பணியாளர்களைக் கொ…
-
- 0 replies
- 197 views
-
-
அமெரிக்க தமிழ் மக்கள் கமலா ஹரிஸிக்கு வாக்களித்து எங்கள் இறையாண்மையை மீட்டு எங்கள் காணமல் போன குழந்தைகளை மீட்க உதவுங்கள் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் தெரிவித்தனர். வவுனியாவில் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தனர். வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள், அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு கமலா ஹரிஸிக்கு ஆதரவளித்து, தமிழ் இறையாண்மையைப் பாதுகாக்கவும், காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் குழந்தைகளைக் கண்டறியவும் ஹரிஸ் உதவுவார் என நம்புகிறார்கள். காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளைக் கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களைக் காப்பாற்றவும், தமிழர் இறையாண்மைக்காக அமெரிக்கா மற்றும்…
-
-
- 19 replies
- 1.2k views
- 1 follower
-
-
மன்னார் மாவட்டத்தில் நேற்று புதன்கிழமை (23) இரவு முதல் இன்று வியாழன் (24) காலை வரை பெய்த தொடர் மழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சாந்திபுரம், சௌதார், எழுத்தூர், மூர்வீதி உள்ளடங்கலாக பல கிராமங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. எழுத்தூர் பகுதியில் உள்ள 30 குடும்பங்களின் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததன் காரணமாக முப்பது குடும்பங்களும் தற்போது எழுத்தூர் பாடசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் மாவட்டத்தின் பல பாகங்களிலும் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்ற மக்கள் கிராம நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். மேலும் பல வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. மன்னார் பிரதேசச் செயலாளர்…
-
- 0 replies
- 471 views
- 1 follower
-
-
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற தேர்தல் வேட்பாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்றையதினம் நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்றையதினம் நெல்லியடி பகுதியில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டதாக தெரிவித்து இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. தற்போது அவர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. https://www.virakesari.lk/article/197009
-
-
- 15 replies
- 855 views
- 1 follower
-
-
இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் சுவாமி விவேகானந்தா கலாசார நிலையம் புதன்கிழமை (23) சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தில் ‘செம்மொழியாக பாளி” என்ற தலைப்பிலான குழுநிலைக் கலந்துரையாடல் ஒன்றை ஒழுங்கமைத்திருந்தது. இலங்கை அரசாங்கத்தின் புத்த சாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு சமூக பாதுகாப்பு மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்த இந்நிகழ்வில் இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் டாக்டர் சத்யாஞ்சல் பாண்டே அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார். இந்திய அரசாங்கத்தால் பாளி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்ட நிலையில் இந்த நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வின் ஆரம்ப உரையினை கங்காரா…
-
-
- 2 replies
- 283 views
- 1 follower
-
-
சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் நம்புகின்ற அனைத்து மக்களினதும் நல்லாசி கிடைக்கின்ற அரசாங்கத்தை தேசிய மக்கள் சக்தியால் மாத்திரமே நிறுவ முடியும். அனைவருக்கும் சமமாக அமுலாக்கப்படுகின்ற சட்டத்தைக் கொண்ட ஒரு நாட்டை நாங்கள் கட்டியெழுப்புகிறோம். ஒரு சில தடையேற்படுத்தும் சட்டங்கள் இருக்குமாயின் அவற்றை மாற்றியமைத்து மக்களின் நன்மைக்காக ‘நான் இலங்கையன்” என்கின்ற உணர்வை கொண்ட ஒரு நாட்டை நாங்கள் கட்டியெழுப்புவோம். ‘நான் இலங்கையன்” என பெருமையுடன் கூறிக்கொள்ளக் கூடிய பின்புலத்தை தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் உருவாக்கிக்கொடுக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். திருகோணமலையில் புதன்கிழமை (23) இடம்பெற்ற நாட்டைக் கட்டியெழுப்பும் திசைகாட்டி…
-
-
- 9 replies
- 637 views
- 1 follower
-
-
செப்பு குாழாய் பொருத்திகளை கப்பலில் ஹொங்கொங்கிற்கு அனுப்புவதாகக் கூறி சுமார் ஐந்து கோடி ரூபா பெறுமதியான 23,000 தொன் செப்பு உலோகத்தை அனுப்பத் தயாராகிக்கொண்டிருந்த போது சுங்க அதிகாரிகளால் நேற்று புதன்கிழமை (23) கைப்பற்றப்பட்டுள்ளது. ஏற்றுமதி முனையத்தில் வைத்து செப்பு உலோகம் அடங்கிய கொள்கலன்கள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றியுள்ளனர். பேலியகொட பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இருந்து செப்பு உலோகங்களை உருக்கி, ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளமை சுங்க அதிகாரிகளின் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. கைப்பற்றப்பட்ட செப்பு கையிருப்பு தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/196968
