ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
தமிழ் பொலிஸாரை ஆட்சேர்ப்பதற்கான நேர்முகப்பரீட்சை யாழில் இலங்கை பொலிஸ் சேவைக்கு தமிழ் பொலிஸாரை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை இன்று யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இடம்பெற்றது. கொழும்பில் இருந்து வருகை தந்துள்ள பொலிஸ் ஆட்சேர்ப்புப் பிரிவினர் பொலிஸ் சேவைக்கு விண்ணப்பித்து நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டவர்களுக்கான முதலாவது நேர்முகத் தேர்வை நடத்தினார்கள். இன்றைய தினம் கல்விச் சான்றிதழ்கள் பார்வையிடப்பட்டதுடன் அவர்களுடைய உயரம், நெஞ்சு சுற்றளவு என்பன அளவிடப்பட்டுள்ளன. இந்த நேர்முகப் பரீட்சைக்கு சுமார் ஆயிரம் பேருக்கு மேல் சமூகமளித்திருந்தார்கள் என்பதும் குறிப்படத்தக்கதாகும். யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த ஆண்கள் இன்றைய நேர்முகத் தேர்வுக்கு தோற்ற…
-
- 2 replies
- 508 views
-
-
[ ஞாயிற்றுக்கிழமை, 11 ஒக்ரோபர் 2015, 11:00.00 AM GMT ] கலப்பு போர்க் குற்ற நீதிமன்றத்தை ஏற்படுத்தும் ஜெனிவா யோசனைக்கு அரசாங்கம் இணங்கியதால், ஏற்பட்டுள்ள பாரதூரமான ஆபத்தில் இருந்து நாட்டையும் மக்களையும் காப்பாற்றும் நோக்கில் தாய் நாட்டை பாதுகாக்கும் தேசிய அமைப்பு என்ற பெயரில் புதிய சிங்கள அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு நாராஹேன்பிட்டியில் உள்ள அபயராம விகாரையில் நேற்று முன்தினம் நடைபெற்ற விசேட பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த தேசிய அமைப்பு உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முருத்தோட்டுவே ஆனந்த தேரர், பேராசிரியர் இந்துராகரே தம்மரத்ன தேரர், பொங்கமுவே நாலக தேரர், கலாநிதி மெதகொட அபயதிஸ்ஸ தேரர், கிறிஸ்தவ பேதகர் சரத் ஹெட்டியாராச்சி ஆகியோர் இந்த அமைப்பின் ஆல…
-
- 1 reply
- 285 views
-
-
மேற்குஆசிய நாடொன்றில் நடைபெறவுள்ள நீதிமன்ற வழக்கொன்று இலங்கை முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடும் மேற்குஆசிய நாடொன்றில் இன்று நடைபெறவுள்ள நீதிமன்ற வழக்கொன்று இலங்கை முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்த கூடியதாக காணப்படுகின்றது. வங்கிக்கணக்கொன்றில் காணப்படும் பெருமளவு பணத்தை(பலமில்லியன் டொலர்கள்)முடக்குமாறு கோரி இலங்கை சட்டத்தரணிகள் தொடுத்துள்ள வழக்கே இது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. முன்னாள் மிக முக்கிய பிரமுகரின் மகனான இளம் அரசியல்வாதிக்கு சொந்தமானதே இந்த வங்கிக்கணக்கு எனநிரூபிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த வழக்கு ஆரம்பமாகின்றது. குறிப்பிட்ட வங்கிக்கணக்கில் பல மில்லியன் டொலர்கள் உள்ளதாகவும்,அந்த வங்கிக்கணக்கில் உள்ள பெருமளவு பணத்தை…
-
- 2 replies
- 629 views
- 1 follower
-
-
இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டம் சம்பூர் பிரதேசத்தில் மீள்குடியேற்றத்தின் பின்னர் இந்திய-உதவி வீடுகளை பெறுவதற்கு தெரிவான குடும்பங்களில் 59 வீதமான குடும்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. வீடுகளை பெற விதிக்கப்பட்டுள்ள தகுதிகள் மற்றும் புள்ளிகளின் அடிப்படையிலேயே இந்த குடும்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகளினால் அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பூர் பிரதேசத்தில் அதிகாரபூர்வமாக 344 குடும்பங்கள் 9 ஆண்டுகளின் பின்னர் தற்காலிக குடியிருப்புகளை அமைத்து மீளக்குடியேறியுள்ளன. அப்பகுதியில் அரச முதலீட்டு வலயத்திற்கு என சுவீகரிக்கப்பட்டு பின்னர் முதல் தொகுதியாக விடுவிக்கப்பட்டுள்ள காணிகளில் மட்டும் 204 குடும்பங்கள் மீளக்குடியேறியுள்ளன. இந்த குடும்பங்களே முன்னுரிமை அடி…
-
- 0 replies
- 840 views
-
-
