ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143498 topics in this forum
-
அரசாங்கம் 2000 பேருக்கு இரட்டை பிராஜவுரிமை வழங்க தீர்மானித்துள்ளதாக உள்நாட்டு விவகார, வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி.நவின்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இரட்டை பிரஜாவுரிமை தொடர்பில் எமக்கு பெரும் எண்ணிக்கையான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் ஆலோசனைக்கு இணங்க 2000 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டவர்களுள் 90 வீதமானோர் சிங்களவர்களும், 10 வீதமானோர் தமிழ் மற்றும் முஸ்லிம் இனத்தவர்களும் அடங்குவர். இதில் அநேகமானோர் அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளுக்கு விண்ணப்பித்துள்ளனர்.இரட்டை பிராஜவுரி…
-
- 0 replies
- 568 views
-
-
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கிளை அலுவலகத்திற்கு எதிரில் காணாமற்போனோரின் உறவுகள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். பத்து நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள காணாமற்போனோர் தொடர்பாக ஆராயும் ஐ.நா.செயற்குழு இன்று யாழ்ப்பாணத்தில் காணாமற்போனோரின் உறவினர்களைச் சந்தித்து வாக்குமூலங்களைப் பெற்றுச் செல்வதற்காக வருகை தந்துள்ளனர். இந்நிலையில், வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழு, காணாமல் போனோர் சார்பாக இந்த அமைதியான போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், உறவுகள் கறுப்புத் துணியால் தமது வாய்களைக் கட்டிக்கொண்டு அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். …
-
- 0 replies
- 365 views
-
-
சங்கைக்குரிய மாதுலுவாவே சோபித தேரரின் இறுதிக் கிரியை இன்று பிற்பகல் பாராளுமன்ற வளாகத்தில் அரச மரியாதையுடன் நடைபெறும். இதற்காக பாராளுமன்ற வளாகத்திலும் வீதி போக்குவரத்திலும் விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் பொதுமக்கள் தமது உயர்வான கெளரவத்தை அன்னாருக்கு பெற்றுத் தர வேண்டுமென இதற்கான ஏற்பாட்டுக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. சோபித்த தேரரின் இறுதிக்கிரியைகளில் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் கலந்துகொள்வரென எதிர்பார்க்கப்படுகிறது. போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட 1900 பொலிஸார் இன்றைய தினம் கடமையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். …
-
- 0 replies
- 500 views
-
-
குமரன் பத்மநாதன் தொடர்பில் பயங்கரவாத் தடைப் பிரிவு விசாரணை நடத்துகின்றது – சட்ட மா அதிபர் திணைக்களம் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் தொடர்பில் பயங்கரவாதத் தடைப் பிரிவு விசாரணை நடத்தி வருவதாக சட்ட மா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் அறிவித்துள்ளது. குமரன் பத்மநாதனின் நடவடிக்கைகள் குறித்து பயங்கரவாதத் தடைப் பிரிவினர் விசாரணை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தாக்கல் செய்திருந்த மேன்முறையீடு தொடர்பிலான விசாரணைகளின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைய பொலிஸ் மா அதிபரின் உத்தரவிற்கு அமைய இந…
-
- 1 reply
- 479 views
-
-
பூரண ஹர்த்தாலுக்கான ஆதரவு: யாழ். வணிகர் கழகம் கடந்த பல வருடங்களாக பல தமிழ் இளைஞர்கள் எவ்வித விசாரணையுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தமிழ் மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தி வருகின்றது. புதிய அரசை பல எதிர்பார்ப்புகளுடன் பெருமளவிலான தமிழ் மக்கள் வாக்களித்து ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி தங்கள் முழு ஆதரவையும் வழங்கினர். என யாழ். வணிகர் கழகம் தெரிவித்துள்ளது. செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாடாளுமன்ற தேர்தலிலும் இவ்வாறு பெரும் எதிர்பார்ப்புடன் மக்கள் வாக்குகளை வழங்கினர். அடிப்படை மனித உரிமைகளை புதிய அரசாங்கம் மதிக்கும் என எம் மக்கள் நம்பினர். அதுமட்டுமின்றி நீண்ட காலம் எந்தவொரு விசாரணைய…