-
- 0 replies
- 513 views
- 1 follower
-
-
காரணம் தெரியாமல் வாக்குமூலம் வழங்க வந்த நாமல் ! வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்துள்ளார். இன்று (24) காலை 9 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்திருந்த போது ஊடகவியலாளர்கள் ஏன் இங்கு வருகை தந்தீர்கள் என்று கேட்கும் போது தனக்கு தெரியாது என பதிலளித்துள்ளார். அத்துடன் அழைப்பது நல்லது விடையம் என்றும் நம்மிடம் இருக்கும் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபட ஒரே வழி இதற்கு வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார் மேலும் நாங்கள் தெரிந்து பொய் சொல்பவர்கள் அல்ல. நாங்கள் பொறுப்போடு பதில் வழங்கிவிட்டு வருபவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1…
-
- 2 replies
- 448 views
- 1 follower
-
-
இலங்கையில் ஊடகவியலாளர்கள் படுகொலைகள் மற்றும் காணாமல் போனமை தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு சர்வதேச ஊடக கண்காணிப்பாளர்கள் மற்றும் சட்ட நிபுணர்களின் பங்களிப்புடன் நீதித்துறை அதிகாரம் பெற்ற விசாரணைக்கு முல்லைத்தீவு பத்திரிகையாளர் மன்றம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழ் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டதன் 24 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது . குறிப்பாக, தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான துன்புறுத்தல்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் கண்காணிப்புகளை அந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. 2004 முதல் 2009 வரை கொல்லப்பட்டதாகக் கூறப்படும் 48க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்…
-
- 0 replies
- 146 views
- 1 follower
-
-
தமிழ் மக்கள் 80 வீதமான வாக்குகளை அளித்தால் இரு பிரதிநிதிகளை பெறலாம் - இலங்கை தமிழ் அரசு கட்சி வேட்பாளர் சண்முகம் குகதாசன் இம் முறை நடை பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் 80 சதவீதமான வாக்குகளை அளித்தால் இரு பிரதிநிதிகளை பெறலாம் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுன்ற முதன்மை வேட்பாளரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான சண்முகம் குகதாசன் தெரிவித்தார். திருகோணமலையில் (22) மாலை இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் இருந்தால் தான் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 1985ம் ஆண்டு முதல் நில அபகரிப்பு செய்யப்பட்ட…
-
- 3 replies
- 316 views
- 1 follower
-
-
காணாமல்போன அரச வாகனங்கள் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுள்ளனர். ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்தே இந்த வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அரச வாகனங்கள் காணாமல்போனமை தொடர்பில் ஜனாதிபதி செயலாளரினால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. மோட்டார் சைக்கிள்கள் உட்பட 29 அரச வாகனங்களே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் விரிவான வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்கள அ…
-
- 0 replies
- 190 views
- 1 follower
-
-
கடந்த சில நாட்களாக இராணுவத்தினருக்கு அவதூறு ஏற்படும் வகையிலும் பொதுமக்களுக்கு இராணுவத்தின் மீது உள்ள நம்பிக்கையை இல்லாமல் செய்து வெறுப்பை ஏற்படுத்தும் வகையிலும், சமூக வலைதளங்களில் இராணுவம் தொடர்பான பொய்யான தகவல் அடங்கிய வீடியோக்களை சிலர் வெளியிட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இராணுவத்தினர் வெளியிட்டுள்ள அறிவித்தலில், “இராணுவத்தில் சிறப்பான எதிர்காலம் இல்லாத உறுப்பினர்கள் சிலரினால் வழங்கப்பட்ட பொய்யான தகவல்களை, முறையாக உறுதிப்படுத்திக்கொள்ளாமல் சிலர் தங்களது தனிப்பட்ட சமூக ஊடக கணக்குகளை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் இந்த வீடியோக்களை உருவாக்கியுள்ளனர். இந்த வீடியோக்களில் தெரிவிக்கப்பட்டவாறு, இராணுவ முகாம்களின் படையினரை புதிய இடங்…
-
- 0 replies
- 387 views
-
-
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் இளம் வேட்பாளர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். அங்கஜன் தலைமையிலான ஜனநாயக தேசியக் கூட்டணியில் தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடும், வல்வெட்டித்துறை நகரசபை முன்னாள் உறுப்பினரும் உடுப்பிட்டியைச் சேர்ந்தவருமான செந்திவேல் தமிழினியன் என்ற வேட்பாளரே உயிரிழந்துள்ளார். திடீர் சுகவீனம் காரணமாக யாழ் . போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (ச) நாடாளுமன்ற இளம் வேட்பாளர் திடீர் இறப்பு!