[ ஞாயிற்றுக்கிழமை, 11 ஒக்ரோபர் 2015, 12:14.25 PM GMT ] [ புதினப்பலகை ] கிழக்கில் இருந்து தப்பி வந்த போது, கருணா எனப்படும், விநாயகமூர்த்தி முரளிதரன், ஒரு பயணப்பெட்டி நிறைய விடுதலைப் புலிகளின் முகாம்கள் அமைந்துள்ள வரைபடங்களை எடுத்து வந்ததாகத் தெரிவித்துள்ளார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாகிர் மௌலானா. 2004ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளிடம் இருந்து கருணாவை காப்பாற்றி, கொழும்புக்குப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றிருந்த அலி சாகிர் மௌலானா, அதுபற்றிய தகவல்களை கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு வெளியிட்டுள்ளார். ‘கருணாவின் செயற்பாடுகளில் மாற்றத்தை அவதானித்த போது, அதுபற்றித் தாம் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவிடம் கூறினேன். அதற்கு அவர், அவருக்காக கதவுகள் திறக்கப்பட்டிரு…
-
- 0 replies
- 664 views
-
-
அரச காணியிலிருந்தோரை வெளியேற்றியது நீதிமன்று மடு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மழுவராஜன் கட்டை அடம்பனில் 10 ஏக்கர் கொண்ட அரச காணியை அடாத்தாகக் கைப்பற்றி அங்கு குடியிருந்த 2 குடும்பங்களையும் மன்னார் நீதிமன்று வெளியாத்து நடவடிக்கை மூலமாக வெளியேற்றியுள்ளது.மன்னார் மாவட்ட நீதிமன்றில் நீதிபதி ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.குறித்த காணியில் 2 குடும்பங்களும் 2008 ஆம் ஆண்டிலிருந்து குடியிருக்கின்றன. அதனுள் குடியிக்க வேண்டாம் என்று பிரதேச செயலர் அறிவுறுத்தியும் அந்த அறிவுறுத் தலை அந்தக் குடும்பத்தினர் பின்பற்றியிருக்கவில்லை. அதனால் அவர்களுக்கு எதிராக மன்னார் மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இது தொடர்பில், விசாரணையின் பின்னர் அரசினால…
-
- 1 reply
- 502 views
-
-
"The resolution is definitely disappointing": அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவையில் 02.10.2015 அன்று ஒலிபரப்பாகிய 'இடி முழக்கம்' நிகழ்ச்சியில் 'Sri Lanka's Killing Fields', 'No Fire Zone : In the Killing Fields of Sri Lanka' ஆகிய புலனாய்வு செய்திப்பெட்டகங்களின் தயாரிப்பாளரும் ஊடகவியலாளருமான கலம் மக்ரே வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: https://soundcloud.com/imurasuweb/the-resolution-is-definitely-disappointing-callum-macrae
-
- 0 replies
- 347 views
-
-
"ஐ.நா. தீர்மானத்தின் பிரகாரம் அமையவுள்ள நீதிக்கட்டமைப்பில் வெளிநாட்டிலுள்ள சாட்சிகள் சென்று சாட்சியமளிப்பது என்பது தொடர்ந்தும் கேள்விக்குறியாகவே உள்ளது" : அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவையில் 02.10.2015 அன்று ஒலிபரப்பாகிய 'இடி முழக்கம்' நிகழ்ச்சியில் ஊடகவியலாளரும் அரசியல் அவதானியுமான நிர்மானுசன் வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: https://soundcloud.com/imurasuweb/okny8v15tgcj
-
- 0 replies
- 329 views
-
-
பிள்ளையானுக்கு சி.ஐ.டீ அழைப்பு குற்றப்புலாய்வு பிரிவில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு ஆஜராகுமாறு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கு குற்றப்புலனாய்வு பிரிவினரால் (சி.ஐ.டீ)அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/156219/ப-ள-ள-ய-ன-க-க-ச-ஐ-ட-அழ-ப-ப-#sthash.xIuxPUIV.dpuf
-
- 0 replies
- 560 views
-
-
