ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை : யாழ்.டொன் பொஸ்கோ மாணவன் சாதனை தரம் ஐந்து புலமைப் பரீட்சை முடிவுகளின் பிரகாரம் யாழ். டொன் பொஸ்கோ பாடசாலையைச் சேர்ந்த நோதிநாதன் வசீகரன் 192 புள்ளிக்களைப் பெற்று யாழ். மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார். இவ்வருடம் நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரீட்சையின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் குறித்த மாணவன் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இவரை பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பாராட்டியுள்ளனர். http://onlineuthayan.com/news/970
-
- 12 replies
- 2.8k views
-
-
பிள்ளையான் கைது [ ஞாயிற்றுக்கிழமை, 11 ஒக்ரோபர் 2015, 01:00.28 PM GMT ] கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் வாக்குமூலமளித்த பின்னரே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. http://www.tamilwin.com/show-RUmtzASVSVhwzG.html
-
- 16 replies
- 3k views
-
-
கொண்டயாவின் அண்ணனே குற்றவாளி? கொட்டதெனியாவ சிறுமி சேயாவின் கொலை தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட கொண்டயாவின் சகோதரனான சமன் ஜயலத்தின் மரபணு அறிக்கை இன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போது, குறித்த மரபணு, சிறுமி சேயாவின் உடலிலிருந்து பெறப்பட்ட மரபணு உடன் ஒத்துப்போவதாக மினுவங்கொடை நீதிமன்ற நீதவான் டீ.ஏ. ருவன்பதிரண தெரிவித்தார். சமன் ஜயலத், கடந்த 06 ஆம் திகதி நீதிமன்ற உத்தரவின்படி பொரளையிலுள்ள ஜீன்டெக் நிறுவனத்தில் சி.ஐ.டியினரால் அழைத்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது. http://onlineuthayan.com/news/1240
-
- 0 replies
- 568 views
-
-
மனைவியை கொலை செய்த கணவருக்கு 16வருட கடூழிய சிறைத்தண்டனை : நீதிபதி இளஞ்செழியன் 2009ஆம் ஆண்டு ஒக்ரோபர் 27ஆம் திகதி கைதடி கிழக்கில் இடம்பெற்ற குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் கைதான கணவருக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் 16வருட கால கடூழிய சிறைத்தண்டனையும், ரூ.பத்தாயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். 2009ஆம் ஆண்டு ஒக்ரோபர் 27ஆம் திகதி கைதடி கிழக்கில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் குடும்பத்தகராறாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த கணவன் மனைவியை கத்தரிக்கோலால் குத்தியுள்ளார். இதனால் மனைவி துரதிஸ்டவசமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மனைவியைக் கொலை செய்த குற்றச்சாட்டில் சாவகச்சேரிப் பொலிஸார் கணவரைக் கைது செய்து சாவகச்சேரி நீ…
-
- 0 replies
- 945 views
-
-
[ புதன்கிழமை, 14 ஒக்ரோபர் 2015, 06:46.52 AM GMT ] 1996ம் ஆண்டு 10மாதம் 10ம் திகதி ஜோர்தான் நாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்ற ஜெயராணி என்ற பெண் இன்னும் வீடு திரும்பாத சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்ப்படுத்தியுள்ளது. 19 வருடங்களில் 7 கடிதங்கள் மாத்திரமே உறவினர்களுக்கு கிடைத்துள்ளமையானது பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஓட்டமாவடியில் இருக்ககூடிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் ஊடாக ஜோர்தான் நாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்றவர் குறித்து, அரசாங்கமும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களும், இதுவரையில் எவ்வித முடிவுகளும் எடுக்கவில்லையென தெரிவிக்கப்படுகிறது. குறித்த பெண்ணின் தாய் கறுவல் செல்லத்தங்கம் இது தொடர்பாக கூறுகையில், கடந்த…
-
- 0 replies
- 812 views
-
-
இனவாதம் என்பது புத்தியில்லாததோர் ஆபத்தான மிருகமாகும். ஒரு வீட்டு நாயைப் போல அதைப் பழக்கி வைத்திருந்தாலும், ஒரு கட்டத்தில் அந்த மிருகமானது, வசப்படுத்தி வைத்திருந்தவனையே வேட்டையாடிக் கொன்று விடும். இனவாதம் எனும் மிருகத்துக்கு பசி வந்து விட்டால், பிறகு நம்மாள் பிறத்தியாள் என்கிற வித்தியாசமெல்லாம் அதற்குத் தெரிவதில்லை. இதற்கு அண்மைய உதாரணம், மஹிந்த ராஜபக்ஷ. இனவாதத்தை வளர்த்து அதனூடாக தனது ஆட்சியை தொடரலாம் என்று நினைத்த அந்த மனிதனையே – கடைசியில் இனவாத மிருகம் வேட்டையாடித் தீர்த்து விட்டது. பொதுபலசேனா என்கிற காவிப் பயங்கரவாதத்தை உருவாக்கி, அதனூடாக இனவாதத்தினை வளர்த்து விட்டு, அதில் குளிர்காய நினைத்த மஹிந்த ராஜபக்ஷவும் அவரின் குடும்பமும் கடைசியில், அந்த இனவாதத் தீயிலேயே கருகிப…
