Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இன்றையதினம் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தமிழ் பேசத் தெரிந்த பொலிஸ் உத்தியோகத்தர் கடமையில் இல்லை என அங்கு கடமையில் இருந்த சிங்கள பொலிஸார் ஒருவர் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் தெரியவருகையில், ஊடகவியலாளர் ஒருவர் செய்தி ஒன்றினை உறுதிப்படுத்துவதற்காக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தின் 0212263227 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டுள்ளார். இதன்போது அங்கு கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர், தமிழ் பேசத் தெரிந்த பொலிஸ் உத்தியோகத்தர் கடமையில் இல்லை என தெரிவித்துள்ளார். தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் கடமையில் இல்லை என்றால் ஒரு அவசர முறைப்பாட்டினை பதிவு செய்வதற்கு ஒருவர் வந்தால் என்ன செய்வீர்கள் என வினவியவேளை, அவர்கள் நாளையதினம் தான் முறைப்பாடு பதிவு ச…

  2. ! சாணக்கியன் ஒரு தௌவல். அவருக்கு நல்ல குரல்வளம் உள்ளது. ஆட்களை கவரக்கூடிய கவர்ச்சித் தன்மை உண்டு. அதை சரியாக பாவித்தால் சாணக்கியன் ஒரு தலைவராக வரலாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் "இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளரான திரு.சிறிநேசன் அவர்கள், திரு.பா.அரியநேந்திரன் அவர்களை பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தவோ, கட்சியின் நிகழ்வுகளில் ஈடுபடுத்தவோ கூடாது. அவர் தமிழரசுக் கட்சியால் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்ப…

  3. 16 இந்திய மீனவர்கள் கைது! இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு அருகே நேற்றிரவு வியாழக்கிழமை(23) இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் 2 படகையும் அதிலிருந்த 16 மீனவர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகளின் பின் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. (ச) 16 இந்திய மீனவர்கள் கைது!

  4. யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டது. ஐந்து வாள்கள் உள்ளிட்ட 07 கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேக நபர்கள் எவரும் கைதுசெய்யப்பட்டவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இன்று காலை நடத்தப்பட்ட சோதனையின்போது வீடொன்றில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபடுவதற்கு தயாராக குறித்த ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். வீட்டில் வசித்த சந்தேக நபர் தலைமறைவான நிலையில் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார் குறித்த நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர…

  5. (நா.தனுஜா) மும்பையிலிருந்து கொழும்புக்கு வருகைதந்த பயணிகள் விமானத்தில் வெடிகுண்டு இருக்கலாம் என வெளியான தகவல்களை அடுத்து, விமானம் முன்கூட்டியே தரையிறக்கப்பட்டு, சகல பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக விமானநிலையம் மற்றும் விமானசேவைகள் தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை (24) இந்தியாவின் மும்பை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு கொழும்பில் பி.ப 3.15 மணிக்குத் தரையிறங்கவிருந்த விஸ்தாரா யு.கே 131 விமானத்தில் வெடிகுண்டு இருக்கலாம் என விமானம் தரையிறங்குவதற்கு முன்னர் தகவல்கள் வெளியானதையடுத்து பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய நிர்வாகத்தினால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து 107 பயணிகள், ஒரு குழந்தை மற்றும் 8 விமானப் பணியாளர்களைக் கொ…

  6. மன்னார் மாவட்டத்தில் நேற்று புதன்கிழமை (23) இரவு முதல் இன்று வியாழன் (24) காலை வரை பெய்த தொடர் மழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சாந்திபுரம், சௌதார், எழுத்தூர், மூர்வீதி உள்ளடங்கலாக பல கிராமங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. எழுத்தூர் பகுதியில் உள்ள 30 குடும்பங்களின் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததன் காரணமாக முப்பது குடும்பங்களும் தற்போது எழுத்தூர் பாடசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் மாவட்டத்தின் பல பாகங்களிலும் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்ற மக்கள் கிராம நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். மேலும் பல வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. மன்னார் பிரதேசச் செயலாளர்…

  7. (எம்.மனோசித்ரா) இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் புதிய முயற்சியொன்றை முன்னெடுத்துள்ளது. அதற்கமைய இரு நாடுகளினதும் கடற்றொழில் அமைச்சுக்களுக்கிடையில் எதிர்வரும் 29ஆம் திகதி கொழும்பில் விசேட பேச்சுவார்த்தையொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கரின் இலங்கை விஜயத்தின்போது இந்த பிரச்சினை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டிருந்தது. குறிப்பாக, தென்னிந்திய மீனவர்கள் இழுவைப் படகுகள் மூலம் இலங்கையின் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன் பிடிப்பதால், இலங்கை மீனவர்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்கொள்கின்றமை தொடர்பில் அரசாங்கம் சுட்டிக்காட்டியிருந்தது. அதற்கமைய இந்த விவகாரம் இரு த…