இலங்கைக்கான நிதி உதவி அதிகரிக்கப்படும் இலங்கைக்கு வழங்கும் நிதி உதவியை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக உலகவங்கிஅறிவித்துள்ளது.நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடனான சந்திப்பில், உலகவங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின் அதிகாரிகள் இதனைக் குறிப்பிட்டதாக நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பெருவின் தலைநகர் லீமாவில் நேற்றுமுன்தினம் உலகவங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த மாநாடு ஆரம்பமாவதற்கு முன்பாக அவற்றின் அதிகாரிகளை சந்தித்து நிதி அமைச்சர் கலந்துரையாடினார். இலங்கையின் பொருளாதாரம், ஏற்றுமதி, தொழில் முயற்சி ஆகியவற்றை மேம்படுத்தவும், வர்த்தக மற்றும் முதலீட்டுத் துறைகளை ஊக்குவிக்கவும் அதிகநிதி…
-
- 0 replies
- 261 views
-
-
பொறுப்புக் கூறலை விரைந்து மேற்கொள்க ஐ.நா மனித உரிமைகள் சபையில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், இலங்கையில் இறுதிப் போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறும் பொறிமுறையை விரைந்து செயற்படுத்த வேண்டுமென பிரிட்டன்வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் அடுத்து வரும் வாரங்களில் இலங்கையுடன் பேச்சுக்களைஆரம்பிக்கவுள்ளதாக பிரிட்டன் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலக அமைச்சர் ஹியூகோஸ்வைர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது வலைத்தளத்தில்வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் இடையே 26 ஆண்டுகள் நடைபெற்ற உள்நாட்டுப் போர் பல பேரழிவுகளின் பின்பு கடந்த 2009 ஆண்டு நிறைவுக்கு வந்தது. இந்தப் …
-
- 0 replies
- 310 views
-
-
இலங்கையின் தலைநகர் கொழும்பின் மத்தியில் பாபர் வீதி என்ற இடத்தில் உள்ள இந்துக் கோயில் ஒன்றின் திருவிழாவுக்கு அப்பகுதியில் உள்ள சில முஸ்லிம்கள் தடை ஏற்படுத்திவருவதாக உள்ளூர் செய்தியாளர்கள் கூறுகின்றனர். இந்தப் பிரச்சனையில் முஸ்லிம் தலைவர்கள் தலையிட்டு இனங்களுக்கு இடையில் நல்லுறவை ஏற்படுத்த முயல வேண்டும் என்று நல்லிணக்கம் தொடர்பான கலந்துரையாடல்களுக்கான அமைச்சர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தப் பிரச்சனை உட்பட, பல்லின மக்களும் செறிந்துவாழும் பகுதிகளில் இனங்களுக்கு இடையில் நல்லுறவை ஏற்படுத்துவதில் அரசு என்ன நடவடிக்கை எடுக்கின்றது என்ற கேள்விக்கு அமைச்சர் மனோ கணேசன் அளித்துள்ள பதில்களை நேயர்கள் இங்கு கேட்கலாம். http://www.bbc.com/tamil/sri_lanka/2015/10/151010_mano_co…
-
- 1 reply
- 738 views
-
-
வீட்டுவேலைக்கு பிள்ளைகளை அனுப்புவதாலும், அதேபோன்று வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களை அனுப்புவதாலும் ஏற்படும் பிரச்சினைகள், கொடுமைகள், உயிரிழப்புக்கள்பற்றி பத்திரிகைகளில் அடிக்கடி செய்திகள் வெளிவருகின்றன. இவை மக்களிடம் தெளிவை ஏற்படுத்தும் நோக்கிலேயே வெளியிடப்படுகின்றன. ஆனாலும், மக்கள் தெளிவடைவதாக இல்லை. தொடர்ந்தும் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. மலையகத்தில் இதுதொடர்பான விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை என்பதனையே இது குறிப்பதாக உள்ளது. அண்மையில் கண்டி மாவட்டத்தில் இதுபோன்றதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதுபற்றி தெரியவருவதாவது, கண்டி, பன்விலை பொலிஸ் பிரிவிற்…
-
- 0 replies
- 302 views
-
-
இந்தியா கொள்ளையடிக்கிறது! - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் சீற்றம்[Saturday 2015-10-10 08:00] எங்களது மீன் வளத்தை இந்தியா கொள்ளையிடுகின்றது என ஈ.பி.டி.பி.யின் பொதுச் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா நேற்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். எமது நாட்டின் மீன் வளம் எமது மக்களுக்கே சொந்தமானது. வடக்கு மீனவர்கள் நீண்ட நாட்களாக இது குறித்து குரல் கொடுத்து வருகின்றனர். போர் காரணமாக 30 ஆண்டுகள் கஸ்டங்களை அனுபவித்த மக்களினால் போர் நிறைவடைந்து ஆறு ஆண்டுகள் பூர்த்தியாகியும், அந்த மகிழ்ச்சியை அனுபவிக்க முடியவில்லை. எமது மீன் வளம் கொள்ளையிடப்படுகின்றது, வடக்கு மீனவர்கள் தாக்கப்படுகின்றனர். இதனால் எமது கடற்பகுதி வளமற்ற பகுதியாக மாற்றமடையக் கூடிய அபாயம் காணப்படுகின்றது.நாள் ஒன்றுக்கு 60 மில்லியன்…