-
- 0 replies
- 331 views
-
-
லலித்குகன் காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிமன்றம் தவிர வேறு எந்த நீதிமன்றத்திலும் ஆஜராக தயார் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி தனது சட்டத்தரணி ரொமேஸ் சில்வா ஊடாக இன்று உயர்நீதிமன்றத்திற்கு இதனை தெரிவித்துள்ளார்.மேல்முறையீட்டு நீதிமன்றத்தின்முன்னைய தீர்ப்பினை சவாலுக்குஉட்படுத்தும் விதத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவேளையே கோட்டாபயவின் சட்டத்தரணி தனது கட்சிக்காரரின் பாதுகாப்பு கரிசனை குறித்து தெரிவித்துள்ளார். லலித்குகன் காணாமலாக்கப்பட்ட விவகாரம் -யாழ்ப்பாண நீதிமன்றம் தவிர வேறு எந்த நீதிமன்றத்திலும் ஆஜராக தயார் – கோட்டாபய | Virakesari.lk
-
- 1 reply
- 428 views
-
-
23 Oct, 2024 | 11:10 AM யாழ்ப்பாணத்தில் 1,400 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மானிப்பாய் பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் நடமாடுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேகநபரை கைது செய்தனர். சந்தேகநபரிடம் இருந்து 1400 போதை மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அதனை தொடர்ந்து அவரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். யாழில் 1400 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது! | Virakesari.lk
-
- 1 reply
- 688 views
- 1 follower
-
-
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்துக்கு அண்மித்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய குருணாகல் பகுதியைச் சேர்ந்த இருவரை இன்று புதன்கிழமை (23) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது பற்றி தெரியவருவதாவது, குருணாகலைச் சேர்ந்த முஸ்லீம் ஒருவருக்கு கண்ணில் ஏற்பட்டுள்ள வெண்படல நோயை குணப்படுத்துவதற்காக மட்டக்களப்பு மென்றசா வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சீயோன் தேவாலயத்தில் போதகருடன் தொடர்பு கொண்டுள்ளார். இதனையடுத்து நோய் ஏற்பட்டவரும் அவருக்கு உதவியாக இருவருமாக குருணாகலில் இருந்து பிரயாணித்து சம்பவதினமான இன்றையதினம் காலை மட்டக்களப்பை வந்தடைந்து குறித்த சீயோன் தேவாலயத்துக்கு செல்வதற்காக இடம் தெரியாது அந்தபகுதியில் நடமாடிக் கொண்டிருந்தனர். இந்நிலையில்…
-
- 2 replies
- 346 views
-
-
23 Oct, 2024 | 04:55 PM இலங்கை பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த உயர் பாதுகாப்பு வலயத்தில் தமிழ் ஊடகவியலாளர் கொல்லப்பட்டு 24 வருடங்களாகியும் நீதி கிடைக்காத நிலையில் அவருக்கு நீதி கிடைக்க வேண்டுமென கோரியுள்ள வன்னி மண்ணின் ஊடகவியலாளர் அமைப்பு ஒன்று, அவருக்கு நீதி வழங்குவது மாத்திரம் போதுமானதல்ல என வலியுறுத்தியுள்ளது. அச்சமற்ற, எளிமையான ஊடகவியலாளராக அறியப்பட்ட, துப்பாக்கிச்சூடு நடத்தி மௌனிக்கப்பட்ட நிமலராஜன் மயில்வாகனத்தின் 24ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் கையொப்பமிட்ட ஊடக அறிக்கையில் சர்வதேச நீதித்துறை அதிகாரம் கொண்ட விசாரணையின் ஊடாக ஊடகவியலாளர்களைப் பாதுகாக்குமாறு கோரிக்கை விடுக்கப…
-
- 0 replies
- 112 views
-
-
23 Oct, 2024 | 05:37 PM மன்னார் நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நடைபவணி இன்று புதன்கிழமை (23) மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நடைபவணி ஆனது நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் நானாட்டான் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து இன்று காலை 9.30 மணியளவில் முருங்கன் வீதியில் ஆரம்பிக்கப்பட்டு நானாட்டான் சுற்று வட்டத்தின் வழியாக நானாட்டான் பிரதேச செயலகத்தை சென்றடைந்தது. இந்த நிகழ்வில் மன்னார் பிரதி சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி ஒஸ்மான் டெனி , நானாட்டான் மடு சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ,நானாட்டான் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள், நானாட்…
-
- 0 replies
- 109 views
-
-
வன்னியில் வேட்புமனு நிராகரிப்பு; தீர்ப்பினை அறிவித்த உயர் நீதிமன்றம்! 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஜனநாயக தேசியக் கூட்டணியின் பரராஜசிங்கம் உதயராசாவின் வேட்புமனுவை ஏற்றுக்கொள்ளுமாறு இலங்கை உயர் நீதிமன்றம் இன்று (23) தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது. வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த பரராஜசிங்கம் உதயராசாவின் வேட்பு மனு முறைப்படி சமர்ப்பிக்கப்படவில்லை எனக் கூறி வன்னி தேர்தல் அதிகாரியினால் முன்னர் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து, பரராஜசிங்கம் உதயராசா மற்றும் இருவரினால் கடந்த வாரம் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அனைத்து ஆவணங்களும் முறையாக சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், மாவட்ட தேர்தல் அதிகாரி வேட்பு மனுவை நிராகரித்ததாக ம…