  8. தமிழ் மக்கள் 80 வீதமான வாக்குகளை அளித்தால் இரு பிரதிநிதிகளை பெறலாம் - இலங்கை தமிழ் அரசு கட்சி வேட்பாளர் சண்முகம் குகதாசன் இம் முறை நடை பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் 80 சதவீதமான வாக்குகளை அளித்தால் இரு பிரதிநிதிகளை பெறலாம் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுன்ற முதன்மை வேட்பாளரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான சண்முகம் குகதாசன் தெரிவித்தார். திருகோணமலையில் (22) மாலை இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் இருந்தால் தான் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 1985ம் ஆண்டு முதல் நில அபகரிப்பு செய்யப்பட்ட…

  9. செப்பு குாழாய் பொருத்திகளை கப்பலில் ஹொங்கொங்கிற்கு அனுப்புவதாகக் கூறி சுமார் ஐந்து கோடி ரூபா பெறுமதியான 23,000 தொன் செப்பு உலோகத்தை அனுப்பத் தயாராகிக்கொண்டிருந்த போது சுங்க அதிகாரிகளால் நேற்று புதன்கிழமை (23) கைப்பற்றப்பட்டுள்ளது. ஏற்றுமதி முனையத்தில் வைத்து செப்பு உலோகம் அடங்கிய கொள்கலன்கள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றியுள்ளனர். பேலியகொட பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இருந்து செப்பு உலோகங்களை உருக்கி, ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளமை சுங்க அதிகாரிகளின் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. கைப்பற்றப்பட்ட செப்பு கையிருப்பு தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/196968

  10. இலங்கையில் ஊடகவியலாளர்கள் படுகொலைகள் மற்றும் காணாமல் போனமை தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு சர்வதேச ஊடக கண்காணிப்பாளர்கள் மற்றும் சட்ட நிபுணர்களின் பங்களிப்புடன் நீதித்துறை அதிகாரம் பெற்ற விசாரணைக்கு முல்லைத்தீவு பத்திரிகையாளர் மன்றம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழ் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டதன் 24 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது . குறிப்பாக, தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான துன்புறுத்தல்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் கண்காணிப்புகளை அந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. 2004 முதல் 2009 வரை கொல்லப்பட்டதாகக் கூறப்படும் 48க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்…

  11. 23 Oct, 2024 | 11:10 AM யாழ்ப்பாணத்தில் 1,400 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மானிப்பாய் பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் நடமாடுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேகநபரை கைது செய்தனர். சந்தேகநபரிடம் இருந்து 1400 போதை மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அதனை தொடர்ந்து அவரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். யாழில் 1400 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது! | Virakesari.lk

  12. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santhosh Jha) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக குமாநாயக்கவை நேற்று செவ்வாய்க்கிழமை (22) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார். வடக்குக் கடலில் தற்போது நிலவும் கடற்றொழில் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. இதன்படி, ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் இரு நாட்டு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நீண்டகால தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர். மேலும், இரு நாடுகளும் எதிர்கொள்ளும் பொதுவான சவால்களை வெற்றிகொள்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது. இச்சந்திப்பில் இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் இந்திய…

  13. மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்துக்கு அண்மித்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய குருணாகல் பகுதியைச் சேர்ந்த இருவரை இன்று புதன்கிழமை (23) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது பற்றி தெரியவருவதாவது, குருணாகலைச் சேர்ந்த முஸ்லீம் ஒருவருக்கு கண்ணில் ஏற்பட்டுள்ள வெண்படல நோயை குணப்படுத்துவதற்காக மட்டக்களப்பு மென்றசா வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சீயோன் தேவாலயத்தில் போதகருடன் தொடர்பு கொண்டுள்ளார். இதனையடுத்து நோய் ஏற்பட்டவரும் அவருக்கு உதவியாக இருவருமாக குருணாகலில் இருந்து பிரயாணித்து சம்பவதினமான இன்றையதினம் காலை மட்டக்களப்பை வந்தடைந்து குறித்த சீயோன் தேவாலயத்துக்கு செல்வதற்காக இடம் தெரியாது அந்தபகுதியில் நடமாடிக் கொண்டிருந்தனர். இந்நிலையில்…