-
- 4 replies
- 595 views
-
-
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை நோக்கி செல்வதற்கு அர்ப்பணிப்புடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பு செயற்படும் என கூட்டமைப்பின் வவுனியா செயற்குழுவில் நேற்று (09.10.2015) தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட செயற்குழு நேற்று வட மாகாண சுகாதார அமைச்சரின் வவுனியா இணைப்பு செயலகத்தில் கூடியபோதே இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலை கழகம், தமிழரசுக் கட்சிகளின் வவுனியா மாவட்ட பிரதிநிதிகள் ஒன்று கூடி வவுனியா மாவட்டத்தில் மக்களின் நலன்சார் திட்டங்களை முன்னெடுப்பது மற்றும் அரசியல் ரீதியான வேலைத்திட்டத்தை முனைப்புடன் செயற்ப…
-
- 2 replies
- 360 views
-
-
விரைந்து எமது உரிமைகளை வென்றெடுக்க புலம்பெயர்தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, வேகமுடன் செயற்பட சுரேஷ் பிறேமச்சந்திரன் அழைப்பு https://www.youtube.com/watch?v=pK6NUeyfqPg&feature=youtu.be
-
- 0 replies
- 304 views
-
-
-
"உள்நாட்டுப் பொறிமுறை விசாரணையானது எமக்கு மிகுந்த ஏமாற்றமே": அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவையில் 09.10.2015 அன்று ஒலிபரப்பாகிய 'இடி முழக்கம்' நிகழ்ச்சியில் கொழும்பில் இருந்து சட்டத்தரணியும் ஆய்வாளருமான விவேகானந்தன் புவிதரன் வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: https://soundcloud.com/imurasuweb/5mhccgynrdby
-
- 0 replies
- 292 views
-
-
யாழ். நூலகம் எரிக்கப்பட்டமை குறித்து ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் : விமல் ரத்நாயக்க எம்.பி யாழில் தெரிவிப்பு யாழ். பொதுநூலகம் எரிக்கப்பட்டமை தொடர்பில் அப்போது கடமையில் இருந்த அரச உத்தியோகத்தர் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் சாட்சியமளித்துள்ளார் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் ரத்நாயக்க தெரிவித்தார். சேகுவேராவின் நினைவு தினத்தை முன்னிட்டு யாழ்.பொது நூலகத்துக்கு நேற்று முன்தினம் நூல்கள் வழங்கிய பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சகோதரன் சேகுவேராவின் நினைவு தினமான இன்று சோசலிஸ இளைஞர் சங்கத்தால் அவரது நினைவு தினத்தை யாழப்பாணத்தில் கொண…
-
- 2 replies
- 519 views
-
-
அமெரிக்காவின் தீர்மானம் வெளிவந்த பின்னர் நான்கு கட்சிகளும் பல சிவில் அமைப்புக்களும் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தன. கூட்டமைப்பிலுள்ள தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய 3 கட்சிகளுடன், கஜேந்திரகுமாரின் கட்சியும் இணைந்து இதனை வெளியிட்டிருந்தமை அரசியலில் “புதிய கூட்டு” ஒன்று உருவாகிறதா என்ற கேள்வியை எழுப்பியிருந்தது. ஆனால், மற்றவர்கள் சில விடயங்களில் உறுதியாக இருந்தாலும் செல்வம் “அந்த”ப் பக்கத்திலா “இந்த”ப் பக்கத்திலா என்பதுதான் தெரியவில்லை. ஒரு நேரத்தில் இந்தப் பக்கத்திலை நிற்கிறார். பிறகு மற்றப் பக்கத்திலை போய் நிக்கிறார். நான்கு கட்சிகளும் இணைந்து சர்வதேச விசாரணைதான் வேண்டும் என்று அறிக்கை வெளியிட்ட போது அந்தப் பக்கத்திலை நின்றார். இறுதியில், அமெரிக்காவின் தீர்மானத்தை…
-
- 6 replies
- 1k views
-
-
காணி உறுதி, வெள்ளை கொடியுடன் உயர்பாதுகாப்பு வலய முள்வேலிகளை தாண்டுவோம் காணி உறுதி, வெள்ளை கொடியுடன் உயர்பாதுகாப்பு வலய முள்வேலிகளை தாண்டுவோம் என்று இடம்பெயர்ந்து நலன்புரி நிலையத்தில் வசிக்கும் முத்தையா சிவானந்தன் தெரிவித்துள்ளார். தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை யாழ்.ரில்கோ விருந்தனர் விடுதியில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தொடர்பான விஷேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், எமது சொந்த நிலங்களில் இருந்து இடம்பெயர்ந்து 26 வருடங்கள் ஆகிவிட்டன இதுவரைக்கும் எனது குடும்பம் மாத்திரம் 16 வீடுகள் மாறி இருக்கின்றோம். கடந்த 90ம் ஆண்டு முதல் எ…
