ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
நல்லாட்சி அரசாங்கம் சிங்கள பௌத்தர்களை உதாசீனம் செய்து வருவதாக பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கம் சிறுபான்மை மக்களின் நலன்களை உறுதி செய்வதில் அர்ப்பணிப்பை காண்பிக்கும் போதும், பெரும்பான்மை சமூகத்தை கண்டு கொள்வதில்லை. மதகுருக்கள் அமைச்சர்களாக பதவியேற்கும் வித்தியாசமான நாடாக இலங்கை மாற்றமடைந்துள்ளது. எமது அமைப்புடன் பேச்சு நடத்தாது நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது நடைமுறைச் சாத்தியமற்றது. குளிரூட்டப்பட்ட அறைகளில் அமைச்சர்களின் தோள்களில் கைபோட்டு சம்பாசனை செய்யும் பௌத்த பிக்குகளுடன் நல்லிணக்கம் பற்றி பேசுவது நகைப்பிற்குரியது என அவர் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=141052…
-
- 0 replies
- 232 views
-
-
நாடாளுமன்றத்தின் நேற்றைய அமர்வின்போது எதிர்க்கட்சித் தலைவருக்குரிய ஆசனத்தில் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர். ஈ.சரவணபவன் அமர்ந்தார். பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கு உரித்தான ஆசனங்களில் வேறு எவரேனும் உறுப்பினர்கள் அமர்தல் ஆகாது என்பது பாராளுமன்ற மரபாகும். எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருந்த உறுப்பினர் சரவணபவன், பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் உரையாடிக் கொண்டிருந்தார். மாவை சேனாதிராஜா எம்.பி.யும் சரவணபவன் எம்.பி.யை அறிவுறுத்தாது அவரும் சரவணபவனுடன் நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்தார். நேற்றைய அமர்வில் நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானங்…
-
- 0 replies
- 615 views
-
-
இந்திய விஜயத்தின் போது ‘‘சீபா” உடன்படிக்கை தொடர்பாகவோ அல்லது இந்தியா – இலங்கைக்கு இடையேயான தரைவழிப் பாதை அமைப்பது தொடர்பாகவோ எவ்விதமான பேச்சுகளும் நடத்தப்படவில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. இதன்போது தனது இந்திய விஜயம் தொடர்பாக சபையில் தெளிவுபடுத்தி விசேட உரையொன்றை நிகழ்த்தும்போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான உடன்படிக்கை கையெழுத்திடும் போது இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு நான் அழை…
-
- 0 replies
- 959 views
-
-
வடக்கு கிழக்கு பகுதிகளில் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 1,37,529 வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நவீன துரித வீட்டுத் திட்டக் கட்டுமானப் பணிகளுக்கான ஆர்வலர்களிடமிருந்து திட்டக்கோரலுக்கான பத்திரங்களை நிதியிடல் வசதியுடன் பெற்றுக் கொள்ள புனர் வாழ்வளிப்பு மீள் குடியேற்றம் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வடக்கு கிழக்கு பகுதிகளில் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக வீடுகளை அமைப்பதனை நல்லிணக்கக் குழு வலியுறுத்தியிருந்தது. இதன் படி…
-
- 0 replies
- 240 views
-
-
பொலிஸார் இரவிரவாக திடீர் வாகன சோதனை யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் இரவிரவாக மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளும் போக்குவரத்துப் பொலிஸாரும் இணைந்து நேற்றுமுன்தினம் வாகனங்களை திடீர் சோதனைக்கு உட்படுத்தினர். சகல வாகனங்களின் சமிக்ஞைகள், வேகக்கட்டுப்பாடுகள், சில்லுறைகள், இயந்திர நிலைகள் என அனைத்தும் பரிசோதிக்கப்பட்டதோடு சீரற்ற வாகனங்களை உடன் நடவடிக்கைக்கு உட்படுத்தினர் குறித்த வாகனப் பரிசோதனையின்போது அரச,தனியார் மற்றும் இ.போ.ச வாகனங்கள் என அனைத்தும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. http://onlineuthayan.com/news/560
-
- 1 reply
- 395 views
-
-
காரைநகர் கடற்பரப்பில் 6 இந்திய மீனவர்கள் கைது இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இன்று அதிகாலை காரைநகருக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து 6 இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாகப்பட்டிணம் பகுதியிருந்து 2 படகுகளில் வருகை தந்து, மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். கடற்படையினரிடம் இருந்து பொறுப்பேற்ற இந்த மீனவர்களை, ஊர்காவற்றுறை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. http://onlineuthayan.com/news/553