    • 2 replies
    • 345 views
  14. லலித்குகன் காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிமன்றம் தவிர வேறு எந்த நீதிமன்றத்திலும் ஆஜராக தயார் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி தனது சட்டத்தரணி ரொமேஸ் சில்வா ஊடாக இன்று உயர்நீதிமன்றத்திற்கு இதனை தெரிவித்துள்ளார்.மேல்முறையீட்டு நீதிமன்றத்தின்முன்னைய தீர்ப்பினை சவாலுக்குஉட்படுத்தும் விதத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவேளையே கோட்டாபயவின் சட்டத்தரணி தனது கட்சிக்காரரின் பாதுகாப்பு கரிசனை குறித்து தெரிவித்துள்ளார். லலித்குகன் காணாமலாக்கப்பட்ட விவகாரம் -யாழ்ப்பாண நீதிமன்றம் தவிர வேறு எந்த நீதிமன்றத்திலும் ஆஜராக தயார் – கோட்டாபய | Virakesari.lk

  15. காணாமல்போன அரச வாகனங்கள் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுள்ளனர். ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்தே இந்த வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அரச வாகனங்கள் காணாமல்போனமை தொடர்பில் ஜனாதிபதி செயலாளரினால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. மோட்டார் சைக்கிள்கள் உட்பட 29 அரச வாகனங்களே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் விரிவான வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்கள அ…

  16. கடந்த சில நாட்களாக இராணுவத்தினருக்கு அவதூறு ஏற்படும் வகையிலும் பொதுமக்களுக்கு இராணுவத்தின் மீது உள்ள நம்பிக்கையை இல்லாமல் செய்து வெறுப்பை ஏற்படுத்தும் வகையிலும், சமூக வலைதளங்களில் இராணுவம் தொடர்பான பொய்யான தகவல் அடங்கிய வீடியோக்களை சிலர் வெளியிட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இராணுவத்தினர் வெளியிட்டுள்ள அறிவித்தலில், “இராணுவத்தில் சிறப்பான எதிர்காலம் இல்லாத உறுப்பினர்கள் சிலரினால் வழங்கப்பட்ட பொய்யான தகவல்களை, முறையாக உறுதிப்படுத்திக்கொள்ளாமல் சிலர் தங்களது தனிப்பட்ட சமூக ஊடக கணக்குகளை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் இந்த வீடியோக்களை உருவாக்கியுள்ளனர். இந்த வீடியோக்களில் தெரிவிக்கப்பட்டவாறு, இராணுவ முகாம்களின் படையினரை புதிய இடங்…

  17. நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் இளம் வேட்பாளர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். அங்கஜன் தலைமையிலான ஜனநாயக தேசியக் கூட்டணியில் தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடும், வல்வெட்டித்துறை நகரசபை முன்னாள் உறுப்பினரும் உடுப்பிட்டியைச் சேர்ந்தவருமான செந்திவேல் தமிழினியன் என்ற வேட்பாளரே உயிரிழந்துள்ளார். திடீர் சுகவீனம் காரணமாக யாழ் . போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (ச) நாடாளுமன்ற இளம் வேட்பாளர் திடீர் இறப்பு!

  18. 23 Oct, 2024 | 04:55 PM இலங்கை பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த உயர் பாதுகாப்பு வலயத்தில் தமிழ் ஊடகவியலாளர் கொல்லப்பட்டு 24 வருடங்களாகியும் நீதி கிடைக்காத நிலையில் அவருக்கு நீதி கிடைக்க வேண்டுமென கோரியுள்ள வன்னி மண்ணின் ஊடகவியலாளர் அமைப்பு ஒன்று, அவருக்கு நீதி வழங்குவது மாத்திரம் போதுமானதல்ல என வலியுறுத்தியுள்ளது. அச்சமற்ற, எளிமையான ஊடகவியலாளராக அறியப்பட்ட, துப்பாக்கிச்சூடு நடத்தி மௌனிக்கப்பட்ட நிமலராஜன் மயில்வாகனத்தின் 24ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் கையொப்பமிட்ட ஊடக அறிக்கையில் சர்வதேச நீதித்துறை அதிகாரம் கொண்ட விசாரணையின் ஊடாக ஊடகவியலாளர்களைப் பாதுகாக்குமாறு கோரிக்கை விடுக்கப…