-
- 1 reply
- 127 views
-
-
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்ணாகொட தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு! 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தம்மை பிரதிவாதியாக பெயரிட சட்டமா அதிபரின் தீர்மானத்தை ரத்து செய்யுமாறு கோரி முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்ணாகொடவினால் தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது . இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் தாக்கல் செ…
-
- 0 replies
- 107 views
-
-
அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இன்று புதன்கிழமை (23) யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்டுள்ளார். இது குறித்து அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளதாது, அமெரிக்க - இலங்கை கூட்டாண்மைகளை முன்னிலைப்படுத்தி சாதகமான தாக்கத்தை ஏற்படுத்த வடக்கில் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா ஆகிய பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளேன். வடக்கு மற்றும் தெற்கில் உள்ள இலங்கையர்களின் முக்கிய இடங்களில் ஒன்றான யாழ்ப்பாணத்திலுள்ள வராலாற்று சிறப்புமிக்க கீரிமலை நகுலேஸ்வரம் கோவிலுக்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டேன். இலங்கையின் பன்முகப் பாரம்பரியத்திற்கான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் வகையில், இது போன்ற கலாச்சார அடையாளங்களைப் பாதுகாப்பதற்கு ஆதரவளிப்பதில் …
-
- 6 replies
- 489 views
- 1 follower
-
-
10 வெளிநாட்டவர்களுக்கு மரண தண்டனை-நீர்கொழும்பு மேல் நீதிமன்றம்! 10 வெளிநாட்டவர்களுக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு 146 கிலோகிராம் ஹெரோயின் வைத்திருந்தமை மற்றும் கடத்தியதற்காக இந்த 10 வெளிநாட்டவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தது அதன்படி 9 ஈரானியர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தானியருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது https://athavannews.com/2024/1405370
-
- 0 replies
- 167 views
-
-
இலங்கை அரசியல்வாதிகள் தங்கள் நலன்களை அடிப்படையாக வைத்து செயற்பட்ட சந்தர்ப்பங்கள் உள்ளன. அவர்கள் தங்கள் நலன்களிற்காக அனுகூலங்களை எதிர்பார்த்தார்கள் என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி தெரிவித்துள்ளார் பேட்டியொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் வெளிப்படையான எதிர்கூறத்தக்க வர்த்தக சூழல் இல்லை என தெரிவித்துள்ள அவர் ஜப்பானிய நிறுவனங்கள் விதிமுறைகளை பின்பற்றுவதில்லை இலஞ்ச ஊழல் அற்றவை என குறிப்பிட்டுள்ளார். அவை இலஞ்சம் பெறுவதில்லை என குறிப்பிட்டுள்ள தூதுவர் இலஞ்சம் வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தால் ஜப்பான் நிறுவனங்கள் அந்த நாட்டிலிருந்து வெளியேறி விடுவது வழமை எனவும் தெரிவித்துள்ளார். கேள்வி - நாங…
-
- 2 replies
- 180 views
- 1 follower
-
-
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிற்கு எதிராக உயர் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கில் ஆஜராக தவறியதை தொடர்ந்து நீதிமன்றம் பிடியாணையை பிறப்பித்துள்ளது. https://www.virakesari.lk/article/196896
-
- 8 replies
- 497 views
- 1 follower
-
-
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santhosh Jha) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக குமாநாயக்கவை நேற்று செவ்வாய்க்கிழமை (22) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார். வடக்குக் கடலில் தற்போது நிலவும் கடற்றொழில் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. இதன்படி, ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் இரு நாட்டு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நீண்டகால தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர். மேலும், இரு நாடுகளும் எதிர்கொள்ளும் பொதுவான சவால்களை வெற்றிகொள்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது. இச்சந்திப்பில் இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் இந்திய…
-
-
- 2 replies
- 355 views
- 1 follower
-