-
- 1 reply
- 377 views
-
-
விளைச்சலின் கழிவு முறையை நீக்க 2 வருடங்களாகியும் முயற்சி இல்லை வடக்கு மாகாண சபை செயற்றிறனற்ற ஒன்று என்று கடுமையாக விமர்சிக்கின்றனர் வடக்கு விவசாயிகள். சந்தைகளில் விளைபொ ருள்களுக்கு கழிவு வழங்கப்படுவதை தடுத்து நிறுத்துவதாக வடக்கு மாகாணசபை அறிவித்தபோதும் கடந்த இரண்டு வருட காலங்களில் ஒரு நாள்கூட அது நடைமுறைப் படுத்தப்படவில்லை என்று அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். வடக்கில் உள்ள பெருஞ் சந்தைகளுக்கு விவசாயிகள் தமது விளை பொருள்களைக் கொண்டு வரும் போது வியாபாரிகள் அவற்றுக்குப் பெரும் கழிவுகளைக் கோருகின்றனர். இதனால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். உடல் உழைப்பில் பெரும் பகுதி கழிவாகவே வீணாகிறது எமக்கு. ஆனால், வியாபாரிகள் அதனையும் விற்றுக் காசாக்கி விடுகிறார்கள்'' என்…
-
- 0 replies
- 355 views
-
-
கொடதெனியாவில் 5 வயது சிறுமி சேயா பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்று கைதான சந்தேகநபர் தானே அதனைச் செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் என, பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரயந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் சந்தேகநபர் தொடர்ந்தும் காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கம்பஹா - படுவத்துகொட வனப் பகுதியில் மறைந்திருந்த நிலையில் இவர் நேற்றையதினம் பிரதேசவாசிகளின் உதவியுடன் கைது செய்யப்பட்டார். மேலும் சந்தேகநபர், குறித்த சிறுமி வசித்த வீட்டுக்கு அருகாமையில் தற்காலிகமாக வசித்த ஒருவர் என ஆரம்ப கட்ட விசாரணைகளி…
-
- 0 replies
- 350 views
-
-
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வாழும் முஸ்லீம்கள் இன்று இரு வேறு ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் தொழுகையில் காலை ஈடுபட்டனர். இஸ்லாமிய தகவல் வழிகாட்டல் மையம் ஏற்பாடு செய்த தௌஹீத் ஜமாத் அமைப்பினரின் பெருநாள் தொழுகை திறந்த வெளியரங்கு உள்ளக மைதானத்தில் நடைபெற்றது. இதன் போது மார்க்க சொற்பொழிவு மற்றும் தொழுகை மௌலவி பைசர் மதனி தலைமையில் மேற்கொண்டதுடன் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அடுத்து யாழ் கிளிநொச்சி உலமா சபை தலைவர் மௌலவி அஸீஸ் காசிமி தலைமையில் மற்றுமொரு பெருநாள் தொழுகை காலை 7 மணியளவில் ஆரம்பமானது. இத்தொழுகை ஒஸ்மானியா ஜின்னா மைதானத்தில் நடைபெற்றபோது மார்க்க சொற்பொழிவினை மௌலவி எம்.ஐ மஹ்மூத் பலாஹி மேற்கொண்டார். இதன்போது நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அத்துட…
-
- 0 replies
- 219 views
-
-
பிரபாகரன் உயிரிழந்தாலும், புலிகளுக்கு உதவியவர்கள் தண்டனைகளிலிருந்து தப்பிக்க முடியாது – சம்பிக்க:- 24 செப்டம்பர் 2015 தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்த போதிலும் புலிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள் தண்டனைகளிலிருந்து தப்பிக்க முடியாது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். பிரபாகரன் , பொட்டு அம்மான் உயிரிழந்தாலும் அவர்களுக்கு நிதி உதவி வழங்கியவர்கள், ஆயுதங்களை வழங்கியவர்கள், வாகனங்களை வழங்கியவர்கள், ஆலோசனை வழங்கியவர்கள் குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார். பத்தரமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதன…
-
- 0 replies
- 476 views
-
-
விளைச்சலின் கழிவு முறையை நீக்க 2 வருடங்களாகியும் முயற்சி இல்லை வடக்கு மாகாண சபை செயற்றிறனற்ற ஒன்று என்று கடுமையாக விமர்சிக்கின்றனர் வடக்கு விவசாயிகள். சந்தைகளில் விளைபொ ருள்களுக்கு கழிவு வழங்கப்படுவதை தடுத்து நிறுத்துவதாக வடக்கு மாகாணசபை அறிவித்தபோதும் கடந்த இரண்டு வருட காலங்களில் ஒரு நாள்கூட அது நடைமுறைப் படுத்தப்படவில்லை என்று அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். வடக்கில் உள்ள பெருஞ் சந்தைகளுக்கு விவசாயிகள் தமது விளை பொருள்களைக் கொண்டு வரும் போது வியாபாரிகள் அவற்றுக்குப் பெரும் கழிவுகளைக் கோருகின்றனர். இதனால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். உடல் உழைப்பில் பெரும் பகுதி கழிவாகவே வீணாகிறது எமக்கு. ஆனால், வியாபாரிகள் அதனையும் விற்றுக் காசாக்கி விடுகிறார்கள்'' என்று …