  19. 23 Oct, 2024 | 05:37 PM மன்னார் நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நடைபவணி இன்று புதன்கிழமை (23) மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நடைபவணி ஆனது நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் நானாட்டான் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து இன்று காலை 9.30 மணியளவில் முருங்கன் வீதியில் ஆரம்பிக்கப்பட்டு நானாட்டான் சுற்று வட்டத்தின் வழியாக நானாட்டான் பிரதேச செயலகத்தை சென்றடைந்தது. இந்த நிகழ்வில் மன்னார் பிரதி சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி ஒஸ்மான் டெனி , நானாட்டான் மடு சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ,நானாட்டான் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள், நானாட்…

  20. வன்னியில் வேட்புமனு நிராகரிப்பு; தீர்ப்பினை அறிவித்த உயர் நீதிமன்றம்! 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஜனநாயக தேசியக் கூட்டணியின் பரராஜசிங்கம் உதயராசாவின் வேட்புமனுவை ஏற்றுக்கொள்ளுமாறு இலங்கை உயர் நீதிமன்றம் இன்று (23) தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது. வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த பரராஜசிங்கம் உதயராசாவின் வேட்பு மனு முறைப்படி சமர்ப்பிக்கப்படவில்லை எனக் கூறி வன்னி தேர்தல் அதிகாரியினால் முன்னர் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து, பரராஜசிங்கம் உதயராசா மற்றும் இருவரினால் கடந்த வாரம் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அனைத்து ஆவணங்களும் முறையாக சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், மாவட்ட தேர்தல் அதிகாரி வேட்பு மனுவை நிராகரித்ததாக ம…

  21. முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்ணாகொட தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு! 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தம்மை பிரதிவாதியாக பெயரிட சட்டமா அதிபரின் தீர்மானத்தை ரத்து செய்யுமாறு கோரி முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்ணாகொடவினால் தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது . இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் தாக்கல் செ…

  22. இலங்கை அரசியல்வாதிகள் தங்கள் நலன்களை அடிப்படையாக வைத்து செயற்பட்ட சந்தர்ப்பங்கள் உள்ளன. அவர்கள் தங்கள் நலன்களிற்காக அனுகூலங்களை எதிர்பார்த்தார்கள் என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி தெரிவித்துள்ளார் பேட்டியொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் வெளிப்படையான எதிர்கூறத்தக்க வர்த்தக சூழல் இல்லை என தெரிவித்துள்ள அவர் ஜப்பானிய நிறுவனங்கள் விதிமுறைகளை பின்பற்றுவதில்லை இலஞ்ச ஊழல் அற்றவை என குறிப்பிட்டுள்ளார். அவை இலஞ்சம் பெறுவதில்லை என குறிப்பிட்டுள்ள தூதுவர் இலஞ்சம் வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தால் ஜப்பான் நிறுவனங்கள் அந்த நாட்டிலிருந்து வெளியேறி விடுவது வழமை எனவும் தெரிவித்துள்ளார். கேள்வி - நாங…

  23. 10 வெளிநாட்டவர்களுக்கு மரண தண்டனை-நீர்கொழும்பு மேல் நீதிமன்றம்! 10 வெளிநாட்டவர்களுக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு 146 கிலோகிராம் ஹெரோயின் வைத்திருந்தமை மற்றும் கடத்தியதற்காக இந்த 10 வெளிநாட்டவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தது அதன்படி 9 ஈரானியர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தானியருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது https://athavannews.com/2024/1405370

  24. பதிவு செய்யப்படாத சொகுசு வாகனத்தை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு வெளிநாடு செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது. அவர் பயன்படுத்திய வாகனம், ஜேர்மனியில் தயாரிக்கப்பட்டு, இங்கிலாந்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு இந்த நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாகவும் பதிவு செய்யப்படாத இலக்கத்தில் பயணித்ததாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்த உண்மைகளை சுட்டிக்காட்டி கோட்டை நீதிவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த காரை யார் இலங்கைக்கு கொண்டு வந்தனர், எப்போது, யார் பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தி வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறி…

  25. கம்மன்பிலவின் ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையை நிராகரித்த அரசாங்கம்! முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவினால் நேற்று (21) வெளியிடப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், இந்த சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் புதிய விசாரணைகளை மேற்கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று (22) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோரை தற்போதைய பதவிகளில் இருந்து எக்காரணம் கொண்டும் நீக்க அரசாங்கம் தயாராக இல்லை என்று…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.