-
- 0 replies
- 602 views
-
-
நாட்டின் சுயகெளரவம் அரசால் பறிபோனது தற்போதைய அரசு நாடு தனது சுயகெளரவத்தை இழக்கச் செய்துள்ளது என்று குற்றஞ்சாட்டியுள்ளார் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டியூ.குணசேகர. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் யோசனையை அரசு ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த காலங்களில் மூன்று தடவைகள் இலங்கை அரசு ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தை நிராகரித்திருந்தது. அமெரிக்கா மிகவும் தந்திரமான முறையில் இந்த அரசை ஏமாற்றி தீர்மானத்துக்கு இணை அனுசரணையாளராக இலங்கையை இணங்கச் செய்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொரளை கலாநிதி என்.எம்.பெரேரா கேந்திர நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத…
-
- 0 replies
- 402 views
-
-
பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டிய ஒன்று நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டம் நீதிக் கட்டமைப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும். இவ்வாறு சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.சீ.வெலியமுன தெரிவித்துள்ளார். அரச தகவல் திணைக்களத்தில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை ஜெனிவா தீர்மானத்தின் பின் என்ற பொருளில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு பயங்கரவாதத் தடைச்சட்டம் பெரும் தடையாக அமைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். பயங்கரவாதத் தடைச்சட்டம் குறித்த எனது நிலைப்பாடும் அரசின் நிலைப்பாடும் ஒன்றல்ல. அது குறித்து அரசு எவ்வாறு தீர்மானிக்கும் என்பதைக் கூற முடியாது என்று…
-
- 0 replies
- 333 views
-
-
தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்து வரும் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் குறித்து தம்மால் எந்த முடிவையும் எடுக்க முடியாதென நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து அரசாங்கமே அரசியல் கொள்கை ரீதியாக முடிவெடுத்து நடவடிக்கை எடுக்க முடியும் எனவும், அந்தத் தீர்மானத்தை சட்ட ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரப்பு அமைச்சே மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். இதுதொடர்பில் நீதி அமைச்சர் கருத்துவெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் பேசுகையில், நாட்டில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்பதையும், பாரிய குற்றச்சாட்டுக்களில் கைதுசெய்யப்பட்டவர்களே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் மீண்டும் வலியுறுத்துகின்றேன். இந்தக் கருத்த…
-
- 0 replies
- 675 views
-
-
டக்ளஸ், கருணா போன்றவர்களும் கைது செய்யப்பட வேண்டும் - சுமந்திரன் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆயுதக்குழுக்களை சார்ந்தவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் முதலாம் குறுக்கு வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் பல ஆயுதக் குழுக்கள் குற்றங்கள் புரிந்ததாக சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கே.என்.டக்…
-
- 0 replies
- 440 views
-
-
ஜே.ஆர்- தெருவோரத்தில் அனாதரவாகக் கொல்லப்பட்ட ஒரு ‘துரோகியின்’ மாவீரர் நாள் கதை: சபா நாவலன் 10/10/2015 இனியொரு... 1 COMMENT அவனுக்கு மீசை அரும்பய்த்தொடங்கிய நாளிலிருந்தே போராட்டமும் ஆயுதங்களோடு முளைவிட ஆரம்பித்திருந்தது. எண்பதுகளின் ஆரம்பத்திலேயே அவனது போராட்ட வாழ்க்கை ஆரம்பமாகிவிட்டது. கல்வியன்காட்டிலிருந்து பருத்தித்துறை வரைக்கும் தனது சைக்கிளில் இயக்கக் கூட்டத்திற்குச் சென்று வந்திருக்கிறான். நெல்லியடியில் நான்கைந்து இளைஞர்களோடு ஈழப் போராட்டத்தை வெற்றிகொள்ள மற்றொரு வழியும் இருப்பதாக பலிபீடம் என்ற குழு பிரச்சாரம் செய்துவந்த போது அதனோடு இணைந்துகொண்டான். எண்பதுகளின் ஆரம்பத்தில் இயக்க வேறுபாடுகளின்றி, சோசலிசம், வர்க்கம், புரட்சி என்று அனைத்துப் போராளிகளும் உச்சரித்தனர். …