-
- 1 reply
- 282 views
-
-
தந்தையின் வழியை பின்தொடர்வேன் :கல்வி அமைச்சர் யாழ்.இந்துக்கல்லூரிக்கு 3மாடிக்கட்டடம் மற்றும் மலசலகூட வசதிகளை அமைத்துக் கொடுக்க 12மில்லியன் ரூபா நிதியை ஒதுக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராச் காரியவசம் தெரிவித்தார். இன்று யாழ்.இந்துக்கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவு விழா நிகழ்வுகள் நடைபெற்றது.இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், யாழ்.இந்துக்கல்லூரி மிகச் சிறந்த பாடசாலையாக விளங்குகின்றது. மாணவர்கள் கல்வி கற்பதற்கு போதிய இடவசதியில்லை. மற்றும் மலசலகூடவசதிகள் போதியளவு இல்லை போன்ற விடயங்கள் தொடர்பில் பாடசாலை சமூகத்தினர் என்னிடம் தெரிவித்துள்ளனர்.அவர்களின் கருத்தை உள்வாங்கி யா…
-
- 1 reply
- 541 views
-
-
சென்றடைந்தார்... ஐக்கிய நாடுகளின் 70ஆவது பொதுச்சபையில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு நேற்று புதன்கிழமை (23) பயணமான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று வியாழக்கிழமை (24) காலை, நியூயோர்க்குக்கு சென்றடைந்தார்.(படங்கள்: ஜனாதிபதி செயலகம்) - See more at: http://www.tamilmirror.lk/154944/ச-ன-றட-ந-த-ர-#sthash.9u7BwzV1.dpuf
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கை தொடர்பான தீர்மானத்தை ஐநாவில் அமெரிக்கா சமர்ப்பிக்கவுள்ளது? காத்திரதன்மையற்ற இந்த ஆவணம் குறித்து EUவைச் சேர்ந்த நாடுகளும், கனடாவும் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளன்: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- இலங்கை தொடர்பான தனது தீர்மானத்தை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் இன்றைய அமர்வில் அமெரிக்கா உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கவுள்ளது. கடந்த சில நாட்களாக குறிப்பிட தீர்மானத்தின் நகல்வடிவம் தொடர்பாக தீவிரமான கலந்துரையாடல்களில் உறுப்புநாடுகள் ஈடுபட்ட நிலையிலேயே அமெரிக்கா தனது தீர்மானத்தை இன்று தாக்கல் செய்கின்றது. இலங்கை அரசாங்கம் தீர்மானத்தின் நகல்வடிவில் காணப்பட்ட 26 பந்திகளில் 14 நீக்கவேண்டும் என வாதாடிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்க தீர்மானத்தின் இரண…
-
- 0 replies
- 449 views
-
-
கிளர்ச்சியைத் தூண்டிவிட சிலர் முயல்கிறார்கள் - கடும் நடவடிக்கை ஜனாதிபதி அறிவிப்பு ஐ.நா. மனித உரிமைகள் சபை அறிக்கையை வைத்துக் கொண்டு பாதுகாப்புப் படைகள் மத்தியில் இனக்குரோத உணர்வுகளைச் சிலர் தூண்டி விட திட்டமிட்டுச் செயற்படத் தொடங்கியிருப்பது தொடர்பாக நம்பகமான தகவல் தமக்குக் கிடைத்திருப்பதாகவும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்துத் தடுப்பதில் தாம் தயக்கம் காட்டப் போவதில்லை என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவித்தார். கடந்த வாரம் புதன்கிழமை இரவு அமைச்சரவைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர சில விளக்கங்களை அளித்து முடித்ததின் பின்னர் அமைச்சர்கள் தமது பல்வேறு கருத்துக்களை வெளியிட்டார்கள். போர்க்குற்றங்கள…
-
- 0 replies
- 522 views
-
-
அமெரிக்க தீர்மானத்தின் 14 பரிந்துரைகளை நீக்குமாறு இலங்கை கோரிக்கை [ வியாழக்கிழமை, 24 செப்ரெம்பர் 2015, 12:44.34 AM GMT ] சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றத்தை அமைக்கும் விடயம் உள்ளிட்ட 14 பரிந்துரைகளை, அமெரிக்கத் தீர்மான வரைவில் இருந்து நீக்க வேண்டும் என்று இலங்கை வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகளை ஊக்குவிக்கும், 26 பரிந்துரைகளைக் கொண்ட தீர்மான வரைவை அமெரிக்கா முன்வைத்திருந்தது. இந்த தீர்மான வரைவு குறித்து, ஜெனிவாவில் கடந்த திங்கட்கிழமை அமெரிக்கா முதலாவது முறைசாரா கலந்துரையாடலை நடத்திய போது, தீர்மான வரைவை நிராகரிப்பதாக இலங்கை அறிவித்தது. இந்த நிலையில்,நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மதியம், இரண்டாவது முறைசாரா கலந்த…