-
- 6 replies
- 655 views
-
-
குமார் குணரத்தினத்தை விடுதலை செய்யுமாறு யாழில் சுவரொட்டி -சொர்ணகுமார் சொரூபன், எம்.றொசாந்த் முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரத்தினத்தை விடுதலை செய்யுமாறு கோரி யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 'கைது செய்த குமார் குணரத்தினத்தை உடன் விடுதலை செய்' என்னும் தலைப்பிட்டு இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்தச் சுவரொட்டியை முன்னிலை சோஷலிசக் கட்சி ஒட்டியுள்ளது. இதேவேளை, முன்னிலை சோஷலிசக் கட்சியின் ஏற்பாட்டில் நுகேகொடையில் வெள்ளிக்கிழமை (13) பிற்பகல் 3.30 மணிக்கு இடம்பெறவுள்ள '26ஆவது கார்த்திகை வீரர் நினைவு' தினம் தொடர்பிலும் யாழில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 'நீங்கள் மரணிக்கவில்லை' எனக்குறிப்பி…
-
- 0 replies
- 532 views
-
-
ஜனாதிபதி-சி.வி சந்திப்பு வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/158928/%E0%AE%9C%E0%AE%A9-%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%9A-%E0%AE%B5-%E0%AE%9A%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%AA-%E0%AE%AA-#sthash.emjmqPda.dpuf
-
- 0 replies
- 259 views
-
-
இணைய இணைப்பு: http://www.sencholai.org/?p=2739
-
- 6 replies
- 1k views
- 1 follower
-
-
ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை தொடர்பில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் மிகவும் பலவீனமானது. இத்தீர்மானம் தமிழ் மக்களுக்கு உண்மையான நீதியைப் பெற்றுத் தருமா என்பதில் சந்தேகம் நிலவுவதாக முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை இலங்கையில் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல் தென்னாபிரிக்காவில் கடந்த 6, 7 ஆம் திகதிகளில் நடைபெற்றது. இதுதொடர்பிலான விளக்கமளிக்கும் பத்திரிகையாளர் மாநாடு யாழ். ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது. இதன்போதே ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரி…
-
- 0 replies
- 306 views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான அமைச்சர் குழாமிற்கும் இடையிலான சந்திப்பு இன்று காலை 11மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இந்தச் சந்திப்பில், மிக முக்கியமாக அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான விடயம் முதன்மைப்படுத்திப் பேசப்படவுள்ளதுடன், காணாமல்போனவர்கள் விடயம், வடமாகாணத்தில் மீள்குடியேற்றம், மற்றும் முல்லைத்தீவு காடழிப்பு விடயம் உள்ளடங்கலாக, வடக்கின் சமகால பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரும் வகையிலான சந்திப்பாக இந்தச் சந்திப்பு நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது வடமாகாண சபையின் பிரச்சினைகள் அதிக முக்கியத்துவத்துடன், பேச ப்படப் போவதில்லை எனவும் இது…
-
- 0 replies
- 373 views
-
-
சிறுவர்களின் தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்த வழிப்போக்கர் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரிக்கு அருகில் வீதியால் சென்று கொண்டிருந்த வழிப்போக்கர் ஒருவரை இரு சிறுவர்கள் வழி மறித்துள்ள அவரிடம் தீப்பெட்டி கேட்டுள்ளனர். தீப்பெட்டி இல்லை என்றதும் ஒருவன் கத்தியால் வெட்டியும் மற்றையவர் கன்னத்தில் கடித்தும் உள்ளனர். இதனால் படுகாயமடைந்த நிலையில் ஐயாத்துரை ராஜசேகரம் (வயது 43) என்பவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 17 வயது மதிக்கத்தக்க குறித்த சிறுவர்கள் வேறு ஒரு வீட்டின் கதவைப் பிடுங்கி எறிந்ததுடன் வேலியையும் வெட்டி அட்டகாசம் செய்துள்ளனர். சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு …
-
- 0 replies