-
- 25 replies
- 2.6k views
-
-
எம்.பிக்கள் படுகொலை பற்றி ஆராய நாடாளுமன்ற விசாரணைக்குழு : பிரதமர் அதிரடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக நாடாளுமன்ற விசாரணைக்குழுவொன்றை அமைப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். நாடாளுமன்றத்தின் அதிகாரம் மற்றும் விசேட வரப்பிரசாதங்கள் சட்டமூலத்தின்கீழ் இந்தக்குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. எம்.பிக்களின் படுகொலைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸ் உத்தியோகத்தர்களை நாடாளுமன்ற விசாரணைக்குழு முன்னிலையில் அழைத்து தகவல்களைப் பெற்றுக்கொள்ளவும், பொலிஸாரின் விசாரணைகளை மேற்பார்வையிடவும் இந்த விசாரணைக் குழுவுக்கு அதிகாரமளிக்கப்படவுள்ளது. இந்த விசாரணைக்குழுவின் விசாரணை அறிக்கை நீ…
-
- 0 replies
- 239 views
-
-
தொடர்கிறது தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் : 5 பேர் உடல்நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டு மயக்கம் நல்லாட்சி அரசு தங்களை பொதுமன்னிப்பில் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் தமிழ் அரசியல் கைதிகளின் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் நேற்று இரண்டாவது நாளாகவும் சிறைச்சாலைகளில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தால் கொழும்பு - மகஸின் சிறைச்சாலையில் நான்கு கைதிகள் உடல்நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டு நேற்று மயக்கமடைந்தனர். இதனையடுத்து மகஸின் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளின் உடல்நிலையை நேற்றைய தினம் சிறைச்சாலை வைத்தியர்கள் பரிசோதித்தனர். உடல்நிலை மோசமாகி மயக்கமடைந்திருந்த நான்கு கைதிகளையும் வெலிக்கடை சிறைச்சாலை வைத்…
-
- 0 replies
- 1.5k views
-
-
முன்னாள் பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சர் வேலாயுதம் காலமானார் முன்னாள் பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சர் கே.வேலாயுதம் நேற்று காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே தனது 65ஆவது வயதில் காலமானார். காலஞ்சென்ற முன்னாள் பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சர் கே.வேலாயுதம் தேசிய தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. http://onlineuthayan.com/news/1229
-
- 0 replies
- 215 views
-
-
14 ஆண்டுகளின் பின் மீண்டும் விசாரணை 2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக்காகத் தீவகம் சென்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களைக் கொடூரமாகத் தாக்கியதுடன் ஆதரவாளர்கள் இருவரைக் கொலை செய்த வழக்கு 14 ஆண்டுகளின் பின்னர் நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. திருகோணமலை மேல் நீதிமன்றில் நீதிபதி சசி மகேந்திரன் முன்பாக வழக்கு விசாரிக்கப்பட்டது. விசாரணைக்கு முற்படுமாறு அறிவித்தபோதும்- அதனை எதிர்கொள்வதற்கான போதிய ஏற்பாடுகளுடன் வராமல் இருந்த சந்தேகநபர்கள் இருவரது பிணை அனுமதியை நீக்கிய நீதிபதி அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். வடக்கு - கிழக்கில் போர்க் காலத்தில் இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கிய முன்னாள் தமிழ் ஆயுதக் குழுக்கள் - துணை இராணுவக் குழுக்கள் - ஒ…
-
- 0 replies
- 367 views
-
-
வெளிநாட்டில் பணிபுரிவோருக்கு ஓய்வுதியமும் வாக்குப்போடும் வசதியும்? 14-10-2015 10:36 AM வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையருக்கு ஓய்வுதியமும் வாக்குப்போடும் வசதியையும் இந்த நல்லாட்சியில் அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டுமென தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் தேசிய கொள்கைபரப்புச் செயலாளரும் அல்- மீஸான் பௌண்டேஷன் தலைவருமான அல் -ஹாஜ் ஹுதா உமர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வெளியே வாழும் வெளிநாட்டு தொழிலாளிகள் சார்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வெளிநாட்டில் வேலைசெய்யும் இலங்கையர்களின் நலன்கருதி இந்த நல்லாட்சியில் அரசு அவர்களுக்கான நலத்திட்டங்களை அறிவிக்க முன்வரவேண்டும். இலங்கைக்கு அந்நி…