-
- 1 reply
- 392 views
-
-
மகிந்தவை கைது செய்ய முடியும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை கைது செய்ய முடியும் என முன்னாள் உயர் நீதிமன்ற நீதவான் டபிள்யூ.ரீ.எம்.பீ.பி. வராவௌ தெரிவித்துள்ளார். பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆஜராகாமை தொடர்பில் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஆணைக்குழுச் சட்டங்களின் அடிப்படையில் நிறுப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் எவரேனும் விசாரணைகளில் பங்கேற்பதனை நிராகரித்தால் அது அந்த ஆணைக்குழுவினை உதாசீனம் செய்வதாக கருதப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். இதனை சட்டத்தை இழிவுபடுத்தும் செயலாகவும், ஆணைக்குழுவினை உதாசீனம் செய்யும் செயலாகவும் கருதப்பட வேண…
-
- 0 replies
- 309 views
-
-
ஜெனிவாவில் இருந்து அமெரிக்கா பறந்தார் சுமந்திரன்! - இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுடன் அவசர பேச்சு [Thursday 2015-09-24 08:00] அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உயர் அதிகாரிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுக்குமிடையில் முக்கிய கலந்துரையாடலொன்று நியூயோர்க்கில் இடம்பெற்றுள்ளது. இரு தரப்பினருக்குமிடையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலின்போது ஐ.நா.வின் அறிக்கையிலும், குறித்த பிரேரணையிலும் மாற்றம் செய்யப்பட வேண்டுமென அரசாங்கத்தால் கோரப்பட்டுள்ள சொற்றொடர்கள், புதிதாக இணைக்கப்படவுள்ள சொற்றொடர்கள் குறித்து கூடிய கவனம் செலுத்தப்பட்டதாக தெரியவருகிறது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உயர் அதிகாரிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற…
-
- 0 replies
- 313 views
-
-
சர்வதேச தலையீட்டுடன் கூடிய விசாரணைப் பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டும் - ஐ.நா:- 16 செப்டம்பர் 2015 இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் துஷ்பிரயோகங்கள் மோசமானவை: ஐ.நா- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- Sri Lanka Press Release 16-09-2015 Tamil by deranapics சர்வதேச தலையீட்டுடன் கூடிய விசாரணைப் பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டுமென ஐக்கிய நடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கை குறித்த விசாரணை அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இரண்டு தரப்புக்களும் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 2002ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அரசாங்கப்படையினரும், தமிழீழ விடுதலைப் புலிகளும் மனிதாபிமானத்திற்கு எதிரான வகைய…
-
- 168 replies
- 7.6k views
- 3 followers
-
-
யாழ். மாநகர எல்லைக்குட்பட்ட இறைச்சிக்கடை உரிமையாளர்கள் கடையடைப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். இன்று காலை முதல் ஆரம்பமான இப்போராட்டம் தகுந்த தீர்வு கிடைக்கும் வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக இறைச்சிக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இக்கடையடைப்பு போராட்டத்திற்கான காரணம் வீணான பொலிஸ் தலையீடு என ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில் சுட்டிக்காட்டுகின்றனர். தற்போது மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் 22 மாட்டு இறைச்சி கடைகள், 09 ஆட்டு இறைச்சி கடைகள் இயங்குகின்றன. இவை தற்சமயம் பூட்டப்பட்டுள்ளதால் பெரும் நட்டங்களை எதிர்கொள்வதாகவும் இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். நாவாந்துறை, பண்ணை,பாஷையூர்,குருநகர்,புங்கன்குளம்,அரியாலை,கல்வியன்காடு,ஐந்து சந்தி…
-
- 5 replies
- 948 views
-
-
ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் சீனாவும், ரஸ்யாவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக சீனாவும், ரஸ்யாவும் குரல் கொடுக்கத் தீர்மானித்துள்ளன. அமெரிக்காவினால் முன்வைக்கப்பட உள்ள உத்தேச தீர்மானத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமென சீனா சுட்டிக்காட்டியுள்ளது.அமெரிக்காவின் இலங்கை குறித்த உத்தேச வரைவுத் திட்ட யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சீனா இந்த அறிவிப்வை விடுத்துள்ளது. உத்தேச வரைவுத் தீர்மானம் தொடர்பிலான இரண்டாவது உத்தியோகப் பற்றற்ற பேச்சுவார்த்தை நேற்று நடத்தப்பட்டிருந்தது.இதேவேளை, முதலாவது உத்தேச வரைவுத் திட்டத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.globaltamilnews.net/GTMNE…
-
- 0 replies
- 505 views
-
-
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணை அவசியமானது – பேராயர் ஜோசப் பொன்னய்யா யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணை அவசியமானது என மட்டக்களப்பு பேராயர் ஜோசப் பொன்னய்யா தெரிவித்துள்ளார். யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மெய்யாகவே நியாயம் வழங்கப்பட வேண்டுமாயின் சர்வதேச ரீதியான விசாரணைகள் மிகவும் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். உள்ளக விசாரணைப் பொறிமுறைமையானது நீதியை வழங்கக்கூடிய வகையில் அமையவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.இலங்கையில் நிறுவப்பட்ட பல ஆணைக்குழுக்கள் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் உரிய முறையில் விசாரணை நடத்தவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச ரீதியான …
-
- 0 replies
- 471 views
-
-
இந்திய றோலர் பிரச்சினையை தடுத்து நிறுத்த கோரி யாழில் ஆர்ப்பாட்டம் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் எமது உறவுகளான தமிழக மக்களையும் எம்மையும் மோதவிட்டு வேடிக்கை பாரக்க வேண்டாம், என இந்தியத்துணைத்தூதுவர் நட்ராஜிடம் இலங்கை மீனவர்கள் வலியுறுத்திஉள்ளனர். இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த கோரி யாழ்.மாவட்ட மீனவர்களால் கண்டன ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இன்றைய தினம் நடாத்தப்பட்டது. பேரணியில் முடிவில் இந்திய துனைதூதரகத்திற்கு முன்பாக கூடிய போராட்டகாரர்கள் அங்கு இந்திய துணைத்தூதரகர் ஏ.நடராஜனிடம் மகஜர் கையளித்தனர். மகஜர் கையளிக்கும் போதே மீனவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில் மேலும் எமது உறவுகளைப் பிரிக்காது சுமூகமான தீர்வை ஏற்படுத்திக் கொடுங்கள், இ…
-
- 0 replies
- 384 views
-
-
ஜனாதிபதி அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றார்: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர் அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் இவ்வாறு நியூயோர்க் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின் 70ம் அமர்வுகளில் ஜனாதிபதி பங்கேற்க உள்ளார். சிறியளவிலான பிரதிநிதிகளுடன் ஜனாதிபதியின் அமெரிக்க விஜயம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இம்முறை பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/124217/langua…
-
- 0 replies
- 395 views
-
-
சிறுமியர் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைக் கண்டித்து முல்லைத்தீவில் கண்டனப் பேரணி சிறுமியர் பெண்குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், பால் நிலை வன்கொடுமைகளைக் கண்டித்தும், வித்தியா, ஜெருஷா, சேயா போன்ற வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமியர்களுக்கு நீதி கோரியும், பெண்கள் சிறுமியர்களுக்கான பாதுகாப்பை வேண்டியும் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு கண்டனப் பேரணியொன்று இன்று நடத்தப்பட்டது, முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாவட்டத்தின் பல்வேறு பெண்கள் அமைப்புக்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் தாய்மார் மற்றும் பெண்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். முல்லைத்தீவு மாவட்டத்திலும் அண்மைய வாரங்களில் இத்தகைய பா…
-
- 0 replies
- 234 views
-