- 249 views
-
-
சிறைச்சாலைகளில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் இன்று நடத்தவிருந்த கவன ஈர்ப்பு போராட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கட்சி பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு இலங்கைத் தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற கூட்டத்தில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும், வெள்ளிக்கிழமை வட கிழக்கு மாகாணங்களில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளதால் வியாழக்கிழமை நடைபெறவிருந்த கவன ஈர்ப்பு போராட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. எனவே தமிழ் அரசியல் க…
-
- 0 replies
- 249 views
-
-
சுமந்திரனுக்கு எதிரான கோசம் 'எங்கட ஆணியை நாங்கள் புடுங்குவம், நீ புடுங்கிறது எல்லாம் தேவையில்லாத ஆணிதான்' தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக அவுஸ்திரேலியா, சிட்னியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் எழும்பிய கோசம் இது. இப்படியான பல கோசங்கள் அங்கு எழுப்பப்பட்டன. அவுஸ்திரேலிய தமிழ் அமைப்பொன்று ஏற்பாடு செய்திருந்த கூட்டமொன்றில் உரையாற்றுவதற்காக எம்.ஏ.சுமந்திரன் அழைக்கப்பட்டிருந்தார். கூட்டம் ஆரம்பிப்பதற்கு சற்றுமுன்னர் அரங்கினுள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், எம்.ஏ.சுமந்திரனை உரையாற்றுவதிலிருந்து தடுத்து வெளியேற்றுவதில் குறி…
-
- 12 replies
- 1.7k views
-
-
கைதிகளின் உண்ணாவிரதம் தொடர்கிறது: 7 பேர் வைத்தியசாலையில் சேர்ப்பு தமிழ் அரசியல் கைதிகள் சிலருக்கு நேற்று கடும் நிபந்தனைகளுடன் பிணை வழங்கியுள்ள நிலையிலும் பொது மன்னிப்புக் கோரிய அரசியல் கைதிகளின் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் 5ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது. இந்த நிலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவரும் வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளில் 7 பேர் மயக்கமுற்ற நிலையில் சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் தங்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கும் வரை இப்போராட்டம் தொடரும் என்றும் கைதிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://…
-
- 1 reply
- 488 views
-
-
கண்ணீர் விடும் விவசாயிகள் - எம்.றொசாந்த் வெங்காயச் செய்கையில் ஈடுபட்ட யாழ்.மாவட்ட விவசாயிகள் தற்போது பெய்து வரும் மழை காரணமாக நஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளனர். பெருமளவான வெங்காயச் செய்கையானது அழிவடைந்துள்ளது. இது தொடர்பில் வெங்காயச் செய்கையாளர் ஒருவர் கூறுகையில், 'நான் எனது தோட்டத்தில் 250 கன்றுகளை நாட்டியிருந்தேன். இன்னும் 20 நாட்களுக்கு பின்னர் மழை பெய்திருந்தால் முழுமையான அறுவடையைப் பெற்றிருப்போம். அதனால் எனக்கு 1½ இலட்சம் ரூபாய் வருமானம் கிடைத்திருக்கும். ஆனால், மழை முந்திவிட்டதால் எனது வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது' என்றார். - See more at: http://www.tamilmirror.lk/158909#sthash.3ov…
-
- 0 replies
- 572 views
-
-
வடக்கு, கிழக்கு மீள்குடியேற்றம் தொடர்பான ஜனாதிபதி தலைமையில் ஆராய்வு! [Thursday 2015-11-12 07:00] வடக்கு, கிழக்கு மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் மாவட்டச் செயலாளர்களின் அறிக்கையில் மட்டும் தங்கியிருக்காது மாகாண ரீதியான பிரச்சினைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார். அத்தோடு இவ்விடயத்தில் மக்களின் நடைமுறை ரீதியான பிரச்சினைகளுக்கு முதலிடம் வழங்குமாறும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் மாவட்டச் செயலாளர்களின் அறிக்கையில் மட்டும் தங்கியிருக்காது மாகாண ரீதியான பிரச்சினைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார். அத்தோடு இவ…
-
- 0 replies