-
- 0 replies
- 273 views
-
-
தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினரை நாடு கடத்துமாறு கனடா உத்தரவு? 14 அக்டோபர் 2015 தமிழீழ விடுதலைப் புலி உறப்பினரை நாடுகடத்துமாறு கனடா உத்தரவிட்டுள்ளதாக கனேடிய கனேடிய செய்திகள் தெரிவிக்கின்றன. பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டிருந்ததாக குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மாணிக்காவசம் சுரேஸ் என்ற நபரையே இவ்வாறு நாடு கடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கனேடிய மத்திய நீதிமன்றம் இந்த உத்தரவினைப் பிறப்பத்துள்ளது. 1995ம் ஆண்டு முதல் கனேடிய அரசாங்கம் சுரேஸை நாடு கடத்த முயற்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கனேடிய குடிவரவு சட்டங்களின் அடிப்படையில் சுரேஸை நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது என அந்நாட்டு குடிவரவு திணைக்களம் அறிவித்துள்ளது. குடிவரவு சட்டங்களின் அடிப்படை…
-
- 0 replies
- 277 views
-
-
. Published on October 9, 2015-9:10 am · No Comments தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் அவர்கள் சர்வாதிகாரப்போக்கில் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கிறார் என்ற குற்றச்சாட்டு கடந்த பல வருடங்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளேயும் வெளியேயும் முன்வைக்கப்பட்டு வருகிறது. அதில் ஒன்றுதான் வடமாகாணசபை தேர்தல் அறிவிக்கப்பட்ட போது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள நான்கு கட்சிகளும் ஒன்றாக ஒரு முடிவை எடுத்து முதலமைச்சர் வேட்பாளர் யார் என அறிவித்த போது அதை முற்றாக நிராகரித்து முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரனையே முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்க வேண்டும் என சம்பந்தன் தன்னிச்சையாக முடிவை எடுத்திருந்தார். இறுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த நான்கு கட்சிகள…
-
- 4 replies
- 722 views
-
-
உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் உடல்நிலை மோசம்! - ஐவர் வைத்தியசாலையில் அனுமதி [Wednesday 2015-10-14 07:00] சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமக்கு பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி ஆரம்பித்துள்ள சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் நேற்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்தது. இதன்போது மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நான்கு கைதிகளும், அநுராதபுரச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதியொருவருமாக ஐவரின் உடல் நிலை பாதிப்படைந்து சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவித்தன. சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் …
-
- 0 replies
- 1.3k views
-
-
யோஷித ராஜபக்ஷ குற்றவாளியாக இனங்காணப்பட்டார்! விரைவில் கைது செய்ய நடவடிக்கை [ புதன்கிழமை, 14 ஒக்ரோபர் 2015, 02:43.07 AM GMT ] முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகனான யோஷித்த ராஜபக்ச தொடர்பில் இலங்கை கடற்படையினால் மேற்கொள்ளப்பட்ட விசேட விசாரணைகளில் அவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ரியல் அட்மிரல் டீ.டப்ல்யூ.பீ.வெல்வத்த தலைமையிலான குழு, மேற்கொண்ட விசாரணைகளில் யோஷித்த ராஜபக்ச தொடர்பில் பல தகவல்கள் அம்பலமாகியுள்ளது. கடற்படை கேடட் உத்தியோகத்தர்கள் இணைத்து கொள்வதற்கான 45 பேர் கொண்ட குழுவுக்காக பிரசூரிக்கப்பட்ட பத்திரிகை விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது, ஒரே முறையில் சாதாரணதரப் பரீட்சையில் ஆங்கிலம், கணிதம், விஞ…
-
- 0 replies
- 316 views
-
-