-
- 10 replies
- 991 views
-
-
பருத்தித்துறையில் பண்பாட்டுப் பெருவிழா! - கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார் முதலமைச்சர். [Saturday 2015-10-10 20:00] தமிழர்களின் பாரம்பரியத்தை எடுத்துக் காட்டும் விதத்தில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் பாடசாலையில் பண்பாட்டுப் பெருவிழா நடைபெற்றது. வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சு, யாழ்.கலாச்சார பேரவை, யாழ்.மாவட்டச் செயலகம் இணைந்து நடத்திய யாழ்.பண்பாட்டு பெருவிழா இன்றுகாலை 9 மணிக்கு ஆரம்பமானது.யாழ். மாவட்டச் செயலர் என்.வேதநாயகன் தலமையில் நடைபெற்ற இப்பண்பாட்டு பெருவிழாவில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவனும், மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சு செயலாளர் இ.ரவீநர்…
-
- 0 replies
- 439 views
-
-
மகிந்தவின் காலத்தில் ஆட்டம் போட்ட 20 எம்.பி.க்கள், முன்னாள் அமைச்சர்கள் விரைவில் கைது? [Saturday 2015-10-10 20:00] முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்பிருப்பதாக குற்றம்சுமத்தப்பட்ட 20 அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் வாரத்தினுள் கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.கொலை, போதைபொருள், எத்தனோல் வியாபாரம், உர மானியம் சுரண்டல், விவசாயிகளின் நஷ்டஈடு பணத்தை சுரண்டல், அரசாங்க நிதியை சுரண்டல் ஆகிய குற்றம் சுமத்தப்பட்டவர்களே கைது செய்யப்படவுள்ளனர். அதற்கான குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் அதிகமானோர் தற்போதைய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பின…
-
- 0 replies
- 478 views
-
-
தேசிய விசாரணைப் பொறிமுறையை உருவாக்கும் நடவடிக்கைகள் இம்மாத இறுதியில் ஆரம்பம்! [Saturday 2015-10-10 20:00] ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவான தேசிய விசாரணைப் பொறிமுறையை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்பட உள்ளன.பாதுகாப்பு, நீதிமன்றம் மற்றும் அரசியலமைப்பு நடவடிக்கைகள் சம்பந்தமான நிபுணத்துவத்தை கொண்டிருக்கும் நபர்களை கொண்ட விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட உள்ளது. இந்த குழுவிடம் இருந்து தேசிய விசாரணை பொறிமுறைக்கான ஆலோசனைகள் பெறப்பட உள்ளது. வெளிநாட்டு தொழிற்நுட்ப உதவியை எந்த துறைக்கு பெற்றுக்கொள்வது என்பது குறித்து ஆராயப்படும். இலங்கையின் தேசிய விசாரணை பொறிமுறைக்கு உதவ ஜப்பானிய வழக்கு பணிப்பாளர் மோடோ நுகுடி முன்வந்துள்ளார். உண்மையை கண்டற…
-
- 0 replies
- 272 views
-
-
அரச நிறுவனங்களில் இன்னமும் மோசடிகள்! - சரத் பொன்சேகா விசனம்[Saturday 2015-10-10 20:00] புதிய அரசாங்கத்திடம் எதிர்பார்த்த நோக்கங்கள் இன்னும் நிறைவேறவில்லை என ஜனநாயகக் கட்சியின் தலைவரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசிய அவர், சில அரச நிறுவனங்களில் இன்னும் மோசடிகள் நடப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2010 ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர், ரணில் விக்ரமசிங்கவும் கரு ஜயசூரியவும் ரவி கருணாநாயக்கவும் எனது வீட்டிற்கு வந்து ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர். மேலும் இம்முறை பொதுத் தேர்தலிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைபேசி அழைப்பொன்றை எடுத்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந…
-
- 0 replies
- 561 views
-