- 469 views
-
-
இலங்கையில் நல்லாட்சியை ஏற்படுத்த துணிவுடன் குரல் கொடுத்தவர் சோபிததேரர் : ஜோசப் ஆண்டகை இலங்கையில் பவ வருடகால சர்வாதிகார போக்கினை மாற்றி இனரீதியான மொழி, மத ரீதியான குரோதங்களை அகற்றி மக்களிடையே நல்லுறவையும் நல்லிணக்கத்தினையும் ஏற்படுத்துவதற்கு நீதியுடனும் அமைதியுடனும் கூடிய நல்லாட்சி ஏற்படுத்த துணிவுடன் குரல் கொடுத்து செயல்பட்டவர் அமரர் சோபித தேரர் என மட்டக்களப்பு-அம்பாறை மறை மாவட்டங்களின் ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், மனித நேயத்தினை முன்னெடுத்து இலங்கையில் பல வருடகால சர்வாதிகார போக்கினை மாற்றி இனரீதியான மொழி, மத ரீதியான குரோதங்களை அகற்றி …
-
- 0 replies
- 511 views
-
-
ஜனாதிபதி உறுதியான முடிவை அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும் அரசியல் கைதிகள் சிலருக்கு பிணை வழங்குவதாக நீதிமன்றம் அறிவித்தாலும் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் தொடர்பில் சரியான முடிவை அரசாங்கம் அறிவிக்கும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடரப்போவதாக தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர். அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிக்கு அமைய 31 அரசியல் கைதிகள் நேற்றையதினம் நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் விடுவிப்பதாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது. நீதிமன்றம் பிணை வழங்கினாலும் அவர்கள் மீண்டும் சிறைச்சாலைக்கே அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அரசாங்கம் தொடர்ந்தும் எம்மை ஏமாற்றக் கூடாது. எனவே நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டிர…
-
- 0 replies
- 321 views
-
-
நீதி அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்கள பலவீனங்களே கைதிகள் விடுதலைக்குத் தாமதம் நீதியமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பலவீனம் காரணமாகவே தமிழ் அரசியல் கைதிகள் 32 பேரையும் நேற்று பிணையில் விடுவிக்க முடியாது போனதாக கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் குற்றஞ்சாட்டியுள்ளார். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட 32 பேரை பிணையில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் அழைத்துச் சென்றபோதும் அவர்களுக்குப் பிணை வழங்கப்படாது, எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஒடுக்குமுறை மற்றும் அதிகாரத்தைப் பிரயோகிக்கும் வகையில் சட்டமா அதிபர் திணைக்களம் செயற்படுவதாலேயே …
-
- 0 replies
- 432 views
-
-
கடலில் விழப் போகும் மர்மப்பொருள்! - நிலத்தில் சிதறும் பொருட்களை தொடக்கூ்டாது என அறிவுறுத்தல் [Wednesday 2015-11-11 08:00] வரும் வெள்ளியன்று முற்பகலில் தென்பகுதி கடலில் விழலாமென எதிர்பார்க்கப்படும் மர்மப் பொருள் இடைவழியில் வெடித்து சிதறினால் நிலப் பகுதியில் விழும் அதன் பாகங்களை எவரும் தொட வேண்டாம் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பெளதீகவியல் பீட பேராசிரியரும் வான சாஸ்திர விஞ்ஞானியுமான சந்தன ஜயரட்ன தெரிவித்தார். வரும் வெள்ளியன்று முற்பகலில் தென்பகுதி கடலில் விழலாமென எதிர்பார்க்கப்படும் மர்மப் பொருள் இடைவழியில் வெடித்து சிதறினால் நிலப் பகுதியில் விழும் அதன் பாகங்களை எவரும் தொட வேண்டாம் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பெளதீகவியல் பீட பேராசிரியரும் வான சாஸ்திர …
-
- 4 replies
- 1k views
-
-
ஐ.நா தீர்மானம் தமிழருக்கு நீதியைப் பெற்றுத் தருமா என நவநீதம்பிள்ளை சந்தேகம்! [Thursday 2015-11-12 07:00] ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை தொடர்பில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் மிகவும் பலவீனமானது. இத்தீர்மானம் தமிழ் மக்களுக்கு உண்மையான நீதியைப் பெற்றுத் தருமா என்பதில் சந்தேகம் நிலவுவதாக முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை தொடர்பில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் மிகவும் பலவீனமானது. இத்தீர்மானம் தமிழ் மக்களுக்கு உண்மையான நீதியைப் பெற்றுத் தருமா என்பதில் சந்தேகம் நிலவுவதாக முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை இலங்கைய…