மன்னார் கடற்படுக்கையில் எண்ணெய் அகழ்வுக்கு புதிய கேள்விப்பத்திரம் கோரவுள்ளது இலங்கை [ புதன்கிழமை, 14 ஒக்ரோபர் 2015, 03:06.17 AM GMT ] மன்னார் கடற்படுக்கையில், எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வை மேற்கொள்வதற்கான உரிமத்தைப் பெற்றிருந்த கெய்ன் இந்தியா நிறுவனம் இம்மாதத்துடன் வெளியேறவுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் புதிய கேள்விப்பத்திரங்களைக் கோரவுள்ளது. கெய்ன் நிறுவனம் மன்னார் கடற்படுக்கையில் நான்கு கிணறுகளைத் தோண்டிய போது, எண்ணெய் வளம் ஏதும் கண்டறியப்படவில்லை. எனினும், இரண்டு கிணறுகளில் மாத்திரம், எரிவாயு படிமங்கள் கண்டறியப்பட்டன. அவற்றில் இருந்து வர்த்தக ரீதியான எரிவாயு உற்பத்தி செய்வது சாத்தியமில்லை என்று கண்டறியப்பட்ட நிலையிலேயே, கெய்ன் இந்தியா நிறுவனம் வெளியேறவுள்ளது. இ…
-
- 0 replies
- 229 views
-
-
தயா மாஸ்டர் ஜோர்ஜ் மாஸ்டர் பற்றிய விசாரணை அறிக்கை சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைத்து 4 வருடங்கள்:- 14 அக்டோபர் 2015 தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மொழி பெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் பற்றிய விசாரணை அறிக்கை சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி நான்கு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், இதுவரையில் அடுத்த கட்ட சட்ட நடவடிக்கை குறித்து பதில் எதனையும் வழங்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஓமந்தைச் சோதசனைச் சாவடியில் வைத்து தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் அரசாங்கத்திடம் சரணடைந்திருந்தனர். அரசாங்கத்திடம் சரணடைந்த இருவரையும் தடுப்புக் காவலில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விச…
-
- 0 replies
- 1.1k views
-
-
மஹிந்தவுக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி ஆணைக்குழு [ புதன்கிழமை, 14 ஒக்ரோபர் 2015, 03:30.35 AM GMT ] முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, லஞம் ஊழல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். நாளை காலை 09.00 மணிக்கு ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவரின், செயலாளர் லெஸில் டி சில்வா தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அரச ஊடகங்களில் விளம்பரம் செய்யப்பட்ட நிலுவைக் கொடுப்பனவு தொடர்பில், வாக்குமூலம் ஒன்று பெற்றுகொள்வதற்காக ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் மஹிந்த ராஜபக்சவிடம் குறித்த ஆணைக்குழுவின் அதிகாரிகள், அவரது இலத்திற்கு சென்று வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொண்டனர். எப்பட…
-
- 0 replies
- 496 views
-
-
நேசத்தமிழ் உறவுகளே! உங்களின் விடிவிற்காய் உதிரம் சிந்தி ஊருக்காய் உழைத்த நாம் இன்று உறவுகளை பிரிந்து உற்றவரை பிரிந்து பூட்டிய சிறைகளுக்குள் பட்டினி போராட்டம் நடத்துகிறோம். உங்கள் பிள்ளைகளாகிய எங்கள் அவல குரல் கேட்கிறதா சொல்லுங்கள். ஒரு மனித வாழ்க்கையின் சத்தான அரைவாசி காலத்தை சிறையில் தொலைத்து ஏக்கங்கள், தாக்கங்கள், நிராகரிப்புகள், நிராசைகள், அவமானங்கள், அருவப்புக்கள் என அனைத்தையும் சுமந்து கொண்டு நடைப்பிணங்களாய் நாட்களைக் கழிக்கின்றோம். அரசியல் கைதிகள் என்ற அடை மொழியில் மதத்தலைவர்களே! மனிதாபிமானிகளே! எம் தேச மக்களே சிந்தித்து செயற்படுங்கள்! ஏமை சிறை மீட்க குரல் கொடுங்கள்! உலகத்தமிழ் சமூகத்தில் உயர்வாகப் போற்றப்பட்டவர்களில் ஒரு தொகுதியான அரசியல் கைதிகளை அதே சமூகத்தால் தெ…
-
- 0 replies
- 385 views
-
-
ஐ.நாவிடமிருந்து வடமாகாண முதலமைச்சர் நேரடியாக நிதி பெற்றுவதற்கு எடுத்த முயற்சி தோல்வி என்பது உண்மையா? ஐக்கிய நாடுகள் அமைப்பிடமிருந்து நேரடியாக நிதியைப் பெற்றுக்கொள்ள வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளதாக கொழும்பில் தகவலகள்; வெளியாகி உள்ளன. வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்காக இவ்வாறு விக்னேஸ்வரன் நேரடியாக நிதி பெற்றுக்கொள்ள முயற்சித்துள்ளார். வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்ய மேம்படுத்த உதவி பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அந்த உதவி மத்திய அரசாங்கத்தின் ஊடாகவே வழங்கப்படும் என, ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி சுபி நெண்டி முதலமைச்சருக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த காலங்களில் இலங்கை அரசா…
-
- 8 replies
- 1k views
-