-
- 1 reply
- 338 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டு பிரதிகள் இன்று இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர். [ வியாழக்கிழமை, 12 நவம்பர் 2015, 05:01.47 AM GMT ] இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள மீன் ஏற்றுமதி தடையை தளர்த்துவது குறித்து ஆராயும் நோக்கில் அவர்கள் இந்த விஜயத்தை மேற்கொள்ள உள்ளனர். சட்டவிரோத முறைகளில் மீன்பிடித்தல் கப்பல் கண்காணிப்பு கட்டமைப்புக்களை பொருத்தாமை உள்ளிட்ட சில காரணிகளின் அடிப்படையில் இலங்கைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. கடந்த ஜனவரி மாதம் முதல் இலங்கை மீன்களை கொள்வனவு செய்தனை ஐரோப்பிய நாடுகள் தவிர்த்துக்கொண்டன. இலங்கை மீன் வகைகள் அதிகளவில் ஐரோப்பாவிற்கே ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இவ்வாறு தடை விதிக்கப்பட்ட காரணத்தினால் பாரியளவு நாட்டுக்கு வருமான இழப்பு ஏற…
-
- 0 replies
- 403 views
-
-
கூட்டமைப்பு ஒன்றுமே செய்யவில்லை! அரசியல் கைதிகள் குமுறல் [ புதன்கிழமை, 11 நவம்பர் 2015, 01:31.35 PM GMT ] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் எந்தவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என தற்போது விடுதலையாகியுள்ள அரசியல் கைதிகள் தெரிவித்தனர். தம்முடைய விடுதலைக்கு காரணம் நல்லாட்சி முறையை அமைத்திருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் கருணையினாலும் கரிசனையினாலும் மற்றும் தம்முடைய உண்ணாவிரத போராட்டத்தினாலும் விடுதலையாகியிருப்பதாக கைதிகள் தெரிவித்தனர். தங்களுடைய அரசியல் இலாபங்களை கருதியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயல்படுவதாக அரசியல் கைதிகள் குற்றம் சுமத்தினர் http://www.tami…
-
- 4 replies
- 526 views
-
-
மதிப்புக்குரிய தென்நிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களிடம் சுவிஸ் ஈழத்தமிழரவை உரிமையுடன் முன்வைக்கும் எண்ணக்கிடக்கைகள்! [Wednesday 2015-11-11 20:00] மதிப்பிற்குரிய கலைஞர்களே மற்றும் படைப்பாளிகளே! தமிழக மக்களின் காவிரி நதிநீர் விவகாரம் போன்ற மக்கள் நலன்சார் அரசியல் விடையங்களிலும், தொடர்ந்தும் சிறீலங்கா பயங்கரவாத அரசால் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்படும் ஈழத்தமிழர்கள் சார்ந்த மனிதாபிமான அரசியல் விவகாரங்களிலும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய தலைமை தலையிடாது என்ற செய்தி கேட்டு சுவிஸ் வாழ் தமிழ்பேசும் மக்களாகிய நாம் பேரதிர்ச்சியடைந்துள்ளோம். தமிழீழக் கலைத்துறையினர் விடுதலைப்போராட்டம் வலுவாக இருந்த காலகட்டத்தில் தமது அனைத்துப் ப…
-
- 1 reply
- 544 views
-
-
காணாமல் போனோர் தொடர்பாக ஆராயும் ஐக்கிய நாடுகள் செயற்குழுவின் பிரதிநிதிகள், இன்று மாலை மன்னாருக்கு விஜயம் செய்தனர். காணாமல் போனோர்களின் உறவினர்களை சந்தித்து தகவல்களை பெற்றுக் கொள்ளவே இவர்கள் மன்னாருக்கு வருகை தந்தனர். இன்று மாலை 2 மணியளவில் ஐ.நா குழுவினர் வந்தபோது, காணாமல் போனவர்களின் உறவினர்கள் சுமார் 200 பேர், மன்னார் கீரி ஞானோதய மண்டபத்திற்கு முன் ஒன்று கூடி காணாமல் போனவர்களின் புகைப்படங்களை ஏந்தியவாறு நின்றனர். அதனைத் தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட காணாமல் போனவர்களின் குடும்ப பிரதிநிதிகள் 40 பேரிடம் குறித்த குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டனர். மன்னார் பிரஜைகள் குழு மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தமை குறிப்ப…
-
- 0 replies
- 657 views
-